நான் வழக்கமான பதிவுகளாக இல்லாமல், ஆழமான பதிவுகள் மட்டுமே போடவேண்டும்(தலைப்பில் கூட உம்மைத்தொகையிருக்கிறது.) என நினைத்ததும் நினைவுக்கு வந்த முதல் எண்ணம் சோழர்களைப்பற்றி, அடுத்து நினைவிற்கு வந்தது தான் இந்த கிரிப்டோகிராபி.
கிரிப்டோகிராபி என்பது ஒன்றும் பெரிய விளங்காத விஷயமில்லை, சுலபமானதுதான். சில கணித முறைகளைப்பயன்படுத்தி தகவல்களை பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் கிரிப்டோகிராபி. முக்கியமாக தகவல்தொடர்பின் பொழுது. அதாவது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தகவலை பரிமாறும் பொழுது இடையில் இருப்பவர்களிடம் இருந்து அந்தத் தகவலை பாதுகாப்பது.
ஆரம்ப காலங்களில் தகவல்களை எழுதியனுப்பும் பொழுது மற்றவர்களுக்கு புரியாதவகையில் எழுது அனுப்புவதில் இருந்து தொடங்கியது இந்த கிரிப்டோகிராபி. இது கிட்டத்தட்ட ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருகிறது என்று கருதப்படுகிறது. முன்காலங்களில் ஒற்றர்கள், ராணுவத்தளபதிகள், அரசர்கள் இவர்களுக்கிடையில் கருத்துப்பரிமாற்றத்திற்கு உறுதுணையாக இருந்து வந்த இந்த கிரிப்டோகிராபி இப்போது பலபடிகள் உயர்ந்து உலகின் மிகமுக்கியமான ஒரு விஷயமாக பரிமாணம் பெற்றிருக்கிறது.
இதன் வரலாறு சுமார் கி.மு. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்குகிறது, அப்பொழுது எகிப்தில் வாழ்ந்த மன்னர்கள் முதற்கொண்டு, ரோம சாம்ராஜியம், கிரேக்க சாம்ராஜியம் என ஆளுக்காள் உபயோகித்து, நாளொருமேனியும் பொழுதொறு வண்ணமாய் வளர்ந்து வந்திருக்கிறது இந்த கிரிப்டோகிராபி.
பண்டையகாலத்தில் எகிப்தியர்கள் பயன்படுத்தியவிதம்
ஒரு சமயம் எங்கள் தமிழய்யா சொன்னது ஞாபகம் வருகிறது, தமிழில் இதுபோன்ற விஷயங்கள் உண்டென்றும் பாடல்களிலிலேயே இம்மாதிரி எழுதுவதுண்டு என்றும் சொன்னார். அதாவது ஒரு பதினாறு அடி கொண்ட பாடல் இருந்தால் அதில் இருந்து சில சில வார்த்தைகளை மட்டும் எடுத்து தனியாகப் படித்தால் வேறு ஒரு பொருள் தரும் என்றும், தான் இளங்கலை முதுகலை தமிழ் படித்தபொழுது படித்ததாக நினைவு உண்டென்றும் சொல்லியிருந்தார். நம்மவர்கள் கணக்கில் வல்லவர்கள், பாடல்களுக்கே கணக்கு வைத்து, பாடிக்கொண்டிருக்கும் பொழுது இலக்கணம்(கணக்கு?) தவறுகிறதா என கண்டுபிடித்த புத்திசாலிகள் அல்லவா அவர்கள்.
புரியும்படி ஒரு சிறு உதாரணம் தருகிறேன்,
இப்போ நீங்க மோகன்னு எழுத வேண்டுமென்றால், mohan அப்படின்னு எழுதாம என்கிரிப்ட் பண்ணி இப்படி prkdq ன்னு எழுதலாம், அதாவது நீங்கள் ஆங்கில் எழுத்தின் முதல் எழுத்தான a க்கு பதில் முதல் எழுத்தாக d யை வைத்துக்கொண்டு, mohan என்பதை, prkdq என எழுதலாம் இதை நீங்கள் ஒரு தகவலாக உங்களிடமிருந்து மற்றவருக்கு அனுப்பினால் அவரிடம் இந்த prkdq வந்து சேர்ந்ததும், அவர் இதில் இருந்து mohan ஐ வரவழைக்க முடியும், நீங்கள் எப்படி இந்த பார்மேட்டை உருவாக்கினீர்கள் என்று சொல்லியிருந்தால் அதாவது a க்குபதில் d என்பதை. இதைத்தான் சிப்பர்(cipher) என்று சொல்வார்கள். முன்பு சொன்னதைப்போல் இந்த கிரிப்டோகிராபி, சீசரின் காலத்திலும் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக(?) சீசர் சிப்பர் என்ற ஒரு முறை வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. (நான் கூட உபயோகப்படுத்தியிருக்கிறேன்.!!!)
இதைப்போல் தகவல்களை உருவாக்குவதற்கும், பிறகு மாற்றப்பட்ட(என்கிரிப்ட் செய்யப்பட்ட) தகவல்களை சாதாரண தகவல்களாக மாற்றுவதற்கும் ஆரம்பகாலத்தில் மனதாலேயே கணக்குப்போட்டுத்தான் செய்தனர். ஆனால் பிற்காலத்தில் இது புதுவடிவம் பெற்று இதற்கென இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அதாவது நீங்கள் mohan என்று தட்டச்சினலே அந்த இயந்திரம் prkdq என்று தட்டச்சும்.
இது போன்ற இயந்திரங்கள் தட்டச்சுவதற்கு மட்டும் பயன்படாமல், தொலைபேசி கண்டறியப்பட்ட பிறகு, இராணுவ விஷயங்களை தொலைபேசுவற்கும் கண்டறியப்பட்டது, அதாவது தகவலை சாதாரணமாக நீங்கள் தொலைபேச அது பாதுகாக்கப்பட்ட (என்கிரிப்டட்) தகவல்களாக மற்றவர்களை சென்றடையும், அதாவது தகவல் பரிமாறப்படும் பொழுது அது பாதுகாக்கப்பட்ட தகவலாகவே இருக்கும், அந்தப்பக்கம் போய்ச்சேர்ந்த பிறகு அந்தத் தகவல்களை மீண்டும் சாதாரண தகவல்களாக மாற்றவும் இயந்திரங்கள் இருந்தன.
இங்கேத்தான் கோட்பிரேக்கர்ஸ்(code brakers) வராங்க, அதாவது நீங்கள் அனுப்பும் தகவல் உங்களுக்கு மட்டும் அல்லாமல் உங்கள் எதிரிகளையும் சென்றடையும்(ஒலிஅலைகளை கடத்தியாக பயன்படுத்துவதால்). அதனால் அவர்களிடம் உங்கள் பாதுகாக்கப்பட்ட தகவலானது, சிப்பர் இருந்தால் சுலபமாக படிக்க முடிந்துவிடும். அதற்குத்தான் கோட்பிரேக்கர்ஸ் என்பவர்கள் தேவைப்பட்டார்கள். அதாவது நம் உதாரணத்தின் படி பார்க்கவேண்டுமானால் prkdq என்பதை வைத்து அவர்கள் mohan என்பதை உருவாக்க முயற்சிப்பார்கள், அதாவது நாம் பயன்படுத்திய a என்றால் d என்பதை கண்டறிய முயல்வார்கள். இவர்கள் தான் கோட்பிரேக்கர்ஸ் என்று அழைக்கப்படுகிறார்கள். இதைப்போன்றே கோட்மேக்கர்ஸ் என்பவர்கள் a என்றால் d என உருவாக்குபவர்கள்.
நான் உங்களுக்கு உதாரணமாக சொன்னதைப்போன்று சுலபமாக இருக்காது அந்த பாதுக்கப்பட்ட தகவல், நான் உபயோகித்தது a உடன் மூன்றைக்கூட்டி d என்ற ஒரு சுலபமான சமாசாரத்தை. இரண்டாம் உலகப்போரின் பொழுது ஜெர்மனியினர் உபயோகித்த சிப்பர்கள் மிகப்பெரிய அடுக்குகளைக்(permutations) கொண்டது அதாவது இரண்டின் அடுக்கு 238 (2 pow 238) என வைத்துக்கொள்ளலாம். அவர்கள் நினைத்தார்கள் இந்த சிப்பர்களை யாராலும் உடைக்க முடியாது என்று. ஆனால் அமேரிக்கா இதற்காகவே சுமார் 30,000 நபர்களை வேலைக்குவைத்து அவர்களுடைய சிப்பர்களை சாமர்த்தியமாக உடைத்துவிட்டார்கள்.
ஜெர்மானியர்களின் உபயோகப்படுத்திய Enigma இயந்திரம்
அதைப்போலவே ஜப்பானியர்களினுடையதையும், அவர்களுடைய பிரபலமான கடல்படையின் JN - 25, என்ற சிப்பரை (crypto systems) உடைத்தார்கள், இதை வைத்துக்கொண்டு அவர்களுக்கு முத்துத்துறைமுகம்(perl harbour) ஜப்பானியர்களின் தாக்குதலுக்கு உள்ளாகப்போகிறது என்ற தகவலும் கிடைத்திருக்கிறது. ஆனால் அவர்களின் தயார்படுத்தும் அல்லது உஷார்படுத்தும் அல்லது எச்சரிக்கும், அரசு இயந்திரம் சரியாக செயல்படாததால் தான் அவர்களால் அந்த தாக்குதலை தடுக்கமுடியவில்லை. இதை நினைக்கும் பொழுது எனக்கு இந்தியாவை தாக்கிய சுனாமிதான் நினைவில் வருகிறது. அப்பொழுது பலர் கேட்டது, அம்மேரிக்கா எச்சரித்திருக்கலாமே என்ற கேள்வியை, அதைப்பற்றி எழுதும் பொழுது சுஜாதா சொன்னது,
நம்முடைய அரசாங்கத்தின் தொடர்பு கொள்ளும் தன்மை மோசமானது, அமெரிக்க அரசு, இந்திய அரசை தொடர்புகொண்டு, இந்திய அரசு, தமிழக அரசை தொடர்பு கொண்டு இப்படியாக ஒரு பெரும் சுழற்சி முடிந்து மக்களை சென்றடையும் பொழுது சுனாமி தாக்கியிருக்குமென்று சொன்னதாக நினைவு. அதேபோல் நீங்கள் நம் மக்களிடம் சுனாமி என்று சொன்னால் அதன் விபரீதத்தை உணராமல் போய்ப்பார்க்கத்தான் பலர் விரும்புவார்கள் என்றும் சொல்லியிருந்தார் அதைப்போலத்தான் இதுவும் அந்தக்காலத்தில் அமேரிக்காவின் அரசாங்கத்தின் நிலையும் இப்படித்தான் இருந்தது அதனால் தான் அவர்களால் அந்த தாக்குதலை முறியடிக்க முடியவில்லை.
ஆனால் பிற்காலத்தில் பல ஜப்பானிய தாக்குதல்களை முறியடித்தனர். இன்னும் நன்றாக சொல்லவேண்டுமானால் அமெரிக்காவும் நேச நாடுகளும் இரண்டாம் உலகப்போரில் வெற்றிபெற இந்த கிரிப்டோகிராபி மிகவும் பயன்பட்டிருக்கிறது.
இதைப்பற்றியும் இன்றைய காலத்தில் வழக்கத்தில் உள்ள சில கிரிப்டோ முறைகளைப்பற்றியும் அடுத்த முறை பார்ப்போம்.
In Only ஜல்லிஸ் கிரிப்டோகிராபி
கிரிப்டோகிராபியும் ஜல்லியடித்தலும்
Posted on Wednesday, January 24, 2007
கிரிப்டோகிராபியும் ஜல்லியடித்தலும்
பூனைக்குட்டி
Wednesday, January 24, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இங்க இப்படி ஒரு ஐட்டம் இருக்கிறதென்பதே மறந்து போயிருந்தது. காந்தாரா படமல்ல பொன்னியின் செல்வன் படம் தான் என்னை ப்ளாக் பக்கம் திருப்பியது, ஆனா...
-
மதுமிதா இறந்துவிட்டாள் என்ற செய்தியை என்னால் சிறிதும் நம்பமுடியவில்லை, நான் சிறிது சிறிதாக மயக்கமாகிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. o அந...
-
The air was thick with anticipation as Sindhu broached the subject, her voice a mix of determination and vulnerability. "Imagine, just ...
மோகன் தாஸ்,
ReplyDeleteநானும் இதே தலைப்பில் அடுத்து பதிவு எழுத வேண்டும் என நினைத்திருந்தேன். நல்லவேளை நீங்கள் முந்திக் கொண்டீர்கள்.
நல்ல பதிவு.
நீங்கள் Code Book என்ற புத்தகம் படித்திருக்கின்றீர்களா? ஓரளவு நல்ல புத்தகம். ஆனால் நிறைய தகவல்கள். என்ன கதை கதையாக (Technical விசயங்களைத் தொடாமல்) சொல்லியிருப்பார் சைமன் சிங்.
DES, PGP தொடுவதற்கு உத்தேசமா?
ஸ்ருசல்
பயனுள்ள பதிவு
ReplyDeleteதொடருங்கள்.
'a beautiful mind' நினைவுக்கு வருது. அப்படியாகாம இருந்தா சரிதான். ;)
// தலைப்பில் கூட உம்மைத்தொகையிருக்கிறது//
ReplyDeleteஅன்புள்ள மோகன்தாஸ்
தொகை என்றால் தொக்கி(மறைந்து) வருவது , உங்கள் தலைப்பில் ரெண்டு உம்மும் தெரியுற மாதிரி தான இருக்கு . தலைப்பில் எண்ணும்மை இருக்கிறது
என்று சொல்லலாம்
எப்படியோ ஜல்லியடிச்சா சரிதான் :-)
எனக்கு மிகவும் பிடித்தது இந்த கிரிப்டோகிராபி பகுதி, ம்... இது வரை ஒரே ஒரு திட்டப்பணிதான் இதில் செய்துள்ளேன்....
ReplyDeleteஇதையும் அப்யூசிகேஷன் பற்றி புரட்சி புரோகிராமரில் எழுதியதைப்போல எழுதலாமென இருந்தேன், நீங்கள் முந்திவிட்டீர்... அட மக்கா இது மாதிரி இதுவரை 100 முறை சொல்லியிருப்பேன்....
ஸ்ருசல் ஏதோ சும்மா இருக்கிற மாதிரி இருந்தது அதனால் தான் எழுதினேன் மற்றபடி ஒன்றுமில்லை, நீங்கள் சொன்ன புத்தகம் படிக்கவில்லை. கல்லுரி படிக்கும் பொழுது இருந்தே இந்த ஒரு பிரிவில் கொஞ்சம் ஆர்வம் அதிகம். இடையில் நேரம் கிடைத்தால் எழுதுகிறேன்.
ReplyDeleteமற்றபடிக்கு ரொம்ப டீப்பா எழுதினா சரியா வராது, எதுவரைக்கும் எழுத முடியும்னு தோணுதோ அதுவரைக்கும் எழுதுறேன். தயுவுசெய்து இதே போல் உங்கள் மேலான ஆதரவை தரவும் தவறிருந்தால் சுட்டிக்காட்டவும். நன்றி.
நன்றி இராமனாதன், எனக்கும் அந்தப்படம் மிகவும் பிடிக்கும், கடைசியில் ரசல் குரோவிற்கு நோபல் கொடுப்பதாக முடிப்பார்களென்று நினைக்கிறேன். அதற்காக நான் அதற்கு ஆசைப்படுகிறேன் என்ற அர்த்தம் கிடையாது. :-)
ReplyDeleteஞ்சாரி, ரொம்பநாள் ஆச்சு படிச்சு அதான் தப்பாயிருச்சு, நீங்க உத்தரவு கொடுத்தீங்கன்னா மாத்திரலாம். :-)
ReplyDeleteஜல்லிதானே பிரமாதப்படுத்தியிரலாம். ஆனால் EJB யிலத்தான் கலட்டிவிட்டுட்டீங்க, சரியில்லை. :-)
உங்கள் பின்னுட்டத்திற்கு நன்றி.
வாங்கோ வாங்கோ குழலி, நான் விட்டதையெல்லாமோ இல்லை, இன்னும் என்னைவிட நல்லாவோ இன்னொரு பதிவு போடுங்களேன். நானும் உங்கக்கிட்ட இருந்து கத்துக்கிட்ட மாதிரியிருக்கும்.
ReplyDeleteஉங்கள் பதிவு படித்தேன் நன்றாக இருந்தது.
அன்புள்ள மோகன்தாஸ் தம்பி
ReplyDeleteநீ எவ்வளவு நல்ல்ல பதிவு போட்டிருக்க்
தப்பு கண்டுபிடிக்கும் அவசரத்தில் உங்க பதிவு நல்லா இருக்குன்னு ஒரு வார்த்தை கூட
சொல்லாமப் போய்ட்டேன் , நல்லா உழைச்சிருக்கிங்க , மத்தவங்களுக்கு
சில விஷயத்தை சொல்லணும்னு நீங்க நினைப்பதை வரவேற்கிறேன்
நானே இப்பதான் EJB கத்துட்டு இருக்கேன் தம்பி
புத்தகம் மட்டும் தான் வாங்கியிருக்கேன்
உன்னை ஏன் கழட்டி விடப் போறேன் .
என்றும் அன்பகலா
மரவண்டு
ரொம்ப நன்றி
ReplyDeleteமரவண்டு
மோகன்தாஸ் - Code Book படித்து முடித்து பாதி எழுதிவைத்துள்ளேன். தீபாவளி கழித்து போடலாம் என்று இருந்தேன். அப்புறம், RSA இல் கொஞ்சம் நாள் குப்பை கொட்டியிருக்கேன் ;-)
ReplyDeleteஅண்ணா நீங்களும் போடுங்களேன். உங்கள் அனுபவங்களை படிக்க ஆவலாக உள்ளேன்.
ReplyDeleteகுளிர்போரா இல்லை பனிப்போரா ?
ReplyDeleteதொடர் அருமை...!!!