சொல்லப்போனால் நேற்று, உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். இங்கே இந்து முஸ்லீம் பிரச்சனை நடந்தது. பெங்களூரின் சிவாஜி நகர் பகுதி முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதி. அவர்களில் ஒரு பகுதியினர், சதாம் உசேனைத் தூக்கிலிட்டதைக் கண்டித்து ஊர்வலம் சென்றிருக்கிறார்கள். கண்டித்தது இந்திய அரசாங்கத்தைக் கண்டித்தில்லை அமேரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து.
வழியில் ஒரு கோவிலில் பிரச்சனை செய்ததாகக் கேள்வி.
இது நடந்த பிறகு, நேற்று விஷ்வ இந்து பரிஷத்தின் ஒரு மாநாடு எங்கள் வீட்டுப்பக்கத்தில் நடப்பதாகயிருந்தது. அது மட்டும்தான் தெரியும் எனக்கு. நானும் ரொம்ப நல்ல பிள்ளையாய் ஞாயிற்றுக்கிழமை பொட்டி தட்ட கம்பெனிக்கு வந்துவிட, ஏதேதோ பிரச்சனைகளால் நிம்மதியாகப் பொட்டி தட்ட முடியாமல் மனம் அலைபாய வேண்டாம் வீட்டிற்கே சென்றுவிடுவோம் என்று நினைத்து வெளியே வந்த பொழுதுதான் தெரிந்தது. வெளியே பிரச்சனை நடந்து கொண்டிருந்தது.
எங்கள் கம்பெனியிருக்கும் கட்டிடத்தை பாதுகாக்கும் காவலாளிகள், வெளியே பிரச்சனை நடக்கிறது அதனால் உங்களை வெளியே விடமுடியாது என கட்டிடத்திற்குள் சிறை வைக்க, காபி டேவிற்கு நூறு ரூபாய் அழுதது தான் மிச்சம். பின்னர் ஒன்றிரண்டு மணிநேரத்திற்குப் பிறகு பிரச்சனை ஒரளவிற்கு சரியானதுபோல் தெரிந்ததால் வெளியிட வீட்டிற்கு வந்தேன். நேற்று நான் இருக்கு அல்சூர் ஏரியா முழுவதும் கடையடைப்பு நடந்ததுபோல் ஒரு கடையும் ஓப்பனாகயில்லை. பால் வாங்கவே சிரமப்பட்டேன். அப்படியே காப் சிரப்பும்.
காலையில் டீவியில் தான் சொன்னார்கள், சிவாஜிநகரிலும் அதைச் சுற்றியுள்ள் இடங்களிலும் கர்ப்யூ என்று. வேகவேகமாக கம்பெனிக்குப் போன்செய்து வரணூமா என்றால் இன்னும் வீட்டில் தான் இருக்கிறாயா என்று மறுகேள்வி வந்தது. காலையில் இருந்து தலைக்குமேல் choppers பறக்கிறது. பல கம்பெனிகள் லீவுவிட்டதாக அறிகிறேன்.
--------------------------------
கங்குலி அவ்வளவுதான் என்று எழுதிய பதிவர்கள் இப்பொழுது என்ன செய்கிறார்கள் என்று தெரியாது. என்னைப் பொறுத்தவரை இந்திய அணியின் அட்டிட்யூட் மாற மீண்டும் கங்குலியை கேப்டனாக்க வேண்டும்.
அன்று அவ்வளவுதான் கங்குலி காலி, அவுட் ஆப் பார்ம் அப்படி இப்படி என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று மூஞ்சியை எங்கே கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் தெரியவில்லை.
---------------------------------
புளிநகக் கொன்றை படித்து முடித்துவிட்டேன், இரண்டு நாட்களில் ஆரம்பம் கொடுத்த எதிர்பார்ப்பை நிச்சயமாக அவரால் கடேசிவரை கொண்டு செல்ல முடியவில்லை. இன்னொருநாள் நேரமிருந்தால் என் முதல் புத்தகவிமர்சனமாக புளிநகக் கொன்றை வரலாம்.
இப்பொழுது எடுத்துவைத்திருப்பது, மூன்று விரல் மற்றும் ரமேஷ் பிரேமின் பேச்சும் மறுபேச்சும். பின்நவீனத்துவம் நோக்கிய என் பயணத்தின்(?) ஒரு நல்ல வழிகாட்டியாக இந்த(?) புத்தகம் அமையும் என்று நினைக்கிறேன். மற்றபடிக்கு மூன்று விரல் என்னைப் போன்ற ஒரு கம்ப்யூட்டர் ஆசாமியின் உண்மையை உண்மையாகச் சொல்லுவதால் ஆர்வம் அதிகமில்லையோ என்னவோ இரண்டு பக்கம் தொடர்ச்சியாகப் படிப்பதே கடினமாக இருக்கிறது. ஆனால் அரசூர் வம்சம் இப்படிக் கிடையாது நல்ல ஒரு மாந்திரீக யதார்த்தக் கதை.
-----------------------------------
பெங்களூரில் இன்று
பூனைக்குட்டி
Tuesday, January 23, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
இன்னும் படித்துக்கொண்டிருக்கும் என் அக்காவிற்கு நேற்றிரவு நாய்கள் என்னைப்பார்த்தது நக்கலடிப்பதாய்ப்பட்டது தெரியப்போவதில்லை உள்ளிருப்பது த...
-
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக...
-
அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறத...
//கங்குலி அவ்வளவுதான் என்று எழுதிய பதிவர்கள் இப்பொழுது என்ன செய்கிறார்கள் என்று தெரியாது. என்னைப் பொறுத்தவரை இந்திய அணியின் அட்டிட்யூட் மாற மீண்டும் கங்குலியை கேப்டனாக்க வேண்டும்.
ReplyDeleteஅன்று அவ்வளவுதான் கங்குலி காலி, அவுட் ஆப் பார்ம் அப்படி இப்படி என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று மூஞ்சியை எங்கே கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் தெரியவில்லை.
//
அய்யா! நீங்களும் என்னை மாதிரிதானா? கை குடுங்க முதல்ல... :)
கங்குலியை பற்றி சும்மா ஒரு லைன் எழுதினாக்கூட நம்ம லொடுக்கு பிச்சி உதறிடுவார்...
ReplyDeleteஅவ்வளவு பாசம் கங்குலி மேல...
நான் கூட கங்குலியை ஆதரித்து, டிராவிட், சேப்பலை ஏகவசனத்தில் திட்டி பதிவு போட்டிருக்கேன்...
நேத்து இந்திரா நகர் சிஎம்.ஹெச் ரோட், ஓல்ட் மெட்ராஸ் ரோட் ரெண்டையும் ப்ளாக் பண்ணிட்டானுங்க...கேள் பிரண்டோட ஊரெல்லாம் வெறுமே சுத்தவேண்டியதா போச்சு :))))
I am happy for Ganguly. I thought about writing in support of Ganguly when he was axed and not given due respect. Somehow I could not. I subscribed to India Vs West Indies and India Vs Srilanka one day games because Ganguly is back. He did not disappoint me. He should be made captain again. He was victimized due to the politics in Indian Cricket. Welcome Back Ganguly. I enjoyed earlier the post by Ravi on Ganguly. Thanks for that too.
ReplyDelete