ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் (Artificial Intelligence A.I.)
இது ஒரு கடலைப்போன்ற விஷயம், அள்ள அள்ள குறையாமல் விஷயங்கள் வந்து குவியும். நான் கணிணியியல் படிக்கத்தொடங்கியதும் என்னைக் கவர்ந்த ஒரு மிக அற்புதமான பிரிவு இந்த ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ். இதைப் பற்றியும் கொஞ்சம் ஜல்லியடித்துவிட்டு போகலாமென்றுதான் இந்த கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.
இயந்திரங்களையும் சுயமாக அறிவுப் பூர்வமாக சிந்திக்க வைக்க நடக்கும் ஒரு அறிவியல் சார்ந்த முயற்சியே இந்த ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ். மிக முக்கியமாக கணிணியை அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைக்க முயற்சி என்றே கூறலாம். கணிணி கண்டுபிடித்த தொடக்கத்திலேயே இது சம்மந்தமான ஆராய்சிக்களும் தொடங்கிவிட்டது. மனிதனைப்போலவே, இயந்திரங்களையும் சிந்திக்க வைக்கவே இந்த முயற்சிகள் பெரிதும் செய்யப்பட்டன.
80 களில், இது சம்மந்தமான முயற்சிகளுக்கு அமேரிக்க அரசாங்கம் அதிக அளவில் பொருள் செலவழித்தது. அதைப்போலவே ஜப்பானும் ஐந்தாம் தலைமுறை கணிணி (Fifth Generation Computer) என்ற பெயரில் இது சம்மந்தமான முயற்சிகளை அதிக பொருள்செலவில் ஊக்குவித்தது. ஆனால் இவை அந்த அளவிற்கு வெற்றிகளை குவிக்காததால், இதற்கான ஃபண்ட்ஸ்(Funds) விரைவில் குறைத்துக்கொள்ளப்பட்டது.
கணிணிகள் தற்சமயம் வரை நாம் செய்யச் சொன்னது போலச் செய்யுமே ஒழிய தானாக சிந்திக்கவோ இல்லை முடிவுகளை எடுக்கவோ செய்யாது. வேண்டுமானால் ஒரு பிரச்சனை சார்ந்த விஷயத்திற்கு மனிதனைப்போல சிந்திக்க கணிணிகளை பழக்கப்படுத்த முடியும். இதற்கு தற்சமயத்தில் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் பயன்படும் சில துறைகளையும் அது எவ்வாறு பயன்படுகிறது என்பதைப் பார்த்தால் புரிந்துவிடும்.
தற்பொழுது இருக்கும் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் முறைகளில் கணிணி தானே சிந்தப்பது என்பதற்கு அது பிரச்சனை சார்ந்து, அதிகம் தனக்குத்தானே கணக்கிட்டுக்கொண்டு முடிவு எடுக்கிறது எனக் கூறலாம். உதாரணமாக செஸ் ஆட்டத்தை எடுத்துக்கொள்வோம் இதில் கணிணி எப்படி விளையாடுகிறது, எப்படி கணக்கிடுகிறது என்பதைப் பார்த்தோமானால் கணிணி எப்படி தானாய் சிந்திக்கிறது அல்லது தானாய் எப்படி சிந்திக்க வைத்தார்கள் என்பதை அறியலாம். முதலில் நாம் 8 குயின் பிராப்ளம் (8 queen problem or n queen problem) என்ற ஒரு முறை உண்டு அதைப்பார்ப்போம்.
செஸ் ஆட்டத்தில் இராணியின் நகர்வுதிறன் உங்களுக்கு தெரிந்திருக்கும், தான் இருக்கும் இடத்திலிருந்து நேராகவும் குறுக்காகவும் நகர முடியும் ராணியால். மொத்தம் 64 கட்டங்கள் கொண்ட செஸ் அட்டையில், ஒரு இராணியின் ஆளுமையை(நேராகவோ, குறுக்காகவோ) மற்றொரு ராணி மறிக்காமல் மொத்தம் எட்டு ராணிகளை வைக்க வேண்டும். இன்னும் சுலபமாக சொல்லவேண்டுமானால் ஒரு செஸ் போர்டில் எட்டி ராணிகளை ஒன்றையொன்று வெட்டாமல் வைக்க வேண்டும்.
இப்படி வைப்பதற்கு கணிணி முறையில் ஒரு கொள்கையை பயன்படுத்துகிறார்கள், அது பேக் டிராக்கிங்(Back Tracking), அதாவது முதலில் ஒரு ராணியை போர்டில் வைத்துவிடுகிறோம் பின்னர், அடுத்த ராணியை வைப்பதற்கான முயற்சியில் கணிணியானது முதலில் தான் எங்கே அந்த ராணியை வைக்க முடியும் என சிந்திக்காமல் எங்கெல்லாம் வைக்க முடியாது என சிந்தப்பதை தான் பேக் டிராக்கிங் என அழைக்கிறார்கள். இதன் காரணமாக அடுத்த ராணியை எங்கு வைப்பது என கண்டுபிடிப்பதில் நமக்கு ஆகும் கணக்கிடுதலின் பணி குறையும். (The backtracking method is based on the systematically inquisition of the possible solutions where through the procedure, set of possible solutions are rejected before even examined so their number is getting a lot smaller. )
கீழே உள்ளதும் இது போன்ற ஒன்றுதான் இது தானாகவே ஒன்றிலிருந்து அடுத்தது என எட்டு ராணிகளை வைக்கும் ஒரு ப்ரோக்கிராமே. நெக்ஸ்ட் ஸொல்யூஸனைக்(Next Solution) கிளிக்கும் பொழுது புதிது புதிதாக எத்தனை முறைகளை (எட்டு ராணிகளை வெட்டாமல் வைக்கும் முறை) பாருங்கள். இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக எழுதப்பட்டது கிடையாது.
இதை ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸின் முதல் படி எனலாம். இப்படி அடுத்த ராணியை வைப்பதற்கு முன் முறைப்படி நிராகரிக்கவும் பின்னர் அடுத்த வைத்தலைப்பற்றிய கணக்கையிடவும் கணிணிக்கு சொல்லிவிட்டால் கணிணியால், ஒன்றன் பின் ஒன்றாக எட்டு ராணிகளை வைக்க முடியும் இதுதான் முதல் பரிமாணம் கணிணியில் செஸ் ஆட்டத்திற்கு.
இதைப்போலவே உண்மையான செஸ் ஆட்டத்திற்கான கணக்கு முறையும் இப்படித்தான் தொடங்கும் முதலில் எங்கெல்லாம் வைக்க முடியாது எனப்பார்ப்பது. பின்னர். ஏற்கனவே தன் நினைவில் இருக்கும் நகர்த்துதளின் படி அடுத்த நகர்ததலை தேர்ந்தெடுப்பது போன்றவைதான் ஒரு தேர்ந்த சதுரங்கக்கணிணியை உருவாக்குகிறது. அதாவது இந்த வகை ஆர்டிபிஷியல் இன்டெலிஜனஸ் கணிணிகள் முன்னால் நடந்ததையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும், அதாவது முன்னர் விளையாடிய ஆட்டத்தின் நகர்தலை.
கீழே உள்ளதும் ஒரு சதுரங்கக் கணிணியே இதில் நீங்கள் முதலில் நகர்த்த வேண்டும் பின்னர் கணிணி எவ்வளவு கணக்கிடுகிறது எனப்பார்க்கலாம். தன்னுடையதையும்(பிராஸஸர்) நம்முடையதையும். அது போடும் பச்சை மற்றும் மஞ்சள் கோடுகள் அது சிந்திக்கும் அடுத்த நகர்த்தல்கள்.இது ஒரு முழுமையான சதுரங்கக்கணிணி கொஞ்சம் சிந்தித்து விளையாடினால் இதை வெல்லலாம். ஆனால் போன பதிவில் சொன்னதைப்போல டீப்புளு போன்ற உலக வல்லுநர்களையே தோற்கடிக்கும் சதுரங்கக்கணிணிகள் புழக்கத்தில் உள்ளன.
கையெழுத்தை உணர்ந்து கொள்வது(handwriting recognition), பேசுவதை உணர்ந்து கொள்வது(speech recognition), முகங்களை உணர்ந்து கொள்வது(speech recognition), இமேஜ் பிராஸஸிங்(Image Processing), பிறகு நம் அனைவருக்கும் தெரிந்த விளையாட்டு சம்மந்தமான ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்(Game AI).
இந்த ஒவ்வொரு துறையுமே ஒவ்வொரு பெரிய கடலைப்போன்ற ஆராய்ச்சிகளை தன்னுள் அடக்கயது. கையெழுத்தை உணர்வது என்று வைத்துக்கொண்டால், நீங்கள் எழுதும் எழுத்தையோ இல்லை வார்த்தையையோ, தன்னிடம் ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் வார்த்தைகளஇடம் ஒப்பிட்டு கண்டறிவது. இதைப் போலவே முகங்களை அறிவதும், பேசுவதை அறிவதும் பாட்டர்ன் ரெககனைசிங்(Pattern Recoginition) சொல்லப்படும் இந்த ஒப்பிடுதல் முறைகளால் நடைபெறுகிறது.
இதைப் போலத்தான் இமேஜ் பிராஸஸிங் அதாவது ஒரு இமேஜை இன்புட்டாக கொண்டு செய்யப்படும் எல்லா வேலைகளுமே இதில் அடங்கும், இமேஜ்கள் சிக்னல்களாகவோ, புகைப்படங்களாகவோ, இல்லை இரண்டு பரிமான திரைப்படங்களாகவோ இருக்கும். அந்த இமேஜ்களை இருப்பதை விட பெரிதாக்குதல், சிறிதாக்குதல், சுழற்றுதல், காணப்படும் வண்ணங்களை மேம்படுத்துதல், ஒப்பிடுதல், ஒலியில் இருக்கும் இரைச்சலை குறைத்தல் போன்றவைகள் தான் முக்கியமானது.
இதனால் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் என்பது சில அல்லது பல அரிய சூத்திரங்களை கணிதமுறைகளை பயன்படுத்தி கணிணியை ஓரளவு சிந்திக்க வைப்பது. ஆனால் மனித அளவுக்கு சிந்திக்க முடியாததற்கு காரணம் இதுவரை ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸில் இருக்கும் முறைகளின் அடிப்படைகளிலேயே பிரச்சனையிருப்பது தான்.
Computability and computational complexity theories are relevant to AI but don't address the fundamental problems of AI. Intelligence is the computational part of the ability to achieve goals in the world. The problem is that we cannot yet characterize in general what kinds of computational procedures we want to call intelligent.
The ultimate effort is to make computer programs that can solve problems and achieve goals in the world as well as humans. However, many people involved in particular research areas are much less ambitious. A few people think that human-level intelligence can be achieved by writing large numbers of programs of the kind people are now writing and assembling vast knowledge bases of facts in the languages now used for expressing knowledge. However, most AI researchers believe that new fundamental ideas are required, and therefore it cannot be predicted when human level intelligence will be achieved.
In
ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்ஸும் ஜல்லியடித்தலும்
Posted on Thursday, January 25, 2007
ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்ஸும் ஜல்லியடித்தலும்
பூனைக்குட்டி
Thursday, January 25, 2007
பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
"இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?" ரவி தன் மனைவியிடம் கேட்டதும், அவள், "இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான்...
-
"கருவினிலே என்னை உருவாக்கினாயே தாயே, ஆயிரம் பேர் அமர்ந்திருக்கும் சபை நடுவே நின்று பேசும் அளவிற்கு என்னை ஆளாக்கினாயே உன்னை வணங்கி என் உ...
-
“மம்மி, உன் பையனெல்லாம் வெக்கப்படுறான் இங்கவந்துப்பாரு, ஆச்சர்யம்தான் போ?” அக்கா வேண்டுமென்றே வம்பிழுத்துக் கொண்டிருந்தாள், எங்கள் இருவர...
பாவம் நீங்க. ஒரு நல்ல பதிவுல முதல் மறுமொழியே ஒரு குப்பை.
ReplyDeleteமோகந்தாஸ் இந்த மாதிரி விஷயங்களை தமிழில் யாரும் எழுதமாட்டார்களா என் நினைத்திருக்கிறேன். AI நமக்கு பரிச்சயமுண்டு என்பதால் தங்களின் அறிமுகத்தை ரசிக்க முடிகிறது. மேலும் இது போல் தொடரவேண்டும். அப்படியே ஒரு சின்ன வேண்டுகோள் அங்கங்க ஆங்கிலத்துடன் தமிழ் கலைச்சொற்களையும் பயன்படுத்தினா இன்னும் பிரமாதமாக இருக்கும்.
Excellent post.
ReplyDeleteadding new dimensions to tamil blogging.
Thanks.
மாறுதலான பதிவு. தொடர்ந்து இப்படியான பதிவுகளைத் தாருங்கள். தமிழிலேயே அறிவியற்சொற்களைத் தந்தால், இன்னும் சிறப்பாகவிருக்குமோவெனத் தோன்றுகின்றது.
ReplyDeleteமோகன்தாஸ்,
ReplyDeleteகல்லூரிக் காலத்திலேயே பொறுமையாக உட்கார்ந்து படிக்காதவன், இன்று இந்தப் பதிவை ஒழுங்காக புரிந்து வாசித்து முடித்தேன் - பதிவு தமிழில் என்பதால்!
கண்டிப்பாக இது ஒரு நல்ல முயற்சி தொடர்ந்து எழுதுங்கள்.
யஞா(யக்னா)/பெயரிலி,
எனக்கு இவர் எழுதியது, எழுதியபடி புரிந்தது. இதில் எந்தச் சொற்களுக்கு இணையான தமிழ்சொல் பயன்படுத்தியிருக்கலாம்? அதைக்குறிப்பிட்டால் எனக்கும், நண்பருக்கும் பயன்படும். நன்றி.
பாராட்டுக்கள் மோகன், தொடருங்கள்.
நன்றி யக்னா/யஞா, நானும் முதலில் பின்னூட்டம் வர திறந்து பார்த்து மனதிற்குள் சிரித்துக்கொண்டேன்.
ReplyDeleteசுரேஷ்(பினாத்தல்) நன்றிங்கோ, உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
பெயரிலி, மிகவும் நன்றி உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.
யக்னா, பெயரிலி - முதலில் நான் முழுவதும் தமிழில் எழுதத்தான் முயற்சித்தேன். ஆனால் நான் தமிழில் அறிவியற்சொற்களைப்பயன்படுத்தி எழுதப்போக, அது மொத்தமாய்ப் புரியாமல் போய்விடுமோ என அஞ்சியே கொஞ்சம்கொஞ்சம் ஆங்கிலத்திலும் எழுதினேன்.
அன்பு - மிக்க நன்றி, முழுவதும் தமிழில் இல்லாததை சொல்கிறார்களென்று நினைக்கிறேன் நான்.
மற்றபடிக்கு உங்கள் அனைவரின் வருகைக்கு நன்றி.
முதலில் நான் யக்ஞா.
ReplyDeleteமோகன்தாஸ், ஆங்கில பிரயோகங்களுக்கு பக்கதிலேயே அடைப்புக்குறிகளுக்குள் தமிழ் சொற்கள் கொடுத்துப் பாருங்களேன், படிக்க ஏதுவாக இருக்கும்.
அன்பு, நிரைய இடங்களில் பயன்படுத்தலாம். உதாரணம் - தலைப்பே செயற்கை நுன்அறிவு என்று சொல்லலாம், ஆனால் எத்தனைபேர் படிப்பார்கள் என்று தெரியவில்லை. :-)
அன்பு யக்ஞா,
ReplyDeleteஉதாரணம் - தலைப்பே செயற்கை நுன்அறிவு என்று சொல்லலாம், ஆனால் எத்தனைபேர் படிப்பார்கள் என்று தெரியவில்லை. :-)
அதைத்தான் நானும் சொல்லவந்தேன். என்னைப்பொருத்தவரை முதலில் குறைந்தபட்சம் தமிழில் இதுபோன்ற விடயங்கள் பரவலாக வர ஆரம்பிக்கட்டும். அதன்பின்னர் - முற்றிலும் தமிழ் என்பதைக் கையிலெடுக்கலாம் என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து!
யக்ஞா அன்பு சொன்னதைப்போல் புரியுமான்னுதான் சொல்லலை. மற்றபடிக்கு தர முயற்ச்சித்திருக்கிறேன்.
ReplyDeleteஅன்பு உண்மைதான் நானே ஜல்லிதான் அடித்திருக்கிறேன், இங்கிருக்கும் பெரியவர்கள் தான் வந்து ரோடு போடவேண்டும்.
ஒருவிஷயம் நான் இடையில் ஓட்டியிருக்கும் அப்லெட்டு எல்லோருக்கும் வொர்க் ஆகுதா. அதான் செஸ் மற்றும் n queen problem solver. ப்ளீஸ் சொல்லுங்களேன்.
//**இது ஒரு கடலைப்போன்ற விஷயம், அள்ள அள்ள குறையாமல் விஷயங்கள் வந்து குவியும்**//
ReplyDeleteவேற ஏதோ சுவாரசுயமா கடலை பற்றி சொல்ல போறீங்க்ளோன்னு நெனைச்சேன். A.I பற்றி சொல்லிருக்கீங்க. தமிழ் மணத்தில் இது போன்ற பதிவுகள் குறைவு. நன்றாக வந்திருக்கிறது. தொடர்ங்கள்.
Mohan das,
ReplyDeleteVery good post, very well written and you are trying to set a new trend in Tamil blogs (but I am commenting in English ;-))
Pl. keep it up !!!
சிவா கடலைப்பற்றித்தானே போட்டுட்டா போச்சு :-) ரொம்ப நன்றிங்கோ, பாலா உங்கள் வருகைக்கும் உற்சாகப்படுத்தியதற்கும் நன்றி.
ReplyDeleteapplet அலுவலகத்திலும் வீட்டிலும் தெரிகிறது. ரெண்டாவது கோடு போடுறதை கொஞ்சம் நேரம் ஆச்சரியமா பார்த்துட்டுருந்தேன்:)
ReplyDeleteஇன்னும் முழுதாகப் படிக்கவில்லை, ஆனாலும் முதலில் உங்கள் உழைப்புக்கு ஒரு சலாம். பாராட்டுக்கள் மோகன்தாஸ்
ReplyDeleteஃப்ர்ஸ்ட் கிளாஸ் போங்க! நாங்க 70களின் கடைசியில் இஞ்சினியரிங் படிக்கும் போது, எலெக்ட்ரானிக்ஸ் பற்றி
ReplyDeleteபுத்தகங்கள் மலிவாக ரஷ்யன் பப்ளிஸ்ர்ஸ் போட்டது தான் கிடைக்கும். அதை ஆயிரம் தடவை படிச்சாலும் டிரான்சிஸ்டர் தியரி(saturation, cut-off curves)ஒரு மண்ணும் புரியாது. பிறகு மெதுவா MacGraw-Hill பப்ளிஸ்ர்ஸ் போட்ட அமெரிக்கன் புக்ஸ் கிடைச்சோன தான் படிச்சி புரிஞ்சி பரீட்சை எழுதி பாஸ் பண்ணுனோம். அது மாதிரி AI பத்தி நிறைய படிச்சிருந்தாலும், சும்மா உங்க பதிவை பாத்தோன நீங்க அந்த MacGraw-Hill புக்ஸ்ங்க படிச்ச கதை மாதிரி நச்னு புரியராப்லா போட்டுட்டீங்க!
மோகன்தாஸ் - நல்ல பதிவு. பாராட்டுகள்.
ReplyDeleteசெயற்கை ஒட்பம் (நீங்க சொன்ன ஆர்ட்டிஃபீஸியல் இண்டலிஜென்ஸ்தான்) அதிகம் வளராது இருக்கக் ஒரு முக்கிய காரணம் நேர் கணிப்பு (linear computing) முறைதான். உருவகிக்கவும் நடைமுறைப்படுத்தவும் எளிமையான இந்த முறையில் பல்நோக்கு சிந்தனைகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட செயற்கை ஒட்பம் சாத்தியமில்லாமல் போகிறது.
உதாரணமாக,வாழை மரத்தை மட்டுமே பார்த்த குழந்தை அடுத்த முறை மாமரத்தை 'மரம்' என்று சொல்லும். ஆனால், கிளை என்ற கற்பிதம் இல்லாததால் கணினி திண்டாடும். இந்தத் துறையில் இன்னும் செல்ல வேண்டியதூரம் நிறைய இருக்கிறது.
கூடியவரை ஆங்கிலச் சொற்களைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். உதாரணமாக, 'இமேஜ் இன்புட்' என்று எழுதுவதை 'படத்தை உள்ளிட்டால்' என்று எழுதலாமல்லவா? இப்படி க் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்தால் எளிதாக வரும். நல்ல முயற்சி. தொடர்ந்து செய்யுங்கள்.
1ஓட்பம் -intelligence prescience; wisdom
ReplyDelete2ஒட்பம் - 1. beauty; 2. benefit; 3. excellence (TLS)
Koln Online Tamil Lexicon
அட .... நல்லா விளங்குதே.... பதிவுக்கு நன்றி
ReplyDeleteநன்றிங்க அன்பு தெளிவுபடுத்தினதுக்கு.
ReplyDeleteகாசி, படிச்சிட்டும் எப்பிடியிருக்குன்னு சொல்லுங்க, காத்திருக்கிறேன்.
வெளிக்கண்ட நாதரே, ரொம்ப நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.
வெங்கட், நன்றிங்க linear, non-linear னு ரொம்ப விவரமா போகவேண்டாம்னுதான் எழுதலை. சுஜாதா எழுதின ஜூனோ மாதிரியோ இல்லை, AI(Artificial Intelligence) படம் போலவோ நாம் உருவாக்க இன்னும் நிறைய காலம் ஆகும்னு சொல்ல நினைத்தேன். அவ்வளவுதான். இமேஜ்ஜுன்னு சொன்னதுக்கு ஒரு காரணம், நீங்க சொன்னமாதிரி படத்தை உள்ளீடாகன்னு சொல்ல நேர்வதால் தான் எனக்கென்னவோ, படத்திற்கும் இமேஜ் என்று சொல்லப்படும் ஒரு விஷயத்திற்கும் நிறைய வேறுபாடு இருப்பதாக படுகிறது.
பிரகாஷ், நான் இதை எழுதும் பொழுதே, கம்ப்யூட்டர் படிக்காதவங்களுக்கும் AI பத்தி புரியணும், இல்லாட்டி அதற்காக புரியவைக்க முயற்சிக்கணும் அப்படிங்ற ஒரு நோக்கம் தான் இருந்தது. (நீங்க சொன்னதில் உள்குத்து எதுவும் இல்லைன்னு நினைக்கிறேன். :-)) உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Niels Bohr, முயற்சி செய்திருக்கிறேங்க, பெரும்பாலும் ஆங்கிலம் இடைவராமல் இருக்க, ஆனால் இந்த இடத்தில் தமிழை விட ஆங்கிலத்தில் எழுதினால் சரியாக இருக்கும் அப்படின்னு நான் நினைத்தால் ஆங்கிலத்தில் எழுதினேன், இதையும் திருத்திக்கொள்ள முனைகிறேன்.
மோகன்தாஸ்!
ReplyDeleteபயனுள்ள அரிய பதிவு!
தொடர்ந்து இதுபோன்ற பயனுள்ள விஷயங்களைக் கொடுங்கள்
நல்ல பதிவு மோகன். எல்லாரும் சொல்வது போல இதை அவ்வுளவு சுலபமாக தமிழ்படுத்தவும் முடியாது. அப்படி தமிழ்படுத்தினாலும் படிப்பவர்களுக்கு எளிதில் புரியாது. என்னுடைய கோரிக்கை இதை இப்படியே தொடர்வது தான். பதிவுகளில் சண்டைகளுக்கு இடையே இது போன்ற பல நல்ல பதிவுகள் வரவேண்டும்.
ReplyDeleteஉதாரணத்துக்கு செஸ்ஸா?
ReplyDeleteஅது எனக்கு தெரியாதே!!
இருந்தாலும் முழுதும் படித்தபிறகு,புரிஞ்சமாதிரி இருக்கு அப்படியே புரியாத மாதிரியும் இருக்கு.எனக்கு அவ்வளவு தாங்க.
:-))