In சுய சொறிதல் சுஜாதா

பெயரில் என்ன இருக்குதுங்க சுஜாதா படங்காட்டல்

எப்பவுமே விகடன்.காம் ஓப்பன் பண்ணினா கற்றதும் பெற்றதும் முதலில் படிக்கிறது வழக்கம். இன்னைக்கு சுஜாதா சொல்லியிருந்த ஒரு விஷயம் சிறிது உறுத்தியது.

ராமானுஜன் என்றால், ராமனின் உடன்பிறப்பு. எனக்குப் பிடித்த பெயர்களில் அது ஒன்று. நான் மிகவும் வியப்பது மூன்று ராமானுஜர்களை! 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த, விசிஷ்டாத் வைதக் கருத்துக்களை நிறுவி, ஸ்ரீபாஷ் யம் தந்த ராமானுஜர் அதில் முதல்வர். கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜன் இரண்டாமவர். கவிஞரும், தேர்ந்த மொழிபெயர்ப்பாளருமான ஏ.கே. ராமானுஜன் மூன்றாமவர்....

சொல்லிவிட்டு அவரவர்களைப்பற்றி இரண்டிரண்டு வரிகள் சொன்னவர் கடேசியில் சொன்ன, "ராமானுஜன் என்ற பெயரில் ஏதோ இருக்கிறது!" சொன்னது தான் பெருங்கொடுமை. எனக்குக் கூடத்தான் ராமானுஜன் என்ற பெயரில் கணக்கில் முட்டை மார்க் வாங்கிய சிலரைத் தெரியும். அப்பக்கூட சொல்லுவீங்களோ ராமானுஜன் பெயரில் சில விஷயம் இருக்குன்னு.

என்னவோப் போங்க நல்லாயிருந்தா சரிதான்.

இது பெயரில் என்ன இருக்குதுங்க சுஜாதா, அடுத்தது படங்காட்டல்

ஒரே ரப்சர் பண்ணி இந்த வருட புத்தகக் கண்காட்சிக்கு சென்று கிளப்பிக்கொண்டுவந்த புத்தகங்கள் ஒரு புகைப்படம்.( நன்றி இளவஞ்சி, டிசே - கான்செப்டிற்கு)



அடுத்து வருவது எங்கள் கம்பெனியின் வெளிப்புற அழகு இரவு வேளையில்.


Related Articles

7 comments:

  1. சுஜாதா மற்றும் ராமானுஜம் என்ற பெயரைப் பற்றி - 'அந்த பெயரில் ஏதோ இருக்கிறது' என்று அவர் சொன்னது ஒரு உயர்வு நவிற்சி அணி போல்தான். மற்றபடி அவரது பல கதைகளில் வரும் அம்மாஞ்சிகளுக்கு ராமாஞ்சு என்றுதான் பெயரிட்டிருப்பார். நகைச்சுவையை தவறாக எண்ணுகிறீர்களோ என்று தோன்றுகிறது. :-)

    ராயர் காபி கிளப் - இரா முருகனின் புத்தகம் பார்த்தேன் படத்தில். அந்த புத்தகத்தை பற்றி அறிந்து கொள்ள ஆவல். முடிந்தால் பதிவிடுங்கள்.

    அவர் இருக்கிறார் என்ற காரணத்திற்காக 'ராகாகி' குழுமத்தில் சேர்ந்தேன். மிக நல்ல அனுபவம் அது.

    ReplyDelete
  2. நகைச்சுவைன்னா சரிதான்.

    ஸ்ரீதர் நான் முதலில் எடுத்துக்கொண்டது ஆதவனின் குறுநாவல்கள். அடுத்து எடுக்கப்போவது புளிநக்கொன்றை. அதற்கப்புறம் தான் மூன்றுவிரல் மற்றும் ராகாகி.

    படித்ததும் நிச்சயம் ஒரு விமர்சனம் குறைந்த பட்சம் என் ஸ்டைலிலாவது போடப் பார்க்கிறேன்

    ReplyDelete
  3. ippo thaan ella sarchaigalum adangiyirukku..marupadiyum neenga kilapureengala

    ean sir ippadi utkarndhu yoseepeengalo?

    ReplyDelete
  4. கார்த்திக்,

    அப்படியெல்லாம் சொல்லமுடியாது, உட்கார்ந்து யோசிக்கிறதுக்கு டைம் கிடைச்சா உடனேயே கதையெழுத ஆரம்பிச்சுற்வென்.

    ReplyDelete
  5. Sujathavin 'Eppodhum Penn' naan vaasitha Sujathavin padaipuhalileye romba sumaranadhu enbathu ennudaya karuthu... ezhutha vendumey enru ezhuthiyathu polirukkum...all the best...

    Gopi...

    ReplyDelete
  6. ஹா ஹா சரிதான் தம்பி :), ராயர் காபி கிளப் குழுமம் புத்தகமே போட்டுட்டாங்களா? சரிதான் அடுத்து நம்ம புத்தகத்தினையும் வெளியிட்டுவிடவேண்டியதுதான்.....:)
    ஸ்ரீஷிவ்...:)

    ReplyDelete
  7. கோபி நான் அப்படி நினைக்கவில்லை. ஆனால் எப்போதும் பெண் எனக்குப் பிடித்த சுஜாதாக் கதைகளில் ஒன்று கிடையாது. ஆனால் ஒரு பரீட்சீதார்த்த முயற்சி அவ்வளவே.

    சிவா, எதைச் சொல்கிறீர்கள் மரத்தடியையா? ஆமென்றால் திண்ணையும் மரத்தடியும் சேர்ந்து விஞ்ஞான கதைகளைப் போட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    இரா மு அதில் தான் ராகாகியில் எழுதியதை மட்டும் போட்டிருப்பதாக நினைக்கிறேன். இன்னமும் புத்தகத்தை தொடக்கூட இல்லை.

    ReplyDelete

Popular Posts