In சினிமா விமர்சனம்

போக்கிரி - பார்க்கலாம் போங்க

போக்கிரி - பார்க்கலாம்

இந்த வாரம் தொடர்ச்சியாக திரை விமரிசனங்கள் தரலாம் என்று உத்தேசம். அதன் தொடர்ச்சியாகத் தான் இந்தப் படத்தின் விமர்சனம். உண்மையில் திருவிளையாடல் ஆரம்பம் படத்தைப் பார்த்துவிட்டும் அதற்கான விமர்சனத்தை எழுதிவிட்ட பிறகும் சரி. நான் ரொம்ப நாட்களுக்கு அதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். எனக்கு பொதுபுத்தி கிடையாது என்று மெய்ப்பிப்பதற்காக எழுதப்பட்ட விமர்சனம் மட்டும் தானா அது என்று.

ஏனென்றால் அப்படிப்பட்ட விமர்சனங்களை நான் வலையுலகில் பார்த்ததுண்டு. மேலும் நான் அப்படிப்பட்ட ஒருவனாய் மாறி வருகிறோனோ என்ற சந்தேகம் எனக்கு அந்த விமர்சனம் எழுதத் தொடங்குவதற்கு முன்பே வந்தது. ஏனென்றால் இந்த வித்தியாசம் எனக்கு புத்தகம் படிப்பதில் வந்துவிட்டிருந்தது. அல்லது வந்துவிட்டதாக நான் நினைக்கிறேன். அதனாலும் சினிமாவில் எனக்காக ஏற்படாத பொதுபுத்தியிலிருந்து விலகிவிட்டதான ஒரு மனநிலையை நானாக என் மீது திணித்துக் கொள்கிறேனோ என்று என்னை நானே சந்தேகிக்கத் தொடங்கினேன்.

ஆனால் ஒவ்வொரு முறையும் இல்லை நான் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் விமர்சனத்தை அந்த ஒரு காரணத்தை மனதில் கொண்டு எழுதவில்லை என்று நிரூபணமாகிவருகிறது. அதற்கு இன்னுமொறு உதாரணம் இந்தப் போக்கிரி படம்.

படத்தில் வன்முறைக்காட்சிகள் அதிகமாக இருக்கிறது என்ற ஒரு குறையைத் தவிர, ஒரு தமிழ் படத்திற்குத் தேவையான அத்தனை விஷயங்களும் கச்சிதமாக பொறுந்தி இருக்கிறது இந்தப்படம். விமர்சனத்தைப் படித்த பிறகும் அதற்கும் முன்பும் ஒரு மட்டமான விஜய் படத்தைப் பார்க்கப்போகிறேன் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. ஆனால் அப்படியில்லை மூன்று மணிநேரம் உட்கார்ந்து பார்க்கக் கூடிய அளவில் தான் இருக்கிறது இந்தப் படம்.

தேர்ந்த நடிகர்கள், பிரகாஷ்ராஜ், நாசர், நெப்போலியன் மற்றும் கொஞ்சமாக ஜொள்ளுவிட அசினும் இருக்கிறார்கள் படத்தில். வடிவேலுவின் காமேடி சில இடங்களில் அசிங்கமாக இருந்தாலும் மக்கள் வடிவேலு வந்ததுமே சிரிக்கிறார்கள். பாடல்கள் அனைத்துமே கேட்கக்கூடிய அளவில் இருக்கின்றன. இரண்டு பாடல்களின் நடனமும் நன்றாக இருந்தது.

பிரபுதேவா, விஜய் காம்பினேஷன் என்பதால் இன்னமும் எதிர்பார்த்தேன் நடனத்தில். லாஜிக் ஓட்டைகளே இல்லை என்று சொல்ல முடியாவிட்டாலும், பளீரென்று தெரியுமளவிற்கு ஒன்றும் இல்லை. (விஜய் போலீஸ் என்று விமர்சனம் படித்திருந்ததால் ஒருவேளை அந்த லாஜிக் உதைக்கலையோ என்னவோ.) நிறைய விஷயங்கள் யோசித்துச் செய்திருக்கிறார் பிரபுதேவா. தமிழ்ப்படங்களில் நடன இயக்குநராக பணி செய்திருந்து நன்றாக உதவியிருக்கிறது.

ஓவர் சென்டிமெண்ட் பில்டப்புகள் கிடையாது, ஒன்றுக்கும் உதவாத பஞ்ச் டயலாக்குகள் அதிகம் கிடையாது. பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவரா, ரத்தம் துப்பாக்கி சினிமாவில் எப்படிப் பயன்படுத்தப் படுகிறது என்று தெரிந்தவரா(அதாவது எல்லாம் நடிப்பென்று - அவ்வளவே) அப்படியென்றால் படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

நான் த டிபார்ட்டட் பார்த்ததனால் வந்த பாதிப்பா என்று தெரியாது, காட்சிகளை அந்தப் படங்களுடன் ஒப்பிட்டுக்கொண்டே வந்தேன். விஜய்யின் படங்களில் கில்லிக்கு அடுத்தது இன்னொருமுறை சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்கலாம் என்று உத்தேசித்திருக்கும் படம் போக்கிரி.

விஜய்யின் ரியாக்ஷன்கள் தெரிந்திருந்ததால் அப்படியொன்றும் அவரிடம் இருந்து பெரிதாக எதிர்பார்த்துப் போகவில்லை. விஜய்க்கு பிரமாதமாக வருகிறது என்று சொல்லமுடியாவிட்டாலும் நகைச்சுவை நன்றாக வருகிறது. ஸ்டண்ட் காட்சிகளில் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து செய்திருக்கிறார்கள். நன்றாக இருக்கிறது. என்ன த டிபார்டட்டில் சைலன்சர் பொறுத்தப் பட்ட துப்பாக்கி விஜய்யிடம் அது இல்லை, அங்கே பல்க் பல்க் என்று சுட்டதும் ஆட்கள் விழுவார்கள் இங்கே டமார் டமார் என சுட ஆட்கள் விழுகிறார்கள். பிரகாஷ்ராஜ் அந்தச் செல்லத்தை கொஞ்சம் விட்டுவிடலாம். மற்றபடிக்கு ஒரு சிறு கேள்வி, விஜய்யும் அசினும் சந்திக்கும் சமயங்களில் எல்லாம் பின்னணியில் ஓடவிடப்படும் அந்த மியூசிக் டிராக் எங்கேயோ ஒரு ஆங்கிலப் படத்தில் முன்பே கேட்டது போன்ற உணர்வு. யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Related Articles

12 comments:

  1. பட விமர்சனம் எல்லாம் இப்படித்தான் பண்ணனும்.சில பருப்புங்க எல்லாம் விஜய் படம் சத்யஜித்ரே படம் மாதிரி இல்லைன்னு சொல்ரானுங்க.இவனுங்க விமர்சனம் தான் பெரிய காமெடி.விஜய் படம் எல்லாம் போனோமா, டைம் பாஸ் பண்ணோமான்னு வரனும்.தியேட்டர்ல போய் நல்லா கூட்டத்தோட சிரிச்சிட்டு வந்து விமர்சனம் போடம்போது மட்டும் பெரிய பருப்பாயிடுரது.
    இந்த விமர்சனம் கரெக்ட்டா சொசைட்டியோட ஒத்து போகுது.

    ReplyDelete
  2. என்னங்க இப்பிடிச் சொல்லீட்டீங்க. இந்தப் படத்துல தமிழ் சினிமாவுக்கு வேண்டிய அத்தனையும் இருக்குன்னு வேற சொல்லீட்டீங்க வேற. தமிழ் சினிமாவை ஆண்டவந்தான் காப்பாத்தனும். எதிர்பார்ப்பே இல்லாமப் போகனுங்குற நெலமைக்கு வந்துட்டோம் பாத்தீங்களா!

    ReplyDelete
  3. நானெல்லாம் திருவிளையாடல் போனேன்னா அந்தக் காரணத்தினால் தான். ஆனால் திருவிளையாடல் ஆரம்பம் சகித்துக்கொள்ளமுடியாத படம் ஆனந்த்.

    உண்மையில் நானும் ஒரு சத்யசித்ரே படத்தையோ, இல்லை Non-Linear படத்தையோ எதிர்பார்த்துப் போகவில்லை. அப்படிப் பார்க்க படங்கள் உண்டு தனித்தனியாக.


    ஜி.ரா.

    ஆனந்திற்குச் சொன்னது போல் தான், காதல், வெயில் படங்களில் கூட தமிழ்ப்படங்களுக்கான காட்சியமைப்புக்கள் உண்டு.

    இதற்காக, மக்களுக்கு கமலுடைய ஹே ராம், குருதிப்புனல் போன்ற படங்கள் புரியவில்லை என்று சொல்லவில்லை. ஆனால் ஒருதர மக்களை மட்டும் சென்று சேரும் நோக்கில் எடுக்கப்பட்ட படங்கள் அவை.

    ------------

    மணிரத்தினத்திடம் இதை நீங்கள் பார்க்கலாம், Tri-Logy படம் என்ற முறையில் ஆய்த எழுத்து ஒரு பெயிலியர்னு தான் சொல்லுவேன். ஆனால் அதை சாதாரண மக்களுக்கும் புரியும் வகையில் சொன்னதுதான்(?) வெற்றி. ஏன் மணிக்கு Non-Linearஆ ஒரு Tri-Logy படத்தை எடுக்கமுடியாதான்ன முடியும்.

    ஆனால் நம்முடைய கடைசி நோக்கம் மக்களைச் சென்றடைவது அது இல்லையென்றால் இந்தப் படங்கள் வேஸ்ட்.

    ---------------

    கலைப்படங்கள் எடுக்கிறீர்களா பிரச்சனையில்லை, அதைப்பற்றிய பேச்சிற்கே இந்தப் பதிவில் இடமில்லை.

    ReplyDelete
  4. இந்த மாதிரி படங்களை என்கரேஜ் பன்னுவதால் தான் மீண்டும் மீண்டும் இதே போன்று படம் எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். படித்த, சமூக அக்கரை உள்ளவர்களே இப்படிப்பட்ட மூன்றாம் தர மசாலாப்படங்களை ஆதரிக்கும் போது பாமரனின் ரசனை இன்னும் அதளபாதாளதில் தான் இருக்கும். நல்ல படங்களை பார்க்க ஊக்கப்படுத்த வேண்டும்.

    சினிமாதான் இன்றைய இளைஞர்களின் அடையாளம் என்பது போல காட்டும் சன் டிவி (இளமை புதுமை, சூர்ய நட்சட்திரம்) போல நாமும் இருக்க முடியாது.

    ReplyDelete
  5. இல்லை மோகன்தாஸ். கலைப்படங்களுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வரவில்லை நான். ஆனால் இப்படி மசாலாவுக்குள்ளேயே முங்கிக் கொண்டிருந்தால் எப்படி? எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல்..வில்லன்..வில்லனை அழிக்கும் கதைநாயகன். அவனுக்கு ஒரு நாயகி. அவன் அடுத்தவனை வெட்டுவதாலும் குத்துவதாலும் அவளுக்கு அவன் மேல் காதல் வரும். வெகுஜனப் படங்கள் தேவைதான். ஆனால் ஒரே மாதிரி எடுத்தால் எப்படி? அதைத்தான் நானும் கேட்கிறேன். மக்களுக்குப் புரியாமல் கலைப்படம் எடுப்பது எப்படி பயனில்லையோ....அதே போல இப்படிப் படங்களாக எடுத்துத் தள்ளுவதும் பயனில்லை. அதுதான் என் கருத்து. Vijay is monotonous. இதுதான் என்னுடைய கருத்து.

    ReplyDelete
  6. அநானிமஸ் நான் என்கரேஜ் செய்கிறேன் செய்யலை என்பது வேறுவிஷயம்.

    வாரத்தின் ஐந்துநாட்களும் ஒரு மாதிரி பொட்டி தட்டிக்கிட்டு, எப்படா சனி ஞாயிறு வரும் என்று காத்திருக்கும் என்னைப் போன்ற சாப்ட்வேர் பேச்சுலர் மக்களுக்கு முக்கியமான ஒரு பொழுதுபோக்கு சினிமா.

    அப்படிப் பார்க்கும் பொழுது குறைந்தபட்சம் டோட்டலாக லாஜிக் உதைக்காமல் வரும் இது போன்ற மசாலாப் படங்களைப் பார்ப்பதில் எனக்கு எப்பொழுதுமே பிரச்சனையில்லை.

    எப்பொழுதும் பொதுமக்களை முட்டாள்கள் என்று பேசுவதை விரும்புவதில்லை நான். நிச்சயமாக ஒன்றும் புரியாமலோ, இல்லை தெரியாமலோ இல்லை பிடிக்காமலோ திருவிளையாடல் ஆரம்பம் ஓடவில்லை, அதைப்போலவே போக்கிரியும். அதுமட்டும்தான் விஷயம்.

    நீங்கள் எதிர்பார்க்கும் விஷயம் படத்தில் கிடைக்காது என்று தெரிந்தபிறகும் படத்திற்குப் போவது தான் எனக்குப் பிடிக்காத ஒன்று. ஆனால் பல சமயங்களில் நான் செய்கின்ற ஒன்று.

    ReplyDelete
  7. இதையேத்தான் நானும் சொல்லியிருந்தேன் இங்கே.

    //விஜய் படம் எல்லாம் போனோமா, டைம் பாஸ் பண்ணோமான்னு வரனும்.//
    ம்ம். ஒரு படம் பார்ப்பதற்கு முன், அந்த படம் எடுக்கப்பட்ட விதம் எப்படி என்றே பார்க்க வேண்டும் என்பது என் கருத்து. இந்தப் படத்தை பொருத்த வரையில் பிரபுதேவாவின் திரைக்கதை யுக்தி நன்றாகவே இருந்தது. மேலும், தரைக்கதையை கையாண்ட விதமும் நன்றாகவே இருந்தது.

    என்னுடைய ரசனை பெரும்பாலும் வெகுஜன ரசனையோடு ஒத்துப் போகும்.

    //வெகுஜனப் படங்கள் தேவைதான். ஆனால் ஒரே மாதிரி எடுத்தால் எப்படி?//
    இதை நானும் ஒத்துக் கொள்கிறேன். ஒரு படம் வந்தால் அதனை ஒற்றியே 10 படங்களாவது வருவது ஒரு சாபக்கேடு.

    ReplyDelete
  8. ராகவன் அப்படிப் பார்க்கப்போனால் தமிழ்சினிமாவில் வரும் அனைத்துப் படங்களுமே ஏதாவது ஒரு விதத்தில் இன்னொரு படத்தின் சாயலில் தான் வருகிறது.

    யாருக்கும் ரிஸ்க் எடுக்கப் பிடிப்பதில்லை ராகவன். எனக்கும் தெரியும் இன்று நான் ஒரு சின்னக் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தால் அதிக சம்பளமும் நல்ல வேலையும் கிடைக்குமென்று ஆனால் நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.

    அதேபோல் தான் சினிமாக்காரர்களும், அவ்வளவும் பணம். அவர்கள் ரிஸ்க் எடுக்கவிரும்பாது ஒன்று ஆச்சர்யத்தை அளிக்கவில்லை எனக்கு.

    நல்ல படங்கள் நிச்சயம் வரும், வெயில் போல் ஆனால் அதற்கான இடைவெளியில் வரும் இதுபோன்ற மசாலாப் படங்களை நான் வெறுப்பதில்லை.

    சங்கரும் கூட ஒரே மாதிரி பின்னணி, பாடல் சிச்சுவேஷன், இசை, கதை, கிராபிக்ஸ் என்று தான் எடுக்கிறார். அடுத்த சிவாஜி கூட அப்படித்தான் ஒன்றாகயிருக்கும். ரஜினி பறந்து அடிக்கும் பொழுது கிராபிக்ஸா இல்லை ரஜினியா என்ற சந்தேகத்தை மட்டுமே நம்மிடும் ஏற்படுத்தும். என்னைப் பொறுத்தவரை சங்கரின் அனைத்துப் படங்களுமே மசாலாப் படங்கள் தான். போக்கிரிக்கும் அதற்கும் சிறிது வித்தியாசம் தான் சொல்லமுடியும்.

    ReplyDelete
  9. //எதிர்பார்ப்பே இல்லாமப் போகனுங்குற நெலமைக்கு வந்துட்டோம் பாத்தீங்களா!//
    என்னத்த எதிர்பார்த்துட்டு போகனுங்கிரிங்க?வீடு மாதிரி படங்களே வந்துகிட்டுருந்தா நீங்க தியேட்டருக்கு போவீங்களா?
    //சமூக அக்கரை உள்ளவர்களே இப்படிப்பட்ட மூன்றாம் தர மசாலாப்படங்களை //
    சமூக அக்கரைக்கும் படங்களுக்கும் ஒருசம்பந்தமும் இல்லை,படத்தை பார்த்து ஒருத்தன் திருந்துரதில்லையோ அதே மாதிரி கெட்டுபோரதில்லைங்கரது என்னோட கருத்து.அப்புறம் படத்துல முதல் தரம்,மூன்றாம் தரம்னு எல்லாம் இல்லை.Interesting அல்லது Boring னு ரெண்டு வகைதான்.

    கடைசியா மோகன்தாஸ் சொன்னதுதான் சரி(தனித்தனியாக அப்படிங்கரத boldல போடுங்க)
    //உண்மையில் நானும் ஒரு சத்யசித்ரே படத்தையோ, இல்லை Non-Linear படத்தையோ எதிர்பார்த்துப் போகவில்லை. அப்படிப் பார்க்க படங்கள் உண்டு தனித்தனியாக//

    ReplyDelete
  10. Now I understand why Gajini was such big hit, even though it was one of the junkest (junk...junker...junkest:-)) copy (remake) I have ever seen.

    ReplyDelete
  11. //வாரத்தின் ஐந்துநாட்களும் ஒரு மாதிரி பொட்டி தட்டிக்கிட்டு, எப்படா சனி ஞாயிறு வரும் என்று காத்திருக்கும் என்னைப் போன்ற சாப்ட்வேர் பேச்சுலர் மக்களுக்கு முக்கியமான ஒரு பொழுதுபோக்கு சினிமா.//

    நீங்கள் சொல்வது எப்படியிருக்கிறது என்றால், "நாள் முழுக்க வேலை செய்த அசதி போக கொஞ்சம் தண்ணி அடிச்சா தப்பில்லை" என்று சொல்கிற உழைப்பாளி போல இருக்கிறது.

    ReplyDelete
  12. hello bass vimarsanam super namala mathri alunka than epadi 5 kodi 10 kodi selavu pani kenathanmana padam elam eduka mudiyum ethula ulaka cinemava pathi vera pesuvanu ka nan partha 2 world best padam 1)the way home 2)children of heaven mothamai 30 lacks than selavu pani irupankanu nenakiren antha mathri padam epathan eduka poromunu thariyala enaa ketaa vijay, ajith, apuram sila heroeisam pandra nadikarkal than tamil cinemava kevala paduthuranuka papom epa thirunthuvanukanu

    ReplyDelete

Popular Posts