In சொந்தக் கதை

ஏனிந்த கொலைவெறி "செந்தழல்" ரவி

சமீபத்தில் வெட்டிப்பயலின் ஒரு பதிவைப் படிக்க நேர்ந்தது. நிச்சயமாய் அந்தப் பதிவில் பின்னூட்டம் இட்டிருக்கலாம் தான். ஆகக்கூடி ஒரு ஜல்லிப்பதிவு போடுவதுன்னு ஆச்சுது. சரி அதேநேரத்தில் பதிவிடும் நேரத்தை ஒரு நல்ல மனிதனுக்காக செலவிடும் நல்ல எண்ணத்தில் இந்தப் பதிவு.

உண்மையில் எனக்கு ஆரம்பத்தில் தெரிந்த செந்தழல் ரவி, ஒரு சாதாரண பதிவர் பின்னூட்டங்களில் ஜல்லியடிப்பவர் அவ்வளவே. சொல்லப்போனால் ஒரு 'வடை' பிரச்சனையில் எனக்கும் அவருக்கும் பிரச்சனை கூட இருந்தது.

ஆனால் அவர் இந்த வேலைவாய்ப்பு விஷயத்தை தொடங்கியதும், (நான் படித்ததும்) செய்த முதல் வேலை எனக்குத் தெரிந்த வேலை வாய்ப்புக்களை அவருக்கு அறிமுகப்படுத்தியது. அவருக்கு அந்தச் சமயம் தொலைபேசியிருந்தேன். வெட்டிப்பயல் சொன்ன அத்தனையும் உண்மை, கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வாகாத என்னைப் போன்ற மேல்மாடி காலியாயிருந்த(நான் மட்டும் - இது கேம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகாத மற்றவர்கலை குறிக்கவில்லை) மக்களுக்கு எவ்வளவு உதவியாகயிருக்கும் என்பது.

என்னுடைய ஓட்டை( ;-) ) இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் டெல்லியில் வேலை தேடிய அனுபவத்தில் எனக்கு நன்றாகவேத் தெரியும். எனக்கு வெட்டிப்பயலைப் பற்றித் தெரியாது ஆனால் இந்தப் பதிவை யார் கேட்டுக்கொண்டும் நான் எழுதவில்லை.

வாழ்க நீ எம்மான், வளர்க உன் தொண்டு.

----------------------------------------------------

என்னை நேரில் பார்த்த அதாவது நான் தான் என்று தெரிந்து பார்த்த இரண்டு பதிவர்களில் செந்தழலாரும் ஒருவர். ஒரு அபாக்கியமான சமயத்தில் நாங்கள் பார்த்துக் கொள்ள நேர்ந்தது. என்னுடைய டெபிட் கார்ட் தொலைந்து போய், அதை இன்னொரு நபர் ஸ்வைப் பண்ணிக்கொண்டிருந்த வேளையில் நடந்த சந்திப்பு அது.

சொல்லிக்கொள்ளும் படியாக அவர் நிறையப் பேசினார். நான் வழக்கம் போல் ஜல்லிதான். ஆனால் நான் நினைத்ததுதான் நடந்தது, என்னுடைய வயசை அவர் சுத்தமாக நம்பவேயில்லை. அடுத்த முறை பார்க்கும் பொழுது பாஸ்போர்ட் சகிதம் பார்த்து உண்மையை நம்பவைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

அவரிடம் ப்ராமிஸ் செய்த ஒரு விஷயத்தை செய்யவில்லை, விஷயம் அவருக்குத் தெரியும். வேறென்ன கேட்கப்போகிறேன்.

மாப்பு, மாப்பு மற்றும் இன்னொரு முறை மாப்பு.

-----------------------------

தலைப்பு வழக்கம் போல ஜல்லி தான், அர்த்தம் கேட்டால் ஐகாரஸிடம் அனுப்பிவிடலாம் என்று தான் நினைத்தேன் பின்னர் ஒருவழி எழுதுவதில் தவறில்லையென்று. "வேலையில்லாமல் கஷ்டப்படும் இளைஞர்களுக்கு வாங்கித்தந்தே தீருவேன் என்று ஏனிந்த கொலைவெறி "செந்தழல்" ரவி உங்களுக்கு?". இதுதான் நான் நினைத்த தலைப்பு. தமிழ்மணம் தாங்காது ஆதலால் எனக்கு வேண்டிய பாகத்தை வெட்டி ஒட்டி இந்த தலைப்பு.

Related Articles

5 comments:

  1. //எனக்கு வெட்டிப்பயலைப் பற்றித் தெரியாது ஆனால் இந்தப் பதிவை யார் கேட்டுக்கொண்டும் நான் எழுதவில்லை.//

    நானும் யார் சொல்லியும் அந்த பதிவை எழுதவில்லை... அவருக்கும் தெரியாது.

    நட்சத்திர வாரத்தில் எழுத வேண்டுமென்றிருந்தேன் அப்போழுது அவர் மகாலட்சுமிக்கு உதவி செய்ய ஆரம்பித்த சமயம். அதனால் அந்த பதிவு மக்களுக்கு தவறான கண்ணோட்டத்தை தரும் என்று நிறுத்தி வைத்துவிட்டேன்!!!

    உண்மையில் வேலை தேடி கஷ்டப்படுபவர்க்கு தான் அதன் அருமை தெரியும்....

    ReplyDelete
  2. நான் இன்னும் உங்க வயசை நம்பலை !!! கில்லி கோலி ஆடும் பையன் வயசுல இருந்துக்கிட்டு (டூ மச் - இல்லையா) எழுதும் பதிவுகளில் கடுமையான அழுத்தம்...!!!!

    ஒருவேளை மோகன் தாஸ் யாரையாவது ப்ராக்ஸியா அனுப்பி என்னோட பேசவைச்சுட்டாரான்னு தெரியலை என்று என்னோட வந்த - அனானியா மட்டும் பின்னூட்டம் போடும் சுந்தர் அப்படித்தான் சொன்னான்...

    அந்த விஷயம் ஒரு பெரிய ப்ரச்சினை இல்லை !!!

    ஏடி.எம்.கார்டு (புதுசு) கிடைச்சுதா இல்லையா மறுபடி ?

    என்ன புது ஆபீஸ்ல வேலை ஒன்னும் பெருசா இருக்காது ஒரு மூனுமாசத்துக்கு, பதிவு போட்டு பட்டையை கிளப்புங்க..

    ReplyDelete
  3. நாமக்கல் சிபி, வெட்டிப்பயல், ரவி நன்றிகள்.

    வெட்டிப்பயல், நான் சொன்னதை தப்பாக நினைத்துக்கொள்ளவில்லை என்றால் சந்தோஷம்.

    //உண்மையில் வேலை தேடி கஷ்டப்படுபவர்க்கு தான் அதன் அருமை தெரியும்.... //

    எனக்குத் தெரியும்.


    ரவி, உண்மையில் என் வயதை நீங்கள் நம்பியிருந்தால் தான் பிரச்சனையே. நீங்க வேற, யோவ் உனக்கு கல்யாணம் ஆய்டுச்சு தானே, உன் புள்ளக்குட்டியெல்லம் எங்கே அப்படின்னு கேக்கிற ஆட்கள் தான் அதிகம்.

    எங்க அம்மா தான் சொல்வாங்க, என்ன குழந்தைக்கு ஒரு குழந்தையா என்று?(ஆஹா இப்படித்தான் சைக்கிள் கேப்பில் அடிக்கிறது...)

    ஏடிஎம் கார்டிற்கு அப்ளையே செய்யவில்லை. பூரா இண்டர்நெட் டிரான்ஸ்பர் தான் இனிமே அந்த அக்கவுண்டிற்கு.

    மற்றபடிக்கு வேலையெல்லாம் இருக்கிறது. வேலிடேஷனை டைனமிக்காக எக்ஸ் எம் எல்லில் இருந்து ரூல்களைப் பெற்று செய்து தரச்சொல்லி வாரம் இரண்டாகிறது. மூச்சைப் போட்டுக்கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  4. இரவியின் சேவைக்கு நானும் தலை வணங்குகிறேன்.

    ReplyDelete

Popular Posts