என்ன சொல்றது எல்லாரும் நல்லா மாட்டினீங்க. நான் என்னுடைய லூசுத்தனங்களைப் பத்தி ஒரு வாய்ஸ் பதிவு போட்டிருக்கேன் அவ்வளவுதான்.சொல்லியிருக்கும் லூசுத்தனங்களைப் பத்தி மேலோட்டமா ஹிண்ட் மற்றும் கொடுக்கிறேன் இங்க,1) ஆஸ்திரேலியா சப்போர்ட்2) கோயிலுக்குப் போறது3) என் ஸ்கூல் காலத்தில் நடந்த ஒரு விஷயம்4) என் காலேஜ் காலத்தில் நடந்த ஒரு விஷயம்5) தமிழ்ல பதிவெழுதுவது.வொர்க் ஆகும்னு நினைக்கிறேன். கொஞ்சம் பெருசா வந்திருச்சு, பிரிபேர் எல்லாம் செய்யாமல் பேசியது....
ஆ வருது வருது, புகை வருது வருது. அண்ணாச்சி என்னமோ இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு பிரச்சனை வருமென்று சொன்னார். எனக்கென்னமோ ஒரு பாதி முடிந்த பின்னர் அப்படித் தோன்றவில்லை. ஆஸ்திரேலியாவின் வெற்றி தொடரும் என்று தான் நினைக்கிறேன். கடைசியாக ஆஸ்திரேலியா எப்பொழுது உலகக்கோப்பைக் கோப்பையில் தோற்றது தெரியுமா, இரண்டு உலகக்கோப்பைக்கு முன்னர் அதாவது. போன உலகக்கோப்பைக்கு முந்தைய உலகக்கோப்பையில்(ஸ்டீவ் வா தலைமையில் ஜெயித்தது) செமி பைனல்ஸ் ஆகயிருக்குமென்று...
ராமதாஸைப் பற்றி எனக்கு பதிவெழுத வருமுன் அவ்வளவாகத் தெரியாது. மரம்வெட்டிக் கதைகளைக் கேட்டிருக்கிறேன், ஆண்டிமடம் சென்றிருந்த பொழுது நண்பர்களால் காடுவெட்டி குரு பற்றிய தலைவெட்டி கதைகளையும் கேட்டிருக்கிறேன்(எவ்வளவு உண்மை என்று தெரியாது.) ஆனால் குழலியின் மருத்துவர் சீரிஸ் படித்து என்னுடைய ராமதாஸை நோக்கும் பார்வை மாறியிருப்பது உண்மை.இப்ப நான் போடப்போற பதிவுக்கும் இந்த ஜல்லிக்கும் சம்மந்தமே கிடையாது. சமீபத்தில் யூடியூபில் ஒரு வீடியோ பார்த்தேன். இன்னிக்கு தமிழ்நாட்டு...
முன்னாடி இரண்டு தெய்வங்களை நம்பி நான் போட்ட வேர்ல்ட் கப் மேப், ஊத்திக் கொண்டது உண்மைதான். இந்தியாவை பைனல்ஸ் வரை கொண்டு சென்றது என்னுடைய தேசபக்தியால் மட்டும் கிடையாது. அவர்களுக்கு நிச்சயமாக அந்தத் திறமை உண்டு. என்னவோ யார் செய்த சதியோ, வைத்த சூனியமோ ஊத்திக் கொண்டு முதல் ரவுண்டிலேயே வெளியேறும் நிலை.ஆனால் என்னுடைய புல் சப்போர்ட் அணி பிரமாதமாக விளையாடிவருகிறது. எனக்கென்னமோ இந்த முறையும் ஆஸ்திரேலியா...
உலகக்கோப்பைப் போட்டியில் பெர்முடாஸ் அணி மேட்ச் பிக்ஸிங் செய்தது தெரியவந்துள்ளது. இதைப் பற்றி தீவிர விசாரணை நடத்தப்படும் என்று ஐசிசியின் தலைவர் மால்கம் ஸ்பீட் தெரிவித்தார். இன்று மதியம் போல் பெர்முடா அணியின் கேப்டன் Irvine Romaine ஐசிசியின் மேட்ச் பிக்ஸிங் தடுப்புக் குழுவால் விசாரிகப்பட்டதாகவும் தெரிகிறது.இந்தியா அணிக்கெதிரான போட்டியின் உத்தப்பாவின் கேட்சைப் பிடித்த Dwayne Leverock ஒரு போலீஸ்காரர் என்பதால் அவரால் தான் இந்த ஸ்காண்டல்...
ஒருவழியா வேர்ல்ட் கப் இரண்டாவது பாகத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் டீம் இப்படி முதல் ரவுண்டிலேயே வெளியேறிரும் என்று நான் நினைக்கவில்லை. சரி போகட்டும். இந்தியா தற்சமயம் தடுமாறிக் கொண்டிருக்கிறது சூப்பர் எய்ட்டில் நுழைவதற்கு. என்னைப் பொறுத்தவரை இந்திய இலங்கையை சுலபமாக வென்றுவிடும். அந்த ஆட்டதிலும் சேவாக் நன்றாக விளையாடுவார் என்பது என் எண்ணம். இதே முதல் ஆட்டம் பார்படாஸுடன் இருந்து இரண்டாவது ஆட்டம் பங்க்ளாதேஷுடன் இருந்திருந்தால்...
In சினிமா சினிமா விமர்சனம் சுய சொறிதல்
Apocalypto, 300, மொழி & ராஜராஜன்
Posted on Tuesday, March 20, 2007
சமீபத்தில் அபோகலிப்டாவும், 300 வும் பார்க்க நேர்ந்தது, முதலாவது முற்றிலும் தற்செயலான ஒன்று எப்படியென்றால், முந்தைய நாள் டிரைலர் பார்க்க பிடித்துப்போய் இந்தப் படம் பார்க்க உட்கார்ந்தேன். ஆனால் 300 பற்றிய விமர்சனங்கள், டிரைலர்கள் என பலவற்றைப் பார்த்துவிட்டு இந்தப் படம் ரிலீஸ் ஆகும் நாளுக்காக காத்திருந்தேன்.என்னைப் பொறுத்தவரை முதலாவது படம் எனக்கு அதிகம் பிடித்திருந்தது, காரணம் எல்லாம் சொல்லமுடியாது.Mayan civilization ல் நடக்கும் கதையாய் சொல்லப்படுகிறது....
சொல்லப்போனால் இந்த ஆட்டத்துக்கெல்லாம் பதிவெழுதி ஸ்காட்லாந்தை ஆளாக்கணுமா என்றுதான் நினைத்தேன். ஆனால் உலகக்கோப்பை ஆரம்ப ஆட்டமாக(ஆஸ்திரேலியாவிற்கு) இருப்பதால் வேறுவழியில்லை.இந்த உலகக்கோப்பையின் சிறந்த பந்துவீச்சாளராக, ஸ்டுவர்ட் க்ளார்க் இருப்பாரென்று நினைக்கிறேன் அதேபோல் சிறந்த பேட்ஸ்மேனாக, Mr. Cricket இருப்பாரென்றும் நினைக்கிறேன். அதுயாரு Mr. Cricket என்று கேட்பவர்களுடன் நான் "கா".சொல்றதுக்கு ஒன்னுமேயில்லை இந்தப் போட்டியைப் பற்றி. ஆனால் சில கணிப்புகள், ஆஸ்திரேலியா டாஸ் ஜெயித்தால் பீல்டிங் கேட்கும், அதேபோல்...
கிழிந்துகொண்டே போகும்பிரபஞ்சத்தைக் கட்டிப்போடகயிறுகள் இல்லைஇல்லாமல் போன கயிறு வலுவேறியதாய்நிறமேறியதாய்கற்பனையில்கழுத்தை நெறிக்கிறதுகற்பனைகள் தொலைந்து போனநாளொன்றின் கடைசியில்விட்டு விடுதலையாகி விடியலைநோக்கியபயணம், நிச்சயமாய்த் தனிமையில்...பட்டம் விடுதல்...எங்கள் BHEL Quarter's பெரிய ஸ்டெடியம் ஒன்று உண்டு. எப்பொழுதோ ஒரு சமயம் இந்திய கிரிக்கெட் அணியின் சில வீரர்கள் பங்குபெற்ற 'சும்மா' போட்டியொன்று அங்கு நடந்திருக்கிறது. சொல்லப்போனால் மே மாதம் விடுமுறை நாட்களில் பட்டம் விடுவதென்பது ஒரு பொழுதுபோக்கு அந்தக் காலத்தில். மாஞ்சா போட்டு...
சமீபத்தில் படித்த பதிவொன்றின் காரணமாக எனக்கு எழுந்த கேள்வி, முன்பே எப்பொழுதோ இதைப் பற்றிய பின்னூட்டம் எழுதிய நினைவு. கொஞ்ச நாள் பாலோ பண்ணிக்கொண்டிருந்தேன் பதில் வரவில்லை.எங்க வீட்டிலெல்லாம் ரொம்பவும் தீவிரமான இந்து மக்கள், ஒவ்வொரு முறையும் மதமாற்றத்தைப் பற்றிய விஷயத்தைக் கேள்விப்பட்ட பொழுதும் இந்து மதம் மதமாற்றத்தை அனுமதிக்காததைப் பற்றி பேசப்படும். மற்ற மதங்களை விடவும் இந்து மதத்தை அவர்கள் சரியானதென்று சொன்னதற்கு இதுவும் ஒரு...
பக்கத்தில் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அம்மா ஆரம்பக் கட்ட கேள்விகளுக்குப் பிறகு,"என்னடா புத்தகம் போடப்போறியாமே?"முறைத்தேன்."குந்தவை வந்தியத்தேவன் கதைகள், தலைப்புக்கூட நல்லாத்தானிருக்கு. என்ன ஒரு ஐம்பதாயிரம் ஆகுமா. நான் தர்றேன் போடு..."எனக்கு உண்மையிலேயே என்ன நடக்கிறதென்று புரியவில்லை, சிறிது நேரத்தில் பின்னால் இருந்து கேட்ட சிரிப்பின் பிறகுதான் புரிந்தது. அக்கா எல்லாவற்றையும் வத்தி வைத்திருக்க வேண்டும்.அவரே தொடர்ந்தார்."உனக்கு இந்தச் சமயத்தில் இது தேவையில்லாதது. நீ சொன்னது சரியா? தப்பான்னு நான்...
Subscribe to:
Posts
(
Atom
)
Popular Posts
-
இங்க இப்படி ஒரு ஐட்டம் இருக்கிறதென்பதே மறந்து போயிருந்தது. காந்தாரா படமல்ல பொன்னியின் செல்வன் படம் தான் என்னை ப்ளாக் பக்கம் திருப்பியது, ஆனா...
-
"Its not fair" ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ "நான் நினைச்சேன்..." என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொஞ்சம்...
-
"இதுக்கு முன்னாடி மணாலிக்கு போயிருக்கிறியா மீனா?" ரவி தன் மனைவியிடம் கேட்டதும், அவள், "இல்லைங்க. நான் ஊட்டி, கொடைக்கானல் தான்...