In அரசியல் ஏழாம் அறிவு பதிவுலகம்
பதிவுலக அரசியல் - வெளிப்படையான அலசல்
Posted on Saturday, January 30, 2016
இப்படி ஒரு பதிவை எழுதிவிட வேண்டும் என்ற ஆசை எனக்கு ஒரு வருடமாகவே உண்டு. நானும் எனக்கு அரசியல் சம்மந்தம் இல்லை என்று எத்தனை முறை சொன்னாலும் கேட்காமல் இணைய அரசியலில் என்னையும் எப்பொழுது சம்மந்தப்படுத்தும் ஒரு குரூப் உண்டு. இப்பொழுது எனக்குத் தெரிந்த இணைய அரசியலைப் பற்றி எழுதுகிறேன். இதுதான் அந்தப் பதுவு கொஞ்சம் வித்தியாசமாகயிருக்கிறதா - பின்ன தமிழ்ல எழுதிப்போட்டா ஆட்டோ அனுப்பிட மாட்டாங்க,...
In Only ஜல்லிஸ் அயோனி சீதா சுஜாதா புத்தர் பைத்தியக்காரன் மையம் வளர்மதி
அயோனி
Posted on Monday, January 25, 2016
திடீரென்று ஒருநாள் நண்பன் ஒருத்தன் சீதையை அயோனின்னு சொல்வாங்களாமே அப்படின்னா என்ன அர்த்தம் என்று கேட்டு என்னிடம் வந்து நின்றான். எனக்கு முதலில் ஆச்சர்யம் எப்படி இவனுக்கு இந்தக் கதை தெரிந்தது என்று, அடுத்து அவன் ஏன் இதைப்பற்றி கேட்கிறான் என்ற சந்தேகம். ஏற்கனவே நண்பன் ஒரு மாதிரியானவன் என்பதால் சும்மா வாயைக் கிண்டினேன், ஏன் இதைப் பத்தி கேட்கிறாய் என்று. யோனின்னா என்ன அர்த்தம்னு எனக்குத்...
அமெரிக்கா வந்ததும் இழந்ததில் முக்கியமானது தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகள். தட்ஸ்தமிழும் கூகுள் ப்ளஸுமே எனக்கு தமிழ்நாட்டு அரசியலுக்கான சோர்ஸ்கள். அங்குமிங்கும் எப்பொழுதாவது இந்தப்பெயர் அடிபட்டு வந்தது தான் என்றாலும், பாண்டே என்று சர்நேம் இருப்பவன் என்ன பெரிதாய் தமிழகத்தைப் பற்றித் தெரிந்துவைத்திருக்கப்போகிறான். தந்தி டிவியெல்லாம் ஒரு டிவியா என்ற கருத்தில் முக்கியத்துவம் அளிக்கவில்லை. வீட்டில் யப்டீவி வழியாய் தந்திடிவியும் உண்டும். எவன்டா அது ரங்கராஜ் பாண்டே...
சித்தன்னவாசலைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்ததற்கும் காதலர் தின 'என்ன விலை அழகே' பாடலுக்கும் நிச்சயம் தொடர்பிருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன், காதல் அதுவும் முதற்காதல் தந்த மிகச்சில நினைவுப்பொருட்களின் ஒன்று காதலர் தினம் படப்பாடல்களின் பொழுது இளகும் நினைவுகள். அப்பாவிடம் சித்தன்னவாசலுக்குப் போகவேண்டும் காருக்கு சொல்லிவிடுங்கள் என்றதும் காருக்குச் சொன்னாரா இல்லையோ அங்க வர்ற பொண்ணுங்களை ஃபோட்டோ எடுக்கக்கூடாது என்று சொன்னதுதான் முதலில். அப்பா சொல்லித்தான் தெரியவந்தது...
"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா?" "கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்." சில காலமாகவே எனக்கு இது வழக்கமாகயிருக்கிறது, இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் எங்கள் வீட்டிற்கு புதிதாய் குடிவந்திருந்த அந்த தமிழீழ பையனை வம்பிழுத்துக் கொண்டிருப்பேன். அவனுடைய பேச்சும் செயல்களும் பெரும்பாலும் எனக்கு சிரிப்பையே வரவழைக்கும். முன்பே பலசமயங்களில் நான் ஈழத்தமிழை உரைநடையில் படித்திருந்தாலும் பேசிக் கேட்டதில்லை, சொரூபனை முதலில் பார்த்தபொழுது அவன் பேசிய தமிழ் விநோதமாயிருந்தது....
பாலகுமாரன் அவர்கள் சில காலமாக ஆராய்ச்சியெல்லாம் செய்து உடையார் என்றொரு கதையெழுதி வருகிறார். அதைப்பற்றிய சில கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியவில்லை. இங்கே நான் குறிப்பிடுவதற்கு முக்கியமான காரணம், பாலா தன் முதல் பாகத்தில் கல்கியை பற்றியும், அவருடைய நாவலில் வரும் நந்தினியை பற்றியும் கூறியதை வைத்தே, புத்தகம் கையில் இல்லாத காரணத்தால், சில வருடங்களுக்கு முன் படித்ததை நினைவு கூர்ந்து சொல்கிறேன். அதாவது நந்தினியை போன்ற...
வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே; கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்; ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின் களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே; இயவரும் அறியாப் பல்லியம் கறங்க, அன்னோ, பெரும்பே துற்றன்று, இவ் வருங்கடி மூதூர்; அறன்இலன் மன்ற தானே-விறன்மலை வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின் முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத் தகைவளர்த்து எடுத்த நகையடு, பகைவளர்த்து இருந்த இப் பண்புஇல்...
அவளுக்கு இன்னமுமே கூட தெரியாது. தேஜஸ்வினி என் அறையில் உட்கார்ந்திருந்தாள், அணைந்தது போக மீதமிருந்து ஒளிர்ந்து கொண்டிருந்த ஒற்றை பல்பு, அவள் கால் மேல் காலைப் போட்டு என் நீல நிற சோபாவில் சாய்ந்தது போல் உட்கார்ந்து கைகளால் இறுக்கி அணைத்துக் கொண்டிருந்த சிங்க பொம்மையின் தங்க நிற பிடறியும் அவள் தேன் வண்ண நிறமும் ஒன்றுடன் ஒன்று கலப்பதைக் காட்டியது. அந்த நிறம் அவளுடைய தோற்றுப்போன...
Subscribe to:
Posts
(
Atom
)
Popular Posts
-
It was late 2010, Chennai drowning in 2G rumors and the sticky heat of a city faking it wasn’t falling apart. I’d been plotting this night f...
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
-
இப்படியே ஒரு மாதம் ஓடியிருக்கும், ஒரு கையால் செய்யக்கூடிய வேலைகளை அவளே செய்யத் தொடங்கியிருந்தாள் இன்னும் கட்டுகள் பிரிக்கப்படவில்லை. தினமு...