சில நபர்கள் நம்மீது ஏற்படுத்தும் தாக்கம் பல காலங்களுக்கு மாறாமல் இருக்கும். என்னைப் பொறுத்தவரை இதுவரை என் வாழ்நாளில் நான் எடுத்த பல தீர்மானங்கள் ஒருவரின் தாக்கத்தால் ஏற்பட்டவையே. பல சமயங்களில் அந்த தாக்கத்தை ஏற்படுத்தும் நபர் நல்லவராக இருந்துவிடும் சூழ்நிலையில் பிரச்சனை எதுவும் ஏற்பட்டுவிடுவதில்லை. ஆனால் அவரே தவறான ஆளாக இருக்கும் பொழுது நிலைமை கடுமையாக இருக்கும்.
நான் என் தாக்கத்தைப் பற்றி சொல்லியிருந்தேன் இல்லையா, அந்தத் தாக்கத்தில் பல விஷயங்கள் இன்று வரை தொடர்கிறது, சில விஷயங்கள் குறைக்கப்பட்டன சில விஷயங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. இதை கொஞ்சம் விவரமாக சொல்கிறேன் இந்தப்பதிவில்.
சும்மா அழகிற்காக, சுஜாதாவை மென்டர் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் என்னுடைய உண்மையா மென்ட்டர், ஆசான் எல்லாமே எங்க மாமாதான். அதாவது எங்க அம்மாவோட தம்பி, சின்ன வயதிலேயே நல்லா படிச்சிட்டு, 90களின் தொடக்கத்தில் வந்த கம்ப்யூட்டர் சகாப்பதத்தால் அமேரிக்கா சென்றவர்.
இன்றைக்கு நான் படித்த படிப்பு, நான் செய்து கொண்டிருக்கும் வேலை, நான் வேலை செய்து கொண்டிருக்கும் விஷயம் உட்பட பல இவரால் தீர்மானிக்கப்பட்டவைதான். நான் நிச்சயமாக இன்று ஒரு நல்ல நிலையில் இருக்கிறேன் என்றால் அது இவரால் தான். +2 அதிகம் மதிப்பெண் எடுக்காத பொழுதும் நம்பிக்கையளித்து கணிணி படிக்கவைத்து, வேலை தேடிக்கொண்டிருந்த பொழுது இதைப் படித்தால் வேலை கிடைக்கும் என்று சொல்லி அதைப் படிக்க வைத்தவர்.
இதெல்லாம் நல்ல விஷயங்களைப்பற்றி நான் சொல்ல வந்தது. இந்த தாக்கங்கள் எல்லாம் எனக்கு நல்லவையாகவே இருந்தது.
நான் நட்சத்திரப் பதிவின் ஆரம்பத்தில் ஒரு நிகழ்வைப்பற்றி சொல்லியிருந்தேன் இல்லையா. அதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.
எங்க மாமாவிற்கும், அய்யர் ஆட்களுக்கும் என்ன பிரச்சனை என்றெல்லாம் தெரியாது. சரியாக நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுதுதான் இவர் அமேரிக்காவில் இருந்து வந்து பின்னர் ஆஸ்திரேலியா சென்றது. அந்த சமயத்தில் இவர் என்மேல் திணித்த சில விஷயங்களில் ஒன்று, அய்யர் வீட்டு ஆட்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்ற ஒன்று.
இன்னும் சொல்லப்போனால், BHEL, 16 வருடங்கள் வாழ்ந்து வந்த எனக்கு அம்மா மண்டபத்தில் டியூஷன் படிக்கவேண்டிய கட்டாயத்தால், ஸ்ரீரங்கத்தில் இருக்கும் மாமாவின் வீட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை. அந்த சமயத்தில் எனது வீட்டிலும், எங்க மாமா வீட்டிலும் எனக்கு கொடுக்கப்பட்ட ஒரே ஒரு அட்வைஸ், “ஸ்ரீரங்கத்தில் இருக்கப்போற, அந்த ஆளுங்கக்கிட்ட பார்த்து இருந்துக்கோ” அப்படிங்கிறது மட்டும்தான்.
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நான் இருந்த பொழுதுதான் நான் குறிப்பிட்ட அந்த சம்பவம் நடந்தது. நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் வயது, அமேரிக்கா மாமாவின் ஆலோசனை, (பின்னர் அமேரிக்கா அழைத்துச் செல்லும் கனவு.) இத்தனையும் சேர்ந்திருந்த நிலை.
அந்த ஹரன் ஒரு பிராமணப்பையனாப் போக, எல்லாம் சேர்ந்துப்போச்சு, மனசுல ஒரு ஆழமான சுவடா பதிந்திருச்சு, மாமா சொன்ன விஷயத்தை மறக்கவே முடியலை, தவறு என்பேரில் இருந்தாலும், போட்டுக் கொடுத்தானே அப்படிங்கிற ஒரு உணர்வுதான் அதிகமிருந்தது. இதனாலெல்லாம் பிராக்டிகலா வேற நடந்ததிற்குப் பிறகு, என்ன செய்ய மாமா சொல்றது தான் வேதவாக்கு, சில சமயம், நாள் கணக்கா மாமா என்னிடம் அவருக்கு நடந்த சில சம்பவங்களை சொல்லியிருக்கிறார். எனக்கு ஒரு பிராமின் பிரண்ட் இருக்கான்னு சொன்னாக்கூட திட்டுற ஒரு காலம் அது. இன்னும் புரியவில்லை அப்படி என்ன பிரச்சனையென்று.
ஆனாலும் எல்லாவற்றிலும் வித்தியாசமாய் எங்க மாமாவிற்கு ரொம்பவும் பிடித்த ஒரு நபர்களில் இராமானுஜமும் ஒருவர். மனுஷன் அவ்வளவு புத்தகம் வைச்சிருப்பார். அடிக்கடி தப்பிப் பிறந்திட்டான் தப்பிப் பிறந்திட்டான்னு சொல்லிக்கிட்டேயிருப்பார்னா பாருங்களேன். ஏதாவது ஒரு விஷயம்னா இராமானுஜத்தை தான் இழுப்பார் அவ்வளவு படிப்பறிவு அவரைப்பத்தி மாமாவிற்கு.
ஆரம்பக்காலத்தில் மாமா சொல்றாரேன்னு, சில புஸ்தகங்களைப் படித்திருக்கிறேன் இராமானுஜத்தைப் பற்றி. இப்பத்தான் இந்தப் பதிவின் முக்கியமான கட்டத்திற்கு வந்திருக்கிறீர்கள். கொஞ்சம் நாளில் எனக்கும் அவருக்கும் என்னமோ ஒரு சின்ன பிரச்சனை வந்திருச்சு, எனக்கெல்லாம் பிரச்சனை வந்திருச்சுன்னா நிறையப் படிப்பேன், அந்த சமயத்தில் இராமானுஜத்தைப் பற்றி என்ன தவறான விஷயங்கள் கிடைக்கும் தேடித்தேடி படித்திருக்கிறேன். இன்று நினைத்தால் சிரிப்பாக வருகிறது, அன்று நான் செய்தது.
பெரிய ஜீனியஸ் அந்தாளு, கொஞ்சம் கஷ்டப்படுற பேமிலி, இயற்கையாவே கணக்கு போடுவதில் பெரிய கை. சின்ன வயதிலிருந்தே அந்த கணக்கு மேல அப்படியொரு பிரியம். ஜி எஸ் கார்(GS Carr) அப்படிங்கிற ஒருத்தரோட புஸ்தகத்தை வைச்சிக்கிட்டு தானாவே கணக்கு கத்துக்கிட்டவரு. அவர் தன்னோட பள்ளிப்படிப்பில் எடுத்திருந்த மதிப்பெண்களின் அடிப்படையில் கும்பகோணத்தில் இருந்து கவர்மெண்ட் காலேஜில் ஸ்காலர்ஷிப் கிடைத்து படித்துவந்தார். ஆனால் தலைவர் கணக்கில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு மற்ற சப்ஜெட்டை எல்லாம் கோட்டைவிட்டதால் அடுத்த ஆண்டிற்கான ஸ்காலர்ஷிப் காலாவதியானது.
வீட்டில் யார்கிட்டையும் சொல்லிக்காம விசாகப்பட்டினத்துக்கு ஓடிப்போய்ட்டு, அங்கேயிருந்து கணக்கு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். பிறகு 1906ல் மீண்டும் பச்சைப்பாவில் நடைபெற்ற ஆர்ட்ஸ் எக்ஸாமில் தேர்ச்சிபெற்று யூனிவர்ஸிட்டி ஆப் மெட்ராஸில் படிக்க நினைத்திருந்தார். மூன்று மாத படிப்பிற்கு பிறகு அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கணக்கில் மட்டும் நல்ல மார்க் எடுத்திருந்து மற்றவற்றில் மீண்டும் கோட்டைவிட்டிருந்தார். இதன் காரணமாக அவரால் யூனிவர்ஸிட்டி ஆப் மெட்ராஸில் படிக்க முடியாமல் போனது.
பின்னர் தொடர்ச்சியாக கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும், 1909ல் தீவிரமாக நோய்வாய்ப்பட்டு அறுவைசிகிச்சை செய்துகொண்டார். பிறகு அதே வருடத்தில் பத்து வயதே நிரம்பிய அவர் மனைவியை திருமணம் செய்து கொண்டார். அந்த அம்மாவின் பெயர் ஜானகி அம்மாள். அவர், மனைவியுடன் அடுத்த இரண்டு வருடங்கள் குடும்பம் நடத்தவில்லை, அதாவது அவர் மனைவிக்கு 12 வயதாகும் வரை.
பிறகு அவருடைய கணித ஆராய்ச்சியில் கவனம் செலுத்தத்தொடங்கி, கிளர்க்காக வேலை செய்து கொண்டே ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். பிறகு தான் இவருடைய திறமையை புரிந்து கொண்ட யுனிவர்ஸிட்டி ஆப் மெட்ராஸ் இவருக்கு இரண்டு வருட ஸ்காலர்ஷிப் கொடுத்து இங்கிலாந்தின் டிரினிட்டி கல்லுரியில் சேர்ந்தார் இது நடந்தது, 1914. இங்கத்தான் ஆரம்பிச்சது ஒரு புதுப்பிரச்சனை.
நம்மாளு அய்யரு, அசைவம் சாப்பிடமாட்டார், பால்கூட குடிக்கமாட்டார்னு நினைக்கிறேன். இங்கிலாந்தில் சைவம் கிடைக்காம ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறார். இதனோடயே தன்னோட கணிதத்திறமையை பேப்பர்களாக பப்ளிஷ் செய்து பெரும் புகழை சம்பாதித்திருந்தார். இதெல்லாம் நடந்தது 1916, இப்ப இருக்கிற பிஎச்டி பட்டம் மாதிரி அந்த காலத்து Bachelor of Science by Research கிடைத்து.
இந்த சமயத்தில் எல்லாம் கூட அவருடைய உடல்நலனில் பல பிரச்சனைகள் இருந்துதான் வந்திருந்தது. அதன் பிறகு மேத்தமேட்டிக்ஸ் உலகத்தின் ஒரு உயர்ந்த விருதாக கருதப்படும், Fellow of Royal Society of England(FRS) என்று விருது கூட 1918ல் கிடைத்தது.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் அதாவது 1917 மிகவும் சங்கடமான காலம் ராமானுஜத்திற்கு, அதாவது அந்த சமயத்தில் மருத்துவர்கள் இவர் இறந்துவிடுவார் என்று கூட பயந்தனராம். அப்படியொரு நிலை.
பின்னர் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இந்தியாவிற்கு வந்து கொஞ்சம் காலம் கிளார்க்காக பணிபுரிந்திருக்கிறார். 1919ல் இங்கிலாந்தில் இருந்த வந்த அவர் அதே வருடமே இறந்தும் போயிருக்கிறார்.
எங்க மாமா அடிக்கடி சொல்வது, ராமானுஜம் தன் டைரியில் எழுதி வைத்திருந்த சில சமன்பாடுகளை விளக்க முடியாமல் இன்னும் தடுமாறிக்கிட்டிருக்காங்க, அவர் மட்டும் உயிரோடிருந்திருந்தா இன்னும் நிறைய சாதிச்சிருப்பாரு அப்படின்னு.
அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கு முதல் காரணம், அவர் சாப்பாடு தான். இந்த விஷயத்தில் மிகவும் கடுமையா இருந்திருந்ததால் ரொம்பவும் பிரச்சனை செய்திருக்கிறது. இன்று வரை கூட உலக கணிதவல்லுநர்கள் மதிக்கும் ஒரு மிகப்பெரிய கணிதமேதை தான் ராமானுஜம்.
என்னைப் பொறுத்தவரை அவர் வைத்திருந்த சில பழக்கவழங்கள் முற்றிலும் தவறானவை, தன்னுடைய உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு ஒரு சிறிய கொள்கை மீது நம்பிக்கை வைத்திருந்தது முட்டாள்த்தனம்.
இந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு முன்னமே தெரிந்திருக்கும். இவரைப்பற்றியும் எழுத என்னிடம் நிறைய விஷயங்கள் இருக்கிறது. நிச்சயம் அவருடைய கணிதத்திறமையைப் பற்றி இன்னுமொறு பதிவு எழுதுவேன்.
உங்களுக்கெல்லாம் தெரியுமா, 1917ல் உடல்நலன் மிகவும் பாதிக்கப்பட்டு, கொஞ்சம் மனநலம் கூட பாதிக்கப்பட்டிருந்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார் இராமானுஜம். அவருடைய நண்பர் ஹார்டிதான் அவர் ஒரு எப்ஆர்எஸ் என்று பொய் சொல்லி(அப்பொழுது அவர் வாங்கியிருக்கவில்லை.) அவரை தப்பிக்க வைத்தார்.
என்னைப் பொறுத்தவரை நமக்காகத்தான் கொள்கைகள் கொள்கைகளுக்காக நாம்கிடையாது. ஒருவேளை மிகப்பெரியவர்களுக்கு இதில் மாற்றுக்கருத்து இருக்கலாம், இருந்திருக்கலாம் இராமானுஜத்தைப் போல, என்ன இருந்தாலும் என் மாமாவால் என் மீது ஏற்படுத்தப்பட்ட ஒரு மிகப்பெரிய தாக்கம் இந்த இராமானுஜம். அதை மறுப்பதற்கில்லை.
ஒரு விஷயத்தை ஆரம்பித்துவிட்டு முடிக்காமல் போனால் தவறாகிவிடும். மாமாவின் தாக்கத்தைப் பற்றி சொல்லியிருந்தேன் இல்லையா. அதில் முக்கியமாக, பிராமணர்கள் மீதான கருத்து கொஞ்சம் காலத்தில் மாறியது எப்படியென்றால், பிராமணர்கள் மட்டுமல்ல, யாராகயிருந்தாலும் சந்தர்ப்பசூழ்நிலை வரும்பொழுது நடந்துகொள்ளும் நிலை மாறுபடும். இதனால் இப்பொழுதெல்லாம் யாரையும் நம்புவதில்லை அவ்வளவே.
அதிகம் படிக்க படிக்க, வாழ்க்கையை அனுபவிக்க அனுபவிக்க நிறைய மாற்றங்கள் நிகழ வேண்டும் அது எனக்கு இந்த விஷயத்தில் நடந்திருக்கிறது.
In Science ஜல்லிஸ் நட்சத்திரம்
நட்சத்திரம் - கணிதமேதை இராமனுஜம்
Posted on Tuesday, February 14, 2006
நட்சத்திரம் - கணிதமேதை இராமனுஜம்
பூனைக்குட்டி
Tuesday, February 14, 2006

பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
“ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு, ஸர்க்காரு இல்லேன்னு சொன்னா இல்லேன்னு ஆய்டுமா? கேட்டுக்கிட்டு உ...
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
-
I’d been grinding Visu down for days—teasing, poking—till he broke, voice tight with exasperation. “Fine, but hook me up with a girl I pick ...
நானும் கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். சிறுசிறு ஆராய்ச்சி(?)களைச் செய்து இருக்கிறேன். நான் ஒரு கணக்கினை எடுத்துக்கொண்டு ஆசிரியரிடம் சந்தேகம் கேட்க வருகிறேன் என்றால் துறைத்தலைவரே தலையைப் பிய்த்துக்கொண்டு ஓடுவார். அவ்வாறான கணக்குச் சந்தேகம் கேட்பது எனக்கு வழக்கம்.
ReplyDeleteஎன்னுடன் படித்த ரமேஷ் எனும் மாணவர் E=MC^2 என்ற பார்முலாவை எடுத்துக் கொண்டு பொய்யென்று நிரூபித்து கல்லூரியில் பாராட்டினைப் பெற்றார். அதிகமாகச் சிந்தித்ததாலோ என்னவோ ஓவர்ப்ளோ ஆகி பின்னர் ஒருமாதிரியாகத் திரிந்தார். நான் பணி நிமித்தம் பிரியவே அவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. உண்மையில் நல்ல ஞானம் அவருக்கு.
(பிகு:- பூஜ்யத்தினை பூஜ்யத்தினால் வகுத்தால் விடை பூஜ்யம் அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா?!!!)
மூர்த்தி, இருக்கலாம் ஆனால் இராமானுஜத்தின் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததற்கு ஒரே காரணம் அவர் ஒழுங்காக உணவருந்தாமல் வெட்டு சம்பிரதாயத்தை கடைபிடித்திருந்ததால் தான்.
ReplyDeleteஆனால் நீங்கள் சொல்வது உண்மைதான் எனக்கும் இதுபோல் நிறைய படித்து பித்து பிடித்து அலையும் சில ஆட்களைத்தெரியும்.
சிவாஜி(உண்மையில் யாரோ???) எல்லா தடவைகளும் எல்லோரையும் இம்ப்ரஸ் செய்யமுடியாது. உண்மையில் நான் அதற்கான முயற்சியைக் கூட எடுக்கவில்லை என்பது தான் உண்மை.
ReplyDeleteமற்றபடிக்கு, கதை நிறைய க்யூவில் இருக்கிறது பொறுத்திருங்கள். போதும் போதும்னு சொல்லும் வரை போடுகிறேன்.
மோகன்தாஸ் வெட்டுச் சம்பிரதாயம் என்று கருத முடியாது. நெய்யும் வெண்ணையும் ரொம்ப சாதுவான விஷயங்கள்தான். ஆனால் எனக்கு அவை ஆகா. என்னால் உண்மையிலே தின்ன முடியாது. வாடையே ஆகாது. ஆனால் அதே மூக்கு மீன்கடையைத் தாண்டும் பொழுது ரசிக்கிறது.
ReplyDeleteசைவமாகவே இருந்து பழகியவர்களுக்கு அந்த வாடை கூட குமட்டலாம். என்னுடைய நண்பன் ஒருவன் இருக்கிறான். சைவ உணவைக் கண்டாலே குமட்டும். தயிர்ச்சோறு என்றால் வாந்தி கட்டாயம். ஆனால் பாம்பு, எட்டுக்கால்பூச்சி, தேள், என்று எதையும் விட்டு வைத்தவன் இல்லை.
சைவமாகவே இருக்கின்றவர்கள் எங்கு போனாலும் கைப்பக்குவம் தெரிந்திருந்தால் நிச்சயமாக பிழைத்துக் கொள்ளலாம். அந்தக்காலத்தில் இந்த அளவுக்கு வசதி இருந்திருக்குமா என்று தெரியவில்லை.
நிச்சயமாக இந்தப் பதிவை ராமானுஜம் படிப்பாரானால்...கவுச்சியைத் தின்னு தொலைத்திருக்கலாம் என்று நினைத்தாலும் நினைப்பார். ஹா ஹா ஹா
ஆனால், எனக்கு இந்தப் பதிவு பிடித்திருக்கிறது மோகன். அறைந்து சொல்லாமல் மென்மையாகச் சொல்லி இருக்கிறீர்கள். நன்று.
ReplyDeleteஇராகவன் நான் இந்த பதிவை எழுதியதன் ஒரே நோக்கம் நீங்கள் சொல்வதைப்பார்த்தால் நிறைவேறிவிடும் போலிருக்கிறது. என் மீது ஆரம்பத்தில் திணிக்கப்பட்ட இராமானுஜம் பின்னர் ஒரு விரும்பும் ஆளுமையாக மாற்றப்பட்டதும் நான் முதலில் நினைத்தது. இந்த ஆளு இன்னும் கொஞ்ச நாள் உயிருடன் இருந்திருந்தால் நிறைய விஷயங்கள் சாதித்திருப்பார்.
ReplyDeleteஅப்படி இருக்க முடியாமல் போனதற்கு அவருடைய சாதி ஒரு காரணமாக இருந்திருக்குமேயானால் அதன் மீதான என்னுடைய எரிச்சலை வெளிப்படுத்த நினைத்த பதிவே இது.
எனக்கும் வெஜிடேரியன் என்றாலே அலர்ஜிதாங்க. :-)
அது கெட்டது போங்க, இன்னும் அறைஞ்சு சொல்லணுமா அவ்வளவுதான். பிடித்திருந்ததென்றால் சந்தோஷம் செல்வராஜ், எனக்குப் பிடித்த ஆளுமையைப்பற்றி உங்களுக்கு தெரிவிக்க என்னுடைய எழுத்து உதவியதை நினைத்து பெருமைப்படுகிறேன்.
ReplyDeleteகணித மேதை இராமானுஜம் பற்றிய செய்திகளை முன்பே படித்திருக்கிறேன்.ஆனாலும் நீங்கள் குறிப்பிட்டவற்றில் சில எனக்குப் புதியவைதான்;நன்றிங்க மோஹன்தாஸ்.
ReplyDeleteஇராமானுஜம் மட்டுமல்ல, உங்கள் பெயரை
முன்னதாக வைத்திருந்த கரம்சந் காந்தி கூட உணவு விஷயத்தில் ரொம்ப கட்டுப்பாடா இருந்திருக்கார். அதுவே அப்படிப் பட்டவங்களுக்கு ஒரு வைராக்கியத்தை உருவாக்கி சாதனை நிகழ்த்த வழிவகுத்திருக்கிறது என்பதும் உண்மை!
அன்புடன்,
எல்.ஏ.வாசுதேவன்
வாசுதேவன், தெரியுங்க ஒருவேளை நீங்கள் சொன்னது கூட உண்மையாக இருக்கலாம். தவிரவும் உணவுப்பழக்கம் அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது. ஆனால் டாக்டர்கள் உடல்நலம் சரியில்லாத பொழுது எடுத்துக்கொள்ளச்சொன்ன விஷயங்களைக் கூட மறுத்திருக்கிறார்.
ReplyDeleteஎதே ஒரு போர் நடந்த நேரமென்று நினைக்கிறேன். உணவுப்பற்றாக்குறை வேறு இதில்.
// இந்த ஆளு இன்னும் கொஞ்ச நாள் உயிருடன் இருந்திருந்தால் நிறைய விஷயங்கள் சாதித்திருப்பார்.
ReplyDeleteஅப்படி இருக்க முடியாமல் போனதற்கு அவருடைய சாதி ஒரு காரணமாக இருந்திருக்குமேயானால் அதன் மீதான என்னுடைய எரிச்சலை வெளிப்படுத்த நினைத்த பதிவே இது. //
இந்த விஷயத்தில் நான் வேறுபடுகிறேன் மோகன்தாஸ். உணவுப்பழக்கம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம். வெளிநாட்டுக்காரனைக் கூட்டி வந்து தலைவாழை இலை போட்டு நம்மூர்ச் சாப்பாடு போட்டால்...நிச்சயமாக அவன் பிழைக்க மாட்டான்.
என்னுடை அந்தக் குறிப்பிட்ட நண்பனோடு ஒப்பிடும் பொழுது அவனுடைய அளவுகோலில் நானும் சைவனே. கொரியாவில் போய் என்னை விட்டாலும் என்னைக் காப்பாற்றிக் கொள்ள smoked spiders, scorpian fry, octopus எல்லாம் சாப்பிட்ட மாட்டேன்.
நான் அசைவம் சாப்பிடுகிறவனாக இருந்தாலும் சைவமாக இருப்பது தவறு என்று சொல்ல மாட்டேன். அது அவரவர் விருப்பம். அவ்வளவே. ஏனென்றால் இந்த உலகத்தில் எதையுமே முழுமையாக சரியென்றோ தவறென்றோ கூற முடியாது.
தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்கிறீங்க தலைவரே, எங்க வீட்டிலேயே ஒரு சைவ ஆளை வைத்துக்கொண்டு சைவம் ஆக இருப்பது தவறுன்னு சொன்னேன்னா உதைவிழும். ஆனாலும் நேரம் காலம் இருக்குதில்லையா??
ReplyDeleteசாதாரணமா இருந்தா சரிதான், உயிர் போற சமயத்தில் கூட, தேவையில்லாத(உயிருடன் ஒப்பிடும் பொழுது) சடங்குகளை கடைபிடித்துக்கொண்டிருந்தால் என்ன செய்வது.
எங்க அக்கா சுத்த சைவம். முட்டை கூட கிடையாது. நாங்களும் கம்பெல் செய்தது கிடையாது. ஆனால் இதே இன்னும் பத்து நாளைக்கு அசைவம் சாப்பிட வேண்டிய நிலை, சாப்பிடாட்டி இறந்து போகக்கூடிய சூழ்நிலையென்றால். அக்காவை பளீருன்னு கன்னத்தில் அறைந்து சாப்பிட வைக்க மாட்டேனா.
உயிரை விட இது போன்ற சம்பிரதாயங்களை(அது அவருடைய தனிப்பட்ட விருப்பமாக இருக்கும் பொழுதும்) தொங்கிக்கொண்டிருப்பது முக்கியம் இல்லை. நான் அவருடைய நண்பர் ஹார்டியும், ராமானுஜத்தின் அண்ணனும் எழுதிய சில கடிதங்களை அந்தப் புத்தகத்தில் படிக்கும் பொழுது, இந்தாளு கொஞ்ச நாளு அசைவம் சாப்பிட்டுத் தொலைத்தால் என்னவாம் என்று நினைத்தேன் அதன் பிரதிபலிப்பே நான் எழுதியது.
முன்பே சொல்லிவிட்டேன் இராகவன், சாதாரணமான சூழ்நிலையில் சைவம் ஆக இருப்பது ரொம்பவும் நல்லது. அது பற்றியும் ஒரு பதிவு எழுதி வைத்திருக்கிறேன். பார்க்கலாம். ஆனால் என்னைப்பொறுத்தவரை, உயிரை விட மேலானது உலகத்தில் எதுவே கிடையாது. ஆனால் இராகவன் opinion differs. :-)
// எங்க அக்கா சுத்த சைவம். முட்டை கூட கிடையாது. நாங்களும் கம்பெல் செய்தது கிடையாது. ஆனால் இதே இன்னும் பத்து நாளைக்கு அசைவம் சாப்பிட வேண்டிய நிலை, சாப்பிடாட்டி இறந்து போகக்கூடிய சூழ்நிலையென்றால். அக்காவை பளீருன்னு கன்னத்தில் அறைந்து சாப்பிட வைக்க மாட்டேனா. //
ReplyDeleteம்ம்ம்...அப்ப சாப்பிட வைக்காதவங்க மேலதான் தப்பூங்குறீங்க. பாவம் இராமானுஜம். அவரைப் பளீருன்னு அடிச்சுச் சாப்பிட வைக்க இப்படியொரு தம்பி இல்ல போல.
// முன்பே சொல்லிவிட்டேன் இராகவன், சாதாரணமான சூழ்நிலையில் சைவம் ஆக இருப்பது ரொம்பவும் நல்லது. அது பற்றியும் ஒரு பதிவு எழுதி வைத்திருக்கிறேன். பார்க்கலாம். ஆனால் என்னைப்பொறுத்தவரை, உயிரை விட மேலானது உலகத்தில் எதுவே கிடையாது. ஆனால் இராகவன் opinion differs. :-) //
நிச்சயமாக. Opinion differs. எந்தச் சந்தேகம் இல்லை. :-)