இது போன்று தமிழ்மணத்தின் நட்சத்திரமாய் இருக்க ஒரு அருமையான வாய்ப்பை நல்கிய தமிழ்மண நிர்வாகிகளுக்கு முதற்கண் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் இத்தனை நேர சிக்கல்களுக்கும் இடையில் 14 பதிவுகளைக் போட்டிருக்கிறேன் என நினைக்கும் பொழுது முன்பிருந்ததைப்போல் கொஞ்சம் வேலை குறைவாக இருந்திருக்குமேயானால், என்னால் தமிழ்மண வாசகர்களின் நிலையை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. :-)
இந்த வாரம் மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக என் பதிவுகளை படித்துவரும் மக்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பாக இதை எடுத்துக்கொண்டு, இதுவரை ஆதரவளித்து வந்த அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி! நன்றி!! நன்றி!!!
உங்களிடம் கூகுளின் அனலைடிக்ஸ்ஸைப்(google.com/analytics) பற்றி முன்பே சொன்னவன் ஆதலால் அதனால் கிடைக்கும் ஒரு பயனாக கீழ்வரும் ஒரு ஸ்ட்டாட்டிஸ்டிக்ஸ் விவரத்தை அளிக்கிறேன். எத்துனை பேர் இதை பயன்படுத்திவருகிறீர்கள் என்பது தெரியாது ஆனால் முன்பே சொன்னது போல் ஒரு அற்புதமான் டூல் இது. அதன் ஒரு எடுத்துக்காட்டாக இந்த ஒருவாரமாக என் பதிவைப்பற்றி விவரங்களை தருகிறேன்.
அதற்கு முன் உங்களில் பலருக்கு கூகுளின் வீடியோவைப்(video.google.com) பற்றி தெரிந்திருக்கும். அதை அமெரிக்காவைத் தவிர்த்த வெளிநாடுகளில் இருந்து உபயோகிப்பதில் உள்ள சிக்கலைப் பற்றி முன்பே சொல்லியிருக்கிறேன். அதை மீறியும் கூகுளின் இந்த வீடியோ சேவையை பயன்படுத்த ஒரு வழிமுறையைத் தருகிறேன். இதுவும் சொல்லப்போனால் கூகுளில் இருக்கும் ஒரு பக்(BUG) கே.
1. இதற்கு முதலில் உங்களுக்கு தேவையான கூகுளின் வீடியோ உரல் தெரிந்திருக்க வேண்டும், உதாரணமாக கீழே உள்ள உரலை எடுத்துக் கொள்ளுங்கள்:
http://video.google.com/videoplay?docid=-4319256606292930218
2. உங்களால் இந்த உரலை நேரடியாக உபயோகிக்க முடியவில்லை என்றால் கீழே குறிப்பிட்டுள்ளது போல் கூகுளின் டிரான்ஸ்லேட்டர் சர்வீசை உபயோகித்து: http://www.google.com/translate?langpair=en|en&u=(url of the video)
3. அதாவது:
http://www.google.com/translate?langpair=en|en&u=http://video.google.com/videoplay?docid=-4319256606292930218
4. சந்தோஷமா இருங்க.
பாரதியின் தீவிரதாசனாய் கீழேயுள்ள கவிதை வரிகளுடன் இந்த நட்சத்திர வாரத்தை இனிதே நிறைவு செய்கிறேன்.
தேடிச் சோறுநிதந் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்ப மிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?
-----------------------
In சுய சொறிதல் சொந்தக் கதை நட்சத்திரம்
நட்சத்திரம் - நன்றிகள் பல
Posted on Sunday, February 19, 2006
நட்சத்திரம் - நன்றிகள் பல
பூனைக்குட்டி
Sunday, February 19, 2006

பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Related Articles
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
-
I’d been grinding Visu down for days—teasing, poking—till he broke, voice tight with exasperation. “Fine, but hook me up with a girl I pick ...
-
It was Saturday morning, early 2010, head still thumping from last night’s tequila flood, but I couldn’t stay away—back at Visu’s room like ...
மோகன்தாஸ், நட்சத்திரவாரம் உங்களைப்பற்றி நல்லதொரு அறிமுகம் தந்திருக்கிறது. நல்ல அறிமுகமே. இன்னும் பல நல்ல பதிவுகளைப் பதித்து தமிழ் வலைப்பதிவர் வட்டத்திலும் முத்திரையைப் பதிக்க என் வாழ்த்துகள். வாழ்க. வளர்க.
ReplyDeleteஅன்புடன்,
கோ.இராகவன்
நல்ல வாரம்.. நல்ல பதிவுகள்...
ReplyDeleteஅது சரி.. நட்சத்திரம் - கொலைத்தொழில் வல்லவன் 2 எங்கேன்னேன்?!
சந்தோஷம் இராகவன். முயற்சி செய்கிறேன்.
ReplyDeleteநன்றி
இளவஞ்சி இப்படி போட்டுக் கொடுக்குறீங்களே,
ReplyDeleteஅதை இன்னும் ஒரு பதிவில் போட்டு முடிக்க முடியாது அது மட்டுமில்லாமல், இப்பவே அதிகம் ஆய்டுச்சு.
மோகன் தாஸ். உங்களுக்கு நிஜமாகவே 23 வயது தான் ஆகிறதா? இல்லை குறைச்சு சொல்றீங்களா? இவ்வளவு சின்ன வயசுல எவ்வளவு விஷயங்களைத் தெரிஞ்சு வச்சிருக்கீங்க. அதுவும் எதுலயும் நுனிப்புல் மேயலை. இந்த வாரம் மட்டும் இல்லாம எப்பவுமே உங்க பதிவுகள் நல்லா இருக்கும்.
ReplyDeleteஉங்க நட்சத்திர வாரப் பதிவுகள் அல்மோஸ்ட் எல்லாமே படித்துவிட்டேன். மெதுவா பின்னூட்டம் போடறேன். இந்த வாரம் நிறைய வேலை இருந்ததால பிரிண்ட் அவுட் எடுத்துத் தான் உங்கப் பதிவுகளைப் படிச்சேன். அதனால உடனே பின்னூட்டங்கள் போட முடியலை.
ஹாக்கர்ஸ் பத்தியும் கூகுள் அனாலிடிக்ஸ் பத்தியும் சொன்னதற்கு நன்றி. அனாலிடிக்ஸ் பக்கத்துக்குப் போனா இப்ப கபாசிட்டி இல்லை; கபாசிட்டி கூட்டின பிறகு உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புறோம்ன்னு சொல்லியிருக்காங்க. எப்ப எனக்கு ஒரு அனாலிடிக்ஸ் அக்கவுண்ட் கிடைக்குதோ பார்க்கலாம்.
எல்லா நட்சத்திரங்களைப் போல லாங்க் லீவுல போகாம என்னை மாதிரி நட்சத்திர வாரம் முடிஞ்ச பிறகும் பதிவுகளைத் தொடர்ந்து போடுங்க.
நீங்க பதிவுகள் போடற வேகத்தைப் பார்த்து என்னை மிஞ்சிடுவீங்களோன்னு நினைச்சேன். நல்ல வேளை 14 பதிவுகள் தான் போட்டிருக்கீங்க. ஆனா அதையே என்னால ஃபாலோ பண்ண முடியலை. நான் 18 பதிவுகள் போட்டப்ப எத்தனை பேரால ஃபாலோ பண்ண முடியாமப் போச்சோ. இராகவன் ரொம்ப ஓவர் டோஸ் குடுத்திட்டீங்கன்னு சொன்னது இப்ப புரியுது.
ReplyDeleteஅட நீங்க வேற குமரன், இதனாலத்தான் நான் என்னோட போட்டோவக் கூட போடலை. இப்பவே நம்ப மாட்டேங்கிறீங்க போட்டோ எல்லாம் போட்டிருந்தால் அவ்வளவுதான்!!!
ReplyDeleteஆனால் உண்மையிலேயே இவ்வளவு தான், சந்தர்ப்பம் கிடைத்தால் நாம் நேரில் பார்த்தால் கூட நம்ப மாட்டீர்கள் தான் ஆனால் நான் என்ன செய்வது சொல்லுங்கள் வேண்டுமானால் என் ரெக்கார்ட்ஸ் எதாவது காண்பிக்க வேண்டியது தான். :-)
குமரன் 14 பதிவு இல்லை இன்னும் நிறைய போட்டிருப்பேன் ஒரு நாளைக்கு மூணுன்னு ஆனால் நேரம் கிடைக்கலை தப்பித்தீர்கள். :-)
குமரன் உண்மையில் நான் கூகுளின் அனலைடிக்ஸ் பற்றி எழுதிய பொழுது நிறைய இருந்தது. அப்புறம் ஒரு இரண்டுவாரத்தில் உதைக்க ஆரம்பித்துவிட்டது என்னவோ உண்மைதான். ஆனால் ஒரு அழகான டூல் உபயோகிப்பதற்கு.
ReplyDeleteஇன்னும் நிறைய விவரங்கள் கூட கிடைத்தது. எந்தெந்த நகரத்தில் இருந்து எத்தனைபேர் என நிறைய. ஆனால் எடுத்து போடவில்லை. வேண்டுமானால் ஒரு இன்பர்மேஷன் இதில் புனேவிலிருந்து வெறும் 62 கிளிக்குகள் மட்டுமே. :-) ஒரு வாரத்தில்.
அன்பு மோகன் ராஜ்! ஒவ்வொருவரும் நட்சத்திர வாரத்தில் அவரவர் வழியில் தனித்துவம் காட்டுவார்கள். நீங்களும் கம்யூட்டர், வரலாறு என்று நிறைய வித்தியாசம் காட்டினீர்கள். நிறைவான வாரத்திற்கு வாழ்த்துக்கள். உங்கள் வரலாறு பதிவுகளை நான் ரொம்ப ரசித்து படித்தேன். நேரம் இருக்கும் போது உங்கள் முந்தைய வரலாற்று பதிவுகளையும் புரட்டிப் பார்க்கிறேன்.
ReplyDeleteஇனி வரும் வாரங்களிலும் என் வரவு தொடரும். எத்தனை நாள் லீவு எடுக்கறீங்க :-))
அன்புடன்,
சிவா
தலைவரே சிவா, நான் லீவெல்லாம் எடுக்க மாட்டேன், அதாவது இதை காரணமா வைச்சு, ஆனால் அடுத்த மேட்டர் கிடைக்கிற வரைக்கும் தான் இந்த லீவெல்லாம் என்னைப் பொறுத்தவரை.
ReplyDeleteஇப்பவே கூட ஒரு மேட்டர் இருக்கு, மகாராஷ்டிரவில் பறவைக்காச்சல்னு கேள்விப்படுறேன். இனிமேல் கொஞ்ச நாளைக்கு வெஜிடேரியனா வேற இருக்கணும். நான் நினைக்கிறேன் இராகவன் தான் கண்ணு வைச்சிட்டார்னு. :-)
என்ன தலைவர்னு சொல்லிட்டீங்க
ReplyDelete:-)). ஹாஹாஹா..
பறவை காய்சல்னு சொல்லிட்டீங்க. இத பார்த்து வேறு யாராவது பதிவு போட்டுட போறாங்க. அப்படியே 'அன்பே சிவம்' என்று ஒரு பதிவும் போட்டுடுங்க :-)). இப்போ இதானே லேட்டஸ்டாமே :-)))..
நானெல்லாம் மேட்டல் இல்லாம தான் லீவுன்னு சொல்லிட்டு திரியறேன் :-)).
அன்புடன்,
சிவா
இல்லங்க நானெல்லாம் இந்திய கவர்மெண்டை மதிக்கிறவன் யாரும் பதற்றமடைய வேண்டாம்னு சொல்லியிருக்காங்க. அதுமட்டுமில்லா இந்த விஷயத்தை பரப்ப வேண்டாமுன்னும். அதான் விட்டுட்டேன்.
ReplyDeleteஅப்புறம் அன்பே சிவம் பத்தி, சில விஷயங்களை நாம மனசுக்குள்ளயே வைச்சுக்கிட்டா இன்னும் சந்தோஷமா இருக்கும் அப்படியொன்னு தான் இந்தப் படம். அதானால கப் சுப்.
மோகன்தாஸ்,
ReplyDeleteஒரு வாரமாக ஒரு இனிய வாசிப்பு அனுபவத்தை அளித்தமைக்கு வாழ்த்துக்கள்.
நன்றி.
மிகவும் நன்றாக இருந்தது.. அனைத்தையும் தவறாமல் படித்தேன்.. என் எண்ணம் எந்த அளவு சரி என்று தெரியவில்லை ஆனால் இன்னும் கவனத்துடன் அமர்ந்தால் இதை விட உன்னால் நன்றாக எழுத முடியும் என்று நினைக்கிறேன்.. நேரம் இருந்திருக்காது என்பதையும் அறிவேன்.. எப்படியோ நல்ல பதிவுகள்.. மேலும் நல்ல பதிவுகள் தொடர்ந்து போடவும்..
ReplyDeleteஅத்துடன் தரைக்கு இரண்டு அடி மேலே நடப்பதாக கேள்விப்பட்டேன் தரையிலேயே நடக்கவும் :) சும்மா விளையாட்டுக்கு இல்லை நிஜமாக தான்...
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..
மோகன்தாஸ், மிகவும் நட்சத்திர வாரம் பயனுள்ள வாரமாக அமைந்தது. கணினி பற்றிய சில விதயங்களை கற்றுக் கொண்டோம். பாடம் நடத்துவதும் பகிர்ந்துகொள்வதும் உங்கள் மரபணுக்களிலேயே இருக்கிறது. தொடருங்கள்,
ReplyDeleteஉங்கள் மற்றபதிவுகளும் அழுத்தமான செய்திகளுடன் இருந்ததால் குமரனுக்கு சந்தேகம். இளம் கரிகாலனே தாடியுடன் வந்தால்தான் நீதி வழங்கமுடிந்தது இல்லையா ?
நைனா..இன்னா நைனா இது...ஒன்னு.. பல நாள் அப்ஸ்கான்டு ஆயிடுறீங்க..இல்ல.. ஒரே நாள்ள இத்தனை பதிவு போடுறீங்க..சரி எனக்கு ஒரு analytics இன்வைட் அனுப்ப முடியுமா ?
ReplyDeleteமோகன்தாஸ்,
ReplyDeleteஉங்க நட்சத்திரம் வாரம் மிகவும் அருமை.
நீங்க சிறந்து விளங்கூம் அனைத்து துறைகளையும் அருமையாக சொன்னீங்க.
சரித்திர கதைகளுக்கு என்னுடைய நன்றிகள்.
அன்புடன்
பரஞ்சோதி
" நேரில் பார்த்தால் கூட நம்ப மாட்டீர்கள"// -
ReplyDelete- ஏங்க, பாக்கிறதுக்கு அப்படியா இருப்பீங்க? இப்பதான் curisoity அதிகமாகுது..
ராம்பிரசாது(அதுதானே உங்க பேரு) ரொம்ப நன்றி. உங்கள் ஆதரவிற்கு.
ReplyDeleteமோனா நன்றி. :-)
ReplyDeleteஅட நீங்க வேற, மரபணுவிலும் இல்லை வேறெங்கேயும் இல்லை. சும்மா இது போல் போடுவது வகுப்பெடுக்கும் ஆவலில் நிச்சயமாகக் கிடையாது.
ReplyDeleteபீலமேடு புல்ஸ் பையா, என்ன செய்றது ரொம்பவும் பிசியா இருக்கேன் நான். :-) வேறென்ன???
ReplyDeleteநான் சிறந்துவிளங்குமா(???) புரியலை பரஞ்சோதி. கண்ணியைப் பற்றி சொல்றீங்கன்னா அதிலையும் சிறந்தெல்லாம் இன்னும் விளங்க ஆரம்பிக்கவில்லை.
ReplyDeleteதருமி ஆனாலும் ரொம்ப நக்கல் பண்ணுறீங்க. நீங்க, ஆனால் என் வயதை விட அதிகம் வயதுள்ளவனாகத்தான் தெரிவேன். அது என்னுடைய மிகப்பெரிய அட்வான்டேஜ்.
ReplyDelete