இந்தத் தலைப்பில் ஒன்றை சுரேஷ் கண்ணன் எழுதியிருந்த பொழுதே அய்ட்டம் பிடித்திருந்ததால் எழுதியிருந்தேன். ஆனால் எங்கும் லிங்க் கொடுக்கவில்லை. இப்பொழுது கார்த்திக் பிரபு இதே போன்ற ஒன்றை எழுதி என்னைத் தொடருமாறு அழைத்திருந்தார்.
நான் ஏற்கனவே எழுதியதை மறுபதிவிடுகிறேன். எனக்குத் தொடர்ச்சியாய் லிங்க் கொடுத்துக்கொண்டே போவதில் விருப்பம் கிடையாது என்றாலும், பொன்ஸை Tag செய்கிறேன். விருப்பப்பட்டால் போடலாம்.
-----------------------------------
பார்த்தலில் கேட்டலில் படித்ததில் என்று சுரேஷ் கண்ணன் எழுதியிருந்து பின்னர் விருப்பப்படுபவர்கள் தொடருமாறு சொல்லியிருந்தார். சோம்பேறித்தனத்தில் ஒன்றாம் நம்பரான எனக்கு இதைப்பற்றி எழுதும் ஆசை இருந்ததாலும் எதையாவது எழுதவேண்டும் போல் இருப்பதாலும் தொடர்கிறேன்.
எனக்கான பிடித்த விஷயங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன, எப்படி பொன்னியின் செல்வனில் தொடங்கி சாண்டில்யன் வழியாக, சுஜாதா பாலகுமாரன் என படித்து இப்பொழுது, ரமேஷ் பிரேம், ஜேபி சாணக்யா, சாரு நிவேதிதா, சுரா, ஜெயமோகன், எஸ்ரா என்று மாறிக்கொண்டேயிருக்கிறது. இது மொத்தமும் தமிழில் நான் உணர்ந்தவை ஆங்கிலம் முடிந்தால் இன்னுமொறு பதிவில்.
படித்ததில் பிடித்தது
ஒரு புளியமரத்தின் கதை,
உபபாண்டவம்
ஜெயமோகன் குறுநாவல்கள் (குறிப்பாக லங்காதகனம்)
ஜூனோ இருபாகங்கள் (சுஜாதா என்று சொல்லவும் வேண்டுமா)
பயணிகள் கவனிக்கவும் (பாலகுமாரன், ஏறக்குறைய அத்தனையையும் படித்திருப்பேன் உடையார் 5 வரை. இது மிகவும் பிடித்திருந்தது. காரணமெல்லாம் கேட்டால் சொல்லத்தெரியாது.)
ஸீரோடிகிரி (சாரு நிவேதிதா - உவ்வே என்று வந்தாலும் பிடித்திருந்தது)
சொல் என்ற ஒர் சொல்(பின்நவீனத்துவத்தை உண்டு இல்லைன்னு பார்த்திர்றதுன்னு ஒத்தக் காலில் நின்று படித்த புத்தகம் அப்படியே வாங்கிய அவர்களின் நாவல்களின் தொகுப்பு.)
மரப்பசு தி.ஜானகிராமன் (மீண்டும் ஒரு முறை வாங்க வேண்டும். யாரோ எடுத்து சென்று விட்டார்கள்.)
சரி சரி பொன்னியின் செல்வன்(இதனுடன் நான்கைந்து ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன்)
மற்றது, கடல்புறா மொத்தமாக இதுவும் நான் சின்ன வயதில் படித்திருந்ததால் மனதில் ஆழமாக பதிந்துவிட்ட ஒன்று.
கேட்டதில் (எனக்கும் பாடல்களுக்குமான விருப்பம் ரொம்பவே வித்தியாசமானது. இதில் வேறெதையும் எதிர்பார்க்காதீர்கள்.)
நெஞ்சினிலே நெஞ்சினிலே (உயிரே..)
தங்கத்தாமரை மகளே(மின்சாரக் கனவு)
இது ஒரு பொன்மாலைப் பொழுது..
வெண்மதியே வெண்மதியே நில்லு
முன்பனியா முதல் மழையா
தொம் தொம் (சிந்து பைரவி)
ரோஜா ரோஜா (காதலர் தினம்)
எங்கே எனது கவிதை (கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்.)
என் வானிலே (ஜானி ஜானி ஜானி)
லஜ்ஜாவதியே (4 த பிரண்ட்ஸ்)
பார்த்ததில் பிடித்தது (நான் கமல் ரசிகன் அல்ல இது ஒரு முக்கியமான குறிப்பு )
நாயகன்
குருதிப்புனல்
தளபதி
மைக்கேல் மதன காமராஜன்
திருவிளையாடல் (சிவாஜி)
அதே கண்கள்(ரவிகுமார் நடித்தது)
எதிர் நீச்சல்(நாகேஷ் படிக்கட்டு கீழிருந்து படிப்பதாக வருமே அது இந்தப் படம் தானே.)
வீடு
அவள் அப்படித்தான்(இது முழுக்க முழுக்க ரஜினிக்காக பின்னியிருப்பார் அப்படியே ஸ்ரீப்ரியாவும்)
அப்புறம் கட்டக் கடேசியா புதுப்பேட்டை.
சுரேஷ் சொன்ன பல படங்களை நானும் சொல்லியிருக்கிறேன், என்பது கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் அவை அத்தனையும் நல்ல படங்கள். அதேபோல் தான் இதுவும் விரும்புபவர்கள் தொடரலாம்.
பார்த்தலில்... கேட்டலில்... படித்ததில்...
Posted on Thursday, February 22, 2007
பார்த்தலில்... கேட்டலில்... படித்ததில்...
பூனைக்குட்டி
Thursday, February 22, 2007

பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
-
I’d been grinding Visu down for days—teasing, poking—till he broke, voice tight with exasperation. “Fine, but hook me up with a girl I pick ...
-
It was Saturday morning, early 2010, head still thumping from last night’s tequila flood, but I couldn’t stay away—back at Visu’s room like ...
//அதே கண்கள்(ரவிகுமார் நடித்தது)//
ReplyDeleteரவிகுமார்?
ஆஹா தப்பாயிடுச்சு, அது ரவிச்சந்திரன்னு நினைக்கிறேன்.
ReplyDeleteஒரு விசயம் தெளிவா புரியுதுவே, ஆபிசு வேலை தவிர மத்ததெல்லாம் தெளிவா செய்யுதீருன்னு. நல்லா இருங்கடே!!
ReplyDeleteஉவ்வேன்னு வந்தாதான் உமக்கு பிடிக்கவே செய்யுமோ? :-)
சாத்தான்குளத்தான்
hi sir thanks a lot ..hope pons ll continue this!!
ReplyDeleteகொஞ்ச நாளைக்குப் பதிவு போடாமல் ஓடலாம்னு இருந்தேன்.. இப்படி எல்லாம் மாட்டிவிட்டா என்னத்தச் செய்ய.. போடலாம்.. கொஞ்சம் டைம்...
ReplyDeleteஉங்க பிடிக்கும் பட்டியல் கொஞ்சம் கொஞ்சம் ஒத்து வருது.. ஆனால் இப்படி ஒரு பட்டியலே போடணும்னா என்னுடையது ரொம்ப ரொம்ப நீளமா இருக்குமே!! :((((
அண்ணாச்சி என்னயிது சின்னப்புள்ளத்தனமா.
ReplyDeleteமற்றவங்களுக்குத்தான் பதிவு எது, மீள்பதிவு எதுன்னு புரியாதுன்னா உங்களுக்குமா :(. இதெல்லாம் ரொம்ப நாளைக்கு முன்னால் எழுதியது. Just மீள்பதிவு.
//உவ்வேன்னு வந்தாதான் உமக்கு பிடிக்கவே செய்யுமோ? :-)//
ஹிஹி அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. ஆனால் அந்த உரைநடை நன்றாகத்தான் இருக்கும். நான் படித்தச் சமயத்தில் இப்படியெல்லாம் கூட எழுதலாமா என்று நினைத்தப் புத்தகம் அது.
கார்த்திக் பிரபு, பார்க்கலாம்.
ReplyDeletepons kandippa thodarunga
ReplyDeletepons adhai continue panraarangala?
ReplyDelete