என் எல்லைகளைப் பற்றிய கேள்விஒரு நாளைப் போலில்லாவிட்டாலும்எல்லா நாட்களிலும் இருக்கிறதுநீள அகலமாய் குட்டை நெட்டையாய்அவரவர்களுக்கென்று எனக்கான எல்லை கனசதுரமாய் சுருங்கத்தான் போகிறதென்றாலும் நீண்டு கொண்டேயிருக்கும் வெளியின் சாத்தியக்கூறுகளுடன் எனக்கான எல்லை ஒளி ஆண்டுகளாய் நீள்கிறது கனசதுரத்திற்கு வெளியில்என் நிழலின் நடமாட்டம்தடுமாற்றங்களுடன் முகத்தில் அறைந்து கணங்களைக் கேள்விக்குள்ளாக்குகிறது தவிர்க்கமுடியாததாயும்ஒப்புக்கொள்ள முடியாததாயும்நகரும் நாளின் ஒவ்வொரு பக்கத்திலும்உடைத்தெரியப்பட்ட கனசதுரத்தின்தெறிக்கும் ஒலியுடனும் சிரிக்கும் ஒளியுடனும்வெளிகளைக் கடந்து நீளூம் என் பயணத்தின் குறிப்பு...
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஏன் சொல்ல வேண்டும் என்று என்னுள் நிறைய கேள்விகள் தோன்றியிருக்கின்றன. நாளை மற்றொரு நாளே என்பது போன்ற எண்ணங்கள் உண்டென்றாலும், கொண்டாட்டங்களுக்கான நாட்கள் என்று எனக்கும் சில இருந்திருக்கின்றன. இன்றும் இருக்கின்றன. புதிய ஆண்டு உங்களுக்கு சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருவதாக இருக்கட்டும் என்கிற போக்கில் வாழ்த்துச் சொல்கிறோம். ஆனால் இன்றில்லாத நாளையோ அல்லது அடுத்த 365 நாட்களில் எப்பொழுதோ ஒரு முறை/பல முறை...
இன்று டெல்லியில் எனக்கிருந்த ப்ளான்களை திருப்பிப்போட்டது, ஆசிப்பின் சூடான இடுகையில் இருந்த இந்தப் படத்தின் விமர்சனம். சட்டென்று புரட்டிப் பார்த்துவிட்டு நேரம் இருந்ததால் சட்டென்று கிளம்பி வசந்த் விகார் பிவிஆர் சினிமாஸில் இந்தப் படத்தின் டிக்கெட்கள் கேட்டேன், ஏற்கனவே புக் செய்திருந்த ஒரு குடும்பத்தில் ஒரு டிக்கெட் மீந்துவிட எனக்கு தந்துவிட்டார்கள் காசுக்குத்தான். ஆசிப்பிற்கு தமிழ் படங்கள் பிடிக்காதென்பது எனக்கு புது விஷயமல்ல, இதே அவர் இப்படி...
ஒரு வழியாக நான் காஷ்மீர் பயணத்தை முடித்துவிட்டு திரும்பவும் ஜம்முவிற்கே வந்தாகிவிட்டது. மனம் நிறைந்த அனுபவத்தைத் தந்தது காஷ்மீர் பயணம். காஷ்மீரின் லோக்கல் கார்டன்கள், கோவில்கள் ஒருநாள் சுற்றிவிட்டு, இன்னொரு நாள் குல்பர்க் சென்றுவிட்டு கடைசியாக காஷ்மீர் நினைவாக பர்சேஸ் முடித்துவிட்டு திரும்பவும் ஜம்முவிற்கு இன்று காலை வந்து சேர்ந்தேன். முடிவு செய்திருந்ததை விடவும் அதிக நாட்கள் காஷ்மீரில் தங்கியிருந்தேன் என்றே சொல்லலாம். ஆனால் நிச்சயமாக வாழ்நாளில்...
ஜம்மு வந்தாகிவிட்டது. பழைய தில்லியிலிருந்து நேற்றிரவு 9.30க்கு கிளம்பி இன்று காலை 11.30க்கு ஜம்மு மெயில் கொண்டு வந்து தள்ளிவிட்டு சென்றுவிட்டது. உடன் வந்த மூன்று வாலிபர்கள் என்ன நினைத்து வந்தார்களோ, ஒரேயொரு ஸ்வெட்டரை மட்டும் போட்டுக்கொண்டு உட்கார்ந்துவிட்டிருந்தனர். ஆனால் இரவின் பின்நேரங்களில் கம்பளி இல்லாமல் ரயிலின் உள் சமாளிக்க முடியாது என்பது மிகவும் லேட்டாக அவர்களுக்குப் புரிந்திருக்க வேண்டும். காலையில் இதைப்பற்றித்தான் பேசிக்கொண்டு வந்தார்கள். கல்லூரி...
ஒரு வழியாக டெல்லி வரை வந்தாகி விட்டது. அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணம் தொடங்கணும். இது வரை அத்தனைக் கடியாகலை. பெஙளூரில் இருந்து நேராய் ஆக்ராவிற்கு வந்துவிட்டேன். இங்கேயே என் திட்டத்தின் முதல் மாற்றம் நடந்துவிட்டது. ஆனால் நல்ல மாற்றம், பைசா அதிகம் செலவாகாமல் தாஜ்மகால் பார்த்துவிட்டு தில்லிக்கு வந்தாகிவிட்டது.கர்நாடகா எக்ஸ்பிரஸ் பயணத்தில் 'குறட்டைச் சுதந்திரம்' என்றொரு கதையொன்று எழுதும் ஐடியா தோன்றியது. அதனால் அந்தத் தலைப்பை...
என் இதுநாள் வரையிலான வாழ்க்கையில் பெரிய இழப்பை மரணம் அளித்ததில்லை, ஆனால் மரணத்தைப் பற்றிய பயம் எப்பொழுதுமே இருந்து வந்திருக்கிறது. ஏகப்பட்ட கேள்விகள் விடையில்லாமல் தொக்கி நின்றிருக்கின்றன, முதல் முறையாக ஒரு மரணம் உன்னை எப்படி பாதிக்கும் தெரியுமா என்ற கேள்வி அளித்த கொடூரம் தொடர்ச்சியாக இருந்து வந்திருக்கிறது. என் அப்பா "நாளைக்கு நான் இறந்து போனால் என்ன செய்வீர்கள்" என்ற கேள்வியை என்னிடம் கேட்ட பொழுது...
In நாட்குறிப்பு
நெம்புகோல் எண்ணங்கள் அல்லது புரட்டிப் போடும் சிந்தனைகள்
Posted on Wednesday, December 19, 2007
சிறு வயது ஆசைகள் நிறைவேறுவது என்பது எப்பொழுது மகிழ்ச்சியளிக்கக்கூடிய விஷயம் தான். சில ஆசைகள் ரொம்பவும் பெரிய கனவாய் இருந்து பின்னால் நிறைவேறும் பொழுது மனம் அப்படியே பறக்கத் தொடங்குகிறது. நான் சாஃப்ட்வேர் இன்டஸ்ட்ரியில் சேர்ந்த பொழுது, லாப்டாப் வாங்கிய பொழுது என இப்படி மனம் உற்சாகத்தில் குதித்திருக்கிறது. சில ஆசைகள் திணிக்கப்பட்டதாக இப்பொழுது புரிந்தாலும் அந்தக் கனவுகளுடன் தான் நான் வாழ்ந்திருக்கிறேன் எனும் பொழுது அவற்றை...
தமிழ்மணத்தில் அவ்வப்பொழுது ஒரு ட்ரென்ட் பிடித்து கொண்டு ஆட்டும் தமிழ் சினிமா போல், இப்ப விருது கொடுக்கும் ட்ரென்ட் போலிருக்கு. வர்றவன் போறவன் நின்னவன் நடந்தவன் எல்லாம் நானும் விருது கொடுக்குறேன் பிடிச்சிக்கோ என்று கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.கொம்மாஞ்சக்க, எவனுக்கு எவன்டா விருது கொடுக்குறது. தகுதியை நிரூபிக்கணுமாம். எவனோட தகுதியை எவன்கிட்ட நிரூபிக்கணும். தன்னைத்தானே பீடத்தில் அமர்த்திக்கிட்டு கூட இன்னும் கொஞ்சம் பேரையும் நீயும் உக்காந்துக்க நீயும் உக்காந்துக்க...
பில்லா படம் பார்க்கச் சென்றிருந்தேன், அஜீத்தின் படம் என்பதனால் மட்டுமல்ல, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வருவது என்பது கூட ஒரு காரணம். எனக்கு தமிழ் பில்லா நினைவில் இல்லை, ஆனால் ஒன்றிற்கு இரண்டு முறை பார்த்த ஷாருக்கின் டான் படம் நன்றாக நினைவில் இருந்தது. படத்தின் ஒருவரி விமர்சனம் வேண்டுமென்றால் நீங்கள் ஷாரூக்கின் "டான்" ரீமேக் படம் பார்த்துவிட்டீர்கள் என்றால் இந்த அஜீத்தின் பில்லா அதன் பக்கத்தில் கூட இல்லை, ஆனால்...
மலர்கள் என்று PIT யில் போட்டி அறிவித்ததுமே காலங்கார்த்தால போய் லால்பாஹ்வில் புகைப்படம் எடுப்போம் என்று தீர்மானித்திருந்தேன். வேலை காரணமாக இரவு நேரங்கழித்து வீட்டிற்கு வருவதாலும் வந்த பிறகும் 'குழும' மடல்களைப் படித்துக் கொண்டிருப்பதால் 1.00, 1.30 மணிக்கு தூங்கப்போவதால் காலையில் 6.00 மணிக்கு எழுவதில் தொடர்ச்சியாக பிரச்சனையிருந்தது. அலுவலகத்தில் இன்னிக்கு நீ லால்பாஹ் போனியா என்று கேட்கும் அளவிற்கு 'நானும் ரௌடி' ரேஞ்சில் ஏக பில்டப்...
சில முன்னுக்குப் பின் முரணான எண்ணங்கள்
Posted on Wednesday, December 12, 2007
காஷ்மீர் போவதென்று முடிவு செய்து டிக்கெட்கள் அனைத்தும் புக் செய்தபிறகு மனம் தடுமாறிக்கொண்டிருக்கிறது. டெல்லியில் இருந்து பேசாமல் குல்லு மணாலி போய்விட்டு நல்லபிள்ளையாய் திரும்ப வந்துவிடலாமா என்று. சிறுவயது ஆசை, காஷ்மீர் போகவேண்டும் என்பது; கையில் காசிருக்கிறது, 45,000 செலவு செய்து வாங்கிய காமெரா இருக்கிறது, கேட்பதற்கு ஆளில்லை வேறென்ன வேண்டும். மனம் ஒரு விசித்திர விலங்கு என்று அடிக்கடி தோன்றும் இந்த விஷயத்தில் உண்மைதானா என்று...
முன்னமே லே-ஆஃப் பற்றி எழுதியிருந்தேன் அப்படியே என் வருடக்கடைசி கிறிஸ்மஸ் பார்ட்டி பற்றியும், பார்ட்டியின் முதல் நாள் இரவு கேள்விப்பட்ட விஷயம் தான் இந்த வருடம் போனஸ் கிடையாதென்பது. மற்ற கம்பெனிகள் போலில்லாமல் 10% போனஸ் என்று அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரிலேயே எழுதிக் கொடுத்தனர். சொல்லப்போனால் கிடைத்த மற்ற ஆஃபர்களை விடுத்து இந்தக் கம்பெனியில் சேர்ந்ததற்கு முக்கியமான காரணமே CTCக்கு வெளியில் கொடுப்பதாய்ச் சொன்ன போனஸ் தான். Core...
"என் வயசு என்னயிருக்கும் சொல்லுங்க பார்ப்போம்!" எனக்கு சாமியார்களின் மீது நம்பிக்கையே கிடையாது, பொய் சொல்கிறவர்கள், மக்களை ஏமாற்றுபவர்கள் என்பதைத் தவிர அவர்களின் மேல் அவ்வளவு பெரிய அபிப்ராயம் ஒன்றும் கிடையாது. ஒருநாள் மாலை நேர வழக்கமான நடைப்பயிற்சியின் பொழுது உங்கள் கையைக் காண்பியுங்கள் உங்களைப் பற்றிச் சொல்கிறேன் என்று கேட்ட சாமியாரின் மூக்கை உடைப்பதற்காகவாவது கையை நீட்டுவது என்று தீர்மானித்தேன். அந்த ஆளை அப்பொழுது முதன்...
Subscribe to:
Posts
(
Atom
)
Popular Posts
-
"Its not fair" ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ "நான் நினைச்சேன்..." என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொஞ்சம்...
-
ஏந்து பேர் அல்குல் நின்றும் கற்றை மேகலைகள் நீங்கி படிமங்கள் ஆபத்தானவை, மனதில் ஒன்றிலிருந்து ஒன்றாய் தோன்றி மறைந்து உருவாகி பதிந்துவி...
-
Chennai buzzing with that sticky night heat, the kind that made you want to drown the world in booze and fuck it all off. I’d been itching t...