In வகைப்படுத்தப்படாதவை

லக்ஷ்மிக்கு சில விளக்கங்கள்

முதலில் ஒரு விஷயம் சிவாஜி படத்தின் ஹீரோயினியை - அதாவது உங்கள் டெர்மில் - அண்ணியை நான் முட்டாளாக பார்க்கவில்லை. திருப்பதி பத்மாவதி தாயார் கழுத்தில் இருந்து தாலி கழன்று விழுந்ததாக வந்த செய்திக்காக(புரளியாகவும் இருக்கலாம்) இரவோடிரவாக ஒரு புதுத் தாலியை தயார் செய்து கட்டிக்கொண்டவர்களை நீங்கள் முட்டாள்களாகப் பார்க்கிறீர்களா? நான் அதைப்போன்ற விஷயத்தை சாதாரணமான ஒன்றாகத்தான் பார்க்கிறேன்; அதைப்போலவே இதையும் ஒரு சாதாரணமான ஒரு விஷயமாகத்தான் பார்க்கிறேன் 'அண்ணி' ரஜினியின் உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்ததும் சிபிஐயிடம் லாப்டாப்பை கொடுப்பத்தையும். படத்தில் வரும் ஹீரோயினியைப் போன்ற ஜோசிய ஜாதகத்தில் நம்பிக்கை உள்ளவர்களை நீங்கள் பார்த்ததில்லை என்று தெரிகிறது. நான் நிறைய பார்த்திருக்கிறேன் எங்கள் வீட்டிலும் எங்கள் சுற்று வட்டாரத்திலும்(கிணற்றுத் தவளைன்னு சொன்னாலும் கவலையில்லை எனக்கு - நான் பார்த்திருக்கிறேன், எனக்குப் புரிகிறது உண்மையில் நடக்கும் ஒரு இயல்பைச் சொல்லியிருக்கிறார்கள் என்று) பார்த்திருக்கிறேன். அவர்களை நான் முட்டாளாகப் பார்க்கவில்லை நிச்சயமாய்.

விமர்சனம் எழுதலாம் தவறில்லை என்று சொல்லிவிட்டு சுஜாதாவை இழுத்திருந்தீர்கள் நல்லாதாய்ப் போயிற்று, தலைவரே ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார் எப்பொழுது என்றால் "டெல்லியில் ஒரு விழா நடந்த பொழுது 'கணேஷ் - வசந்த்' கதைகளை கணையாழிக்காக எழுதுவீர்களா என்று கேள்வி எழுந்த பொழுது. எழுதுவது ஆயிரக்கணக்கான இன்டலக்சுவல்களுக்காகவா இல்லை கோடிக்கணக்கான சாதாரண வாசகர்களுக்காகவா என்று" அதனால் நீங்கள் விமர்சனம் எழுதியதைக் குறை சொல்லவில்லை, ஆனால் நீங்கள் கேட்டிருந்தது மாதிரியான படங்கள் ஏன் எடுப்பதில்லை என்பதற்கான காரணங்களாக(யாருக்காக படம் எடுக்கிறார்கள் - etc) நான் சொல்லியதை உங்களை விமர்சனமே எழுதக்கூடாதென்று சொல்லியதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

எழுதுவதற்காக எழுதுவது ஒரு விஷயம் ப்ராக்டிகலாக யோசிப்பது ஒரு விஷயம்.(ஏனென்றால் நான் என் கல்யாணம் பற்றி பேசியது ப்ராக்டிகலான ஒன்று - இன்டலக்சுவல்களான பெண்களை அக்காவாகவோ தங்கையாகவோ நிறைய பேர் ஏற்றுக்கொள்வார்கள் மனைவியாக யார் ஏற்றுக்கொள்வார்கள் - யாரோ சொன்னது) நீங்கள் கூலாகப் பதிவு போட்டதும் எல்லோரும் சிரிச்சிட்டு போய்ட்டாங்கன்னும் நான் கலகக்காரனாய் என் பதிவில் அதைப்பற்றி கேள்வி கேட்டிருந்தேன் என்று சொல்லியிருந்தீர்கள். நீங்கள் ஒட்டுமொத்தமாய் காமெடிக்காக அந்தப் பதிவெழுதியிருந்தீர்கள் என்றால் நான் ஜஸ்ட் எஸ்கேப் - இல்லை சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் அதை நமது நக்கல் தொணித்த பதிவில் இருந்து தொடங்கலாம் என்றும் நினைத்து எழுதியிருந்தீர்கள் என்றால் தொடரலாம்.

//உங்களுக்கு முட்டாள் பெண் மனைவியாக வர வேண்டுமென்று ஆசையிருப்பின் நீங்களும் அப்படியே இருப்பதாகத்தான் அர்த்தம்.//

நீங்கள் என்னை முட்டாள் என்று நினைப்பதைப் பற்றி கவலைப்படவில்லை என்றாலும் நான் இது போன்ற ஒரு விஷயத்தை என் பதிவில் எங்கே சொல்ல்யிருந்தேன் என்று காட்டலாம். இன்டலக்சுவல் பெண்களை விரும்புவதில்லை என்ற வரிகளுக்கு நான் முட்டாள் பெண்களைத் திருமணம் செய்து கொள்வேன் என்று அர்த்தம் ஆகாது.

//டிகிரி முடிச்சதும் 2 வருஷம் சும்மா இருந்து, தையல், சமையல்னு கத்துகிட்டு கல்யாணத்துக்காகவே காத்துக்கொண்டிருக்கும் டிபிகல் தமிழ்ப்பெண்களைத் தான் பிடிக்கும்.//

அப்படியிருக்கும் பெண்களை நான் நிச்சயம் முட்டாளாக நினைக்க மாட்டேன், அப்படி நினைத்திருந்தால் அதை உங்களிடம்(;-)) சொல்லியிருக்க மாட்டேன் தானே. பெண்களை முட்டாள்த்தனமான, சாதாரணமான, இன்டலக்சுவல்தனமான என்று கேட்டகிரி பிரிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் நான் சொல்ல வந்தது, சார்த்தரையோ, பதிவுலகையோ, நீட்ஷேவையோ தெரிந்திராத பெண்களைத்தானோ ஒழிய முட்டாள் பெண்களைக் கிடையாது. நீங்கள் சார்த்தரையும் நீட்ஷேவையும் தெரியாத பெண்களை முட்டாள்கள் என்று எடுத்துக்கொண்டால் நான் பொறுப்பில்லை. திரும்பவும் ஒருமுறை சொல்கிறேன் நீங்கள் வேண்டுமானால் சிவாஜியில் காண்பிக்கப்பட்ட 'அண்ணி' கதாப்பாத்திரம் முட்டாள்த்தனமாகயிருப்பதாகச் சொல்லலாம், நான் அதைச் சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் மறுக்கிறேன்; ஜோசிய ஜாகத்தின் மீது இருக்கும் நம்பிக்கைகளையும் அதன் காரணமாக தன் கணவனுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாதென்றும் நினைப்பதை சாதாரணமான விஷயமாக பார்க்கிறேன்.(இங்கே எங்கேயும் நான் நம்புகிறேனா இல்லையா என்பதல்ல மேட்டர், அப்படி நம்புகிறவர்களை நான் எப்படிப் பார்க்கிறேன் என்பதுதான்.)

இதன் காரணமாக நீங்கள் முட்டாள் என்று என்னைச் சொல்லி அதற்காகக் கொடுத்திருந்த அத்தனை விளக்கங்களையும், உதாரணங்களையும் ஒன்றும் சொல்லாமல் விட்டு விடுகிறேன்.(ஆனால் நீங்கள் சொல்லியிருந்த கீரிக் லவ் பற்றி முன்பே தமிழ்மண விவாதக்களத்தில் எழுதியிருக்கிறேன். அங்கே எனது அதுபற்றிய எண்ணத்தைப் பார்க்கலாம்)

அதேபோல் நாத்தீகவாதியாக இருக்கும் கணவன் தன் மனைவியின் விருப்பத்திற்காக அவளை திருநள்ளாரு அனுப்பியதை வைத்து ரஜினிகாந்தை மிகச்சிறந்த பெண்ணியவாதி என்று ஏன் சொல்லக்கூடாது. அவர் ஆணாதிக்கவாதியாகயிருந்தால் தன் பெண்டாட்டியிடம் இதென்ன "முட்டாள்த்தனமா" இருக்கு என்று சொல்லி அடக்கியிருக்கலாம். ஆனால் அதையா இந்த சமூகம் விரும்புகிறது ;-) இப்படிச் சொல்வது எப்படி ஜல்லியாகயிருக்குமோ அப்படித்தான் இருந்தது நீங்கள் அந்தப் பதிவில் 'அண்ணனை' MCP ஆகச் சொன்ன பொழுது.

//சமூக சீர்திருத்தத்துக்கு உங்களுக்கான வழி அது. என் வரையில் இரவு 10 மணிக்கு தியேட்டர் நிர்வாகியிடம் போய் கத்தினால் என்ன பலனிருக்கும் என்று தெரியும். கஸ்டமர் சர்வீஸ் என்கிற பதத்திற்கான சரியான பொருளே தெரியாத நம் சமூகத்தில் இதை கையாளும் முறை வேறு - காசு அதிகம் கொடுத்தாலும் இப்படி ஒரு போதும் நடக்காது என்கிற உத்ரவாதமுள்ள தியேட்டர்களுக்கு மட்டுமே(உதா: சத்யம்) போவது என்று முடிவெடுப்பது அதில் ஒன்று.//

இதுவும் நீங்கள் சொன்னது தான்.

//நள்ளிரவில் ஒரு பெண் தனியா நடமாடற அன்னிக்குத்தான் உண்மையான சுதந்திரம்ன்னு அது கூட அந்த லட்சிய சமுதாயத்தை பத்தித்தாங்க. இப்போதைக்கு தவிர்க்கறதுதான் தற்காலிகத்தீர்வுன்றதை வேணும்னா நான் ஒத்துக்கறேன். ஆனா அதுவே நிரந்தரமாயிடக்கூடாது. சமூகப்பிரச்சனைகளைப்பத்தி பேசும்போது கொஞ்சமாவது தொலைநோக்கு வேணும். புரியுதா?//

இதையும் சொன்னது நீங்க தான் - ஞாபகமிருக்கா பலருக்கு இந்த விஷயம் புரியாமயிருக்கலாம் உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன். வேணும்னா கீழிருக்கும் பத்தி உதவும் உங்கள் நினைவுக்கு

//நடமாட்டத்தக் குறைச்சுக்கணும்னா குறைச்சுக்கத்தான் வேணும்(ஆணாயிருந்தாலும் சரி, அடிச்சுப்போட்டுட்டு பர்ஸ் அடிச்சிட்டுப் போய்டுவான்னாலும் சரி) அதுயில்லாம, என்னை அடிச்சிப்போட்டுட்டு பர்ஸ் எடுத்துட்டுத்தானே போவான் பரவாயில்லைன்னு அங்கப் போய் நிக்கிறது என்னைப் பொறுத்தவரையில் தப்புதான்.

ஆட் ஆயிருக்கோ இந்த பதில்.// -----

------------------------------------------------------------------------------

கடைசியா ஒன்னு என்னைப் பற்றிய தனிநபர்த் தாக்குதல்களுக்கு(;)) நான் பதில் சொல்லப்போவதில்லை. அதேபோல் என்னைக் கிள்ளீட்டாங்கன்னு அழப்போறதும் இல்லை. என்னைப் பற்றி யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது எனது ஆழ்ந்த எண்ணம். இந்தப் பதிவெங்கேயும் கோபமான மனநிலையில் எழுதக்கூடாதென்று நினைத்து அப்படி ஒரு வார்த்தைக் கூட வந்துவிடக்கூடாதென்று எழுதியிருக்கிறேன். அப்படியும் வந்திருக்குமென்று நினைத்தால் மாப்பு.

Related Articles

7 comments:

  1. //இந்தப் பதிவெங்கேயும் கோபமான மனநிலையில் எழுதக்கூடாதென்று நினைத்து அப்படி ஒரு வார்த்தைக் கூட வந்துவிடக்கூடாதென்று எழுதியிருக்கிறேன். அப்படியும் வந்திருக்குமென்று நினைத்தால் மாப்பு. //

    சந்தோஷப்படுத்தும் வார்த்தைகள்.....
    (தமிழ் மணம் மூலமாய் வந்திருக்கேன்)

    ReplyDelete
  2. நன்றிகள் நந்தா.

    சண்டை போடுவதை பெரும்பாலும் நான் விரும்புவதில்லை தான். ;-)

    ReplyDelete
  3. ஆமாம். மோகன் தாஸ் எப்பவுமே அப்படித்தான். சரிக்கு சரி வரக்கூடியவர்களோடுதான் சண்டை போடுவான்.

    'கேவலம் பெண்களோடு சண்டை போட முடியுமா அண்ணாச்சி?'ன்னு நீ கேட்டது இதுக்குத்தானா? :-))))))

    சாத்தான்குளத்தான்

    ReplyDelete
  4. //'கேவலம் பெண்களோடு சண்டை போட முடியுமா அண்ணாச்சி?'ன்னு நீ கேட்டது இதுக்குத்தானா? :-))))))//

    பத்தவெச்சுட்டியே பரட்டை........

    ReplyDelete
  5. Opportunistic is the thing when the person starts worrying about Shreya character and not ready to discuss about Prathiba Patil! :-)

    ReplyDelete
  6. Attendance..
    Apparama padikkaren

    -Priya

    ReplyDelete

Popular Posts