ஆங்கிலப் படங்களை பெரும்பாலும் விமர்சனம் தெரிந்துகொண்டு பார்ப்பதில்லை, ஏனென்றால் அது நான் ஏன் ஆங்கிலப் படங்களைப் பார்க்கத் தொடங்கினேனோ அந்த விஷயத்தில் இருந்து என்னை நகர்த்திவிடும். ஆனால் படம் பார்த்தபின் அதைப் பற்றிய விமர்சனங்கள், நல்லது கெட்டதுகள், என்று ஒரு பயங்கரமான தேடுதலே அந்தப்படத்தைப் பற்றி செய்திருப்பேன். இதற்கும் நான் ஆங்கிலப்படங்களை ஏன் பார்க்க ஆரம்பித்தேன் என்பது தான் காரணம். ஏனென்றால் நான் பள்ளிப்பருவம் முழுவதும் தமிழ்மீடியத்தில் படித்தவன், கல்லூரிகளில் ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுதினேன் என்றாலும் பாடம் முழுவதும் ஆங்கிலத்தில் சொல்லப்படாது. அதற்காக For, While Loop எல்லாம் தமிழில் கன்வெர்ட் செய்யப்பட்டு கொலைசெய்யப்படாது என்றாலும் உரையாடல் மொழி தமிழ்தான். இதனால் எனக்கு ஏற்பட்ட டிஸ் அட்வாண்ட்டேஜ்களை போக்கிக்கொள்ளவே ஆரம்பத்தில் ஆங்கிலப்படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். அதனால் கதையைத் தெரிந்துகொண்டு பார்ப்பது என்னுடைய நோக்கத்திற்கு பாதகமாகவேயிருக்கும். ஏன் இப்ப இந்த சுய சொறிதல்-னா நான் ப்ளட் டையமண்ட் பார்க்கப்போவதற்கு முன்பே மதியின் விமர்சனத்தைப் படித்திருந்தேன்.
சரியான ஸ்பாய்லர், அதை அக்காவும் சொல்லியிருந்தனம். இருந்தும்தான் படித்திருந்தேன். ஆனால் அதனால் கூட ஒரு அட்வாண்ட்டேஜ் படத்தின் கதையும் நடக்கப்போகும் சம்பவங்களும் முன்பே தெரிந்தவையாக இருந்ததால் படத்தை இன்னொரு பார்வையில் என்னால் பார்க்கமுடிந்தது.(வேண்டுமானால் பொதுபுத்தியில் இருந்து மாறியது என்று சொல்லிக் கொள்ளலாம் :-)) படத்துடைய trailers பார்த்துட்டு ரிலீஸ் ஆனவுடனேயே பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன் ஆனால் ரிலீஸ் ஆனது ஜனவரி 13. நான் தமிழ்நாட்டில் திருச்சியில் இருந்தேன். Fame Cinemas, PVR Cinemas ல் படம் பார்த்துவிட்டு (ரீலீஸ் ஆகியிருந்தாலும்?) சிப்பியில் பார்க்க மனம் வரவில்லை. அதனால் தான் அடுத்தவாரம் பார்த்தது. ஏற்கனவே இந்தப் படத்தின் டைரக்டருடைய மற்றய படம் The Last Samurai எனக்கு மிகவும் பிடித்தப் படம் அதற்கான விமர்சனமும் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இப்படி நிறைய விஷயங்கள் என்னை இந்தப் படத்தைப் பார்க்க வரும்படி அழைத்தன.
படம் எனக்கென்னவோ ரொம்ப பரீட்ச்சையான ஒரு விஷயத்தைப் பற்றியதாகத் தோன்றியது பின்னர் யோசித்துப்பார்த்ததன் விளைவு, ஏற்கன்வே சிட்னி ஷெல்டனின் "மாஸ்டர் ஆப் த கேம்" படித்திருந்தேன். சொல்லப்போனால் இதே கதைதான். அதனால் உபயோகப்படுத்தப்பட்ட டெர்ம்ஸ், மற்றும் இன்னபிற விஷயங்கள் புரிவதில் கொஞ்சம் சிக்கலில்ல்லை. (அந்தப் புத்தகம் படித்திருந்தால் இந்தப்படத்தை நிச்சயம் பாருங்கள்.
ஒரு ஆக்ஷன் பாக்ட் மூவிக்குள் சமூகத்திற்கான மெஸேஜ் சொல்ல இயக்குநர் முயன்றிருக்கிறார். டைட்டானிக்கில் பார்த்த டி காப்ரியோவா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார் மனிதர். இப்பல்லாம் டி காப்ரியோ சாவறதுதான் டிரண்ட் என்று நினைக்கிறேன். டைட்டானி, த டிபார்ட்டட், இப்ப பிளட் டயமண்ட்.
"நாங்கள் ஒருவருக்கொருவர் செய்து கொண்டதற்கு கடவுள் எங்களை மன்னிப்பாரா என்று வருந்தியிருக்கிறேன். ஆனால் கடவுள் இந்த இடத்தைவிட்டுச் சென்று ரொம்ப நாட்களாகிவிட்டது" என்று ஆஸ்கர் வின்னர் ஜெனிபர் கன்னோலியிடம், வெள்ளை ஆப்பிரிக்காக்காரரான டி காப்ரியோ தங்களையும், கருப்பு ஆப்பிரிக்காரர்களையும் பற்றி புலம்பும் இடத்தில் பிரமாதப்படுத்துகிறார்.
ஒவ்வொரு வாக்கியத்தின் இறுதியிலும், "huh..." போட்டு சௌத் ஆப்பிரிக்கன் ஸ்லாங்கில் பல சமயங்களில் ரொம்பவும் தொடர்ச்சியாகப் பேசும் பொழுது புரியாத நிலையிலும் மனிதர் உழைத்திருப்பது தெரிகிறது.
ஸ்ஸாலமன் வாண்டி-யாக நடித்திருக்கும் Djimon Hounsou யை நீங்கள் கிளாடியேட்டரில் பார்த்திருக்க முடியும். இந்த மனிதரின் நடிப்புப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. வரிசையாக அவார்ட்களை இந்தப் படத்திற்காக பெற்றுவருகிறார். ஆஸ்கர் கிடைக்குமா பிப்ரவரி 23ல் விடைகிடைக்கும். என்னுடைய கருத்தின் படி இவருக்கு Best supporting actor-ம், Babel-ல் நடித்த Rinko Kikuchi க்கு Best supporting actress-ம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
அப்புறம் பத்திரிக்கையாளராக வரும் ஜெனிபர் கன்னோலி. முதலில் தன்னைப் பார்த்து ஜொள்ளுவிட்டு வரும் டி காப்ரியோவிடம் எப்படியாவது விஷயத்தைக் கறந்துவிட முயலும் காட்சிகள் ஆஆவ். இருவரும் பேசிக்கொள்ளும் பத்திரிக்கை தர்மம் பற்றிய காட்சிகளும் அதே வகையறாவைச் சேர்ந்தவை தான்.
எனக்கு டைமண்ட் பற்றி, அதை மக்கள் எடுக்க உபயோகப்படுத்தும் முறைகள் பற்றி, அதன் ரிஷிமூலம் நதிமூலம் ஒன்றும் அறியாமல் பயன்படுத்தும் மக்கள் பற்றி நன்றாகவேத் தெரிந்திருந்தது இந்தப் படம் பார்ப்பதற்கு முன்னர். சில நாவல்களாலும் படித்த சில ஆர்ட்டிக்கிள்களாலும். இந்தப் படம் எடுத்ததன் மூலமாய் நிச்சயமாய் டைரக்டரால் மக்களை Conflict டைமண்ட் வாங்குவதிலிருந்து தடுக்க முடியாவிட்டாலும். Conflict Diamond பற்றித் தெரியாத மக்களிடம் அதைக் கொண்டு சென்ற விதம் பாராட்டுதற்குரியது. ஏதாவது ஒரு தொடக்கம் தான் தேவையாயிருந்திருக்கிறது எனக்கு பெரும்பாலான சமயங்களில்.
அந்தத் தொடக்கம் சுஜாதாவால், மதனால் இருந்தால் கூட எனக்கு பிரச்சனை ஒன்றும் இல்லை, அதேபோன்ற மனநிலை உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல படம். மூன்று மணிநேரங்கள்(அல்லது இரண்டரை மணிநேரங்கள்) போவதே தெரியாமல் பார்க்கலாம், மசாலாக்கள் எல்லாம் தூவித்தான் எட்வெர்ட் ஸ்விக் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.
"ஆப்பிரிக்காவில் பெட்ரோல் கிடைக்காமல் இருக்கும் வரை பிரச்சனையில்லை." என்று ஆப்பிரிக்க வயதானவர் ஸ்ஸாலமனிடம் சொல்லும் பொழுது தியேட்டர் முழுவதும் சிரிப்பு அலை பரவியது. இதுபோல நிறைய விஷயங்கள் ஜெனிபர் கன்னோலிக்கும், லியனார்டோ டி காப்ரியோவிற்கும் இடையில் உண்டு. படத்தில் மெஸேஜ் சொல்வது, அதுவும் ஒன்றிரண்டு பிரேம் அழகாக(கொடூரமாக) எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகளுக்கிடையில் உட்கார்ந்து நல்லது கெட்டது(பகுத்தறிவு?) பற்றி பேசுவது பிடிக்காத ஆட்கள் நிச்சயமாய் தப்பித்துக்கொள்ளலாம்.
மற்றபடிக்கு நிச்சயமாக ஒரு நல்ல படம். பார்க்கலாம்.
PS: அப்புறம் இது போன்ற மெஸேஜ்கள் எல்லாம் உபயோகப்படுமா என்று கேட்பவர்களுக்கு. எங்கள் வீட்டில் பட்டுப்பூச்சியின் உடலில் இருந்து தான் எடுக்கிறார்கள் என்று தெரிந்ததும் பட்டுப்புடவையே கட்டமாட்டேன் என்று ஒற்றைக்காலில் நின்ற பெண்ணியவாதிகள் சிலரை நேரில் பார்த்திருக்கிறேன்.
அதே போல் சத்தியசோதனை படித்துவிட்டு இனிமேல் மாமிசம் சாப்பிட மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த பிடிக்கிற ஆட்கள் இன்னும் எங்கள் வீட்டிலேயே உண்டு. மெஸேஜ்கள் நிச்சயமாக உதவுகின்றன. ஆனால் அப்படி உதவும் பர்ஸண்டேஜ்கள்??????
Blood Diamond
பூனைக்குட்டி
Wednesday, January 31, 2007

பூனைக்குட்டி
Primarily a java programmer, an athiest and a film geek, who loves reading, writing and photography.
Subscribe to:
Post Comments
(
Atom
)
Popular Posts
-
Next morning, I cornered Visu—eyes sharp, voice low, catching him sprawled on the couch, wireless headphones still on, eyes bleary like he h...
-
I’d been grinding Visu down for days—teasing, poking—till he broke, voice tight with exasperation. “Fine, but hook me up with a girl I pick ...
-
On a serene Saturday evening, I slowly emerged from the embrace of slumber, rousing from my afternoon repose. Gradually, my senses rekindled...
ம்ம்...சத்யம் Pure cinemaa-வில் பார்த்தேன். நல்ல படம். ஆனால், ஏனோ க்ளாரிட்டி மும்பை எக்ஸ்பிரஸ் பார்த்த மாதிரி தான் இருந்தது.
ReplyDeleteபடத்தில் அந்த சிறுவனை (டியா) முதல் கொலை செய்ய வைக்கும் காட்சி, அற்புதமான ஒன்று. கடைசியில் சாலமனை நோக்கியே துப்பாக்கி நீட்ட வைத்திருக்கும் அந்த சூழல். ஒற்றைக் கையை செட்டியெடுக்கும் காட்சியும்...
படத்தில் நான் ரசித்தது, டி காப்ரியோவின் நடிப்பு + வளார்ச்சியை. மனிதர் ஆச்சர்யப்படுத்துகிறார். அவருக்கு அதிர்ஷ்டமும் கை கொடுக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
மோகன், என்னாது இது...பக்கம் பக்கமா அடிக்கிறீங்க...பொழுதேன்னிக்கும் இதே வேலையா ? உடனடியாக ஜி.எஸ்.எம் பற்றி ஒரு டாக்குமெண்ட் தயாரித்து அனுப்பவும்...
ReplyDeleteசீனு, ரவி நன்றிகள்.
ReplyDeleteரவி, ஏன்யா உங்களூக்குப் பொறாமை.
சிப்பி தியேட்டரை மூடிவிட்டதாகக் கேள்விப்பட்டேன். உண்மையா?
ReplyDelete-ஞானசேகர்
Good words.
ReplyDelete