இது இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன் சன் டீவியில் வெளியான முழு சிவாஜி டிரைலர். என்ஜாய்.வீடியோ எடுத்தது எங்கக்கா - சொல்லிட்டேன். ...
நண்பரொருவர் முன்னாலேர்ந்து புலம்பிக்கொண்டிருந்தார். இவனுங்க பின்னூட்டத்தில் போடுற அலப்பறை தாங்க முடியலை. இதுக்கு ஏதாச்சும் செஞ்சே ஆகணும். அவரே கேட்டார் ஏன் இந்த கொலைவெறி; என் பதிவுக்குத் தான் அதிகப் பின்னூட்டம் கிடைச்சுதுன்னு புலம்பத்தானே அதை முறியடிச்சாவணும். ஏதாவது பண்றேன்னு சொல்லிக்கொண்டேயிருந்தார்.இப்ப மக்களே நான் கொஞ்ச நாளைக்கு முன்னால் போட்ட இந்த "பனிக்காலமும் பாச்சுலர் வாழ்க்கையும்" என்ற பதிவை அவரே தேர்ந்தெடுத்து ஆயிரம் பின்னூட்டம் போட்டுக் காண்பிக்கவா...
சில சமயங்களில் சூழ்நிலைகளின் கைதியாகி நாம் கொட்டிவிடும் வார்த்தைகளை அள்ளுவதென்பது இயலாத ஒன்றாகிவிடுகிறது. அதைப்போலத்தான் அன்றும் நடந்தது. சராசரி குடிமகனைக் காட்டிலும் அனைத்து விஷயங்களுமே, சற்று அதிகமாகவே, சின்னவயதிலேயே கிடைத்துவிட்ட கர்வம் அதிகாரமாய் ஒட்டிக்கொண்டு விலகமறுக்கிறது. பணம், பெயர், புகழ் கொடுக்கும் போதை பலசமயங்களில் நமது கட்டுப்பாட்டில் இருப்பதைப் போன்ற ஒரு பாவனையைக் கொடுத்தாலும் பெரும்பாலும் கட்டுக்குள் அடங்குவதில்லை. அது மற்றவர்களுடைய தவறுகளை, இயலாமைகளைப் பார்க்கும் பொழுது...
முதலில் ஒரு புத்தகம் நமக்கு எப்படிக் கிடைக்கிறது; என்ன அறிமுகத்துடன் கிடைக்கிறது என்கிற விஷயம் என்னைப் பொறுத்தவரை சுவாரசியமானது. இரா முருகனின் இந்தப் புத்தகம் கூட அப்படித்தான். நான் இணைய உலகில் பரவலாக நடமாடத் தொடங்குவதற்கு முன்பே இந்தப் புத்தகத்தைப் பற்றிய பெயரளவிலான அறிமுகம் கிடைத்திருந்தது. அது ஒரு சுவாரசியமானக் கதை என்பதால் அதை முன்னே சொல்லிவிடுகிறேன்.எனக்கு கொஞ்சம் தூரத்து சொந்தமாய் ஒரு தாத்தா, காரைக்காலைச் சேர்ந்தவர்...
செல்லா பட்டறையைப் பற்றி சென்னை வலைபதிவர் சந்திப்பில் சொல்லியிருந்த பொழுதே. எனக்கான இடத்தை புக் செய்து கொண்டிருந்தேன்(செல்லா அப்பொழுது எல்லோருக்கும் இணைய வசதியுடன் கணிணி கிடைக்க ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருந்தார்.) பின்னர் இன்னொரு நாள் பாலபாரதியிடன் "கடலை" போட்டுக்க்கொண்டிருந்த பொழுது நான் கோவை வர ஆர்வமாகயிருப்பதாகவும். டிக்கெட் புக் செய்ததும் சொல்வதாகவும் சொல்லியிருந்தேன். பின்னர் பெங்களூருவிலிருந்து கோவைக்கு ரயிலிலும், கோவையிலிருந்து பெங்களூருக்கு ப்ளைட்டிலும் புக் செய்துவிட்டு செல்லாவுக்கு...
In பதிவர் சந்திப்பு வீடியோ பதிவு
வீடியோ பதிவு - முகுந்தின் உரையாடல்
Posted on Thursday, May 24, 2007
இரண்டாவது அமர்வில் முகுந்த் பேசியவற்றில் சிலவற்றை வீடியோ எடுத்திருந்தேன். மதிய நேரம், அறையில் அவ்வளவாக வெளிச்சம் இல்லாததாலும் முகுந்த் பேசிய இடத்தில் அத்தனை வெளிச்சம் இல்லாத காரணத்தாலும் ஒரு மாதிரி(!!!) வந்திருக்கிறது.பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.அறிமுகம் மற்றும் எ-கலப்பை பற்றி.தமிழ்விசை, அதியன் மீதி விஷயங்கள் பற்றி. ...
In சுய சொறிதல் பதிவர் சந்திப்பு
கோவை பதிவர் சந்திப்பு - என் குறிப்புகள் (இரண்டாம் அமர்வு)
Posted on Wednesday, May 23, 2007
இரண்டாம் அமர்வு என்று போட்டாலும் விஷயம் ஆரம்பிப்பது, முதல் அமர்வின் முடிவிலிருந்து. சென்ஷி வாங்க கீழே போய்ட்டு வரலாம் என்று அழைக்க கிளம்பி கீழே வந்தோம். அங்கே உண்மைத் தமிழன், சுகுணா திவாகர், அவருடைய நண்பர், லிவிங் ஸ்மைல் வித்யா போன்றோர் நின்று கதைத்துக் கொண்டிருந்தனர். நான் சுகுணா திவாகரை சென்னை வலைபதிவர் சந்திப்பில் சந்திப்பதற்கு முன்னமே தொலைபேசியில் பேசியிருக்கிறேன். அதனால் கொஞ்சம் போல் அறிமுகம் உண்டு.நேரடியாக...
பெண்கள் கார், மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டலாமா கூடாதா என்ற விவாதம் பெரும்பான்மையான ஆண்களுக்கு சுவாரசியம் தருவதாகத்தான் இருக்கும் என்பது எனக்கு கடைசி தண்ணிப் பார்ட்டியின் பொழுதுதான் தெரியவந்தது. ஏறக்குறைய நான் சந்தித்த எல்லா ஆண்களுக்குமே ஏதாவது ஒரு வகையில் பெண்கள் வண்டி ஓட்டுவதால் பிரச்சனை ஏற்பட்டிருக்கிற விஷயமும் தான். “உனக்குத் தெரியாது கார்த்திக், இப்படித்தான் ஒரு தடவை இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு பன்னார்கெட்டா...
In சொந்தக் கதை பதிவர் சந்திப்பு
கோவை பதிவர் சந்திப்பு - என் குறிப்புகள்
Posted on Tuesday, May 22, 2007
நான் தங்கியிருந்த காந்திபுரத்திலிருந்து சந்திப்பு நடைபெற்ற RS-புரம் எப்படி வரவேண்டும். ஆட்டோவிற்கு எவ்வளவு கொடுக்கலாம் என்றெல்லாம் செல்லாவிடம் ஞாயிறு காலை 9 மணிக்கே(!!!) போன் செய்து கேட்டுக்கொண்டு தான் கிளம்பினேன். எனக்கு இரண்டாவது ப்ளோரில் நடப்பதாக தெரியாததாலும், கௌதம் ஆர்கெட் ஒன்பதரை மணிக்கு ஆளோருவரும் உள்ளிருப்பதைப் போன்ற தோற்றத்தை தராததாலும்; பக்கத்தில் இருந்த பேங்கிற்கு சென்று ஏடிஎம்-ல் காசை உருவி(எனக்கு முன்னர் காசை எடுத்துவிட்டு சென்ற நபர்...
எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் உண்டு. என்னுடைய 'Bicycle Diaries' ஜல்லி; பிறகு பார்த்த இரண்டு படங்கள்(ஒன்றில் படுக்க வைத்து ரம்பத்தால் கழுத்தை அறுப்பதைப் போல் உணர்ந்தேன்.) பிறகு நடந்த வலைபதிவர் சந்திப்பென்று ஆறு ஏழு பதிவுகள் போடும் அளவிற்கு விஷயங்கள் நிறைய இருக்கின்றன இப்போதைக்கு சில புகைப்படங்கள் மட்டும். ...
நான் என் கல்லூரி அணிக்குத் தேர்வானது ஒரு நல்ல கதை. முதலில் டென்னிஸ் பந்துகளில் விளையாடுவதைத் தொடங்கினாலும் எனக்கு கிரிக்கெட் பந்துகளில் விளையாட நேரமோ, சூழ்நிலையோ அமையவில்லை. இதனாலெல்லாம் நான் கல்லூரி அணிக்கு தேர்ந்தெடுக்கிறார்கள் என்றதும்; அதுவும் கிரிக்கெட் பந்தில் என்றதும் தாழ்வு மனப்பான்மையால் அந்தப் பக்கமே போகவில்லை. என்ன பெரிய செலக்ஷன் ப்ராப்பர் கிரவுண்டிலா நடந்ததது? என்றால் இல்லை. கல்லூரிக்கு பின்னால் இருந்த ஒரு இடத்தில்...
கிரிக்கெட் நான் மற்றும் Nostalgiaஇந்தச் சமயத்தில் ஒரு மிக முக்கியமான நிகழ்வு நடந்தது அது நான் எட்டாவது படித்து முடித்த பொழுது மே மாத விடுமுறைக்காக டெல்லிக்குச் சென்றது. மற்ற விஷயங்களை விடுத்து கிரிக்கெட் சம்மந்தமான முக்கியமான நிகழ்வென்றால் அது நான் என் மாமாக்கள் இருவருக்கும் பந்து வீசியது. இருவரும் உண்மைக் கிரிக்கெட் ;) ஆடியிருந்தவர்கள். அதாவது மேட் எல்லாம் போட்டு விளையாடும் டிவிஷன் மேட்ச்சஸ். இதனால்...
நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது எப்பொழுது என்று சரியாக நினைவில் வரமறுக்கிறது ஆனால் ஐந்தாவது வகுப்பு படிக்கும் பொழுதெல்லாம் ஆடியிருக்கிறேன் என்பது நினைவில் இருக்கிறது. கொஞ்சம் போல் சீரியஸ் கிரிக்கெட் என்றால் அது ஆரம்பித்தது ஆறாவது ஏழாவது படிக்கும் பொழுதாகயிருக்கலாம்.எங்கள் பள்ளிக்கூடத்திற்கு அருகில் இருந்த ஒரு இடத்தில் விளையாடுவோம்; பக்கத்தில் ஒரு மாங்காய் மரத்துடன் கூடிய வீடிருந்தது. பெரும்பாலும் அந்த வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள் எனவே...
In Only ஜல்லிஸ் உலகக்கோப்பை கிரிக்கெட் சுய சொறிதல்
என்ன தவம் செய்தனை மோகனா?
Posted on Wednesday, May 02, 2007
ஆச்சர்யமாகவே இருக்கிறது வாழ்க்கை எனக்கு பெரும்பான்மையான சமயங்களில். சொல்லப்போனால் அந்த ஆச்சர்யம் இல்லாமல் போகும் நாளில் வாழ்க்கை போரடித்துவிடும் என்பது மட்டும் இன்று பிரகாசமாகத் தெரிகிறது."நாடுங்கால் ஒரு மனமற்ற செய்கையைநல்லதோர் மணமாம் என் நாட்டுவார்கூடுமாயில் பிரமசரியம் கொள்கூடுகின்றிலதெனில் பிழைகள் செய்துஈடழிந்து நரக வழிச்செல்வாய்யாது செய்யினும் இம்மணம் செய்யல்காண் - பாரதி""கெட்டு சீரழிந்து போனாலும் போ, கல்யாணம் மட்டும் செஞ்சிக்காத"(ஒரு மாதிரி என்னுடைய டிரான்ஸ்லேஷனில் - பாரதியின் கவிதைவரிகள்...
Subscribe to:
Posts
(
Atom
)
Popular Posts
-
"Its not fair" ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ "நான் நினைச்சேன்..." என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொஞ்சம்...
-
ஏந்து பேர் அல்குல் நின்றும் கற்றை மேகலைகள் நீங்கி படிமங்கள் ஆபத்தானவை, மனதில் ஒன்றிலிருந்து ஒன்றாய் தோன்றி மறைந்து உருவாகி பதிந்துவி...
-
Chennai buzzing with that sticky night heat, the kind that made you want to drown the world in booze and fuck it all off. I’d been itching t...