In உலகக்கோப்பை கிரிக்கெட்

Go Aussie Go!!! - 9 (Finals)

திருச்சியில் இருப்பதால் அதிகம் எழுத முடியவில்லை. இருந்தாலும் இவ்வளவு போட்டிகளுக்கு எழுதிவிட்டு இறுதிக்கு எழுதாவிட்டால் எப்படி எனபதால் இந்தப் பதிவு.

சொல்வதற்கு ஒன்றுமில்லை, இந்த இறுதிப் போட்டி ஒன் சைடட் மேட்ச் ஆகத்தான் இருக்கும் என்பது என் கணிப்பு.

இதற்கு நான் இலங்கை அணியை குறைவாக கணிக்கிடுவதாக ஆகாது. ஆஸ்திரேலியா "பிக்" மேட்ச்களில் மிகச் சிறப்பாக விளையாடுபவற்கள்.

ஆஸ்திரேலியா முதல் பேட்டிங் பிடித்தால் முன்னூறு அடிப்பார்கள், மிகச் சுலபமாக ஜெயிப்பார்கள்.

இலங்கை முதலில் பேட்டிங் செய்தால் 200 ரன் மட்டுமே எடுப்பார்கள்.

இது என் கணிப்பு மட்டுமே. என்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா முதலில் பௌலிங் செய்யவேண்டும்.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In உலகக்கோப்பை கிரிக்கெட்

Go Aussie Go!!! - 8(Semi Final)

ஒருவழியா உலகக்கோப்பை கிரிக்கெட் அதன் இறுதிக் கட்டத்துக்கு வந்தாச்சு. ஏற்கனவே ஒரு அரையிறுதிப் போட்டி முடிஞ்சு நியூஸிலாந்து வெளியேறிவிட்டது. இன்றைக்கு கடைசி அரையிறுதிப் போட்டி, 8 வருடங்களாக உலகக்கோப்பைப் போட்டிகளில் தோற்காமலும், குரூப் ஸ்டேஜில் சௌத் ஆப்பிரிக்காவை போட்டு புரட்டி எடுத்தும் மனதளவில் பிரகாசமாக இருக்கிறார்கள் ஆஸ்திரேலிய அணியினர்.

மாத்யூ ஹைடன், ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பான்டிங், மைக்கேல் கிளர்க், அண்ட்ரூ சைமண்ட்ஸ், மைக்கேல் ஹஸ்ஸி போன்ற பலமான பேட்ஸ்மேன்களும். மிகவும் வித்தியாசமான பௌலிங் அட்டாக்குடன் மிகவும் வலுவாகயிருக்கிறது ஆஸ்திரேலியா அணி.

மனதளவில் தளர்ந்து போயே சௌத் ஆப்பிரிக்க அணி இருந்தாலும், செமியிலாவது ஒரு நல்ல போட்டியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். முதல் பேட்டிங்காக இருந்தாலும் சரி, இரண்டாவது பேட்டிங்காக இருந்தாலூம் சரி என்று பின்னிக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணியை சௌத் ஆப்பிரிக்கா ஜெயிக்க வேண்டுமானல் They have to play like champions. அவ்வளவுதான்.

ஒரு மாதிரியான போட்டி கூட இல்லாததால ஒவ்வொரு போட்டிக்கும் பதிவு போடணும்ங்கிற கான்செப்ட் கூட உதைவாங்குது எழுதவே ஒன்னும் இல்லை. யாரும் ஆஸ்திரேலியா பக்கத்தில் கூட வரலைங்கிறதால, என்னாத்த எழுத... ஆனாலும் உற்சாகப் படுத்துவதற்காக(உற்சாகப் படுத்திக் கொள்வதற்காக...) இந்தப் பதிவு.

Read More

Share Tweet Pin It +1

19 Comments

In பதிவர் சந்திப்பு

சென்னை வலைபதிவர் சந்திப்பு

இதைப்பற்றி பாலபாரதியும் நானும் முன்பே ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும் பொழுது சொல்லியிருந்தார்(அறிவிப்பெல்லாம் வெளியாவதற்கு முன்னால்), நானும் ரொம்ப நல்ல புள்ளையாய் டிரெயின் டிக்கெட் எல்லாம் எடுத்து வைத்திருந்தேன். ஆனால் என்னுடைய கோளாறான வேதாள புத்தியால், கடைசி நிமிடம் வரை திட்டத்தை கேன்ஸல் செய்துவிட்டு முருங்கை மரம் ஏறிவிடும் வாய்ப்பிருந்ததால் பெரும்பாலும் இதைப் பற்றி(நான் சென்னை வருவதைப் பற்றி) யாரிடமும் பேசவில்லை. வலையுலகில் வெகுசிலருக்குத் தெரிந்திருக்கும்.

இடையில் செந்தழல் ரவி அவர்கள், தங்களின்(அவரும் இன்னொரு நண்பரும்) காரில் சென்னை வருமாறு என்னை அழைத்தார், ஆனால் எனக்கு சனிக்கிழமை பெங்களூரில் கொஞ்சம் வேலையிருந்ததால் மறுத்துவிட்டேன். ஆனால் கடைசி நேரத்தில் அந்த வேலை, நடக்காமல் ஈயடித்துக் கொண்டிருந்தேன் என்பதுதான் உண்மை. சென்னைக்கு காலை ஏழு இருபதுக்கெல்லாம் ஆஜராகிவிட்டேன். ஏற்கனவே செய்து கொண்ட சில அப்பாயின்மென்ட்களை நினைவில் வைத்தவாறு நண்பருடன் நேராக அவருடைய வீட்டிற்குச் சென்று, மற்ற வேலைகளை முடித்துவிட்டு கிளம்பினோம்.

கோயம்பேடு பஸ்டாண்ட் அருகில் இருக்கும் சரவணபவனில் காலை டிபனை முடித்துக்கொண்டு நாங்கள் புறப்பட்டது எங்களுடன் கல்லூரியில் படித்த ஒருவரை சந்திப்பதற்காக. இவரைப் பற்றிமுன்பே ஒரு முறை எழுதிய நினைவு. இந்தச் சந்திப்பு முடிந்ததும் தான், எங்கள் ப்ளானில் இருந்த மிகப்பெரிய ஓட்டை நினைவில் வந்தது. அதாவது ஏறக்குறைய பதினொன்னறைக்கு முடிந்த இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, வலைபதிவு சந்திப்பின் மூன்றரை மணிவரை இருந்த காலம் தான் அது.

நானும் என்னுடன் வந்த நண்பரும் கல்லூரிக்காலங்களில் இருந்தே நிறையப் படங்கள் பார்ப்போம் என்பதால் டீபால்ட்டாக தேர்ந்தெடுத்தது சினிமா பார்க்கலாம் என்பதைத்(இதை கொஞ்சம் போல் முன்பே தீர்மானித்துத்தான் வைத்திருந்தோம்.)தான். ஆனால் சத்யம் சென்று ஒரு சினிமாவிற்கும் டிக்கெட் கிடைக்காமல் கடுப்பாகி அடுத்த நகர்ந்த இடம் தேவி காம்ப்ளக்ஸ். பெரும்பான்மையான தமிழ்ப்படங்கள் பெங்களூருக்கு வருவதில்லை ஆகையால் அந்த காம்ப்ளக்ஸில் ஓடிக்கொண்டிருந்த ஒரு படத்தைத் தவிர்த்து எந்தப் படத்தையும் நான் பார்த்திருக்கவில்லை. பின்னர் நண்பரின் தீர்மானப்படி நாங்கள் தேவி-பாலாவில் "தீபாவளி"க்குப் போனோம்.

கொய்யால, தியேட்டராய்யா அது - எங்க ஊரு பிலக், எலெக்ட், சாந்தி தியேட்டர் பக்கத்தில் கூட வராது இந்தத் தியேட்டர், 'ஏசி' சாரி 'பேன்' கூட இல்லை தியேட்டருள். என்னவோ நினைத்து எங்கேயோ போய்விட்டோம், அந்தச் சோகக்கதையை விடுங்கள். படம் கொஞ்சம் வன்முறையாக இருந்தாலும் 'ஃபோரம் - பிவிஆர்' மாதிரியான தியேட்டர்களில் பார்த்திருந்தால் பிடித்திருக்கக்கூட செய்திருக்கும். 'பில்லு' 'பில்லு'ன்னு சப்தம் நான் சந்திப்பிற்கு வரும் வரை காதிலே ஒலித்துக்கொண்டேயிருந்தது.

-------------------------------------

நடேசன் பார்க், நான் நினைத்ததைப் போல கண்டுபிடிக்க கடினமானதாக இல்லை. பாலபாரதியிடம் பத்துநிமிடம் அடையாளம் கேட்டதெல்லாம் வீண். உள்ளே நுழைந்ததும் ஒரு மாதிரி வட்டமாய் உட்கார்ந்திருந்த மக்களைப் பார்த்ததும் தெரிந்தது இதுதான் நம்ம கும்பல் என்று ஆனால் பக்கத்தில் இன்னொரு கூட்டமும் நின்று கொண்டிருக்க சுதாரிக்க ஒரு நிமிடம் ஆனது, ஆனால் வழமையாக தருமியையும், பிரகாஷரையும் வைத்து நம்மக் கூட்டத்தைக் கொஞ்சம் சுலபமாக கண்டறிந்துவிட்டேன்.

நான் தான் மோகன்தாஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, கிருபா ஷங்கர், பிரகாஷ், பாஸ்டன் பாலா, பக்கத்தில் உட்கார்ந்தேன் எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தது முத்து தமிழினி, நான் அவருடன் தொலைபேசியில் பேசியிருந்தாலும் நேரில் பார்த்துப் பேசியிருக்கவில்லை. தனியாக பக்கத்தில் உட்கார்ந்திருந்த பிரகாஷிடம் அறிமுகம் செய்து கொள்ள, அவரும் தன்னை; நான் தான் பிரகாஷ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். நான் அது பிரகாசமாகத் தெரியுதே என்று சொன்னதை ஜாலியாக எடுத்துக்கொண்டார் மனிதர்.

பின்னர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பாபாவிடம் இட்லிவடை பற்றி கதைத்துக்கொண்டிருந்தேன், அவர் சுவாரசியம் காட்டியமாதிரி தெரியவில்லை. நான் இட்லிவடை பற்றி தெரிந்து கொள்ள விரும்பியது அரசியல் காரணங்களுக்காக அல்ல, முன்பொரு முறை என்னைப் பற்றி இட்லிவடையில் வந்திருந்த ஒரு கருத்தை சொன்ன நபர் யார் என்று தெரிந்துகொள்ளும் ஆவல் மட்டும் தான். திரும்பவும் சொல்கிறேன் நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் குறைந்த பட்சம் இணைய அரசியலுக்கு ;).

நான் உட்கார்ந்ததுமே, "வாய்யா மோகன்தாஸ் - உட்காரு" என்று வந்த பாசக்காரக் குரல் நன்றாகப் பழகியதாகயிருந்தாலும் ஆளை அடையாளம் தெரியாமல் ஒரு நிமிடம் விழித்தேன். கடைசியில் பதிவர் சந்திப்பிற்காக கெட்டப்பை மாற்றியிருந்த பாலபாரதிதான் அது என்று தெரிந்தது; நான் எதிர்பார்த்ததை விடவும் உயரம் கொஞ்சம் அதிகம் ஆள் வாட்ட சாட்டமாகயிருந்தார் ;)(அண்ணாச்சி! என்னைச் சொல்லிட்டு(வீட்டுச் சாப்பாடுன்னு) நீங்க தான் ஓய் வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவது மாதிரி இருக்கிறியள். இத்தனைக்கும் சொந்தச் சமையல் வேறு கிடையாது என்று சொன்ன நீங்கள். ம்ம்ம்ம், இன்னொரு நாள் இந்த ரகசியம் பற்றி பேசுவோம், அதுசரி வீட்டுப் பக்கம் யாராவது இருந்தால் சுத்திப் போடச் சொல்லுங்கள், என் கண்ணே பட்டுடும் போலிருந்தது ;)).



பின்னர் அறிமுகப்படலம், (அதற்கு முன்பே சிறில் அலெக்ஸின் பெட்டகம் பற்றி பேசி முடித்திருந்தார்கள். மாற்று பற்றி ஆரம்பிக்கும் பொழுது வந்திருந்தேன் - கையை உயர்த்தி ஒரு கேள்வி கேட்டேன், யாரும் கண்டுகொண்ட மாதிரி தெரியாததால் விட்டுவிட்டேன்.) ஒருவர் பின் ஒருவராக அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த பொழுது எனக்கும் முத்துவிற்கும் இடையில் இன்னொரு பிரபலம் வந்து உட்கார்ந்தார், அது ஜி.இராகவன். நான் மோகன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

கிருபா ஷங்கரின் அறிமுகத்தின் பொழுது பாலபாரதி ஒரு கமென்ட் கொடுக்க, பாபா மற்றொரு நண்பரின் அறிமுகத்தின் பொழுது குரல் கொடுத்ததை பலர் கவனிக்காதது போல் விட்டு விட்டார்கள்(போட்டு விட்டுட்டுடனே...) பின்னர் சில ஜல்லி விஷயங்களைப் பற்றி நான் பிரகாஷுடன் பேசிக்கொண்டிருந்தேன். இடையில் வந்து உட்கார்ந்தவரைப் பார்த்ததும் முதலில் மற்ற அறிமுகம் இல்லாதவர்கள் போல் தான் நானும் நினைத்தேன்; கடைசியில் தான் தெரிந்தது அது ரோஸா வசந்த். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன் - குவான்டம் பற்றி முன்பொருமுறை சண்டை போட்டதை வைத்து கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

அந்தச் சமயத்தில் தான் பாபாவை Snap Judgement பற்றி பேசச் சொன்னார்கள். என்னை ஆங்கிலத்தில் பேசச்சொன்னால் "Actually" யை அதிகம் தடவை உபயோகிப்பேன், அதைப் போல் பாபா "அது என்ன பேரது..."(இல்லை அதை ஒத்ததோ) ஒன்றை அதிகம் தடவை உபயோகித்தார்.(குற்றம் கண்டுபிடிப்பதற்கு மன்னியுங்கள், கல்லூரிக் காலத்தில் லெக்சரர் ஒருவர் சொல்லும் "Actually" யைக் கணக்கெடுத்து எடுத்து அப்படியாகிவிட்டேன் நான்.) சொன்ன மேட்டர் நன்றாகயிருந்தது உபயோகித்துப் பார்க்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.

இடையிடையில் ஒவ்வொரு நிகழ்வின் பொழுதும், பிரகாஷ் இல்லை(OR) ரோஸா வசந்த் கொடுத்த கமென்ட் நன்றாகயிருந்தது. ஆனால் அவ்வளவு கரெக்டாக நினைவில் இல்லாததால் எழுதவில்லை. ஓசை செல்லா தன்னுடைய கோவை "வலைபதிவுப் பட்டறை" பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, பிரகாஷ் சிகரெட் குடிப்பீங்களா என்று கேட்க, நான் மாட்டேன் என்றும் ஆனால் கம்பெனி கொடுப்பேன் என்றும் சொல்லி நானும் அவரும் கிளம்பியது தான் தாமதம், படபடவென்று ஒரு பெரிய கும்பலே புகைபிடிக்க வந்து சேர்ந்தது.

கொஞ்ச நேரம் அவர்களுடன் ஜாலியாக அரட்டை அடித்துவிட்டு திரும்பவும் பதிவர் வட்டத்திற்குள் வந்து உட்கார்ந்ததற்கும் தருமி பேசத் தொடங்கியதற்கும் நேரம் சரியாகயிருந்தது. ஒரு திறமையான ஆசிரியரைப் போல முதலில் நல்லவைகளை(ப்ளாக்கர்களைப்) சொல்லிவிட்டு பிறகு என்ன செய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அவருடைய Think Tank பற்றிய கருத்துக்கு, பொன்ஸ், பிறகு இருவர் சந்தேகம் கேட்டார்கள் அவர் எதை Think Tank என்று சொல்ல வருகிறார் என்று. எனக்கு அவர் சொல்லவந்த கருத்து ஒரு மாதிரி புரிவது போல் இருந்தது. இந்தச் சமயத்தில் எல்லாம் பிரகாஷ், பாபா, ரோசா வசந்த, மற்றும் குழுவினர் எஸ்கெப் ஆகியிருந்தார்கள். அவர்கள் நான் பிறகு சந்திக்கவேயில்லை.



இப்படியாக தருமி பேசிக்கொண்டிருந்த பொழுது, ஓரளவிற்கு சீரியஸான டிஸ்கஷன்ஸ் போய்க்கொண்டிருந்தது, தமிழ்மணம், 40, அனானி பின்னூட்டங்கள், நல்ல கெட்ட பதிவுகள் பற்றிய பேச்சு சுவாரசியத்தைக் கொடுத்தது. ஓகை, இலவசமாக தமிழ் சாப்ட்வேர் தருவதை பற்றி பிரஸ்தாபிக்கத் தொடங்கியதும், கௌதம் அதை எப்படி இன்னும் நன்றாகச் செய்யலாம் என்பதைப் பற்றி பேசினார்கள். சிறிது நேரத்தில் குங்குமம், மக்கள் தொலைக்காட்சி ஆகியவை வலைபதிவர் சந்திப்பை இன்னொரு நிலைக்கு நகர்த்த புகைப்படம், ஒளிப்பதிவு போன்ற விஷயங்களில் இறங்கியது. பின்னர் குரூப் போட்டோவிற்கு போஸ் கொடுக்கத் தொடங்கினர் வலைப் பதிவர்கள்.



பின்னர் சின்ன சின்ன குழுக்களாகப் பிரிந்து அவரவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் பேசக் கிடைத்த ஆள் கிருபா ஷங்கர், அவர் தான் .Netல் வேலை செய்வதாகச் சொன்னதும் நான் அவரிடம் J2EEல் வேலை செய்வதாகச் சொல்லி கொஞ்சம் நேரம் அதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். இடையில் புகுந்த பொன்ஸ் இடம் எங்கே நாங்கள் ஆரக்கிள் ஓப்பன் சோர்ஸ்டா இல்லையா என்று கேட்டுவிடுவோம் என்று பயந்து கொஞ்ச நேரத்தில் எஸ்கேப் ஆகிவிட்டார்.

பிறகு மா.சிவக்குமாரை சந்தித்து முன்பே தனிமடலில் பேசிக்கொண்டிருந்த, கல்லூரி இறுதியாண்டு ப்ராஜக்ட் விஷயமாகப் பேசிக்கொண்டிருந்தேன். அவரோ ஏக பிஸி, நானோ ரொம்ப சீரியஸாக பேசிக்கொண்டிருக்க இடையில் வந்த செல்லா சிவக்குமாரை தட்டிக்கொண்டு போய்விட்டார்.(KPN ஆபீஸ் சென்றார்கள் என்று நினைக்கிறேன் - பின்னர் நடு வழியில் அதாவது நானும் நண்பரும் நடேசன் பார்க்கை விட்டு வெளியேற எத்தனிக்க அவர்கள் உள்ளே வர அங்கே ஒரு ஐந்து நிமிடம் பேசிக்கொண்டிருந்தோம்.)பின்னர் வடுவூர் குமாரை சந்தித்துப் பேசினேன், ஆள் பூராவும் புன்னகையாகயிருக்கிறார்.

நண்பர் ஒருவர் நீங்கதானே அந்த "சார்... சார்...னு போட்டு ஒரு கதை எழுதினீங்க நல்லாயிருந்தது" என்று சொன்னார் பின்னர் நான் அது ரொம்ப பழைய கதையாச்சேன்னு கேட்க அதற்குப் பிறகு உங்கப் பதிவு படிப்பதில்லைன்னு சொல்லிட்டுப் போனார். :(

பின்னர் தருமியிடம் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துவிட்டு, பாலபாரதியிடம் போய்வருவதாகச் சொல்லக் கிளம்பினேன். சொல்லக் சொல்லக் கேட்காமல் என் புகைப்படத்தை க்ளோசப்பில் எடுத்து வைத்திருக்கிறார் ;). பாவம். (அண்ணாச்சி கம்ப்யூட்டரில் போடும் பொழுது பார்த்துப் போடுங்கள். குழந்தைகள் பயந்திடப்போகுது.) நாமக்கல் சிபி வந்து ஒரு ஹாய் சொல்லி பேசிக்கொண்டிருந்தார். லக்கிலுக், வரவனையான், ஜெய் சங்கர் இவர்களுடன் பேசிக்கோண்டிருந்தேன். இடையில் நிறைய பதிவர்களுடன் பேசிக்கொண்டிருந்தாலும் யாருடனும் அவ்வளவு பிரகாசமான தொடர்பு இல்லாததால் பேச்சுக்கள் இடையில் தொங்கின...



மற்றபடிக்கு பதிவர்களைப் பற்றிய நல்லதொரு அறிமுகம் கிடைத்தது. நல்ல முறையில் ஆர்கனைஸ் செய்யப்பட்டு சிறப்பாக முடிவடைந்தது சந்திப்பு. இதே போல் பதிவர் சந்திப்புக்களை சில நாட்களோ வாரங்களோ இல்லை மாதங்களோ இடைவெளிவிட்டு தொடர்ச்சியாக நடத்த வேண்டும். பெரும்பாலும் இது போல நடக்கும் சந்திப்புக்களால் ஒருவருக்கொருவர் கிடைக்கும் பழக்கம், தமிழ் வலைப் பதிவுகளை இன்னொரு நிலைக்கு கொண்டு செல்ல உதவும். இந்தமுறை கொஞ்சம் டைட் ஷெட்யூலில் வந்ததால் நிறைய விஷயங்கள் பேச, பகிர்ந்து கொள்ள முடியாமல் போனது. இது ஆரம்பம் தானே என்று விட்டுவிட்டேன்...

பிறகு இன்னொரு முறை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு பெங்களூருவைப் பார்க்கக் கிளம்பினேன்.(அந்தக் கதை இன்னொரு நாள்...)

Read More

Share Tweet Pin It +1

11 Comments

In Only ஜல்லிஸ்

ஜோசியம் பார்க்கலையோ ஜோசியம்

வலைப் பதிவர் சந்திப்பிற்கு சென்னைக்கு வந்திருந்தாலும் மேலும் சில அப்பாயின் மென் ட்களை ஏற்பாடு செய்துவிட்டு வந்திருந்தேன். அதில் ஒன்று சந்திப்பு முடிந்ததும் மெரீனா பீச் செல்வது. அங்கே என்னுடைய கல்லூரி நண்பர் ஒரு வரை சந்திப்பதாகப் ப்ளான்.

ஆனால் மெரீனாவில் ஏர் ஷோ நடந்ததால் ஏற்பட்ட நெரிசல் காரணமாக நாங்கள் திட்டமிட்டதை விடவும் லேட்டாகவே மெரீனாவை ரீச் செய்தோம். ஒன்பதரைக்கு டிரெயின், நாங்கள் எட்டரைக்குத்தான் மெரீனாவையே தொட்டோம். அங்கே நடந்த கூத்துதான் இந்தப் பதிவு, ரொம்ப நாளா கிளி ஜோசியம் பார்க்கணும்னு ஒரு ஆசை.

அப்படி ஒருவரிடம் கிளி ஜோசியம் பார்த்ததை நாங்கள் வீடியோ எடுத்தோம். கிளி கூண்டிலிருந்து வந்து சீட்டை எடுத்த்தை நண்பர் வீடியோ எடுக்க மறந்துவிட்டார்.



பிறகு அங்கிருந்த ஒரு மீன் கடையில், இரண்டு வருவல் மீன் சாப்பிட்டு விட்டு வந்து பார்த்தால் ஆட்டோ கிடைக்கலை. பின்னர் தட்டுத்தடுமாறி அங்கப்பிடிச்சி இங்கப் பிடிச்சி வந்து சேர்ந்தேன் பெங்களூருக்கு.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In உலகக்கோப்பை கிரிக்கெட்

Go Aussie Go!!! - 7

இந்த உலகக்கோப்பையின் ஆரம்பத்தில் இருந்து நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாட்ச். ஸ்ரீலங்காவைப் போல் ஏப்பை சாப்பையாக ஆடமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இருவரும் முழு பலத்துடன் ஆடினால் நல்ல மாட்சாகயிருக்கும்.

நியுஸிலாந்திற்கு எதிரான கடைசி சீரியஸ் போட்டியிலும் கூட, ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் திறமையாகத்தான் இருந்தது, கேப்டன்ஸியும், சில வீரர்களும், பவுலிங் அட்டாக்கும் சரியாகயில்லை. ஆனால் இப்பொழுது எல்லாம் பிரகாசமாகயிருக்கும் நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு மிகச் சாதகமான ஒரு மாட்சாகத்தான் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் சாதாரணமாகவே இவர்கள் இருவரும் விளையாடினால், இந்தியா, பாகிஸ்தான் மாட்ச் பார்ப்பது போல் இருக்கும். தற்போதைய நிலையில் பைனல்ஸ் வருவார்கள் என்று நான் நினைக்கும் அணிகளாகயிருப்பதால். பைனல்ஸ்க்கு முன் மற்ற போட்டியாளர்களின் மனவலிமையைக் குறைக்க நிச்சயம் நினைப்பார்கள் இருவருமே.

ரொம்ப ஆப்டிமிஸ்டிக்கா யோசிச்சாலும் நியூஸிலாந்து ஜெயிக்கயிருக்கும் 5% சான்ஸஸும் அவர்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்தால் மட்டுமே. அதற்குமே கடினமாகப் போராடவேண்டும். பார்க்கலாம்.

இவர்கள் இருவரும் நன்றாக விளையாடவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In சிறுகதை

மரணம்

"தற்கொலை பண்ணிக்கிறதைப் பத்தி என்ன நினைக்கிற சொரூபா?"

அவனை வம்பிற்கிழுப்பதை மட்டுமே வாடிக்கையாய்க் கொண்டிருந்த எனக்கு, நாங்கள் குடியிருந்த வீட்டின் எதிர் பக்கதில் இருந்து பங்களாவில் நேற்றிரவு நடந்த தற்கொலை இன்னொரு சந்தர்ப்பத்தை வழங்கியது. எங்கள் வீட்டிற்கு குடிவந்த சில நாட்களிலேயே ஒருவாறு எதிர் வீட்டுப் பெண்ணின் யோக்கியத்தை தெரிந்து கொண்டவன் போல் இவனும் என் மாமாவும் அவளுடைய விலை சம்மந்தமாய் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறேன். நான் இதுபோன்ற விஷயங்களில் பட்டும் படாமல் நடந்து கொண்டிருந்தேன் அதற்கு சொரூபனின் தங்கை சந்திரா ஒரு காரணம் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

நாங்கள் பெங்களூர் சிட்டியிலிருந்து, பன்னார்கெட்டா நேஷனல் மியூஸியம் செல்லும் பாதையில் பன்னிரெண்டு கிலோமீட்டர் தள்ளி குடியிருந்ததற்கு ஒரே காரணம் அந்த இடத்தின் அமைதியான சூழ்நிலைதான். சிலநாட்கள் வீட்டு ஓனர் மகள் பிரசவத்திற்கு சென்றிருந்த சமயங்களில் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டு யூக்களிப்டஸ் மரங்கள் ஒன்றுடன் ஒன்று உரசுவதால் வரும் சப்தத்தை கூட கேட்டிருக்கிறேன். பக்கத்தில் ஒரே ஒரு டெண்டல் காலேஜ், அதைச் சார்ந்த மாணவர் குடியிருப்பு அவ்வளவுதான் சுத்துவட்டார இரண்டு கிலோமீட்டர்களுக்கு. ராத்திரி பகலாய் ஷிப்ட் போட்டுக்கொண்டு அங்கிருந்த மலைகள் உடைக்கப்பட்டுக் கொண்டிருந்த சப்தம் மட்டும் இரவு வேளைகளில் கேட்கும். அந்த குடியிருப்பில் மொத்தம் இருபது இருபத்தைந்து வீடுகள் தான் இருக்கும், அனைத்தும் தனிவீடுகள் பெரும்பாலும் சாப்ட்வேர் இன்ஜினேயர்களுடையது. அதற்கென ஒரு செக்யூரிட்டி சர்வீஸ், குடியிருப்பைச் சுற்றிலும் இரவில் மின்வலை பாதுகாப்பும் உண்டு. ஒன்றிரண்டு முறை தொட்டுப் பார்த்திருக்கிறேன் லேசாய் உதறும் அவ்வளவுதான், ஆனால் வலைக்கு அருகில் சென்றால் உய்யென்று சப்தம் மட்டும் பெரிதாய் வரும்.

காலையிலிருந்தே அன்பு குரைத்துக் கொண்டிருந்தான். பாட்டிதான் சொல்லும் நாய்களுக்கு மரணத்தின் சாயல் தெரியுமென்று, எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை, ரொம்ப நாளா பக்கத்து வீட்டில் இருக்கும் பொட்டை நாயை ஜொள்ளுவிட்டுக்கொண்டிருந்தான் அன்பு. நான் நினைத்தேன் அந்த நாய்க்குத்தான் ஏதோ சிக்னல் கொடுத்திருப்பான் என்று.

எதிர்வீட்டுப் பெண்ணின் தற்கொலைக்கான காரணம் நிச்சயமாய் சொரூபனுக்குத் தெரிந்திருக்க வேண்டும் அதைத் தெரிந்து கொள்ளும் நோக்கில் நான் கேட்ட அந்த கேள்விக்கு சொரூபன் அதிக நேரம் யோசித்ததற்கான காரணம் முதலில் புரியவில்லை. சும்மாவே லொடலொட என பேசும் சொரூபனுக்கு இந்த விஷயம் அவுல் கிடைத்ததைப் போன்றதொன்று என நினைத்தேன் நான். ஆனால் அவன் மேலும் மேலும் மௌனம் சாதிக்க நான் கேட்டதில் ஏதேனும் தவறிருந்ததா என்று யோசித்த பொழுதுதான் சில விஷயங்கள் உறைத்தது,

"சொரூபா நான் அந்த எதுத்த வீட்டுப் பொண்ணைப் பத்தித்தான் கேட்டேன்"

எங்களுக்குள் தலைமுறை இடைவெளி அதிகம் இருந்திருக்கிறது. நான் வெகுசாதாரணமாய்ப் பார்க்கும் கடவுள் உறவுமுறை போன்ற விஷயங்களை மிகத்தீவிரமாய்ப்f பார்ப்பான். அதேபோல் நான் மிக முக்கியமானது என நினைக்கும் சிலவிஷயங்களை அலட்சியப்படுத்திவிடுவான் சற்றும் யோசிக்காமல். ஒருவிஷயத்தைப் பற்றிய அவனுடைய பார்வைகளும் என்னுடைய பார்வைகளும் எதிரெதிரானவையாகவே பெரும்பாலும் இருந்து வந்திருக்கிறது.

"பவானி தெரியுமா, அந்தப் பொண்ணு அவங்க அப்பன் ஆத்தா ஊட்டில் இல்லேன்னு என்ன ஆட்டம் போட்டா, நேத்தி நைட்டு சொல்லிக்காம கொல்லிக்காம திடுதிப்புன்னு வந்து நின்னு, அந்தப் பொண்ணையும் பையனும் கையும் களவுமா பிடிச்சிட்டாராம். அவன் தப்பிச்சு ஓடிட இவளைப் போட்டு அடியடின்னு அடிச்சு மேய்ஞ்சிட்டாராம்.

அவளாதான் தூக்குப் போட்டுக்கிட்டான்னு போலீஸ்கிட்ட சொன்னாங்களாம், வாசு கடையில நம்ம பெருமாளு இல்லை அவன் சொல்றான் அப்பன் காரன்தான் மாட்டிவிட்டுட்டான்னு."

பெரிய தங்கமலை ரகசியத்தை கண்டுபிடித்துவிட்ட சந்தோஷம் இருந்தது மாமாவின் முகத்தில், பக்கத்தில் உட்கார்ந்திருந்த சொரூபனின் முகத்தில் ஈயாடவில்லை, நான் இரவு அந்தப்பெண்ணின் வீட்டில் பிடிபட்டது சொரூபனோ என்று நினைக்கும் விதத்தில் பேயறைந்ததைப் போலவே காணப்பட்டான்.
மாமாவிற்கு அந்தச் சந்தேகம் இன்னொரு நபரின் மேலிருந்தது, அதனைத் தெரிந்து கொள்ளாவிட்டால் மண்டை வெடித்துவிடும் அவனுக்கு, அன்பரசுவை அவிழ்த்துக் கொண்டு அவன் சந்தேகப்படும் அந்தக் காலனியின் இன்னொரு பையனின் வீட்டிற்கு வாக்கிங் அழைத்துச் சென்றான். நான் அப்பாடா ஒழிந்தான் என நினைத்தேன்.

தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்பட்ட அந்த பெண்ணை கவனித்திருக்கிறேன். குள்ளமாய் பெரும்பாலும் சிக்ஸ் பாக்கெட்ஸ் போட்டுக்கொண்டு டைட் டீஷர்ட் போட்டுக்கொண்டிருப்பாள். மாமா சொன்ன அந்தப் பையனோடு வைத்து இரண்டு மூன்று முறை மடிவாலாவில் பார்த்திருக்கிறேன். குடியிருப்பில் திருப்பிக்கொண்டு போகும் அந்தப் பெண் வெளியில் பார்க்கும் பொழுது மட்டும் சிரிப்பது ஆச்சர்யமாக இருக்கும்.
மாமா அருகில் இல்லாத அந்த சமயத்திலேயே சொரூபனிடம் சில விஷயங்களை நேரடியாகச் சொல்லிவிட்டால் நல்லதென நினைத்து,

"சொரூபா நான் அந்த பொண்ணை மைண்ட் பண்ணி மட்டுந்தான் கேட்டேன், நீ தப்பா எடுத்துக்கிட்டேன்னு நினைக்கிறேன்."

அவன் ராஜீவ் காந்தியைப் பற்றியோ, இல்லை விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைகளைப் பற்றியோ நான் பேசுவதாய் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் என்று தெரியும். என்fனுடைய இரண்டாண்டு அமேரிக்க வாசம், தனிநபர் உரிமைகளைப் பற்றிய என்னுடைய எண்ணங்களை மாற்றியிருந்ததும், மூளைச்சலவை செய்து, தற்கொலைப் படையினை உருவாக்கும் விஷயத்தைப் பற்றி நிறைய நேரம் நாங்கள் விவாதித்திருக்கிறோம் என்பதால் சர்வசாதாரணமாய் நான் அவனை அங்கே சுட்டுவதாய் நினைத்திருக்க முடியும்.

"அண்ணை உங்களுக்குத் திலீபனைத் தெரியுமோ?"

அந்த முகம் கருங்கல்லை ஒத்திருந்தது, எங்கேயோ பார்த்துக் கொண்டு அவன் கேட்ட இந்தக் கேள்வி முதலில் ஒரு விதமான சந்தோஷத்தை ஏற்படுத்தியது, அப்பாடா நம்மை இவன் தவறாய் நினைக்கவில்லையென நினைத்தவனாய்,

"பேரெங்கேயோ கேட்ட மாதிரிதான் இருக்கு ஆனாத் தெரியலை."

அதைக் கேட்ட அவன் முகத்தில் நக்கலாய் ஒரு சிரிப்பு படர்ந்தது, அதைப் பார்த்த எனக்குச் சிறிது கோபமாய் வந்தது, ஆமாம் விடுதலைப்புலியில் எவனாவது ஒருவன் டாங்கில் பாய்ந்து உயிரை விட்டிருப்பான், அப்படியே இன்னும் பத்து இருபது பேரை பழிவாங்கியிருப்பான். அவனையெல்லாம் நான் தெரிந்திருக்கணும் என்று நினைப்பது முட்டாள்த்தனம். சொரூபனுக்கு வேண்டுமானால் தமிழ்த்தேசியத்தை உருவாக்க உயிர் துறந்தவன் தியாகியாகி இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை யாரோ சொன்னது போல், இராஜராஜனின், இராஜேந்திரனின் வெளிநாட்டு வெற்றிகளை பாராட்டினால், பின்னர் ஆங்கிலேயர்களின் நம்நாட்டின் மீதான வெற்றியை என்ன வென்று சொல்லமுடியும் என்று நினைப்பவனுக்கு அவன் எனக்குத் தெரியாததை கேலியாக நினைத்தது கோபமாக வந்தது.

"அண்ணை யாராவது தற்கொலை செய்து கொள்வதை கண்ணால் பார்த்திருக்கீங்களே?"

இதைக் கேட்டதும் எனக்கு இன்னமும் கோபம் வந்தது, யாராவது தற்கொலை செய்வதை பார்த்துக்கொண்டு சும்மாயிருப்பார்களா, தங்களால் முடியாவிட்டாலும் போலீஸைக் கொண்டாவது ஒரு மரணத்தை தடுக்க நினைக்க மாட்டார்கள். என்ன கேள்வியிது என நினைத்தேன்.

"நான் பார்த்திருக்கிறேன் அண்ணை, நான் பார்த்திருக்கிறேன், பன்னிரண்டு நாள் சொட்டுத் தண்ணீர் குடிக்காமல் திலீபன் வீரச்சாவடைந்ததைக் கண்ணால் பார்த்திருக்கேன்.

1987 அப்ப எனக்கு பத்து வயசிருக்கும், பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தவன். தமிழ் மக்களினதும், தமிழர் தாயக்தினதும் உரிமைகளைப் பேணும் நோக்கமாக, இந்திய மக்களினதும் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து லெப் கேணல் தீலிபன் நல்லூர்க் கந்தசாமிக் கோயிலின் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து பன்னிரெண்டு நாள் அன்ன ஆகாரமில்லாமல், செத்துப் போனதைப் பார்த்திருக்கிறேன்."

இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே சொரூபனின் கண்கள் கண்ணீர்க் குளமாவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ரொம்பவும் தைரியமானவன், எதற்கும் கவலைப்படாமல் விளக்கில்லாத இராத்திரி பெங்களூர்ச்சாலைகளில் தனியாளாக சைக்கிளில் அவன் வருவதைப் பார்த்திருக்கிறேன். அம்மாதான் அடிக்கடி சொல்லும், சின்னவயதிலேயே தாய் தந்தையை இழந்து வேறொரு நாட்டில் அநாதைகளாய் வாழ்ந்து வரும் அவர்களுக்கு அதற்கு மேலான சோகம் வருத்தம் வருவதற்குண்டான வாய்ப்புக்களே இல்லையென்று.

அவன் சொன்னான், பன்னிரெண்டு நாட்களும் கண்ணீருடன் மண்டபத்திற்கு சற்று தொலைவிலேயே நின்று கொண்டிருந்ததாகவும், முதல் நாளே பிரபாகரன் வந்து பார்த்துவிட்டுபோனதாகவும். முதல் நாள் கம்பீரமாய் இருந்த திலீபன் ஒவ்வொருநாளாக நொடிந்து கொண்டே வந்து பின்னர் சுயநினைவை இழந்த நிலையிலும் ஏற்கனவே மற்றவர்களிடம் கேட்டு வாங்கியிருந்த சத்தியத்தால் அவனுக்கு மருத்துவ உதவி வழங்க முடியாத இக்கட்டான சூழ்நிலையை தனக்குத்தானே உருவாக்கிக் கொண்டதாகவும் கூறினான். கடைசியாய் வாயைத்திறந்து பேசவே முடியாத சமயத்திலும் திலீபன் நிகழ்த்திய வீர உரையை நினைவுபடுத்தியவன், சிறிது நேரம் எதுவுமே பேசாமல் தரையையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏதோவொறு தற்கொலையைப் பற்றி பேசப்போன எனக்கு அவன் திலீபனைப்பற்றியும் உண்ணாவிரம் இருந்த அந்த பன்னிரெண்டு நாட்களைப் பற்றியும் விவரித்தது கொஞ்சம் ஆச்சர்யம் கலந்த உண்மையாய் இருந்தது. பத்து வயதில் நான் பட்டம் விட்ட, எனக்கும் அக்காவிற்கும் காதில் காதுகுத்திய கோவில் போன்ற இனிய நினைவுகளே இருக்கிறது. ஆனால் சொரூபன் சொன்ன விஷயம் நான் வாழ்க்கையில் எதையோ ஒன்றை இழந்துவிட்டதைப் போன்ற உணர்வை வெளிப்படுத்தியது.

கடைசிவரை திலீபனின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென்றும் அதற்கும் மேலாக, "புலிகள் தந்திரமாக மக்கள் மனதை மாற்றுவதற்காக உண்ணாவிரம் என்ற பெயரில் தண்ணியைக் குடிச்சுக் கொண்டுதான் இருப்பார்கள். ஆர் இதைக் காணப்போகினம்? கடைசியில் 5 தீர்மானங்களும் நிறைவேறுமட்டும் செய்து ஆளைச் சாகவிடமாட்டினம். இதுதான் சாகும்வரை நீர் அருந்தாமல் உண்ணாவிரதம் இருப்பதன் உண்மை" என்பதைப் போன்ற பொய்யான விஷயங்கள் கூட பரப்பப்பட்டது எனச் சொன்ன பொழுது.

நான் அவன் இந்த சம்பவத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, நான் நினைத்த திலீபனைச் சாகவிட்டிருக்கக்கூடாது, ஏதாவது செய்து காப்பாற்றியிருக்க வேண்டும் என நினைத்தது எவ்வளவு தவறென்றுபட்டது. அதே சமயம் அன்று திலீபன் உண்ணாவிரதத்தில் வீரச்சாவடைந்ததை நான் சரியென்று ஒப்புக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப் பட்டதை நினைத்தேன்.

எனக்கு ஆரம்பத்தில் இருந்தே காந்தியைப் பிடிக்காது, சுதந்திர இந்தியாவின் முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தவர் அந்த ஆள்தான் என்று படித்த ஞாபகம். ஏதோவொரு போராட்டத்திற்காக இந்தியா சுதந்திரம் ஆன அன்றே கொடிபிடித்ததாய் படித்திருக்கிறேன். அம்மாவும் அக்காவும் தான் இல்லையென்று வாதாடுவார்கள். அவர்கள் சத்தியசோதனைப் புத்திரிகள், சுதந்திரம் கிடைத்ததும் காங்கிரஸைக் கலைத்துவிடச் சொல்லி காந்தி சொன்னதாகவும் அதை நேரு, வல்லபாய் பட்டேல் மறுத்துவிட்டதாகவும் சொல்லி, வாதாடுவார்கள்.

எனக்கு உண்ணாவிரத்திலும் நம்பிக்கையில்லை, ஆயுதப்போராட்டத்திலும் நம்பிக்கையில்லை, இவற்றிற்கு இடையில் நடுநிலையை தேடிக்கொண்டிருக்கிறேன். அவற்றிற்கு இடையில் இல்லாமல் போய்விட்ட நடுநிலைமையைக் கூட சில தடவைகளில் நான் தவறிவிடுவதை உணர்ந்திருக்கிறேன். செகுவாரா விஷயத்தில் ஆயுதப் போராட்டத்தை என் ஒப்புக்கொள்வதை உணர்ந்த எனக்கு திலீபன் விஷயத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஒப்புக்கொள்ள ஆரம்பித்திருப்பது ஒருவகையில் சந்தோஷம்தான்.

மரணம் என்பது எப்பொழுதுமே மனிதனின் கைக்கு அகப்படாத ஒன்றாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன். எல்லா சமயங்களிலும் வருத்தத்தையும் சோகத்தையுமே உண்டாக்குவதில்லை. சிலசமயம் சந்தோஷத்தையும் கூட வரவழைப்பதுண்டு. ஒருவருக்கு சந்தோஷமாய்ப் படும் சாவு பிறருக்கு வருத்தம் அழிப்பதும் உண்டு. அதனை நினைத்து பயப்படுபவர் எத்தனை பேர். வந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே இறந்து போகிறவர்கள் எத்தனை பேர். மரணம் தான் தங்கள் கொண்டிருக்கும் கொள்கைக்கு பரிசு என்றால் அதை சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொள்ளும், அதையும் வென்று இறுமாப்புடன் அனேக நெஞ்சங்களில் உயிர்வாழும் திலீபன், போன்ற சில நல்ல உள்ளங்கள் தற்கொலை, மரணம் என்பவைகளுக்கு வேறு சில அர்த்தங்களை உருவாக்கிவிடுகிறார்கள்.

தற்கொலை என அந்த நிகழ்ச்சியைச் சொல்லவது பாவம் எனத்தோன்றியது எனக்கு, வரவர நானும் சொரூபனைப் போல் ஒரு நிகழ்ச்சியை உணர்வுப்பூர்வமாகப் பார்க்கத் தொடங்கிவிட்டேனோ என நினைத்தேன். தூரத்தில் அன்பரசுவுடன் திரும்பிவரும் மாமாவை, அவன் கொண்டு வரும் தற்கொலைக்கான காரணங்களை முடிந்தவரை அன்றைக்காவதுச் சந்திக்காமல் இருக்க நான் வெளியில் கிளம்பினேன். என் மனதைப்போலவே வானமும் வெறிச்சோடிக்கிடந்தது.



-------------------------------------

ப்ளாக் எழுதாமல் கை அரித்தெல்லாம் நான் இதையெழுதவில்லையென்பதை மட்டும் ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் இளவஞ்சி வழங்கப்போகும் தலைப்பென்பதாலேயே கூட யோசித்தேன் கொஞ்சம் விட்டு விரதத்தை ஆரம்பிக்கலாமாயென்று. பின்னர் என்ன நினைவோ விட்டுவிட்டேன்.

மீண்டும் தலைப்பை ஒட்டியே ஒரே பாணியில் சென்று கொண்டிருந்த கதைகளை படித்திருந்தேன், வளர்சிதை மாற்றத்திற்கு கூட ஒரு சோகக்கதையை எழுதி பின்னர் வெளிப்படுத்தும் மனநிலையில்லாமல் விட்டுவிட்டேன்.

எனக்காகத்தான் கொள்கைகள் கொள்கைகளுக்காக நான் கிடையாது என்பதை இன்னுமொறு முறை அழுத்தந்திருத்தமாக சொல்லிவிட்டு எனக்கான கொள்கைகளைக் கூட விடுவதில்லை என்பதில் உறுதியாய் இருப்பதால் இந்தக் கதை போட்டிக்கு இல்லை.

ஏற்கனவே எழுப்பப்பட்ட சொரூபன், சந்திரா, நான் மாமா போன்ற கதாப்பாத்திரங்களின் உதவியால் இன்னுமொறு தமிழீழக் கதை சொல்ல முயன்றிருக்கிறேன். திலீபனுக்காக என்னுடைய விரதத்தை கலைப்பதில் கூட பெருமிதமே. இதை ஒரு அரிய வாய்ப்பாக எடுத்துக்கொண்டு தமிழீழ மக்களை இந்த தலைப்பில் கதையெழுதுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

அஹிம்சாவாதத்தில் நம்பிக்கை வைத்திருந்த அந்த மாமனிதனுக்கும் அவனுடைய தலைவனுக்கும் சமர்ப்பணம்.

----------------------------------------------

மறுபதிப்பு

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

Blackboard

இந்தப் படம் எனக்குக் கிடைத்தது ஒரு தற்செயலான நிகழ்வு. நான் சினிமா பாரடைசியோவில் Baran படத்தையும், Turtles Can Fly படத்தையும் கேட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கே வேலை செய்யும் நபர் Blackboard பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டார். நான் இல்லை என்றதும் எடுத்துக்கொடுத்தவர். எக்ஸ்ட்ராஸில் அந்தப் படம் எடுத்ததைப் பற்றி சமீரா கென்னஸ் படவிழாவில் சொல்வார், நிச்சயமாய்ப் பாருங்கள் நன்றாகயிருக்கும் என்றார்.

ஒரு சில படங்கள் தான் இந்தப் படத்தை எப்படி எடுத்திருப்பார்கள் என்று ஆச்சர்யப்படவைக்கும், அந்த வரிசையில் நிச்சயமாய் சேர்க்கக்கூடிய ஒரு படம் ப்ளாக்போர்ட். படம் பார்த்துக் கொண்டிருந்த பொழுது எனக்கு இந்த எண்ணம் எழத் தொடங்கியது, அதாவது ஒரு டாக்குமென்ட்டரியைப் பார்ப்பதைப் போன்ற ஒரு உணர்வு வரும். இது முன்னர் வந்தது Battle of Algiris பார்த்த பொழுது அந்தப் படம் பார்க்கும் பொழுது ஒரு படம் பார்க்கும் உணர்வே வராது. அதைப் போலவே இந்தப் படமும்.



கடைசியில் நண்பர் சொன்ன கென்னஸ் படவிழா பேட்டியைப் பார்த்த பொழுதுதான் தெரிந்தது எவ்வளவு கஷ்டப்பட்டு இந்தப் படத்தை சமீரா இயக்கியிருந்தார் என்பது. இந்தப் படத்தை இயக்கும் பொழுது அவருக்கு வெறும் இருபது வயது தான், பெண்களுக்கு அவ்வளவாக சுதந்திரம் இல்லாத ஈரான் நாட்டுப் பெண்ணாகயிருந்தாலும், அப்பாவும் அம்மாவும் இயக்குநர்களாக இருந்ததால் இது சாத்தியமாகியிருக்கிறது. ஆனால் அவருடைய திறமை மறுப்பதற்கில்லை நிச்சயமாய்.

அகதிகளின் வாழ்க்கை, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை, அதன் காரணமாக ஏற்படும் கல்வியறிவின்மை, கெமிக்கல் ஆயுதங்களை பயன்படுத்துவதால் வரும் பிரச்சனைகள் என்று தீவிரமான பிரச்சனைகளைப் பற்றிய படம், என்றாலும் அரசியல் கிடையாது ஈரான் ஏன் அப்படி செய்தது, ஈராக் ஏன் அப்படி செய்தது என்ற தனிநபர்களின் விளக்கங்கள் கிடையாது. எல்லா விஷயங்களும் Subtle ஆக ஒரு சாதாரண கதைக்குள் மறைத்து வைக்கப் பட்டு சொல்லப் படுகிறது.

---------------------------------------------

படம் இரண்டு ஆசிரியர்கள் ஈரானின் எல்லைப் பகுதியில் உள்ள குர்தீஸ்தான் மலைப் பகுதிகளில் பாடம் சொல்லித் தந்து பணம் பெறுவதற்காக, பிள்ளைகளைத் தேடி கரும்பலைகையுடன் பயணமாவதில் தொடங்குகிறது. பள்ளிக்கூடங்களை நோக்கி மாணவர்கள் செல்லும் வழக்கத்தையே பெரும்பாலும் பார்த்த நமக்கு(எனக்கு) ஆசிரியர்கள் பிள்ளைகளைத் தேடி பயணம் ஆவதில் தொடங்குகிறது படத்தின் ஆச்சர்யங்கள்.

இரண்டு ஆசிரியர்கள் மலைமுகடுகளின் இரண்டு பக்கங்களில் பயணப்பட, கதையும் இரண்டு தனித்தனி கதைகளை தன்னகத்தே கொண்டு பயணப்படத் தொடங்குகிறது. இரண்டு ஆசிரியர்களுக்குமே பாடம் சொல்லிக்கொடுத்து பணம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம். அவர்கள் பயணப்படும் அந்த மலைப்பாதை ஈரான் ஈராக் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இருப்பது.

இதில் ஒரு ஆசிரியருக்கு ஈரானிலிருக்கும் ஈராக்கிய அகதிகள், முதியவர்கள், தங்களது மரணம் ஈராக்கில் தான் நடக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் கிடைக்கிறார்கள். அதாவது அந்த முதியவர்கள் ஈரானிலிருந்து கள்ளத்தனமாய் ஈராக்கிற்கு செல்ல முயல்கிறார்கள். இவர்களைப் பின்பற்றி செல்லும் ஒரு ஆசிரியர். இன்னொருவருக்கு அதே போல் ஈரானிலிருந்து ஈராக்கிற்கு பொருட்களைக் கடத்திச் செல்லும் சிறுவர்கள் கிடைக்கிறார்கள்.

இப்படியாக இருவேறு ஆசிரியர்களாக, இருவேறு குழுக்களாக கிளம்பும் ஒட்டுமொத்தமானவர்களின் விருப்பம் ஈரானிலிருந்து ஈராக்கிற்கு செல்வது. பனிப்பொழிவு நடக்கும் சமயம் அவ்வப்போது விமானங்களில் ரோந்தும் நடக்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்பது மாதிரியான மலைத் தொடர்ச்சி. இப்படியே போகிறது படம். அந்தப் பகுதிகளில் வாழும் சிறுவர்களுக்கும் சரி, வயதானவர்களுக்கும் சரி கல்வி என்பது ஒரு விஷயமாகவேயில்லை என்பதை இயக்குநர் மிக அழகாக படம் பிடிக்கிறார்.

இரண்டு ஆசிரியர்களும் பாடம் சொல்லித் தருகிறேன் நீங்கள் காசு கூட கொடுக்க வேண்டாம் சாப்பிட ஏதாவது கொடுத்தால் போதும் என்ற நிலைக்கு வந்தாலும் அவர்கள் சாப்பிடவே ஒன்றும் இல்லாத நிலையில், ஆசிரியர்களுக்கு சாப்பிடக் கொடுத்து படிக்கவேண்டிய நிலை இல்லை.

----------------------------------

இடையில் ஒரு ஆசிரியர் முதியவர்களுடன் பயணமாகும் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார் அப்படியே விவாகரத்தும். அந்தப் பெண் திருமணம் செய்து கொள்ளும் காட்சியும் விவாகரத்து செய்து கொள்ளும் காட்சியும் பார்க்கும் நமக்கு வேடிக்கையாய் இருக்கிறது. ஆனால் அந்த நபர்களின் வாழ்க்கை அப்படிப்பட்டதுதான் என நினைக்கும் பொழுது வேதனையாக இருக்கிறது.

பொருட்களைக் கடத்தும் சிறுவர்கள் எல்லையைக் கடக்கும் பொழுது சுட்டுக்கொல்லப்படுகிறார்கள், முதியவர்கள் எல்லையைக் கடந்து ஈராக்கிற்குள் செல்கிறார்கள். அப்பொழுது அந்த நபர்களால் தங்களுடைய எல்லை இதுதான் என்று தெரிந்துகொள்ள முடியாத அளவிற்கு குண்டுவீச்சால் எல்லை சிதிலமடைந்திருக்கிறது. முதியவர்கள் எல்லையைத் தொட்டதும் விழுந்து வணங்குவது போன்றவை அவர்கள் சொந்த நாட்டின் மீது எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்று காட்டுகிறது. அவர்கள் அகதியாக வந்திறங்கிய நாட்டில் எவ்வளவுதான் வசதிவாய்ப்புக்கள் இருந்தாலும் சொந்தநாட்டிற்கு திரும்புவதையே விரும்புகிறார்கள் என்பதை படம் அழகாக படம் பிடிக்கிறது.

எல்லைப் படையினர் துப்பாக்கியால் சுடும் பொழுது, இவர்கள் கெமிக்கல் குண்டு வீசுகிறார்கள் என்று பயந்து நடுங்குவது, அந்த பிராந்தியமே கெமிக்கல் குண்டு வீச்சால் நேரடியாகப் பாதிக்கப்படாவிட்டாலும் மனதளவில் பாதிக்கப்பட்டதைக் காட்டுகிறது.






-------------------------------------

உண்மையில் இந்தப் படம் முடிவடையும் பொழுது ஒரு பக்கம் சந்தோஷத்தையும் ஒரு பக்கம் துக்கத்தையும் ஏற்படுத்துகிறது, இதைத்தான் இயக்குநர் சொல்ல விரும்பியிருக்க வேண்டும். 'டைஸ்' போல ஒரு ரேண்டமாக எந்தப் பக்கம் சந்தோசம் வரும், இல்லை துக்கம் வரும், எனத் தெரியாமல் ஆனால் அதேசமயத்தில் அவர்களுடைய வாழ்க்கையை வாழ்ந்தாகவேண்டிய கட்டாயத்தில் இந்த மக்கள் இருப்பதை சொல்லியிருக்கிறார்.

நடித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் ப்ரொபஷ்னல் நடிகர்கள் கிடையாது, அவர்களிடம் வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர். நீங்களும் படம் பார்த்தீர்களென்றால் எக்ஸ்ட்ராஸில் உள்ள படம் எடுத்த விதத்தை பார்க்கவும்.

நிச்சயமாய்ப் பார்க்கப்படவேண்டிய ஒரு அருமையான படம் இந்த Blackboard.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

Baran

டிசெவின் Baran பற்றிய பதிவைப் படித்ததுமே சொல்லிவைத்திருந்தேன் இந்தப் படத்திற்காக; எடுத்துச் சென்றிருந்த புண்ணியவான் திருப்பிக் கொடுத்த நாளில் சென்றிருந்ததால் சொல்லப்போனால் சீக்கிரமாகவே கிடைத்தது.

கண்களை உறுத்தாத ஒரு காதல் கதை சொல்லப்பட்டிருக்கிறது,Marooned in Iraqக்கைப் போலவே ஒரு பிரிவினரின் வாழ்வாதாரப் பிரச்சனையைச் சொல்ல ஒரு காதல் தேவைப்பட்டிருக்கிறது. ஆப்கான் அகதிகள்(பொதுவாகவே அகதிகள்) வாழ்க்கை, ஈரானில்(பொதுவாக உலகில்) எப்படியிருக்கிறது என்பதைச் சொல்கிறது படம். பெரும்பாலும் ஏதோவொரு காரணத்திற்காக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு அகதியாய் செல்பவர்களின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது.

பல சமயங்களில் நாம் எவ்வளவு சொகுசான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பொட்டில் அறைவதைப் போன்ற கேள்வி இது போன்ற படங்களைப் பார்க்கும் பொழுது இயல்பாய் எழுகிறது.

அடுக்குமாடிக் கட்டிடம் கட்டும் தொழிலாளர்களுக்கு தேநீர் போட்டுக் கொடுக்கும்; அவர்களுக்காக சிறுசிறு சமையல் சார்ந்த வேலைகள் செய்யும் லத்தீப். குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு வருகிறார்கள் என்பதற்காக அரசாங்கம் அனுமதி மறுத்திருந்தும், ஆப்கானியர்களை வேலைக்கு வைத்திருக்கும் மெமர். தந்தை வேலைசெய்யும் பொழுது கீழே விழுந்ததால் வேறுவழியில்லாமல் ஆண்வேடமிட்டு கட்டிட வேலை செய்யவரும்வரும் பரான்(இவர் ஆண்வேடமிட்டிருக்கும் பொழுது இவர் பெயர் ரஹ்மத்) என இவர்கள் மூவரை மையமாக வைத்தே இந்தப் படம் சுழல்கிறது.



லத்தீப் கொஞ்சம் சாமர்த்தியக்காரனாக, காசு சேர்ப்பதில் குறியானவனாக இருக்கிறான். அந்த கட்டிடம் கட்டும் இடத்திலேயே மிகவும் சுலபமான வேலையான தேநீர் போட்டுத்தந்து மதிய உணவு சமைத்துத் தரும் வேலை செய்து சொகுசாக இருக்கும் லத்தீப்பிற்கு, புதிதாக வேலைக்குச் சேர்ந்த ரஹ்மத்திற்கு கட்டிட வேலை செய்யும் அளவிற்கு வளு இல்லாததால் லத்தீப் செய்து வரும் சமையற்கட்டு வேலை கொடுக்கப்படுவது முற்றிலும் பிடிக்கவில்லை. (யாருப்பா அது ஆணியவாதி வந்துட்டான்னு சொல்றது - வளு குறைந்தவர் சமையல் செய்யவேண்டும் என்று நான் சொல்லவில்லை; அதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.) அதுவரை டிரனேஜ் வாட்டர் போல் டீ சாப்பிட்டுவந்த கட்டிடத் தொழிலாளர்கள், உண்மையில் பெண்ணான ரஹ்மத் போடும் பிரமாதமான தேநீராலும், மதிய உணவாலும் கவரப்படுகிறார்கள்.

ஏற்கனவே தன்னுடைய சுலபமான வேலையைப் பறித்துவிட்டான் என்று கோபத்தில் இருந்த லத்தீப் மற்ற தொழிலாளிகளின் பாராட்டிற்குப் பிறகு இன்னமும் கோபப்படுகிறான். இதன் காரணமாக ரஹ்மத்தை சின்ன சின்ன வழிகளில் வம்பிழுப்பது என போகும் படத்தில், பின்னர் ரஹ்மத் ஒரு பெண் என லத்தீப் தெரிந்துகொண்ட பிறகு வரும் பகுதிகள் காதல் கவிதைகள். ஒவ்வொரு முறையும் அவளுக்காக பரிந்து கொண்டு வருவது, பரான்-ஐ பார்ப்பதற்கு முன் புறாக்களை கல்லால் அடிப்பதையும் பின்னர், பரான் புறாக்களுக்கு மீந்து போன அப்பளங்களைப் போடுவதைப் பார்த்தபின் அந்தப் பெண் வராத நாள் ஒன்றில் இவர் போடுவதும் என சிறுவயது மக்களின் மனதை நன்றாகப் படம்பிடித்திருக்கிறார் இயக்குநர்.

இடையில் நடக்கும் ஒரு பிரச்சனையில், ஆப்கன் அகதிகளை கட்டிட வேலைக்கு வைத்துக்கொள்ளமுடியாத ஒரு சூழ்நிலை வந்துவிடுகிறது. அதனால் பரான் வேலைக்கு வருவது நின்றுவிடுகிறது. இதன் காரணமாக லத்தீப், பரானைத் தேடி அலைகிறார். ஆப்கான் அகதிகள் வாழும் பகுதிகளையெல்லாம் தேடி ஒரு வழியாக கண்டும் பிடிக்கிறார். அவர்கள் குடும்பம் கஷ்டப்படாமல் இருப்பதற்காக நிறைய பண உதவிகளையும் செய்ய முயற்சிக்கிறார் ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான தோல்வியில் சென்று முடிவடைகிறது. கடைசியில் பரான் -ன் குடும்பத்தினர் திரும்பவும் ஆப்கானிஸ்தான் செல்வதற்காக தன்னிடம் இருக்கும் கடைசி விஷயமான வேலை செய்ய அனுமதிப்பதற்கான அடையாள அட்டையை விற்று பணம் கொடுக்கிறார்.



கடைசி காட்சி இன்னமும் மனதிலேயே நிற்கிறது, இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் காதலை கண்களாலேயே பகிர்ந்து கொள்வதை. கவிதைத்துவமான படம்.

--------------------------------

சிம்பாலிக்காக நிறைய விஷயங்களைச் சொல்கிறார் இயக்குநர், கோல்ட் பிஷ் கொண்ட மீன் தொட்டியைக் காண்பிப்பது. பரானின் அர்த்தமான மழையை இருவரும் பிரியும் பொழுது இடையில் கொண்டுவருவது என சொல்லிக் கொண்டே போகலாம்.

படம் அடுக்கு மாடிக் கட்டிடத்திற்குள் உலவும் பொழுதும் சரி, அதை விட்டு வெளியில் வரும் சமயத்திலும் சரி ஒளிப்பதிவு இயல்பாக உள்ளது, கண்களை உறுத்தவில்லை. எதையும் நம்மீது திணிக்கிறார்கள் என்ற எண்ணமே வராதது தான் என்னைப் பொறுத்தவரை இந்தப் படத்தின் வெற்றி என்பேன்.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In உலகக்கோப்பை கிரிக்கெட்

Go Aussie Go!!! - 6

ஒரு நல்ல மாட்சை எதிர்பார்த்து உலகக்கோப்பை வாசகர்கள் காத்திருக்கிறார்கள். உண்மைதான் ரொம்ப நாளாகவே காத்திருக்கிறார்கள் இரு பக்கமும் சம பலமுள்ள அணிகளின் மோதலுக்காக. இந்த ஆஸ்திரேலியா இலங்கை போட்டியில் அது நிறைவேறும் என்று நினைக்கிறேன்.

இரண்டு அணிகளுமே உலகக்கோப்பைக்காக தனிப்பட்ட முறையில் பயிற்சி செய்து வந்துள்ளது தெரிகிறது. பெரும்பாலும் ஆஸ்திரேலியாவிடம் மட்டுமே காணப்படக்கூடிய Never say Die அட்டிட்டியூட் இப்பொழுது இலங்கை அணியிலும் காணக்கிடைக்கிறது. நல்ல வித்தியாசமான பௌலிங் அட்டாக், அப்படியே ஆஸ்திரேலியாவைப் போல, கண்ட்ரோலான ஆனால் வேகம் குறைந்த விக்கெட் டேக்கிங் பௌலர்களாக மெக்ராத் மற்றும் வாஸ், வேகம் மட்டுமே குறியாய் மலிங்கா மற்றும் ஷான் டைட். தனித்திறமையான ஸ்பின் பௌலிங்கிற்கு முரளீதரன் மற்றும் ப்ராட் ஹாக். மற்றும் மிதவேக, ஸ்பின் பௌலர்கள் இரண்டு அணியிலும்.(ப்ராட் ஹாக்கையும் முரளியையும் ஒப்பிட நேர்ந்தது அவர்கள் அணிக்காக விளையாடும் பொசிஷனுக்காக மட்டுமே. ;))

பேட்டிங் வரிசையில் தான் ஆஸ்திரேலியா, இலங்கையை விட தற்சமயம் நல்ல நிலையில் இருக்கிறது. மாத்யூ ஹைடன், கில்கிறிஸ்ட், பாண்டிங், மைக்கேல் கிளர்க், மைக்கேல் ஹஸ்ஸி, அண்ட்ரூ சைமண்ட்ஸ் என பிரகாசமான அணிவரிசை எந்த வலுவான அணியையும் போட்டுத்தாக்கும் வலுவுள்ளது. எனவே ஆஸ்திரேலியாவின் வீக் சைட் ஆன(பேட்டிங்கோடு ஒப்பிடும் பொழுது) பௌலிங்கைத் தான் இலங்கை முழுதாகப் பயன்படுத்த வேண்டும். இந்தப் போட்டியில் வெற்றிபெற. முதல் பதினைந்து ஓவர்களுக்கு இலங்கை விக்கெட் இழக்காமல் இருந்தால் நிச்சயமாக ஒரு நல்ல போட்டியை இலங்கை ஆஸ்திரேலியாவிற்கு தரும்.

ஆனால் வெற்றி பெருவதை எல்லாம் கனவில் தான் நினைத்துப் பார்க்கவேண்டும்.



Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

Marooned In Iraq

எனக்கு அகதிகளைப் பற்றிய அறிமுகம், போர் பற்றி எரியும் நாடுகளின் எல்லைகளைப் பற்றிய பிரகாசமான அறிமுகம் கிடையாது. அதாவது எப்படியென்றால் புத்தக அறிவைத் தவிர்த்த அறிவைப் பற்றி பேசுகிறேன். மற்றபடிக்கு, இலங்கை, ஈரான் ஈராக் இஸ்ரேல் லெபனான் பற்றிய படிப்பறிவு உண்டு. ஆனால் படிப்பறிவு இந்த விஷயங்களில் பெரும்பான்மையான சமயங்களில் இரண்டு பக்கங்களின் விஷயங்களையும் சொல்வதில்லை. அது மட்டுமில்லாமல் எல்லா விஷயங்களைப் பற்றிய ஒரு முன்முடிவும் எனக்கு இரண்டு பக்கங்களையும் பார்க்கவிடாமல் தடுத்துவிடுகிறது.



மரூன்ட் இன் இராக் படம் அப்படித்தான் எனக்கு இதுவரை தெரியாத ஈராக்கை, ஈரானை இல்லை அவற்றின் ஒரு பகுதியை அறிமுகப்படுத்தியது. படம் ஈரானின் எல்லையில் உள்ள குர்தீஸ்தானில் ஆரம்பிக்கிறது, அங்கே வயதான மிகப்பிரபலமான பாடகரான மிர்ஸாவிற்கு அவருடைய முன்னால் மனைவியைப் பற்றிய செய்தி வருவதில் இருந்து படம் தொடங்குகிறது. அவரது முன்னால் மனைவி இருப்பது ஈராக்கின் குர்தீஸ்தானில், போர் நடந்து கொண்டிருக்கும் சமயம்(அதாவது சதாம் உசேன் பதவியில் இருந்த காலம். அவர் தீவிரமாக குர்தீஸ்களை கொன்று கொண்டிருந்த சமயம், அவர் குர்தீஸ்களைக் கொல்ல கெமிக்கல் ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகவும் படம் சொல்கிறது.)

அந்தச் சமயத்தில் இவர்கள், அதாவது மிர்ஸாவும் அவருடைய இரண்டு மகன்களும் மிர்ஸாவின் முன்னால் மனைவி ஹனேராவைத் தேடி பயணத்தைத் தொடர்கிறார்கள். இங்கே ஒரு விஷயம் மிர்ஸாவின் இரண்டு மகன்களும் பரட் மற்றும் அயுத்தும் கூட அவர்களுடைய தந்தையைப் போலவே பாடகர்கள், கொஞ்சம் பிரபலமானவர்களும் கூட. இதில் அவருடைய இரண்டாவது பையனுக்கு ஏழு மனைவிகள் பதிமூன்று பெண் குழந்தைகள். அவர் வார்த்தையிலே சொல்ல வேண்டுமானால் தனக்கு ஆண் குழந்தை பிறக்காத வரை அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு பெண்ணையும் விடமாட்டேன் என்று சொல்கிறார், ஆனால் யாரையும் வற்புறுத்துவதில்லை என்பதும் இந்த விஷயத்தை படம் முழுவதும் இயக்குநர் காமெடியாகவும் பயன்படுத்தியிருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்திலிருந்து கடைசி வரை படத்தில் இசையும் நகைச்சுவை உணர்வும் வழிந்து கொண்டேயிருக்கின்றது.

ஆரம்பத்தில் இரண்டாவது மகன் அயுத் தன் மனைவிகளையும் குழந்தைகளையும் விட்டு தந்தையுடன் இந்த பயணத்தில் வரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார். ஆனால் தந்தை வற்புறுத்தி இருவரையும் அழைத்துக் கொண்டு போகிறார். மிர்ஸாவின் முன்னால் மனைவி ஹனேரா அவருடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு மிர்ஸா நடத்திய பாடற்குழுவில் பாடிக்கொண்டிருந்த சயீத்-ஐ திருமணம் செய்துகொண்டு இராக்கிற்கு வந்துவிடுகிறார். ஏனென்றால் ஒரு சமயத்தில் இரானில் பெண்கள் பாடக்கூடாதென்று கண்டிப்பு வந்துவிட தொடர்ந்து பாடவேண்டும் என்று நினைக்கும் ஹனேரா சயீத்தை கல்யாணம் செய்துகொண்டு இராக்கிற்கு வந்துவிடுகிறார்(இராக்கில் உள்ள குர்தீஸ்தானிற்கு - அப்பொழுது சதாம் ஈராக்கில் பெண்களுக்கு சில பல உரிமைகளை தந்துவந்துள்ளதாகத் தெரிகிறது).

தற்சமயம் அந்த ஹனேரா தான் ஈரான் ஈராக் எல்லையில் அகதிகளை மகிழ்விப்பதற்காக பாடிவருவதாகவும் அவருக்கு மிர்ஸாவின் உதவி தேவையென்பதும் தான் மிர்ஸாவிற்கு கிடைத்த செய்தி. உடனே தன்னுடைய மகன்களை அழைத்துக் கொண்டு புறப்படுகிறார். இந்த மூவரும் போகும் பயணம் அவ்வளவு சுலபமாக இல்லை. முதலில் இரானிய எல்லையில் இருக்கும் அகதி முகாமில் ஹனேராவின் தற்போதைய கணவர் சயீத்தின் அம்மாவைப் பார்க்கிறார்கள். சயீத் கொடுத்த ஒரு கடிதத்தை அவரிடமிருந்து பெற ஆனால் அந்தம்மா அந்தக் கடிதத்தை எங்கே போட்டார் என்பதை மறந்து போயிருக்கிறார். இப்படியாகத் தொடரும் பயணம் அவர்களுக்கு அவ்வளவு சுலபமாகயில்லை.

தொடரும் அவர்கள் பயணத்தில் அவர்களுடைய பணம், ஓட்டி வந்த வாகனம் போன்றவை கொள்ளையடிக்கப்படுகின்றன. கடைசியில் அவர்கள் நடைபாதையாக ஹனேராவைத் தேடத் தொடங்குகிறார்கள். அவர்கள் கடக்கும் ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் மக்களுக்கும் மிர்ஸாவைத் தெரிகிறது அதே போல் ஹனேரா மிர்ஸாவின் உதவியை நாடியிருப்பதும். இப்படியாக தொடரும் பயணத்தில், முதல் மகன் பரட் ஒரு பெண்ணின் குரலில் மயங்கி அவளை திருமணம் செய்து கொள்ளக் கேட்கிறார். இரண்டாவது மகன் அயுத்திற்கு அகதிகள் முகாமில் இருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் தத்தெடுத்துக் கொள்ளக் கிடைக்கிறார்கள். இப்படி இவர்கள் ஒருவாறு மிர்ஸாவை பிரிந்துவிடுகிறார்கள் பயணத்தின் ஒரு பகுதியில்.

இரண்டாவது மகனை மிர்ஸா தானே ஒரு பகுதிக்கு மேல் வரவேண்டாம் என்று நிறுத்திவிட, பரட் கொஞ்சம் வாட்ட சாட்டமாக இருப்பதால் எல்லைப் படையினர் பிடித்தால் இராணுவத்திற்கு பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள் என்ற பயத்தில் பரட்டை மிர்ஸா தன்னைத் தொடர்ந்து வரவேண்டாம் என்று சொல்லிவிடுகிறார்.

பின்னர் தன்னந்தனியாக தொடரும் பயணத்தில் ஒருவாறு ஹனேராயிருக்கும்/இருந்த இடத்தை அடைகிறார் மிர்ஸா, ஆனால் அவரை சந்திப்பதோ; ஹனேராவின் தற்காலக் கணவரின் சகோதரி. அங்கே தான் சயீத் இறந்து போன விஷயத்தை தெரிந்துகொள்கிறார் மிர்ஸா. சயீத்தின் கடைசி ஆசையான, மிர்ஸாவுடன் சேர்ந்து பாடவேண்டும் என்ற ஆசையும் நடக்காமல் போய்விட, சயீத் தன் உடலை மிர்ஸா தான் தகனம் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்க அதன் படியே மிர்ஸாவும் செய்கிறார்.

பின்னர் மிர்ஸா ஹனேராவைப் பற்றிக் கேட்க, அவர் கெமிக்கல் தாக்குதலால் பாதிக்கப்பட்டு குரல், முகம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் மிர்ஸாவுக்காக ரொம்ப காலம் காத்திருந்ததாகவும் பின்னர் வேறெங்கேயோ சென்று விட்டதாகவும் செய்தி கிடைக்கிறது. பின்னர் கடைசியில் ஹனேரா மிர்ஸாவிற்காக விட்டுச் சென்ற ஹனேரா/மிர்ஸாவின் பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு ஈராக்கிய எல்லையைத் தாண்டி ஈரானிய எல்லைக்குள் நுழைவதுடன் படம் முடிவடைகிறது.

---------------------------------------------

படம் நானெல்லாம் முழுக்க முழுக்க பாலைவனம் என்று நினைத்துகொண்டிருந்த ஈராக்கில் முழுக்க முழுக்க பனிப்பொழிவில் நடக்கிறது. அதற்கு காரணம் சொல்லும் இயக்குநர், குர்தீஸ்தானில் இயற்கையழகு மிகச் சிறப்பாகயிருக்கும் இதே படத்தை நான் இலையுதிர் காலத்திலோ வசந்த காலத்திலோ எடுத்திருந்தால் பார்ப்பவர்கள் குர்தீஸ்தானின் இயற்கையழகில் கவனத்தை செலுத்தி நான் சொல்லவந்த விஷயத்தை மறந்திருப்பார்கள் என்பதும்.

உண்மைதான் படத்தின் பெரும்பான்மையான காட்சிகளில் ஸ்கிரீன் முழுவதும் வெள்ளைப் பனியாலும், ஒன்றிரண்டு கறுப்புப் புள்ளிகளாக மக்கள் தோன்றுவதையும் காணலாம். இதையும் குறிப்பிட்ட இயக்குநர் சிம்பாலிக்காக மக்களின் துயரத்தை விளக்குவதற்காக இப்படி செய்ததாக சொல்லியிருந்தார்.

படத்தில் ஹனேரா தான் முக்கிய கதாப்பாத்திரம் என்றாலும் ஹனேராவை காண்பித்திருக்கவே மாட்டார் இயக்குநர் காரணம் ஹனேரா தான் முக்கிய கதாப்பாத்திரம் என்றாலும் தான் சொல்லவந்தது குர்தீஸ்தானில் இருக்கும் மக்கள் வாழ்நிலையை அதற்காக எடுத்துக்கொண்ட ஒரு கதை தான் ஹனேராவைப் பற்றியது. மக்கள் ஹனேராவைப் பற்றி யோசிக்காமல் கதையை, மக்களை, அவர்களில் வாழ்வாதரவிற்கான பிரச்சனையைப் பார்க்கவேண்டும் என்றுதான் அப்படி செய்ததாகவும் சொல்வார்.

குர்தீஸ்தான் மக்களின் அடிப்படை வாழ்வியல் விஷயங்களாக இருக்கும் நகைச்சுவை உணர்வையும் இசையையும் கொண்டுவரவே முயன்றதாகச் சொல்லியிருப்பார் இயக்குநர், உண்மைதான் மைல்ட் காமெடியும் இசையும் படம் முழுவதிலும் ஆக்கிரமித்திருக்கிறது.

நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுவது அன்றாட விஷயமாகிவிட்ட மக்களிடம் மரணம் என்பது ஒரு விளையாட்டாகயிருப்பதாகச் சொல்வார் இயக்குநர் உண்மைதான், கண்ணிவெடிகளிலும், கெமிக்கல் ஆயுதங்களாலும் மக்கள் கும்பல் கும்பலாகக் கொல்லப்பட அவர்களின் வாழ்க்கையை இன்னமும் நகர்த்திக் கொண்டிருக்க உதவுவது இசையும் நகைச்சுவையுமாகவேயிருக்கும். இருக்க முடியும்.

கதைப்படி எல்லோருக்கும் ஒரு ஹாப்பி எண்டிங் இருக்கும், பரட்டிற்கு அவர் ஆசைப்பட்ட பெண் கிடைப்பாள், அயுத்திற்கு இரண்டு ஆண் குழந்தைகள், மிர்ஸாவிற்கு சயீத்/ஹனேராவின் குழந்தை என இதை விளக்கும் இயக்குநர் தான் ஆப்டிமிஸ்டிக்கா இருப்பதையே விரும்புவதாகச் சொல்கிறார்.

உண்மையில் ஒரு அருமையானப் படம் இந்த "மரூன்ட் இன் இராக்". வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள், அதே போல் இயக்குநரின் பேட்டியையும் கண்களால் சிரித்துக்கொண்டு அந்த மனிதர் படத்தைப் பற்றி விளக்குவது பிரம்மாதம்.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In உண்மைக்கதை மாதிரி குரல்பதிவு

நான் காதலித்தக் கதை - ஒரு குரல் பதிவு

என்ன சொல்றது இன்னுமொரு குரல் பதிவு. இந்த முறை நான் +2 படித்த பொழுது செய்த காதல் அனுபவத்துடன். கொஞ்சம் பெரிய பதிவாகிவிட்டது.



தொடர்புடைய பதிவுகள்

நான் காதலித்தக் கதை
காக்கா'பீ' ரோட்டில் ஒரு காதல் கதை - முதல் பகுதி
காக்கா'பீ' ரோட்டில் ஒரு காதல் கதை - இறுதிப் பகுதி

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Only ஜல்லிஸ்

தமிழ்மண நிர்வாகிகள் கவனிப்பார்களா?

இது என்ன இதுதான் பேஷனா என்றால் தெரியவில்லை இருக்கலாம். இதை நான் எழுத வேண்டிய கட்டாயம் எதனால் ஏற்பட்டது என்று சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். சொன்னால் சரிசெய்யப்படுமா இல்லை, இந்த வேண்டுகோளும் தூங்குமா என்று தெரியவில்லை.

சரி மேட்டருக்கு, இரண்டு விஷயங்கள் பற்றி என்னுடைய கேள்விகள்.

முதலாவது பூங்கா, நீங்கள் உங்கள் பதிவை எழுதிவிட்டு தமிழ்மணத்திற்குள் இணைக்கும் பொழுது, பூங்கா இதழுக்கு சேர்க்கலாமா சேர்க்க வேண்டாமா என்று கேள்வி கேட்கப் படுகிறது. என்னைப் பொறுத்தவரை இணையத்தில் இது போன்ற Yes/No Agree/Dis Agree, விஷயங்களில் No, Disagree யே டிபால்ட்டாக இருக்கும். ஆனால் பூங்காவிற்கு இணைப்பதை மட்டும் டீபால்ட்டாக வைத்திருக்கிறார்கள்.

முதலில் ஏதோ இன்னுமொரு வகையறா விஷயம், இந்த டேக் இடுவதைப் போல என நினைத்து அதைக் கண்டுகொள்ளவேயில்லை அதே போல் பூங்கா படிப்பதையும் தான். வந்த ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு லிங்க் அதுவாய்த் தோன்றியது என் வலைப் பக்கத்தில் கிளிக்கிப் பார்த்தால் பூங்காவில் இணைத்திருந்தார்கள். அதன் பிறகுதான் மேட்டர் தெரிந்தது.

என் கேள்வி, இந்த Default தேர்ந்தெடுப்பதில் உங்களுக்கு எதுவும் அரசியல் உண்டா இல்லையென்றால் Default-ஆக அதை Noவிற்கும் Disagreeக்கும் கொண்டுவாங்களேன்.

----------------------------

இரண்டாவது நட்சத்திரக் குத்து

தமிழ்மணத்தில் ஒரு காலத்தில் ரொம்ப பேமஸான விஷயமாக இந்த விஷயம் இருந்த பொழுதே இந்த ஒன்றைப் பற்றி நல்ல அபிப்ராயம் கிடையாது. ஆனால் சிலர் அந்த வாசகர் பரிந்துரையை மட்டும் படித்து, அதிலிருந்து உங்கள் பக்கத்திற்கு வருவார்கள் என்று தெரியும். உதாரணமாக ரோசா வசந்த் போன்றவர்கள். உங்கள் பதிவு மிகச்சிறந்த பதிவாக வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே அப்படி என்ன கிழித்திருக்கிறீர்கள் என்று பார்க்க ;) வருவார்கள்.

முன்பு தமிழ்மணத்தில் அதை தூக்கும் வசதி கிடையாது. ஆனால் புதிய தமிழ்மணம் வந்த பொழுது இது வாசகர்கள் அவர்களாக தேர்ந்தெடுக்கலாம் ஒரு பதிவுக்கு நட்சத்திரக் குத்து வேண்டுமா வேண்டாமா என்று.

ஆனால் என்னுடைய பதிவுகளில் பெரும்பாலும் நான் அதை De-Select செய்துதான் உள்நுழைப்பது வழக்கம் ஆனால் அந்த நட்சத்திர டப்பா வந்துவிடுகிறது. ஏன் என்று தெரியவில்லை, அந்த ஜாவா ஸ்கிரிப்டை உடைத்தும் பார்த்தேன் ஒன்றும் விளங்கவில்லை. எந்த இன்புட் கொடுத்தாலும் தமிழ்மணத்தில் கொடுக்கப்படும் பட்டை அந்த நட்சத்திர டப்பாவுடன் சிரிக்கிறது.

நாம ரொம்ப சீரியஸா ஒரு பதிவு எழுதிட்டு போனால் வேண்டுமென்றே அந்தப் பதிவிற்கு வந்து ஒரு நெகட்டிவ் குத்து விட்டுவிட்டுப் போகிறார்கள். சில சமயம் ஏகக் கடுப்பாக வரும்.

எனக்குத் தெரிந்து ஒரே ஒரு வலைபதிவரின் வலைபதிவில் நட்சத்திர டப்பா இல்லாத தமிழ்மணப் பட்டை பார்த்திருக்கிறேன். அவரிடம் எப்படி என்று கேட்கும் மனநிலையில் நான் இப்பொழுது இல்லை. அதனால் அந்தப் பட்டையை கொடுக்கும் தமிழ்மணமே இதை விளக்கலாம்.

அவ்வளவுதான் சாமி...

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In குரல்பதிவு

இன்னுமொறு குரல் பதிவு

எனக்கு கண்ணதாசனுடைய, வைரமுத்துவினுடைய பாடல் வரிகளை விடவும் அவர்களுடைய கவிதை வரிகள் பிடிக்கும்.

கண்ணதாசனுடைய ஸ்பெஷாலிட்டியே என்னான்னா, நேரடியாய் அவரை பாதித்த ஒரு நிகழ்வை அவர் எழுதுவது தான். அப்படி எழுதியது தான் 'அவனை எழுப்பாதீர்கள்' கவிதையும். நண்பருடைய குழந்தை பிறந்த ஆறு மாதத்தில் இறந்துவிட எழுதியது இந்தக் கவிதை.

"...கோடிக்கு அதிபதி என குறையாது வந்தாலும்
நாட்டுத் தலைவனென நலவாழ்வு பெற்றாலும்
கேட்டப் பொருளெல்லாம் கிடைத்தாலும்
அவன் வீட்டு மாட்டுக்குக் கூட மரியாதை கிடைத்தாலும்
பஞ்சனைகள் இருந்தாலும்
பால் பழங்கள் உண்டாலும்
சொத்துள்ள காரணத்தால் தூக்கம் பிடிக்காது..."

கண்ணதாசனால் தான் இப்படி ரசித்து எழுத முடியும்.



அடுத்து பாரதிதாசனின், "நீலவான ஆடைக்குள்..." என்று தொடங்கும் ஒரு பாடல். நிலாவைப் பற்றி பாடப்படும் கவிதையில் ஒருவேளை சாப்பாட்டிற்குக் கூட வழியில்லாத மக்களைப் பற்றிய வர்ணனைகள் சொல்ல முடியுமா. முடியும் என்று நிரூபித்திருக்கிறார் பாரதிதாசன்.

இதை விடவும் அவருடைய மேலும் பல பாடல்கள் எனக்குப் பிடிக்குமென்றாலும், உருத்தாத வர்ணனைகள் எனக்கு இந்தப் பாடலில் பிடிக்கும்.



அடுத்து, பாரதியின் "யாமறிந்த மொழிகளிலே..." அப்படியொரு வார்த்தையை போடுவதற்கான உரிமை பாரதிக்கு நிச்சயமாய் உண்டு. "உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை" போன்ற வரிகள் எழுதியிருக்கிறான் என்றால் அவனால் நிச்சயமாய் மக்கள் எப்படி இந்தப் பாடலை புரிந்துகொள்வார்கள் என்ற கவலைபட்டிருக்காமல் இருக்க முடியாது.



அடுத்தது வைரமுத்து - அவருடைய தீக்குச்சிக்கு தின்னக்கொடுப்போம் எவ்வளவு பிடிக்குமோ அப்படி எனக்கு இந்தப் பாடலும் பிடிக்கும். சொற்சிலம்பம் ஆடுவதில் வல்லவரான வைரமுத்து இதிலும் ஆடியிருப்பார் அப்படியே, "என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள் ஆனால் உங்கள் கல்லறையைத் தோண்டியெடுத்து. நீங்கள் எழுதியதைப் பற்றி கேள்வி கேட்கப்படும். பதில் சொல்லக் காத்திருங்கள்." என்பது போல அவருடைய திருத்தி எழுதப்பட்ட தீர்ப்புகள் கவிதையில் இருக்கும்.

அதே வேகத்தில் எழுதியது போலிருக்கும் இந்தப்பாடலும். "கம்பனிடம் ஒரு கேள்வி..."



---------------------------

இந்தக் கவிதைகள் எல்லாவற்றையுமே தங்குதடையின்றி, தலைப்பின் சாதக பாதகம் பற்றி யோசிக்காமல் பேச்சுப்போட்டிகளில், பட்டிமன்றங்களில் உபயோகித்திருக்கிறேன். அதனால் எப்பொழுதும் என் மனதில் ஓடிக்கொண்டேயிருக்கும் பாடல்கள் இவைகள்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In உலகக்கோப்பை கிரிக்கெட்

Go Aussie Go!!! - 5

Go Aussie Go!!! - 5

இங்கிலாந்து போய்க்கொண்டிருந்த நிலையில் இந்தப் போட்டியைப்(ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து - சூப்பர் எய்ட்'ஸ்) பற்றி பெரிதாக எழுத எதுவுமில்லையென்றே நினைத்தேன். CB சீரியஸில் ஜெயித்திருந்தாலும் அவர்களுடைய உலகக்கோப்பை ரெக்கார்ட் அவ்வளவு நன்றாக இல்லை.

அதே சமயத்தில் ஆஸ்திரேலியா போய்க் கொண்டிருக்கும் வேகத்தில் எவரும் பக்கத்தில் கூட வரமுடியாது என்று தான் நினைக்கிறேன் இன்னும் ஸ்ரீலங்கா, நியூஸிலாந்து இரண்டு பேருடன் ஆஸ்திரேலியா விளையாடும் போட்டிகள் தான் விறுவிறுப்பாக இருக்கும்.

நான் இன்னமும் குறைவாகத்தான் எடுப்பார்கள் என்று நினைத்தேன் இங்கிலாந்து. பரவாயில்லை நன்றாக விளையாடினார்கள். ஆனால் கெவின் பீட்டர்சன் தன்னுடைய நூறு ரன்களிலேயே குறியாகயிருந்து கவிழ்த்துவிட்டார். சச்சின் டெண்டுல்கர் விளையாடுவதைப் பார்ப்பது போலிருந்தது சரியாய் 100 அடித்த கொஞ்ச நேரத்தில் அவுட் ஆகி நான் நினைத்ததை நிரூபித்துவிட்டார்.



ப்ராட் ஹாக், நாதன் ப்ராக்கன், ஷான் டைட் இடைப்பட்ட ஓவர்களில் நன்றாக பௌலிங் செய்தார்கள், இங்கிலாந்து ஒரு சமயத்தில் பலமாக 300 அடித்துவிடும் நிலையில் இருந்தார்கள் என்பது உண்மை தான். ஆனால் பந்து வீச்சாளர்களின் திறமை அவர்களை தடுத்துவிட்டது. ஆரம்ப ஓவர்களில் சற்று உதை பட்டாலும் தன்னுடைய முழு திறமையை மெக்ராத் உபயோகித்து ஸ்லாக் ஓவர்களில் பிரமாதமாக பந்து வீசினார். சிங்கம் வயசானாலும் சிங்கம் தான் என்று இன்னுமொறு முறை நிரூபித்திருக்கிறது.



உண்மையில் மைக்கேல் வாஹ்னனைத்தான் பாராட்டணும், உண்மையில் நல்ல முடிவு ஆஸ்திரேலியா திறமையாக அதிக ரன்கள் செட் செய்து ஜெயித்துவரும் நிலையில் அவர்கள் இதுவரை உலகக்கோப்பையில் செய்யாத ஒன்றை நோக்கி அவர்களை புல்(PULL) செய்திருக்கிறார்கள். (பங்க்ளாதேஷ்ஷை நாங்கள் டீமாயெல்லாம் கன்ஸிடர் செய்யலை.) சௌத் ஆப்பிரிக்காவின் தேவையற்ற புகழ் இப்பொழுது இருக்காதென்று நினைக்கிறேன்.

இன்னொரு டீம் நியூஸிலாந்து, உங்களுக்கு இருக்குடீ மாப்பிள்ளை அப்படின்னு ஆஸ்திரேலியா காத்திருக்கிறார்கள். பிரகாசமான ஒரு மேட்சிற்காகக் காத்திருக்கிறேன்.

--------------

மற்றபடிக்கு இந்தப் பதிவை இன்னொரு முறையோ இல்லை இரண்டு முறையோ அப்டேட் செய்வேன் என்று ஐம்பது ஓவர்கள் ஆஸ்திரேலியா விளையாடும் என்ற நம்பிக்கை இல்லை எனக்கு. பார்க்கலாம்.

--------------------

Go Aussie Go!!! - 1
Go Aussie Go!!! - 2
Go Aussie Go!!! - 3
Go Aussie Go!!! - 4

--------------------

ம்ம்ம் ஜெயிச்சாச்சு, இன்னும் முன்னாடியே முடிச்சிருவாங்கன்னு நினைத்தேன். எப்படியிருந்தாலும் வெற்றி வெற்றி தான். பான்டிங் இன்னொரு 100 மிஸ் செஞ்சாச்சு :(. Go Aussie Go!!!

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In சொந்தக் கதை சோழர்கள் பயணம்

கங்கை கொண்ட சோழபுரம் - பயணம்

அப்பொழுதுதான் எங்கள் கல்லூரி இறுதித் தேர்வு முடிந்திருந்தது. கல்லூரி வாழ்வில் அனைவரும் பேர்வெல் பார்ட்டி கொண்டாடியிருப்பீர்கள். ஆனால் நாங்கள் (நான் மற்றும் என் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர்) கொண்டாடவில்லை. எங்களுக்குத் தெரியும் அந்தக் கல்லூரியில் நாங்கள் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லையென்று. அதாவது நாங்கள் அந்தக் கல்லூரியை பிரிவதற்காக வருந்தவேயில்லை. நாங்கள் ஏற்கனவே முடிவெடுத்திருந்ததைப் போல் ஒரு சுற்றுப்பயணத்தைத் தொடங்கினோம்.

2003 மேயிலிருந்து அடுத்த 2004 மே வரை நான் ஊர் சுற்றியது மிகவும் அதிகம். முதலில் என் கல்லூரி நண்பர்களுடனான பயணம். நாங்கள் அனைவரும் முதலில் திருச்சியிலிருந்து கிளம்பி பிரபுவின்(துறையூர்) வீட்டிற்கு வந்திருந்தோம். முதலில் எங்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம், மொத்தம் ஆறு பேர், நான், ராஜேஷ், உதயசங்கர், பிரபு, பார்த்திபன், ராஜாமணி. இதில் பிரபுவையும் ராஜாமணியையும் தவிர்த்து எங்கள் அனைவருக்கும் எந்த பேப்பர்களும் பாக்கியில்லை. கொஞ்சம் நன்றாய் படிக்கும் சொம்பு கும்பல் என்று கூட வைத்துக் கொள்ளலாம் ஆனால் நான் அதில் சேர்ந்தது தான் ஆச்சர்யமே. நன்றாய் படிக்க மாட்டேனா என்றால் அப்படியில்லை. கொஞ்சம் ரௌடி, ஒரு முறை கல்லூரி நிர்வாகம் கண்டிப்பாய்ச் சொல்லியிருந்தும், லீவ் போட்டுக்கொண்டு பெங்களூர் வரை வந்து ஊர் சுற்றியதால் ஹாஸ்டலில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தேன் அது வேறு ஒரு கதை.

ஒரு முறை கல்லூரியிலிருந்து "பார்ட்" பெஸ்டிவலிற்கு பேச்சுப்போட்டியில் கலந்து கொள்வதற்காக வைக்கப்பட்ட போட்டியில் நான் வெற்றி பெற்றிருந்தும் மேலாளர் சொன்னார் என்பதற்காக வேறொரு பெண்ணை அனுப்பிவிட கல்லூரியின் அனைத்து தமிழ்ச்சங்க பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொண்டேன், அந்த நாட்களில் இது ஒரு பெரும் பிரச்சனையாய் இருந்தது. இப்படியாக நன்றாய்ப் படித்துக் கொண்டும் வம்பிழுத்துக் கொண்டிருந்ததால் கொஞ்சம் இல்லை நன்றாகவே கெட்டப்பெயர் வாங்கியிருந்தேன்.

வந்துட்டேன் பயணத்திற்கு, இப்படியாக நாங்கள் சுற்றுலாவை துறையூரிலிருந்து தொடங்கினோம், பிரபுவின் வற்புறுத்தலுக்காக மட்டுமே துறையூர் வந்திருந்தோம் ஏற்கனவே பார்த்த ஊர், பார்த்த இடங்கள். இருந்தாலும் புளியஞ்சோலை என்ற பெயர் மனதின் ஓரத்தில் அனைவருக்குமே அறித்துக் கொண்டிருந்ததால் வந்து சேர்ந்த இரவு பிரபுவின் வீட்டில், டைட்டானிக் படம் பார்த்தோம். ஆமாம் பிரபு காதலித்துக் கொண்டிருந்தான். புளியஞ்சோலையில்லாமல் நாங்கள் துறையூர் வந்ததற்கு இன்னொரு காரணம் அவன் காதல். அந்தப் பெண்ணை எங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன் பேர்வழியென்று கூப்பிட்டுவந்திருந்தான் எங்களை. அது ஒரு பெரிய தமாசு.




காலையில் நாலரை மணிக்கெல்லாம் எழுந்து பார்த்தால், கிராமமே எழுந்திருந்தது. வாழ்க்கையில் நான் முதன்முதலில் ஒரு கிராமத்தை நினைவு தெரிந்து பார்த்தேனேயானால் அது துறையூர் தான். பிரபுவின் அம்மா காலையில் எழுந்து எங்களுக்கெல்லாம் காப்பி போட்டுக் கொடுத்துவிட்டு நாங்கள் கிணற்றில் குளித்துவிட்டு வருவதற்குள். ஆறு பேருக்கும் எலுமிச்சை சாதம் தயார்செய்து வைத்திருந்தார்கள். இன்று சொல்கிறேன், அவர்கள் எலுமிச்சை சாதம் செய்து தருவதாகச் சொன்னால் வேலைப் பளுவின் இடையிலும் புளியஞ்சோலை சென்றுவரத் தயாராயிருக்கிறேன்.

புளியஞ்சோலை என்று நான் சொன்ன ஊரை உங்களில் பெரும்பால் ஆனவர்களுக்கு தெரிந்து வாய்ப்பிருக்கிறது. அது ஒரு மலையடிவாரம், அங்கே ஆறு மலைமேலிருந்து ஒடிவருகிறது. மிக ரம்மியமான இடம், ஆனால் கொஞ்சம் மோசமான இடமும் கூட, திருச்சி காதலர்களுக்கான இடங்களில் புளியஞ்சோலையும் ஒன்று. காலையில் ஓட்டிக்கொண்டுவந்து விட்டு சாயங்காலம் திரும்பும் ஓட்டிக்கொண்டு போவதை அனாயாசமாகப் பார்க்கலாம்.

நாங்கள் நன்றாய் மலையில் உள்வரை சென்று அருமையாக கலக்கப்படாமல் இருந்த ஆற்றுநீரை ஐந்துமணிநேரம் கலக்கிவிட்டு, பின்னர் எடுத்த பசியில் கொண்டு வந்திருந்த எலுமிச்சை சாதத்தை முடித்திருந்தோம். இந்த விஷயத்தில் பெரியவர்களின் அனுபவம் ஆச்சர்யம் அளிக்கும். நாங்கள் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் பிரபுவின் அம்மா கட்டிக்கொடுத்த அதிகப்படியான சாதம் எங்களுக்கு சொல்லப்போனால் மிகச்சரியாக இருந்தது.



இப்படியாக நாங்கள் புளியஞ்சோலை பயணத்தை முடித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்த ஊர், ஜெயங்கொண்டம், இது பார்த்திபனுடைய சொந்த ஊர். அவர்கள் வீட்டில் தறிநெய்வது தான் தொழில். அம்மா அப்பா தம்பி, தங்கை சில சமயங்களில் பார்த்தியும் நெய்வதுண்டு என்று சொல்ல எங்கள் அனைவருக்கும் நாங்களும் நெய்ய வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. ஆனால் அதையெல்லாம் சொல்லி அவர்கள் பிழைப்பை கெடுத்து விடாமல் தவிர்த்துக் கொண்டோம்.

இன்னுமொரு விஷயம் பயணத்தை தவிர்த்து, நாங்கள் அனைவரும் கல்லூரி படிப்பவர்கள் எங்கள் வீடுகளும் அத்துனை வசதியானது கிடையாது, அதுவும் கல்லூரி படிக்கும் ஆறு தடிமாடுகளுக்கு சாப்பாடு ஆக்கிப்போடுவதென்பது சாதாரணமான விஷயம் கிடையாது. அதனால் நாங்கள் பயணத்தின் ஆரம்பத்திலேயே கணக்குப்போட்டுக் கொண்டது. யாருடைய வீட்டிலும் சாப்பிடுவது இல்லையென்று. ஆனால் பிரபுவின் வீட்டிலேயே இந்த விரதம் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால் புளியஞ்சோலையில் சாப்பிட வேறு இடம் கிடைக்காது என்ற காரணத்தால் அது ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது.

காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து குளித்து விட்டு தயாராகிவிடவேண்டும், பெரும்பாலும் இரவுகளில் தூங்குவதில்லை சீட்டுக்கட்டு(ஏஸ்) ஆட்டம் போடத் தொடங்கினால் அது முடிய இரண்டு மணிநேரம் ஆகும் பிறகு பிரபுவை வம்பிழுக்க ஆரம்பித்தோமானால் ஒரு வழியாக நாங்கள் தூங்க மூன்று மணியாகிவிடும் பிறகு ஒரு மணிநேரத்தில் எழுந்து கிளம்பிவிடவேண்டும். வேண்டுமானால் தங்கும் வீட்டில் காப்பி சாப்பிடாலாம்.

ஆனால் நாங்கள் சாப்பிடுவதைப் பார்க்க வேண்டுமே, எப்படியும் அந்த ஊரை தெரிந்தவன் ஒருவன் இருப்பான் என்பதால் அவனிடம் கேட்டுக்கொண்டு அன்லிமிட்டட் மீல்ஸ் கிடைக்கும் கடைக்குச் சென்றுதான் சாப்பிடுவது, காலை மதியம் இரண்டிற்கும் சேர்த்து ஹோட்டலில் சாப்பாடு சமைத்து தயாரான பதினொன்று மணிவாக்கில் உட்கார்ந்தோமானால் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டுத்தான் நகர்வது.



ஜெயங்கொண்டத்தில் இன்னொரு விஷயமும் நடந்தது அது, பார்த்திபனின் வீட்டிற்று பக்கத்தில் ஜோசியக்காரர் ஒருவர் வீடும் இருந்தது. பார்த்தின் வற்புறுத்தி அனைவரும் ஜோசியம் பார்க்கவேண்டும் என்று சொல்லிவிட என்னைத் தவிர்த்த அனைவரும் பார்த்தனர்.

பின்னர் நாங்கள் வந்திறங்கிய இடம் தான், ஜெயங்கொண்ட சோழபுரம் எங்கேயோ கேள்விப்பட்ட பெயர் போல் தெரிகிறதா, அதுதான் கங்கை கொண்ட சோழபுரம். ராஜேந்திரன் அதாவது ராஜராஜனின் மகன் கட்டியக் கோவில், தந்தைக்கும் மகனுக்கும் என்ன காண்டு என்று தெரியாது. அப்பனைப் போலவே மகனும் பிரம்மாண்டமாய் ஒரு கோவில் கட்டியிருந்தான்.

ஆரம்பத்தில் மிகவும் மோசமாக பராமரிக்கப்பட்டு இருந்ததாகவும் தற்சமயம் இந்திய தொல்பொருள் துறையினரிடம் இருப்பதலால் கொஞ்சம் நன்றாய் இருப்பதாகவும் பார்த்திபன் சொன்னான். வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்தக் கோவிலை பார்த்தே ஆவது என நான் ஒற்றைக்காலில் நின்று கொண்டிருந்ததால், அவனுடைய அப்பா போட்டுக் கொடுத்த பிளானையை கொஞ்சம் மாற்றி கங்கை கொண்ட சோழபுரத்திற்கு வந்திருந்தோம்.

அழகான அமைதியான ஊர், புல்வெளிகளுக்கு மத்தியில் சிவன் கோவில். மற்றவர்கள் ரொம்பத் தீவிரமாக சாமி கும்பிட்டுக் கொண்டிருக்க நான் சுற்றிப் பார்த்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.

அந்தக் கோவில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரத்தைப் பற்றி சிறு அறிமுகம்.

உடையார்ப் பாளயம் தாலுகாவில் 16 மைல் நீளத்திற்கு வடக்குத் தெற்காக ஒரு கரை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், வலிமை வாய்நத பல பெரிய கலிங்குள் உள்ளன. இது முன் காலத்தில் இந்தியாவிலேயே மிகப்பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். இந்தப் பெரிய குளம் அல்லது ஏரிக்குக் கொள்ளிடம் ஆற்றிலிருந்து ஒரு கால்வாய் அதனுடைய தென் கோடியில் இந்த ஏரிக்குள் நுழைகிறது. இதுவே இந்த ஏரியின் முக்கியமான வருவாய்க் காலாகும்.

ஏரியின் வடபகுதியில் நுழையும் ஒரு சிறு கால்வாய் வெள்ளாற்றின் நீரையும் இங்கு கொண்டு வருகிறது. இந்த ஏரி தூர்ந்து விட்டதால், பல ஆண்டுகளாக அது எவ்விதத்திலும் பயன்படவில்லை. அந்த ஏரியின் நடுப்பகுதி முழுவதிலும் உயர்ந்த அடர்த்தியான புதர்களும் குறுங்காடுகளும் நிறைந்து பாழாகிவிட்டது. இந்த ஏரி, படையெடுத்து வந்த ஒரு படையினர் வேண்டுமென்றே செய்த கொடுஞ்செயலால் அழிந்து விட்டதாகத் தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டுவருகிறது.

ஏரியின் தென் கோடியில் காடு சூழ்ந்த ஒரு கிராமம், கங்கைகொண்டபுரம் என்னும் பெயரால் இருந்து வருகிறது. அதன் சுற்றுப்புறத்தில் மிகப்பெரிய அளவினதும், அரிய வேலைப்பாடு உடையதுமாகிய ஒரு கோயில் இருக்கிறது. அதற்கு அருகே காடுசூழப்பட்ட பகுதியில் பழைய கட்டடங்களின் எஞ்சிய பகுதிகள் உள்ளன. மலை மேடுகள் போலவும் குவியல்கள் போலவும் உள்ளன.

இவை பழங்காலத்து பாபிலோனை நினைவுப் படுத்துகின்னற. மிகப் பரந்த பகுதியில் அழகிய ஒரு அரண்மணை இருந்தது என்றும் அதன் பல்வேறு பகுதிகள் தான் இவ்வாறு இடிபாடுகளாகக் காட்டியளிக்கின்றன என்றும் கிராமத்திலுள்ள முதியோர் சொல்கின்றனர்.

இந்த அரண்மனை இருந்த காலத்தில் கங்கைகொண்டபுரம் முடியடைய மன்னர் ஒருவரின் செல்வமுக் செழிப்பும் நிறைந்த தலைநகராக விளங்கியது. இப்போது ஒற்றையடிப்பாதை ஓட இல்லாத காடாகக் காட்சி தரும் பகுதியில் மைல் கணக்கான பெரும்பரப்புக்கு இந்த ஏரி வளத்தை வாரி வழங்கிற்று.

இந்த மாபெரும் அணையை மீண்டும் கட்டவேண்டும் என்று அடிக்கடி பேசப்பட்டு வந்திருக்கிறுது.

என்று 1855 ம் ஆண்டில் வெளியான ஸ்தல சஞ்சிகை ஒன்று நினைவு கூர்கிறது.

இவ்வாறெல்லாம் நினைவுகூறப்படும் கங்கை கொண்ட சோழபுரம், இராஜராஜ சோழனின் மகனான இராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. இம் மன்னனை பற்றிய ஒரு சிறு குறிப்பு, தற்போதைய சென்னை, ஆந்திரம் பகுதிகளுடன், மைசூரின் ஒரு பகுதியையும், ஈழத்தையும் உள்ளிட்ட ஒரு பரந்த நாட்டை இவனது தந்தை இவனுக்கு விட்டுச் சென்றான். அரசாங்க நிர்வாகம் மிகுந்த கவனத்துடன் நிறுவப்பட்டதுடன். பெருநிலப்பிரபுக்கள், சிறு விவசாயிகள், தொழிற்குழுக்கள் ஆகிறோரது உரிமைகளைப் பாதுகாக்கவும். அதே சமயம் மன்னனது அமைதியையும் சமூக உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் வலிமைமிக்க ஒரு அதிகாரவர்க்கமுக் உருவாக்கப்பட்டது. நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட வீரரைக் கொண்ட படை ஒன்று நாட்டின் விரிந்த எல்லையைக் காக்கும் திறன் பெற்றிருந்ததோடு.

புதிதாகக் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் எழும் எதிர்ப்புக்களை அழிக்கவும் வெளிநாடுகளைக் கைப்பற்றவும் உதவி புரிந்தது. ஈழம், மாலத்தீவுகள் போன்ற கடல் கடந்த நாடுகளைக் கைப்பற்றிய பின், அவற்றைத் தம் அதிகாரத்திற்குள் நீடித்திருக்குமாறு செய்ய அவன் ஒரு சிறந்த கடற்படையும் வைத்திருந்தான்.

இக்கடற்படை உதவியுடன் கிழக்கிந்திய தீவுகளுடனும், சீனத்துடனும் ஏற்பட்ட வாணிகத்தையும் பாதுகாக்க முடிந்தது. இவற்றைப் பயன்படுத்தி ஆட்சி செய்த 33-ம் ஆண்டுகளில் இராஜேந்தின் தன்நாட்டை இந்து அரசர்கள் ஆண்ட நாடுகளிலேயே தலைசிறந்த ஒன்றாகவும் மலேயாத் தீபகற்பத்தையும், கீழைக்கடற்கரைப் பகுதிகளையும் உள்ளிட்ட மிகப்பரந்த நாடாகவும் மாற்றி அமைத்தான்.

வரலாற்றின் மிகச்சிறந்த மன்னர்களில் ஒருவனான இராஜேந்திரனின் அரண்மனையும் தலைநகரமும் இன்றிருக்கும் நிலையை நினைத்து கண்ணீர்தான் வந்தது.

இது ஒரு பெரிய சுற்றுலாக் கதையென்பதால் இதனை இங்கேயே நிறுத்திக் கொள்கிறேன். பின்னர் நாங்கள், மீனாட்சி அம்மன்கோவில், பெரிய கோவில், சூரியனார்க் கோவில், பாரி ஆட்சி செய்த ஒரு மலைக்கோட்டையில் இருக்கும் ஒரு கோவில் (பெயர் மறந்துவிட்டது) என ஏறக்குறைய 20 கோவில்களுக்கு மேல் சென்றோம். முடிந்தால் என் பக்கத்தில் அதைப்பற்றி குறிப்புக்களை எழுத முனைகிறேன்.

--------------------------------

இது நான் தமிழோவியத்திற்காக எழுதிய ஒரு பதிவு.

பதின்மத்தில் நான் செய்த பயணம்

நன்றி தமிழோவியம். வாய்ஸ் பதிவு போட்டப்ப நினைவில் வந்தது, தேடிப் பார்த்தேன் என் பதிவில் என் கண்ணில் படாததால் மீண்டும் ஒருமுறை.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In Only ஜல்லிஸ்

கடவுள் இதற்கெல்லாம் பெரியவரா?

கடவுளைப் பற்றிய என்னுடைய டப்பா கான்செப்ட் எல்லாம் கிடையாது, நமது பூமி, சூரியன் மற்றும் இன்னும் சில நட்சத்திரங்களின் அளவுகளைப் பற்றிய ஒரு வீடியோப் பதிவு. இதையெல்லாம் பார்க்கும் பொழுது கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவர் அந்தக் கடேசி நட்சத்திரத்தை விடவும் பெரியவராகவும். அதை உருவாக்கும் திறமை படைத்தவராகவும் இருக்க வேண்டுமல்லவா.

அவருடைய கைகள் எவ்வளவு பெரிதாகயிருக்கும்.?????


Read More

Share Tweet Pin It +1

5 Comments

In உலகக்கோப்பை கிரிக்கெட்

Go Aussie Go!!! - 4

இன்று ஆஸ்திரேலியாவிற்கும் பங்ளாதேஷ்ற்கும் இடையேயான சூப்பர் எய்ட் மேட்ச், இதைப் பற்றிய பதிவெதுவும் எழுதும் ஆர்வம் எனக்கு சுத்தமாகயில்லை. மழையால் பாதிக்கப்பட்ட மேட்ச் 22 ஓவர்களுக்கு மட்டும் நடைபேற்றது.

முதல் முறையாக இந்த உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா பீல்டிங் செய்தது. பங்ளாதேஷை 104 ரன்களுக்கு சுருட்டியது ஆஸ்திரேலியா, மெக்ராத் உலகக்கோப்பையில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையை இந்தப் போட்டியின் இரண்டாவது விக்கெட் எடுத்த பொழுது பெற்றார்.



விக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலியா சுலபமாக இந்தப்போட்டியை வென்றது. அடுத்தப் போட்டி, அடுத்த வாரம் ஞாயிற்றுக் கிழமை இங்கிலாந்திற்கு எதிராக. அதுவரை பொறுமையாக மற்றப் போட்டிகளைப் பார்க்கலாம்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

Popular Posts