In சினிமா

சிவாஜி டிரைலர் - புதுசு கண்ணா புதுசு - சன் டீவி

இது இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன் சன் டீவியில் வெளியான முழு சிவாஜி டிரைலர். என்ஜாய்.



வீடியோ எடுத்தது எங்கக்கா - சொல்லிட்டேன்.

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In Only ஜல்லிஸ்

ஆண் 1,2 & பெண் 2,1 - ?????

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In Only ஜல்லிஸ்

ஆயிரம் பின்னூட்டம் கண்ட 'நச்' பதிவு

நண்பரொருவர் முன்னாலேர்ந்து புலம்பிக்கொண்டிருந்தார். இவனுங்க பின்னூட்டத்தில் போடுற அலப்பறை தாங்க முடியலை. இதுக்கு ஏதாச்சும் செஞ்சே ஆகணும். அவரே கேட்டார் ஏன் இந்த கொலைவெறி; என் பதிவுக்குத் தான் அதிகப் பின்னூட்டம் கிடைச்சுதுன்னு புலம்பத்தானே அதை முறியடிச்சாவணும். ஏதாவது பண்றேன்னு சொல்லிக்கொண்டேயிருந்தார்.

இப்ப மக்களே நான் கொஞ்ச நாளைக்கு முன்னால் போட்ட இந்த "பனிக்காலமும் பாச்சுலர் வாழ்க்கையும்" என்ற பதிவை அவரே தேர்ந்தெடுத்து ஆயிரம் பின்னூட்டம் போட்டுக் காண்பிக்கவா என்று சொல்லி; கரெக்டா பத்தே நிமிஷத்தில் "1000" பின்னூட்டம் போட்டு பின்னிட்டார்.(ஆரம்பித்தது 4.51 முடித்தது 5.01 ஏது எப்படின்னு பின்னாடி சொல்றேன்னு அவரே சொன்னார்.

1) நான் முதல்ல நீ முதல்ல பின்னூட்டங்களுக்கும் - டெஸ்டிங் பின்னூட்டங்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாதுன்னு சொன்னார்.

2) இது தொடர்ச்சியாக ஒரே விஷயத்தைச் சொல்வதாகவும். வேண்டுமென்றால் உலகப் புகழ்பெற்ற "கோட்"கள் ஆயிரத்தை நாளை மற்றொரு பதிவில் போடுவதாகவும் சொல்லியிருக்கிறார்.

3) இதுதான் அதிகப் பின்னூட்டம் என்று சொன்ன அவர், இல்லை இன்னும் போடவேண்டுமென்றால் நம்பரை மட்டும் சொல்லச் சொன்னார். (நீங்க உதவுங்க மக்களே!)

4) யாருக்கும் இதுமாதிரி, புகழ்பெற்ற கோட்டுகள் ஆயிரமோ, ஆயிரம் வார்த்தைகள் விளக்கங்களுடனோ வேண்டுமென்றால் மெய்ல் அனுப்பச் சொன்னார்.

PS: அந்த நண்பர் என்னுடைய ஸ்ப்லிட் பர்ஸனாலிட்டி என்று வரும் வதந்திகளை நம்பவேண்டாம்.

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In சிறுகதை

சில நேரங்களில் சில காதல்கதைகள்

சில சமயங்களில் சூழ்நிலைகளின் கைதியாகி நாம் கொட்டிவிடும் வார்த்தைகளை அள்ளுவதென்பது இயலாத ஒன்றாகிவிடுகிறது. அதைப்போலத்தான் அன்றும் நடந்தது. சராசரி குடிமகனைக் காட்டிலும் அனைத்து விஷயங்களுமே, சற்று அதிகமாகவே, சின்னவயதிலேயே கிடைத்துவிட்ட கர்வம் அதிகாரமாய் ஒட்டிக்கொண்டு விலகமறுக்கிறது. பணம், பெயர், புகழ் கொடுக்கும் போதை பலசமயங்களில் நமது கட்டுப்பாட்டில் இருப்பதைப் போன்ற ஒரு பாவனையைக் கொடுத்தாலும் பெரும்பாலும் கட்டுக்குள் அடங்குவதில்லை. அது மற்றவர்களுடைய தவறுகளை, இயலாமைகளைப் பார்க்கும் பொழுது தறிகெட்டு ஓடி தன்னைக் காட்டிக்கொள்ள முயல்கிறது. அதை அடக்கியாள்வதென்பதே பெரும்பாடாய் இருக்கிறது. இந்த விஷயம் புரியாமல் இருந்துவிட்டாலோ பிரச்சனையேயில்லை. ஆனால் என் நேரம், நான் செய்யும் தவறுகள் பெரும்பாலும் சிறிது நேரத்திலேயே புலப்பட்டுவிடுகிறது.

அன்றும் அப்படித்தான், வேலை சம்மந்தப்பட்ட பிரச்சனைகளின் மனவழுத்தத்தில் நான் இருந்த பொழுது இதே போல் மனம் காட்டாறு போல் செயல்பட்டுவிட்டது. எங்கள் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்தாள் அவள் எனக்கு கீழ் பணிபுரிவதற்காக, இரண்டுவருட அனுபவம் இருப்பதாய்ச் சொல்லி. அவளும் தமிழ் தெரிந்த பெண் என்பது என் மனதில் எந்தஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. கணிணி சம்மந்தப்பட்ட எங்கள் வேலைகளில் மொழி எந்த உருவகத்தையும் பெற்றிருப்பதில்லை. நான் கொடுத்த மிகச்சுலபமான வேலையை முடிக்காமல் இருந்த அவளை என் பிரச்சனைகள் நாயாய்த் துரத்த நான் சீறினேன்.

“என்னங்க இது, எக்ஸ்பீரியன்ஸ் ஆளுதானே நீங்க. சின்ன ஃபங்ஷனாலிட்டி இதைக்கூட செய்யாம நாள் பூரா உக்காந்திருக்கீங்க. முடிச்சிட்டீங்களா முடிச்சிட்டீங்களான்னு உங்க பின்னாடியேவா அலைஞ்சிக்கிட்டிருக்க முடியும். இன்னும் நாலு லைன் கூட கோடிங் எழுதலை. உங்கப்பிரச்சனையை நான் பார்த்துக்கிட்டிருந்தா, என் பிரச்சனையை யார் பார்ப்பா?”

நான் கொடுத்த வேலையை சிறிது செய்திருந்தால் கூட மனம் சற்று சமாதானமாயிருக்கும் தொடங்காமலேயே இருந்தது மிகப்பெரிய பிரச்சனையாய்ப் பட்டது. நான் அத்துனை கேட்டும் பதில்பேசாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தவளைப் பார்த்தால் எரிச்சலாய் வந்தது. இவர்கள் வேலை செய்ததாக பொய் சொல்லி வந்துவிடுகிறார்கள். பின்னர் நம் உயிரை வாங்குகிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த என்னை அவளின் மௌனம் இன்னும் வேகப்படுத்தியது.

“ஏன் இன்னும் பண்ணாம இருக்கீங்க, பதில் சொல்லுங்க?”

மேலும் மேலும் கோபம்தான் வந்தது, அவளுடைய கண்கள் கலங்குவதைப் பார்த்தபின்பும். ஆண் பெண் என்ற பாகுபாடு எங்கள் வேலையில் கிடையாது. அவள் செய்யவேண்டிய வேலை முடியாமல் நான் அந்த இடத்தைவிட்டு போகமுடியாது. அவள் செய்கிறாளோ இல்லையோ நான் செய்தாக வேண்டிய கட்டாயம், வெள்ளைக்காரனுக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் இரவு எத்துனை மணியானாலும் செல்லிடைப்பேசி உயிரை வாங்கிவிடுவான். வெள்ளிக்கிழமை வேறு என் கோபத்தை அதிகப்படுத்தியது. ஐந்து நாள் வேலை முடிந்து நிம்மதியாக இருக்கவேண்டிய நேரத்தில் இவளால் பிரச்சனை.

“எனக்கு எப்படி பண்றதுன்னு தெரியாது.” அவள் சொல்ல,

“என்னது தெரியாதா, எக்ஸ்பீரியன்ஸ் தானே நீங்க. இந்த சின்னவிஷயம் கூட பண்ணத்தெரியாமலா இரண்டு வருஷம் வேலைபாத்தீங்க.” நான் இன்னும் சப்தமாய்க்கத்த, அவள் என்னவோ பதில் சொல்ல வந்தாள், இன்னும் கோபம் அதிகமாகி,

“What the F***, Get the hell out of here.”

சொல்லிவிட்டு அந்த இடத்தைவிட்டு வேகமாக சென்றுவிட்டேன். அவளுடைய வேலையையும் செய்துவிட்டு, அந்த வாரத்தின் திட்டத்தை குறையில்லாமல் நிறைவேற்றிவிட்டு நான் அலுவலகத்தைவிட்டு வெளியேறிய பொழுது விடிந்திருந்தது. மார்கழி மாதக் கடுங்குளிர் வேறுவாட்டியெடுக்க வண்டியை ஓட்டிச்செல்வது பெரும்பாடாய்இருந்தது. அந்த அசதி தந்த தூக்கத்தில் அன்று மதியம் வரை விழிப்புவரவில்லை. ஆனால் விழிப்புவந்ததிலிருந்தே நான் அவளிடம் சொன்ன அந்த வார்த்தை தான் மீண்டும் மீண்டும் நினைவில்வந்தது. எங்கள் தலைமுறை மக்களைப்போலவே எனக்கும் அந்த நான்கெழுத்து அமேரிக்க கெட்டவார்த்தை பிரயோகம் சிறிது அதிகமாய் இருந்தது. ஆனால் எக்காரணம் கொண்டும் வேலைசெய்யும் இடத்தில் உபயோகப்படுத்தியதில்லை. அது சரியானதொன்று கிடையாது.

ஆனால் என்னுடைய பெண்தோழி முதற்கொண்டு நாங்கள் வெளியில் உபயோகப்படுத்தும் வார்த்தைதான். வேலை பார்க்கும் இடத்தில் உபயோகப்படுத்தியது தான் தவறு, அதுவும் ஒரு பெண்ணிடம். அவள் பக்கம் தவறே இருந்தாலும் அந்த நிறுவனத்தைப் பொறுத்தவரை நானும் அவளும் ஏன் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட அனைவரும் உடன்வேலை செய்பவர்கள்தான், அதைத்தவிர வேறொன்றுமில்லை. இந்தப்பிரச்சனையால் அந்த வாரயிறுதி வருத்தத்திலேயே கழிந்தது. உணவகத்திற்கு அழைத்துப்போக வந்திருந்த கீதாவிடம் இந்த விஷயத்தைச் சொல்ல பலமாய்ச் சிரித்தாள்,

“போடே நாளைக்கு உன்மேல் ஹாரஸ்மண்ட் கேஸ் போடப்போறா, உன்னைய வேலையை விட்டுத் தூக்கப்போறாங்க.”

அவளுக்கு அனைத்தும் விளையாட்டுத்தான், ஐஐடியில் படிப்பை முடித்தவள். நானும் அவளும் இந்த நிறுவனத்தில் ஒரே நாளில் வேலையில் சேர்ந்திருந்தோம். அன்றிலிருந்தே பழக்கம். இரண்டாண்டுகளாய் கொஞ்சம் நெருக்கமாய். அவளை வைத்துத்தான் அந்தப்பெண்ணிடம் பேசச்சொல்ல வேண்டுமென நினைத்திருந்தேன்.

“இங்கப்பாரு நீ சிரிச்சா சிரிச்சிட்டுப் போ, ஆனா நாளைக்கு நீதான் போய் அவளை சமாதானப்படுத்தணும். ப்ளீஸ், ப்ளீஸ், தமிழ்நாட்டு பொண்ணு என்ன பண்ணுவான்னு யாருக்குமே தெரியாது.”

கீதாவின் துடுக்குத்தனம் தெரிந்திருந்தும் இந்த விஷயத்தைச் சொன்னது பெரியத் தவறாய்ப் போய்விட்டது. திங்கட்கிழமை நேராய் அந்தப்பெண்ணிடம் சென்றவள், அவள் பொய் சொல்லி இந்த வேலையில் சேர்ந்ததை நான் கண்டுபிடித்துவிட்டதாகவும் நிறுவனத்தில் அதை சொல்லிவிடப்போவதாகவும் மறைக்கவேண்டுமென்றால் என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசவேண்டுமென்றும் சொல்லி, நாங்கள் உணவருந்தும் இடத்திற்கு இவளை வரச்செய்திருந்தாள். முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர் புரிந்ததும் கீதாமேல் கோபம்தான் வந்தது. பின்னர் அவளிடம் நான் சொன்ன வார்த்தைக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு, உடனடியாக இரண்டு வருடங்கள் வேலைசெய்திருந்தால் என்னென்ன தெரிந்திருக்குமோ அதையெல்லாம் தெரிந்துகொள்ளச் சொல்லி கண்டிப்பாகச் சொல்லியிருந்தேன்.

ஒருவழியாக இரண்டு மூன்று மாதங்களில் ஓரளவு விஷயங்களைத் தெரிந்துகொண்டிருந்தாள் வானதி. நானும் ஏதோ தமிழிற்கே நன்மை செய்வதைப் போல் நினைத்துக்கொண்டு அவளை வேறு ப்ரோஜக்டிற்கு மாற்றாமல் என்னுடனே வைத்துக் கொண்டிருந்தேன். இது போன்ற விவகாரங்களில் தெலுங்கு மக்கள் தான் எங்கள் துறையில் சிறந்தவர்கள். நான் பெரும்பாலும் இதைச் செய்ததில்லை ஏனோ ஒரு சின்ன உறுத்தல் அடிமனதில் இருந்ததால் அப்படிச்செய்து கொண்டிருந்தேன். முதலில் என்னிடம் நேரடியாய் பேசமாட்டாள், கீதாதான் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். பின்னர் சில நாட்கள் இரவில் நாங்கள் மட்டும் வேலை செய்ய நேரும் பொழுதுகளில் நான் கேட்காமலேயே காப்பி எடுத்துக்கொண்டு வந்து தருவாள். அப்பொழுது நன்றி சொல்ல சிறிது பேச்சுவார்த்தை உண்டானது.

“வாசு நீங்களும் கீதாவும் காதலிக்கிறீங்களா?”

இந்தக் கேள்வி எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை வரவழைத்தது. அதற்கான பதில் எவ்வாறானாலும் அதைப்பற்றி கேட்க அவளுக்கு உரிமை கிடையாது. நம் ஆட்களின் பாதிப்பு இது. மேற்கத்தியர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்போகும் அரசியல்வாதிகள் பற்றியோ தங்கள் அரசியல் நிலைப்பாடுபற்றியோ வரும் கேள்விகளுக்கு நேரிடையாக பதிலளிப்பார்கள். ஆனால் தங்கள் சொந்த வாழ்க்கையைப்பற்றி வரும் கேள்விகளுக்கான விடையை தரவேமாட்டார்கள். ஆனால் நம்மக்கள் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை மறைப்பார்கள், சொந்த வாழ்க்கையைப்பற்றி வெளிப்படையாக பேசுவார்கள். ரொம்பக்காலம் மேற்கத்திய பழக்கவழக்கங்களில் மூழ்கிவிட்டதால் எனக்கு அந்தக் கேள்வி ஆச்சர்யத்தையே அளித்தது.

“இல்லை புரியலை, அதைத் தெரிஞ்சிக்கிட்டு நீ என்ன பண்ணப்போற.”

“ப்ளீஸ் வாசு, தப்பா நினைக்காதீங்க ஒரு கியூரியாஸிட்டி தான். ஒன்னாவே வண்டியில வரீங்க ஒன்னாவே போறீங்க. சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் அப்படியே இருக்கிறீர்கள். அதான் கேட்டேன் காதலிக்கிறீங்களா, கீதாவை கல்யாணம் பண்ணிக்கப்போறீங்களான்னு.”

இன்னும் ஆச்சர்யத்தையே வரவழைத்தது அவள் சொன்னது, எங்களின் நடவடிக்கையை கவனிப்பது மட்டுமல்லாமல் அதை என்னிடமே சொல்லி கேள்வி வேறு கேட்டது. ஆனால் என்னவோ சொல்லவேண்டும் போல் தோன்றியதால்,

“வானதி, நாங்க காதலிக்கிறோம்னு சொல்லமுடியாது. என்னோட கேர்ள் ப்ரண்ட் அவ அவ்வளவுதான். பின்னாடி கல்யாணம் செய்தாலும் செய்து கொள்வோம், அதைப்பற்றி உறுதியாய் சொல்லமுடியாது.”

நான் சொன்னது வானதிக்கு வேண்டுமானால் ஆச்சர்யத்தை அளிக்கலாம் ஆனால் உண்மை அப்படித்தான். அனால் அவளை திருமணம் செய்து கொள்வதில் எனக்கோ இல்லை என்னைத் திருமணம் செய்து கொள்வதில் கீதாவிற்கோ பிரச்சனைகள் கிடையாது. ஆனால் நாங்கள் அதைப்பற்றி பேசியதில்லை. இதை வேண்டுமானால் சாப்ட்வேர் காதல்னு வைத்துக்கொள்ளலாம். ஆனால் உண்மை அதுதான்.

வானதி எந்த நேரத்தில் கேட்டாளோ, கீதாவிற்கு அயல்நாட்டில் மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருந்தது. அன்றைக்கு இரவு அவள் இந்த விஷயத்தைச் சொல்லி என் கருத்தை கேட்டபொழுது நான், அந்த வாய்ப்பின் சாதக பாதகங்களை சொல்லி, அப்பொழுதைய சூழ்நிலையில் அவளுக்கு அதுதான் நல்லது என்றும் விவரித்து அவளுடைய பயணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் முடித்துக்கொடுத்து அனுப்பிவைத்தேன். அதன்பிறகு முதல் இரண்டு நாட்கள் கீதா இல்லாத வித்தியாசம் தெரிந்தது. சிறிது நாட்களில் இந்த வித்தியாசம் வானதியால் நிரப்பப்பட்டது. தவறான அடிப்படையில் கிடையாது உணவருந்தும் வேளையில் உடனிருப்பவளாக, வேலைக்கு வந்து செல்லும் பொழுது உடன் பயணம் செய்பவளாக, எங்கள் வேலையின் மனவழுத்தத்தை போக்கும் வகையில் இடையிடைய உரையாடுவதற்கு நல்ல தோழியாகவும் அந்த இடைவெளி கீதா போனதால் வந்த வித்தியாசம் நிரப்பப்பட்டது. அந்த வித்தியாசம் பிறகு காதலாகவும் மலரலாம் திருமணமாகவும் முடியலாம் ஆனால் நிச்சயம் கிடையாது.

ஆனால் அந்த நட்பு தேவைப்படுகிறது, நாங்கள் இருக்கும் சூழ்நிலையும் அதை வழிமொழிகிறது. என்னால் அந்த நட்பை விவரிக்கவோ இல்லை விமர்சிக்கவோ இயலவில்லை. நட்பிற்கும் காதலுக்கும் திருமணம்செய்து கொள்வதற்கும் இடைப்பட்ட ஒரு பரிமாணத்தைத்தேடி நாங்கள் நகன்றுகொண்டிருக்கிறோம். இதை இந்த சூழ்நிலையை அதன் தேவையை அனுபவித்து பார்க்காமல் உணரமுடியாது.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In புத்தகங்கள்

அரசூர் வம்சம்

முதலில் ஒரு புத்தகம் நமக்கு எப்படிக் கிடைக்கிறது; என்ன அறிமுகத்துடன் கிடைக்கிறது என்கிற விஷயம் என்னைப் பொறுத்தவரை சுவாரசியமானது. இரா முருகனின் இந்தப் புத்தகம் கூட அப்படித்தான். நான் இணைய உலகில் பரவலாக நடமாடத் தொடங்குவதற்கு முன்பே இந்தப் புத்தகத்தைப் பற்றிய பெயரளவிலான அறிமுகம் கிடைத்திருந்தது. அது ஒரு சுவாரசியமானக் கதை என்பதால் அதை முன்னே சொல்லிவிடுகிறேன்.

எனக்கு கொஞ்சம் தூரத்து சொந்தமாய் ஒரு தாத்தா, காரைக்காலைச் சேர்ந்தவர் அவரிடம் இன்னமும் இருக்கும் புத்தகம் படிக்கும் ஆர்வம் என்னை வியப்பில் ஆழ்த்தும். Dictionary of Contemporary English என்ற புத்தகத்தைத் தேடி அவர் டெல்லியின் புத்தக சந்துகளைத் துளைத்தெடுத்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. அதேபோல் சமீபத்தில் வெளியான சில துப்பாக்கிகளைப் பற்றிய புத்தகத்தையும் அவர் தேடி வாங்கிக் கொண்டு போனார். அப்படி அவருக்கு எங்கேயோ எவராலோ சொல்லப்பட்ட புத்தகம் தான் அரசூர் வம்சம்.

நான் இதைப் பற்றி இரா.முருகனுக்கு ஒரு மெய்ல் அனுப்பியதாக நினைவு.(முதலில் தவறுதலாக அந்த விஷயத்தை இராம.கி.க்கு பின்னூட்டமாக அனுப்பினேன் ;)) எனக்குத் தெரிந்து திருக்கடையூர், தில்லையாடி பக்கத்தில் ஒரு அரசூர் உண்டு. கொஞ்சம் போல் காரைக்கால் பக்கம் வரும், முதலில் தாத்தா அந்த ஊரைப் பற்றித்தான் கதை எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்லித்தான் அவர் இந்தப் புத்தகத்தைத் தேடினார். ஏனென்றால் அந்த அரசூரைப் பற்றி எழுதியிருந்தால் தன்னைப் பற்றி(அல்லது அவர்களுடைய குடும்பத்தைப் பற்றி) நிச்சயமாய் எழுதப்பட்டிருக்கும் என்று சொல்லித்தான் தேடினார்.

அவருடைய தேடுதலுக்கு கிடைக்காத அளவிற்குத்தான் அந்தச் சமயத்தில் அரசூர் வம்சம் இருந்தது. நானும் ஹிக்கின் பாத்தம்ஸில் தேடியிருக்கிறேன் சில சமயம்; ஆனால் அகப்படவில்லை. இப்படியாகக் கிடைத்த அறிமுகம் சிறிது நாளில் மறந்து போக, பிரகாஷ் ஏதோ ஒரு இடத்தில் உலக அளவில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நாவல் என்றோ இல்லை அதைப் போன்ற ஒன்றையோ சொல்ல அங்கிருந்துதான் கிளம்பியது அரசூர் வம்சம் இரண்டாவது தேடல். ஆனால் மிகச்சரியாக கூகுள் மூலமாக நான் திண்ணை நோக்கி வந்து சேர்ந்தேன். திண்ணையில் மின்னிதழாக கதையின் பாதி வரை முடித்திருந்தேன், ஆனாலும் என்னவோ ஒன்று குறைவது போலவேயிருந்ததால் புத்தகமாகவே வாங்கியதைப் பற்றி முன்பே சொல்லியிருந்தேன்.

நாவலைப் பற்றி என்னுடைய விமர்சனத்தை எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். இரண்டு மூன்று முறை திரும்பத்திரும்ப புரட்டி இதை எழுதுகிறேன்.

"நீ ஆனாலும் புத்திசாலித் துருக்கண்டா கருத்தா.

அப்ப, சாது நாயக்கனாப் பாத்து ஆள் அமர்த்திக்கட்டா?"

இந்த வசனம் நாவலின் ஏதோ ஒரு பக்கத்தில் வருவது(280 பக்கம் வேண்டுமானால்). எனக்குத் தெரியவில்லை இதன் பின்னால் இருக்கும் "அரசியல்" எத்தனை பேருக்கு சுலபமாகப் புரியும் என்று. அரசியல் என்று குறிப்பிட்டது அதன் பின்னர் இருக்கும் விஷயத்தைப் பற்றி குறிப்பிடவே.

எங்கள் வீட்டிலெல்லாம் ஒரு பழமொழி அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார்கள். என்னவென்றால் "முட்டாத் துலுக்கனும் முரட்டு நாயக்கனும் சேர்ந்தா வேலைக்காகாது" என்பதுதான். வீட்டில் அடிக்கடி சண்டை நடக்கும் அது முட்டா துலுக்கனா, முட்டா நாயக்கனா என்பதைப் பற்றி. அவர் சொல்லியிருக்கும் அந்த மேற்கூரிய வசனத்திலும் கூட இந்த பழமொழியை அடிப்படையாக வைத்தே எழுதியிருக்கிறார். எங்கள் பக்கத்தைச் சேர்ந்த பழமொழி என்பதாலும் அடிக்கடி, "எங்க வீட்டாளுக(ஆம்பளை) டிஸிஷன் மேக்கிங்கில் தவறு செய்யும் பொழுதெல்லாம்", எப்படியென்றால் பழமொழி மாற்றப்பட்டு; முட்டா நாயக்கனாகவும், முரட்டு துலுக்கனாகவும்.

நான் ஏன் இதை சொல்ல வருகிறேன் என்றால் இந்த பழமொழியைப் பற்றித் தெரியாத ஒருவர் நாவலைப் படிக்கும் பொழுது இந்த இரண்டு வரிகளை கடந்து போய்விடுவது எளிது; அதாவது விஷயம் புரியாமல். இப்படி நிறைய விஷயங்களை நுண்ணிப்பாக கவனித்து இந்த நாவலை எழுதியிருக்கிறார் இரா.முருகன். இந்த நாவலைப் படித்தவுடனேயே ரிவ்யூ போன்ற ஒன்றை எழுதிவிடவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படிப்பட்ட ஒன்றை எழுதுவதற்கு முன்பு அதை இன்னும் இன்னும் மீள்வாசிப்பு செய்யப்படவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன்.

நாவலின் உரையாடல் மொழி இடத்திற்கு இடம் மாறுபடுவதும் அந்த மொழியில் பாண்டித்தியம் பெற்ற ஒருவர் எழுதுவது போன்ற நடையில் அந்தப் பாகம் இருப்பதும் படிக்கப்போய் இந்த ஆளால் எப்படி மூன்று வித்தியாசமான உரையாடல் மொழிகளில் தேர்ச்சி பெற்று இருந்திருக்க முடியும் என்ற வியப்பே எழுகிறது. தமிழ்நாட்டு பிராமணர் பாஷை, கேரளாவை மையமாகக் கொண்ட பிராமணர்களின் பாஷை; பிறகு அந்தக் கால ஜமீன்களின் பாஷை கைவந்திருக்கிறது லாவகமாய். மூன்று வித்தியாசமான்ன கதைகளையும் கதைக்களன்களையும் பாத்திரங்களையும் அவர் தனித்தனியே எழுதியிருப்பதற்கான வாய்ப்பு இருந்தாலுமே வியப்பே மிஞ்சியிருக்கிறது.

பிறகு நாவலின் அடிப்படை நாதமாக இருக்கும் மேஜிக்கல் ரியலிஸம்; ராஜாவுடன்(ஜமீன்தார்) அவருடைய இறந்து போன முன்னோர்கள் பேசுவது, மூன்று தலைமுறைக்கு முன்னர் இறந்து போன ஒரு பெண்ணுடன் நிகழ்காலத்தில் இருக்கும் ஒருவன் கூடுவது இப்படி உதாரணத்திற்காக இரண்டு சொல்கிறேன். நாவல் பின்னப்பட்டிருக்கும் கதையில் மாந்தரீக யதார்த்தம் தான் மிகமுக்கியமான விஷயம்.

எங்கள் வீட்டில் என்னை வளர்த்த என் அப்பாவின் அம்மா இருந்தார்கள். நாங்கள் எங்கள் பாஷையில் "பாச்சம்மா" என்றுதான் அழைப்போம். எனக்கு அதற்கான அர்த்தம் அவ்வளவு எக்ஸாக்ட்டா தெரியாவிட்டாலும் ஒரு வகையில் பாட்டி என்று தான் வரும். அம்மா சின்ன வயதில் என்னை பாட்டியிடம் விட்டுவிட்டு டீச்சர் டிரைனிங் படிக்கப் போய்விட்டதால் என்னை வளர்த்தது எல்லாமே பாட்டி தான் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் எனக்கெல்லாம் ரொம்பவும் முந்தைய ஜெனரேஷன் என்பதால் அந்தக் கால வழக்கப்படி ஆண் பிள்ளைக்குத் தான் அதிக சப்போர்ட் கிடைக்கும்; அவருடைய செல்லம் நான். எனக்குத் தெரிந்தே வீட்டில் நடக்கும் பிரச்சனைகளுக்கு என் சப்போர்ட்டாக வரும் ஆள்(ஒரே) அவர்தான். அந்தக் காலத்திலிருந்து அம்மா அப்பா இருவரும் அக்கா சப்போர்ட்.

அவருக்கு கடைசி காலங்களில் மனநிலை கொஞ்சம் தடுமாறியிருந்தது. அவருடைய கடைசி இரண்டு மூன்று ஆண்டுகள் அவருடன் இருந்தவன் என்ற முறையில் நிறைய விஷயங்களை நேரில் பார்த்திருக்கிறேன். அதாவது அவர் தன்னுடைய காலத்து மக்களிடம்(அனைவரும் இறந்தவர்கள்) பேசிக்கொண்டிருப்பது; எப்படி என்னிடம் அப்பா அம்மாவிடம் பேசுவாரோ அப்படி. உன்னிப்பாகக் கவனித்தால் அவரை சுற்றிலும் ஆட்கள் உட்கார்ந்து கொண்டோ இல்லை நின்று கொண்டோ, சுவற்றில் சாய்ந்து கொண்டோ பேசுவதைப் போல ஒவ்வொரு பக்கமும் திரும்பி அந்தந்த நபர்களின் பெயர்களைச் சொல்லிப் பேசிக்கொண்டிருப்பார்.

என்னால் கதையுடன் ஒன்றி படிக்க முடிந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகயிருக்க முடியும். வேண்டுமானால் எங்கள் குடும்ப பின்னணி என ஒருவாறு கதை என் கண்முன்னே நடப்பதைப் போன்ற பிம்பம் உருவானது என்றே சொல்லலாம். மந்திரம் வைப்பது, அதை எதிர்க்க தகடு வைப்பது, சாப்பாட்டில் மருந்து போடுவது, குடும்பத்திற்கே சூனியம் வைப்பது போன்ற "டெர்ம்"கள் எங்கள் வீட்டில் சர்வ சாதாரணமாக புலங்கும் விஷயங்கள் தான். இதன் காரணமாக என்னால் இந்தக் கதையைப் பற்றிய கேள்விகளை விடவும் ஒன்றத்தான் சுலபமாக முடிந்தது.

இப்பொழுதெல்லாம் ஒரு புத்தகம் படித்தால் அதைப் பற்றிய விமர்சனத்தை எப்படி வித்தியாசமாக(என்ன கொஞ்சம் "A"த்தனமாக, சுத்திச் சுத்தி, கொஞ்சம் சுயத்தைச் சொறிந்து கொண்டு) எழுத முடியும் என்று தான் யோசிக்கிறேன்(;-)). ஆனால் இந்தக் கதையில் அப்படி எழுத முடியாத அளவிற்கு விஷயம்; என்னவென்றால் இந்த நாவல் முழுவதுமே கதையுடன் பின்னிப்பிணைந்து இருப்பது அடல்ஸ் ஒன்லி கண்டெண்ட் தான். கதையையும் இந்த விஷயத்தையும் தனித்தனியே பிரித்தறிவதென்பது ரொம்பக் கடினமான விஷயம்.(இதுவும் நான் இந்த நாவலை படிக்க ஒரு காரணம் என்று நான் சொல்லவில்லை :)).

கதையென்ற ஒன்று பெரிதாகக் கிடையாதென்றாலும் நாவலை நகர்த்திக் கொண்டு போவதற்கான கதை நிச்சயமாய் நாவலில் உண்டு. நாவலில் இருந்து பிடித்த வரிகளை பிடித்துப் போட்டு அது சொல்லும் விஷயங்களை விளக்க எனக்கும் விருப்பம் தான். ஆனால் இந்த நாவலில் வரும் எனக்குப் பிடித்த வரிகளையோ வாக்கியங்களையோ எடுத்துப் போட நான் நினைத்தால் அது வம்பாகிவிடும் எப்படியென்றால் அப்புறம் திண்ணை ஆட்களும் இரா.முருகனும் உதைக்கவருவார்கள் என்பதால் அப்படியே விட்டுவிடுகிறேன். ஆனால் எக்ஸாம்புள்காக இரண்டு விஷயங்கள்.

"குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ
பாதி மறைந்த ஸ்தனமும்
பாங்காய் இடுப்பில் ஒட்டியாணமும்
வாழைத் தொடையும்
வடிவான தோளுமாய்க்
குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ"

"முனிவனவன் பெண்டாட்டி
முடிஞ்சு வச்ச கூந்தலிலே
செல்லமாத் தலைப்பேனா
கள்ளப் புருசனையும்
ஒளிச்செடுத்து வந்து
ஓரமாத் தலைவிரிச்சா
கச்சு அகற்றிப் பழம் போல
கனிஞ்சு தொங்கும் தனமிரண்டும்"

இவையெல்லாம் நாவலின் இடையில் வரும் சில பாடல் வரிகள். சில படங்களைப் பார்த்துவிட்டு இந்தப் படத்தை எப்படி எடுத்திருக்க முடியும் என்ற வியப்பு ஏற்படும். அதைப் போல இந்தக் கதையை எப்படி எழுதியிருக்க முடியும் என்ற வியப்புத்தான் மேலெளுவதை தவிர்க்க முடியவில்லை. எல்லாம் கற்பனையாக இல்லாமல், எல்லாம் நிஜமாகவும் இல்லாமல் ஒரு எப்படி எழுதியிருக்க முடியும் என்று நாவலின் இரண்டு பக்கங்களை படிக்கும் பொழுது வியப்பளிப்பதாக இருக்கிறது.

"காலம், இராமனுடைய அம்பு அல்ல. திரும்பி வந்து அம்பாறாத்தூணியில் தூங்கும் பழக்கம் அதற்குக் கிடையாது. ஓயாது முன்னே சென்று கொண்டிருக்கும் அதைத் தடுக்கவோ அல்லது வேகத்தடை செய்யவோ மனிதனால் இன்னும் முடியவில்லை.

இலக்கியத்திலாவது காலத்தை நிறுத்தி, தட்டி, ஒடுக்கி முன்னும் பின்னும் ஓடச்செய்ய, காலம் காலமாகப் படைபாளிகள் முயன்று வந்திருக்கிறார்கள் 'அரசூர் வம்சம்' நாவலும் அப்படி ஒரு முயற்சியே" என்ற பி.ஏ கிருஷ்ணனின் முன்னுரை வரிகள் தான் மனதில் ஓடுகிறது கதைக்கான விமர்சனம் எழுதவேண்டும் என்று உட்காரும் பொழுது. காலத்தை நிறுத்தி, தட்டு, ஒடுக்கி முன்னும் பின்னுமாக எழுதியிருக்கும் இரா.முருகனின் எழுத்துக்களோடு சேர்ந்து நாமும் பயணிக்கிறோம்.

ஜமீந்தார் உப்பை தன் மடியில் கட்டிக்கொள்ளும் பொழுது நாம் பக்கத்தில் இருந்து பார்க்கிறோம். சுப்பம்மா கிழவி "அடல்ஸ் ஒன்லி" பாட்டு பாடும் பொழுது ஆரம்பத்தில் கேட்கத் தொடங்கி பின்னர் காதை பொத்திக் கொள்கிறோம். சாமிநாதனும் வசுமதியும் அறைக்குள்ளே "மேட்டர்" செய்யும் பொழுது கதவருகில் நின்று பார்க்கிறோம் பின்னர் சாமிநாதனோடு வீடு எரியூட்டப்பட்டதும் வெக்கையில் நிற்கமுடியாமல் "ஐயோ பாவம்" என்று அலறியடித்து வெளியேறுகிறோம். "உன் பரம்பரையே கிறிஸ்தியானியாகப் போறது" என்று கிட்டாவய்யனைப் பார்த்து பைராகி சொல்லும் பொழுது மனம் பதறுகிறது.

"ஆமா அப்பு, என்னத்துக்கு வம்பு. வாய்ச்சதப் பத்தி வக்கணையாத் தெரியும். இப்பப் பார்த்ததோட வச்சு அளந்தா, சுண்டு விரல் தண்டி சமாச்சாரம் எல்லாம் அதுல்ல சேத்தியா, அடச் சேன்னு வெறுத்துப் போயிடும் இல்ல." என்று ஒரு கிழவி, புஸ்திமீசைக் கிழவனைப் பற்றி நக்கல் அடிக்க நாமும் சிரித்துக் கொள்கிறோம் இப்படி கதையினூடே நம்மையும் அழைத்துச் செல்லும் எழுத்து நடை இரா.முருகனுக்குச் சாத்தியமாகியிருக்கிறது. பொன்னியின் செல்வனுக்கும், என் பெயர் ராமசேஷனுக்கும் பிறகு புத்தகத்தை ஜஸ்ட் லைக் தட் பிரித்து படிக்கும் மற்றொரு புத்தகமாக எனக்கு அரசூர் வம்சம் கிடைத்திருக்கிறது.

நிச்சயமாக எழுத்துத் துறையில் கால் பதிக்கவோ இல்லை அதை நோக்கியோ நகரவேண்டும் என்ற ஆவல் இருக்கிறவர்கள் நிச்சயமாய் பலமுறை படிக்க வேண்டிய ஒரு புத்தகம் அரசூர் வம்சம் என்றால் அது மிகையாகாது.

Read More

Share Tweet Pin It +1

12 Comments

In கோவை பயணம்

கோவை பயணம்(பட்டறை பற்றியது அல்ல)

செல்லா பட்டறையைப் பற்றி சென்னை வலைபதிவர் சந்திப்பில் சொல்லியிருந்த பொழுதே. எனக்கான இடத்தை புக் செய்து கொண்டிருந்தேன்(செல்லா அப்பொழுது எல்லோருக்கும் இணைய வசதியுடன் கணிணி கிடைக்க ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருந்தார்.) பின்னர் இன்னொரு நாள் பாலபாரதியிடன் "கடலை" போட்டுக்க்கொண்டிருந்த பொழுது நான் கோவை வர ஆர்வமாகயிருப்பதாகவும். டிக்கெட் புக் செய்ததும் சொல்வதாகவும் சொல்லியிருந்தேன்.

பின்னர் பெங்களூருவிலிருந்து கோவைக்கு ரயிலிலும், கோவையிலிருந்து பெங்களூருக்கு ப்ளைட்டிலும் புக் செய்துவிட்டு செல்லாவுக்கு தகவல் சொன்னேன். இந்தச் சமயத்தில் எல்லாம் என்னுடன் பேச்சுலர் டிகிரி படித்துவிட்டு கோவையில் வேலை செய்து வரும் என் நண்பர், ரூம் மேட்டுக்குச்(ஹாஸ்டல் ரூம்மெட்) சொல்லியிருந்தேன். அவர் நான் இருப்பதும் காந்திபுரத்தில் தான் வந்ததும் ஒரு போன் செய்யுமாறும் தான் அழைத்துக் கொள்வதாகவும் சொல்லியிருந்தார். உண்மையான ப்ளான் படி ஞாயிற்றுக் கிழமை விடியற்காலை இரண்டரை மணிக்கு கோவையை ரீச் ஆவேன் நான்.



இந்தச் சமயத்தில் தான் நான் இண்டர்வியூ பானலில் உட்கார்ந்த பிறகு என்னால் முதன் முதலில் ரெக்ரூய்ட் ஆன நண்பர் ஒருவர் தான் கோவை செல்வதாக எதேச்சையாகச் சொன்னார்(இண்டர்வியூவில் எங்களிடம் இருந்து அதாவது முதல் ரவுண்டில் இருந்து இரண்டாவது ரவுண்ட் போகும் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் ரொம்பவும் கம்மியாக இருக்கும் எப்படியென்றால் பத்திற்கு ஒன்று தேறுவதே பெரிய விஷயம். இதைப் பற்றி தனியாக எழுதுகிறேன்). நான் என்னுடைய ப்ளானைச் சொல்லி அவர் எப்படி செல்கிறார் என்று கேட்டேன். அவர் தன்னுடைய தன்டர் பேர்டில் செல்வதாகச் சொல்ல அப்பொழுதே அரிப்பெடுக்கத் தொடங்கியது.



ஏற்கனவே டிக்கெட் புக் செய்திருந்ததாலும், அந்தச் சமயத்தில் என்னுடைய பெற்றோர் பெங்களூரில் இருப்பார்கள் என்பதாலும் முடிவெடுக்கத் தடுமாறிக் கொண்டிருந்தேன் ஆனால் பைக்கில் பயணம் செய்வதைப் பற்றி யோசிக்கக்கூட இல்லை; அதுதான் சந்தோஷமான விஷயம் ஆயிற்றே. பின்னர் முதலில் அம்மாவை சமாளித்து, அம்மா மூலமாய் அப்பாவைச் சமாளித்து இருவருக்கும் தெரியாமல் டூவீலரில் கோவை போவதென்பது முடிவானது. ஏனென்றால் இடையில் வரும் சனிக்கிழமை ரொம்பவும் முக்கியமான ஒன்று. அவர்கள் இருவரும் பெங்களூர் வந்த பிறகு வரும் முதல் சனி ஞாயிறு; நான் இருக்க மாட்டேன். அடுத்த சனி, ஞாயிறு அவர்கள் இருக்க மாட்டார்கள் என்று இடியாப்ப சிக்கல்.

பின்னர் இந்தப் பயணத்தைப் பற்றி நானும் நண்பரும் சிறிது நேரம் ப்ளான் செய்தோம், பெங்களூரிலிருந்து கோவைக்கு 400 KM, போகும் வழியைப் பற்றி எப்பொழுது ஆரம்பிக்கலாம் எப்பொழுது ரீச் ஆவோம் என்பதைப் பற்றி. பின்னர் நண்பர் தன்னுடைய டீம் லீடரிடம் முன்பே அனுமதி கேட்க; நாங்கள் வண்டியில் கோவை செல்வது பாதி கம்பெனிக்கு தெரிந்துவிட்டது. வெள்ளிக்கிழமை மதியம் கிளம்பவேண்டிவந்ததால் நண்பர் டீம் லீடரிடம் பெர்மிஷன் கேட்டார். எனக்கு அந்த ஃபார்மாலிட்டி எல்லாம் கிடையாது. தோ போய் டீ குடிச்சிட்டு வர்றேன்னு சொல்லிட்டு வெள்ளிக்கிழமை மதியம் கிளம்பியிருப்பேன்.

இந்த விஷயம் எங்கள் கம்பெனியின் இந்திய நிர்வாகிக்கிக்கு தெரியப்போக அவர் என்னிடம்; "என்னடா வெள்ளிக்கிழமை மத்யானம் வெளியில் போறியா; சொல்லவேயில்லை. உங்காளு தான் சொன்னான். அரைநாள் லீவு கேட்டிருக்கான் நீ கேக்கவேயில்லை; "ப்ங்க்" அடிக்கப்போறியா என்றார்" ஏன் இத்தனை பேச்சுவார்த்தைகள் என்றால் எங்கள் கம்பெனிக்கு "டெஸ்டிங்" மக்களை எடுக்கவேண்டு, சனிக்கிழமை இன் டர்வியூ செஷ்ட்யூல் செய்திருக்கிறார்கள். நான் அந்த இன் டர்வியூ பானலில் இருந்ததால் தான் இத்தனை கேள்வி. பின்னர் அவர் தான் அதுவரை சென்ற பைக் பயணத்தைப் பற்றி பேசப்போக ஒரு நல்ல மூடில் பெங்களூரில் இருந்து கிளம்பினோம்.

நண்பர் பெங்களூரை விட நம்ம ஊரில் பெட்ரோல் விலை கம்மி என்பதால் ஓசூரில் சென்று போட்டுக் கொள்ளலாம் என்று சொல்ல நான் தேவையில்லாமல் தமிழ்நாட்டை விட பெங்களூரில் "குவார்ட்டர்" விலை கம்மி என்று சொன்னேன். நாங்கள் முடிவு செய்திருந்த வழி பெங்களூர் - ஒசூர் - சேலம் - ஈரோடு - திருப்பூர் - கோவை. சாயங்காலம் ஒன்பதரை அல்லது பத்து மணிக்குப் போய்சேர்ந்துவிடலாம் என்று தான் நினைத்திருந்தோம். பெட்ரோல் போட வண்டியை நிறுத்தியது தான் முதல் முறை; நாங்கள் பெட்ரோல் போடும் பொழுதே கவனித்தோம் இருநூறு மீட்டரில் மழை கொட்டிக் கொண்டிருந்ததை. நண்பர் போகலாமா வெய்ட் பண்ணலாமா என்று கேட்டதற்கு, "மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டா; வெறும் கருப்புக் கொடியைக் காட்டியாரும் குடை பிடிக்க வேண்டாம்" என்ற வைரமுத்துவின் வரிகளைச் சொல்லாமலே போகலாம் என்றேன்.

நாங்கள் போகும் 80 கி.மீ வேகத்தில் வான் துளிகள், முகத்தில் படுவேகமாய் பட்டுக் கொண்டிருந்தது. மழையில் ஆட்டம்போடுவது வேறுமாதிரியானது என்றால் மழையில் பயணம் செய்வது வேறுமாதிரியானது. நல்ல ஓப்பன் ரோட்டில் இயற்கை செய்யும் வேடிக்கையைப் பார்த்துக் கொண்டே வண்டி ஒசூரை நோக்கி வேகமாகப் பயணித்தது. பின்னர் அடுத்த ஸ்டாப் டீ குடிக்க; டீ குடித்து விட்டு வந்துதான் பார்த்தோம். ட்ரிப் மீட்டர் "111" யைக் காட்டியது. டீ குடிப்பதற்காக நாங்கள் முதல் முறை நிறுத்தியது தான் இப்படி என்றில்லாமல் மொத்த 400 கி.மீட்டர் தூரத்திலும் 4 முறை தான் நாங்கள் நிறுத்தினோம் அதுவும் ஏறக்குறைய பதினைந்து இருபது நிமிஷங்கள் மட்டுமே.







பெங்களூர் - சேலம் ரோடு நன்றாகவேயிருக்கும்; அதுவும் ஒசூர்வரை பிரம்மாதமாகவும் அதற்கு மேல் நன்றாகவும். ஆனால் சேலம் - ஈரோடு ரோடு அத்தனை வசதிகரமானதில்லை. அதுவும் பெருந்துறையில் இருந்து திருப்பூருக்கு ரோடேயில்லை என்று கூட சொல்லலாம். சங்ககிரியில் வழியில் இரவு உணவை முடித்துக் கொண்டு கிளம்பினோம்.





அப்படியிப்படி என நாங்கள் திருப்பூருக்கு பத்து மணி வாக்கில் வந்து சேர்ந்திருந்தோம். நண்பர் உடுமலைப்ப்பேட்டை போகவேண்டுமாதலால் அவர் வேறுவழியை எடுக்க நான் கோவைக்கு பஸ் பயணம் மேற்கொண்டேன். கண்டெக்டரிடம் "காந்திபுரம் வந்ததும் சொல்லுங்க" என்று மட்டும் சொல்லிவிட்டு அதுவரை டூவீலரில் வந்த பயணக்களைப்பை போக்கும் விதமாக நன்றாகக் கால்நீட்டி படுத்துக் கொண்டாயிற்று. கோவை வந்ததும் தான் எழுந்தேன்.

பின்னர் நண்பருக்கு தொலைபேசி அழைத்தேன் வந்து அழைத்துச் சென்றவர் அறையிலேயே படுத்துக்கொண்டேன். நண்பருக்கு அடுத்தநாள் வேலைநாள், என் ப்ளான் படி அடுத்த நாள் ஊட்டி செல்ல வேண்டும் ஆனால் அசதியில் காலை ஒன்பது மணிக்கு எழப்போக ஊட்டி ட்ரிப் கான்ஸல் ஆனது பின்னர் இன்னும் இரண்டு மணிநேர உறக்கத்திற்குப் பிறகு பக்கத்தில் இருந்த தியேட்டரில் "உன்னாலே உன்னாலே" நல்லவேளை ரம்பம் போடவில்லை பார்க்கும்படியாகத்தான் இருந்தது.



பின்னர் சாயங்காலம் நண்பர் அலுவலகத்தில் இருந்து வந்ததும் பக்கத்தில் இருந்த ஒரு "நான் - வெஜ்" ஹோட்டலில் ஒரு கட்டு கட்டிவிட்டு சென்றது தான் "நினைத்து நினைத்துப் பார்த்தேன்". கொக்கா மக்க, படுக்க போட்டு கழுத்தில் ரம்பத்தை வைத்து அறுக்கிறார்கள். சரி கடைசி வரைக்கும் ஏதாச்சும் சொல்லுவாங்ய என்று எதிர்பார்த்தே நொந்து போனோம்.





பின்னர் அடுத்தநாள் "பட்டறை" முடிந்ததும் கிளம்பி விமானத்தில் பெங்களூருக்கு வந்து சேர்ந்தேன்.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In பதிவர் சந்திப்பு வீடியோ பதிவு

வீடியோ பதிவு - முகுந்தின் உரையாடல்

இரண்டாவது அமர்வில் முகுந்த் பேசியவற்றில் சிலவற்றை வீடியோ எடுத்திருந்தேன். மதிய நேரம், அறையில் அவ்வளவாக வெளிச்சம் இல்லாததாலும் முகுந்த் பேசிய இடத்தில் அத்தனை வெளிச்சம் இல்லாத காரணத்தாலும் ஒரு மாதிரி(!!!) வந்திருக்கிறது.

பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

அறிமுகம் மற்றும் எ-கலப்பை பற்றி.


தமிழ்விசை, அதியன் மீதி விஷயங்கள் பற்றி.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சுய சொறிதல் பதிவர் சந்திப்பு

கோவை பதிவர் சந்திப்பு - என் குறிப்புகள் (இரண்டாம் அமர்வு)

இரண்டாம் அமர்வு என்று போட்டாலும் விஷயம் ஆரம்பிப்பது, முதல் அமர்வின் முடிவிலிருந்து. சென்ஷி வாங்க கீழே போய்ட்டு வரலாம் என்று அழைக்க கிளம்பி கீழே வந்தோம். அங்கே உண்மைத் தமிழன், சுகுணா திவாகர், அவருடைய நண்பர், லிவிங் ஸ்மைல் வித்யா போன்றோர் நின்று கதைத்துக் கொண்டிருந்தனர். நான் சுகுணா திவாகரை சென்னை வலைபதிவர் சந்திப்பில் சந்திப்பதற்கு முன்னமே தொலைபேசியில் பேசியிருக்கிறேன். அதனால் கொஞ்சம் போல் அறிமுகம் உண்டு.

நேரடியாக விஷயத்திற்கு இறங்கி பின்நவீனத்துவ படைப்புக்களை(கவிதைகளை) எழுதுவதோடு மட்டுமல்லாமல், சாதாரண(என்னை மாதிரி) மக்களுக்கும் புரியும் வகையில் பின்நவீனத்துவக் கோட்பாடுகளை விளக்கும் விதமாக பதிவெழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அதற்கு உதாரணமாக ரமேஷ்-பிரேமின் பேச்சும்-மறுபேச்சும் புத்தகத்தைப் பற்றிச் சொல்லி அதுபோல நீங்கள் எழுதவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தேன். சுகுணா அவர்கள், பின்நவீனத்துவ ஜார்கன்'ஸ் இல்லாமல் எழுத முடியாது என்றும் முன்னமே சில பதிவுகள் இப்படி எழுதியிருப்பதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். சென்ஷியும் கூட என்னமோ அவரிடம் கேட்டுக்கொண்டிருந்தார் என்னவென்று நினைவில் வரமறுக்கிறது.

செல்லா மதிய உணவிற்கு ஏற்பாடு செய்திருந்ததால், அவருடைய நபர் எங்களை அந்த ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல காத்திருந்தார். ஆனால் சின்ன சின்ன குழுக்களாகப் பிரிந்து கௌதம் ஆர்கேட் வெளியில் பேசிக் கொண்டிருந்தார்களே ஒழிய யாரும் ஹோட்டலை நோக்கி நகர்வதாகத் தெரியவில்லை. பின்னர் வேறவழி நானே ஆரம்பித்து வைத்தேன் பயணத்தை. இந்தச் சமயத்தில் மேலிருந்து கீழே வந்த மா.சிவக்குமாருடனும் முகுந்துடனும் இணைந்து ஹோட்டலுக்குச் சென்றேன். பின்னர் தான் என்னிடம் மாட்டிக்கொண்டனர் இருவரும்; நான் போட்ட ரம்பத்தில் இரத்தம் சொட்ட சொட்ட அவர்கள் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தனர்.

முகுந்திடம் உபுண்டு உபயோகிக்க ஆசை இருப்பதாகவும் ஆனால் எங்கேயிருந்து தொடங்குவது என்றும் கேட்டேன். கம்ப்யூட்டர் உபயோகிக்கத் தொடங்கி இவ்வளவு ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னும் ஒரு OS நானாக இன்ஸ்டால் செய்திராத ரகசியத்தைச் சொல்லி. என்னைப் போன்ற ஆட்களுக்கு உதவ எதாவது இணையத்தளம் இருக்கிறதா என்று கேட்டுக் கொண்டிருந்தேன். அவர் உபுண்டு இணையத் தளத்திலேயே அனைத்து விவரங்களும் கிடைக்கும் என்று கூறினார்.

பின்னர் சிவக்குமாரிடம் நீங்கள் பங்குவணிகத்தில் ஈடுபடுகிறீர்களா என்று கேட்டு பின்னர் அதைப் பற்றி வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். முகுந்த் நான் பங்குச்சந்தைப் பற்றி தெரிந்துகொள்ள சோம. வள்ளியப்பனின் "அள்ள அள்ளப் பணம்" நன்றாகயிருக்கும் என்றார். தான் முதலில் கொஞ்ச காலம் நேரடி பங்கு வர்த்தகத்தில் இருந்தாலும் இப்பொழுதெல்லாம் மியூட்சுவல் பண்ட் தான் என்று சொல்லி கொஞ்சம் பயப்படவைத்தார். நான் பருப்பு மாதிரி வாழ்க்கையில் எப்பவும் தான் ரிஸ்க் எடுத்துக் கொண்டேயிருக்கிறோமே இதிலும் எடுப்போம் என்று கூறினேன். மா. சிவக்குமார் தன்னுடைய பாயாசத்தை என்னிடம் கொடுத்ததற்கு என்னுடைய ரம்பம் தான் காரணம் என்று நான் நினைக்கவில்லை.

திரும்பி வரும் வழியில் மா.சிவக்குமார் எஸ்கேப் ஆகிவிட முகுந்த், மற்றும் வித்யா பார்ட்னர்ஷிப்பில் வந்தேன். வித்யாவிடம் திருச்சியில் எந்தப் பக்கம் என்று விசாரித்துக் கொண்டிருந்தேன் பின்னர் முகுந்த் தான் பேச்சுலர்ஸ் மற்றும் மாஸ்டர் படித்த் "வரலாறை" எங்களிடம் சொன்னார். நாங்கள் மேலேறி வந்த பொழுது அங்கே குறைவான நபர்கள் தான் இருந்தனர், என் நினைவின் படி, சென்ஷி, உண்மைத் தமிழன், மா.சிவக்குமார், கோவை மணி, வினையூக்கி இவர்கள் தான் இருந்தனர்.

ஏற்கனவே முகுந்தையும் மா.சிவக்குமாரையும் ப்ளேடு போட்டு சக்க பார்மில் இருந்த என்னிடம் இந்த முறை மாட்டியது வினையூக்கி, சென்ஷி, அப்புறம் கோவை. மணி. வினையூக்கியிடம் எப்படிங்க உங்களால மட்டும் இத்தனை கதை எழுத முடியுதுன்னு ஒரு காலத்தில் எல்லோரும் என்னிடம் கேட்ட கேள்வியை நான் அவரிடம் கேட்க அவர் அந்த ரகசியத்தை விளக்கினார். நான் அவரிடம் பின்னர் ஏன் நீங்க இன்னும் நல்லா எழுதக்கூடாதுன்னு கேட்டதை மனிதர் ரசித்திருக்க மாட்டார் என்றே கருதுகிறேன். நான் என்னுடைய கனவான "ஒரு நல்ல சிறுகதை"க்கான அம்சங்கள் எப்படியிருக்க வேண்டும் என்று பதினைந்து நிமிடம் "உரை" நிகழ்த்தினேன். ஆனால் இதற்கெல்லாம் முன்னமே இந்த வரையறையை எல்லாம் நான் ஃபாலோ பண்ணுகிறேனா என்று கேட்கக்கூடாதென சொல்லியிருந்தேன்.

முடிக்கும் முகமாய் ஆபிதீன் எழுதிய "தினம் ஒரு பூண்டு" தான் இதுவரை நான் படித்ததிலேயே அதிகம் பிடித்த சிறுகதை என்று பில்டப் கட்டினேன். சிறுகதை மீதான என்னுடைய ஆசை காணாமல் போக்கும் பொழுதெல்லாம் அந்தக் கதையை ஒருமுறை படித்துவிட்டு இன்னும் நான் அந்தக் கதை பக்கத்தில் கூடவரவில்லையென்று மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டு என்னை சமாதானம் செய்துகொள்வேன் என்று கூறி அவர்களை அதிர்ச்சி அடைய வைத்தேன். ஏனென்றால் உட்கார்ந்திருந்த மூவரும் அந்தக் கதையை படித்திருக்கவில்லை.

இடைமறித்த சென்ஷி, ஒரு விஷயம் எழுதுறீங்கன்னா நாலு பேருக்கு போய்ச் சேரணும்னு நினைக்க மாட்டீங்களா என்று கேட்டார் நீங்கள் எழுதும் பதிவுகளுக்கு எத்தனை ஹிட்ஸ் வருகிறதென்றும் கேட்க நான், எனக்காகத் தான் நான் எழுதுகிறேன் என்றும் மற்றவர்கள் படிப்பதை படிக்காமல் இருப்பதைப் பற்றி கவலைப் படுவதில்லை என்று சொன்னேன். பின்னர் எப்படியோ விஷயம் பக்கத்தில் "பாரதியை" பற்றி எழுதியிருந்த விஷயத்திற்கு வந்தது. லக்ஷ்மி அதில் நான் ஒரு முன்முடிவுடனேயே விவாதத்தில் இறங்குவதாக சொல்லியிருந்ததை நினைவுபடுத்திய சென்ஷியிடம். ஆமாம் நான் சரி என்று தீவிரமாக நம்பும் ஒரு விஷயத்தைப் பற்றித்தான் எழுதமுடியுமே தவிர, நான் தவறு என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு ஆனால் சரியென்று ஒருவிஷயத்தை என்னால் எழுத முடியாதென்றும் அதனால் முன்முடிவுகளை மறுக்கமுடியாதென்றும் சொன்னேன்.

பாரதியின் திருமணத்தைப் பற்றி முன்னம் பதிவில் பின்னூட்டம் போட்டிருந்ததையே இன்னொரு முறை சொன்னேன். நாங்கள் இப்படி பேசிக்கொண்டிருப்பதை தூரத்தில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த மா.சிவக்குமார் நான் மெஷின் போல் பேசுவதாக கம்ப்ளெய்ண்ட் செய்தார்.

பின்னர் அப்படி இப்படி என அடுத்த அமர்வு தொடங்கியது. முகுந்த் எ-கலப்பை, தமிழ்விசை, அதியன், மீபோ பற்றிய நல்லதொரு அறிமுகத்தைக் கொடுத்தார். எப்படியென்றால் தீவிர இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஃபேன் ஆன நான் தற்சமயம் பயர் பாக்ஸில் உட்கார்ந்து டைப் செய்து கொண்டிருக்கிறேன் என்றால் காரணம் அவருடைய செஷன் தான். பத்திரிக்கையாளர்களோ இல்லை வீடியோ எடுப்பவர்களோ இல்லாததால் என்னமோ ரொம்பவும் பழகியவர்கள் சொல்லித்தருவது போலத்தான் இருந்தது.

இடையிடையில் என்னுடைய தேவை காரணமாக வெளியில் சென்று சென்று வந்துகொண்டிருந்தேன். முகுந்த் முடித்ததும் சிவக்குமார் Joel on software பற்றி ஆரம்பித்தார்; சொல்லப்போனால் வலைபதிவு கன்டென்ட் எப்படி இருக்கலாம் என்பதைப் பற்றித் தான் பேசினார் என்று வைத்துக்கொள்ளலாம். நான் ரொம்ப காலமாக ஜாவாவில் ப்ரொக்கிராம் எழுதுவதைப் பற்றி, ப்ரோஜெக்ட் செய்வதைப் பற்றி, இன்டர்வியூவிற்கு பிரிபேர் செய்வது பற்றி தமிழில் எழுதலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதை ஒரு தொடக்க நிலையிலாவது கொண்டுவந்து வைக்க வேண்டும் என்பதைப் பற்றி தீவிரமாக யோசித்து வருகிறேன்.

பின்னர் பாலபாரதி வீடியோ கான்ப்ரன்ஸ் செய்ய முயற்சிகள் தொடங்க, பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த மா.சிவக்குமார் "ழ" கணிணியில் இருந்தவர் என்பதால் எனக்கு இருந்த சில கேள்விகளைக் கேட்டேன் அவரும் "அரசியல்" எதுவும் இன்றி விளக்க்கினார். நண்பர்களுடன் இன்னும் உரையாட வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் இருந்தாலும்(;)) நான் செய்து கொண்டிருந்த அரேஞ்மென்ட்கள் அதற்கு உதவாததால். சிறில் அலெக்ஸுடன் மற்றவர்கள் பேச ஆரம்பிக்கும் பொழுதே நான் கிளம்ப வேண்டி வந்தது.

இவர்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகள்.

* சென்ஷி நிறைய சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன். அதை அவரிடமும் சொன்னேன். ஆளு ரொம்ப நரம்பாயிருக்கிறாரு.

* வினையூக்கி ரொம்பவும் தீவிரமாக எல்லோரும் பேசுவதை கவனித்து வருகிறார்.

* மா.சிவக்குமார் ரொம்பவும் ஆப்டிமிஸ்டிக்காக இருக்கிறார். பழகுவதற்கு இனிய மனிதர்; ப்ரொபைலில் இருக்கும் படத்தில் ஏன் கண்ணாடி இல்லாமல் இருக்கிறார் என்று தெரியவில்லை. கண்ணாடியுடன் இருக்கும் பொழுது இன்னும் பிரகாசமாகயிருக்கிறார்.

* பாலபாரதி ஒரு இடத்தில் நில்லாமல் ஓடிக்கொண்டேயிருந்தார். அவர் ரூமிற்குள் உட்கார்ந்திருந்த நேரம் குறைவாகத் தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

* பாமரன் ரொம்பவும் ப்ராக்டிகலான ஆளாகயிருப்பார் என்று நினைக்கிறேன். ஸ்பாண்டேனியஸ்ஸாக அவர் அடிக்கும் கமெண்ட்கள் நன்றாகயிருக்கின்றன.

* உண்மைத் தமிழன் ரொம்பவும் மெதுவாகப் பேசுகிறார், இதை வருத்தத்துடன் அவரிடம் சொன்னேன். இங்கே பதிவெழுதும் ஆளுக்கும் சந்திப்புக்களில் பார்க்கும் ஆளுக்கும் எனக்கென்னமோ வித்தியாசம் இருப்பதாகப்பட்டது.

* ராஜாவனஜ் மதியம் முகுந்த் பேசிக்கொண்டிருக்கும் பொழுது கடைசி பெஞ்ச் மாணவன் போல் தூங்கிக்கொண்டிருந்தார். நான் வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன் அதை.

* முகுந்த் துறுதுறுவென இருக்கிறார் எறும்புகள் குழுவில் இருந்த பழக்கமோ தெரியாது. இவரை நிறைய எழுதச் சொல்லி வற்புறுத்தினேன்.

* செல்லா மற்றும் இன்னும் சிலரை பார்க்கமுடியவில்லை என்ற வருத்தம் உண்டு.

Read More

Share Tweet Pin It +1

13 Comments

In இப்படியும் ஒரு தொடர்கதை தொடர்கதை

நந்திகேஸ்வரரும் நச்சு ஐடியாவும்

பெண்கள் கார், மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஓட்டலாமா கூடாதா என்ற விவாதம் பெரும்பான்மையான ஆண்களுக்கு சுவாரசியம் தருவதாகத்தான் இருக்கும் என்பது எனக்கு கடைசி தண்ணிப் பார்ட்டியின் பொழுதுதான் தெரியவந்தது. ஏறக்குறைய நான் சந்தித்த எல்லா ஆண்களுக்குமே ஏதாவது ஒரு வகையில் பெண்கள் வண்டி ஓட்டுவதால் பிரச்சனை ஏற்பட்டிருக்கிற விஷயமும் தான்.

“உனக்குத் தெரியாது கார்த்திக், இப்படித்தான் ஒரு தடவை இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு பன்னார்கெட்டா ரோட்டில் ஹனிவெல்லிற்கு கொஞ்சம் முன்னால் இருக்ற பிலேக்ஹல்லி பஸ்டாண்ட் பக்கத்தில் ஒரு ஆக்ஸிடென்ட்...”

“யாருக்கு...”

“வேற யாருக்கு எனக்குத்தான். அப்ப எல்லாம் நான் எஃப் 2 ஓட்டிக்கிட்டிருந்தேன். ரெட் சிக்னலுக்காக வண்டியை நிறுத்திட்டி; பச்சைக்காக வெய்ட் பண்ணிக்கிட்டிருந்தேன். நச்சுன்னு யாரோ பின்னாடி இடிக்கிற மாதிரி இருந்ததால திரும்பிப் பார்த்தா ஒரு டாடா இண்டிகா பம்பரில் இடிச்சி நிக்குது. ‘கொய்யால’ அப்படின்னு சவுண்ட் உட்டுட்டு திரும்பிப் பார்த்தா டிரைவர் சீட்டில் ஒரு பிகரு..”

“அப்புறம்...”

“நான் சக்க கோபத்தில் ஸ்டாண்ட் போட ரெடியாகுறேன்; அந்தம்மா வேகவேகமா ரிவர்ஸ் எடுக்குறேன் பேர்வழியென்று ரிவர்ஸ் போட்டு ஆக்ஸிலேட்டர் கொடுக்க அது திரும்பவும் என் மேல வந்து முட்டி நான் நிலை தடுமாறி கீழே விழ வண்டி என் மேல் விழன்னு ஒரே காமெடியாப் போச்சு. அந்த பிகருக்கு ரிவர்ஸ் கியரே போடத்தெரியலை. பிரேக்கை அமுக்கிறேன்னு திரும்பத்திரும்ப ஆக்ஸிலேட்டரை அமுக்க; அன்னிக்கு ஒரே பக்வாஸா போச்சுது.”

ஆறு ஏழு பேரா தண்ணியடிக்க வந்திருந்த இடத்தில் ஏதோ ஞாபகமாய் இதைச் சொல்ல எல்லோரும் கபகபவென்று சிரிக்கத்தொடங்கினர்.

கார்த்திக் கொஞ்சம் சீரியஸாய், “கடைசியில் என்னதான் ஆச்சுது.”

“ஒரு வழியா ப்ரேக்கைப் போட்டு வண்டியை விட்டு இறங்கினா பாரு; ஒன்றரை அடிதான் இருக்கா. அவ சீட்டில் நிமிர்ந்து உக்கார்ந்து வண்டி ஓட்டினா ஆக்ஸிலேட்டருக்கு கால் எட்டாது பார்த்துக்க. அதனால கீழே குனிஞ்சு ஆக்ஸிலேட்டரை அமுக்குறது திரும்ப மேலவந்து ரோடு பாக்குறது பின்னாடி திரும்ப கீழிறங்கி...

கேட்டா லைசன்ஸும் இல்லையாம், வேறென்ன சாப்ட்வேர் கம்பெனியில் வேலை வர்ற காசை என்ன பண்றதுன்னு தெரியாம கார் வாங்கிட வேண்டியது. பின்னாடி இப்படித்தான்...”

நான் சைகை செய்து காண்பித்தேன் குனிந்து ஆக்ஸிலேட்டரை அமுக்கிவிட்டு, தலையை தூக்கு ரோடைப் பார்ப்பது போல. இப்படி ஆரம்பித்த அன்றிரவு ஒவ்வொருவர் ஒவ்வொரு கதை சொல்லப்போக கடைசியில் எந்தப் பொண்ணாவது ரோட்டில் ஆக்ஸிடெண்ட் பண்ணாம இருந்திருப்பாங்களா என்ற கேள்வியுடன் நான் இன்னொரு மாக்டெய்ல் ஆர்டர் செய்ய, அந்த ஏழு பேரிலேயே அதிக வயதுக்காரனான யோகேஷ் பர்தேஷி.

“டபுள் மைண்டட் ஆளுங்க மோகன், எப்பப்பாரு எதையாவது மனசுல நினைச்சிக்கிட்டே வண்டி ஓட்டினா பின்ன எப்படி.; கான்ஸண்ட்ரேஷன் இல்லாமப் போறதால இப்படியெல்லாம் ஆகுது. இந்த பொண்ணுங்களோட புருஷன்களுக்கும் இப்படி நடக்கும்னு தெரியும் அதை அவன் சொன்னா பிரச்சனையாகும் பட்டுத் தெரிஞ்சிக்கணும்னு விட்டுறானுங்க படுபாவிங்க.

தெரியுமா நான் கொஞ்ச நாளாவே கார் ஓட்டுறது ஆம்பிளையா பொம்பளையா அப்படின்னு பார்த்துட்டுத்தான் ஓட்டுறது. பொம்பளையா இருந்தான்னு வை. நாலடி அந்தப்பக்கம் தான் வண்டியை ஓட்டுவேன் தெரியுமா?

அதுசரி உன்னை இடிச்ச வண்டி எதுன்னு சொன்ன?”

“ஏன் கேக்குற யோகி? டாட்ட இண்டிகா...”

“இல்ல என் பொண்டாட்டிக்கிக் கூட அதுதான் ஒன்னு வாங்கிக் கொடுத்துறுக்கேன் அதான்...” என்று பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல எதிரெதிர் திசையில் உட்கார்ந்து தண்ணியடித்துக் கொண்டிருந்தவர்கள், சிரித்த சிரிப்பில் பிராந்தி, மாக்டெய்ல், சிக்கன் பீஸ், மசாலாக் கடலை என விதவிதமாய்ப் பறந்தது டேபிள் முழுவதும் எதிர் எதிர் திசைகளில்.

கடைசியில் போனவர்கள் போக மீதி இரண்டு பேர் டக்கீலா அடித்துக் கொண்டு எலுமிச்சை, உப்பை உறிஞ்சிக் கொண்டிருக்க எனக்கு அந்த ஆக்ஸிடென்ட்டிற்குப் பிறகு நடந்த நிகழ்வுகள் கொஞ்சம் கொஞ்சமாய் கண்முன்னே தோன்றி மறைந்தது.

“இங்கப் பாருங்க உங்களுக்கு இப்ப நேரம் சரியில்லையாம், வாராவாரம் திங்கட் கிழமை சோமேஸ்வரர் கோவிலுக்குப் போய் நெய்விளக்குப் போடச்சொல்லி அத்தம்மா சொன்னாங்க.

நீங்கதான் என்னமோ பெரிஸா நாத்தீகம் பேசிக்கிட்டு வரமாட்டேன்னுட்டீங்க, இப்பப் பாருங்க இப்படி ஆய்டுச்சு.”

பெரும்பாலும் நாம் வாயை திறக்க முடியாத சூழ்நிலை இப்படித்தான் ஏற்படும். அக்கா வீட்டிற்குப் போயிருந்த அம்மா பக்கத்தில் இருந்த ஜோசியக்காரனைப் பார்க்கப் போக அவன், சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வருஷம் கொஞ்சம் இப்படித்தான் இருக்கும். ஏதாவது சிவன் கோவிலுக்குப் போய் நெய் விளக்குப் போட்டா சரியாய்டும்னு சொல்லப்போக, பாவாவால், நானும் மாட்டினேன் ஒரே ராசி ஒரே நட்சத்திரம். பரிகாரம் சுலபமாய் அகிலாவிற்கு சொல்லப்பட்டது.

இப்பல்லாம் சாயந்திரம் சீரியல் பார்க்க உட்கார்ந்தா எழுந்திருக்கிறதே கிடையாது அப்படின்னாலும், பாவாவிற்காக அக்கா திங்கட் கிழமைகளில் நெய்விளக்குப் போடப்போய், அது என் தலையில் விடிந்தது. வேறென்ன அண்டர் கிரவுண்ட் பாலிடிக்ஸ். அகிலா திங்கள் கிழமை ஒரு நேரத்தைப் பிடித்துக் கொண்டு தொங்கினாள். அவளுக்கு தான் பீரோவில் அடுக்கி வைத்திருக்கும் பட்டுப் புடவைகளை போட்டு உடுத்திக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு பவானிக்கு வீட்டுப் பாடம் செய்யாமல் இருக்க; இப்படி ஒரு க்ரூப்பாக் கிளம்ப கடைசியில் மாட்டிக்கொள்வது நான்.

‘பக்’ களின் தலைமேல் விழுந்து நான் புரண்டுக் கொண்டிருக்கும் பொழுது வீட்டிலிருந்து தொலைபேசப்படும், ‘இன்னும் கிளம்பலையா?’ என்று. இப்பொழுதெல்லாம் ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டால் வாயு கோளாறு வருவதால் வேறுவழியில்லாமல் கிளம்பிப் போனால். பட்டுப் புடவை, அதற்கு மேட்சிங்காக முத்தோ, பவளமோ, தங்கமோ உடம்பெல்லாம் புரள, அப்பொழுது தான் குளித்துவிட்டு நீண்ட கூந்தலின் நுனியில் மட்டும் முடிச்சுப் போட்டு தயாராக கிளம்பி நிற்கும் அகிலாவைப் பார்த்தால் அப்படியே தூக்கிக் கொண்டு கட்டிலுக்குப் போகத்தான் மனம் வரும். திரும்பவும் ஹோட்டல் சாப்பாடு நினைவுக்கு வர ‘தேமே’ என்று இல்லை ‘ஞே’ என வண்டி சோமேஸ்வரர் கோவிலுக்குப் புறப்படும். அந்தப் பக்கம் ஒன்வே ஆதலால், அல்சூர் போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில் காரை நிறுத்திவிட்டு அங்கிருந்து கோவிலுக்கு ஒரு நடை.

சொல்லப்போனால் எனக்கு நல்லது ஏற்படும் என்று நெய் விளக்கு போடப் புறப்படவில்லை என்றும் அங்கிருந்து கோவிலுக்கு இருக்கும் நூறு மீட்டர் தொலைவை நாங்கள் கடக்கும் பொழுது ரோடே திரும்பிப் பார்க்கும் சந்தோஷத்திற்காகத்தான் அகிலா நெய் விளக்குப் போடவருகிறாள் என்றும் என் மனதிற்கு பட்டது சாதாரண நிகழ்வாய் இருக்காது என்றே தோன்றிக் கொண்டிருந்தது அன்று.

நான் நந்திக்குப் பக்கத்திலேயே நின்று கொண்டு வரவில்லை என்பது போல் சைகைகாட்ட, எனக்கு மட்டும் தெரிவது போல், திருஷ்டி சுத்திப் போடும் பொழுது சம்பிரதாயத்திற்காக “தூ, தூ, தூ” என்று எச்சில் துப்புவதைப் போல் உதட்டைக் குவித்து ஒரு முறை துப்பிக் காண்பித்தாள். சாதாரணமாக என் பொண்டாட்டி அப்படி செய்பவள் இல்லை தான், பெரும்பாலும் ஊடல் பெருத்து அதன் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரும் பொழுதோ இல்லை நான் செய்த ஏதாவது ஒன்றிற்கு அவளால் செயலால் எதிர்க்கமுடியாத ஆனால் எதிர்ப்பை காட்டியே ஆகவேண்டிய நிலையில் இப்படிச் செய்வாள். இதுதான் முதன் முறையாக பொதுஇடத்தில் அதுவும் கோவிலில் செய்தாள்; அதனால் நான் அடைந்த ஆச்சர்யம் அவள் கண்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். கண்ணடித்துக் காண்பித்தாள், இந்தப் பொண்ணுங்களுக்கு தைரியம் அதிகம் தான் என்று நினைத்தவனாய் பவானியை என்னுடன் நிறுத்திக் கொள்ள,

“பாவா” என்று சொல்லி கண்களால் பயமுறுத்தினாள்.

நான் “சர்தான் போடி” என்பதைப் போல அவனை இழுத்துக் கொண்டு நந்திக்கு எதிரில் இருந்த மணல் பரப்பில் உட்கார்ந்தேன். இன்றைக்கு நைட் ரொம்பவும் கெஞ்ச வேண்டியிருக்காது என்று நினைத்தவனுக்கு பக்கத்தில் இருந்த நந்தி திரும்பிப் பார்ப்பதைப் போல் இருந்தது.

அகிலா நெய்விளக்கேற்றிவிட்டு பிரகாரத்தைச் சுற்றிவிட்டு வரும் பொழுது, பவானி நந்தியின் வாலைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான். நான் அவனுக்கு நந்தியின் காது என்று உணர்த்தும் படியாக என் காதைத் தொட்டுக் காண்பிக்க. அவன் காலியாக இருந்த நந்தியின் இந்தப் பக்கத்து காதை விட்டுவிட்டு, இன்னொரு காதில் தன்னுடைய கஷ்டத்தையெல்லாம் ரொம்பவும் சீரியஸாய் சொல்லிக் கொண்டிருந்த ஒரு பெரியவரின் காதை பிடித்து இழுக்க பிரச்சனை ஆகயிருந்தது. ஆனால் இப்படி வம்பு செய்தது சின்னப் பையன் என்பதால் அவரும் அவனை கொஞ்சி விட்டு என்னிடம் அனுப்பிவிட்டார். இதையெல்லாம் தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டே அருகில் வந்த அகிலா,

“இதெல்லாம் உங்க வேலைதானா?” என்று கேட்க

“இல்லம்மா, நான் நந்திகேஸ்வரர் கதையைச் சொல்லி, உங்கம்மா ஈஸ்வரர் கிட்ட மனு போட போயிருக்கா, அவர் எந்த மூடில் இப்ப இருக்கிறாரோ தெரியாது. ஆனால் உனக்கு ஈஸ்வரர் கிட்ட என்ன நடக்கணும்னு வேண்டுறியோ அதை நந்திகேஸ்வரர் கிட்ட சொன்னா அவர் ஈஸ்வரர் நல்ல மூடில் இருக்கும் பொழுது சொல்லுவார், சீக்கிரம் நிறைவேறும்.

அதனால அவர் காதில் போய் விஷயத்தைச் சொல்லுன்னு சொன்னேன். அதுக்கு உன் மகன் பெரிய அறிவாளியாய் என்ன கேட்கன்னு கேட்டான். நான் உங்கப்பா நினைக்கிறது இன்னிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாம நடக்கணும்னு போய் வேண்டிக்கடான்னு சொன்னேன்...” என்று சொல்ல

முகமெல்லாம் சிவந்தவளாய், பக்கத்தில் உட்கார்ந்து தொடையைக் கிள்ளினாள்.

“உங்களுக்கு கொஞ்சம் கூட அறிவே கிடையாது. எதையெதை யார் யார் கிட்ட சொல்றதுன்னு ஒரு வெவஸ்தை வேண்டாம்.” அவள் பவானியை மடியில் இழுத்து வைத்துக் கொண்டு கிசுகிசுக்க.

நான் பாவமாய், “என்ன பண்ணுறது இப்ப இதுக்கெல்லாம் நந்தீஸ்வரர் சிபாரிசு வேண்டியிருக்குது” என்று சொல்ல கண்களை உருட்டி மிரட்டியவள். “உங்களை எல்லாம் திருத்தவே முடியாது.” என்னமோ சம்பிரதாயத்திற்கு கோவிலில் உட்காரவேண்டுமே என்று உட்கார்ந்தவள் போல் எழுந்து வேகமாய் நடையைக் கட்டினாள். நான் திரும்பி வெளியில் இருந்தே சோமேஸ்வரருக்கு ஒரு சல்யூட் போட்டுவிட்டு பின் தொடர்ந்தேன்.

வீட்டிற்கு வந்ததில் இருந்தே டீவிப் பெட்டியின் முன் உட்கார்ந்து சீரியல் பார்ப்பதைத் தொடர்ந்தவள். சன் டீவி நியூஸ் இடைவெளியில் போய் பட்டுப்புடவை, நகைகளை கழட்டிவிட்டு வந்து மீண்டும் உட்கார்ந்தவளிடம் காபி, டின்னர் கேட்டு வாய் வலித்துப் போய் விட்டுவிட்டேன். கோவிலுக்குப் போய்விட்டு வரும்வழியில் வாங்கி வந்திருந்த பழம், மற்றும் ஏற்கனவே வீட்டில் இருந்த தீனியைத் தின்றுவிட்டு பவானி தூங்கிவிட. நான் பதினொன்னறை மணிக்குப் பாயைப் பிராண்டினேன்.

“இங்கப் பாருங்க, நேத்திக்கு அத்தம்மா வதனை வீட்டிலிருந்து போன் பேசிக்கிட்டிருந்தாங்க. அவங்க பேசின அரைமணிநேரத்தில ஒரு சீரியலை மிஸ் பண்ணிட்டேன். அதை இப்ப பன்னிரெண்டு மணிக்கு திரும்பப் போடுவான். எது பேசுறதா இருந்தாலும் அதுக்கப்புறம் பேசுங்க.” சொல்லிவிட்டு மீண்டும் டீவியில் ஐக்கியமாக, வந்த கோபத்தில் நான் தலையணையைத் தூக்கிக் கொண்டு பவானி ரூமிற்கு வந்தேன். தூங்கியது தெரியாமல் காலை எழுந்த பொழுது பக்கத்தில் படுத்திருந்தாள். நான் எதுவும் பேசாமல் எழுந்து பல்விளக்கிவிட்டு வந்துப் பார்த்தால், காபி கோப்பையுடன் சிரித்தபடி நின்று கொண்டிருந்தாள்.

வந்த கோபத்தில் “இங்கப் பாரு அகிலா இது சரியில்லை, வந்த புதுசில் சரியாத்தான் இருந்த நீ. இப்ப சீரியல் பார்க்க ஆரம்பிச்சு வீட்டில் என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு ஒன்னும் தெரியாம இருக்கிற அளவுக்கு அடிக்ட் ஆய்ட்ட. இது சரியில்லை அவ்வளவுதான் சொல்லிட்டேன்.”

“ஒரு நாள் பன்னிரெண்டு மணிவரைக்கும் பாத்ததுக்கு என்ன கோபம் வருது உங்களுக்கு. நீங்க பதினொன்னரையிலிருந்து பன்னிரெண்டு மணி வரைக்கு எத்தனை நாள் மிட்நைட் மசாலா பார்க்குறேன். டிஸ்கவரி சேனல் பார்க்கிறேன்னு என் கோபத்தைக் கிளறியிருப்பீங்க...”

அவள் சொல்ல, அவள் எடுத்துக்கொண்ட உதாரணங்களால் அவள் கோபமாக இல்லாது தெரிந்தாலும் நான் மேல் பேச்சு பேசாமல் கிளம்பிப்போனேன். அன்று குளித்துக் கொண்டிருந்த பொழுதுதான் நந்தீஸ்வரர் என்னைப் பார்த்து சிரிப்பதைப் போல் தோன்றியது வெறும் மூடநம்பிக்கை என்று மனதைத் தேற்றிக்கொண்டு கிளம்பினேன். அகிலாவுடன் ஒரு வார்த்தையும் பேசாமல் அவள் செய்துவைத்த டிபனையும் சாப்பிடாமல் வந்ததை நினைத்து அலுவலகத்தில் வருத்தமாகயிருந்தது.

“இங்கப் பாருய்யா உன் இஷ்டத்துக்கு மாசாமாசம் ஐம்பது ரூபாய் ஏத்திக் கிட்டே போற. இதுல தமிழ்நாட்டில் எதுவும் நடந்தா உடனே தமிழ் சேனலை எல்லாம் வேற நிறுத்திற்ற. நீ சொல்ற மாதிரியெல்லாம் ஆடமுடியாது தெரிஞ்சிக்கோ.”

அன்று மாலை கேபிள் டீவி ஆப்பரேட்டர் எப்பொழுதையும் விட ஐம்பது ரூபாய் அதிகம் கேட்டு வந்ததும் நான் கோபத்தில் கத்தியது அகிலாவிற்கு ஆச்சர்யமாக இருந்திருக்கும். எப்பொழுதும் காசை ஒரு கன்செர்னாக பார்க்காத நான் ஐம்பது ரூபாய்க்கு கத்தியதை அவளால் புரிந்துகொள்ள முடியாதுதான்.

“இங்கப் பாரு சார். உனக்கு இப்ப கேபிள் கனெக்ஷன் வேணுமா வேணாமா? காசு கொடுப்பேன்னா கொடு இல்லாட்டி நான் கனெக்ஷனை எடுத்துற்றேன். சும்மா கூவாத”

“உன் கனெக்ஷன் வேணாம் நீ புடுங்கிக்க” நான் கோபத்தில் கத்த. அவன் கனெக்ஷனை எடுத்துவிட வீட்டிற்குள் வர, “வீட்டுக்குள்ள எல்லாம் விடமுடியாது உன்னால முடிஞ்சா வெளியில கட் பண்ணிக்க.”

அவன் என்னை முறைத்துவிட்டு நகர்ந்தான். அகிலா என்னை ஆச்சர்யமாய் மேலும் கீழும் பார்க்க,

“இங்கப் பாரு அகிலா, இவன் மட்டுமா கேபிள் கனெக்ஷன் கொடுக்குறான் நாளைக்கு வேற ஒருத்தனை விட்டு கொடுக்கச் சொல்றேன். ஒரு நாள் தான. இவனுங்களுக்கெல்லாம் இப்படிச் சொன்னாத்தான் புத்தி வரும்.” என்று சொல்லிவிட்டு அகிலாவின் பதிலுக்குக் காத்திராமல் கிளம்பினேன்.

அடுத்தநாள் பழைய கேபிள்காரன் வீட்டின் முன்னால் வந்து கத்தினான்.

“யோவ் நினைச்சிக்கிட்டிருக்கிறியா. வேற ஒருத்தன் இந்த ஏரியாவுல வந்து உன்வீட்டுக்கு கனெக்ஷன் கொடுத்துறுவான்னு. கனவு தாண்டி மகனே.”

அவன் சொல்லிவிட்டு போனதும்தான், அகிலா கேபிள் காரர்களுக்கு இடையில் இருக்கும் அக்ரிமெண்ட் பத்தி சொல்லிவிட்டு,

“என்னயிருந்தாலும் நீங்க அன்னிக்கு அப்படி கோபமா பேசியிருக்கக்கூடாதுங்க. ஆனா அதுக்காக அந்த கேபிள்காரன் செஞ்சதும் சரிகிடையாது. நீங்க கவலைப் படாதீங்க கேபிள் ஒன்னுதான் வாழ்க்கையா? பொழுது போக்குறதுக்கு எத்தனையோ இருக்கு.”

அகிலா சமாதானம் சொன்னாள். நான் அவள் கண் முன்னாலேயே அந்த ஏரியாவில் இருக்கும் பல கேபிள் டீவி ஆப்பரேட்டர்களுக்கு போன் செய்து எவ்வளவு ஆனாலும் சரி என்று சொல்லியும் ஒருவரும் கனெக்ஷன் கொடுக்க வராததால் கோபமடைந்தவனைப் போல் இருக்க மீண்டும் சமாதானம் சொன்னாள்.

இப்படி கேபிள் கனெக்ஷன் பிரச்சனையால் சீரியல் பார்ப்பது நின்று போயிருந்தது. ஆனால் அதற்குப் பிறகு நாங்கள் வேறு ஏரியாவிற்கு குடி போனதும் கூட அகிலா என்னிடம் கேபிள் கனெக்ஷன் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தவில்லை. கேட்டால் அது ஒரு அடிக்ஷன் மாதிரிங்க அப்பப்பா எப்படி வெளிய வந்தேன்னு இருக்கு. நல்லவேளை அன்னிக்கு நீங்க அவனை அப்படிப் பேசி அனுப்பிட்டீங்க என்று சொல்ல. நானும் கேபிள் டீவி ஆப்பரேட்டரும் போட்ட சதி தான் அது என்று தெரிந்தால் என்ன செய்வாள் என்று யோசித்தேன்.

அந்த கேபிள்காரன் அன்று,

“சார் எனக்கு நல்லா புரியுது சார் உன் பீலிங். இவ்ளோ கனெக்ஷன் கொடுக்குறேனே என் வீட்டில் கேபிள் கிடையாது தெரியுமா?” என்று சொல்லி பிரம்மாதமாய் நடித்துக் கொடுக்க என் திட்டம் நிறைவேறியது நினனவில் வந்தது. எல்லாமே அந்த ஆக்ஸிடெண்டால் நடந்தது தானே! பின்னர் டக்கீலா அடித்துவிட்டு மல்லாந்த நண்பரை ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பிவிட்டு நானும் வீட்டிற்குக் கிளம்பினேன்.

முந்தைய பாகங்கள்.

இப்படியும் ஒரு தொடர்கதை - கற்புங்கிறது ஒரு கடப்பாறை...
இப்படியும் ஒரு தொடர்கதை - சிம்மேந்திரமத்யமமா? கீரவாணியா?
இப்படியும் ஒரு தொடர்கதை - இந்துயிஸமும் சில சிஐஏ உளவாளிகளும்
இப்படியும் ஒரு தொடர்கதை - பிரிவென்னும் மருந்து
இப்படியும் ஒரு தொடர்கதை - ஆண் என்னும் தலையாட்டிபொம்மைகள்
இப்படியும் ஒரு தொடர்கதை - பெண்ணியமும் சில புடலங்காய்களும்
இப்படியும் ஒரு தொடர்கதை - நீ கட்டும் சேலை மட்டிப்பில நான் கசங்கிப் போனேண்டி

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In சொந்தக் கதை பதிவர் சந்திப்பு

கோவை பதிவர் சந்திப்பு - என் குறிப்புகள்

நான் தங்கியிருந்த காந்திபுரத்திலிருந்து சந்திப்பு நடைபெற்ற RS-புரம் எப்படி வரவேண்டும். ஆட்டோவிற்கு எவ்வளவு கொடுக்கலாம் என்றெல்லாம் செல்லாவிடம் ஞாயிறு காலை 9 மணிக்கே(!!!) போன் செய்து கேட்டுக்கொண்டு தான் கிளம்பினேன். எனக்கு இரண்டாவது ப்ளோரில் நடப்பதாக தெரியாததாலும், கௌதம் ஆர்கெட் ஒன்பதரை மணிக்கு ஆளோருவரும் உள்ளிருப்பதைப் போன்ற தோற்றத்தை தராததாலும்; பக்கத்தில் இருந்த பேங்கிற்கு சென்று ஏடிஎம்-ல் காசை உருவி(எனக்கு முன்னர் காசை எடுத்துவிட்டு சென்ற நபர் கார்டை விட்டுவிட்டுச் சென்றிருக்க - என்னிடம் வேறு டிரான்ஸாக்ஷன் செய்யணுமா என்று அந்த நபரின் கார்டில் கேட்டதும். உடனடியாக புரிந்துகொண்டு கார்டை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து - அந்த நபரிடம் கொடுத்து "புண்ணியம்" சேர்த்துக் கொண்டேன்)வந்தேன்.

பின்னர் இன்னொரு தடவை அந்த பில்டிங்கின் எதிரில் வந்து பார்த்துவிட்டு இன்னமும் ஆள் நடமாட்டம் இல்லாததால் - மேங்கோ ஜூஸ் ஒன்றை பக்கத்தில் இருந்த பழமுதிர்ச் சோலையில் குடித்துவிட்டு; இனி வேலைக்காகாது என்று செல்லாவிற்கு தொலைபேச. அவர் மேலை போங்காணும் - கீழே நின்று என்னத்த பராக் பார்க்கிறீர் என்று சொன்னதும் தான் 2ஆவது ப்ளோருக்கு வந்தேன். எனக்கு முன்பே மா.சிவக்குமார், பாலபாரதி, வினையூக்கி, உண்மைத் தமிழன், சென்ஷி, எ-கலப்பை முகுந்த் அப்புறம் இன்னும் ஒருவர் பெயர் நினைவில் வரமறுக்கிறது, கண்ணாடி போட்டிருந்தவர் கவிதை எழுதுபவராக தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டவர், போன்றவர்கள் இருந்தனர்.

வழக்கம் போல் நான் தான் மோகன் தாஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு உட்கார்ந்தேன்; அந்தச் சமயத்தில் பார்ட்னர்ஷிப் கொடுத்தது சென்ஷி. தான் வலையுலகத்திற்கு எப்படி வர நேர்ந்தது என்பதைப் பற்றி நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது தான் பாலா, செல்லாவிற்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் வரமுடியாத நிலையில் இருப்பதை சொன்னார். பின்னர் உதயசெல்வி அவரது கணவருடன் வந்தார் அவரிடம் நாங்கள் ஒருமுறை அறிமுகம் செய்து கொண்டோம். முகுந்த் நாங்கள் ஒவ்வொருவரும் திரட்டிகளில் இருந்து எதிர்பார்ப்பது எதை என்பதைப் பற்றி கேட்க சொல்லிக்கொண்டிருந்தோம்.

நான் சொன்னது தமிழ்மணத்தின் ஒரு விண்டோ என் ஸ்கிரீனில் எப்பொழுதும் இருக்குமென்றும் தேன்கூட்டை, அதிகம் பேர் பார்வையிட்ட பதிவுகளைப் பார்ப்பதற்காகவும் கில்லி பரிந்துரைகளை பார்ப்பதற்காகவும் பயன்படுத்துவதாகச் சொன்னேன். சமயங்களில் தமிழ்ப்ளாக்ஸ் பார்ப்பேன் என்றும், பின்னர் நானே உருவாக்கிக்கொண்ட iGoogle பற்றிச் சொல்லி அது எப்படி எனக்குப் பயன்படுவதாகச் சொன்னேன்.

பின்னர் ஒன்றிரண்டாய் ஆட்கள் வந்து சேர்ந்தார்கள். சுப்பையா அவர்களும் கோவை ரவி அவர்களும் வந்ததும் சூடுபிடித்தது என்று நிச்சயமாய்ச் சொல்லலாம். அவர் தான் எப்படி பதிவெழுத வந்தது எப்படி இருந்தது தன் அனுபவம் எப்படி படிப்படியாய் மக்களுக்கு ஏற்றவாறு தன்னுடைய பதிவை மாற்றிக்கொண்டார் என்பதைப் பற்றி கொஞ்சம் பெரிதாய்(;)) தன்னுடைய தெளிவான குரலில் சொன்னார். இந்தச் சமயத்தில் தான் பாமரனும் அவருடைய நண்பர்களும்(செகுவாரா அவருடைய மகன் - இதை நான் படித்திருக்கிறேன்) வந்தார்கள். அதில் ஒருவர் செகுவாராவின் படத்தை கலரில் கருப்பு பேக்ரவுண்டில் போட்டிருந்தார் நன்றாகயிருந்தது.(பின்ன பொண்ணுங்க மட்டும் தான் மத்தவங்க போட்டிருந்த புடவை நன்றாகயிருந்தது என்று எழுதணுமா என்ன?) ஆனால் எனக்கு நான் ப்ரொபைலில் போட்டிருக்கும் செகுவாரா படம் போட்ட டீஷர்ட் வாங்கத்தான் ஆசை. இங்கே கருடா மாலிலும், போரமிலும்(Forum) அப்படி செய்து தருபவர்கள் இருக்கிறார்கள்; செய்யணும்.

பாமரன் வந்ததும் இசைக்கலைஞர் ஆறுமுகம் வந்தார் என்று நினைக்கிறேன். பின்னர் பாமரன் மெதுவாக பாலபாரதியிடம் ஆரம்பிக்கலாமா என்று கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு ப்ரொபஷ்னலான உரையாடலுக்கு முன்னர் ஆறுமுகம் அய்யா; உட்கார்ந்ததுமே தன்னை அறிமுகப்படுத்துக் கொண்டு பேச ஆரம்பித்தது நன்றாகயிருந்தது. நான் ஆறுமுகம் அவர்களுடனான பாமரன் அவர்களின் உரையாடலுக்குப் பிறகு பாமரன் அவர்களிடம், நீங்கள் அவரிடம் வேறுமாதிரியான கேள்விகள் கேட்டு வேறுமாதிரியான அனுபவங்களை சொல்லச் சொல்லியிருக்க வேண்டும் என்று சொன்னேன். ஆறுமுகம் அய்யா தன்னுடைய ப்ரொபஷ்னல் உரையாடலில் "ராமன்"ஐ பற்றி பேச ஆரம்பித்ததுமே ராஜா வனஜ் எஸ்கேப் ஆகிவிட்டிருந்தார். இதை பக்கத்தில் உட்கார்ந்திருந்த சென்ஷியிடம் சொல்லிக் காட்டினேன்.

என்னால் ஒருவகையில் ஆறுமுகம் அவர்கள் வைத்த வாதத்தை தவறாகச் சொல்ல முடியவில்லை ஏனென்றால், அவருடைய வயதை கருத்தில் கொண்டும் அந்தக் காலத்தில் அவர் வாழ்ந்து வந்த முறைகளைக் கொண்டும் என்னால் அவர் சொல்லிய விஷயங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஏனென்றால் நானும் என் அப்பாவுடன் உரையாடுவதுண்டு ஒரு(number) ஜெனரேஷன் இடைவெளியின் தாக்கமே பெரிதாக இருக்கும் பொழுது. அங்கிருந்த பலருடன் அவருடைய ஜெனரேஷன் இடைவெளி அதிகமாக இருந்திருக்கும். என்னைப் பொறுத்தவரை அவரிடம் வேறு வித்தியாசமான கேள்விகள் கேட்டிருக்கலாம். நான் பாமரனைக் குறை சொல்லவில்லை அவரும் உரையாடல் வேறு திசையை நோக்கிப் போகும் பொழுதெல்லாம் தன்னால் முடிந்தவரை எங்களுக்கு இடையிலான ஜெனரேஷன் கேப்பை சரிசெய்ய முயன்றார். ஆனால் பேட்டி எடுப்பவர்களுக்கான ரெஸ்டிரிக்ஷன்; எனக்கு நான் மாங்காயாக இருப்பதால் புரியுமென்பதால் அக்செப்டட்.

இந்தச் சமயத்தில் தான் பாலபாரதிக்கும், ஆறுமுகம் அவர்களுக்கும், செந்தழல் ரவிக்கும் சுப்பையா அவர்கள் பொன்னாடை போற்றினார். இதுவும் ஒரு ஜெனரேஷன் கேப் தான் நிச்சயமாய், ஆறுமுகம் அய்யா பற்றி தெரியாவிட்டாலும் பாலபாரதியும் ரவியும் இதை எதிர்பார்த்திருக்க(விரும்பியிருக்க) மாட்டார்கள் என்றே நம்புகிறேன். அடுத்த இதைப் போன்ற சந்திப்புக்களில் இந்த விஷயத்தை செய்ய வேண்டாம் என்று இந்தச் சமயத்தில் கேட்டுக் கொள்கிறேன். இதனாலெல்லாம் நான் பாலபாரதியின், ரவியின் சேவைகளை பாராட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை; இப்படித் தொடர்ந்தால் நாளை ஒரு மீட்டிங்கின் பொழுது ஆளாளுக்கு நான்கைந்து பொன்னாடைகளை எடுத்துவந்து வலைபதிவர் மீட்டிங்கையும் அரசியல் மேடையாக ஆக்கிவிடும் சூழ்நிலை பிரகாசமாகத் தெரிகிறது.

இந்தச் சமயத்தில் தான் ரவி வந்திருந்தார், அப்படியே சுகுணா திவாகரும். இதற்கெல்லாம் கொஞ்சம் முன்னர் லிவிங் ஸ்மைல் வித்யாவும் வந்து சேர்ந்திருந்தார். பின்னர் ரமணி அவர்களின் பின்நவீனத்துவம் பற்றிய பேச்சு; ஓரளவிற்கு இந்தக் காலக் கட்டங்களில், மையம், விளிம்புநிலை, அமேரிக்க மேலாதிக்கம் பற்றி தெளிவாகத் தெரியுமென்று சொல்ல முடியாவிட்டாலும் அப்படின்னா என்ன என்று புரியுமாதலாலும், தீவிரமாக பின்நவீனத்துவத்தைப் பற்றிய என்னுடைய புரிதல்களை அதிகமாக்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டிருப்பதால்; தீவிரமாக கவனிக்கத் தொடங்கினேன்.

என் N73ல் அதனுடைய சில பிரச்சனைகளுக்கு இடையிலும் இவருடைய பின்நவீனத்துவ உரையாடல் ஓரளவிற்கு என்னிடம் MP4 பைலாக இருக்கிறது. செல்லா வீடியோகிராபரை ஏற்பாடு செய்திருந்ததால்; அவர் இதை வலையேற்றுவார் என்று நினைக்கிறேன். அப்படி இல்லை என்றால் என்னிடம் இருப்பதை வலையேற்றுகிறேன். இந்த பின்நவீனத்துவ உரையாடலைப் பற்றி சுகுணா திவாகர் ஏற்கனவே எழுதிவிட்டார். அதனால் அதற்குள் அத்தனை தீவிரமாகப் போகவில்லை.

நிறைய விஷயங்களைப் பற்றிய அறிமுகம் கிடைத்தாலும் 'பின்நவீனத்துவத்திற்கான' அறிமுகமாக இந்த உரையாடலை வைத்துக் கொள்ளலாம். அதுவும் கடைசியில் அவர் நவீனத்துவத்தின் பிரச்சனைகளையும் அது எப்படி சரியில்லை என்றும் சொன்னார் ஆனால் பின்நவீனத்துவம் எப்படி இந்தப் பிரச்சனைகளை சரி செய்கிறது என்பதை சொல்லவில்லை(அப்படின்னு நினைக்கிறேன்). ஆனால் ராஜா வனஜ், சுகுணா திவாகர், முகுந்த் மற்றும் நான் இடையிடையே நிறைய கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தோம். அவ்வப்போது மா. சிவக்குமாரும் தன்னுடைய புரிந்துணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த உரையாடல் அப்படியே ரிலையன்ஸ் ப்ரஷ் மற்றும் மேற்கு வங்காளப் பிரச்சனை என பல தரப்புகளில் விவாதம் சூடுபிடித்தது. அந்தச் சமயம் ஹிந்துவின் நிருபராக வந்திருந்தவரும் தன்னுடைய பங்கிற்கு சில விஷயங்களைப் பற்றிய தன்னுடைய புரிதல்களைச் சொன்னார். இந்த மாதிரி விவாதங்களில் முதலில் கருத்தைச் சொன்னவர் விவாதத்தை தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்பது அவ்வளவு சரியாகயிருக்காது அதைப் போலவே ஒரு இனிஷியேட்டிவ்வை நான் கொடுத்திருக்கிறேன், நீங்கள் யோசித்து தீர்வை நோக்கி நகர்த்துங்கள் என்று விலகி உட்காருவது எந்த அளவிற்கு சரிவரும் என்று தெரியவில்லை.

இந்த விவாதம் முடியும் தருவாயில், சுப்பையா அவர்கள் மாற்றங்களுக்கா நாமெதுவும் செய்யவேண்டுமென்ற அவசியம் இல்லை மாற்றம் அதுவாய் ஏற்படும் என்றும். நீங்களெல்லாம் நம்ப மாட்டீர்கள் என்றாலும் "கடவுள்" அந்த மாற்றம் ஏற்பட ஏதாவது செய்வார் என்பதையோ இல்லை அதை ஒத்ததையோ சொன்னார். நான் "தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா" அப்படின்னு சொன்னதை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியாது. கடவுள் பற்றி அவருடைய பேச்சுக்கும் எதிர்வாதம் வைத்தேன்; பாமரனும் நக்கலாக ஒரு வார்த்தைச் சொல்லி நிறுத்தினார்.

இதற்கெல்லாம் இடைப்பட்ட காலத்தில் நிறைய விஷயங்கள் நடந்தது, அதாவது சின்னச் சின்ன விஷயங்கள். பாலபாரதி தன்னுடைய கத்தி போன்ற பற்களால் கடித்து(;)) ஒரு பார்சலைப் பிரித்து எல்லோருக்கும் நோட் புக்கும் பேனாவும் கொடுத்தார். நான் மட்டும் "நானெல்லாம் காலேஜிலேயே நோட் எடுக்க மாட்டேன்" என்று சொல்லி தவிர்த்துவிட்டேன். எனக்குத் தெரிந்து நன்றாய் நோட்ஸ் எடுத்தவர்கள்(நான் பார்த்தவரையில்) சென்ஷி, மற்றும் வினையூக்கி. செந்தழல் ரவி, பின்நவீனத்துவ ஓவியம் ஒன்றை வரைந்திருந்தார் இடைப்பட்ட இந்த நேரத்தில். நான் அவர் வரைந்திருந்த அந்த ஓவியத்தில் பின்நவீனத்துமே இல்லை என்றும். அந்தப் படம் பின்நவீனத்துவ ஓவியமாக ஆக என்ன செய்யவேண்டும் என்றும் சொன்னேன்; அவர் முறைக்க எக்ஸ்கேப் ஆகினேன்.

கேட் பெர்ரீஸ் சாக்லேட்டும், டீயும் கொடுக்கப்பட்டது(இது முதல் ரவுண்ட்) நான் சாக்லேட் சாப்பிடக்கூடாது என்று தீவிரமான உத்தரவு ஒன்று நிலுவையில் உள்ளதால் சாயாவை மட்டும் குடித்துவிட்டு பேசாமல் உட்கார்ந்துவிட்டேன். பாமரனின் "நக்கல்" தொணித்த ஒன்றிரண்டு வரி கமெண்ட்களை ரசித்தேன்.

இப்படியாக முதல் அமர்வு நிறைவு பெற்றவுடன், கிளம்பிய சுப்பையா அவர்களும் கோவை ரவியும், ஹிந்து பேட்டிக்காக மீண்டும் வந்து உட்கார இன்னொரு இன் - பார்மலான பார்மல் பேட்டி ஒன்று நடந்தேறியது. நானும் பாலாவும் முதலில் பின்னூட்டத்திலும் பின்னர் தொலைபேசியிலும் விவாதித்த பிரச்சனை இன்னொரு முறை கிளப்பப்பட்டது. இந்த முறையும் நான் "எனக்கு" சரியென்று பட்டதை சொன்னேன். பின்னர் விவாதம் வேறுபக்கமாக திரும்புவதாக மா.சிவக்குமார் விளக்க மீண்டும் விவாதத்திற்கு வந்தோம்.

முகுந்த், முன்னர் ஒரு முறை ஹிந்துவில் தவறாக வந்திருந்த ஒரு தகவலைச் சொல்லி, ஹிந்து நிருபரிடம் எழுதிப் பதிவிடும் முன் யாராவது ஒருவரிடம் காட்டி சரிபார்த்துக் கொள்ளும்படி சொன்னார் எனக்கு அது சரியென்று பட்டது. லிவிங் ஸ்மைல் வித்யா தன்னுடைய பதிவுலக அனுபவங்களையும், வாழ்க்கை அனுபவங்களையும் சொன்னார். பின்னர் தமிழ் பதிவுலம் ஹிந்து போன்ற பத்திரிக்கைகளில் இருந்து எதிர்பார்ப்பது என்ன என்பதை யாரோ ஒருவர் சொல்ல கடைசியில், தமிழில் இலவசமாக எழுத முடியும் என்பதை மட்டும் சொன்னாலே போதும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்தோம். நிருபர் தானும் தமிழில் எழுத ஒரு சாப்ட்வேர் காசு கொடுத்து வாங்கியதாகவும் அதுவும் வொர்க் ஆகவில்லை என்ற தன்னுடைய ஆதங்கத்தைச் சொன்னார்.

இரண்டாவது அமர்வை இன்னொரு பதிவு போடுகிறேன். முதல் அமர்வில் சில கண்ணில் பட்ட விஷயங்கள்.

* சென்ஷி என்றால் என்ன என்பதை சென்ஷி விளக்கவேண்டும் என்று நிறைய பேர் ஆசைப்பட்டனர்.

* சுப்பையா அவர்கள் தான் எப்படி வாத்தியார் ஆனார் என்பதை நிறைய தடவை சொல்லும் படியான சூழ்நிலை அமைந்தது.

* உடனுக்குடன் வினையூக்கியும், பாலாவும், மாசிவக்குமாரும் பதிவெழுதிக் கொண்டிருந்தனர்.

* மோகன்தாஸ் தன்னுடைய மொபைலில் இருந்து போட்டாக்களை பதிவிட ப்ளூடூத் வசதியுள்ள மடிக்கணிணியை தேடிக்கொண்டிருந்தார். (கிடைக்கவில்லை)

* செந்தழல் ரவிக்கு நாங்கள் பெங்களூரில் இருந்து கோயம்புத்தூருக்கு தண்டர் பேர்டில் வந்ததை நான் படம் காண்பித்துக் கொண்டிருந்தேன்.

* இன்று வரை, சுகுணா திவாகர் செந்தழலாரிடம் இருந்து தான் பெற்ற பின்நவீனத்துவ பரிசைப் பற்றி பின்நவீனத்துவக் கவிதை எழுதவில்லை.

Read More

Share Tweet Pin It +1

21 Comments

In பதிவர் சந்திப்பு

கோவை பதிவர் சந்திப்பு - படங்கள்

எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் உண்டு. என்னுடைய 'Bicycle Diaries' ஜல்லி; பிறகு பார்த்த இரண்டு படங்கள்(ஒன்றில் படுக்க வைத்து ரம்பத்தால் கழுத்தை அறுப்பதைப் போல் உணர்ந்தேன்.) பிறகு நடந்த வலைபதிவர் சந்திப்பென்று ஆறு ஏழு பதிவுகள் போடும் அளவிற்கு விஷயங்கள் நிறைய இருக்கின்றன இப்போதைக்கு சில புகைப்படங்கள் மட்டும்.









Read More

Share Tweet Pin It +1

0 Comments

In கிரிக்கெட் சொந்தக் கதை

கல்லூரியில் கிரிக்கெட்

நான் என் கல்லூரி அணிக்குத் தேர்வானது ஒரு நல்ல கதை. முதலில் டென்னிஸ் பந்துகளில் விளையாடுவதைத் தொடங்கினாலும் எனக்கு கிரிக்கெட் பந்துகளில் விளையாட நேரமோ, சூழ்நிலையோ அமையவில்லை. இதனாலெல்லாம் நான் கல்லூரி அணிக்கு தேர்ந்தெடுக்கிறார்கள் என்றதும்; அதுவும் கிரிக்கெட் பந்தில் என்றதும் தாழ்வு மனப்பான்மையால் அந்தப் பக்கமே போகவில்லை. என்ன பெரிய செலக்ஷன் ப்ராப்பர் கிரவுண்டிலா நடந்ததது? என்றால் இல்லை. கல்லூரிக்கு பின்னால் இருந்த ஒரு இடத்தில் நடந்தது.

நான் அந்த செலக்ஷனுக்குப் போகாத மற்றொரு காரணம் முதலில் பீல்டிங் பயிற்சி என்று காஜி எடுத்துக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் கல்லூரி நேரம் முடிந்ததும் பக்கத்து பஸ் ஸ்டாப்பில் இருக்கும் ஆயா கடையில் டீ சாப்பிடப் போவது வழக்கம். அன்று அப்படி போயிருந்த பொழுதுதான் தெரிந்தது; பீல்டிங் செலக்ஷன் நடப்பது. நானும் வேடிக்கைப் பார்த்துவிட்டு, நக்கலாக இரண்டு கமெண்ட் அடித்துவிட்டு கிளம்பிவிட்டேன். அதற்கடுத்து சனி, ஞாயிறு என்று நினைக்கிறேன். ஹாஸ்டலில் பெரிய காலமாகப் போகும் அவை.

அடுத்த நாளும் கல்லூரி முடிந்ததும் ஹாஸ்டல் வந்து கைலி கட்டிக்கொண்டு டீகுடிக்க, ஆயாக்கடையை நோக்கி நகரும் பொழுதுதான் கவனித்தேன். பௌலிங் செலக்ஷன் நடந்து கொண்டிருந்தது. கிரிக்கெட் பற்றிய தீராத வெறி என்னை ஒரு ஐந்து பத்து நிமிடம் அங்கே நிற்க வைத்தது. நான் எதிர்பார்த்ததைப் போலில்லாமல் அங்கே டிஸ்டிரிக்ட் டிவிஷினல் என்று கதைகளை விட்டு நிறைய பேர் பௌலிங் போட்டுக் கொண்டிருந்தார்கள். பூரா க்ராப்; ஒரே வார்த்தை. நான் அவசர அவசரமாக கூடவந்த பையனின் பாண்டை உருவி போட்டுக்கொண்டு நானும் பௌலிங் செய்ய பந்து ஒன்றை வாங்கினேன்.

டென்னிஸ் பந்துகளை விட சைஸில் பெரிய பந்துகள்; சிகப்புக் கலர் கூக்குபரா பந்துகள். கைக்கு அடக்கமாக இல்லாத காரணத்தால் நான் எதிர்பார்த்த யார்க்கராக இல்லாமல் முதல் பந்து ஒரு நச்சு பௌன்ஸராகப் போனது. ஹெல்மட் போட்டுத்தான் விளையாடுவார்கள் என்றாலும் அந்த சீனியர் பையன் பயந்து போனது நன்றாகத் தெரிந்தது. அப்பொழுதுதான் முதன் முதலில் கிரிக்கெட் பந்தில் பௌலிங் போடுகிறேன் என்பதை நினைவில் வைக்க வேண்டும். அந்தப் பந்திற்கு பாட்ஸ்மேனிடம் பதிலொன்றும் இல்லாததால். தொடர்ச்சியாக ஒரு ஓவர் போடும் வாய்ப்பு கிடைத்தது.

இப்பொழுது இருப்பதையெல்லாம் விடவும் தலைமுடி அதிகம் வைத்திருப்பேன். நான் ஓடிவர என் தலைமுடி ஒரு பக்கம் தனியாக வரும். ரெண்டு குட் லெங்க் டெலிவரிகளும், இரண்டு யார்க்கரும் போட்டுக்காட்ட, இரண்டு யார்க்கரிலும் பாட்ஸ்மேனின் குச்சி போயிருந்தது. பெரும்பாலும் இந்த கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு கால்கள் அவ்வளவு வேகமாக நகராது ஏனென்றால் அடிஷனல் பர்டன் பேட்கள். அதுவும் கிடைக்கிறதென்று இரண்டு பேட்கள், ஹெல்மெட், காட் என ஏகப்பட்ட அய்டங்களைப் போட்டுவிளையாடுவதால். அவர்களுடைய நேச்சுரல் கேம் வரவே வராது. அதனால் குச்சி பறந்தது பெரிய விஷயம் இல்லை; அந்த வேகத்தில் வரும் பந்தை கரெக்டாக ஜட்ஜ் செய்து டிபென்ஸ் ஆடுவது கடினம்.

நான் ஒரு ஓவர் போட்டு முடித்ததும் கூட டீ குடிக்க போய்விடலாமா என்றுதான் நினைத்தேன். அங்கே செல்க்ஷனுக்காக நின்றிருந்த வாத்தியார் பாட்டிங் செய்வியா இல்லை ஒன்லி பௌலரா என்று கேட்க ஆஹா போட்ட பந்துக்கு காஜியும் அடிக்கலாம் என்று ஆடுவேன் என்று சொன்னேன். சரி போய்த் தயாராகு என்று சொன்னதும். வேகவேகமாகப்போய் இடது காலுக்கு மட்டும் பேட் கட்டிக் கொண்டு போய் நின்றேன். எல்லாம் ஒரு சீன் தான், எங்கள் ஸ்டேடியத்தில் ப்ராக்டிஸ் செய்யவரும் பிரபல BHEL பிளேயர்கள் அந்தக் காலில் மட்டும் பேட் கட்டி விளாயாடுவதைப் பார்த்திருக்கிறேன்.

ஆனால் ஹெல்மட் மேண்டேட்டரியாகக் கொடுக்கப்பட அதைமட்டும் போட்டுக் கொண்டு போய் நின்றேன். சீனியர் மக்களுக்கு கோபம் இருந்திருக்க வேண்டும். அதுவரை பௌலிங் செய்து கொண்டிருந்த ஜூனியர் மக்களை நிறுத்தி அவர்களே இறங்கினார்கள் பௌலிங்கிற்கு. நாங்க மதிச்சாத்தானே. ஆறு பந்துகளுக்குமே கீழேயிறங்கி ஆடினேன். என் அதிர்ஷ்டம்(???) நான்கு பந்துகள் கிளிக் ஆகியது. ஒன்று எட்ஜாகி பின்பக்காம் சென்று விட ஒன்று மிஸ். அம்பையர் இடத்தில் இருந்த செல்க்டர் சரி போதும் என்று சொல்ல பேடைக் கழட்டியவன். ஆயாக்கடை சாயாவில் மயங்கி அங்கிருந்து எஸ்கேப் ஆக; டீக்கடைக்கு மெஸேஜ் வந்தது செலக்டர் என்னை தேடுவதாக. ஆல்ரவுண்டராக என்னை அணியில் தேர்ந்தெடுத்திருந்தார்கள். அதற்குப் பிறகு ஹாஸ்டல் அணியுடன் டென்னிஸ் பால் கிரிக்கெட். காலேஜ் அணியுடன் கிரிக்கெட் பால் ப்ராக்டீஸ் என பிரகாசமாகப் போனது.

ஆனால் நாங்கள் RECயில் கொங்கு Arts & Scienceவுடன் விளையாடிய மட்ட ரகமான ஆட்டம் ஒருவாறு எங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை இல்லாமல் செய்தது என்று சொல்லலாம். சீனியர்கள் செலக்டர் சொல்லியும் கேளாமல் என்னை சப்ஸ்டிட்யூட் ஆக வைத்து விளையாடினார்கள். நாங்கள் RECயில் பிகர் பார்க்கக் கிளம்பிப் போய்விட்டு வருவதற்குள் பாதி பேர் அவுட். இருபத்தைந்து ஓவர்களுக்கு எங்கள் அணி அடித்ததை விக்கெட் இழப்பில்லாமல் ஐந்து ஓவர்களில் அடித்துவிட்டு அவர்கள் கிளம்பிப் போனார்கள். அதற்குப் பிறகு சீனியர்கள் முகம் போன போக்கு... ;). அதற்குப் பிறகு அபிஷியலாக அதிகம் விளையாடாவிட்டாலும்; பக்கத்தில் இருந்த சாரநாதனுடன் நிறைய ஆட்டம் விளையாடியிருக்கிறோம். இந்த இடைப்பட்ட காலத்தில் நான் சீனியர்களுடன் நல்ல பழக்கத்திற்கு வந்திருந்தேன்.

பின்னர் எங்கள் ஹாஸ்டல் அணியின் நிரந்தர ஆட்டக்காரராகவே இருந்தேன். பெரும்பாலும் எக்ஸாம் இல்லாத நாட்களில் எல்லாம் ஏதாவது ஒரு கல்லூரி அணிக்கும் ஹாஸ்டல் அணிக்கும் இடையில் மேட்ச் இருக்கும். சில சமயம் நான் படிக்கும் வகுப்பிற்கு எதிராகவே விளையாடுவோம். அப்பொழுதெல்லாம் கிளாஸ்மெட்களையெல்லாம் விடவும் ஹாஸ்டல் மெட்கள் தான் பிடிக்கும். ஏனென்றால் நாள் முழுவதும் அவர்கள் தான் எங்களுடன் இருப்பார்கள். கல்லூரியில் உட்கார்ந்திருக்கும் பொழுதுகளிலும் கூட ஹாஸ்டல் நண்பர்களுடன் தான் உட்கார்ந்திருப்பது. டேஸ் ஸ்காலர்களின் உலகம் வேறு, ஹாஸ்டல் மக்களின் உலகம் வேறு...


முந்தைய பாகம்
அதற்கு முந்தையது

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In கிரிக்கெட் சொந்தக் கதை

கிரிக்கெட் நான் மற்றும் Nostalgia - 1

கிரிக்கெட் நான் மற்றும் Nostalgia

இந்தச் சமயத்தில் ஒரு மிக முக்கியமான நிகழ்வு நடந்தது அது நான் எட்டாவது படித்து முடித்த பொழுது மே மாத விடுமுறைக்காக டெல்லிக்குச் சென்றது. மற்ற விஷயங்களை விடுத்து கிரிக்கெட் சம்மந்தமான முக்கியமான நிகழ்வென்றால் அது நான் என் மாமாக்கள் இருவருக்கும் பந்து வீசியது. இருவரும் உண்மைக் கிரிக்கெட் ;) ஆடியிருந்தவர்கள். அதாவது மேட் எல்லாம் போட்டு விளையாடும் டிவிஷன் மேட்ச்சஸ். இதனால் இருவருக்குமே டெக்னிக்கலாக கிரிக்கெட் எப்படி விளையாட வேண்டுமென்று தெரியும்.

அங்கே விளையாடிய பொழுதுதான், Front foot, Back foot, பந்து வீசுபவர்களின் கைகளைக் கவனிப்பது, பந்து கைகளில் இருந்து வெளியேறியது பந்தை கவனிப்பது, பேட்டை எப்படி விளையாடப் போகிறோம் என்பதற்கிணங்க ஹேண்டிலைப் பிடிப்பது(ஸ்ட்ரோக் ஆடுவதற்கும் ஷாட்ஸ் ஆடுவதற்கும் வெவ்வேறு ஸ்டைலில் பேட்டைப் பிடிக்க வேண்டும்) என நிறைய விஷயங்களை ப்ராக்டிகலாக இம்ப்ளிமெண்ட் செய்ய சொல்லித் தந்தார்கள். அதுவரை குருட்டாம் போக்கில் வந்த பந்தை அடிப்பது என்ற நிலையில் இருந்த என்னை அடுத்த அடிக்கு உயர்த்தியது அங்கே தான். எனக்கு என் மாமாக்களுடன் இன்றும் கிரிக்கெட் விளையாடப் பிடிக்கும். இன்று நான் ஆப்-ஸெட்ம்புக்கு அந்தப் பக்கம் நாலு இஞ்சில் போடப்படும் பந்தை லாவகமாக தடுத்தாடுவார்கள் என்று நன்றாகத் தெரியும் ஆனால் வேலை காரணமாக நாங்கள் மூவரும் ஒரு இடத்தில் இருக்கும் வாய்ப்புக்கள் குறைந்ததில் நான் அனுபவிக்கும் வருத்தத்தில் இதுவும் ஒன்று.

இதையெல்லாம் விடவும் முக்கியமான ஒரு விஷயம் மாமா வைத்திருந்த SG பாட் ஒன்றை என்னிடம் தந்தார் நான் டெல்லியில் இருந்து புறப்படும் பொழுது. நான் என் பகுதியில் கேப்டன் ஆனேன் ;). நாங்கள் விளையாடிக் கொண்டிருந்த பேட்களுடன் ஒப்பிடக் கூட முடியாது அந்த பேட்டை, கொஞ்ச நாள் யாருக்கும் கொடுக்காமல் நான் மட்டும் தான் விளையாடி வந்தே அந்த பேட்டில் ஆனால் அது பல காரணங்களுக்காக சரிவராமல் போக எல்லோரும் உபயோகிக்கத் தொடங்கினார்கள். சில டோர்னமென்ட் விளையாடுவதற்கு பெரிய டீமில் இருந்தெல்லாம் பேட் கேட்டு வருவார்கள்.

இப்பத்தான் நான் அப்பா ஸ்கூலில் இருந்து வேறு ஸ்கூலுக்கு வந்தது, ஆனால் இரண்டு பள்ளிகளுமே ஒரு மேனேஜ்மென்ட்-ஆல் நடத்தப்படுபவை. நானூறு மீட்டர் இடைவெளி இருக்கும் இரண்டு பள்ளிகளுக்கும் அவ்வளவுதான் விஷயம் என்றாலும். ஸ்கூல் அதையடுத்து ஒரு ரோடு ரோட்டைத்தாண்டினால் "நேரு ஸ்டேடியம்". இது போதுமே ஆனால் இன்னொரு விஷயமும் இருந்தது, "நேரு ஸ்டேடியம்" தாண்டி கேர்ல்ஸ் ஹைஸ் ஸ்கூல் ;).

பள்ளி விடும் 4.15க்கு முன்னமே கிளம்பிப் போய் கிரவுண்டில் குச்சி நட்டு வைச்சு, அந்தப் பெரிய கிரவுண்டில் நல்ல பிச்சா விளையாடுவதற்கு தேர்ந்தெடுத்து வேறுயாரும் விளையாடாமல் பார்த்துக்கொள்ளவென்றே ஒருத்தன். அவன் 4.00 மணிக்கெல்லாம் கிளம்பிடுவான் பாத்ரூம் வருகிறதென்று. நாங்கள் அவன் பையையும் எடுத்துக் கொண்டு கிரவுண்டிற்கு வந்துவிடுவோம். அப்புறமென்ன இரண்டு இரண்டு பேரா அரைமணிநேரத்திற்கு ஒரு தடவை குறையத் தொடங்க. கடைசி இரண்டு மூன்று ஆட்கள் வரும் வரை விளையாடிவிட்டு பேட் பாலை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேருவோம். அந்த கிரவுண்டில் மொத்தம் எங்களைப் போல் இருபது டீம் விளையாடிக் கொண்டிருக்கும்.

இது கிட்டத்தட்ட அந்த நான்கு வருடங்களில் தொடர்ச்சியாக நடந்தது. அப்பல்லாம் டீம் மாட்ச் நடக்கும் 9A, 9B, 9C என மூன்று பிரிவுகள் ஆங்கில வகுப்புக்கள். அப்புறம் 9D ல் தொடங்கி 9M வரைக்கும் தமிழ் பிரிவுகள். ஒவ்வொரு வகுப்பிற்கும் 40 - 45 மாணவர்கள் இருப்பார்கள், அதனால் குறைந்த பட்சம் 11 பேர் பிரச்சனையே இல்லை. எல்லா நாட்களும் மேட்ச் தான், மதியம் இன்டர்வெல்லில் இதற்கென்றே இருக்கும் மாணவர்கள் போய் எதாவது ஒரு க்ளாஸிடம் மேட்ச் கேட்டு வருவார்கள். அப்படி டீம் மாட்சா இருந்தால் சென்டர் பிச்சில் விளையாடுவோம்.

பொதுவாக சென்டர் பிச் காலியாகத்தான் இருக்கும், இதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று பெரிய மைதானம், இருபத்திரெண்டு பேர் விளையாடாவிட்டால் சரிவராது அதுமட்டுமில்லாமல் அந்த சென்டர்பிச் பௌலிங் பிச் அதனால் அதிக ரன்கள் வராது. எட்டு ஓவர்கள் இருபத்தைந்து ரன் அடிப்பதுவே பெரிய விஷயம் அதனால் கிளாஸிக் கிரிக்கெட் போல் இருக்குமென்பதால் அவ்வளவு சுவாரசியமாகயிருக்காது. ஆனால் க்ளாஸ் மேட்ச் என்று வந்துவிட்டால் செண்டர் பிச் தான். அந்தக் காலத்தில் எல்லாம் அப்பா என்னைத் தேடவேண்டுமென்றால் நேராக ஒன்றிரண்டு கிரிக்கெட் கிரவுண்டிற்கு போய்த் தேடி கண்டுபிடித்துவிடுவார்.

அந்தக் காலத்தில் எல்லாம் நான் ஆல்-ரவுண்டர், கொஞ்சம் வித்தியாசமான. பெரும்பாலும் ஓப்பனிங் பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர்(நான் பௌலிங் செய்யாத பொழுது), அப்புறம் பௌலர். எட்டு/பத்து ஓவர் மேட்சில் இரண்டு ஓவர்கள் தான் கிடைக்கும். அந்த இரண்டு ஓவர்களும் நன்றாகப் போட்டால் மூன்றாவது கிடைக்க வாய்ப்புண்டு எனென்றால் ஒரு பத்து ஓவர் மேட்சில் ஒரு ஆள் தான் மூன்று ஓவர் போடலாம்.

அதுமட்டுமில்லாமல் விக்கெட் கீப்பிங் ரொம்பவும் முக்கியமான ஒன்று. அதனால் அதுவும் நானே, அப்பல்லாம் கண்ணாடி கிடையாது. ஸ்டெம்புக்கு ரொம்பவும் அருகில் நின்று கீப்பிங் செய்வேன். சிலகாலம் ஒரு அணிக்கு அவர்களிடம் இருந்த ஒரு பேஸ் பவுலரின் பந்துகளை நான் கீப் செய்கிறேன் என்பதற்காகவே குறைந்த வயதில் டோர்னமெண்ட் விளையாடியிருக்கிறேன். எப்படியாவது லெக் அம்ப்பயரை ஏமாத்தி மேட்சுக்கு ஒரு ஸ்டெம்பிங் வாங்கிவிடுவேன் ;). அப்புறம் பௌலிங், முதலில் எங்கள் அணி பௌலிங் செய்தால் நான் தான் முதலில் வீசுவது. முதல் ஸ்பெல் முடிந்து எட்டாவதோ பத்தாவதோ ஓவரை நான் தான் வீசுவேன்.

1500 ஓடுவதாலும் வீட்டில் தண்ணி தெளித்து விட்டிருந்ததாலும் என்னால் அந்தக் காலக் கட்டத்தில் நிறைய கிரிக்கெட் விளையாட முடிந்திருந்தது. பின்னர் எனக்கென்று ஒரு டீம் இருந்தாலும் பிற அணிகளுக்காகவும் விளையாட போய்விடுவேன். கூத்தைப்பார் டோர்னமெண்ட், செக்யூரிட்டி காலனி டோர்னமெண்ட், எழில்நகர் டோர்னமெண்ட் என சுத்துவட்டாரத்தில் நான் விளையாடாத டோர்னமெண்ட்களே ஒரு காலத்தில் இல்லை என்பது போல் ஒன்று கிரிக்கெட் விளையாடுவது இல்லை கிரிக்கெட் பற்றி பேசுவது இது மட்டும் தான் வாழ்க்கை அப்பொழுது.

+1, +2 விலும் அப்படித்தான். நான் எதிர்பார்த்த அளவிற்கு மதிப்பெண் வாங்காததற்கு இதுவும் ஒரு காரணம். மற்ற காரணம் தான் முன்னமே தெரிந்திருக்குமே.

அடிக்கிற மழை கொளுத்தும் வெய்யில் என எதற்காகவும் நாங்கள் விளையாடுவதை நிறுத்தியதில்லை. இதுவரையான சமயத்தில் நான் ரொம்பவும் பேமஸான பௌலர் தான் பேட்டிங் பிஞ்ச் ஹிட்டர், ஏனென்றால் டெக்னிக்கலாக தெரிந்திருந்தாலும் 8 ஓவர் மேட்சில் நமக்கு கிடைக்கும் ஒன்றிரண்டு ஓவர்களை ஸ்ட்ரோக் பண்ணியெல்லம் ஆடினால் அடுத்த மேட்சில் ஆட இடம் கூட கிடைக்காது. அதனால் ஓப்பனிங் பிஞ்ச் ஹிட்டர், ஷாட்ச் பிச் டெலிவர் வந்தால் போதும் ஒரு போர் அடித்துவிடுவேன் பெரும்பான்மையான சமயங்களில் என்பதால் என் பள்ளி அணிக்காக பெரும்பாலும் ஓப்பனிங் மட்டுமே விளையாடுவேன். சிலசமயம் ஆப்பொனண்ட் ரொம்பவும் குறைவான ரன்கள் என்றால் நான் இறங்க மாட்டேன்.

ஆனால் இதையெல்லாம் மாற்றிப் போட்ட கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன், +2 படிக்கும் பொழுது. பௌலிங் கிடையாது ஒன்லி த்ரோ தான், ஒரு சதுரம் போல் இருக்கும் இடம் தான் பிச். வெறும் ஆப் சைட் மட்டும் தான். கட்டத்திற்கு வெளியில் தூக்கி அடித்தால் அவுட். அது ஒரு அற்புதமான கிரிக்கெட். ஓவர் கணக்கு கிடையாது அவுடாகும் வரை விளையாடலாம். ஆனால் அந்த சின்னக் கட்டத்திற்குள் இருக்கும் பீல்டர்கள் கைகளில் சிக்காமல் ரன் அடிப்பது என்பது பெரிய விஷயம். ஆனால் சில பேர் வேண்டுமென்றே ஸ்ட்ரோக் வைக்கிறேன் பேர்வழியென்று ஆரம்பித்ததால் - unlimited ஓவர்கள் விளையாட முடியாமல் போனது. அதனால் ஒரு கணக்கிற்கு 15 ஓவர்கள்.

பிரம்மாதமான ஆஃப் சைட் ஆட்டம் கைக்கு வந்தது அப்பொழுது தான். அதேபோல் லெக் ஸ்பின் விளையாட வந்ததும்(பிற்காலத்தில் கல்லூரி அணிக்காகவும், கம்பெனி அணிக்காகவும் ஆடிய பொழுது ஸ்பின்னர்ஸை அடிக்க இந்த ஆட்டம் உதவியது.) அப்பொழுதுதான். ஷென் வார்னேவின் மைக்கேல் ஹோல்டிங்கிற்கான பந்து தெரிந்திருக்கும். அதெல்லாம் என்ன பிரம்மாதம் த்ரோ என்பதால் வெறும் முத்தையா முரளீதரன்களும் ஷேன் வார்னேக்களும் தான் அங்கே. அதுவும் இல்லாமல் நிறைய வெரைட்டி வேறு, ஒரே ஓவரில் பேஸ், பவுன்ஸ், லெக் ஸ்பின், ஆப் ஸிபின், புல்டாஸ் என நிறைய போடுவார்கள். இந்த ஆட்டங்களில் எத்தனை 50 அடித்திருப்பேன் நினைவில் இல்லை. மாமாக்கள் சொல்லிக் கொடுத்த டெக்னிக் இங்கே நிறைய உதவியது.

அடுத்த பாகம் போடுகிறேன், இப்பவே நிறைய ஆச்சுது.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In கிரிக்கெட் சொந்தக் கதை

கிரிக்கெட் நான் மற்றும் Nostalgia

நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தது எப்பொழுது என்று சரியாக நினைவில் வரமறுக்கிறது ஆனால் ஐந்தாவது வகுப்பு படிக்கும் பொழுதெல்லாம் ஆடியிருக்கிறேன் என்பது நினைவில் இருக்கிறது. கொஞ்சம் போல் சீரியஸ் கிரிக்கெட் என்றால் அது ஆரம்பித்தது ஆறாவது ஏழாவது படிக்கும் பொழுதாகயிருக்கலாம்.

எங்கள் பள்ளிக்கூடத்திற்கு அருகில் இருந்த ஒரு இடத்தில் விளையாடுவோம்; பக்கத்தில் ஒரு மாங்காய் மரத்துடன் கூடிய வீடிருந்தது. பெரும்பாலும் அந்த வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள் எனவே பந்து வீட்டின் கொல்லைப் புறத்திற்கு சென்றுவிட்டால் பிரச்சனையில்லாமல் எடுத்துவரமுடியும் என்பதுகூட நாங்கள் அந்த இடத்தில் விளையாடியதற்கு ஒரு காரணம். அப்பொழுதெல்லாம் ரப்பர் பந்துதான், கிரிக்கெட் பேட் என்று பெரிதாக ஒன்றும் இல்லாவிட்டாலும் எங்கேயோ கிடைத்த ஒரு பேட்டில் விளையாடிக் கொண்டிருந்த நினைவு.

ஸ்டிக் எல்லாம் மரக்குச்சிகள் தான், பெரும்பாலும் பள்ளிவிட்ட பிறகு இரண்டு மணிநேரங்கள் விளையாடுவோம். வெறும் 'லெக்' சைட் மட்டும் தான்; அதுவும் ஸ்டிக்கிற்கு பின்பக்கம் ரன்கள் கிடையாது. ஏனென்றால் அந்த வயதில் பௌலிங் போடும் பொழுது ஷார்ட் பிச் டெலிவர்கள் அதிகம் இருக்குமென்பதால் அந்தப் பக்கம் அடிக்க வசதியாக இருக்கும். அதன் காரணமாகவே அந்தப் பக்கம் ரன் கிடையாது. பள்ளிக்கூடம் விட்டபிறகென்பதாலும் எல்லோர் வீடுகளிலும் உடனே வீட்டிற்கு போய்விடவேண்டிய அவசியம் இல்லாத காரணத்தாலும் சைட் ஒன்றிற்கு ஆறு பேர் என பன்னிரெண்டு பேர் விளையாடுவோம்.

நினைவு தெரிந்து அந்த வயதில் எல்லாமே வேகப் பந்துவீச்சு தான்; சனி ஞாயிற்றுக் கிழமைகளில் கொஞ்சம் பெரிய க்ரவுண்ட்களில் இரண்டு செக்டார்களுக்கு இடையில் மேட்ச் நடக்கும். அந்த மொட்டை வெய்யலில் முதல் ஆளாக நான் உட்கார்ந்திருப்பேன் மேட்ச் பார்ப்பதற்கு. நான்கு மணிக்கு ஆட ஆரம்பிக்கும் அவர்கள், ஆறு மணி போல் மேட்ச் ஆடி முடித்ததும் அந்த பெரிய ஆட்களுக்கு பௌலிங் செய்வேன். சொல்லப்போனால் நான் ஓசி காஜி தான் அடிப்பார்கள் அவர்கள் இருந்தாலும்; அதுவரை நானாகப் பார்த்திராத டென்னிஸ் பால்களுக்கு அறிமுகம் அங்கே தான் கிடைத்தது.

ரப்பர் பாலுக்கும், காஸ்கோ பாலுக்கும் வித்தியாசம் நிறைய உண்டு. கொஞ்சம் மித வேகமாக பந்து வீசினாலே ரப்பர் பாலில் வேகமாகச் செல்லும். ஆனால் காஸ்கோ பாலிற்கு வெய்ட் சுத்தமாகயிருக்காது, அதனால் என்ன வேகமாக ஓடிவந்து வேகமாக வீசினாலும் பேட்ஸ்மேனுக்கு டைமிங் நிறைய கிடைக்கும். நான் ஆறாவது படிக்கும் பொழுதெல்லாம் இப்பொழுது மார்க்கெட்டில் கிடைக்கும் 'விக்கி' பந்துகள்(இரண்டு கலர்களில் பெரும்பாலும் இருக்கும், சில ஒற்றைக் கலரிலும்) கிடைக்காது. BHELல் டென்னிஸ் கிளப்பில் இருந்து இந்த காஸ்கோ பந்துகளை அந்த அண்ணன்கள் வாங்கி வருவார்கள்.

சின்ன வயது, எதையாவது சாதிக்கணும் என்ற ஆசை எல்லாம் சேர்த்து அந்த வயதிலேயே நான் வேகமாக பந்துவீசுவேன். காஸ்கோ பந்திலும்; என்னைவிட சற்றேறக்குறைய பத்து வயது பெரியவர்கள் பேட்டிங் செய்பவர்களை என் வேகத்தால் தடுமாறவைப்பேன் சில தடவைகள். சில தடவைகள் பொத்தென்று ஷார்ட் பிச் விழ பந்து பறக்கும்(பஞ்சு மாதிரி ;)). இதில் பிரச்சனை என்னவென்றால் அப்படி அடிக்கப்பட்ட பந்தையும் நான் தான் எடுத்துவரவேண்டும். இதனாலெல்லாம் ஒரு நன்மை என்னவென்றால் ஆஸ்பிட்டல் பக்கம் ஒரு பிரச்சனை என்று படுத்ததில்லை அவ்வளவே.

அப்பா வேறு உடற்பயிற்சி ஆசிரியர், அக்கா ஸ்டேட்-ல் தொடர்ச்சியாக தங்கம் வாங்கியவர். இதனால் காலையில் ஐந்தரை மணிக்கே "நேரு ஸ்டேடிய"த்திற்கு துரத்தப்படுவேன். அக்கா போய் வார்ம் அப் செய்யும் வரை, கேலரியில் படுத்திருந்துவிட்டு. வார்ம் அப் ஆனதும் லாங்க் ஜெம்ப் பிட்டில் படுத்துக் கொள்வேன். அப்பா தூரத்தில் வருவது தெரிந்ததும் நானும் அப்பத்தான் ஓடிக் களைச்சு போயிருக்கிறதா சீன் போடுவேன். ஆனால் அப்பாவுக்கு அதெல்லாம் நல்லாவே தெரியும். ஆனாலும் நான் காலையில் எழுந்து ஸ்டேடியம் போனதற்கு காரணம் அம்மா போய்வந்ததும் தரு கேழ்வரகு கஞ்சி. (அந்த ஏலக்காய் மணம் இப்பவும் நினைச்சா உணரமுடிகிறது.)

காலை இப்படின்னா சாயங்காலம் இப்படி கிடையாது; என்னையும் அக்காவையும் ஸ்டேடியத்திற்கு துரத்திவிட்டுட்டு அப்பாவும் அம்மாவும் வாக்கிங் வருவார்கள். வந்து ஸ்டேடியத்தின் கேலரியில் உட்கார்ந்திருப்பார்கள்; அதனால் ஏமாற்ற முடியாது. அந்த ஸ்டேடியம் பெரியது. எப்படியென்றால் நானூறு மீட்டர்களை ஒரே ரவுண்டில் ஓடக்கூடிய அளவிற்கு பெரியதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நான் அந்த ஸ்டேடியத்தில் பதினைந்து ரவுண்ட்கள் ஓடுவேன். பார்த்துக் கொள்ளுங்கள்(400மீட்டர் x 15). அக்காவிற்கு வெறும் இரண்டு ரவுண்ட்கள் தான் ஏனென்றால் அவள் பங்கேற்பது 100, 200 மற்றும் லாங் ஜெம்ப்.

என்னை இருபது மீட்டர் முன்னால் நிறுத்திவிட்டு எனக்கும் அக்காவிற்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடக்கும் பெரும்பாலும் எல்லா நாளும், 20 மீட்டர் மட்டுமல்லாமல் ஸ்டாட்டிங்கும் முன்னாடியே கொடுத்துவிட்டு ஓடுவேன். ஆனால் அக்கா தீவிரமாக ஓடிக்கொண்டிருந்த காலங்களில் அவள் என்னை முந்திக் கொண்டுதான் முடிப்பாள்.

இதுமுடிந்ததும் அப்பா அக்காவைக் கூட்டிக் கொண்டு வீட்டிற்குப் போய்விடுவார், நான் அந்த ஸ்டேடியத்தில் கிரிக்கெட் விளையாடுவேன். இது வேறு ஒரு கூட்டம் கொஞ்சம் போல் நான்-ஸ்டாண்டர்ட் கிரிக்கெட் விளையாடுபவர்கள். அதாவது காலையில் இருந்து வேலை செய்துவிட்டு விளையாட வருபவர்கள். இவர்களிடம் என் பௌலிங்க் வெகு சீக்கிரமாக எடுபடும் பந்தும் ரப்பர் பால் தான். என்னிடம் இருந்த அத்தெலெட்டுக்கான திறமை என்னுடைய பீல்டிங்கிலும் ரன்கள் எடுப்பதிலும் தெரியும்.

சொல்லப்போனால் இவ்வளவு தான் நினைவில் இருக்கிறது நான் எட்டாவது படித்தது வரையிலான கிரிக்கெட் அனுபவம், நினைவுகள், நோஸ்டாலஜியா எல்லாம். அடுத்து நான் கொஞ்சம் போல் கிரிக்கெட் பைத்தியம் பிடித்துக் கிடந்த 8 - 12 படித்த பொழுதுகளின் நினைவுகள்.

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In Only ஜல்லிஸ் உலகக்கோப்பை கிரிக்கெட் சுய சொறிதல்

என்ன தவம் செய்தனை மோகனா?

ஆச்சர்யமாகவே இருக்கிறது வாழ்க்கை எனக்கு பெரும்பான்மையான சமயங்களில். சொல்லப்போனால் அந்த ஆச்சர்யம் இல்லாமல் போகும் நாளில் வாழ்க்கை போரடித்துவிடும் என்பது மட்டும் இன்று பிரகாசமாகத் தெரிகிறது.

"நாடுங்கால் ஒரு மனமற்ற செய்கையை
நல்லதோர் மணமாம் என் நாட்டுவார்
கூடுமாயில் பிரமசரியம் கொள்
கூடுகின்றிலதெனில் பிழைகள் செய்து

ஈடழிந்து நரக வழிச்செல்வாய்
யாது செய்யினும் இம்மணம் செய்யல்காண் - பாரதி"


"கெட்டு சீரழிந்து போனாலும் போ, கல்யாணம் மட்டும் செஞ்சிக்காத"(ஒரு மாதிரி என்னுடைய டிரான்ஸ்லேஷனில் - பாரதியின் கவிதைவரிகள் எக்குத்தப்பாக இதைத்தான் சொல்லும்) பாரதியின் கவிதைகளுக்கு இடையில் வரும் இரண்டெழுத்து வரிகள் பெரும்பாலும் என்னைப் புரட்டிப்போட்டுவிடும் திறமை வாய்ந்தவையாகவேயிருந்திருக்கின்றன.

"பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும் அச்சமில்லை..." என்று எழுதிய வரிகளுக்குப் பின் என்ன இருந்திருக்கலாம் என்று ப்ராக்டிகலாக நான் அதே போன்றதொறு சூழ்நிலையில் இருந்த பொழுது உணரத் தழைப்பட்டிருக்கிறேன்.

அதைப் போலவே, "வேடிக்கை மனிதரைப் போல் நான் வீழ்வேனென்று நினைத்தனையோ..." இந்த வரிகளும். பாரதியுடன் ஒப்பீட்டளவில் பேசவில்லையென்றாலும் என் அளவில் இப்படிப்பட்ட சூழ்நிலைகளைச் சந்தித்தது குறைவான சமயங்களில் அல்ல. வேண்டுமானால் இப்படி வைத்துக்கொள்ளலாம் அந்த வரிகள் பாடமான பிறகு வந்த சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட நான் இந்த வரிகளைக் கூறி என்னைச் சமாதானம் செய்து கொண்டதாக.

ஆனால் இதைப் போலவெல்லாம் இல்லை, கல்யாணம் செய்து கொள்வதைப் பற்றிய பாரதியின் வரிகள். (இலக்கிய)தமிழுடன் அவ்வளவாக பரிட்சையம் இல்லாமல் போனதால் கொஞ்ச காலத்திலேயே பாரதியை விட அவருடைய தாசனின் வரிகளில் பித்து தலைக்கேறியது; அவருடைய இயல்பான தமிழ் வரிகளால்.

"கல்யாணம் செய்து கொள்ளாதே!" என கல்யாணம் செய்த மற்ற ஆண்கள் சொல்வதைப் போல பாரதி சொன்னதை ஒப்பிடலாமா? இல்லை மற்ற கவிதைகளைப் போல மெஸேஜ் சொல்ல பாரதி இந்தக் கவிதையைச் எழுதவில்லை என்று ஓரம் கட்டிவிடலாமா? குடும்பம் பிள்ளைகள், என சாதாரண மனித சிக்கல்களில் விழுந்து புரளும் அளவிற்கு பாரதி மனதளவில் இல்லையென்றாலும்; தான் கவிதைகளில் எழுதிய விஷயங்களுக்கு எதிராகவே(சில சமயங்களில்) வாழமுடிந்ததையும் பற்றி வருத்தப்படும், அதை செய்யாதே என்று சொல்லும் ஒரு சாதாரண மனிதனாக பாரதியை ஒப்பிட முடியுமா? தெரியவில்லை.

வைப்பாட்டி வைத்துக் கொண்டு(அல்லது விபச்சாரம் செய்து) நரகத்திற்கு போனாலும் போ, கல்யாணம் செய்து கொள்ளாதே என்று சொன்னதை எப்படிப் பார்ப்பது கல்யாணம் ஆகாத நான் தீவிரமா யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

"கஞ்சா" அடிச்சா மட்டும் தான் தலைவர் பிரகாசமா எழுதுவார்; அப்படி அடிக்காமல் போய் எழுதியதில் உண்மையைச் சொல்லிட்டாரோ என்னவோ என்று நண்பரொருவர் நாங்கள் பேசிக்கொண்டிருந்த பொழுது சொல்லிய நினைவு. அந்தாளைத் தூக்கி குப்பையில் போடுவோம், அதை விடுங்க.

"உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்", "நஞ்சை வாயிலே வந்து நண்பரூட்டும் போதிலும்", "இச்சை கொண்ட பொருளெல்லாம் இழந்துவிட்ட போதிலும்" எழுதியவருக்கு "கச்சையணிந்த கொங்கை மாதர் கண்கள் வீசும் போதிலும்" பற்றி எழுத நேர்ந்தது ஏதோ வேறுவழியில்லாமல், மெட்டுப்போட்டாச்சு வார்த்தை இதுக்கு மேல உக்காரலை என்று ஹீராதி ஹீரோ என்று எழுதும் சுயநலக்கவிஞனாக என்னை பாரதியைப் பார்க்கமுடியவில்லை. இதில் என்னமோ விஷயம் இருக்கின்றது; பாரதியின் சுயவரலாறு போல் வரும் கவிதையொன்றில் வருவதைப் போல,

தான் காதலித்த பெண்ணை(???) திருமணம் செய்துகொள்ள முடியாமல் தந்தையின் சொல்லைக் கேட்டு சிறு பெண்ணை திருமணம் செய்து கொள்ள நேர்ந்ததையும் பின்னர் தன் மகளுக்கும் சிறுவயதில் திருமணம் செய்துவைத்ததையும் வைத்து, அட்வைஸ் சொல்றவங்க அந்த அட்வைஸ் படி நடந்தார்களா இல்லையா என்ற கேள்வி தேவையில்லை என்று வைத்துக்கொள்ளலாமா? "நல்ல விலை கொண்டு நாயை விற்பார் அந்த நாயிடம் யோசனைக் கேட்பதுண்டோ..." எழுதிய பாரதி; தன் பெண்ணிடம் கேட்டிருப்பாரா? அவருக்கு தன் பெண்ணிடம் அந்த அளவிற்கு உரிமையிருந்திருக்குமா? பதின்மூன்று பதினாலு வயது பெண்ணுக்கு தனக்கு வரப்போகும் கணவன் எப்படிப்பட்டவனாகயிருக்க வேண்டும் என்பதைப் பற்றி தெரிவு இருந்திருக்குமா? தெரியவில்லை.

ராமகிருஷ்னர், சக்கரை சாப்பிடும் வழக்கத்தை தன் பையனிடம் நிறுத்தச் சொல்லுங்கள் என்று சொல்லி ஒரு அம்மையார் வந்த பொழுது ஒரு வாரம் கழித்து வாருங்கள் சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பியதாகவும். பின்னர் ஒரு வாரம் கழித்து வந்த அந்தப் பையனிடம் சக்கரை சாப்பிடுவதை நிறுத்து என்று சொல்லியதாகவும் ஏன் ஒரு வாரம் கழித்து இந்த அறிவுரையைச் சொன்னீர்கள் என்று கேட்டதற்கு, தனக்கே சக்கரை அதிகம் சாப்பிடும் வழக்கம் இருந்ததாகவும் அதை நிறுத்திவிட்டு தான் அறிவுரை சொல்லவேண்டும் என்பதால் அப்படி செய்ததாகவும் படித்திருக்கிறேன். தானே தவறு செய்துகொண்டு அந்தத் தவறை இன்னொருவரை செய்யாதே என்று சொல்வது குற்றம் என்று சொன்னதாகவும் படித்திருக்கிறேன். (உண்மையா என்று தெரியாது!)

இப்பொழுது ராமகிருஷ்ணர் செய்தது சரியென்று பாரதி செய்தது தவறென்றும் சொல்லிவிடமுடியுமா? ராமகிருஷ்ணர் செய்தது தனிநபர் செய்யக்கூடியது. ஆனால் பாரதி பாடிய விஷயங்கள் சமுதாயத்தை திருத்தப் பாடியவை இல்லையா(இல்லாவிட்டால் சமுதாயம் இப்படி இருக்க வேண்டும் என்ற பாரதியின் கனவுகள்). சமுதாயத்தை தனி ஒருவனால் திருத்தி விடமுடியுமா? அப்படி திருத்த வேண்டுமானால் அந்த தனிமனிதனின் கடமைகள் என்னவாகயிருக்க முடியும் என ஏகப்பட்ட கேள்விகள் மனதிலே தொக்கி நிற்கின்றன.

----------------------------------

நான் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு திருச்சி சென்றதற்கு சில பல காரணங்கள் வீட்டில் உள்ளவர்களால் சொல்லப்பட்டது. அதில் முதலாவது போனமுறையும் அதற்கு முந்தைய முறையும் ஆஸ்திரேலியா உலகக்கோப்பை ஜெயித்த பொழுது அங்கிருந்ததால் தான் நான் திருச்சிக்கு வந்தேன் என்று சொல்வது சுத்தப் பொய்.

இப்படித்தான் இனிமேலும் உலகக்கோப்பை போட்டிகள் இருக்குமென்றால் ஆஸ்திரேலியாவை டைரக்ட் செமி பைனல் அனுப்பிவிடலாம் ;). கில் கிறிஸ்டின் ருத்ர தாண்டவம் பார்க்க சூப்பராகயிருந்தது. எனக்குத் தெரிந்து கில்'லி செஞ்சுரி அடித்து ஆஸ்திரேலியா தோற்ற மாட்சுகள் மிக மிக குறைவாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன்.

அந்த அற்புதமான ஆட்டத்தை பார்க்க என்ன தவம் செய்தேனோ??? வரும் நவம்பர் வரையில் ஆஸ்திரேலியாவிற்கு எந்தப் கிரிக்கெட் போட்டியும் கிடையாது :(.

உலகக்கோப்பையில் ஒரு ஆட்டத்தில் கூட தோற்கமாட்டார்கள் என்று நான் குருட்டாம் போக்கில்(வைச்சுக்கோங்களேன்...) நிறைவேற்றிய ஆஸ்திரேலியாவிற்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.



நான் திருச்சியிலும் பெங்களூரூவிலும் நண்பர்களிடம், பான்டிங் இன்னும் இரண்டு உலகக்கோப்பை விளையாடும் வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று சொல்லிப்பார்த்தேன். அதற்கு அவர்களோ ஒரேயடியாய் அதற்கு முன்பே பான்டிங் ரிட்டயர்ட் ஆகிவிடுவார் என்று ஒன்றுபோல் சொன்னது ஆச்சர்யம் அளிப்பதாகவேயிருந்தது.

இன்னும் ஒரு உலகக்கோப்பையாவது பான்டிங் விளையாட ACB பிரச்சனை ஒன்றும் செய்யாமல் இருக்கணும். அதே போல் சச்சினின் எல்லா ரெக்கார்டையும் போட்டு உடைக்கணும் ஏன் என்றால் ரெக்கார்டுகள் அதற்காக மட்டுமே விளையாடுபவர்களுக்கு போய்விடக்கூடாது என்பதற்காகத்தான்.

Go Aussie Go!!!

Read More

Share Tweet Pin It +1

11 Comments

Popular Posts