சோழர்களின் மேலிருந்த காதலால் என்ன நடந்ததோ தெரியாது, பாண்டியர்களையும் சேரர்களையும் பிடிக்காமல் போனது. ஆமாம் உண்மையில் எனக்கு மதுரையும் கேரளமும் பிடிக்காது சின்னப் பிள்ளையாய் இருக்கும் பொழுது. இதெல்லாம் ஒரு நாளில் மாறியதா என்றால் மாறியது; இன்னும் அந்த நாள்(ட்கள்) நினைவில் இருக்கிறது. எங்கள் நேரு ஸ்டேடியத்தில் தேசிய கோ-கோ விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்ற சமயம்.கேரளத்தில் இருந்து பெண்கள் அணி வந்திருந்தது, அப்பா PET என்பதாலும் நானும் கோ-கோ...
பொற்கொடி என்னைப் பற்றி ஒரு பதிவெழுதியிருந்தார், மிக முக்கியமான அலுவலில் இருந்ததால் சனி, ஞாயிறு இணையத்தளங்களுக்குள் நுழையவில்லை. அந்தப் பதிவு காணாமல் போயிருப்பதால், யாரிடமாவது அந்தப் பதிவின் காப்பி இருக்குமானல் அனுப்பி வைக்கவும். Danke இது முன்பாகவே சொல்லிவிடும் நன்றிகள். ...
ரொம்ப நாட்களுக்குப் பிறகு பெயிண்டில் கை வைத்தேன். இந்த வேலைக்கு வந்த பிறகு வேலை டென்ஷனைக் குறைக்க எப்போதாவது பெயிண்டில் கைவைத்து விளையாடுவதுண்டு. இன்னும் நன்றாகச் செய்யமுடியும் என்று நினைப்பதால்; இதைப் போட்டிக்கு அனுப்பவில்லை. ஒன்றிரண்டு நாட்களில் இன்னும் அழகான ஒன்றை அனுப்புவேன். ...
இந்தப் படத்தைப் பார்த்ததில் இருந்தே இரண்டு வரி இந்தப் படத்தைப் பற்றி எழுதிவிட வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கிய படம். ரொம்ப காலமாக எழுதப்போகும் திரைவிமர்சனங்கள் வரிசையில் உட்கார்ந்திருந்தது; ஆனால் என்னமோ ஒவ்வொரு முறை எழுத உட்காரும் பொழுதும் ஏதோ ஒரு விஷயம் தடுத்து மீண்டும் மீண்டும் ட்ராஃப்ட் ஆகவே இருந்ததை கொஞ்சம் ஒப்பேற்றி வெளியிடுகிறேன். இன்னொரு விஷயம் படமே அடல்ஸ் ஒன்லி தான் எனும் பொழுது...
ஆசிப் அண்ணாச்சி பெங்களூர் வந்திருந்த பொழுது இந்தப் படத்தைப் பற்றி ஞாபகப்படுத்தினார். என்னய்யா கிரீடம் வெளிவரப்போகுதாமே என்று, அவர் மலையாளத்தில் இந்தப்படம் பார்த்ததிருந்ததாகவும் தமிழில் எப்படி வரப்போகுது என்று தெரியவில்லை என்று புலம்பிக்கொண்டிருந்தார். நான் சொன்னேன் விஜய் மாதிரியில்லாம அஜித் நல்லா டிரை பண்ணுவாருங்க அதனால நல்லாவரும் என்று சொல்லியிருந்தேன்.நான் மலையாளப்படம் பார்த்திருக்கவில்லை, வெள்ளிக்கிழமை ரிலீஸ் என்றதும் கால் தரையில் பரவவில்லை, முன்னாலே வாலி, அமர்க்களம், வில்லன்,...
பெங்களூர் வலைபதிவர் சந்திப்பைப் பற்றி ராம் எழுதியதுமே அங்கே போவதென்பது முடிவாகியிருந்தது. ஆசீப் அண்ணாச்சி அதற்கு ஒரு வாரம் முன்பு தமிழகம் வருவதால் சென்னைக்கு போவதாகவும் ஒரு ப்ளான் இருந்தது. ஒரு குட்டி - சந்திப்பை - செய்துவிடலாம் என்று. ப்ளான் என்ன டிக்கெட் புக்செய்து வைத்திருந்தேன், கிரிக்கெட் 'கிட்' வேறு ரெஸ்பான்ஸிபிள் ஆளிடம் கொடுத்து எல்லாம் தயாராகயிருந்தது. ஆனால் கடைசி சமயத்தில் சூழ்நிலைகள்(;-)) சரியாக அமையாததால்...
ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லிக்கொள்கிறேன் - மிகவும் மனநிறைவைத் தந்த சந்திப்பு. ஆர்கனைஸ் செய்தவர்களுக்கு நன்றிகள். ...
உண்மையிலேயே இன்னிக்கு கம்பெனியில் உட்கார்ந்திருக்கும் பொழுது சுமார் 5.45 PM போன்ற சமயத்தில் பில்டிங்க் ஆடுவதைப் போலிருந்தது. முதலில் புரியவில்லை பின்னர் இரண்டாவது முறையும் அப்படியே ஒரு பீலிங். சரி முட்டாள்னு சொல்லிடுவாங்கன்னு சொல்லலை. சிறிது நேரத்தில் மனம் ஒப்புக்கொள்ளாமல் அப்படி வேறயாராவது பீல் பண்ணிங்களாய்யா? என்று கேட்டேன் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மக்களிடம்.எல்லோரும் ஒன்றைப்போல இல்லையென்று சொல்ல, என்னுடைய டீம் லீடர் மட்டும் தான் உணர்ந்ததாகச் சொன்னான்.ஒன்றுமே...
லக்ஷ்மி உடனான என்னுடைய சிவாஜி படம் பற்றிய கருத்து பரிமாற்றத்தை போன பதிவுடனேயே நிறுத்திவிட்டேன். அதற்கு அவர் எழுதிய பதிவுக்கும் பதில் எழுத வேண்டிய அவசியம் இல்லையென்றே நினைக்கிறேன். இந்த விவாதம் போகும் இடம் நன்றாகத் தெரிவதால் பிரகாசமாக எஸ்கேப் ஆகிறேன்.வர்ட்டா ...
வெற்றி தோல்வி இல்லாத போட்டியொன்றின்முடிவை நிர்ணயிக்கப்போகும் என் இயக்கத்தை தீர்மானிக்கும் வலிமைபெற்றதாய்வீரியம் பெறுகிறது என் இருப்பின் மீதானமற்றவர்களின் கோபம்அடர்கானகத்தின் வழியேயானமுடிவென்னும் பெருவெளியை நோக்கிய பயணத்தின்இடையில் இயக்கத்தை நிறுத்த முயலும்அத்தனைப் பொறிகளையும் சுட்டு வீழ்த்தியவனாய் நகர்ந்து கொண்டேயிருக்கிறேன் கடக்கவேண்டிய தொலைவை மட்டுமே கருத்தில் நிறுத்திசிறிதும் பெரிதுமாய்வண்ணக்குழப்பங்களுடன் கூடியதாய்பல சமயங்களில்பொருந்தாததாயுமான முகமூடிகள்பயணத்தின் நடுவே கழன்று விழுகின்றனபெருஞ்சிரிப்புகளைப் புறக்கணித்தவனாய்நான்நண்பர்கள் பகைவர்களாய்நீலமேகம் நொடியில் நெருப்பு மழை பொழியும்இருண்மையாய் மாறி பயமுறுத்தும் மாற்றங்கள்காலைவாறிவிடவே காத்திருப்பவை...
பெரும்பாலும் இணைய உலகில் உலவுபவர்கள் அனைவருமே ஐபி, ஐபி டிராக்கர் போன்ற டெர்ம்களை கேள்விப்பட்டவர்களாகத்தான் இருப்பார்கள். அதனுடைய பங்ஷனாலிட்டியும் பெரும்பாலும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆனாலும் தமிழ்மணத்தில் அடிக்கடி ஐபி டிராக்கர் வைத்திருக்கிறேன் தேர்ட் பார்ட்டி ஐபி டிராக்கர் வைத்திருக்கிறேன் என்று எல்லா சொல்பவர்கள் கூட ஒரு பங்ஷனாலிட்டியை புரிந்து கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் வருகிறது.(இல்லை நான் புரிந்துகொள்ளவில்லையென்றால் புரிந்துகொள்ளவே இந்தப் பதிவென்றும் வைத்துக்கொள்ளலாம்.)சாதாரணமாக நபர்கள் ஐபி...
முதலில் ஒரு விஷயம் சிவாஜி படத்தின் ஹீரோயினியை - அதாவது உங்கள் டெர்மில் - அண்ணியை நான் முட்டாளாக பார்க்கவில்லை. திருப்பதி பத்மாவதி தாயார் கழுத்தில் இருந்து தாலி கழன்று விழுந்ததாக வந்த செய்திக்காக(புரளியாகவும் இருக்கலாம்) இரவோடிரவாக ஒரு புதுத் தாலியை தயார் செய்து கட்டிக்கொண்டவர்களை நீங்கள் முட்டாள்களாகப் பார்க்கிறீர்களா? நான் அதைப்போன்ற விஷயத்தை சாதாரணமான ஒன்றாகத்தான் பார்க்கிறேன்; அதைப்போலவே இதையும் ஒரு சாதாரணமான ஒரு விஷயமாகத்தான்...
முதலில் இந்தப் பக்கம் அந்தப்பக்கம், அவங்க(லக்ஷ்மி) சொன்ன பதிவுகள் நான் சொன்ன பதிவுகள் எல்லாத்தையும் படிங்க. அப்புறம் அடிங்க உங்க ஆப்பை. சும்மா நான் சொன்னேன்னோ இல்லை அவங்க சொன்னாங்கன்னோ, "பதிவையே படிக்கலை" ஆனாலும் இதுசரியில்லைன்னு போடாதீங்க பிட்டை.பதில் பதிவு ரெடியாய்க்கிட்டிருக்கு....தொடர்புடைய பதிவுகள். முட்டாள் மனைவிகளும் மாட்டிக்கொள்ளும் கணவர்களும்ஆறாம் விரல்களும் அர்த்தமற்ற முட்டாள்தனங்களும்தமிழ்க் கலாச்சாரத்தோடு ஒரு பெண்இது இப்ப எழுதினது குறைந்த பட்சம் இதையாவது படிங்க, மேற்படி...
சமீபத்தில் ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் முன்பே ஒரு முறை நட்சத்திர வாரத்தில் சொன்னதைப் போல் நான் சினிமா பார்ப்பதில் பாரபட்சம் பார்ப்பதில்லை. இது ஏதோ ஒரு கடவுள் பார்த்த பொழுது சொல்லப்பட்ட விஷயம் தான்முருகன் ஏன் பிரணவ ரகசியத்தை அம்மாவிடம் சொல்லாமல் அப்பா சிவனிடம் சொன்னார்?கிர்ர்ர்ர் எனக்கு சட்டென்று தோன்றிய கேள்வி முருகனன்பர்கள் பதில் சொல்லலாம். ...
வீடுதோறும் வாசல்களில்அகல் விளக்குகள் பொருத்தும்அழகான நாட்களுள் ஒன்றில்உன்னை முதல்முறை பார்த்தேன்காற்றில் தள்ளாடும் சுடர்களை இரு கைகளைக் குவித்துப் பொத்திகாத்துக் கொண்டிருந்தாய்உனது மஞ்சள் நிற பட்டுப் பாவாடையும்காதுகளில் தொங்கிய லோலாக்குகளும்சுடர் பட்டுப் பிரகாசித்தனஎன் மகள் மஞ்சள் ப்ட்டில் லோலாக்கோடுசுடர்களைக் காத்துக் கொண்டிருந்தாள்எனது ஒளி பொருந்திய வாசல்களில்அழகான நாட்களில் ----------------------------------------------------ஒவ்வொரு அறையாகத்திறந்து செல்வது எனக்குப்பிடித்தமான விளையாட்டுஅறைகள் தோறும் வெவ்வேறு பக்கங்களில்கதவுகள்ஒன்றைத் திறந்து பிறிதொன்றில் நுழைந்துவெவ்வேறு திசைகள் வழியாகஒருமுறை நுழைந்தால் திரும்ப...
தமிழ்மணம் வாசிப்பில் என்ற தலைப்பில் எழுத எனக்கு முதலில் அருகதை உள்ளதா என்ற கேள்வி தான் முதன்முதலில் தமிழ்மண நிர்வாகம் எழுதச் சொன்ன பொழுது முதலில் தோன்றியது. ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு மேலாக தமிழ்ப் பதிவுகளில் இயங்கி வருவதால் இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் என்னுடைய தீவிரமான வாசிப்பு என்பது இரண்டாண்டுகளுக்கு முன் தமிழ்மணம் என்னிடம் அறிமுகம் ஆன பொழுதோ இல்லை அதற்கு முன் தமிழ் இணையம்...
இங்கே சாஃப்ட்வேர் உலகில் Culture and Values என்ற ஒரு விஷயத்தைப் பற்றிய பேச்சு அதிகமாகவேயிருக்கும். சமீபத்தில் நீயெல்லாம் கல்சுரலி நாட் குட் அப்படின்னு டிரெயினிங்கிற்கு அனுப்பினார்கள். ஒரு நாள் முழுக்க Cross Cultural Sensitivity என்ற கான்செப்டில், ஒரு அண்ணாச்சி நல்லா பாடம் நடத்தினார். அதைப் பற்றி இன்னொரு பதிவு விளக்கமா எழுதுறேன் இப்ப, அந்த ப்ரொக்கிராம் முடியிறப்ப ஒரு பஞ்ச் ஆப் கொஸ்ஸீன்ஸைக் கொடுத்து...
தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினிகள் தேவையா என்று யோசித்திருக்கிறேன், அப்படியே பாடல்களும். ஹீரோயினிகள் இல்லாமல் போய்விட்டால் நிச்சயமாய் பாடல்கள் நின்றுவிடும். எப்படிப்பட்டவையென்றால், சட்டுன்னு "எனக்குத்தேவை தமிழ்க்கலாச்சாரத்தோட ஒரு பொண்ணு" என்று சொன்னதும் "பல்லேலக்கா பல்லேலக்கா" என்று ரஜினிகாந்த், நயன்தாராக்களின் தொப்புள்களுடன் டான்ஸ் ஆடவேண்டிய அவசியம் இருக்காது. ரஜினிகாந்த் வாழ்க்கையை வெறுத்து "விடுகதையா இந்த வாழ்க்கை" போன்ற பாடல்கள் இதில் அடங்காது, அதெல்லாம் கொஞ்சம் சப்தமாகயிருக்கும் பின்னணி இசை என்று...
Subscribe to:
Posts
(
Atom
)
Popular Posts
-
"Its not fair" ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ "நான் நினைச்சேன்..." என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொஞ்சம்...
-
ஏந்து பேர் அல்குல் நின்றும் கற்றை மேகலைகள் நீங்கி படிமங்கள் ஆபத்தானவை, மனதில் ஒன்றிலிருந்து ஒன்றாய் தோன்றி மறைந்து உருவாகி பதிந்துவி...
-
Chennai buzzing with that sticky night heat, the kind that made you want to drown the world in booze and fuck it all off. I’d been itching t...