In கவிதைகள்

திருத்தி எழுதப்படுமா தீர்ப்புகள்?

கேள்விகளுக்கான
என் ஜன்னல்கள் திறந்தேயிருக்கின்றன
தெரிவிக்கப்பட்ட கல்லறை முகவரியாய்
பிரபஞ்சத்தை அதன் நீள அகல உயரங்களுக்கு
விரும்பும் என்னை, என் நீள அகல உயரங்களுக்கு
அர்பணித்தப் பின்னும் ஜன்னல்களுக்கான பயமில்லை என்பதாய்

ஜன்னல்கள் இல்லாமல் போன வீடுகளை
பெரும்பாலும் புறக்கணித்தப்படியே என் பயணம் தொடர்கிறது
வீதிக்கு வந்துவிட்ட வீடுகள் ஜன்னல்கள் இல்லாமல்
போராட வந்துவிட்டு வலிகளுக்காக புலம்புவதைப் போல்
முகத்தில் படறும் குறுநகை மறைக்கப்படுவதில்லை
மறைக்கப்படாததாலேயே குறுநகை
இகழ்ச்சிக்குரியதாய் நீள்கிறது

நீண்டு கொண்டேயிருக்கும் இரவு
பொழிந்து கொண்டேயிருக்கும் பனி
நகர்ந்து கொண்டேயிருக்கும் நான்
கேள்விகளுக்கான
என் ஜன்னல்கள் திறந்தேயிருக்கின்றன
தெரிவிக்கப்பட்ட கல்லறை முகவரியாய்

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In சினிமா விமர்சனம்

Bridge to Terabithia

இப்படி ஒரு படம் தமிழில் வராதா என்று நான் ஆச்சர்யப்படும் படங்கள், நான் லீனியர், டிரை லாஜி படங்களை மட்டுமில்லை. கொஞ்சம் ஜிம்மிக்ஸ் கலந்த ஆனால் திறமையான நடிகர்களால் நேரம் போவதே தெரியாமல் செய்யும் பிரிட்ஜ் டு தெரிபிதியா போன்ற படங்களையும் தான்.



மிகச் சாதாரணமானக் கதை, படத்தின் டிரைலரைப் பார்த்துவிட்டு கிராபிக்ஸால் பிரமாதப்படுத்தப்படப்போகும் ஒரு படத்தைப் பார்க்கும் ஆர்வம் தான் இருந்தது. அதுவும் "க்ரோகினிகல்ஸ் ஆப் நார்னியா" தயாரிப்பாளர்களிடமிருந்து. ஆனால் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் குறைவே. சொல்லப்போனால் தேவையான அளவே.

ஒரு அமேரிக்க விவசாயக் குடும்பத்தில் இருந்து ஆறாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனைச் சுற்றி நகர்கிறது படம். ஆச்சர்யப்பட வைக்கும் ஓவியத் திறமை அவனிடம் இருக்கிறது, கொஞ்சம் கஷ்டப்படுகிற பேமிலி, மூன்று அக்காக்கள் ஒரு தங்கச்சி. அவனுடைய சூழ்நிலை அவனை அவன் உடன்படிக்கும் மாணவர்களிடம் இருந்து விளக்கிவைக்கிறது இன்னும் சொல்ல வேண்டுமானால் அந்த மாணவர்களுக்கு வம்பிழுக்க கிடைக்கும் ஒரு ஆளாகவே இந்தப் பையன் இருக்கிறான்.

அந்த வகுப்பில் புதிதாக ஒரு பெண் வந்து சேர சூடுபிடிக்கிறது படம், அதுவும் அந்தப் பெண், அந்தப் பையனின் பக்கத்து வீட்டுக்காரியாக இருந்துவிட இருவருக்கும் நட்பு உருவாகிறது. பிறகு அவர்களுடைய நட்பு தான் படமே, அப்பா அம்மா இருவரும் கதாசிரியர்களாக இருக்கும் அந்தப் பெண்ணின் கற்பனையில் உருவாவது தான் தெரிபிதியா. அதையெல்லாம் விவரித்து படம் பார்க்கப்போகும் உங்களை கஷ்டப்படுத்த விரும்பவில்லை.

அவர்கள் இது போன்ற படங்களில் கூட லாஜிக் உதைக்கக்கூடாதென்று நினைப்பது வியக்க வைக்கிறது. மற்றபடிக்கு நம் ஒவ்வொருவருக்கும் சிறுவயதில் இருந்த கனவுலகத்தை கொஞ்சமே கொஞ்சம் கிராபிக்ஸ் பயன்படுத்திக் காண்பிக்கிறார்கள். மியூசிக் டீச்சராக வரும் Zooey Deschanel நடிப்பு இயல்பாகயிருக்கிறது. நன்றாக கிதார் வாசிப்பார் போலிருக்கிறது? தெரியாதென்றால் நான் நிச்சயம் ஆச்சர்யப்படுவேன் அத்தனை அழகாக கார்ட் பிடிக்கிறார்.

இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுய ஒருவர், என்ன ஒருவர் ஒரு சின்னப்பொண்ணு படம் காண்பிச்சிருக்கு(Bailey Madison), கீழ்வரிசையில் ஒரு பல் இல்லாமல்(அந்த இடத்தில் பல் இல்லாத குழந்தைகளை நான் பார்த்ததுகிடையாது - தேடிப்பிடித்தார்களா? - அடித்து உடைத்தார்களா? - ஹிஹி) தன்னைத் திட்டிய பெண்ணை, சகோதரனும் அவன் தோழியும் சேர்ந்து பழிவாங்கும் பொழுது ஒரு சிரிப்பு சிரிக்குது பாருங்கள் அந்தப் பொண்ணு Simply Superb.

மற்றபடிக்கு Josh Hutcherson (அந்தப் பையன்), AnnaSophia Robb (அந்தப் பொண்ணு), மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள், அந்தப் பொண்ணு இறந்துவிட்டதாகத் தெரியும் பொழுது அந்தப் பையனின் தாவங்கட்டையெல்லாம் அழுகிறது. ம்ஹூம் நல்லா டிரையினிங் கொடுத்திருக்காங்க.

நிறைய விஷயங்களைப் பார்த்துப் பார்த்து செய்திருக்கிறார்கள், அந்த குட்டீஸ் வைத்திருக்கும் பிங்க் கலர் பை, அந்தப் பொண்ணின் உடை மற்றும் பை, அவற்றில் குத்தியிருக்கும் சின்ன சின்ன விஷயங்கள்(மணிஷா என்றொரு குட்டீஸைத் தெரியும் எனக்கு டெல்லியில் இருந்த பொழுது. படத்தில் அந்தப் பெண்ணைப் பார்த்ததைப் போலிருந்தது - இந்தக் குட்டீஸைப் பார்த்த பொழுது). சின்ன குழந்தகளை கவனிப்பவன் என்ற முறையில் நிறைய கவனித்துச் செய்திருக்கிறார்கள்.

என்ன சொல்ல இந்த மாதிரியான ஒரு படம் தமிழில் வருவதற்காக காத்திருக்கிறேன்.







Read More

Share Tweet Pin It +1

2 Comments

In புத்தகங்கள்

புலிநகக் கொன்றை

புலிநகக் கொன்றை எனக்கு அறிமுகமானது மரத்தடியில். சாதாரணமாகவே அந்தக் காலக்கட்டத்தில் கிடைத்ததையெல்லாம் படித்துக்கொண்டிருந்தேன். சூழ்நிலை அப்படி, கேன்பேவில் பெஞ்சில் இருந்த காலக்கட்டங்கள் அவை. அப்படிப்பட்ட ஒரு நாளில் அறிமுகம் ஆனது தான் புலிநகக் கொன்றை. மரத்தடி மக்கள் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தப் புத்தகம். இன்னும் சிலர் தாங்கள் படித்ததிலேயே மிகவும் நல்ல புத்தகம் என்றெல்லாம் எழுதி ஓவர் ஹைப் கிடைத்திருந்த புத்தகம். ஆனால் கைகளில் அந்தப் புத்தகத்தைப் பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் தான் கிடைத்தது.

Tiger-claw tree என்று ஆசிரியர் பி. ஏ. கிருஷ்ணன் ஆங்கிலத்தில் எழுதிய நாவலை, தமிழிலும் (அ) எழுதியிருக்கிறார் (ஆ) மொழிபெயர்த்திருக்கிறார். சில இல்லை பல சமயங்களில் விஷயங்களுக்கு கிடைக்கும் ஹைப்புகள் அதன் டிஸ் அட்வான்ட்டேஜ்களாக ஆகிவிடுவதுண்டு. ஆனால் என்னைப் பொறுத்தவரை, இந்தப் புத்தகத்திற்கு கிடைத்த ஹைப் சரியானதே.

"எக்கர் ஞாழல் இறங்கிணர்ப் படுசினைப்
புள்ளிறை கூருந் துறைவனை
உள்ளேன் தோழி படீ இயரென் கண்ணே..."

இந்தப் பாடல்களுக்குப் அர்த்தம் சொல்லறது வைரத்தைக் கரியாக்கற விவகாரம். இருந்தாலும் சொல்லறேன். தோழி கேள். நான் அவனைப் பற்றி நினைக்க மாட்டேன். யாரை? எவன் நாட்டிலன் மணலடர்ந்த கரையில் இருக்கும் புலிநகக்கொன்றை மரத்தின் – ஞாழல்னா புலி நகக் கொன்றை மரம் – புலிநகக் கொன்றை மரத்தின் தாழ்ந்த, பூத்திருக்கும் கிளைகளில் பறவைகள் ஆக்கிரமித்துக் கூச்சல் இட்டு அழிவு செய்து கொண்டிருக்கின்றனவோ அவனை. என் கண்களுக்குச் சிறிது தூக்கம் கிடைக்கட்டும்.

ஐங்குறுநூறு 142ம் பாடலில் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தான் தனக்கு இந்த நாவலுக்காந தலைப்பு கிடைத்ததாக ஆசிரியர் பி.ஏ. கிருஷ்ணன் சொல்கிறார். அந்தப் பாடலும் அதன் பொருளும் தான் மேலே காண்பது.

தென் தமிழ்நாட்டு, தென்கலை பிராமணர் வகையறாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைப் பற்றிய நான்கு தலைமுறைக் கதைகளை சொல்ல முயன்றிருக்கிறார் ஆசிரியர். முதல் பக்கம் கொடுத்திருக்கும் அட்டவணை ஆரம்பத்தில் பெரிதும் உதவுகிறது. இதனால் ஆசிரியரால் கதைக்குள் வேகமாக டைவ் பண்ண முடிகிறது என்பது உண்மையே. நூறு, நூற்று இருபது ஆண்டு கதைக்குள் நிறைய விஷயங்களை தொட்டுச் சென்றிருக்கிறார் ஆசிரியர், அவருடைய எழுத்தில் தான் வைக்கும் விஷயங்கள் பிரச்சனையை ஏற்படுத்திவிடக்கூடாதே என்ற கவனம் தெளிவாகத் தெரிகிறது.

ஏனென்றால் தமிழ்நாட்டின் பிரச்சனைகளை இன்றும் ஏற்படுத்திவிடக்கூடய விஷயங்கள் அவை, கட்டபொம்மு, மருது பாண்டியர், சிதம்பரம் பிள்ளை, திலகர், வாஞ்சிநாதன், வவேசு ஐயர், சுப்பிரமணிய பாரதி, இராஜாஜி, பெரியார், எம்ஜிஆர், எம் ஆர் ராதா என தொட்டால் பற்றிக்கொள்ளக் கூடிய ஆட்கள் நாவலெங்கும் பரவியிருக்கிறார்கள் சில சமயங்களில் கதாப்பாத்திரங்களாக, சில சமயங்களில் விவரணைகளாக, சில சமயங்களில் உரையாடல்களாக.

கதையின் ஆரம்பக்கட்டங்களில் முற்றிலும் ஏற்படாத ஒரு தொய்வு என்னைப் பொறுத்தவரை, கம்யூனிஸம் மார்க்ஸிஸம் பற்றிய பேச்சு வரும் பொழுது எழுகிறது. இது ஆசிரியரின் தவறில்லை என்னுடையது. என்னுடைய தலைமுறை ஆட்களுக்கு கம்யூனிஸமோ மார்க்ஸ்ஸிஸமோ அறிமுகப்படுத்தப்படவில்லை. ஆனால் அந்த யிசங்கள் பிரபலமாகயிருந்த காலத்தில் நடக்கும் கதையில் அவற்றைச் சொல்லாமல் விட்டுவிடமுடியாது தான். அதைப் போலவே மிகச் சுலபமாக விளங்கிக்கொள்ளும் அளவிற்கு சுலபமான கான்ஸெப்டுகளும் கிடையாது அவர்கள்.

ஆனால் எது எப்படியிருந்தாலும், பிரச்சனைகளுக்கான தீர்வு இதுதான் என்று ஒரு தீர்ப்பை முன்வைக்கவேயில்லை புலிநகக் கொன்றை, இந்த விஷயத்தில் மிகச் சிறப்பாகவே வந்திருக்கிறது. கடவுள் மறுப்பு, கடவுள் ஆதரிப்பு, காங்கிரஸ், திமுக இப்படி பல விஷயங்களை ஆசிரியர் அவர் பார்த்தது போலவே சொல்ல, நாமும் கேட்டுக்கொண்டதைப் போல பயணிக்க முடிகிறது நாவலில். பல சமயங்களில் ஒரு முடிவை சொல்லிவிடும்பொழுது அது நமக்கு பிடிக்காமல் போகும் பொழது நாம் நாவலின் சுவாரஸியத்தன்மையை இழக்கிறோம். அது புலிநகக் கொன்றையில் கிடையாது.

கதையின் சாராம்சம் இதுதான் என இரா. முருகன் காபி கிளப்பில் எழுதியது நீங்கள் கீழே காண்பது.

"...பொன்னா பாட்டி சாகக் கிடக்கிறாள். எந்தப் பொன்னாப் பாட்டி? நாங்குநேரி ஜீயரின் மடைப்பள்ளியில் புளியோதரைப் புலியாகக் கரண்டி பிடித்தவரின் ஒரே பெண். லேவாதேவி கிருஷ்ண ஐயங்காரின் ஒரே மகன் ராமனுக்குப் பெண்டாட்டியானவள்.

போஜனப் பிரியனான ராமன் சாப்பிட்ட நேரம் போகச் சற்றே பொன்னாவுடன் படுத்து எழ, நம்மாழ்வார், பட்சிராஜன் (பட்சி), ஆண்டாள் என்று மூன்று குழந்தைகள். அப்புறம் ஒரேயடியாகப் படுத்துத் திருநாடு அடைந்து விடுகிறார் அவர்.

நம்மாழ்வாருக்கு அப்போது புதிதாக எழுந்த தேசிய அலையில் கலக்க - வ.உ.சி, பாரதியோடு, காங்கிரஸ் தீவிரவாதிகளோடு செயல்பட விருப்பம். செயல்படுகிறான். கல்யாணம் ஆகி, மனைவி மது என்ற மதுரகவியைப் பிள்ளையாகப் பெற்றுக் கொடுத்து விட்டு உயிரை விடுகிறாள். தேசபக்தியும் வாழ்க்கையும் அலுத்துப்போய் நம்மாழ்வார் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்.

அறுபது வருடம் கழித்து நம்மாழ்வார் திரும்பி வரும்போது அம்மா பொன்னா இன்னும் உயிருடன் - உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறாள். தம்பி பட்சி ஹோம்ரூல் இயக்கத்தில் ஈடுபட்டு வயதாகி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் பெரிய வழக்கறிஞர். தங்கை ஆண்டாள் கன்னி கழியாமலேயே வாழ்க்கைப்பட்டு, அதேபோதில் கணவனைப் பறிகொடுத்து, இளமையில் விதவையாகி, சித்தம் தடுமாறி மனநோயாளியாக இறந்து போயிருக்கிறாள்.

பட்சியின் ஒரே மகன் திருமலை. அவனுடைய மகன் கண்ணன் நெல்லையில் கல்லூரி விரிவுரையாளன்.

திருநெல்வேலியில் பேராசிரியரை போலீஸ் காவலில் வைத்த வழக்கில் (கதை சிப்பாய்க் கலக காலத்தில் தொடங்கி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வரை நீள்கிறது) மாணவர் போராட்டத்தின்போது கண்ணன் வேலையை இழக்கிறான்.

நம்மாழ்வாரின் பிள்ளை மது பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபட்டு இறக்கிறான். அவனுடைய மகன் நம்பி டாக்டராக, பெரிய பாட்டி பொன்னாவைக் கவனித்துக் கொள்வதோடு, தன் மனைவி ரோசாவோடு கம்யூனிஸ்ட்டாகவும் இருக்கிறான்.

நம்மாழ்வார் ஜோஷிமடத்திலிருந்து தம்பி பட்சிக்கு எழுதிய கடிதம் கிடைத்து நம்பி தான் அவரைச் சந்திக்கஅங்கே போகிறான்.

ஆனால் நம்மாழ்வார் திரும்ப வரும்போது நம்பி நக்சலைட் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில்வைக்கப்பட்டு, விடுதலையான பிறகு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறக்கிறான்.

படுத்த படுக்கையாக இருக்கும் பொன்னா தன் பிள்ளை நம்மாழ்வாரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. நம்மாழ்வார் ரோசாவுடனும் அவளுடைய கைக்குழந்தையோடும் நம்பியின் நினைவோடும் அவள் வீட்டிலேயே தங்கி விடுகிறார்.

கண்ணன் ஐ.ஏ.எஸ் தேர்வு பெற்று தில்லிக்குப் பயணமாவதில் கதை முடிகிறது..."


இதையெல்லாம் விட இந்தக் கதையை தெளிவாகச் சொல்லிவிடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை என்பதால் காப்பி பேஸ்ட். மற்றபடிக்கு இந்தக் கதையைத் தொடர்ந்து நடந்த ஜெயமோகனுக்கும் பிஏ கிருஷ்ணனுக்கும் ஆன உரையாடல் நன்றாகயிருக்கும், அது இங்கே

அப்புறம் இரா.மு எழுதிய முழு விமர்சனம் இங்கே கிடைக்கும். ஆனால் பிரச்சனை டிஸ்கியில் இருக்கு மாற்றிக்கொள்ளுங்கள் மகானுபாவர்களே.

நன்றி இரா.முருகன், ராயர் காப்பி கிளப்.

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In Only ஜல்லிஸ் புத்தகங்கள்

பார்த்தலில்... கேட்டலில்... படித்ததில்...

இந்தத் தலைப்பில் ஒன்றை சுரேஷ் கண்ணன் எழுதியிருந்த பொழுதே அய்ட்டம் பிடித்திருந்ததால் எழுதியிருந்தேன். ஆனால் எங்கும் லிங்க் கொடுக்கவில்லை. இப்பொழுது கார்த்திக் பிரபு இதே போன்ற ஒன்றை எழுதி என்னைத் தொடருமாறு அழைத்திருந்தார்.

நான் ஏற்கனவே எழுதியதை மறுபதிவிடுகிறேன். எனக்குத் தொடர்ச்சியாய் லிங்க் கொடுத்துக்கொண்டே போவதில் விருப்பம் கிடையாது என்றாலும், பொன்ஸை Tag செய்கிறேன். விருப்பப்பட்டால் போடலாம்.

-----------------------------------

பார்த்தலில் கேட்டலில் படித்ததில் என்று சுரேஷ் கண்ணன் எழுதியிருந்து பின்னர் விருப்பப்படுபவர்கள் தொடருமாறு சொல்லியிருந்தார். சோம்பேறித்தனத்தில் ஒன்றாம் நம்பரான எனக்கு இதைப்பற்றி எழுதும் ஆசை இருந்ததாலும் எதையாவது எழுதவேண்டும் போல் இருப்பதாலும் தொடர்கிறேன்.

எனக்கான பிடித்த விஷயங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன, எப்படி பொன்னியின் செல்வனில் தொடங்கி சாண்டில்யன் வழியாக, சுஜாதா பாலகுமாரன் என படித்து இப்பொழுது, ரமேஷ் பிரேம், ஜேபி சாணக்யா, சாரு நிவேதிதா, சுரா, ஜெயமோகன், எஸ்ரா என்று மாறிக்கொண்டேயிருக்கிறது. இது மொத்தமும் தமிழில் நான் உணர்ந்தவை ஆங்கிலம் முடிந்தால் இன்னுமொறு பதிவில்.

படித்ததில் பிடித்தது
ஒரு புளியமரத்தின் கதை,
உபபாண்டவம்
ஜெயமோகன் குறுநாவல்கள் (குறிப்பாக லங்காதகனம்)
ஜூனோ இருபாகங்கள் (சுஜாதா என்று சொல்லவும் வேண்டுமா)
பயணிகள் கவனிக்கவும் (பாலகுமாரன், ஏறக்குறைய அத்தனையையும் படித்திருப்பேன் உடையார் 5 வரை. இது மிகவும் பிடித்திருந்தது. காரணமெல்லாம் கேட்டால் சொல்லத்தெரியாது.)
ஸீரோடிகிரி (சாரு நிவேதிதா - உவ்வே என்று வந்தாலும் பிடித்திருந்தது)
சொல் என்ற ஒர் சொல்(பின்நவீனத்துவத்தை உண்டு இல்லைன்னு பார்த்திர்றதுன்னு ஒத்தக் காலில் நின்று படித்த புத்தகம் அப்படியே வாங்கிய அவர்களின் நாவல்களின் தொகுப்பு.)
மரப்பசு தி.ஜானகிராமன் (மீண்டும் ஒரு முறை வாங்க வேண்டும். யாரோ எடுத்து சென்று விட்டார்கள்.)
சரி சரி பொன்னியின் செல்வன்(இதனுடன் நான்கைந்து ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன்)
மற்றது, கடல்புறா மொத்தமாக இதுவும் நான் சின்ன வயதில் படித்திருந்ததால் மனதில் ஆழமாக பதிந்துவிட்ட ஒன்று.

கேட்டதில் (எனக்கும் பாடல்களுக்குமான விருப்பம் ரொம்பவே வித்தியாசமானது. இதில் வேறெதையும் எதிர்பார்க்காதீர்கள்.)

நெஞ்சினிலே நெஞ்சினிலே (உயிரே..)
தங்கத்தாமரை மகளே(மின்சாரக் கனவு)
இது ஒரு பொன்மாலைப் பொழுது..
வெண்மதியே வெண்மதியே நில்லு
முன்பனியா முதல் மழையா
தொம் தொம் (சிந்து பைரவி)
ரோஜா ரோஜா (காதலர் தினம்)
எங்கே எனது கவிதை (கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்.)
என் வானிலே (ஜானி ஜானி ஜானி)
லஜ்ஜாவதியே (4 த பிரண்ட்ஸ்)

பார்த்ததில் பிடித்தது (நான் கமல் ரசிகன் அல்ல இது ஒரு முக்கியமான குறிப்பு )

நாயகன்
குருதிப்புனல்
தளபதி
மைக்கேல் மதன காமராஜன்
திருவிளையாடல் (சிவாஜி)
அதே கண்கள்(ரவிகுமார் நடித்தது)
எதிர் நீச்சல்(நாகேஷ் படிக்கட்டு கீழிருந்து படிப்பதாக வருமே அது இந்தப் படம் தானே.)
வீடு
அவள் அப்படித்தான்(இது முழுக்க முழுக்க ரஜினிக்காக பின்னியிருப்பார் அப்படியே ஸ்ரீப்ரியாவும்)
அப்புறம் கட்டக் கடேசியா புதுப்பேட்டை.

சுரேஷ் சொன்ன பல படங்களை நானும் சொல்லியிருக்கிறேன், என்பது கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் அவை அத்தனையும் நல்ல படங்கள். அதேபோல் தான் இதுவும் விரும்புபவர்கள் தொடரலாம்.

Read More

Share Tweet Pin It +1

9 Comments

In உலகக்கோப்பை கிரிக்கெட்

ஆஸ்திரேலியா - உலகக் கோப்பை

போன தடவையும் இதேபோல் ஒரு மாப் போட்டுக்கொடுத்தேன். 90% அப்படியே நடந்தது. ஏன்னா ஒரே ஒரு விஷயத்தை மட்டும் வச்சு போட்ட மாப் அது விஷயம் என்னான்னா, ஆஸ்திரேலியா ஒரு மாட்ச் கூட வேர்ல்ட் கப்பில் தோற்காது என்பதுதான்.

அப்படியே நான் சொன்ன இன்னொன்று இந்தியா பைனல்ஸ் வருமென்பது, பைனல்ஸ் ஒன் சைட்டைட் மேட்ச் ஆகயிருக்கும் என்பதும் தான். எனக்கென்னவோ நான்காண்டுகளுக்குப் பிறகும் மாற்றம் எதுவும் தெரியவில்லை. கீழே நான் கொடுத்திருக்கும் விவரங்கள் புரியுமென்று நினைக்கிறேன். இந்தப் பதிவு வேர்ல்ட் கப் முடியும் வரை அப்டேட் செய்யப்படும்.

Group A

1. Australia
2. South Africa

Group B

1. India
2. Srilanka

Group C

1. New Zealand
2. England

Group D

1. Pakistan
2. West Indies

Then Super Eights

A1 & D2 - Australia Vs West Indies - Australia
A1 & B2 - Australia Vs Srilanka - Australia
A1 & C2 - Australia Vs England - Australia
A1 & D1 - Australia Vs Pakistan - Australia
A1 & B1 - Australia Vs India - Australia
A1 & C1 - Australia Vs New Zealand - Australia

The Semi finalists

1. Australia
2. England
3. India
4. West Indies

அப்படின்னா
Australia Vs West Indies - Australia
England Vs India - India

இன்னமும் சொல்லணுமா

Finals

Australia Vs India - Australia

இன்னும் அதிக விவரங்களுடன் வருகிறேன்.

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In சினிமா விமர்சனம்

The Beautiful Mind - John Nash - Game Theory

நான் இந்த திரைப்படத்தை முதன் முதலில் பார்த்த பொழுது, எல்லா ஆங்கில திரைப்படங்களைப்போல இதுவும் முழுமையாக விளங்கவில்லை. அதற்கு என் ஆங்கில அறிவுத்திறனே காரணம். சின்ன வயதில் இந்திப்படங்கள் பார்த்ததைப்போலத்தான் நான் ஆரம்பத்தில் ஆங்கிலப்படங்கள் பார்த்து வந்துள்ளேன். அதாவது முதலில் படத்தின் சூழ்நிலையை(situation) நன்றாக புரிந்து கொள்வது, பிறகு சம்பவத்தின் சூழ்நிலையை புரிந்துகொள்வது, பிறகுதான் உரையாடல்கள், யார் கொடுத்த வரமோ சூழ்நிலைகளை கொஞ்சம் சரியாக புரிந்து கொள்ளத்தெரிந்ததால், ஆங்கிலப்படங்கள் பார்க்கும் அறிவைப்பெற்றேன்.

பிறகு இரண்டு மூன்று முறைகள் பார்த்து உரையாடல்களையும் சரிபார்த்துக்கொள்வேன். சில படங்கள் பார்த்ததும் நான் புல்லரித்துப்போய் நின்றதுண்டு அதில் முக்கியமான ஒன்று இந்தப்படம். பிறகு நான் கொஞ்சம் கொஞ்சமாய் இந்தப் படத்தைப்பற்றிய விபரங்களை சேகரிக்கத் தொடங்க அது என்னை மேலும் மேலும் வியப்பில் ஆழ்த்தியது. முதலில் இந்தப் படத்தைப்பற்றி,

ரான் ஹோவார்ட்(Ron Howard) தயாரித்து இயக்கிய இந்தப்படம், சில்வியா நாஸர்(Sylvia Nassar) என்பவர் எழுதிய த பியூட்டிபுல் மைண்ட்(The Beautiful Mind) என்ற புத்தகத்தை அடிப்படையாகக்கொண்டது. சில்வியா நாசர், இதற்காக மூன்று உழைத்து நேஷ்ப்பற்றியதகவல்களை சேகரித்து புத்தகமாக, நேஷ்ஷின் வாழ்கை வரலாறாக எழுதினார். இதற்கு அவருக்கு சிறந்த வாழ்கை வரலாற்று ஆசிரியருக்கான விருது கிடைத்தது.(Sylvia Nasser's efforts were recognized when the book won the 1998 National Book Critics Circle Award for Biography, a nomination for the Pulitzer Prize for Biography.)
ஆஸ்கர்(Oscar) விருதில் நான்கை தட்டிச்சென்ற பெருமை இந்தப் படத்திற்கு உண்டு. இதற்கு முந்தைய வருடம்(2000) நடந்த ஆஸ்கரில் கிளாடியேட்டருக்காக(Gladiator), சிறந்த நடிகர் பரிசைப்பெற்ற ரஸல் குரோ(Russel Crowe), அடுத்த ஆண்டு(2001) இந்தப் படத்திற்காக, சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் தேர்வு பட்டியலில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது, பெண்களுக்கான ஆஸ்கரை கொடுத்துவிட்டு ரசல், ஆண்களுக்கான பிரிவின் தீர்ப்பை எதிர்பார்த்து நின்றது.

துரதிஷ்டவசமாக அந்த ஆண்டு டென்சல் வாஷிங்டனிற்கு(Denzal Washington) அந்த விருது சென்றடைந்தது(எனக்கு மிகவும் விருப்பமான இன்னொரு ஆங்கில நடிகர்.) அந்தப் படத்தின் கதை ஒரு தலைசிறந்த கணிதமேதையான ரசல் குரோ (ஜான் நேஷ்) எப்படி schizophrenia நோய்க்கு ஆள்ப்பட்டு 25 வருடங்கள் அந்த நோயில் தீவிரத்தால் தன் கணிதத்திறமையை வெளிப்படுத்த முடியாமல் பின்னர் நோயிலிருந்து மீண்டு(விஷயமே இங்குத்தான் இருக்கிறது) 1994ம் ஆண்டிற்கான நோபல் பரிசை பெற்றதைப்பற்றிய கதைதான் அது.

அந்த நோய் 2 மில்லியன் அமேரிக்கர்களைத்தாக்கியதாகவும், உலகின் 100ற்றில் ஒருவருக்கு இருக்கக்கூடியதாகவும் கருதப்பட்ட மனவழுத்த வியாதியாகும். (Mental illness that affects more than two million Americans and 1 in 100 people across cultures: schizophrenia.) நேஷ்ஷின் விஷயத்தில் இது கொஞ்சம் விசித்திரமானது, தான் கணித மேதையென உணர்ந்த சமயத்தில் வெளிகிரக மனிதர்கள், இந்த உலகத்தைக் காக்க தன்னை தேர்ந்தெடுத்ததாக நினைத்துக்கொண்டு அதிலேயே வாழ்ந்ததுதான் நேஷ்ஷின் பிரச்சனை(delusions, frequent auditory hallucinations, illusions that messages are being sent to him through television or newspapers, a skewed view of reality leading to paranoia. And like many who have struggled to live functional lives with the illness). பலர் இந்த வியாதிக்கு ஆட்பட்டு பிறகு இந்தநோயிலிருந்து மீண்டு வராமல் அப்படியே இறந்துவிடும் நிலையில். சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து இந்த நோயிலிருந்து மீண்டது தான் ஜான் நேஷ்ஷின் ஆளுமை. இதை மிக அழகாக படமாக்கி இருப்பார் இயக்குனர்.

இனி ஜான் நேஷ்ஷைப்பற்றி


ஜான் நேஷ் நோபல் பரிசு பெற்ற பொழுது(வலது புறமிருப்பவர்)

ஆரம்பக்காலத்தில் இந்தப்படம் வெளிவந்த சமயத்தில் நேஷ்ஷை தாக்கிய இந்த நோய் பிரபலமான அளவிற்கு நேஷ்ஷின் புகழ் பிரபலமடையவில்லை. உலகின் ஒரு தலைசிறந்த கணிதமேதை அடையாளம் தெரியாமலே இருந்தார். இன்னமும்தான். (இங்கே எத்தனை பேருக்கு ஜான் நேஷ்ஷை தெரியும் என்று எனக்கு தெரியாது.) இனி நாம் இங்கு பார்க்கப்போவது ஜான் நேஷ்ஷைப்பற்றியும் அவருக்கு நோபல் பெற்றுத்தந்த கேம் தியரியைப்பற்றியும்(Game Theory) தான்.(எனக்கு உண்மையிலேயே நேரடியாக இந்த விஷயத்தை இழுக்க பயமாக இருந்த காரணத்தினால் தான் த பியூட்டிபுல் மைண்ட் படத்தை இழுத்தேன்.)

ஜான் நேஷ்ஷைப்பற்றி பார்ப்பதற்கு முன்னர் கேம் தியரியைப்பற்றியும் அதன் தேவையைப்பற்றியும் தெரிந்து கொள்ளலாம்

கேம் தியரி(Game Theory)

அதாவது ஒரு பந்தயத்தை எப்படி வெல்வது என்பதைப்பற்றிய ஒரு தியரமாகவே இந்த கேம் தியரியைப்பார்க்கலாம். முதன் முதலில் இது, போடப்பட்ட முடிச்சுக்களை திறமையாக அவிழ்ப்பதில் தொடங்கி, பின்னர் சதுரங்கம் போன்ற விளையாட்டுக்களில் தன்னுடைய வெற்றியை நிர்ணயிப்பதில் இருந்தது.

இது போன்ற விளையாட்டுக்களில் எதிராளியின் நகர்வு நமக்குத்தெரிந்திருக்கும் உதாரணத்திற்கு சதுரங்கத்தில் எதிராளியின் நகர்தலை நாம் நேரில் பார்ப்பதைப்போல, ஆனால் சீட்டுக்கட்டை எடுத்துக்கொண்டால் மற்றவரிடம் இருக்கும் கார்ட் நமக்குத்தெரியாது. இதன் காரணங்களால் கணித வல்லுநர்கள் இந்த துறையில் கவனம் செலுத்தத்தொடங்கினர். இதில் நம் கணிப்புக்களும் இருக்கும் உண்மையான கணக்கும் இருக்கும்.

இது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, வர்த்தகத்துறையிலும், போர்க்காலங்களிலும் பயன்படும் அளவிற்கு வளர்ந்தது. அதாவது மற்ற போட்டியாளர்கள் என்ன விதமாக சிந்திக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதிலிருந்து மற்றநாட்டின் இராணுவ விவகாரங்களை அறிந்து கொள்வது வரை.

இவர்கள் பணத்திற்காகவோ இல்லை ஒரு இடத்திற்காகவோ யோசித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் எதிராளியும் யோசிப்பார்கள். நம்முடைய காஷ்மீர் விவகாரத்தைப்போல் இரு நாட்டிற்கும் இதைப்பற்றிய சில கொள்கைகள் இருக்கும். அவர்கள் அதைவிட்டு மாற மாட்டார்கள். இதனால் இந்த மாதிரியான விவகாரங்களில் வெற்றி தோல்வி என்பதில்லாமல் நடுநிலைமை என்ற ஒன்று ஏற்பட்டுவிடும். நம் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரத்தைப்போல்.

இங்கே தான் வருகிறார் ஜான் நேஷ், இந்த கேம் தியரியை நிகழ்கால உலகம் பயன்படுத்தும் ஒரு விஷயமாக தந்த பெருமை இவரையே சாரும். 1950ல் இருந்து 1953 வரை நான்கு மிக முக்கியமான, இது(கேம் தியரி) சம்மந்தப்பட்ட தன் கண்டுபிடிப்புக்களை(Four papers that revolutionised game theory) நேஷ் வெளியிட்டார். தன் இளமைப்பருவத்தில் அதாவது தன் இருபதிலிருந்து இருபத்தைந்தாம் வயது காலகட்டத்திற்குள் இவர் இதை செய்து முடித்தார். இவர் தன் ஆராய்சிக்கு எடுத்துக்கொண்டது, கூட்டுத்தொகை பூஜ்ஜியம் வராத விளையாட்டுக்களை(பிரச்சனைகளை).

சதுரங்கம் போன்ற விளையாட்டுகள் பொதுவாக கூடுதல் தொகை பூஜ்ஜியம் வரும் விளையாட்டுக்கள், அதாவது யாராவது ஒருவர் வென்றால் மற்றவர் தோற்பார். இவர் எடுத்துக்கொண்டது இப்படி கூட்டுத்தொகை பூஜ்ஜியம் வராத விஷயத்தை(Non zero sum's), அதாவது ஒரு நிர்வாகத்தையும் அதன் யூனியனையும் எடுத்துக்கொள்ளுங்கள், ஒரு விவகாரத்தில் தவறு நிகழ்ந்தால் வேலை நிறுத்தம் தொடங்கி, உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டு இருதரப்பிற்கும் நஷ்டம் ஏற்படும். ஆனால் இதற்கான ஒரு விஷயம் தான் ஜான் நேஷ் கண்டுபிடித்த கேம்தியரி, இருதரப்பும் ஒப்புக்கொள்ளும் ஒரு முடிவை நோக்கி விஷயத்தை நகர்த்துவது.

ஜான் இதற்கான தன் ஆய்வை கணித முறைகளைப்பயன்படுத்தி கண்டறிந்தார். அது ஒரு நடுநிலைமைக்காரணி(Nash Equilibrium) என்று கூறலாம். இருதரப்பிற்கும் வெற்றி தோல்வி இல்லாமல் ஆனால் பிரச்சனையை தீர்ப்பது.

தற்பொழுது நடைபெறும் பில்லியன்களை சம்மந்தப்படுத்தும் ஏல விவகாரங்களில் இவரது இந்த ஆய்வின் முடிவுதான் பயன்படுகிறது. ஆரம்ப காலங்களில் இருந்த சில தவறான முறைகளால், மிகவும் கவலைக்கிடமாக இருந்த இதைப்போன்ற ஏல முறைகள் பிற்காலத்தில் தாக்குபிடிக்க முடிந்தது இவரது கண்டுபிடிப்பால்தான்.

அதாவது, ஏலத்தொகையை தீர்மானிப்பது, நேர்முகமாகவா இல்லை மறைமுகமாகவா தங்களுடைய ஏலத்தொகையை தெரிவிப்பது என்று தீர்மானிப்பது, ஏலத்தொகைப்பற்றிய விவரங்களை எவ்வாறு பெறுவது என்பது சம்மந்தப்பட்ட விவகாரங்களை இவரது ஆய்வின் முடிவை வைத்துத்தான் தீர்மானித்தார்கள். இதற்கு நாஷ் கண்டுபிடித்த நடுநிலைமைக்காரணி(Nash equilibrium) முக்கிய பங்காற்றியது.

இதன் போன்ற காரணங்களால் தான் ஜான் நேஷ் ஒரு தலைசிறந்த கணிதமேதையாக கருதப்படுகிறார்.

நேஷ்ஷின் இந்த கண்டுபிடிப்பிற்காக(1950) 1994ம் ஆண்டு இன்னும் இரண்டு பொருளாதார வல்லுநர்களுடன் சேர்ந்து நேஷ்ஷிற்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

முடிப்பதற்கு முன்னால் ஒன்று, நாஷ்ஷிடம், நீங்கள் மனவழுத்ததில் இருக்கும் பொழுது ஏன் அந்த அந்நிய கிரகவாசிகள் தன்னை இந்த உலகத்தை காப்பாற்ற தேர்ந்தெடுத்ததாக நினைத்தீர்கள் என்று கேட்டதற்கு, அவர் இதைப்போன்ற அதீத சக்திபெற்ற அந்நிய சக்திகளைப்பற்றிய எண்ணம் தோன்றிய அதே விதத்திலேதான் என் கணிதத்திறமைக்கான(சிக்கல்களுக்கான) சில எண்ணங்களும்(விடைகள்) தோன்றின அதனால் தான் என்றாராம். ("Because the ideas I had about supernatural beings came to me the same way that my mathematical ideas did. So I took them seriously.")


நான் உபயோகப்படுத்திய கட்டுரைகள்

நாஷ்ஷைப்பற்றி
சில்வியா நாசரைப்பற்றி
த பியூட்டிபுல் மைண்ட் படம் பற்றி

Read More

Share Tweet Pin It +1

20 Comments

In வகைப்படுத்தப்படாதவை

கட்டபொம்முவும் உண்மையும்

சமீபத்தில் படிக்க நேர்ந்த ஒரு விஷயம், சிந்தனையில் இருந்து விலக மறுத்தது. கட்டபொம்மன் என்று சொல்லும் பொழுதே நினைவுக்கு வருவது சிவாஜி கணேசன் நடித்த அந்த படமும் அதன் வசனங்களும், ஆனால் சினிமாவில் வருவதெல்லாம் நிஜம் என்று நம்பும் பழக்கம் விட்டு பல ஆண்டுகள் ஆகிறது.

ஒரு சினிமாவால் வரலாற்றை எப்படியெல்லாம் திசைதிருப்ப முடியும் என்பது வியப்பளிக்கிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் போல், சோழகுலத்தின் வரலாற்றை தப்பும் தவறுமாக, திரித்ததைப்போல். சினிமாக்காரர்களால் திரிக்கப்பட்ட கதைகளே அதிகம், பாரதி படம் பார்த்து வருத்தப்பட்ட உண்மையான் பாரதி விசுவாசிகளை பார்த்துள்ளேன். அது போல்தான் இதுவும்.

ஆனால் பாரதியையும், கட்டபொம்மனையும், தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார்களேத்தவிர வேறு எதையும் செய்துவிடவில்லை இவர்கள். கல்கி சோழர்களை தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகம் செய்து வைத்ததைப் போல். நான் படித்த அந்த கட்டுரை உங்கள் பார்வைக்கு,

நன்றி, ஜே ராஜா முகம்மது, அவருடைய புதுக்கோட்டை மாவட்ட வரலாறு.

-------------------------

கப்பத்தொகை 16 ஆயிரத்து 550, மே 31, 1798 வரை பாக்கி இருப்பதாகவும், அத்தொகையை உடனடியாக கட்டும்படியும் மதுரை கலெக்டராக இருந்த ஜாக்ஸன், கட்டபொம்மனுக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி வைத்தார்.

ஆனால், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் பாக்கியை செலுத்தவில்லை கட்டபொம்மன். இதனால், பாஞ்சாலக்குறிச்சியின் மீது படையெடுக்க விரும்பினார் ஜாக்ஸன். அப்போது, ஆங்கிலேயே படை, திப்பு சுல்தானுடன் போரில் ஈடுபட்டிருந்ததால், இதற்கு உடன்படவில்லை. மாறாக கட்டப்பொம்மனை, ராமநாதபுரத்துக்கு அழைத்துப் பேசுமாறு பணித்தது.

இதன்படி தன்னை ராமநாதபுரத்தில் ஆக.18,1798ல் சந்திக்கும்படி கட்டபொம்மனுக்கு கடிதம் எழுதினார் ஜாக்சன். இந்தக் கட்டளையை அனுப்பிவிட்டு, திருநெல்வேலி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டார் ஜாக்சன்.

கட்டபொம்மன் தனது பரிவாரங்களுடன், ஜாக்ஸனை சந்திக்கச் சென்றார். ஆக.27, 1798ல் குற்றாலத்தை ஜாக்சன் அடைந்தபோது, கட்டப் பொம்மனும் அவரது பரிவாரங்களும் ஜாக்சனுக்காக காத்திருந்தனர். கட்டபொம்மனை அங்கு சந்திக்க மறுத்துவிட்டார் ஜாக்சன்.

பின், சொக்கம்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்துõர் போன்ற இடங்களிலும் சந்திக்க முயன்று, தோற்று, பயணம் தொடங்கி 23 நாள் கழித்து, 400 மைல் அலைந்து, செப்.19, 1798ல் ராமநாதபுரத்தில் ஜாக்சனை சந்தித்தார் கட்டபொம்மன்.

கிஸ்தி கணக்கை சரி பார்த்தபோது, ரூ.5,000 (1080 பசோடா)மட்டுமே பாக்கி இருப்பதை கண்டுகொண்டார் ஜாக்ஸன். ஆகவே, மே 31,1798க்கும் செப். 31, 1798க்கும் இடைபட்ட மூன்று மாத காலத்தில் கட்டபொம்மன் ரூ.11 ஆயிரம் கிஸ்தி பண பாக்கியை கட்டிவிட்டதாக அறிகிறோம்.

அகந்தை கொண்ட ஜாக்ஸன், மேற்படி சந்திப்பின் போது கட்டபொம்மனையும், அவரது அமைச்சர்களையும் மூன்று மணிநேரம் நிற்கவைத்தே விசாரணை செய்தார். சந்திப்பின் இறுதியில் ராமநாதபுரம் கோட்டையிலேயே அவர்கள் தங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில் கட்டபொம்மன் தப்பிக்கும் முயற்சியில், லெப்டினன்ட் கிளார்க் என்பவர் கொல்லப்பட்டார். கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணிய பிள்ளை கைது செய்யப்படார். கட்டபொம்மன் தப்பித்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் கட்டபொம்மன் சென்னை கவர்னருக்கு மேல் முறையீட்டுக் கடிதம் ஒன்று அனுப்பினார்.

கவர்னருக்கு அனுப்பிய கடிதத்தில், தான் கலெக்டரின் கட்டளைக்கு மதிப்பளித்து அவரைச் சந்திக்க, பாக்கி இருந்த முழு கிஸ்தி பணத்தையும், ராமநாதபுரத்துக்கு எடுத்துச் சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட கை கலப்பிற்கு ஜாக்சனின் நடவடிக்கைகளே காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார். (கட்டபொம்மன் படத்தில் சிவாஜி பேசும் வசனங்கள் எல்லாம் "டுபாக்கூர்'தானா?)

கடிதத்தைக் கண்ட கவர்னர் கிளைவ், தற்காலிகமாக ஜாக்ஸனை பதவி நீக்கம் செய்தும், சிவசுப்ரமணியப் பிள்ளையை விடுதலை செய்தும் ஆணை பிறப்பித்தார். அத்துடன், ராமநாதபுரம் நிகழ்ச்சிகளை குறித்து விசாரணை நடத்த வில்லியம் பிரவுன், வில்லியம் ஆரம், ஜான் காசா மேஜர் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவையும் நியமித்தார்.

இக்குழுவின் விசாரணையில் (டிச.15, 1798) ராமநாதபுரத்தில், கட்டபொம்மனை, ஜாக்சன் நடத்திய விதம் ஏளனத்திற்குரியது என்று தெரியவந்தது.

விசாரணைக் குழுவின் முடிவு ஏற்கப்பட்டு, பதவியில் இருந்து ஜாக்ஸன் நீக்கப்பட்டார். அவரது இடத்தில் லுசிங்டன் கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

Read More

Share Tweet Pin It +1

23 Comments

In கவிதைகள் சொந்தக் கதை

எழுதப்படாத என் கவிதைகள்



பாப்லோ நெருதாவைப் பற்றி எழுத அரிப்பெடுக்கும் என் நினைப்பை மட்டப்படுத்திக் கொண்டிருக்கிறேன், உள்ளிருந்து வெளிப்பட்டதும் மறைந்துபோய்விடுவதாய் நினைக்கும், மீண்டும் இன்பக்கிளர்ச்சி வருவதேயில்லை.

--------------------------

நழுவிச் செல்லும்
சொற்களைப் படிமமாக்கி
அழகுபடுத்தப்படும்
அக்கவிதை
ஒருமுறை படிக்கப்பட்டதும்
இறந்துபோனதாய் உணரப்படுவதால்
அழிக்கப்படுகிறது
இரைச்சலுடன் பறந்துபோகும்
சொற்களைப் பார்த்தவாறே
நிரப்பப்படாத பக்கங்களாய்
எழுதப்படாத என் கவிதைகள்.

- நான் தான் எழுதினேன்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Only ஜல்லிஸ்

எனக்கும் மகாத்மாவிற்கும் உள்ள ஒற்றுமை

இதையொன்னும் நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணும் என்று இல்லை. என் பெயரைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும். தெரியாத சில விஷயங்களைப் பத்தி மட்டும் இங்கே பார்ப்போம்.

எனக்கு உண்மையில் மோகன்தாஸ் என்று பெயர் வைத்தது, மக நட்சத்திரம் சிம்ம ராசிங்கிறதால மட்டும் தான் என்பது தான் உண்மை.(சரி சரி உண்மையைச் சொல்லவேண்டியது தானே. ஆனால் எனக்கு நட்சத்திரம் 'பொச்'சத்திரத்திலெல்லாம் நம்பிக்கையில்லை - அதற்காக பெயரை மாற்றுவதாகவும் உத்தேசம் இல்லை). ஆனால் நான் சரி ஏதோ வைச்சது வைச்சிட்டாங்க நம்மலால முடிஞ்சது கொஞ்சம் கதையை சொல்லுவோம்னு, என் பெயர் எப்படி வந்ததுன்னு ஒரு கதை சொல்லுவேன் பெரும்பாலான இடத்தில் அந்தக் கதை.

எங்கம்மா அப்பாவிற்கு காந்தின்னா ரொம்ப பிடிக்கும், அது மட்டுமில்லாமல் காந்தி இறந்த அன்று(சொல்லப்போனால் அடுத்தநாள் ஆனால் அரைமணிநேரம் தான் என்பதாகவும் ஒரு கிளைக்கதை உண்டு) முப்பத்தெட்டு ஆண்டுகள் கழித்து நான் பிறந்ததால் தான் இந்தப் பெயரை வைத்தார்கள் என்று. பலர் அப்படியா என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள்(;)).

இதைச் சொல்லும் பொழுது இன்னொரு ஜோக் நினைவில் வருகிறது. பிறந்தப்ப என் மூக்கு கொஞ்சம் சப்பையா இருக்குமாம்(இப்ப இல்லையான்னு கேட்காதீங்க) அம்மாவுக்கு பக்கத்து பெட்டில் பிரசவம் செய்து கொண்ட பொண்ணு ஏன் இப்படி சப்பையா இருக்குன்னு கேட்க அம்மா, "அதுவா பஸ் ஏறிருச்சு"ன்னு சொன்னாங்களாம். அந்தம்மாவும் அப்படியான்னு கேட்டுக்குச்சாம். (So இது காலம் காலமா வருது...)

மற்றபடிக்கு எனக்கும் காந்திக்கும் தான் ஒற்றுமையிருக்குன்னு கதை சொல்றதுண்டா, அதனால நான் தண்ணியடிக்காம, தம்மடிக்காம இருக்கிறதுக்கும்(சரியா கவனிச்சுக்கோங்க மூன்றாவது கிடையாது!) காந்தி தான் காரணம் என்று ஒரு புகைச்சல் விடுறது வழக்கம். எப்படின்னா அம்மா என்கிட்ட சத்தியம் வாங்கினாங்கன்னு தான்.

இதுமாதிரி நிறைய சொல்லலாம். இப்போதைக்கு இது போதுமுன்னு நினைக்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In Only ஜல்லிஸ்

குவாண்டம் கம்ப்யூட்டிங்கும் ஜல்லியடித்தலும்

அதாவது நான் சொல்லவந்தது என்னன்னா? இரண்டொறு வாரத்திற்கு முன்னாடி ஒளியின் வேகம் குறைக்கப்பட்டது அப்படின்னு ஒரு கட்டுரையைப்போட்டேன், அதை போடுறதுக்கு முன்னாடியே குவாண்டம் கம்ப்யூட்டிங் அப்பிடின்னு ஒன்னு இருக்குறது தெரியும் ஆனா அப்பிடின்னா என்னன்னு சுத்தமாத்தெரியாது. பின்னாடி கொஞ்சம் கூகுளிட்டு, கொஞ்சம் விக்கியிட்டு தெரிஞ்சிக்கிட்டதை(தெரிஞ்சிக்கிட்டதா நினைச்சிக்கிட்டதை) ஜல்லியடித்துவிட்டு போகலாம்னுதான் இந்த பதிவைப்போட்டிருக்கேன்.

இதைப் படிக்கப்படிக்கத்தான் குவாண்டம் கம்ப்யூட்டிங்கோட சீரியஸ்னஸ் தெரியவந்தது.(கொஞ்சம் பில்டப் கொடுக்கணும்ல). அந்த காலத்தில கம்ப்யூட்டர் எல்லாம் பெரிய பெரிய மெஷினா இருக்குமாம். பத்தையும் பத்தையும் பெருக்கி போடுன்னு சொல்லிட்டு, கீழே கடைக்குப்போய் காப்பி சாப்டுட்டு வந்துபார்த்தா, கணக்கு போட்டு முடிச்சிறுக்குமாம். இப்ப நமக்கு இதையெல்லாம் நினைச்சா சிரிப்புவரலை. பின்னாடி காலத்தில நம்ம பையன் பொண்ணெல்லாம்(பின்ன பெண்ணீயவாதியில்லையா!!!) நாம இப்ப உபயோகிக்கிற கிளாசிக்கல் கம்ப்யூட்டரைப்பார்த்து சிரிக்கும் நிலைமை நிச்சயமா ஏற்படும், இந்த குவாண்டம் கம்ப்யூட்டிங்கால.

அது என்ன விஷயம்னா வேறொன்னும் இல்லை, கம்ப்யூட்டர் படிச்சங்களோ இல்லையோ ஒருவிஷயம் தெரிஞ்சிருக்கலாம் அதாவது கம்ப்யூட்டரில் நாம என்ன என்ன வேலையெல்லாம் பண்ணாலும் கம்ப்யூட்டருக்கு (உண்மையிலேயே) தெரியறது 1 மற்றும் 0 தான்னு. அத்தனை விஷயத்தையும் இதிலயே நாம உபயோகிச்சித்தான் பண்ணிக்கிறோம் இல்லையா.

நீங்க கம்ப்யூட்டரில் 2 யையும் 3 யையும் பெருக்குன்னு சொன்னீங்கன்னா, அத வந்து கம்ப்யூட்டர், 0010 0011 அப்படின்னு 2 யையும் 3யையும் மாத்தி பின்னாடி உள்ளப்போய் லாஜிக்கேட்ஸில் விட்டு கூட்டி 1000 அப்பிடின்னு விடையை கிராபிகல் யூசர் இன்டர்பேசுக்கு அனுப்பி அந்த 1000 நம்மக்கிட்ட 6 ன்னு தெரியும்னு கதையெல்லாம் சொல்ல நான் விரும்பலை. அதை சொல்லறதுக்கான பதிவும் இது இல்லை.

இப்ப குவாண்டம் கம்ப்யூட்டிங்கல இருக்குற அட்வான்டேஜை மட்டும் நான் சுலபமா சொல்லிற்றேன். அதாவது நாம இப்ப உபயோகப்படுத்தும் கம்ப்யூட்டரில் உபயோகப்படுத்துறதுக்கு பிட் அப்பிடின்னு பேரு இதில 0 மற்றும் 1யை மட்டும் தான் பயன்படுத்தமுடியும். But quantum computer maintains a set of qubits. A qubit can hold a one, or a zero, or a superposition of these. A quantum computer operates by manipulating those qubits, i.e. by transporting these bits from memory to (possibly a suite of) quantum logic gates and back.

An n-bit binary word in a typical computer is accordingly described by a string of n zeros and ones. A quantum bit, called a qubit, might be represented by an atom in one of two different states, which can also be denoted as 0 or 1. Two qubits, like two classical bits, can attain four different well-defined states (0 and 0, 0 and 1, 1 and 0, or 1 and 1). But unlike classical bits, qubits can exist simultaneously as 0 and 1, இதை வைச்சிக்கிட்டே இப்ப இருக்கிற கம்ப்யூட்டரை விட அதிவேகமாக சிந்திக்கிற (அதாவது கணக்கு போடுற) கம்ப்யூட்டரை தயாரிக்க முடியும்.

இப்ப இதுக்கும் நாம ஆரம்பத்தில் பார்த்த ஒளியின் வேகத்தை குறைத்ததுக்கும்(நிறுத்தினதுக்கும்) என்ன சம்மந்தம். நீங்க நினைச்சுப்பாருங்க ஒளியைப்பத்தி, மிகவும் வேகமாகப்பயணிக்கக்கூடியது, அதன் வேகத்தில பயணம் செஞ்ச பூமியை ஒரு நிமிடத்தில் ஏழுமுறை சுற்றிவந்துவிடலாம். இந்த ஆராய்ச்சியாளர்கள் என்ன பண்ணாங்கன்னா இத்தனை வேகமான ஒளியை ஒரு படிமத்தில் சேகரிக்கும் முயற்சியில் இருந்தார்கள். முதலில் எதிலெதிலோ சேகரிக்கப்பார்த்து இப்ப அதை பிரசயோடைமியம்(Praseodymium) அப்பிடிங்கிற ஒரு விநோதமான வஸ்துவில் சேகரித்துட்டாங்க.

The team made a quantum bit by shining two laser beams at a silicate crystal containing atoms of a rare element called praseodymium that can absorb these light beams. Previous attempts to freeze light in the laboratory have used the atoms in a vapor, not a solid.

அதாவது அந்த படிமத்தில் ஒளியானது ஒரு குறிப்பிட்ட நேரம் அங்க இங்க நகராம அமைதியா உக்காந்திருக்க வைச்சிட்டாங்க இதனால நமக்கு கம்ப்யூட்டர்ல என்ன உபயோகம்னா அந்த படிமத்தில உக்கார வைச்ச அந்த அய்டம்தான் குவாண்டம் பிட் அப்பிடின்னு முன்ன சொல்லப்பட்டது. இந்த குவாண்டம் பிட்டு தான் மூன்று நிலைகளை(ஸ்டேட்டை) தன்னுள் அடக்கிக்கொள்ளும் திறமை வாய்ந்தது. அது எப்படின்னா நிறுத்தி வைச்ச அந்த ஒளியில் எல்லா அணுக்களுக்கும் இருக்கும் போட்டான் என்னும் ஒரு விஷயமும் இருக்கும். இப்ப இந்த போட்டானில் உள்ள நியூக்ளியர் சுற்றில்தான் அந்த 00, 01, 10, 11 என்ற தகவலை சேகரிப்பாங்க.

The researchers can transfer information onto light beams using the "nuclear spin" of the photons in the laser beam. The spin is basically the orientation of each the particles, and can be oriented either up or down — or both

This arrangement is known as quantum superposition, and can be exploited to create a unit of information known as a "qubit" (or quantum bit).

பின்னாடி இந்த தகவலைத்தான் ஒரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அனுப்பிவைப்பாங்க நம்ம சாதாரண பிட்டை( 0 & 1) யை அனுப்பி வைப்பதுபோல்.

இதுல என்ன அற்புதம்னா 200 இலக்க உள்ள ஒரு ப்ரைம் நம்பரையும்( 7 ஒரு ப்ரைம் நம்பர் ஏன்னா ஏழை ஒன்னாலையும் பின்னாடி அதே ஏழாலையும் மட்டும் தான் வகுக்க முடியும்.) இன்னொரு 200 டிஜிட் உள்ள இலக்க நம்பரால பெருக்கிவந்த நம்பரை பகுக்குறது(Factorizing) அப்படிங்கிறது இப்ப நம்ம கம்ப்யூட்டரால முடியாத விஷயம். ஆனா இந்த குவாண்டம் கம்ப்யூட்டர் உதவியால இத பண்ண முடியுங்கிறது மட்டுமில்லை சீக்கிரமாவும் பண்ணிவிடலாம். இதனால நாம இப்ப உபயோகித்துக்கொண்டிருக்கும் கிரிப்டோகிராபித் தத்துவங்கள் அடிபட்டுப்போகும் நாம் உபயோகப்படுத்தும் அத்தனை என்கிரிப்ஷன் முறைகளும் அடிபட்டுப்போகும்.

Factoring a number with 400 digits--a numerical feat needed to break some security codes--would take even the fastest supercomputer in existence billions of years. But a newly conceived type of computer, one that exploits quantum-mechanical interactions, might complete the task in a year or so, thereby defeating many of the most sophisticated encryption schemes in use. Sensitive data are safe for the time being, because no one has been able to build a practical quantum computer.

இதெல்லாம் நடப்பதற்கு முன்பே குவாண்டம் கிரிப்டோகிராபி என்ற முறை வழக்கத்தில் வந்துள்ளது. ஏனென்றால் தகவல் பரிமாற்றம் என்பது எல்லாவற்றிலும் முக்கியமானது.

இதெல்லாம் நான் புரிஞ்சிக்கிட்டதா நினைச்சு சொல்றது. நான் சொல்வதை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் நீங்களும் படித்துப்பாருங்கள். பிற்காலத்தில் நீங்கள் இந்த வார்த்தையை அதிகம் தடவை கேட்க நேரலாம் அதற்கு இப்பொழுதே ஒரு முன்னோட்டம் பார்த்துக் கொள்ளுங்கள். இதை இன்னும் விளக்கமா என்னிலும் புரியும்படி எழுதும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். அதற்கான ஒரு வாய்பாகவே இதை அமைத்தும் கொள்கிறேன்.

References

http://www.en.wikipedia.org
http://www.sciencecentral.com
http://www.media.mit.edu

Edited,

Further Reading,

http://rozavasanth.blogspot.com/2005/12/blog-post_22.html
http://www.domesticatedonion.net/blog/?item=676

Read More

Share Tweet Pin It +1

27 Comments

In Only ஜல்லிஸ்

குரு இந்திய சினிமாவில் ஒரு மைல்கல்

மிக நிச்சயமாக 'குரு' மணிரத்னத்தின் ஆகச் சிறந்த படைப்பு என்றுதான் சொல்லவேண்டும்... படம் நெடுகிலும் கண்ணீரை அடக்கமுடியாமல் பார்த்ததென்பது எனக்கு ஒரு புதிய அனுபவம். ஆனால் காட்சிகள் எதுவும் மிகை உணர்ச்சி செண்டிமெண்ட்டல் வெளிப்பாடுகளாக இல்லை.

இதையெல்லாம் சொல்வது நானில்லை, சாரு நிவேதிதா. இங்கே படிக்கலாம் ஆகக்கூடி பத்ரியும் இவரைத்தான் சொன்னதாக நினைக்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In உண்மைக்கதை மாதிரி

நான் காதலித்த கதை

இது என் காதல்(சொல்லலாமா தெரியவில்லை, வேண்டுமென்றால் விடலை காதல்) கதை, இதில் ஒரு குடும்பமும் ஒரு பெண்ணும் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை எதையும் தவறாக எழுத போவதில்லை நான். சில முக்கியமான காரணங்களுக்காக நான் பெயரையும் இடத்தையும் மாற்ற முடிவு செய்திருக்கிறேன். மற்றபடி நடந்த நிகழ்வுகளே இந்தக் காதல்(வைத்துக் கொள்கிறேன்)கதை.

இது நடந்த பொழுது நான் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்தப் பெண் மீனா எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள், காதலிக்கவோ இல்லை, அதைப்பற்றி நினைத்துப்பார்க்கவோ கூட, கூடாத வயது அது. ஆனால் வாழ்க்கையில் காதல் இப்படித்தான் வரும்.

பார்த்த முதல் தடவையே எனக்கு காதல் வரவில்லை, நிச்சயமாய் தெரியும். எங்கள் குவார்ட்டர்ஸ்க்கு (இன்னும் சொல்லப்போனால் என் வீட்டெதிரில்) அவர்கள் குடும்பம் வந்து சில மாதங்கள் இருக்கும். இதற்கு முன் என்னைப்பற்றி ஒரு சிறிய அறிமுகம். நான் அவ்வளவு அழகானவன் இல்லை, எங்கள் குடும்பம் மிகவும் நடுத்தரமான குடும்பம் தான். முக்கியமாக நான் தமிழ் மீடியத்தில் படித்துவந்தேன். இதை ஏன் இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், எங்கள் குவார்ட்டர்ஸ்ஸில் தமிழ் மீடியத்தில் படிப்பவர்கள் மிகக் குறைவு.

அவள் குடும்பம் சிறிது வசதியானது என்று நினைக்கிறேன். எங்கள் ஊரின் மிக நல்ல பள்ளியில்(ஆங்கில மீடியம்) படித்துவந்தாள். அவளுக்கு ஒரு அண்ணன், சரியாக என் வயது ஒத்தவன். நான்படிக்கும் அதே வகுப்பை வேறொரு பள்ளியில் படித்து வந்தான். நாங்கள் இருவரும் கிரிக்கெட் விளையாடியிருக்கிறோம், ஒன்றாய். அவங்க அம்மாவுக்கு என்னை பிடிக்கும் என்று நினைக்கிறேன். பேசிய பொழுதெல்லாம் நன்றாக பேசியதாக ஞாபகம்.

சரி இப்போது என் காதலுக்கு, அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, கேள்விபட்டவரையில் அறிவுமில்லை, ஆனால் நான் அப்படியில்லை ஒரளவுக்கு நன்றாக படிக்கக்கூடியவன், இன்னும்சொல்லப்போனால் அவள் அண்ணன் ஒரு பப்ளிக் தேர்வில் வாங்கியதை விட இரண்டு மடங்கு மதிப்பெண் வாங்கியவன். ஆனால் நாளாக, நாளாக, நான் படித்த சாண்டில்யன் கதைகளும், பாலகுமாரன் கதைகளும், என்னை அவளைப் பார்க்க சொல்லியது.

அந்தக் காலத்தில் நாம் யாரயாவது காதலித்து(அல்லது நடித்தாவது) தொலையவேண்டியிருக்கிறது. இந்த நிலைமை எனக்கும் ஏற்பட்டது. அந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மத்தியில் நானும் காதலிக்கிறேன் என்று சொல்ல நினைத்தேன். அதற்கு சேர்ந்தால் போல் இவளும் வந்தாள். எல்லாம் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலை தான்.

அவள் அந்த சமயத்தில் தலை முடியை பாப் கட் அடித்திருப்பாள். நான் நினைக்கிறேன், குறிப்பாக இவளிடம், அந்த உணர்ச்சியை பெற்றது இதனால் தான் என்று. ஏனென்றால் எல்லா பெண்களும் நீண்ட முடி வைத்திருந்த காலமது. அதுமட்டுமில்லாமல் அவள் ரோட்டிலோ இல்லை சாதாரணமாக வேறு இடங்களிலோ அதிகம் பேசி பார்த்ததில்லை நான். இதுவும் ஒரு காரணம். அவ்வளவுதான் நான் விழுந்துவிட்டேன். இதன் பிறகு நடந்த கூத்துக்களே நான் சொல்ல நினைப்பது.

ஒரு முக்கியமான விஷயம், நான் அந்தப் பெண்ணை காதலிப்பது(பார்த்துக் கொண்டு பின்னாலேயே சுற்றுவது) என் வீட்டில் அப்பாவை தவிர எல்லோருக்கும் தெரியும். எங்கள் வீட்டில், அப்பாவுக்கு இந்த விஷயங்களில் விருப்பமில்லை. அம்மா, அக்கா இருவருக்குமே நன்றாகவே தெரியும். இருவருமே ஒன்றும் சொல்லவில்லை, இன்னும் சொல்லப்போனால் எங்க அம்மா சில சமயங்களில், தம்பி இன்னிக்கு பல்லு விளக்கலைன்னா மீனு அம்மாகிட்ட சொல்லிடவேண்டியது தான்னு சொல்லி பயமுறுத்துவாங்கன்னா பார்த்துக்கோங்களேன். நான் சிறிது ஓவியம் கூட வரைவேன். எங்கள் வீட்டு சுவரில் இரட்டை சடை(கொஞ்ச நாளில் அவங்க அம்மா பாப் வேண்டாமுன்னு சொல்லிட்டாங்கன்னு நினைக்கிறேன், என் வாழ்க்கையில் நான் மிகவும் வருத்தப்பட்ட நாட்கள்) போட்டு அவளை மாதிரியே
ஒரு படம் வரைந்து வைச்சிருந்தேன்(இன்னும் சுவற்றில் இருப்பதாக ஞாபகம்). ஓரளவுக்கு நல்ல ஒற்றுமையே இருக்கும் அந்த படத்தில், அவளைப்போல. இதனால் என் அப்பாவுக்கும் விஷயம் தெரிந்திருக்கக்கூடும்.

இப்படியாக சாதாரணமாக நான் அவளைப் பார்த்துக்(காதலித்துக்) கொண்டிருக்கையில்.
ஒருநாள் அவளும் அவள் நண்பியும் எதையோ சொல்லி என்னைப் பார்த்து சிரித்து
தொலைத்தார்கள். அவ்வளவுதான் முடிந்துபோனது என் சந்தோஷ வாழ்க்கை.

அதன் பின்னால் என்னைப் பார்க்க வேண்டுமென்றால் மீனு எங்கருக்காளோ அங்கதான் இருப்பான் என்றுஎங்க வீட்டில் சொல்லுமளவுக்கு அட்டகாசம். பொண்ணு மேக்ஸில் பெயிலாகி ட்யூஷன் போயிக்கிட்டிருந்தது. அவள் வீட்டிலிருந்து கிளம்பும் போது பின்னாலேயே கிளம்புவது. அவள் ட்யுஷன் சென்டர்வரைக்கும் கொண்டுவிட்டுவிட்டு; பின்னர், அருகே உள்ள கிரெவுண்டில் கிரிக்கெட் விளையாடிவிட்டு, அவள் வீட்டிற்கு திரும்பும் போது அவள் பின்னாடியே வந்து வீட்டிற்கு கொண்டுவிடுவது. இதெல்லாம் அவளுக்கு தெரியாமலே.

தினமும் இப்படித்தான் இதில் கொடுமை என்னவென்றால் நான் அப்பொழுது பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். வீட்டில் படிக்கிறதாவது அப்பிடின்னா என்னன்னு கேட்டுக்கிட்டிருந்த காலமது. என் நாட்கள் இப்படியே போய்க்கிட்டிருந்தது, அப்பொழுது ஒருநாள் பக்கத்தில் உள்ள ஒரு கிளப்பில்(கொஞ்சம் பெரிய) ஒரு விழா, நடத்தும் பொறுப்பில் இருந்த எங்கள் பள்ளி N.S.S. மாணவர்களை அங்கே அனுப்பியது. நானில்லாமலா, அங்கே போனபின்தான் தெரிந்தது. மீனு படிக்கும் பள்ளியும் வந்திருந்தது என்று பிறகென்ன ஒரு திருவிழாத்தான்.

ஆனால் நான் போட்டிகளில் பங்குகொள்ள முடியாது. ஏனென்றால் நாங்கள் தான் நடத்துவதற்கு உதவி செய்ய வேண்டும். அவள் என்னவோ செய்தாள் சரியாக ஞாபகமில்லை, நாட்டியமோ, ஆங்கிலப்பாடலோ பாடினாள் என நினைக்கிறேன். மதியம் வரை சரியாக சென்றது. எல்லோரும் சாப்பிட சென்றார்கள். எங்களுக்கு பரிமாறும் பொறுப்பு. மதியம் உணவு முடிந்து அனைவரும் வந்து அரங்கத்தில் அமர்ந்தார்கள்.

அப்பொழுது நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு அரைமணிநேரம் இருந்தது. மேடை அறிவிப்பாளர், மைக்கில் இந்த நேரத்தை உபயோகித்து மக்களை மகிழ்விக்க யாராவது முன்வந்தால் வந்தனம் என்றார். நான் காத்திருந்த வாய்ப்பு கிடைத்தது. சிறிது கூட கவலைப்படாமல் நான் மேடையேறி,திருவிளையாடல் வசனத்தை(நக்கீரன் சிவன் வாக்குவாதம்) சொன்னேன். சொல்லிமுடித்ததும் அரங்கம் அதிரும் சத்தம், (அத்துனையும் உண்மை). ஏனென்றால் அதில் சிவன் ஒரு பாடல்சொல்வதாக வரும் அந்த பாடல் முதற்கொண்டு நான் சரியாக மனப்பாடம் செய்து வைத்திருந்தேன்.

மேடையில் இருந்து கீழிரங்கினால் ஒரே பாராட்டு மழை, நான் சுற்றி சுற்றி பார்க்கிறேன் அவள்
இருக்கிறாளா? பார்த்தாளா? என்று. என் கண்ணுக்கு அகப்படவில்லை. ஒன்று தெரியுமா! அன்று எந்தப்போட்டியிலும் கலந்து கொள்ளாத எனக்கு ஒரு பரிசு கூடக் கொடுத்தார்கள்!.

பிறகு வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பொழுது, எதிரில் அவள் வந்து கொண்டிருந்தாள். ஆகா இவள் பார்க்கவில்லை போலிருக்கிறது என நினைத்து வருந்தினேன். அவள் நேராக என்னிடம் வந்து நல்லாயிருந்தது என்று சொல்லிவிட்டு போய்விட்டாள்(இது நாள் வரை அவள் என்னிடம் பேசிய ஒரே ஒரு வார்த்தை இதுதான்). அப்போழுது கூட நான் அவளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.

பின்னாட்களில் எங்கள் வீட்டெதிரில் கிரிக்கெட் விளையாடும் பொழுது, வேண்டுமென்றே
பந்தை அவர்கள் வீட்டு மாடிக்கு அடித்து விட்டு அதைக் கேட்கும் சாக்கில் போயிருக்கிறேன்.
வீடு அழகாக இருக்கும். சுத்தமாக பளிச்சென்று. பிறகு உண்மைநிலை உணர்ந்து பன்னிரெண்டாம் வகுப்புக்கு படிக்க ஆரம்பித்தேன். என்னையும் ட்யுஷன் அனுப்பினார்கள்.(இது வேறு இடம் இன்னும் சொல்லப்போனால் எங்கள் வீட்டிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள இடம்.).

அப்பொழுது தான் காதலர்தினம் படம் வந்தது, அதில் வரும் ரோஜா ரோஜா பாடலைத்தான் நான் முதல் முதலாக மனப்பாடம் செய்தேன். பிறகு இன்றுவரை தொடர்கிறது. இதற்கு வாலியின் வரியமைப்பு காரணமா, தமிழ் உள்ளே ஊறியது காரணமா, இல்லை அவள் காரணமா தெரியாது. ஆனால் நல்லது தான். மனனம் செய்வது எப்பொழுதுமே நல்லதுதான். (பராசக்தி, மனோகரா,சாம்ராட் அசோகன், திருவிளையாடல் என மனப்பாடம் செய்தது அதிகம், இன்றும் அத்துனைவசனங்களும் நினைவிருக்கிறது). ஆனால் பாடல்களே பிடிக்காமல் இருந்த என்னை, பாடல்களின் பின்னால் திரும்ப வைத்ததில் அவளுக்கும் என் காதலுக்கும் சம்மந்தமுண்டு.

தினமும் காலையில் 6 மணிக்கு ட்யூஷனுக்கு கிளம்பவேண்டும், முடிந்ததும் பஸ் ஏறி பள்ளிக்கூடம் வந்துபடிக்கவேண்டும், பிறகு மாலை இரண்டு ட்யுஷன் இதில் என்ட்ரென்ஸ்க்கு தனியாக ட்யுஷன் வேறு. (மொத்தமாக இவையெல்லாம் உபயோகமாகவில்லை என்பது வேறு விஷயம். கடைசியில் நான் இன்ஜினெயரிங் படிக்கவில்லை, அதற்கு சில சொந்த காரணங்கள் உண்டு, அதை இங்கே குறிப்பிட விரும்பவில்லை). ஆனால் தினமும் நான் ரோஜாப்பூவாங்கி வருவேன்,(அவளுக்குக் கொடுக்கத்தான்)ஆனால் கொடுத்ததில்லை.

அக்கா அந்த ரோஜாப்பூவை காந்தி புகைப்படத்துக்கு வைப்பாள், பிறகு இரவு நான் அந்தப் பூவைபாடமாக்கி வைக்க பெரிய புத்தகங்களின் மத்தியில் வைப்பேன். இன்றும் இப்படி பாடமாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ரோஜாக்கள் என்னிடம் உள்ளன(என் முதல் காதல் நினைவாய்).

அதே கிளப்பில் ஒவ்வொரு சனிக்கிழமையும் படம் போடுவார்கள். எங்கள் அப்பாவிற்கு பாஸ் கிடையாது. ஆனால் அவள் வீட்டிற்கு உண்டு(இந்த வேறுபாடுகள் தான் நான் சொன்னது நடுத்தர குடும்பம்).ஆனால் காதலுக்கு முன்னால் எடுபடுமா நான் என்னென்னமோ தந்திரங்கள் செய்து அங்கே படம் பார்த்திருக்கிறேன். சில சமயங்கள் அவளும் என்னைப் பார்ப்பாள் பார்த்து சிரிப்பாள். அவ்வளவுதான், இதற்குத்தான் நான் பாடுபட்டு, வீட்டில் அடிபட்டு அந்தப் படங்கள் பார்க்க போனது. எங்கப்பாவுக்கு எட்டுமணிக்கு மேல் வெளியில் இருந்தால் பிடிக்காது. ஆனால் படமோ ஏழுமணிக்குத்தான் தொடங்கும், இடைவேளை எட்டரைக்குத்தான், அப்பொழுது தான் முறுக்கு, சீடை வாங்க வருவாள். அங்கேதான் அவள்
என்னை பார்க்க முடியும் (நான்தான் அவளை பார்த்தக் கொண்டேயிருந்தேனே). என்னை கிளப் வாசலில் விடமாட்டார்கள். அதனால் சுவர் ஏறிக் குதித்து, கதவின் கீழ்வழியாக வந்து இப்படியெல்லாம் ஹீரோயிஸம் காட்டியும், நான் அந்தப் படம் பார்க்கமாட்டேன்.

அரைமணிநேரத்தில் வீட்டிற்கு போகவேண்டும் (அதாவது எட்டரை) இல்லையென்றால் செருப்படி. படமும் பார்க்காமல், அவளும் என்னைப் பார்க்காமல் வேதனையில் தள்ளிய நாட்களும் உண்டு.

அவர்கள் இங்கே வ்ந்த பிறகு முதல் வருடபிறப்பு. அவள் வீட்டில் எல்லோரும் அந்தக் கிளப்பில் கொண்டாடினார்கள். அதற்காக நானும் உள்ளே போகலாமென்றால் உள்ளே விடமாட்டார்கள், மேலும் பார்ட்டியே பத்துமணிக்கு பிறகு தான். என் வாழ்நாளில் நான் பத்துமணிக்கு மேல் வெளியில் இருந்ததில்லை. ஆனால் வெளியில் இந்த வருடம் இருக்க வேண்டும். என் அப்பாவிடம் எவ்வளவோ கெஞ்சி கூத்தாடி, அம்மாவின் ஒப்புதல்லோடு நான் முதல் முறையாக வெளியே வந்தேன்.

எட்டுமணி இருக்கும், கிளப்பிறகு சென்று நான் உள்ளே நுழையும் இடங்களைப் பார்த்தால் செக்யுரிட்டி நின்று கொண்டிருந்தார்கள். அன்று என்னிலும் மூத்தவர்கள் குடித்துவிட்டு பிரச்சனை செய்வார்கள் என்பதால் அந்த ஏற்பாடு. எனக்கோ தூக்கிவாரிப் போட்டது. நான் உள்ளே நுழையும் அத்துனை வழியும் அடைபட்டிருந்தது. ஆனாலும் நான் உள்ளே செல்ல வேண்டும். அப்பாவிடம் அவ்வளவு போராடி அனுமதிபெற்று வந்தால் இப்படியரு நிலைமை. அழுகையே வந்தது எனக்கு. பிறகு தான் ஐடியா வந்தது. என்வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒருவர் அந்தக் கிளப்பில் உறுப்பினர். நான் நேராக அவரிடம் சென்று எனக்கு உங்கள் மெம்பர் கார்டு கிடைக்குமா? என்று கேட்டேன்(இன்று நினைத்தால் ஆச்சர்யமாயிருக்கி
றது). அவரும் கொடுத்தார்.

மேலும் சோதனை நான் அந்தக் கார்டை எடுத்துக்கொண்டு நான் ஒரு வாசலுக்கு வந்தேன் அங்கிருந்தவரிடம்(கேட் கீப்பர்) மெம்பர் கார்டை காட்டினேன். அவர் கார்டை பார்த்துவிட்டு, உங்கப்பாவுக்கு பாஸ் கிடையாதே யாரோடது இதுன்னு கேட்டாரே பார்க்கலாம். நடுங்கிட்டேன் உடனே கார்டை வாங்கிட்டு திரும்பிவந்திட்டேன். கொஞ்ச நேரம் கழித்து நான் நினைத்தது போலவே, அவர் ஒரு செக்யூரிட்டியிடம் அந்தப் பொறுப்பை கொடுத்துவிட்டு போய்விட்டார். நான் பருப்புபோல் கார்டை அந்த செக்யூரிட்டியிடம் காட்டிவிட்டு உள்ளே வந்துவிட்டேன். ஆனால் சோகமே அன்று அவள் என்னை பார்க்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் நான் தைரியத்தையெல்லாம் திரட்டி அவளிடம் சொல்ல நினைத்த Happy NewYear கூட அவளிடம் சொல்லவில்லை.

நான் அவளை நிறைய தடவைப் பார்த்தது, நிறைய நேரம் பார்த்தது, எல்லாமே. அவள் பள்ளியில் இருந்து திரும்பி வரும்பொழுது தான். அழகா குதிரை மாதிரி நடந்து வருவாள், எப்பவுமே தனியா வரமாட்டாள். யாராவது ஒரு பெண் அவள் கூடவே வருவார்கள். ஆரம்ப காலங்களில் சுமார் ஆறு மாதங்களுக்கு நான் அவள் நடந்து வரும்பொழுது வீட்டின் வெளியே சேர் போட்டு உட்கார்ந்து கொண்டு பார்ப்பேன், இல்லையென்றால் சிலசமயம் ஜன்னலில் இருந்தும் பார்ப்பேன். பிறகு சிறிது தைரியம் வளர்த்துக்கொண்டு அவள் நடந்து வரும் பொழுது நான் புத்தகத்தையோ, இல்லை கிரிக்கெட் மட்டையையோ எடுத்துக்கொண்டு எதிரில் நடந்து வர ஆரம்பித்தேன். சில நாட்கள் இப்படியே சென்றது பிறகு எப்பொழுதெல்லாம் நான் அவள் எதிரில் இப்படி நடந்து வர ஆரம்பிக்கிறோனோ அப்பொழுதெல்லாம் அவளும் அவள் நண்பியும், என்னைப் பார்த்து சிரிக்கத் தொடங்கினார்கள்(பின்னாட்களில் தான் அவர்கள் நக்கலாகத் தான் சிரித்தார்கள் என்று உணர்ந்து கொண்டேன்). இதெல்லாம் சொர்க்க காலம். அதாவது என் காதலின் கடைசிக்காலம்.

அப்பொழுதெல்லாம் மழை பெய்தால் வீட்டில் உட்காருவதில்லை, வெளியில் நிற்பது, கவிதை
எழுதுவது, இல்லை மழையில் டான்ஸ் ஆடுவது என்று உடல் நலத்துக்கு நல்லதில்லாத எல்லாவற்றையும் செய்து வந்தேன். இதன் காரணங்களால்(மேலும் சில காரணங்களாலும்) நான் இன்ஜினியரிங் படிக்க இயலாமல் போனது. ஏன் இந்த காரணங்களால் என்று குறிப்பிடுகிறேன் என்றால், என் அப்பாவும் அம்மாவும் ஆசிரியர்கள், அதனால் நான் ஆரம்ப காலங்களில் இருந்தே வீட்டில் படிப்பது என்பது சுத்தமாக கிடையாது. இதனால் என் பெற்றோர் நான் முதல் மாணவனாக வந்த பொழுதும் என்னை ட்யூஷனுக்கு அனுப்பினார்கள். ஆனால் அங்கே போயும் நானும் படிக்காமல் மற்ற மாணவர்களை படிக்கவிடாமல் இருந்ததால். முக்கால்வாசி ட்யூஷன் சென்டரில் இருந்து விலக்கப்பட்டேன்
(அதென்ன முக்கால்வாசி என்றால் மற்ற ட்யூஷன் மாஸ்டர்களெல்லாம் அப்பாவிற்கு பயப்பி
டுபவர்கள் அதனால் விலக்க முடியாத பயம். அந்த முக்கால் வாசியும் என் அப்பாவிடம் வந்து, சார் எல்லாரையும் கெடுக்குறான் சார்ன்னு புலம்பித்தான் நிறுத்தினார்கள்).

இப்படி நான் படிக்காமலே நல்ல மதிப்பெண்ணும் ரேங்க்கும் வாங்கிய காலமது. ஆனால் இப்படியெல்லாம் படித்து மார்க் வாங்க முடியாது என எனக்கு உணர்த்தியது 10 வகுப்புத் தேர்வு. எல்லோரும் நான் பள்ளியில் முதலிடம் வருவேன் என நினைத்த பொழுது எல்லாருடைய எண்ணங்களையும் தகர்த்தெறிந்தேன். ஆனாலும் 80% வாங்கினேன். எதிர்பார்த்ததுக்கு மிகவும் குறைவான மார்க்குகள். இப்படியாக நான்
இருந்த பொழுதுதான் +2 தேர்வு. நான் படிக்கும் அறைக்கு நேர் எதிரே அவள் வீட்டு மாடி ஜன்னல். திரைபோட்டுத்தான் இருக்குமென்றாலும். வெய்யில் காலங்களில் திறந்துமிருக்கும். நான் தேவதைக்காக காத்திருந்து தேர்வில் கோட்டைவிட்டேன்.(கோட்டைவிட்டேன் என்றால் பெயில் இல்லை). சரி பையன் திருந்தி விட்டான் எப்பப் பார்த்தாலும் புத்தகத்தோடு மேஜையில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்கிறான். இந்த முறை நிச்சயம் நல்ல மார்க் வாங்கிவிடுவான்(பள்ளி முதல் மாணவன் கனவெல்லாம் உடைத்தாகிவிட்டது). ஒரு 1000 ஆவது வாங்கிவிடுவான்னு நினைத்தார்கள். வாங்கியதோ 70% (மொத்தம் 1200 க்கு கணக்கிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்).

சரியான அடி(மனதில்) இரண்டு நாள் அப்பாவும் அம்மாவும் அக்காவும் என்னை விட்டு நகரவேயில்லை, நான் எங்கே தற்கொலை செய்துகொள்வேனோ என நினைத்தார்கள்(பின்நாட்களில் அவர்களே சொன்னது). கட்டாப் பரவாயில்லை தான் (224 னு நினைக்கிறேன்). நான் என்ட்ரென்ஸில் நல்ல(சொல்லிக்கிட்டாங்க) மார்க் வாங்கியிருந்தேன். இன்ஜினெயரிங் கூட கிடைத்திருக்கும் (சிவில், மெக்கானிக்கல்). ஆனால் என் மாமாக்களின்(அமேரிக்க) ஆலோசனையின்(கட்டளையின்) படி. கம்ப்யூட்டர் தான் படிக்க வேண்டும் என்று முடிவானது. நான் இன்டர்வியூவுக்குள் போவற்குள் கம்ப்யூட்டர் ஸீட் முடிந்து போனது. (அடுத்த வருடம் சுமார் ஐயாயிரம் கம்ப்யூட்டர் ஸீட்டுகள் இருந்தன பில்லப்செய்யப்படாமல்).

அப்புறமென்ன, அலையோ அலையென அலைந்து எனக்கு பிஎஸ்ஸி ஸீட் வாங்கித்தந்தார்கள். நான்வேண்டிக் கேட்டுக் கொண்டு ஹாஸ்டலில் தங்கினேன். காதலை(என் காதலை) விட்டு விட்டு வேறுஎங்கோ போகிறேன்னு நினைக்கிறீங்களா இல்லை தோ வந்துட்டேன். அதன் பிறகு அவளை நான் பார்ப்பது சிறிது சிறிதாக குறைந்தது(கல்லூரியல் சேர்ந்து விட்டேனே). அடுத்த வருடம் நியூயியரில் அதே கிளப்பில் பார்த்ததாக ஞாபகம். அன்று தான் நான் அவளிடம் ஹேப்பி நியூயியர் சொன்னேன். அது தான் நான் அவளிடம் பேசிய கடைசி வார்த்தை. பிறகு நான் டிகிரி முடித்து டெல்லி, பெங்களுர் என்று இரண்டு வருடம் இருந்துவிட்டு சற்று நாளைக்கு முன் ஊருக்கு சென்றிருந்தேன்.

அதே ஜன்னல் முன்னாலிருந்து சிரித்துக் கொண்டிருந்தேன். அக்கா வந்து `என்னடா தம்பி' என்றாள். நான் 'மோனா மீனா எங்கன்னு தெரியுமான்னு' கேட்டேன். அதற்கு அவள் 'அவங்க குடிமாறிபோயிட்டாங்க. ஏய்! உனக்கு அவளை இன்னமும் ஞாபகம் இருக்கிறதா?'ன்னு கேட்டா. பிறகு 'தெரியுமா நீ இங்க இல்லைல்ல அவளுக்கு பல்லு கொஞ்சம் வெளிய தெரிய ஆரம்பிக்க, கிளிப்போட்டிருந்தா, அவங்கம்மா கூட உன்னை சில தடவை கேட்டாங்க. அன்னிக்கு அவங்க வீட்ட கிரகப்பிரவேஷத்துக்கு அம்மா போயிருந்தப்ப, அம்மாகிட்ட சரியா நடந்துக்கலைன்னு(நாங்க அப்ப நடுத்தரகுடும்பம்) அம்மாவுக்கு கோபம்'னு, ஏதேதோ சொல்லிட்டுப் போனாள் என் அக்கா.

எனக்கு அன்றைய நாட்களை நினைத்தால் சிரிப்பாக இருந்தது. சைக்கிளில் அவள் பின்னாடி
போறதும், கதவு இடுக்கில் புகுந்து சினிமா பார்க்கிறதும், அவளைப்பற்றி கவிதை எழுதி
யதும். அன்னிக்கு முழுக்க சிரித்துக் கொண்டே இருந்தேன். அம்மாவுக்கு ஒரே பயம், கம்ப்யூட்டரில் ரொம்ப வேலைப் பார்த்தா லேசா பைத்தியம் பிடித்திடும்னு யாரோ அம்மாகிட்ட சொல்லியிருந்தது தான் அதற்கு காரணம்னு நான் நினைத்தேன். அவள் வீடு எங்கிருக்கிறதுன்னு தெரியும், எப்பிடி போறதுன்னும் தெரியும். வருடத்திற்கு இரண்டு நாட்களாவது நான் சொந்த வீட்டுக்குபோறேன் அதனால நேரமும் உண்டு. ஆனால் ஈகோ தடுக்கிறது. இப்போழுது நாங்கள் பணக்காரர்கள் (இரண்டு கவர்மெண்ட் எம்ப்ளாயிஸ், இரண்டு சாப்ட்வேர் ப்ரொப்ஷனல்ன்னு நாங்க பணக்காரங்க), ஆனால்
எங்கம்மாவை கிரகப்பிரவேசத்துல ஒழுங்கா நடத்தாததுதான் இப்போ ஞாபகம் வருது.

இப்போவும் போய்க் கேட்கலாம் அம்மா மீனாவீட்டுல போய் பெண்ணு கேளுங்கன்னு. ஆனா
வேணாம் அதுக்கு சில பர்ஸனல் காரணங்கள் இருந்தாலும் ஈகோத்தான் முதல் காரணம்.

Read More

Share Tweet Pin It +1

26 Comments

In ஓவியம்

இன்னும் கொஞ்சம் ஓவியங்கள்

இதெல்லாம் ரொம்ப காலத்திற்கு முன்பு வரைந்தது பத்து வருஷமாவது இருக்கும். என்னுடைய பழைய வெப்சைட்டில் கிடைந்தன. எதற்கும் இருக்கட்டுமே என்று. இன்னும் சில பெண் ஓவியங்கள் உண்டு ஆனால் கொஞ்சம் போல் நன்றாகயிருக்காது. அதனால் அப்படியே தூங்குகின்றன.









Read More

Share Tweet Pin It +1

1 Comments

In ஓவியம்

எனது ஓவியங்கள்.

முக்கியமா ஒன்னு நான் ஓவியனெல்லாம் ஒன்னும் கிடையாது. சொல்லப்போனால் ஓவியம் வரையரதப்பத்தியும் ஒன்னும் தெரியாது. ம.செ ஓவியங்களைப்பார்த்து கத்துக்கிட்டதுதான். அதனால் ஓவியத்தில் தவறு இருந்தால் மன்னிச்சுறுங்க.

முன்பே ஒருமுறை தமிழ்மணத்தில் இணைவதற்கு முன் நான் வரைந்த படங்களை போட்டதாக ஞாபகம், ஆனாலும் அந்தப்படங்கள் நான் வரைந்ததுதானா என பலரும் சந்தேகம் எழுப்புவதால் அதன் சுருக்கப்பட்ட படங்களை போடுறேன். (சைஸ் கம்மிங்கோ).

நம்புக்கப்பா!!!







Read More

Share Tweet Pin It +1

15 Comments

In இப்படியும் ஒரு தொடர்கதை

நீ கட்டும் சேலை மடிப்பில நான் கசங்கிப்போனேன்டி

நாற்றத்தை உணரும் சக்தி போல் எனக்கு பிரச்சனைகளையும் உணரும் சக்தி வந்துவிட்டதாக நான் நினைக்கத் தொடங்கியதற்கு, அக்கா போன் செய்ததும் அவளால் வரப்போகும் பிரச்சனையை முன்கூட்டியே கண்டுபிடித்தது மட்டும் காரணம் கிடையாது. என்னை அவள் வீட்டிற்கு வந்து அவளை பிக்கப் செய்து கொள்ளச் சொல்லும் பொழுதே எனக்குத் தெரிந்துவிட்டிருந்தது இன்றைக்கு வீட்டில் புயல் கிளப்பப்போகிறாள் என்பது. ஆனால் எனக்குப் புரியாத ஒன்று அந்த விஷயத்தை யார் இவளுக்கு சொல்லியிருப்பார்கள் என்பதுதான்.

பிக்கப் செய்து கொண்டு வீட்டிற்கு வந்ததும், இவளைப் பார்த்து அம்மா அடைந்த அதே ஆச்சர்யத்தை அகிலாவை காட்டினாள். நான் கண்களாலேயே இதற்கெல்லாம் நீதான் காரணமா என்று கேட்க மறுத்தவளின் கண்கள் நம்பத்தான் சொல்லின என்னிடம். ஆனால் மறுக்கச்சொல்லியது அக்காவின் அடுத்தக் கேள்வி, இந்தக் கேள்வியைத் தான் கேட்கப்போகிறாள் என்று ஊகித்திருந்தாலும் கேட்கும் பட்சத்தில் யார்சொல்லியது என்ற துணைக்கேள்வி எழுந்ததை தவிர்க்க முடியவில்லை.

"டேய் நீ அமேரிக்காப் போறியா?"

நான் திரும்பி அகிலாவை என்னயிது என்பதைப் போல் பார்க்க எனக்குத் தெரியாது என சத்தியம் செய்தன அவள் கண்கள்.

"ஆமாம் போறேன் அதுக்கென்ன இப்ப?"

"இந்தத் தடவையும் இவளைக் கூட்டிக்கிட்டு போகலைதானே நீ."

இந்த முறை நான் அகிலாவைப் பார்க்கவில்லை, ஒருவாறு அவள் மனதிலும் இந்தக் கேள்வி ஓடிக்கொண்டுதான் இருக்கவேண்டும். அவள் கேட்கவில்லை இங்கே கேட்கப்படுகிறது. பதில் சொல்லவேண்டிய கடமையிருந்ததாலும் இவளுக்குச் சொன்னால் விஷயம் அகிலாவிற்கும் சொல்வதுபோலாகும் என்பதால் சொன்னேன்.

"இங்கப்பாரு, நான் ஊர் சுத்திப்பார்க்க அமேரிக்கா போலவில்லை, ப்ரொஜக்ட் ஊத்தி மூடிக்கிட்டிருக்கு வேற வழியில்லாமல் அங்கப்போறேன். சிகப்பில் இருக்கும் ஸ்டேட்டஸை பச்சையாக்கப் போகிறேன்.

அங்கே போனாலும் நான் எத்தனை மணிக்கு திரும்பிவருவேன்னு தெரியாது. இங்கயப் போலவே அங்கேயும் சனி, ஞாயிறு குப்பைக் கொட்ட வேண்டியிருக்கும். அதனால என்கூட வந்தா இவளுக்கு போரடிக்கும். எவ்வளவு நேரம் தான் இவளும் டீவியையே பார்த்துட்டு உட்கார்ந்திருப்பா. அதுமட்டுமில்லாம பேச்சுலர்னா பிரச்சனையே வேற, பேமிலியைக் கூட்டிட்டுப் போறதுன்னா பிரச்சனையே வேற. ஏகப்பட்ட செலவாகும்."

காரணங்களை அடுக்கிக்கொண்டே போனேன். அத்தனையையும் நிராகரித்தவளாய்,

"இல்லை நீ பொய் சொல்ற, அவளை அமேரிக்கா கூட்டிக்கொண்டு போவதற்கு ஏனோ பயப்படுற நீ. எனக்கு என்ன காரணம்னு தெரியாது. ஆனால் நீ பயப்படுறேன்னு தெரியும். எனக்குத் தெரியாது உன் மாமன், அவளை அமேரிக்கா கூட்டிக்கிட்டுப் போனா என்னன்ன பிரச்சனைவரும்னு சொன்னானா, இல்லை நீயே நினைச்சிக்கிட்டிருக்கிற விஷயங்களை மனசில வச்சிக்கிட்டு இவளை இங்கேயே கலட்டி விட்டுட்டுப்போறியா எனக்குத் தெரியாது. ஆனால் இது சரியில்லை, அதை மட்டும் நான் சொல்லிட்டேன்."

கடைசிவரை என்னுடைய காரணங்களை ஒப்புக்கொள்ளவேயில்லை, அம்மாவிடம் காப்பிவாங்கிக் குடித்துவிட்டு, என்னுடைய காரை அவளே டிரவ் பண்ணிக்கொள்கிறேன் என்று சொல்லி எடுத்துக் கொண்டு போனதும் வீடு ஏறியிறங்குவதற்கு ஆட்கள் இல்லாமல் போய்விட்ட நாளொன்றின் கடைசியில் அடுத்த நாளுக்காக காத்திருக்கும் லிப்டைப் போல் அமைதியாகயிருந்தது அடுத்தப் பிரச்சனையை நோக்கி. என்னுடைய பயமெல்லாம் இதுவரை இப்படிப்பட்ட ஒன்றை நினைத்து பார்த்திராத அகிலா இதைப்பற்றி என்ன நினைப்பாள் என்றுதான்.

இந்த எண்ணங்கள் எல்லாம் என் மனதில் இல்லையா என்றால் சொல்லமுடியவில்லை என்றுதான் பதில் வந்தது. உண்மையில் கல்யாணவயதில் இந்தக் கேள்விகள் இருந்ததுண்டு. ஆனால் அகிலாவுடனான திருமண வாழ்க்கை அந்த பழைய எண்ணங்களை பெட்ரோல் ஊற்றி எரித்திருந்தது. இப்படியாக ஏகப்பட்ட எண்ணங்கள் மனதை அலைக்கழிக்க யோசித்துக்கொண்டிருந்தவனுக்கு அகிலா அருகில் வந்ததே தெரியவில்லை. தோளைத் தொட்டுத்திருப்பியவள்.

"என்ன ஒரே யோசனை, எந்தப் பொய்யைச் சொன்னால் இவளை வாகாய் கழட்டிவிட்டுட்டுப் போகலாம்னு யோசனை பண்ணுறீங்களோ."

ஆனால் நான் உண்மையில் அதை நினைத்துக் கொண்டிருக்கவில்லை என்றாலும் அவள் பொய்யைப் பற்றிப் பேசியதும் சும்மாப் போட்டுப்பார்த்தேன் சில பொய்களை.

"இங்கப்பாரு அகிலா, உன்னை அமேரிக்கா கூட்டிட்டுப் போறதா பெரிய விஷயம். நாளைக்குச் சொன்னேன்னா உனக்கும் விசா ஏற்பாடு பண்ணிடுவாங்க. B1 தானே, ஆனால் நீ அங்கவந்தும் சேலையில்ல கட்டுவேன்னு ஒத்தக்காலில் நிப்ப?" உண்மையில் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு அதைப்பற்றித்தான் இத்தனை நேரமும் யோசித்ததாய் நம்பவைக்க என்னால் ஆன நடவடிக்கைகள் அத்தனையையும் செய்தேன்.

அகிலா ஏன் அந்த முடிவிற்கு வந்தாள் என்று தெரியாது ஆனால் அவள் சேலை மட்டும் தான் கட்டுவாள். எவ்வளவோ வற்புறுத்தியும் கூட நைட்டி போடமாட்டேன் என்று அடம்பிடித்தவள் அவள். சில தடவைகள் வற்புறுத்திய பொழுது, நான் ட்ரெஸ் பண்ணிக்கிறதில் நீங்க தலையிடாதீங்க என்று சொல்லியிருந்தாள். உண்மையில் அவளுடைய உடை விஷயத்தில் பெரும்பாலும் தலையிடுவதில்லை, உனக்குப் பிடித்திருந்தால் உடுத்திக்கொள் அவ்வளவுதான் என்வரையில்.

"நான் அப்பவே நினைச்சேன் இப்படி உப்புச்சப்பு இல்லாத காரணத்தையெல்லாம் சொல்லி என்னை உங்கக்கூட வரவிடாம பண்ணிடுவீங்கன்னு?"

ஆக என்னுடன் அவள் அமேரிக்கா வரும் முடிவு எடுக்கப்பட்டுவிட்டுருந்தது. இதற்கு மேலேயும் நான் எதையாவது காரணம் சொல்லிக் கொண்டிருந்தால், உண்மையாக அவளாய் யோசிக்காவிட்டாலும், அக்கா சொல்லிக்கொடுத்திருந்தது நினைவில் வரலாம் என்பதால். கொஞ்சமாக அகிலாவை சேலையிலிருந்தாவது விடுவிக்கலாம் என்று நினைத்து.

"சரி நீ இப்பச் சொல்லு, சேலை தவிர ஏதாவது மாட்ர்ன் டிரெஸ் போட்டுக்கொள்ள சம்மதம் என்று. நான் உன்னைக் கூட்டிக்கொண்டு போகிறேன்."

அவளுக்கும் தெரிந்திருக்க வேண்டும் பிரச்சனை சேலையில்லை என்று, ஆனாலும் நாங்கள் வார்த்தைகளால் விளையாடிக்கொண்டிருந்தோம்.

"தெரியுமே நீங்க அமேரிக்காவைச் சாக்கா வைச்சு, என்னை டூ பீஸ் போட வைக்கலாம் என்று பாக்குறீங்க. ஆனா அதெல்லாம் நடக்காது."

உண்மையில் கல்யாணம் ஆவதற்கு முன் என் பெண்டாட்டியை எந்தெந்த உடைகளில் பார்க்கவேண்டும் என்ற கனவுகள் இருந்ததுண்டு ஆனால் அவையெதிலும் அவள் சொன்ன உடை கிடையாது. ஷேக்ஸ்பியர்ஸ் இன் லவ் படத்தில் அந்தக் கதாநாயகி அணிந்திருக்கும் பாரம்பரிய இங்கிலாந்து உடை பிடிக்கும் எனக்கு, அதே போல் த லாஸ்ட் சாமுராய் படத்தில் சாமுராயின் தங்கையான ஜப்பானியப் பெண் அணிந்திருக்கும் உடை, வெள்ளைப் பனியை ஆடையாக அணிந்திருப்பதைப் போன்ற மேற்கத்தியப் பெண்மக்களின் கல்யாண உடைகூட நிறையப் பிடிக்கும். கடேசியாக எப்பொழுதாவது அகிலா அணியும் மடிசார். இவையெல்லாம் அகிலாவிற்கும் தெரிந்திருக்கும்.

"எனக்கு ஏம்மா உன்னை டூ பீஸில் பார்க்கணும் நான் தான் பீஸே இல்லாமல் பார்த்திருக்கேனே..." சொல்ல தலையில் கொட்டியவள்.

"சரி கொஞ்சம் சீரியஸாய் பேசுவோமா, உங்கக்கா சொன்னதுதான் பிரச்சனையா? நீங்க பயப்படுறீங்களா நான் அமேரிக்கா போனா மாறிருவேன்னு. இவ்வளவுதானா இத்தனை வருடங்களில் நீங்கள் என்னை புரிந்துகொண்டது.

சரி மாறிருறேன்னே வைச்சுக்கோங்களேன். அதுல என்ன தப்பு, புது ஊரு, புது கலாச்சாரம், புது மக்கள்ன்னு வாழ்ந்தா மென்ட்டாலிட்டி மாறித்தானே போகும். என்ன உங்களுக்கு என்னையக் கூட்டிக்கொண்டு போறதுக்கு முன்னாடி உங்க அம்மாவைக் கூட்டிட்டுப் போகணும், அப்படியில்லாட்டி இரண்டு பேரையும் ஒரே சமயத்தில் அது உங்க பட்ஜெட்டுக்கு சரிவராது அவ்வளவுதானே. தாராளமாய் உங்கம்மாவைக் கூட்டிக்கிட்டு போங்க.

இருபத்தைந்து வருடங்களாய் உங்களை வளர்த்தவங்க அவங்கதானே, அதுக்கப்புறம் ஒரு பத்துவருஷம். இல்லை அதுவும் தான் சொல்லமுடியாதே ஒன்பது வருஷம் தானே உங்களை எனக்குத் தெரியும். இடையில் வந்த எனக்கு அவங்களை விட அதிக உரிமையிருக்க முடியாது தான்."

உண்மையில் அக்கா சொன்ன காரணங்களைவிடவும், அகிலா சொன்னதுதான் சரியென்று மனதிற்குத் தோன்றியது. சரி பிரச்சனையை ஆரம்பித்து வைத்தாகிவிட்டது பேசிமுடித்துவிடலாம் என்று நினைத்து அவளை அருகில் இழுத்து அமர்த்தினேன். ஆரம்பத்தில் நான் கல்யாணம் செய்து கொள்ள பயந்தது எங்கே எனது மனைவி என்னைப் புரிந்து கொள்ளமுடியாதவளாய் போய்விடுவாளோ என்றுதான்.

எனக்கும் அக்காவிற்கும் பல விவாதங்கள் பறக்கும், நான் பள்ளியிறுதி கூட தாண்டியிறாத, கிராமத்துப் பெண்ணைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொல்ல, ஏன் அப்படி நினைக்கிறாய் நகரத்துப் பெண்கள் சரியானவர்களாகவும் கிராமத்துப் பெண்கள் தவறானவர்களாகவும் இருந்துவிட்டால் என்று விவாதிப்பாள். நல்லவேளை அவள் சொன்னது போல் படித்தப்பெண்ணை கல்யாணம் செய்து கொண்டிருந்தேன், அது இப்பொழுது உதவுவதாகப் பட்டது. ஆனால் கிராமத்துப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளாததால் அக்காவின் கருத்தை தவறென்று ப்ரூப் பண்ணமுடிந்ததில்லை.

"உண்மைதான் அகிலா, ஆரம்பத்திலிருந்தே மனதில் ஓடிக்கொண்டிருந்த விஷயம் இது. இந்த பதினைந்தாண்டு சாப்ட்வேர் வாழ்க்கையில் பல தடவைகள் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தாலும், அம்மாவை அழைத்துச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

இன்று கூட்டிட்டுப்போவோம், நாளைக்குக் கூட்டிக்கொண்டு போவோம் என்று நினைத்து தட்டிக்கழிந்து கொண்டே வந்தது. இவையனைத்தும் என் மனதில் அடிஆழத்தில் மறைக்கப்பட்ட உண்மைகளாகவே நான் நினைத்திருந்தேன். அம்மாவிற்கும் இதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை, அது உனக்கே தெரியும். ஆனால் இது நிச்சமயமான காரணமாகயிருக்கும் என்று நீ சொன்னதற்கு பிறகுதான் எனக்கேத் தோன்றுகிறது.

ஆனாலும் பரவாயில்லை, அம்மா ஒன்றும் தவறாக நினைத்துக் கொள்ளமாட்டார்கள் நீ தயாராயிரு நான் உன் விசாவிற்கும் சேர்த்து ஏற்பாடு செய்கிறேன்."

அதுவரை நான் சொல்வதையே மிகக்கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த அகிலா.

"எனக்கு இதுவும் தெரியும். எனக்காகவோ இல்லை உங்களுக்காகவோ நீங்கள் கூட்டிக்கொண்டு போகவில்லையென்றாலும். மோகனா அக்காவிற்காக நீங்கள் என்னைக் கூட்டிக்கொண்டு போவீர்கள் என்று, ஆனால் அது தேவையில்லை. நான் வெயிட் பண்றேன், இன்னும் நிறைய நாட்கள் அங்கே தங்கியிருக்கும் அளவிற்கு ஒரு வாய்ப்பு வந்ததும் நானே புடுங்கி எடுத்து உங்களைக் கூட்டிப்போக வைக்கிறேன்.

நான் உங்கக்கிட்ட சொல்லவிரும்பியது, விரும்புவது, விரும்பப்போவதெல்லாம் ஒன்றே ஒன்றைத்தான், உங்கள் அக்காவைப் போல, அம்மாவைப் போல நானும் உங்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். முழுசா புரிஞ்சிக்கிட்டேன்னு சொல்லமாட்டேன். ஆனால் வெளியில் ஒன்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே உங்கள் உள்மனதில் என்ன ஓடுகிறது என்பதை உங்களை நன்கறிந்த மற்றவர்களைப் போல நானும் அறிந்து கொள்ள நிறைய முயற்சி செய்கிறேன் அவ்வளவுதான்."

லெக்சர் அடிக்கத்தொடங்கினாள், இது சிலசமயம் அகிலாவிடம் எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம். புனிதபிம்பமாகத் தன்னைக் காண்பித்துக் கொள்வது. ஆனால் இந்தச் சூழ்நிலையில் இன்னொரு பிரச்சனையை நான் கிளப்ப நினைக்காததால்.

"இங்கப்பாரு அகிலா இப்படி நிமிஷத்துக்கு ஒரு பேச்சு பேசிக்கொண்டிருந்தால் என்ன சொல்ல, அதெல்லாம் முடியாது நீ வந்துதான் ஆகணும். நீ என்கூட வந்தால் அமேரிக்காவில் டிவியில் பே சானலுக்கு நாளொரு மேனிக்கு டாலர் அழவேண்டியிருக்காதேன்னு யோச்சிச்சேன். நீயிருக்கிறப்ப டீவியில் தெரிகிற பொம்மை எதுக்குச் சொல்லு. அதனால நீ வந்துதான் ஆகணும்."

தன்னை என்னிடம் இருந்து விலக்கிக்கொண்டவள், இது திருந்தாத கேசு என்று சொல்லிக்கொண்டு, தலையணையையும் பெட்ஷீட்டையும் எடுத்துக்கொண்டு அம்மாவின் அறைக்குச் சென்றாள். கனவில் நான் அமேரிக்காவில் பின்புறம் நீலக்கலர் பூக்களின் மத்தியில் ஜீன்ஸ் டீஷர்ட்டுடனும், என் மனைவி சேலையிலும் "நீ கட்டும் சேலை மடிப்பில நான் கசங்கிப்போனேண்டி" பாட்டிற்கு டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தோம்.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In பெங்களூர்

பெங்களூரில் இன்று

பெங்களூரில் வியாழக்கிழமை பந்த் அறிவித்திருக்கிறார்கள். பெரும்பாலும் எல்லாக் கம்பெனிகளும் பள்ளிக்கூடங்களும் விடுமுறை அறிவிக்கும் என்று நினைக்கிறேன்.

கட்டிடங்கள் ஏற்கனவே மஞ்சள்/சிகப்பு கொடிகளை கட்டிக்கொண்டு நிற்கின்றன.

தமிழ்சானல்கள் கருப்படிக்கப்பட்டு நாளாகிறது. போக்குவரத்து தமிழ்நாட்டிற்கும் பெங்களூருக்கும் இடையில் இல்லை. அவசர ஆத்திரம் என்றால் கூட பெங்களூரில் இருந்து கேரளாவோ, ஹைதராபாத்தோ சென்றுதான் தமிழ்நாடு வரமுடியும் என்று நினைக்கிறேன். பிளைட் ஒன்று உண்டு பெங்களூரையும் திருச்சியை கனெக்ட் செய்ய, கிங் பிஷர். மொத்தமாக பிசியாக இருக்குமென்று நினைக்கிறேன்.

வாழ்க இந்தியக் குடியுரிமை.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Only ஜல்லிஸ்

அய்யா லீவு

Hello,

As many of you are aware, it is anticipated that there may be some violence and disruptions on the streets today based on the result of the Cauvery Water Disputes Tribunal. Thousands have police have been drafted in to help enforce law and order and hopefully maintain peace on the streets.

Some of the I.T. companies have closed and are opting to work on Saturday instead.

We have been made aware informally that some of the roads are becoming blocked.

For your own safety and protection you are free to finish up work now. I will keep you posted on any further updates and hope you all get home safely

Kind Regards
*********

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சுய சொறிதல் பெங்களூர்

என்ன நடக்கும் இன்று பெங்களூரில்

நாளைக்கு(நேற்றே எழுதியது) காவிரி பற்றிய தீர்ப்பு வெளிவரயிருக்கிறது. இந்தத் தீர்ப்பின் நாள் குறித்தவுடனேயே எங்கள் வீட்டிலிருந்து போன் மேல் போன் வந்துகொண்டிருக்கிறது பத்திரமாகயிருங்கள் என்று. ஏனென்றால் நாளை என்ன நடக்கும் என்று தெரியாது. பஸ்கர் எரிக்கப்படலாம், ஆட்டோக்கள் கொழுத்தப்படலாம். கூடவே சில மனிதர்களும், அம்மா எப்பொழுது சொல்வார்கள் ரொம்பவும் ஆப்டிமிஸ்டிக்கா இருக்காதே என்று எனக்குத் தெரியவில்லை நான் பெங்களூரைப் பார்த்து பயப்படுவதை பார்த்தால் நானெல்லாம் ஆப்டிமிஸ்டிக்கா என்ற டவுட்டே வருகிறது. நான் பெஸிமிஸ்டிக்கோ என்ற சந்தேகமும் சேர்ந்தே.

பெங்களூர் மைசூரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அதெல்லாம் உதவாது சும்மா பேருக்குத் தான். பலரும் ராஜ்குமார் மரணத்திற்குப் பிறகு நாளை பெரிய பிரச்சனை வரலாம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டொரு நாளைக்குத் தமிழில் பேசமாட்டேன்(அப்படியே ரொம்பத் தமிழில் பேசிருவனோன்னு கேட்டீங்கன்னா, ஒரு பதிவரிடம் சமீபத்திய பிரச்சனைப் பற்றி தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த பொழுது. பதிவர் பயந்துவிட்டார் ஆஹா இவன் இப்படியே போர் அடித்து இன்னைக்கு முழுக்கவே பேசியே தீர்த்துடுவானோன்னு. அரைமணிநேரம் பேசியிருப்போம். பாவம் அந்தப்பக்கத்து நபரின் முகபாவங்களை கற்பனை செய்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்.) ஆனால் பெங்களூரில் போலீஸ்காரர்களிடமோ, கடைக்காரர்களிடமோ பெரும்பாலும் தமிழில் பேசுவது கிடையாது. முடிந்தவரை இந்தி, இல்லாவிட்டால் ஆங்கிலம்.

அப்படியும் முடியலைன்னா, "மாடி" "சொல்ப" இப்படி கன்னட வார்த்தைகள் இணைக்கப்பட்ட தமிழ். தெரியலை நாளைக்கு என்ன நடக்கும் என்று.

JUDGEMENT: KAVERI WATER DISPUTE TRIBUNAL

Dear ,

After nearly 17 years of protracted proceedings, a final award of the Cauvery Water Disputes Tribunal will be pronounced on 5 Feb 07. Reactions to the judgment are likely by both parties and protests/agitations in Karnataka and TN cannot be ruled out. Police authorities across both states are seized of the threat and have planned adequate deployment to monitor and handle the law and order situation. Find below a set of suggestions to ensure your personal safety:

· Avoid use of KA & TN registered vehicles (personal and public) in Tamil Nadu & Karnataka respectively, during the week 5th to 10th Feb.

· Avoid inter-state road/rail travel for the same duration.

· Keep abreast with local situation while commuting and avoid trouble spots.

· Avoid communal gatherings & crowded places including cinema theatres.

· Avoid disclosing your ethnic identity.

· Employees who are residing in sensitive areas like Ulsoor, Indiranagar, Magadi Road, Rajaji Nagar, Srirampuram, Basaveshwar Nagar, Kamakshipalya, Kurubarahalli, Mysore Road, J. J. Nagar, Kalasipalyam, Azad Nagar, Byatarayanapura, Madiwala, Tilak Nagar, Attibele, Sarjapur and Hosur Road.

The possibility of disruption on 6 Feb 2007 cannot be ruled out.

Please pass on any related information to your Facilities In charge.

இப்படி ஏகப்பட்ட பார்வேர்ட் மெஸேஜ் வேறு. ;)

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In புத்தகங்கள்

மோகமுள்

"இதற்குத்தானே", "இதற்குத்தானே" என்று இரண்டு நாட்களாக மனம் அலைபாய்கிறது, காரணம் உண்டு. பாலகுமாரன் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" என்று எழுதியிருந்த பொழுது அதனால்தால் பிரபலமானது இந்த டெர்ம் என்று நினைத்திருந்தேன். ஆனால் "மோகமுள்" படித்ததும் இந்த ஒரு வார்த்தை தான் மனதில் ஒட்டிக்கொண்டு நகரவே மாட்டேன் என்கிறது. நான் முன்பே மரப்பசு படித்திருக்கிறேன், மோகமுள் பார்த்திருக்கிறேன்.

நான் படிக்காமல் போனதற்கு பல காரணங்கள், முதலில் புத்தகத்தின் தலைப்பு இந்தத் தலைப்புள்ள புத்தகத்தை ஒரு பதினாறு வயது பையனோ இல்லை பதினெட்டு வயது பையனோ படித்திருந்தால் அதை ஒப்புக்கொள்ளக்கூடிய சமூகத்தில் நான் வளரவில்லை, அதுமட்டுமில்லாமல் மோகமுள் படத்தை ஒரு பிட்டுப் படம் போல் வியய்டீவி இரவில் போடுவதால் பலருக்கும் அதைப் பற்றி ஒரு "உவ்வே" படிக்காமல், தெரியாமல், என்னவென்றே உணராமல். என் வீட்டில் படித்திருந்தால் ஒன்றும் சொல்லியிருக்க மாட்டார்கள் தான். கடல்புறாவை, யவனராணியை, இன்னும் பல ஸிட்னி ஷெல்டன் நாவல்களையே நான் படிப்பதைத் தடுக்காதவர்கள் மோகமுள்ளைத் தடுத்திருக்க மாட்டார்கள் தான். என்னவோ என்னால் முடிந்திருக்கவில்லை.

இந்தப் புத்தகக் கண்காட்சியின் பொழுது மரப்பசுவுடன்(முன்பே சொல்லியிருந்தது போல்) மோகமுள்ளையும் வாங்கினேன். கிழக்கு, உயிர்மை, காலச்சுவடு பதிப்பக புத்தகங்களையே இப்பொழுது அதிகம் வாங்குவதால் புக் குவாலிட்டி மனதிலேயே நின்று கொண்டிருந்தது மோகமுள்ளும் மரப்பசுவும் வடிவமைப்பிலாவது மாறியிருக்கும் என்று, செம்பதிப்பென்று எழுதியிருந்தது நினைவில் வந்தது. தேவையில்லாத இடங்களில் எல்லாம் அப்பாஸ்டெப்பி, உரைநடையில்லாத இடங்களில் எல்லாம் ஆரம்பித்து விட்டு பின்னர் விட்டுர்கிறார்கள். நிறைய இடங்களில் அவருடய் கற்பனை வளம் ஒற்றை அப்பாஸ்டெப்பியுடன் நிற்கிறது.



படம் பார்த்ததால் ஒரு விஷயம், பாபுவாக நடித்திருந்தவரை பாபுவாகவும், யமுனாவாக நடித்திருந்தவரை யமுனாவாகவும் என்னால் ஒப்புக்கொள்ளமுடிந்திருந்தது. அதுவும் பாபு விஷயத்தில் தான் கொஞ்சம் உதைத்தது. மற்ற விஷயத்தில்(யமுனா) அப்படிச் சொல்லமுடியாது, நான் அந்த நடிகை நடித்த மற்ற படங்கள் பார்க்காதது காரணமாய் இருக்கலாம். அந்தப் பொண்ணு வேறுபடம் நடித்து நான் பார்த்திருந்தால் எனக்கு உவ்வே என்றுதான் வந்திருக்கும்.(ஹிஹி, இதைத்தான் மெலோட்டிராமா பிடிக்காமல், ஆனால் மெலோட்டிராமாவில் தங்களுடைய சோகத்தை, பிரச்சனைகளைக் கழுவிக் கொள்கிறவர்கள் என்று ஆதவன் 'என் பெயர் ராமசேஷனில்' சொல்வார்.)

மற்றபடிக்கு என்னால் ராஜமாக விவேக்கையோ, ரங்கண்ணாவாக நெடுமுடிவேணுவையோ நினைக்கமுடியவில்லை, முதலாவதற்கு காரணம் சொல்லவேண்டிய அவசியம் மோகமுள் படித்து படம் பார்த்தவர்களுக்குத் இல்லையென்பது தெரிந்திருக்கும் ஆனால் இரண்டாவதற்கு எனக்கே காரணம் தெரியவில்லை.

சரி கதைக்கு,

உண்மையில் ஆரம்பம் படித்துக்கொண்டிருந்த பொழுது நினைத்தேன் சரி அந்த பழைய மோகன்தாஸ் கிடையாது ஒன்றரை மணிநேரம்(அதுவே இப்பல்லாம் அதிகம்) படித்துவிட்டு வைத்துவிடுவேன் என்று. ஆனால் புத்தகத்தை வைக்கவே முடியவில்லை, இன்னொருமுறை என் தலையில் தட்டப்பட்டுவிட்டது உனக்கு இன்னும் பொதுபுத்து போகவில்லை என்று. ஆனால் திஜாவின் இந்தப் புத்தகத்தை பொதுபுத்தியில் சேர்க்கலாமா என்று. ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன் கேட்டிருந்தீர்கள் என்றால் இல்லையென்றுதான் சொல்லியிருப்பேன். ஆனால் இது பொதுபுத்திக் கதை தான். தன்னைவிட பத்துவயது பெண்ணைக் கலியாணம்(???) செய்து கொள்வதை இல்லை சேர்ந்து வாழ்வதை, இன்றைய நாளில் கூட சர்வ சாதாரணமாகப் போய்விடாத ஒன்றை அந்தக் காலத்தில் சொல்லமுயன்றதால் மட்டும் பொதுபுத்தி நாவல் இல்லையென்று சொல்லமுடியாது.

கதை படிக்கப் படிக்க, நான் அதனுடைய முடிவைப் பற்றிய எண்ணமே மனதில் ஓடிக்கொண்டிருந்தது எனக்கு படம் பார்த்து ஒருவாறு அதன் முடிவு தெரியும் அதனால் அதை தியாவின் வார்த்தை யாலத்தில் படித்துக்கொண்டிருந்தேன் அவ்வளவுதான். அதுவும் பாபு மெட்ராஸ் வந்ததும் அந்தப் பெண்ணைப் பார்த்ததும் மனசெல்லாம்(மூளை நியூரான் செல்கள் ???) கல்லாகிவிட்டதைப் போன்ற உணர்வு. எனக்குத் தெரிந்த மோகமுள் படத்தில் அர்ச்சனா யோக்லேக்கர் "இதற்குத்தானே" என்று கேட்டுவிட்டு போய்விடுவதாகத்தான் நான் உணர்ந்திருந்தேன்(படம் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டுருக்கிறது - நினைவில்லை - தவறிருந்தால் திருத்தலாம்). கதையில் முடிவிற்கு இருநூறு பக்கங்களுக்கு முன்பே இந்த முடிவைப் பற்றிய எண்ணங்கள் ஓடத்தொடங்கின.

எனக்கு சமீபத்தில் பார்த்த 'தேயா வு' படம் தான் நினைவில் வந்தது டென்சல் வாஷிங்டன் ஒரே சமயத்தில் கடந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் இருப்பார் நானும் அதே நிலையில், முடிவு தெரிந்த பிறகும் நிகழ்காலத்தில் கடந்தகாலத்தில் நடந்ததைப் பற்றி படித்த உணர்வு. உண்மையில் படத்தில் காண்பித்தது போலில்லாமல் ஹாப்பி எண்டிங். என்னைப் பொறுத்தவரை. அதுவும் கடைசியில் பாபுவும் யமுனாவும் பேசுவது ஒரு காலத்தில் வந்தியத்தேவனும்-குந்தவையும் பேசும் பொன்னியின் செல்வன் வசனங்களைப் போல் உற்சாகப்படுத்தியது. படித்துமுடித்துவிட்டு மணியைப் பார்த்தால் மணி ஆறரை. சாயங்காலம் ஒரு ஒன்பதரை பத்திற்கு எடுத்து வைத்திருப்பேன்.சுஜாதா அளவிற்கு fast reading இல்லையென்றாலும் நானும் fast reader தான்(இது சும்மானாச்சுக்கும்) ஆனால் பிரச்சனை அது இல்லை. அடுத்த நாள் விடுமுறை கிடையாது. இடையில் நான்கைந்து முறை டீ குடித்தது, மற்றும் இன்னபிற தவிர்த்து தூக்கம் என்பது பக்கத்தில் வரவில்லை. நான் பயந்தது அடுத்த நாள் வேலையைப் பற்றி.

நீ மூன்றாண்டு எக்ஸ்பீரியன்ஸாயிரு, எத்தனையோ சர்டிபிகேஷன்ஸ் பண்ணியிரு, கொடுத்த வேலையை அவர்கள் நினைத்ததற்கு முன்பேகூட எத்தனையோ முறை செய்திரு வேஸ்ட். கடந்த காலம் சாப்ட்வேர் இண்டஸ்டிரியில் வேஸ்ட், நீங்கள் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் உங்களைப் ப்ரூப் பண்ணவேண்டும். போட்டிகள் ஏராளம், வாய்ப்புகள் ஏராளம், பொறாமைகள் ஏராளம், பாலிடிக்ஸ் ஏராளம் செட்டிலாகி உட்கார்ந்துவிட்டீர்கள் என்றால் உங்கள் தலையில் கால்வைத்து போய்விடுவதற்காக காத்திருப்பவர்கள் ஆயிரம். ஆனால் உண்மையில் ஒரு ஹாப்பி எண்டிங் என்னால் ஆறரை மணிக்குப் பிறகு கிடைத்த இரண்டரை மணிநேரத் தூக்கத்தில் அடுத்த நாள் வேலையை நான் நினைத்ததை விடவும் சீக்கிரமாக செய்துவிட்டு இன்னொருமுறை மீள்வாசிப்பு செய்யவைத்தது.

என்னுடன் ஒரே அறையில் இருந்த ப்ளாக்கர் ஞானசேகருக்குத் தெரிந்திருக்கும், இரவு எத்தனை மணிக்கு ஆபிஸில் வருகிறேன் என்ற கணக்கு இல்லாமல் இருந்த காலத்தில் எல்லாம் 'என் பெயர் ராமசேஷன்' இரண்டு பக்கமாவது படித்திருக்கிறேன் தினமும். அவன் கூட கேட்டிருக்கிறான் அந்தப் புத்தகத்தைத் தான் படித்துவிட்டீர்களே என்று. ஆனால் படித்தப் புத்தகத்தின் படித்தப் பக்கங்களில் மீண்டும் மூழ்குவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். பல புத்தகங்கள் திரும்பத் திரும்ப படித்திருக்கிறேன் உபபாண்டவம் கைவசம் இருந்த நாட்களில் கூட அப்படித்தான்.

ஒவ்வொரு கதையிலும் நாம் யாரோ ஒருவராகத் தன்னை அடையாளம் செய்து கொண்டு படிக்கத் தொடங்குறோம் இது இன்றைய பின்நவீனத்துவ நாவல்களுக்கு மட்டும் பொறுந்தாது, வேண்டுமானால் என்வரையில். ராமசேஷனும் சரி, பாபுவும் சரி கதையில் பல சமயங்களில் என்னுடன் நிறையத் தொடர்புடையவர்களாகப் பட்டது. அதுவும் பாபு - யமுனா. நான் முன்பொருமுறை கதையில் ஒரு வார்த்தை எழுதியிருந்தேன் நினைவில் இருக்கிறது.

"உண்மையைச் சொல்லணும்னா, இந்தக் கேள்விக்கு பதிலளிக்க சில விளக்கம் வேணும், காதலிச்சீங்களான்னு கேட்டா ரொம்ப பொதுவான விஷயம். சின்ன வயசிலேர்ந்தே எனக்கு நிறைய இனக் கவர்ச்சி இருந்திருக்குது, எட்டாவது படிக்கும் பொழுது பக்கத்தில் பரிட்சை எழுதிய ஆறாவது படிக்கிற பொண்ணு, முதல் முதல்ல பாப் அடிச்சு நான் பாத்த எதிர்த்த மாடிவீட்டுப்பொண்ணு, அந்த பொண்ணு வீட்டுக்கு எதிர் வீட்டில் இருந்த, உன்னை மாதிரியே ஓவியமா தெரிந்த, ஒருகை இல்லாத ஆன்ட்டி, பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சப்ப கூட வாலிபால் விளையாண்ட பொண்ணு, இப்படி பல பெண்ணுங்களை எனக்கு பிடிச்சிருந்தது; இன்னிக்கு வரைக்கும் பிடிக்கும்; ஆனா ஒன்னு ரெண்டு வார்த்தைகளைத் தவிர அதிகமா இவங்க யார்கிட்டையுமே நான் பேசினது கிடையாது. இல்லை, நான் உண்மையிலேயே யாரையாவது காதலிச்சேனான்னு கேட்டீன்னா இல்லைன்னுதான் சொல்வேன்; அதுக்கும் என்னோட தாழ்வு மனப்பான்மைதான் காரணம்னு வைச்சுக்கோயேன்."

இதுவருவது முதலிரவு சிறுகதையில். அந்த ஒரு கையில்லாத ஆன்ட்டி அப்படியே யமுனா என்று வைத்துக்கொள்ளலாம், யமுனாவிற்கு ஒரு பிரச்சனை என்றால் இவங்களுக்கு ஒரு பிரச்சனை ஒரு கை கிடையாது. அந்தக் காலத்தில் நினைத்திருக்கிறேன் பெரியவனானதும் இவங்களைக் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்று. நான் என்ன அப்பொழுது பத்தாவது படித்துக்கொண்டிருந்தால் ஆச்சர்யம். அவர்களுடன் பேசுவதற்காக, நின்று அவர்கள் வருவதைப் பார்ப்பதற்காக ஆயிரம் ப்ளான் போட்டிருக்கிறேன். சின்னப் பிள்ளை ப்ளான் இல்லையா எல்லாமே பெயிலியர் தான். ஆனால் ஒன்றிரண்டு தடவை பேசியிருக்கிறேன் அவ்வளவே. அவங்க இருக்கும் பொழுதே அவங்க தங்கச்சிக்கு கல்யாணம் ஆனது நினைவில் இருக்கு.

அந்தக் குடும்பத்தில் எல்லாரும் ஏதோ ஒரு துக்கத்தை மனதில் வைத்துக்கொண்டு அதை மறைத்து வாழ்ந்து வருகிறார்கள் என்று நினைத்து வருந்தியிருக்கிறேன். நல்லவேளை பத்தாவது படித்த பொழுது மோகமுள் கதையைப் படிக்கவில்லை என்று இப்பொழுது நினைக்கிறேன் ;).

ஆனால் இன்று "இதற்குதானா" என்று ஒரு கேள்வி, திஜா மூலமாய், யமுனா மூலமாய், மோகமுள் மூலமாய் என்னிடம் நேரடியாய்க் கேட்கப்பட்டதாக உணர்கிறேன். என்னை நானே கேட்டுக் கொள்கிறேன் "அதற்குத்தானா" உண்மையில் தெரியவில்லை. ஆனால் இனக்கவர்ச்சியெல்லாம் அங்கேதான் சென்று முடியும் இல்லையா? இதெல்லாம் கொஞ்சம் ஓவராகக் கூடயிருக்கலாம், நான் என்னுடன் பாபுவையும் அந்த ஆன்ட்டியுடன் யமுனாவையும் ஒப்பிட்டது. ஆனால் என்னைப் பொறுத்தவரை எல்லோருக்கும் இதுபோன்ற உணர்வுகள் வருமென்று தான் நினைக்கிறேன். பாலகுமாரன், அநிருத்த்ர பிரம்மராயர் நான் தான் என்று முடிவளர்த்து இருப்பதைப் போல, நான் தான் வந்தியத்தேவன் என்று குதிரையைத் தேடி அலையாமல் நிற்கும் வரை என் மனநிலை ஒரு சமானத்தில் இருப்பதாகவே உணர்கிறேன்.

PS: இனிமேல் என்னுடைய சில கதைகளைல் யமுனா என்ற கதாப்பாத்திரம் அதிகம் இடம்பெறலாம் யாருக்காவது பிரச்சனையிருந்தால் ஒருவரி எழுதிவிடுங்கள்.

mohandoss.i@gmail.com

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In சினிமா விமர்சனம்

என்னுடைய கதை ஹாலிவுட்டில்

உண்மையில் இந்தத் தலைப்பைப் பார்த்து நீங்கள் அதிர்ச்சியாகியிருந்தீர்கள் என்றால், நானும் அது போன்ற ஒரு சூழ்நிலைக்குத்தான் தள்ளப்பட்டேன் Deja vu படம் பார்த்த பொழுது. படம் ஒருவாறு இதைப் பற்றியதாகத்தான் இருக்கும் என்று நினைத்துச் சென்றிருந்தாலும் ஒருவாறு நான் உபயோகப்படுத்த நினைத்த கதை. தனித்தனியாக, பிக் பேங்ஸ், ஸ்டிரிங் தியரி, வார்ம் ஹோல் என்று அந்தக் கதையெழுத நிறைய படித்திருந்ததால் கொஞ்சம் போல் நிறைய விஷயங்கள் புரிந்தது. டாப் கன், எனிமி ஆப் த ஸ்டேட் என எனக்குப் பிடித்த பல படங்களில் இயக்குநர் டோனி ஸ்காட்.

543 மூன்று பேர் பயணமாகும், ஒரு பெரிய போட் இல்லை சிறிய கப்பல் உண்மையில் ஒரு Ferry. வெடித்துச் சிதறுவதில் தொடங்குகிறது இந்தப் படம். Bureau of Alcohol, Tobacco, Firearms and Explosives ல் இருந்து இதைப் பற்றி விசாரணை செய்யவரும் டென்ஸல் வாஷிங்டன். அதில் இருக்கும் ஒரு உடல் ஏற்கனவே அதாவது அந்த Ferry வெடிப்பதற்கு முன்பே கொல்லப்பட்டு ஆனால் உண்மையில் அந்த Ferry-ல் வெடித்திருந்தால் உடலுக்கு என்ன பாதிப்பு வருமோ அந்தப் பாதிப்பை ஏற்படுத்தி Ferry-ன் உள் வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்ததும் படம் விறுவிறுப்பாகிறது.

இந்த இடத்தில் தான் மக்கள் டைம் மெஷின் கான்சப்டை வைக்கிறார்கள், முந்தைய படங்களைப் போலில்லாமல் அதிக டெக்னிக்கல் வார்த்தைகள். பின்னொரு காலத்தில் கண்டறியப்படும் சாத்தியக்கூறுகளை மட்டும் வைத்து சாத்தியப்பட்டதாகக் காண்பிக்கிறார்கள். இதற்கு மேல் படம் எடுத்தவர்களுக்கே டைம் கான்சப்ட்டில் உள்ள பிரச்சனை நன்றாகத் தெரிகிறது. இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் கடேசியில் செத்துப்போன டென்ஸல் வாஷிங்டன் உயிருடன் வருவது. ஆனால் இதையெல்லாம் நான் தவறென்றும் கூறமுடியாது.

ஏனென்றால் இதுவரை கண்டறியப்படாத ஒரு விஷயம் கண்டறியப்பட்டால் என்னவாகும் என்பது யாருக்கும் தெரியாது அல்லவா. கொஞ்சம் புரிகிறது போல் சொல்லவேண்டுமானால், நீங்கள் டைம் மெஷினை உபயோகித்து பழங்காலத்திற்குப் போகிறீர்கள் என்றால் அங்கே செய்யப்பட்ட மாற்றம் எப்பொழுது நிகழ்காலத்தை அபெக்ட் செய்யும். உடனேயா இல்லை நடந்த வரலாறு அப்படியே இருக்க இன்னொரு புதிதான வரலாறு எழுதப்படுமா, சாப்ட்வேர் இண்டஸ்டிரியில் சாப்ட் டெலிட் என்றொரு விஷயம் உண்டு அதைப்போல்.

எதையும் டெலிட் செய்யாமல் இந்த நிமிடத்தில் இருந்து இது இல்லை, புதிதான ஒன்று தான் முன்பிருந்தது என்பதைப் போல் செய்யமுடியுமா? சாத்தியக்கூறுகள் உண்டா? தெரியவில்லை. ஆனால் அதைத்தான் முடியுமென்கிறார்கள் இந்தப்படத்தில். நிறைய விஷயங்கள் உழைத்திருக்கிறார்கள். டென்ஸல் முதன்முதலில் வீட்டிற்குப் போகும் பொழுது கையுறை அணிந்திருப்பார், படத்தின் வரிசைப் படி அவரிடம் பேசும் டிடக்டிவ் ஏன் கையுறை அணியாமல் போனாய் என்று கேட்பார் அதைப்போலவே, கொலைகாரனின் வீட்டை டென்ஸல் வாஷிங்டன் முதல் முறை அடையும் பொழுதே ஆம்புலன்ஸ் நிற்கும். இப்படி நீங்கள் டைம் மிஷின் துணை கொண்டு முன்காலத்திற்குச் சென்று திரும்பினால் நிகழ்காலம் மாற்றப்படும் என்று ஒவ்வொரு பகுதியிலும் நினைத்து நினைத்துச் செய்தவர்கள். டென்ஸல் செத்துப்போன பிறகு உயிரோடு ஒன்றும் நடந்தது தெரியாது போல் வருவது டைரக்டரின் குழுப்பம்.

ஒரே சமயத்திலேயே நிகழ்காலத்திலும் இருந்துகொண்டு கடந்தகாலத்தையும் பார்க்க முடிவது போல் டென்ஸல் செய்திருக்கும் காட்சிகள் கான்செப்ட் அளவில் அருமை. படத்திலும் நன்றாக வந்திருக்கிறது. கொஞ்சம் டைம் மெஷின், மற்றும் காலத்திற்கு முன்னர் செல்வது போன்றவற்றில் பழக்கம் உள்ளவர்கள் தங்கள் கான்செப்டை படத்தின் இயக்குநரின் கான்செப்ட்டுடன் ஒப்பிட்டுப்பார்க்க நிச்சயம் படத்திற்குச் செல்லலாம். இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கும் விதம் பிரமாதம் என்று தான் சொல்லவேண்டும் நிறைய உழைத்திருக்கிறார்கள்.

இன்னுமொறு டைம் மெஷின் பற்றிய கதையை எழுதவேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டார்கள். ஹிஹி.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In

சில விளக்கங்கள்

உண்மையில் செல்வநாயகியின் கடைசி பதிவு படிக்கும் பொழுதுதான் தெரிந்தது அவர் மனதளவில் என்னுடைய கதைகளாலோ, கதைத் தலைப்புக்களாலோ, பின்னூட்டங்களாலோ வருத்தப்பட்டிருக்கிறார் என்பது தெரிந்தது. சில தடவைகள் அவருடைய கருத்துக்களுக்கு எதிர்கருத்து வைக்கவேண்டுமே என்று கதையெழுதியிருக்கிறேன் உண்மை.

ஆனால் அவர் நினைப்பது போல் தெய்வநாயகி நிச்சயமாக அவரை வம்பிழுக்க வேண்டும் என்றோ மற்றும் இன்னபிற விஷயங்களை நினைத்தோ எழுதுப்படவில்லை. அந்தக் கதை இந்தப் பிரச்சனைகள் எல்லாம் எழுவதற்கு முன்பே எழுதப்பட்டது. அந்தப் பெயரும் ஒரு உண்மையான நபரின் பெயர் தான். என்னுடைய நண்பர்கள் சிலர் தேன்கூடு போட்டிக்கு அனுப்பும் முன்னரே அந்தக் கதையைப் படித்திருக்கலாம். மரத்தடியில் பயின்றதுக்கு பிறகு கதைகளை எழுதியதும் போடும் பழக்கம் கிடையாது. அதுவும் அந்தக் கதை இருபது தடவைகளுக்கு மேல் திருத்தி எழுதப்பட்ட ஒன்று.

நான் கதையெழுத சுஜாதாவைத் தான் குருவாகத் தீர்மானித்திருந்தேன். அதனால் சில நடைமுறையில் நடக்கும் விஷயங்களை, மாற்றி, என்னுடன் சேர்த்து கதையெழுதும் பொழுது அட்வாண்டேஜ்கள் என்னை அந்த வகையான எழுத்துடன் தொடரச் செய்தன.

உண்மையில் அந்தத் தண்ணிப்பார்ட்டி எல்லாம் உண்மையே, பேச்சுலர் ஆண்களிடம் கல்யாணத்தைப் பற்றியும், வரப்போகும் பெண்களைப் பற்றியதுமான சிந்தனைகள் பெரும்பாலும் ஓடிக்கொண்டேயிருக்கும். என்னிடமும் அப்படியே. கல்யாணம் ஆன ஆண்கள் என்னிடம் அவர்களுடைய கல்யாண வாழ்க்கையைப் பற்றி பேசுவார்கள்.

நான் பேச்சுப்போட்டியைப் பற்றிச் சொன்னது நிச்சயம் அவரைக் குறித்தல்ல, நானும் என் அக்காவும் உண்மையில் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும் பொழுது அக்கா சொன்ன விஷயம் அது. நான் அவளை பேசிப்பேசி ஜெயிப்பதாக நினைத்தவள் உனக்கும் பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் பெண்ணைத்தான் கட்டிவைப்பேன் என்று சொல்ல எழுதியது.

ஒற்றைப் பெண் விஷயமும் அப்படியே, எனது நெருங்கிய சொல்லப்போனால் ரொம்பவும் நெருங்கிய உறவினரொருவருக்கு அப்படிப்பட்ட பெண்ணைக் கல்யாணம் செய்துவைக்க அவர் ஒரு தண்ணிப் பார்ட்டியில் புலம்பியது தான் அந்த விஷயம்(செல்வநாயகியைப் பற்றி யாரிடமும் இதுவரை விசாரித்ததில்லை, அவர் நினைப்பது போல் வேறெந்த வெரிபிகேஷனும் இதைப் பற்றிச் செய்யவில்லை. சொல்லப்போனால் அவருடைய பதிவுகளில் பலவற்றைக் கூட இன்னும் நான் படித்திருக்கவில்லை என்பதே உண்மை.)

மற்றபடிக்கு அவர் சொன்ன சில கருத்துக்களை மறுத்து அதற்கு கதையெழுதினேன் என்பது உண்மை ஆனால் அவரை பர்ஸனலாக தாக்கி எழுத வேண்டுமென்று மனதால் கூட நினைக்கவில்லை. என்னை நன்கறிந்த நண்பர்களுக்குத் தெரியுமது. எங்கள் குடும்பம் முழுவதும், பேச்சுப் போட்டி, பட்டிமன்றம், நாடகம் போன்ற விஷயங்கள் இன்வால்வ் செய்யும் ஒன்று. அதனால் நான் என் குடும்பத்தில் நடந்த விஷயங்களைப் பற்றி எழுதியது அவருக்குத் தவறாகத் தன்னை சொல்லியதாக உணரலாம்.

மற்றபடிக்கு அவர் அப்படி நினைக்கும் படி இருந்தது முற்றிலுமாக தற்செயல் நடவடிக்கையே. அதற்காக அவர் மனம் வருந்துவாராயின் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

இதையெல்லாம் சொல்லிப் புரியவைக்கவேண்டும் என்பது இல்லை என்றாலும் விளக்க வேண்டியது என் கடமை செய்கிறேன் அவ்வளவே. வேறெதும் சொல்லத் தெரியவில்லை எனக்கு.

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In Only ஜல்லிஸ்

நான் வேலை பார்க்கிறேனா இல்லையா?

இதுதான் இப்ப தமிழ்மணத்தின் ரொம்ப முக்கியமான கேள்வியா உலவுதுன்னு சொன்னா அப்புறம் நான் தினம் தினம் பார்க்கும் என் ஸ்டாட் கவுண்டர் தப்பா சொல்லுதுன்னு அர்த்தம் ஆய்டும். அதனால் ஒருவாறு கேள்வியா இருக்கு.

இந்த வாரம் ஒரு ஐந்து திரைப்படங்களின் விமர்சனங்களைப் போடவேண்டும் என்று நினைத்திருந்தேன் அதற்காக போன லாங் வீக் எண்டிலேயே எழுதிவைக்கப்பட்டு ப்ளாக்கரில் காத்திருந்தன ஐந்து விமர்சனங்கள் நாளொன்றாக வெளியிடப்படுவதற்கு.

என் முதலாளிக்கு நான் நல்லவனாயிருக்கிறேனா என்று யாருக்கும் தெரியவேண்டிய அவசியம் இல்லை. அது எனக்கும் என் முதலாளிக்கும் தெரிந்தால் போதும். என் வேலையைப் பற்றி விளக்கி நான் ப்ளாக் முன்பே எழுதிவைத்திருந்ததைப் போன்ற என்னுடைய மூன்றாண்டு(மூன்றரையாண்டு) சாப்ட்வேர் உலகத்தில் உயிர்வாழ்வது எப்படி என்ற கண்டுபிடித்து வைத்திருப்பதை சாதாரணமாக வெளியில் சொல்லமுடியாது.

சிதம்பர ரகசியத்தைப் போன்றது அது. பல ஆயிரம் $$$$$ சம்மந்தப்பட்டது. எனவே என் வேலையை, என்னை, என் முதலாளியைப் பற்றிய உங்களின் கன்செர்ன்களை தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு மனதை உங்கள் பக்கமாக திருப்பிக்கொள்ளுங்கள். கடேசியில் ஒன்றே ஒன்று நான் இப்பொழுது பெஞ்சில் இல்லை.(போதுமா! இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?)

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In சினிமா விமர்சனம்

21 Grams

ஒரு கவித்துவமான தலைப்பைக் கொண்ட கவித்துவமான படம். சொல்லப்போனால் Babelனை எடுக்க இயக்குநர் உபயோகித்த அதே அணுகுமுறை(சொல்லப்போனால் தலைகீழாக வரும்.) Non-Linear, Tri Logic படத்திற்கான ஒரு அற்புதமான உதாரணம். Babel பார்த்துமுடித்ததும் எப்பொழுதும் போல் அந்தப் படத்தைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டதுதான் கிடைத்தது 21 Grams படம் பற்றிய குறிப்புகள்.

இதயம் பழுதடைந்த ஒரு கணித ஆசிரியர், அவரை பார்த்துக்கொள்ளும் முன்னாள் மனைவி. இந்நாள் காதலி - சொல்லப்போனால் அவர் இறக்கும் நிலையிலும் அவரின் மூலமாய் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் நிலையில் இருப்பவர் - இருவரும் சொல்லப்படாத(கதையில்) முன்னர் பிரியும் சூழ்நிலை வந்த பொழுது, தான் கர்ப்பமாகயிருந்ததால் ரிஸ்க்கான சந்தர்பத்திலும் கருகலைப்பு செய்துகொண்டவர்.

இரண்டாவது, ஒரு டிரக் அடிக்ட், மற்றும் அதிலிருந்து மீண்டு வருவதற்காக உதவும் அவருடைய கணவன் மற்றும் இருமகள்கள்.

மூன்றாவது, முன்னால் குற்றவாளி, ஏசு கிறிஸ்துவிடன் தன்னை ஒப்புமை கொடுத்துவிட்டு, தலையில் ஒரு முடி நகர்ந்தாலும் அதற்கு இறைவனே பொறுப்பு என்ற மனநிலையில் இருப்பவர். அதையே போதிப்பவர். அவருடைய மனைவி, குழந்தைகள்.

இப்படி முன்னுக்குப் பின் சம்மந்தமில்லாத மூன்று குடும்பங்களை, ஒரு ஆக்ஸ்டெண்ட் மூலமாய் சம்மந்தப்படுத்தி ஒரு அற்புதமானக் கதையைத் தந்திருக்கிறார் இயக்குநர். முன்பே சொன்னது போல் Non-Linear கதை, அதாவது வரிசைக்கிரமமாக வராது, நான் ப்ளாக்கில் எழுதுவதை முழுதும் படிக்கு அன்பர்களுக்கு ஒரு உதாரணம் தரவேண்டுமானால். என்னுடைய "இப்படியும் ஒரு தொடர்கதையை" Non-Linear கதையென்று சொல்லலாம்(ஜல்லி, ஆன் ஜல்லி, ஆன் ஜல்லி) உண்மையில் அப்படி வரவேண்டுமென்று நினைத்து உருவாக்கவில்லையென்றாலும் கதை அப்படித்தான் வந்துகொண்டிருக்கிறது.

இங்கே மனிதர்களின் மனநிலையை இயக்குநர் படம் பிடிப்பது தான் அருமையாகயிருக்கிறது.

1) இதய மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்டவர் - அந்த இதயம் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது என்று ஆராய்வது.
2) தன் குடும்பத்தில் இரண்டு மகள்கள், மற்றும் கணவன் ஆகியவற்றை இழந்தப் பெண். தன் கணவருடைய இதயத்தை நன்கொடையாகத் தருவது.
3) ஏதோ ஒரு விதத்தில் கில்டியாக நினைக்கும் ஆசிரியரின் முன்னால் மனைவி, அவருடைய குழந்தையை தன்மூலமாக பெற்றுக்கொள்ள முயல்வது.
4) திருந்திவிட்டார் என்பதால் தன்னால் ஆன உதவியை செய்துவரும் நண்பர், தன்னுடைய மேலதிகாரிகளின் கட்டளைப்படி வேலையை அவரிடம் இருந்துபரிப்பது பின்னர் இன்னொரு வேலைக்கு ஏற்பாடு செய்வது....

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் இந்தப் படத்தைப்பற்றி.

தேர்ந்த நடிகர்கள், Sean Penn, Naomi Watts, Benicio Del Toro. எழுதியது Guillermo Arriaga, இயக்கியது Alejandro González Iñárritu.

இதில் Benicio Del Toroக்கும் Naomi Wattsக்கும் ஆஸ்கர் நாமினேஷன் கிடைத்தது. ஒரு அறிமுகத்திற்காக மட்டுமே இந்த விமர்சனம், படத்தைப் பற்றி எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் உண்டு. நேரம் கிடைத்தால் இன்னொரு நாள்.

PS: The title of the movie comes from the work of Dr. Duncan MacDougall, who in the early 1900s sought to measure the weight purportedly lost by a human body when the soul departed the body upon death. MacDougall weighed dying patients in an attempt to prove that the soul was material and measurable. These experiments are widely considered to have had little if any scientific merit, and although MacDougall's results varied considerably from 21 grams, for some people this figure has become synonymous with the measure of a soul's mass.

Read More

Share Tweet Pin It +1

2 Comments

Popular Posts