In ஓவியம்

இன்னும் கொஞ்சம் ஓவியங்கள்

இதெல்லாம் ரொம்ப காலத்திற்கு முன்பு வரைந்தது பத்து வருஷமாவது இருக்கும். என்னுடைய பழைய வெப்சைட்டில் கிடைந்தன. எதற்கும் இருக்கட்டுமே என்று. இன்னும் சில பெண் ஓவியங்கள் உண்டு ஆனால் கொஞ்சம் போல் நன்றாகயிருக்காது. அதனால் அப்படியே தூங்குகின்றன.









Read More

Share Tweet Pin It +1

1 Comments

In ஓவியம்

எனது ஓவியங்கள்.

முக்கியமா ஒன்னு நான் ஓவியனெல்லாம் ஒன்னும் கிடையாது. சொல்லப்போனால் ஓவியம் வரையரதப்பத்தியும் ஒன்னும் தெரியாது. ம.செ ஓவியங்களைப்பார்த்து கத்துக்கிட்டதுதான். அதனால் ஓவியத்தில் தவறு இருந்தால் மன்னிச்சுறுங்க.

முன்பே ஒருமுறை தமிழ்மணத்தில் இணைவதற்கு முன் நான் வரைந்த படங்களை போட்டதாக ஞாபகம், ஆனாலும் அந்தப்படங்கள் நான் வரைந்ததுதானா என பலரும் சந்தேகம் எழுப்புவதால் அதன் சுருக்கப்பட்ட படங்களை போடுறேன். (சைஸ் கம்மிங்கோ).

நம்புக்கப்பா!!!







Read More

Share Tweet Pin It +1

15 Comments

In இப்படியும் ஒரு தொடர்கதை

நீ கட்டும் சேலை மடிப்பில நான் கசங்கிப்போனேன்டி

நாற்றத்தை உணரும் சக்தி போல் எனக்கு பிரச்சனைகளையும் உணரும் சக்தி வந்துவிட்டதாக நான் நினைக்கத் தொடங்கியதற்கு, அக்கா போன் செய்ததும் அவளால் வரப்போகும் பிரச்சனையை முன்கூட்டியே கண்டுபிடித்தது மட்டும் காரணம் கிடையாது. என்னை அவள் வீட்டிற்கு வந்து அவளை பிக்கப் செய்து கொள்ளச் சொல்லும் பொழுதே எனக்குத் தெரிந்துவிட்டிருந்தது இன்றைக்கு வீட்டில் புயல் கிளப்பப்போகிறாள் என்பது. ஆனால் எனக்குப் புரியாத ஒன்று அந்த விஷயத்தை யார் இவளுக்கு சொல்லியிருப்பார்கள் என்பதுதான்.

பிக்கப் செய்து கொண்டு வீட்டிற்கு வந்ததும், இவளைப் பார்த்து அம்மா அடைந்த அதே ஆச்சர்யத்தை அகிலாவை காட்டினாள். நான் கண்களாலேயே இதற்கெல்லாம் நீதான் காரணமா என்று கேட்க மறுத்தவளின் கண்கள் நம்பத்தான் சொல்லின என்னிடம். ஆனால் மறுக்கச்சொல்லியது அக்காவின் அடுத்தக் கேள்வி, இந்தக் கேள்வியைத் தான் கேட்கப்போகிறாள் என்று ஊகித்திருந்தாலும் கேட்கும் பட்சத்தில் யார்சொல்லியது என்ற துணைக்கேள்வி எழுந்ததை தவிர்க்க முடியவில்லை.

"டேய் நீ அமேரிக்காப் போறியா?"

நான் திரும்பி அகிலாவை என்னயிது என்பதைப் போல் பார்க்க எனக்குத் தெரியாது என சத்தியம் செய்தன அவள் கண்கள்.

"ஆமாம் போறேன் அதுக்கென்ன இப்ப?"

"இந்தத் தடவையும் இவளைக் கூட்டிக்கிட்டு போகலைதானே நீ."

இந்த முறை நான் அகிலாவைப் பார்க்கவில்லை, ஒருவாறு அவள் மனதிலும் இந்தக் கேள்வி ஓடிக்கொண்டுதான் இருக்கவேண்டும். அவள் கேட்கவில்லை இங்கே கேட்கப்படுகிறது. பதில் சொல்லவேண்டிய கடமையிருந்ததாலும் இவளுக்குச் சொன்னால் விஷயம் அகிலாவிற்கும் சொல்வதுபோலாகும் என்பதால் சொன்னேன்.

"இங்கப்பாரு, நான் ஊர் சுத்திப்பார்க்க அமேரிக்கா போலவில்லை, ப்ரொஜக்ட் ஊத்தி மூடிக்கிட்டிருக்கு வேற வழியில்லாமல் அங்கப்போறேன். சிகப்பில் இருக்கும் ஸ்டேட்டஸை பச்சையாக்கப் போகிறேன்.

அங்கே போனாலும் நான் எத்தனை மணிக்கு திரும்பிவருவேன்னு தெரியாது. இங்கயப் போலவே அங்கேயும் சனி, ஞாயிறு குப்பைக் கொட்ட வேண்டியிருக்கும். அதனால என்கூட வந்தா இவளுக்கு போரடிக்கும். எவ்வளவு நேரம் தான் இவளும் டீவியையே பார்த்துட்டு உட்கார்ந்திருப்பா. அதுமட்டுமில்லாம பேச்சுலர்னா பிரச்சனையே வேற, பேமிலியைக் கூட்டிட்டுப் போறதுன்னா பிரச்சனையே வேற. ஏகப்பட்ட செலவாகும்."

காரணங்களை அடுக்கிக்கொண்டே போனேன். அத்தனையையும் நிராகரித்தவளாய்,

"இல்லை நீ பொய் சொல்ற, அவளை அமேரிக்கா கூட்டிக்கொண்டு போவதற்கு ஏனோ பயப்படுற நீ. எனக்கு என்ன காரணம்னு தெரியாது. ஆனால் நீ பயப்படுறேன்னு தெரியும். எனக்குத் தெரியாது உன் மாமன், அவளை அமேரிக்கா கூட்டிக்கிட்டுப் போனா என்னன்ன பிரச்சனைவரும்னு சொன்னானா, இல்லை நீயே நினைச்சிக்கிட்டிருக்கிற விஷயங்களை மனசில வச்சிக்கிட்டு இவளை இங்கேயே கலட்டி விட்டுட்டுப்போறியா எனக்குத் தெரியாது. ஆனால் இது சரியில்லை, அதை மட்டும் நான் சொல்லிட்டேன்."

கடைசிவரை என்னுடைய காரணங்களை ஒப்புக்கொள்ளவேயில்லை, அம்மாவிடம் காப்பிவாங்கிக் குடித்துவிட்டு, என்னுடைய காரை அவளே டிரவ் பண்ணிக்கொள்கிறேன் என்று சொல்லி எடுத்துக் கொண்டு போனதும் வீடு ஏறியிறங்குவதற்கு ஆட்கள் இல்லாமல் போய்விட்ட நாளொன்றின் கடைசியில் அடுத்த நாளுக்காக காத்திருக்கும் லிப்டைப் போல் அமைதியாகயிருந்தது அடுத்தப் பிரச்சனையை நோக்கி. என்னுடைய பயமெல்லாம் இதுவரை இப்படிப்பட்ட ஒன்றை நினைத்து பார்த்திராத அகிலா இதைப்பற்றி என்ன நினைப்பாள் என்றுதான்.

இந்த எண்ணங்கள் எல்லாம் என் மனதில் இல்லையா என்றால் சொல்லமுடியவில்லை என்றுதான் பதில் வந்தது. உண்மையில் கல்யாணவயதில் இந்தக் கேள்விகள் இருந்ததுண்டு. ஆனால் அகிலாவுடனான திருமண வாழ்க்கை அந்த பழைய எண்ணங்களை பெட்ரோல் ஊற்றி எரித்திருந்தது. இப்படியாக ஏகப்பட்ட எண்ணங்கள் மனதை அலைக்கழிக்க யோசித்துக்கொண்டிருந்தவனுக்கு அகிலா அருகில் வந்ததே தெரியவில்லை. தோளைத் தொட்டுத்திருப்பியவள்.

"என்ன ஒரே யோசனை, எந்தப் பொய்யைச் சொன்னால் இவளை வாகாய் கழட்டிவிட்டுட்டுப் போகலாம்னு யோசனை பண்ணுறீங்களோ."

ஆனால் நான் உண்மையில் அதை நினைத்துக் கொண்டிருக்கவில்லை என்றாலும் அவள் பொய்யைப் பற்றிப் பேசியதும் சும்மாப் போட்டுப்பார்த்தேன் சில பொய்களை.

"இங்கப்பாரு அகிலா, உன்னை அமேரிக்கா கூட்டிட்டுப் போறதா பெரிய விஷயம். நாளைக்குச் சொன்னேன்னா உனக்கும் விசா ஏற்பாடு பண்ணிடுவாங்க. B1 தானே, ஆனால் நீ அங்கவந்தும் சேலையில்ல கட்டுவேன்னு ஒத்தக்காலில் நிப்ப?" உண்மையில் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு அதைப்பற்றித்தான் இத்தனை நேரமும் யோசித்ததாய் நம்பவைக்க என்னால் ஆன நடவடிக்கைகள் அத்தனையையும் செய்தேன்.

அகிலா ஏன் அந்த முடிவிற்கு வந்தாள் என்று தெரியாது ஆனால் அவள் சேலை மட்டும் தான் கட்டுவாள். எவ்வளவோ வற்புறுத்தியும் கூட நைட்டி போடமாட்டேன் என்று அடம்பிடித்தவள் அவள். சில தடவைகள் வற்புறுத்திய பொழுது, நான் ட்ரெஸ் பண்ணிக்கிறதில் நீங்க தலையிடாதீங்க என்று சொல்லியிருந்தாள். உண்மையில் அவளுடைய உடை விஷயத்தில் பெரும்பாலும் தலையிடுவதில்லை, உனக்குப் பிடித்திருந்தால் உடுத்திக்கொள் அவ்வளவுதான் என்வரையில்.

"நான் அப்பவே நினைச்சேன் இப்படி உப்புச்சப்பு இல்லாத காரணத்தையெல்லாம் சொல்லி என்னை உங்கக்கூட வரவிடாம பண்ணிடுவீங்கன்னு?"

ஆக என்னுடன் அவள் அமேரிக்கா வரும் முடிவு எடுக்கப்பட்டுவிட்டுருந்தது. இதற்கு மேலேயும் நான் எதையாவது காரணம் சொல்லிக் கொண்டிருந்தால், உண்மையாக அவளாய் யோசிக்காவிட்டாலும், அக்கா சொல்லிக்கொடுத்திருந்தது நினைவில் வரலாம் என்பதால். கொஞ்சமாக அகிலாவை சேலையிலிருந்தாவது விடுவிக்கலாம் என்று நினைத்து.

"சரி நீ இப்பச் சொல்லு, சேலை தவிர ஏதாவது மாட்ர்ன் டிரெஸ் போட்டுக்கொள்ள சம்மதம் என்று. நான் உன்னைக் கூட்டிக்கொண்டு போகிறேன்."

அவளுக்கும் தெரிந்திருக்க வேண்டும் பிரச்சனை சேலையில்லை என்று, ஆனாலும் நாங்கள் வார்த்தைகளால் விளையாடிக்கொண்டிருந்தோம்.

"தெரியுமே நீங்க அமேரிக்காவைச் சாக்கா வைச்சு, என்னை டூ பீஸ் போட வைக்கலாம் என்று பாக்குறீங்க. ஆனா அதெல்லாம் நடக்காது."

உண்மையில் கல்யாணம் ஆவதற்கு முன் என் பெண்டாட்டியை எந்தெந்த உடைகளில் பார்க்கவேண்டும் என்ற கனவுகள் இருந்ததுண்டு ஆனால் அவையெதிலும் அவள் சொன்ன உடை கிடையாது. ஷேக்ஸ்பியர்ஸ் இன் லவ் படத்தில் அந்தக் கதாநாயகி அணிந்திருக்கும் பாரம்பரிய இங்கிலாந்து உடை பிடிக்கும் எனக்கு, அதே போல் த லாஸ்ட் சாமுராய் படத்தில் சாமுராயின் தங்கையான ஜப்பானியப் பெண் அணிந்திருக்கும் உடை, வெள்ளைப் பனியை ஆடையாக அணிந்திருப்பதைப் போன்ற மேற்கத்தியப் பெண்மக்களின் கல்யாண உடைகூட நிறையப் பிடிக்கும். கடேசியாக எப்பொழுதாவது அகிலா அணியும் மடிசார். இவையெல்லாம் அகிலாவிற்கும் தெரிந்திருக்கும்.

"எனக்கு ஏம்மா உன்னை டூ பீஸில் பார்க்கணும் நான் தான் பீஸே இல்லாமல் பார்த்திருக்கேனே..." சொல்ல தலையில் கொட்டியவள்.

"சரி கொஞ்சம் சீரியஸாய் பேசுவோமா, உங்கக்கா சொன்னதுதான் பிரச்சனையா? நீங்க பயப்படுறீங்களா நான் அமேரிக்கா போனா மாறிருவேன்னு. இவ்வளவுதானா இத்தனை வருடங்களில் நீங்கள் என்னை புரிந்துகொண்டது.

சரி மாறிருறேன்னே வைச்சுக்கோங்களேன். அதுல என்ன தப்பு, புது ஊரு, புது கலாச்சாரம், புது மக்கள்ன்னு வாழ்ந்தா மென்ட்டாலிட்டி மாறித்தானே போகும். என்ன உங்களுக்கு என்னையக் கூட்டிக்கொண்டு போறதுக்கு முன்னாடி உங்க அம்மாவைக் கூட்டிட்டுப் போகணும், அப்படியில்லாட்டி இரண்டு பேரையும் ஒரே சமயத்தில் அது உங்க பட்ஜெட்டுக்கு சரிவராது அவ்வளவுதானே. தாராளமாய் உங்கம்மாவைக் கூட்டிக்கிட்டு போங்க.

இருபத்தைந்து வருடங்களாய் உங்களை வளர்த்தவங்க அவங்கதானே, அதுக்கப்புறம் ஒரு பத்துவருஷம். இல்லை அதுவும் தான் சொல்லமுடியாதே ஒன்பது வருஷம் தானே உங்களை எனக்குத் தெரியும். இடையில் வந்த எனக்கு அவங்களை விட அதிக உரிமையிருக்க முடியாது தான்."

உண்மையில் அக்கா சொன்ன காரணங்களைவிடவும், அகிலா சொன்னதுதான் சரியென்று மனதிற்குத் தோன்றியது. சரி பிரச்சனையை ஆரம்பித்து வைத்தாகிவிட்டது பேசிமுடித்துவிடலாம் என்று நினைத்து அவளை அருகில் இழுத்து அமர்த்தினேன். ஆரம்பத்தில் நான் கல்யாணம் செய்து கொள்ள பயந்தது எங்கே எனது மனைவி என்னைப் புரிந்து கொள்ளமுடியாதவளாய் போய்விடுவாளோ என்றுதான்.

எனக்கும் அக்காவிற்கும் பல விவாதங்கள் பறக்கும், நான் பள்ளியிறுதி கூட தாண்டியிறாத, கிராமத்துப் பெண்ணைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொல்ல, ஏன் அப்படி நினைக்கிறாய் நகரத்துப் பெண்கள் சரியானவர்களாகவும் கிராமத்துப் பெண்கள் தவறானவர்களாகவும் இருந்துவிட்டால் என்று விவாதிப்பாள். நல்லவேளை அவள் சொன்னது போல் படித்தப்பெண்ணை கல்யாணம் செய்து கொண்டிருந்தேன், அது இப்பொழுது உதவுவதாகப் பட்டது. ஆனால் கிராமத்துப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளாததால் அக்காவின் கருத்தை தவறென்று ப்ரூப் பண்ணமுடிந்ததில்லை.

"உண்மைதான் அகிலா, ஆரம்பத்திலிருந்தே மனதில் ஓடிக்கொண்டிருந்த விஷயம் இது. இந்த பதினைந்தாண்டு சாப்ட்வேர் வாழ்க்கையில் பல தடவைகள் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்தாலும், அம்மாவை அழைத்துச் செல்லும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

இன்று கூட்டிட்டுப்போவோம், நாளைக்குக் கூட்டிக்கொண்டு போவோம் என்று நினைத்து தட்டிக்கழிந்து கொண்டே வந்தது. இவையனைத்தும் என் மனதில் அடிஆழத்தில் மறைக்கப்பட்ட உண்மைகளாகவே நான் நினைத்திருந்தேன். அம்மாவிற்கும் இதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை, அது உனக்கே தெரியும். ஆனால் இது நிச்சமயமான காரணமாகயிருக்கும் என்று நீ சொன்னதற்கு பிறகுதான் எனக்கேத் தோன்றுகிறது.

ஆனாலும் பரவாயில்லை, அம்மா ஒன்றும் தவறாக நினைத்துக் கொள்ளமாட்டார்கள் நீ தயாராயிரு நான் உன் விசாவிற்கும் சேர்த்து ஏற்பாடு செய்கிறேன்."

அதுவரை நான் சொல்வதையே மிகக்கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்த அகிலா.

"எனக்கு இதுவும் தெரியும். எனக்காகவோ இல்லை உங்களுக்காகவோ நீங்கள் கூட்டிக்கொண்டு போகவில்லையென்றாலும். மோகனா அக்காவிற்காக நீங்கள் என்னைக் கூட்டிக்கொண்டு போவீர்கள் என்று, ஆனால் அது தேவையில்லை. நான் வெயிட் பண்றேன், இன்னும் நிறைய நாட்கள் அங்கே தங்கியிருக்கும் அளவிற்கு ஒரு வாய்ப்பு வந்ததும் நானே புடுங்கி எடுத்து உங்களைக் கூட்டிப்போக வைக்கிறேன்.

நான் உங்கக்கிட்ட சொல்லவிரும்பியது, விரும்புவது, விரும்பப்போவதெல்லாம் ஒன்றே ஒன்றைத்தான், உங்கள் அக்காவைப் போல, அம்மாவைப் போல நானும் உங்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். முழுசா புரிஞ்சிக்கிட்டேன்னு சொல்லமாட்டேன். ஆனால் வெளியில் ஒன்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே உங்கள் உள்மனதில் என்ன ஓடுகிறது என்பதை உங்களை நன்கறிந்த மற்றவர்களைப் போல நானும் அறிந்து கொள்ள நிறைய முயற்சி செய்கிறேன் அவ்வளவுதான்."

லெக்சர் அடிக்கத்தொடங்கினாள், இது சிலசமயம் அகிலாவிடம் எனக்குப் பிடிக்காத ஒரு விஷயம். புனிதபிம்பமாகத் தன்னைக் காண்பித்துக் கொள்வது. ஆனால் இந்தச் சூழ்நிலையில் இன்னொரு பிரச்சனையை நான் கிளப்ப நினைக்காததால்.

"இங்கப்பாரு அகிலா இப்படி நிமிஷத்துக்கு ஒரு பேச்சு பேசிக்கொண்டிருந்தால் என்ன சொல்ல, அதெல்லாம் முடியாது நீ வந்துதான் ஆகணும். நீ என்கூட வந்தால் அமேரிக்காவில் டிவியில் பே சானலுக்கு நாளொரு மேனிக்கு டாலர் அழவேண்டியிருக்காதேன்னு யோச்சிச்சேன். நீயிருக்கிறப்ப டீவியில் தெரிகிற பொம்மை எதுக்குச் சொல்லு. அதனால நீ வந்துதான் ஆகணும்."

தன்னை என்னிடம் இருந்து விலக்கிக்கொண்டவள், இது திருந்தாத கேசு என்று சொல்லிக்கொண்டு, தலையணையையும் பெட்ஷீட்டையும் எடுத்துக்கொண்டு அம்மாவின் அறைக்குச் சென்றாள். கனவில் நான் அமேரிக்காவில் பின்புறம் நீலக்கலர் பூக்களின் மத்தியில் ஜீன்ஸ் டீஷர்ட்டுடனும், என் மனைவி சேலையிலும் "நீ கட்டும் சேலை மடிப்பில நான் கசங்கிப்போனேண்டி" பாட்டிற்கு டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தோம்.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In பெங்களூர்

பெங்களூரில் இன்று

பெங்களூரில் வியாழக்கிழமை பந்த் அறிவித்திருக்கிறார்கள். பெரும்பாலும் எல்லாக் கம்பெனிகளும் பள்ளிக்கூடங்களும் விடுமுறை அறிவிக்கும் என்று நினைக்கிறேன்.

கட்டிடங்கள் ஏற்கனவே மஞ்சள்/சிகப்பு கொடிகளை கட்டிக்கொண்டு நிற்கின்றன.

தமிழ்சானல்கள் கருப்படிக்கப்பட்டு நாளாகிறது. போக்குவரத்து தமிழ்நாட்டிற்கும் பெங்களூருக்கும் இடையில் இல்லை. அவசர ஆத்திரம் என்றால் கூட பெங்களூரில் இருந்து கேரளாவோ, ஹைதராபாத்தோ சென்றுதான் தமிழ்நாடு வரமுடியும் என்று நினைக்கிறேன். பிளைட் ஒன்று உண்டு பெங்களூரையும் திருச்சியை கனெக்ட் செய்ய, கிங் பிஷர். மொத்தமாக பிசியாக இருக்குமென்று நினைக்கிறேன்.

வாழ்க இந்தியக் குடியுரிமை.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In Only ஜல்லிஸ்

அய்யா லீவு

Hello,

As many of you are aware, it is anticipated that there may be some violence and disruptions on the streets today based on the result of the Cauvery Water Disputes Tribunal. Thousands have police have been drafted in to help enforce law and order and hopefully maintain peace on the streets.

Some of the I.T. companies have closed and are opting to work on Saturday instead.

We have been made aware informally that some of the roads are becoming blocked.

For your own safety and protection you are free to finish up work now. I will keep you posted on any further updates and hope you all get home safely

Kind Regards
*********

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சுய சொறிதல் பெங்களூர்

என்ன நடக்கும் இன்று பெங்களூரில்

நாளைக்கு(நேற்றே எழுதியது) காவிரி பற்றிய தீர்ப்பு வெளிவரயிருக்கிறது. இந்தத் தீர்ப்பின் நாள் குறித்தவுடனேயே எங்கள் வீட்டிலிருந்து போன் மேல் போன் வந்துகொண்டிருக்கிறது பத்திரமாகயிருங்கள் என்று. ஏனென்றால் நாளை என்ன நடக்கும் என்று தெரியாது. பஸ்கர் எரிக்கப்படலாம், ஆட்டோக்கள் கொழுத்தப்படலாம். கூடவே சில மனிதர்களும், அம்மா எப்பொழுது சொல்வார்கள் ரொம்பவும் ஆப்டிமிஸ்டிக்கா இருக்காதே என்று எனக்குத் தெரியவில்லை நான் பெங்களூரைப் பார்த்து பயப்படுவதை பார்த்தால் நானெல்லாம் ஆப்டிமிஸ்டிக்கா என்ற டவுட்டே வருகிறது. நான் பெஸிமிஸ்டிக்கோ என்ற சந்தேகமும் சேர்ந்தே.

பெங்களூர் மைசூரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அதெல்லாம் உதவாது சும்மா பேருக்குத் தான். பலரும் ராஜ்குமார் மரணத்திற்குப் பிறகு நாளை பெரிய பிரச்சனை வரலாம் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டொரு நாளைக்குத் தமிழில் பேசமாட்டேன்(அப்படியே ரொம்பத் தமிழில் பேசிருவனோன்னு கேட்டீங்கன்னா, ஒரு பதிவரிடம் சமீபத்திய பிரச்சனைப் பற்றி தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த பொழுது. பதிவர் பயந்துவிட்டார் ஆஹா இவன் இப்படியே போர் அடித்து இன்னைக்கு முழுக்கவே பேசியே தீர்த்துடுவானோன்னு. அரைமணிநேரம் பேசியிருப்போம். பாவம் அந்தப்பக்கத்து நபரின் முகபாவங்களை கற்பனை செய்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்.) ஆனால் பெங்களூரில் போலீஸ்காரர்களிடமோ, கடைக்காரர்களிடமோ பெரும்பாலும் தமிழில் பேசுவது கிடையாது. முடிந்தவரை இந்தி, இல்லாவிட்டால் ஆங்கிலம்.

அப்படியும் முடியலைன்னா, "மாடி" "சொல்ப" இப்படி கன்னட வார்த்தைகள் இணைக்கப்பட்ட தமிழ். தெரியலை நாளைக்கு என்ன நடக்கும் என்று.

JUDGEMENT: KAVERI WATER DISPUTE TRIBUNAL

Dear ,

After nearly 17 years of protracted proceedings, a final award of the Cauvery Water Disputes Tribunal will be pronounced on 5 Feb 07. Reactions to the judgment are likely by both parties and protests/agitations in Karnataka and TN cannot be ruled out. Police authorities across both states are seized of the threat and have planned adequate deployment to monitor and handle the law and order situation. Find below a set of suggestions to ensure your personal safety:

· Avoid use of KA & TN registered vehicles (personal and public) in Tamil Nadu & Karnataka respectively, during the week 5th to 10th Feb.

· Avoid inter-state road/rail travel for the same duration.

· Keep abreast with local situation while commuting and avoid trouble spots.

· Avoid communal gatherings & crowded places including cinema theatres.

· Avoid disclosing your ethnic identity.

· Employees who are residing in sensitive areas like Ulsoor, Indiranagar, Magadi Road, Rajaji Nagar, Srirampuram, Basaveshwar Nagar, Kamakshipalya, Kurubarahalli, Mysore Road, J. J. Nagar, Kalasipalyam, Azad Nagar, Byatarayanapura, Madiwala, Tilak Nagar, Attibele, Sarjapur and Hosur Road.

The possibility of disruption on 6 Feb 2007 cannot be ruled out.

Please pass on any related information to your Facilities In charge.

இப்படி ஏகப்பட்ட பார்வேர்ட் மெஸேஜ் வேறு. ;)

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In புத்தகங்கள்

மோகமுள்

"இதற்குத்தானே", "இதற்குத்தானே" என்று இரண்டு நாட்களாக மனம் அலைபாய்கிறது, காரணம் உண்டு. பாலகுமாரன் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" என்று எழுதியிருந்த பொழுது அதனால்தால் பிரபலமானது இந்த டெர்ம் என்று நினைத்திருந்தேன். ஆனால் "மோகமுள்" படித்ததும் இந்த ஒரு வார்த்தை தான் மனதில் ஒட்டிக்கொண்டு நகரவே மாட்டேன் என்கிறது. நான் முன்பே மரப்பசு படித்திருக்கிறேன், மோகமுள் பார்த்திருக்கிறேன்.

நான் படிக்காமல் போனதற்கு பல காரணங்கள், முதலில் புத்தகத்தின் தலைப்பு இந்தத் தலைப்புள்ள புத்தகத்தை ஒரு பதினாறு வயது பையனோ இல்லை பதினெட்டு வயது பையனோ படித்திருந்தால் அதை ஒப்புக்கொள்ளக்கூடிய சமூகத்தில் நான் வளரவில்லை, அதுமட்டுமில்லாமல் மோகமுள் படத்தை ஒரு பிட்டுப் படம் போல் வியய்டீவி இரவில் போடுவதால் பலருக்கும் அதைப் பற்றி ஒரு "உவ்வே" படிக்காமல், தெரியாமல், என்னவென்றே உணராமல். என் வீட்டில் படித்திருந்தால் ஒன்றும் சொல்லியிருக்க மாட்டார்கள் தான். கடல்புறாவை, யவனராணியை, இன்னும் பல ஸிட்னி ஷெல்டன் நாவல்களையே நான் படிப்பதைத் தடுக்காதவர்கள் மோகமுள்ளைத் தடுத்திருக்க மாட்டார்கள் தான். என்னவோ என்னால் முடிந்திருக்கவில்லை.

இந்தப் புத்தகக் கண்காட்சியின் பொழுது மரப்பசுவுடன்(முன்பே சொல்லியிருந்தது போல்) மோகமுள்ளையும் வாங்கினேன். கிழக்கு, உயிர்மை, காலச்சுவடு பதிப்பக புத்தகங்களையே இப்பொழுது அதிகம் வாங்குவதால் புக் குவாலிட்டி மனதிலேயே நின்று கொண்டிருந்தது மோகமுள்ளும் மரப்பசுவும் வடிவமைப்பிலாவது மாறியிருக்கும் என்று, செம்பதிப்பென்று எழுதியிருந்தது நினைவில் வந்தது. தேவையில்லாத இடங்களில் எல்லாம் அப்பாஸ்டெப்பி, உரைநடையில்லாத இடங்களில் எல்லாம் ஆரம்பித்து விட்டு பின்னர் விட்டுர்கிறார்கள். நிறைய இடங்களில் அவருடய் கற்பனை வளம் ஒற்றை அப்பாஸ்டெப்பியுடன் நிற்கிறது.



படம் பார்த்ததால் ஒரு விஷயம், பாபுவாக நடித்திருந்தவரை பாபுவாகவும், யமுனாவாக நடித்திருந்தவரை யமுனாவாகவும் என்னால் ஒப்புக்கொள்ளமுடிந்திருந்தது. அதுவும் பாபு விஷயத்தில் தான் கொஞ்சம் உதைத்தது. மற்ற விஷயத்தில்(யமுனா) அப்படிச் சொல்லமுடியாது, நான் அந்த நடிகை நடித்த மற்ற படங்கள் பார்க்காதது காரணமாய் இருக்கலாம். அந்தப் பொண்ணு வேறுபடம் நடித்து நான் பார்த்திருந்தால் எனக்கு உவ்வே என்றுதான் வந்திருக்கும்.(ஹிஹி, இதைத்தான் மெலோட்டிராமா பிடிக்காமல், ஆனால் மெலோட்டிராமாவில் தங்களுடைய சோகத்தை, பிரச்சனைகளைக் கழுவிக் கொள்கிறவர்கள் என்று ஆதவன் 'என் பெயர் ராமசேஷனில்' சொல்வார்.)

மற்றபடிக்கு என்னால் ராஜமாக விவேக்கையோ, ரங்கண்ணாவாக நெடுமுடிவேணுவையோ நினைக்கமுடியவில்லை, முதலாவதற்கு காரணம் சொல்லவேண்டிய அவசியம் மோகமுள் படித்து படம் பார்த்தவர்களுக்குத் இல்லையென்பது தெரிந்திருக்கும் ஆனால் இரண்டாவதற்கு எனக்கே காரணம் தெரியவில்லை.

சரி கதைக்கு,

உண்மையில் ஆரம்பம் படித்துக்கொண்டிருந்த பொழுது நினைத்தேன் சரி அந்த பழைய மோகன்தாஸ் கிடையாது ஒன்றரை மணிநேரம்(அதுவே இப்பல்லாம் அதிகம்) படித்துவிட்டு வைத்துவிடுவேன் என்று. ஆனால் புத்தகத்தை வைக்கவே முடியவில்லை, இன்னொருமுறை என் தலையில் தட்டப்பட்டுவிட்டது உனக்கு இன்னும் பொதுபுத்து போகவில்லை என்று. ஆனால் திஜாவின் இந்தப் புத்தகத்தை பொதுபுத்தியில் சேர்க்கலாமா என்று. ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன் கேட்டிருந்தீர்கள் என்றால் இல்லையென்றுதான் சொல்லியிருப்பேன். ஆனால் இது பொதுபுத்திக் கதை தான். தன்னைவிட பத்துவயது பெண்ணைக் கலியாணம்(???) செய்து கொள்வதை இல்லை சேர்ந்து வாழ்வதை, இன்றைய நாளில் கூட சர்வ சாதாரணமாகப் போய்விடாத ஒன்றை அந்தக் காலத்தில் சொல்லமுயன்றதால் மட்டும் பொதுபுத்தி நாவல் இல்லையென்று சொல்லமுடியாது.

கதை படிக்கப் படிக்க, நான் அதனுடைய முடிவைப் பற்றிய எண்ணமே மனதில் ஓடிக்கொண்டிருந்தது எனக்கு படம் பார்த்து ஒருவாறு அதன் முடிவு தெரியும் அதனால் அதை தியாவின் வார்த்தை யாலத்தில் படித்துக்கொண்டிருந்தேன் அவ்வளவுதான். அதுவும் பாபு மெட்ராஸ் வந்ததும் அந்தப் பெண்ணைப் பார்த்ததும் மனசெல்லாம்(மூளை நியூரான் செல்கள் ???) கல்லாகிவிட்டதைப் போன்ற உணர்வு. எனக்குத் தெரிந்த மோகமுள் படத்தில் அர்ச்சனா யோக்லேக்கர் "இதற்குத்தானே" என்று கேட்டுவிட்டு போய்விடுவதாகத்தான் நான் உணர்ந்திருந்தேன்(படம் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டுருக்கிறது - நினைவில்லை - தவறிருந்தால் திருத்தலாம்). கதையில் முடிவிற்கு இருநூறு பக்கங்களுக்கு முன்பே இந்த முடிவைப் பற்றிய எண்ணங்கள் ஓடத்தொடங்கின.

எனக்கு சமீபத்தில் பார்த்த 'தேயா வு' படம் தான் நினைவில் வந்தது டென்சல் வாஷிங்டன் ஒரே சமயத்தில் கடந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் இருப்பார் நானும் அதே நிலையில், முடிவு தெரிந்த பிறகும் நிகழ்காலத்தில் கடந்தகாலத்தில் நடந்ததைப் பற்றி படித்த உணர்வு. உண்மையில் படத்தில் காண்பித்தது போலில்லாமல் ஹாப்பி எண்டிங். என்னைப் பொறுத்தவரை. அதுவும் கடைசியில் பாபுவும் யமுனாவும் பேசுவது ஒரு காலத்தில் வந்தியத்தேவனும்-குந்தவையும் பேசும் பொன்னியின் செல்வன் வசனங்களைப் போல் உற்சாகப்படுத்தியது. படித்துமுடித்துவிட்டு மணியைப் பார்த்தால் மணி ஆறரை. சாயங்காலம் ஒரு ஒன்பதரை பத்திற்கு எடுத்து வைத்திருப்பேன்.சுஜாதா அளவிற்கு fast reading இல்லையென்றாலும் நானும் fast reader தான்(இது சும்மானாச்சுக்கும்) ஆனால் பிரச்சனை அது இல்லை. அடுத்த நாள் விடுமுறை கிடையாது. இடையில் நான்கைந்து முறை டீ குடித்தது, மற்றும் இன்னபிற தவிர்த்து தூக்கம் என்பது பக்கத்தில் வரவில்லை. நான் பயந்தது அடுத்த நாள் வேலையைப் பற்றி.

நீ மூன்றாண்டு எக்ஸ்பீரியன்ஸாயிரு, எத்தனையோ சர்டிபிகேஷன்ஸ் பண்ணியிரு, கொடுத்த வேலையை அவர்கள் நினைத்ததற்கு முன்பேகூட எத்தனையோ முறை செய்திரு வேஸ்ட். கடந்த காலம் சாப்ட்வேர் இண்டஸ்டிரியில் வேஸ்ட், நீங்கள் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் உங்களைப் ப்ரூப் பண்ணவேண்டும். போட்டிகள் ஏராளம், வாய்ப்புகள் ஏராளம், பொறாமைகள் ஏராளம், பாலிடிக்ஸ் ஏராளம் செட்டிலாகி உட்கார்ந்துவிட்டீர்கள் என்றால் உங்கள் தலையில் கால்வைத்து போய்விடுவதற்காக காத்திருப்பவர்கள் ஆயிரம். ஆனால் உண்மையில் ஒரு ஹாப்பி எண்டிங் என்னால் ஆறரை மணிக்குப் பிறகு கிடைத்த இரண்டரை மணிநேரத் தூக்கத்தில் அடுத்த நாள் வேலையை நான் நினைத்ததை விடவும் சீக்கிரமாக செய்துவிட்டு இன்னொருமுறை மீள்வாசிப்பு செய்யவைத்தது.

என்னுடன் ஒரே அறையில் இருந்த ப்ளாக்கர் ஞானசேகருக்குத் தெரிந்திருக்கும், இரவு எத்தனை மணிக்கு ஆபிஸில் வருகிறேன் என்ற கணக்கு இல்லாமல் இருந்த காலத்தில் எல்லாம் 'என் பெயர் ராமசேஷன்' இரண்டு பக்கமாவது படித்திருக்கிறேன் தினமும். அவன் கூட கேட்டிருக்கிறான் அந்தப் புத்தகத்தைத் தான் படித்துவிட்டீர்களே என்று. ஆனால் படித்தப் புத்தகத்தின் படித்தப் பக்கங்களில் மீண்டும் மூழ்குவது எனக்கு ரொம்பப் பிடிக்கும். பல புத்தகங்கள் திரும்பத் திரும்ப படித்திருக்கிறேன் உபபாண்டவம் கைவசம் இருந்த நாட்களில் கூட அப்படித்தான்.

ஒவ்வொரு கதையிலும் நாம் யாரோ ஒருவராகத் தன்னை அடையாளம் செய்து கொண்டு படிக்கத் தொடங்குறோம் இது இன்றைய பின்நவீனத்துவ நாவல்களுக்கு மட்டும் பொறுந்தாது, வேண்டுமானால் என்வரையில். ராமசேஷனும் சரி, பாபுவும் சரி கதையில் பல சமயங்களில் என்னுடன் நிறையத் தொடர்புடையவர்களாகப் பட்டது. அதுவும் பாபு - யமுனா. நான் முன்பொருமுறை கதையில் ஒரு வார்த்தை எழுதியிருந்தேன் நினைவில் இருக்கிறது.

"உண்மையைச் சொல்லணும்னா, இந்தக் கேள்விக்கு பதிலளிக்க சில விளக்கம் வேணும், காதலிச்சீங்களான்னு கேட்டா ரொம்ப பொதுவான விஷயம். சின்ன வயசிலேர்ந்தே எனக்கு நிறைய இனக் கவர்ச்சி இருந்திருக்குது, எட்டாவது படிக்கும் பொழுது பக்கத்தில் பரிட்சை எழுதிய ஆறாவது படிக்கிற பொண்ணு, முதல் முதல்ல பாப் அடிச்சு நான் பாத்த எதிர்த்த மாடிவீட்டுப்பொண்ணு, அந்த பொண்ணு வீட்டுக்கு எதிர் வீட்டில் இருந்த, உன்னை மாதிரியே ஓவியமா தெரிந்த, ஒருகை இல்லாத ஆன்ட்டி, பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சப்ப கூட வாலிபால் விளையாண்ட பொண்ணு, இப்படி பல பெண்ணுங்களை எனக்கு பிடிச்சிருந்தது; இன்னிக்கு வரைக்கும் பிடிக்கும்; ஆனா ஒன்னு ரெண்டு வார்த்தைகளைத் தவிர அதிகமா இவங்க யார்கிட்டையுமே நான் பேசினது கிடையாது. இல்லை, நான் உண்மையிலேயே யாரையாவது காதலிச்சேனான்னு கேட்டீன்னா இல்லைன்னுதான் சொல்வேன்; அதுக்கும் என்னோட தாழ்வு மனப்பான்மைதான் காரணம்னு வைச்சுக்கோயேன்."

இதுவருவது முதலிரவு சிறுகதையில். அந்த ஒரு கையில்லாத ஆன்ட்டி அப்படியே யமுனா என்று வைத்துக்கொள்ளலாம், யமுனாவிற்கு ஒரு பிரச்சனை என்றால் இவங்களுக்கு ஒரு பிரச்சனை ஒரு கை கிடையாது. அந்தக் காலத்தில் நினைத்திருக்கிறேன் பெரியவனானதும் இவங்களைக் கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என்று. நான் என்ன அப்பொழுது பத்தாவது படித்துக்கொண்டிருந்தால் ஆச்சர்யம். அவர்களுடன் பேசுவதற்காக, நின்று அவர்கள் வருவதைப் பார்ப்பதற்காக ஆயிரம் ப்ளான் போட்டிருக்கிறேன். சின்னப் பிள்ளை ப்ளான் இல்லையா எல்லாமே பெயிலியர் தான். ஆனால் ஒன்றிரண்டு தடவை பேசியிருக்கிறேன் அவ்வளவே. அவங்க இருக்கும் பொழுதே அவங்க தங்கச்சிக்கு கல்யாணம் ஆனது நினைவில் இருக்கு.

அந்தக் குடும்பத்தில் எல்லாரும் ஏதோ ஒரு துக்கத்தை மனதில் வைத்துக்கொண்டு அதை மறைத்து வாழ்ந்து வருகிறார்கள் என்று நினைத்து வருந்தியிருக்கிறேன். நல்லவேளை பத்தாவது படித்த பொழுது மோகமுள் கதையைப் படிக்கவில்லை என்று இப்பொழுது நினைக்கிறேன் ;).

ஆனால் இன்று "இதற்குதானா" என்று ஒரு கேள்வி, திஜா மூலமாய், யமுனா மூலமாய், மோகமுள் மூலமாய் என்னிடம் நேரடியாய்க் கேட்கப்பட்டதாக உணர்கிறேன். என்னை நானே கேட்டுக் கொள்கிறேன் "அதற்குத்தானா" உண்மையில் தெரியவில்லை. ஆனால் இனக்கவர்ச்சியெல்லாம் அங்கேதான் சென்று முடியும் இல்லையா? இதெல்லாம் கொஞ்சம் ஓவராகக் கூடயிருக்கலாம், நான் என்னுடன் பாபுவையும் அந்த ஆன்ட்டியுடன் யமுனாவையும் ஒப்பிட்டது. ஆனால் என்னைப் பொறுத்தவரை எல்லோருக்கும் இதுபோன்ற உணர்வுகள் வருமென்று தான் நினைக்கிறேன். பாலகுமாரன், அநிருத்த்ர பிரம்மராயர் நான் தான் என்று முடிவளர்த்து இருப்பதைப் போல, நான் தான் வந்தியத்தேவன் என்று குதிரையைத் தேடி அலையாமல் நிற்கும் வரை என் மனநிலை ஒரு சமானத்தில் இருப்பதாகவே உணர்கிறேன்.

PS: இனிமேல் என்னுடைய சில கதைகளைல் யமுனா என்ற கதாப்பாத்திரம் அதிகம் இடம்பெறலாம் யாருக்காவது பிரச்சனையிருந்தால் ஒருவரி எழுதிவிடுங்கள்.

mohandoss.i@gmail.com

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In சினிமா விமர்சனம்

என்னுடைய கதை ஹாலிவுட்டில்

உண்மையில் இந்தத் தலைப்பைப் பார்த்து நீங்கள் அதிர்ச்சியாகியிருந்தீர்கள் என்றால், நானும் அது போன்ற ஒரு சூழ்நிலைக்குத்தான் தள்ளப்பட்டேன் Deja vu படம் பார்த்த பொழுது. படம் ஒருவாறு இதைப் பற்றியதாகத்தான் இருக்கும் என்று நினைத்துச் சென்றிருந்தாலும் ஒருவாறு நான் உபயோகப்படுத்த நினைத்த கதை. தனித்தனியாக, பிக் பேங்ஸ், ஸ்டிரிங் தியரி, வார்ம் ஹோல் என்று அந்தக் கதையெழுத நிறைய படித்திருந்ததால் கொஞ்சம் போல் நிறைய விஷயங்கள் புரிந்தது. டாப் கன், எனிமி ஆப் த ஸ்டேட் என எனக்குப் பிடித்த பல படங்களில் இயக்குநர் டோனி ஸ்காட்.

543 மூன்று பேர் பயணமாகும், ஒரு பெரிய போட் இல்லை சிறிய கப்பல் உண்மையில் ஒரு Ferry. வெடித்துச் சிதறுவதில் தொடங்குகிறது இந்தப் படம். Bureau of Alcohol, Tobacco, Firearms and Explosives ல் இருந்து இதைப் பற்றி விசாரணை செய்யவரும் டென்ஸல் வாஷிங்டன். அதில் இருக்கும் ஒரு உடல் ஏற்கனவே அதாவது அந்த Ferry வெடிப்பதற்கு முன்பே கொல்லப்பட்டு ஆனால் உண்மையில் அந்த Ferry-ல் வெடித்திருந்தால் உடலுக்கு என்ன பாதிப்பு வருமோ அந்தப் பாதிப்பை ஏற்படுத்தி Ferry-ன் உள் வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்ததும் படம் விறுவிறுப்பாகிறது.

இந்த இடத்தில் தான் மக்கள் டைம் மெஷின் கான்சப்டை வைக்கிறார்கள், முந்தைய படங்களைப் போலில்லாமல் அதிக டெக்னிக்கல் வார்த்தைகள். பின்னொரு காலத்தில் கண்டறியப்படும் சாத்தியக்கூறுகளை மட்டும் வைத்து சாத்தியப்பட்டதாகக் காண்பிக்கிறார்கள். இதற்கு மேல் படம் எடுத்தவர்களுக்கே டைம் கான்சப்ட்டில் உள்ள பிரச்சனை நன்றாகத் தெரிகிறது. இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் கடேசியில் செத்துப்போன டென்ஸல் வாஷிங்டன் உயிருடன் வருவது. ஆனால் இதையெல்லாம் நான் தவறென்றும் கூறமுடியாது.

ஏனென்றால் இதுவரை கண்டறியப்படாத ஒரு விஷயம் கண்டறியப்பட்டால் என்னவாகும் என்பது யாருக்கும் தெரியாது அல்லவா. கொஞ்சம் புரிகிறது போல் சொல்லவேண்டுமானால், நீங்கள் டைம் மெஷினை உபயோகித்து பழங்காலத்திற்குப் போகிறீர்கள் என்றால் அங்கே செய்யப்பட்ட மாற்றம் எப்பொழுது நிகழ்காலத்தை அபெக்ட் செய்யும். உடனேயா இல்லை நடந்த வரலாறு அப்படியே இருக்க இன்னொரு புதிதான வரலாறு எழுதப்படுமா, சாப்ட்வேர் இண்டஸ்டிரியில் சாப்ட் டெலிட் என்றொரு விஷயம் உண்டு அதைப்போல்.

எதையும் டெலிட் செய்யாமல் இந்த நிமிடத்தில் இருந்து இது இல்லை, புதிதான ஒன்று தான் முன்பிருந்தது என்பதைப் போல் செய்யமுடியுமா? சாத்தியக்கூறுகள் உண்டா? தெரியவில்லை. ஆனால் அதைத்தான் முடியுமென்கிறார்கள் இந்தப்படத்தில். நிறைய விஷயங்கள் உழைத்திருக்கிறார்கள். டென்ஸல் முதன்முதலில் வீட்டிற்குப் போகும் பொழுது கையுறை அணிந்திருப்பார், படத்தின் வரிசைப் படி அவரிடம் பேசும் டிடக்டிவ் ஏன் கையுறை அணியாமல் போனாய் என்று கேட்பார் அதைப்போலவே, கொலைகாரனின் வீட்டை டென்ஸல் வாஷிங்டன் முதல் முறை அடையும் பொழுதே ஆம்புலன்ஸ் நிற்கும். இப்படி நீங்கள் டைம் மிஷின் துணை கொண்டு முன்காலத்திற்குச் சென்று திரும்பினால் நிகழ்காலம் மாற்றப்படும் என்று ஒவ்வொரு பகுதியிலும் நினைத்து நினைத்துச் செய்தவர்கள். டென்ஸல் செத்துப்போன பிறகு உயிரோடு ஒன்றும் நடந்தது தெரியாது போல் வருவது டைரக்டரின் குழுப்பம்.

ஒரே சமயத்திலேயே நிகழ்காலத்திலும் இருந்துகொண்டு கடந்தகாலத்தையும் பார்க்க முடிவது போல் டென்ஸல் செய்திருக்கும் காட்சிகள் கான்செப்ட் அளவில் அருமை. படத்திலும் நன்றாக வந்திருக்கிறது. கொஞ்சம் டைம் மெஷின், மற்றும் காலத்திற்கு முன்னர் செல்வது போன்றவற்றில் பழக்கம் உள்ளவர்கள் தங்கள் கான்செப்டை படத்தின் இயக்குநரின் கான்செப்ட்டுடன் ஒப்பிட்டுப்பார்க்க நிச்சயம் படத்திற்குச் செல்லலாம். இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கும் விதம் பிரமாதம் என்று தான் சொல்லவேண்டும் நிறைய உழைத்திருக்கிறார்கள்.

இன்னுமொறு டைம் மெஷின் பற்றிய கதையை எழுதவேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டார்கள். ஹிஹி.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In

சில விளக்கங்கள்

உண்மையில் செல்வநாயகியின் கடைசி பதிவு படிக்கும் பொழுதுதான் தெரிந்தது அவர் மனதளவில் என்னுடைய கதைகளாலோ, கதைத் தலைப்புக்களாலோ, பின்னூட்டங்களாலோ வருத்தப்பட்டிருக்கிறார் என்பது தெரிந்தது. சில தடவைகள் அவருடைய கருத்துக்களுக்கு எதிர்கருத்து வைக்கவேண்டுமே என்று கதையெழுதியிருக்கிறேன் உண்மை.

ஆனால் அவர் நினைப்பது போல் தெய்வநாயகி நிச்சயமாக அவரை வம்பிழுக்க வேண்டும் என்றோ மற்றும் இன்னபிற விஷயங்களை நினைத்தோ எழுதுப்படவில்லை. அந்தக் கதை இந்தப் பிரச்சனைகள் எல்லாம் எழுவதற்கு முன்பே எழுதப்பட்டது. அந்தப் பெயரும் ஒரு உண்மையான நபரின் பெயர் தான். என்னுடைய நண்பர்கள் சிலர் தேன்கூடு போட்டிக்கு அனுப்பும் முன்னரே அந்தக் கதையைப் படித்திருக்கலாம். மரத்தடியில் பயின்றதுக்கு பிறகு கதைகளை எழுதியதும் போடும் பழக்கம் கிடையாது. அதுவும் அந்தக் கதை இருபது தடவைகளுக்கு மேல் திருத்தி எழுதப்பட்ட ஒன்று.

நான் கதையெழுத சுஜாதாவைத் தான் குருவாகத் தீர்மானித்திருந்தேன். அதனால் சில நடைமுறையில் நடக்கும் விஷயங்களை, மாற்றி, என்னுடன் சேர்த்து கதையெழுதும் பொழுது அட்வாண்டேஜ்கள் என்னை அந்த வகையான எழுத்துடன் தொடரச் செய்தன.

உண்மையில் அந்தத் தண்ணிப்பார்ட்டி எல்லாம் உண்மையே, பேச்சுலர் ஆண்களிடம் கல்யாணத்தைப் பற்றியும், வரப்போகும் பெண்களைப் பற்றியதுமான சிந்தனைகள் பெரும்பாலும் ஓடிக்கொண்டேயிருக்கும். என்னிடமும் அப்படியே. கல்யாணம் ஆன ஆண்கள் என்னிடம் அவர்களுடைய கல்யாண வாழ்க்கையைப் பற்றி பேசுவார்கள்.

நான் பேச்சுப்போட்டியைப் பற்றிச் சொன்னது நிச்சயம் அவரைக் குறித்தல்ல, நானும் என் அக்காவும் உண்மையில் ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும் பொழுது அக்கா சொன்ன விஷயம் அது. நான் அவளை பேசிப்பேசி ஜெயிப்பதாக நினைத்தவள் உனக்கும் பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் பெண்ணைத்தான் கட்டிவைப்பேன் என்று சொல்ல எழுதியது.

ஒற்றைப் பெண் விஷயமும் அப்படியே, எனது நெருங்கிய சொல்லப்போனால் ரொம்பவும் நெருங்கிய உறவினரொருவருக்கு அப்படிப்பட்ட பெண்ணைக் கல்யாணம் செய்துவைக்க அவர் ஒரு தண்ணிப் பார்ட்டியில் புலம்பியது தான் அந்த விஷயம்(செல்வநாயகியைப் பற்றி யாரிடமும் இதுவரை விசாரித்ததில்லை, அவர் நினைப்பது போல் வேறெந்த வெரிபிகேஷனும் இதைப் பற்றிச் செய்யவில்லை. சொல்லப்போனால் அவருடைய பதிவுகளில் பலவற்றைக் கூட இன்னும் நான் படித்திருக்கவில்லை என்பதே உண்மை.)

மற்றபடிக்கு அவர் சொன்ன சில கருத்துக்களை மறுத்து அதற்கு கதையெழுதினேன் என்பது உண்மை ஆனால் அவரை பர்ஸனலாக தாக்கி எழுத வேண்டுமென்று மனதால் கூட நினைக்கவில்லை. என்னை நன்கறிந்த நண்பர்களுக்குத் தெரியுமது. எங்கள் குடும்பம் முழுவதும், பேச்சுப் போட்டி, பட்டிமன்றம், நாடகம் போன்ற விஷயங்கள் இன்வால்வ் செய்யும் ஒன்று. அதனால் நான் என் குடும்பத்தில் நடந்த விஷயங்களைப் பற்றி எழுதியது அவருக்குத் தவறாகத் தன்னை சொல்லியதாக உணரலாம்.

மற்றபடிக்கு அவர் அப்படி நினைக்கும் படி இருந்தது முற்றிலுமாக தற்செயல் நடவடிக்கையே. அதற்காக அவர் மனம் வருந்துவாராயின் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

இதையெல்லாம் சொல்லிப் புரியவைக்கவேண்டும் என்பது இல்லை என்றாலும் விளக்க வேண்டியது என் கடமை செய்கிறேன் அவ்வளவே. வேறெதும் சொல்லத் தெரியவில்லை எனக்கு.

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In Only ஜல்லிஸ்

நான் வேலை பார்க்கிறேனா இல்லையா?

இதுதான் இப்ப தமிழ்மணத்தின் ரொம்ப முக்கியமான கேள்வியா உலவுதுன்னு சொன்னா அப்புறம் நான் தினம் தினம் பார்க்கும் என் ஸ்டாட் கவுண்டர் தப்பா சொல்லுதுன்னு அர்த்தம் ஆய்டும். அதனால் ஒருவாறு கேள்வியா இருக்கு.

இந்த வாரம் ஒரு ஐந்து திரைப்படங்களின் விமர்சனங்களைப் போடவேண்டும் என்று நினைத்திருந்தேன் அதற்காக போன லாங் வீக் எண்டிலேயே எழுதிவைக்கப்பட்டு ப்ளாக்கரில் காத்திருந்தன ஐந்து விமர்சனங்கள் நாளொன்றாக வெளியிடப்படுவதற்கு.

என் முதலாளிக்கு நான் நல்லவனாயிருக்கிறேனா என்று யாருக்கும் தெரியவேண்டிய அவசியம் இல்லை. அது எனக்கும் என் முதலாளிக்கும் தெரிந்தால் போதும். என் வேலையைப் பற்றி விளக்கி நான் ப்ளாக் முன்பே எழுதிவைத்திருந்ததைப் போன்ற என்னுடைய மூன்றாண்டு(மூன்றரையாண்டு) சாப்ட்வேர் உலகத்தில் உயிர்வாழ்வது எப்படி என்ற கண்டுபிடித்து வைத்திருப்பதை சாதாரணமாக வெளியில் சொல்லமுடியாது.

சிதம்பர ரகசியத்தைப் போன்றது அது. பல ஆயிரம் $$$$$ சம்மந்தப்பட்டது. எனவே என் வேலையை, என்னை, என் முதலாளியைப் பற்றிய உங்களின் கன்செர்ன்களை தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு மனதை உங்கள் பக்கமாக திருப்பிக்கொள்ளுங்கள். கடேசியில் ஒன்றே ஒன்று நான் இப்பொழுது பெஞ்சில் இல்லை.(போதுமா! இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?)

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In சினிமா விமர்சனம்

21 Grams

ஒரு கவித்துவமான தலைப்பைக் கொண்ட கவித்துவமான படம். சொல்லப்போனால் Babelனை எடுக்க இயக்குநர் உபயோகித்த அதே அணுகுமுறை(சொல்லப்போனால் தலைகீழாக வரும்.) Non-Linear, Tri Logic படத்திற்கான ஒரு அற்புதமான உதாரணம். Babel பார்த்துமுடித்ததும் எப்பொழுதும் போல் அந்தப் படத்தைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டதுதான் கிடைத்தது 21 Grams படம் பற்றிய குறிப்புகள்.

இதயம் பழுதடைந்த ஒரு கணித ஆசிரியர், அவரை பார்த்துக்கொள்ளும் முன்னாள் மனைவி. இந்நாள் காதலி - சொல்லப்போனால் அவர் இறக்கும் நிலையிலும் அவரின் மூலமாய் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் நிலையில் இருப்பவர் - இருவரும் சொல்லப்படாத(கதையில்) முன்னர் பிரியும் சூழ்நிலை வந்த பொழுது, தான் கர்ப்பமாகயிருந்ததால் ரிஸ்க்கான சந்தர்பத்திலும் கருகலைப்பு செய்துகொண்டவர்.

இரண்டாவது, ஒரு டிரக் அடிக்ட், மற்றும் அதிலிருந்து மீண்டு வருவதற்காக உதவும் அவருடைய கணவன் மற்றும் இருமகள்கள்.

மூன்றாவது, முன்னால் குற்றவாளி, ஏசு கிறிஸ்துவிடன் தன்னை ஒப்புமை கொடுத்துவிட்டு, தலையில் ஒரு முடி நகர்ந்தாலும் அதற்கு இறைவனே பொறுப்பு என்ற மனநிலையில் இருப்பவர். அதையே போதிப்பவர். அவருடைய மனைவி, குழந்தைகள்.

இப்படி முன்னுக்குப் பின் சம்மந்தமில்லாத மூன்று குடும்பங்களை, ஒரு ஆக்ஸ்டெண்ட் மூலமாய் சம்மந்தப்படுத்தி ஒரு அற்புதமானக் கதையைத் தந்திருக்கிறார் இயக்குநர். முன்பே சொன்னது போல் Non-Linear கதை, அதாவது வரிசைக்கிரமமாக வராது, நான் ப்ளாக்கில் எழுதுவதை முழுதும் படிக்கு அன்பர்களுக்கு ஒரு உதாரணம் தரவேண்டுமானால். என்னுடைய "இப்படியும் ஒரு தொடர்கதையை" Non-Linear கதையென்று சொல்லலாம்(ஜல்லி, ஆன் ஜல்லி, ஆன் ஜல்லி) உண்மையில் அப்படி வரவேண்டுமென்று நினைத்து உருவாக்கவில்லையென்றாலும் கதை அப்படித்தான் வந்துகொண்டிருக்கிறது.

இங்கே மனிதர்களின் மனநிலையை இயக்குநர் படம் பிடிப்பது தான் அருமையாகயிருக்கிறது.

1) இதய மாற்று அறுவைசிகிச்சை செய்து கொண்டவர் - அந்த இதயம் யாரிடம் இருந்து வாங்கப்பட்டது என்று ஆராய்வது.
2) தன் குடும்பத்தில் இரண்டு மகள்கள், மற்றும் கணவன் ஆகியவற்றை இழந்தப் பெண். தன் கணவருடைய இதயத்தை நன்கொடையாகத் தருவது.
3) ஏதோ ஒரு விதத்தில் கில்டியாக நினைக்கும் ஆசிரியரின் முன்னால் மனைவி, அவருடைய குழந்தையை தன்மூலமாக பெற்றுக்கொள்ள முயல்வது.
4) திருந்திவிட்டார் என்பதால் தன்னால் ஆன உதவியை செய்துவரும் நண்பர், தன்னுடைய மேலதிகாரிகளின் கட்டளைப்படி வேலையை அவரிடம் இருந்துபரிப்பது பின்னர் இன்னொரு வேலைக்கு ஏற்பாடு செய்வது....

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் இந்தப் படத்தைப்பற்றி.

தேர்ந்த நடிகர்கள், Sean Penn, Naomi Watts, Benicio Del Toro. எழுதியது Guillermo Arriaga, இயக்கியது Alejandro González Iñárritu.

இதில் Benicio Del Toroக்கும் Naomi Wattsக்கும் ஆஸ்கர் நாமினேஷன் கிடைத்தது. ஒரு அறிமுகத்திற்காக மட்டுமே இந்த விமர்சனம், படத்தைப் பற்றி எழுதுவதற்கு நிறைய விஷயங்கள் உண்டு. நேரம் கிடைத்தால் இன்னொரு நாள்.

PS: The title of the movie comes from the work of Dr. Duncan MacDougall, who in the early 1900s sought to measure the weight purportedly lost by a human body when the soul departed the body upon death. MacDougall weighed dying patients in an attempt to prove that the soul was material and measurable. These experiments are widely considered to have had little if any scientific merit, and although MacDougall's results varied considerably from 21 grams, for some people this figure has become synonymous with the measure of a soul's mass.

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In சுய சொறிதல் பெண்ணியம்

தமிழ்மண விவாதக்களமும், பெண்ணியமும்

நான் இந்தப் பெண்ணியம் பத்தி பேச ஆரம்பிச்சாலே பிரச்சனையாயிடுதுன்னு நினைக்கிறேன். அப்படிக்கும் ஒன்றும் கேவலமான, அசிங்கமான, தனிநபர் விரோதமான பின்னூட்டங்கள் போடவில்லையென்றாலும் என்னுடைய பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படுகின்றன இல்லை முற்றிலுமாக நிராகரிக்கப்படுகின்றன.

அப்படித்தான் தற்சமயம் தமிழ்மணம் விவாதக்களத்திலும் நடந்தது. என் பின்னூட்டன் வெளியிடப்பட்டு, ஒன்றிரண்டு நாட்களுக்கு பிறகு முற்றிலுமாக தூக்கப்பட்டிருக்கிறது. மற்றொரு பின்னூட்டம் மட்டுறுத்தப்பட்டிருக்கிறது. அவையிரண்டும் நான் எழுதியபடியே இங்கே. (இதையெல்லாம் ஆளைவைச்சா எழுதுறோம், எழுதின நேரத்திற்காவது மதிப்புக் கொடுங்கப்பா.)

--------------------------

இது முதல் பின்னூட்டம்.

உங்களுடைய கேள்விகளுக்கு என்னளவில் தோன்றும் பதில்களைத் தருகிறேன். இந்த பதில்கள் எந்த சந்தர்ப்பத்திலும் என் மனதில் தோன்றும் ஒன்றை மறைத்து வந்தவையாக இருக்ககூடாதென்றே நினைக்கிறேன்.

//பெண்ணடிமை/ஆணாதிக்கம் என்பதன் நிகழ்வு வீதம் என்ன?//

1. நிச்சயமாகக் கிடையாது. இது என் கண்ணால் நான் பார்த்த உண்மை.
2. ஆமாம் எதிர்நிலைகள் உண்டு.(பர்சண்டேஜ் பற்றி பேசுபவர்களுக்காக, எல்லா சமயங்களிலும் பர்சண்டேஜ்கள் உண்மையைச் சொல்லுவதில்லை.)
3. நிச்சயமாக.
4. எனக்குத் தெரிந்த வரலாற்றின் படி கிரேக்கர்கள் பெண்களை வெறும் பிள்ளை பெறும் எந்திரங்களாகப் பயன்படுத்தினார்கள் - உண்மை. உடலுறவுக்குக் கூட ஆண்கள் தான் ஒன்லி புள்ளப் பெத்துக்கிறதுக்கு மட்டும் தான் பெண்(உடலுறவு இல்லாமலா என்றெல்லாம் கேட்கக்கூடாது) - ஏனென்றால் அந்தக் காலத்தில் உடல்வலு மட்டுமே உரிமையைத் தீர்மானித்தது.

இந்த மாற்றம் வரவர இந்த நிலையில் மாற்றம் இருந்திருக்கும்.

//எந்த ஒரு குழந்தையின் முதன்மை வழிகாட்டி, ஆசிரியர், கருத்து உருவாக்கி யார்?//

1. நிச்சயமாக, (அம்மா பிரசவத்தில் இறந்துபோயோ இல்லை வேறு சில காரணங்களால் அம்மா இல்லாமல் போகும் போதோ மட்டுமே இதில் மாற்றம் இருக்கும்.

2. ஆனால் இதில் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு, ஒரு பிள்ளைக்கு தன் தகப்பன் வாழும் எடுத்துக்காட்டாக இருக்கிறான் பெரும்பாலான சமயங்களில், அப்படி தன் தந்தையை அவன் உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாத சமயங்களில் வெளி உலகத்தில்(Note this point.) உலவும் ஆண்களைத் தேடுகிறான். ஒரு ஆணால் தன்னுடைய தாயை வாழும் உதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் இந்த அம்மா பாதிப்பு தனக்கு உற்றாளைத் தேடும் போது வருகிறது. தன் மனைவி தன் அம்மாவைப் போலவே இருக்கவேண்டும் என்று நினைக்கிறான்(அம்மா அவனுக்கு நல்லவளாகத் தோற்றமளிக்கும் பட்சத்தில் இல்லாவிட்டால், உலக அளவில் தேடாமல் தன்னுடைய உறவினர்களில் தேடுகிறான். அக்கா, தங்கை அத்தை சித்தி என்று.)

நடத்தையில் தாயின் பங்கு அதிகம் தான், மறுக்கவில்லை, ஏனென்றால் தான் வேலை(இல்லை அது சம்மந்தமான விஷயங்களில்) தந்தையையோ இல்லை அவனுக்குப் பட்ட இன்னொரு ஆணையோ வழிகாட்டியாக கருதும் அதே வேளையில் தாயிடம் இருந்து குடும்பத்தை எடுத்து நடத்தும் விஷயங்களைக் கற்றுக் கொள்கிறான்.

//எப்படி பெண்ணடிமை/ஆணாதிக்கம் தோன்றியது?//

1. முன்பே சொன்னது போல் பெண்ணடிமை தோன்றியது அவர்களுடைய உடலில் பளுஇல்லாத காலங்களிலேயே, அவனுக்கு நாடு பிடிக்கும் ஆசைதான் அதிகமாயிருந்தது. அப்படிப் பிடித்த நாட்டை தன்னிலிருந்து தன் அடுத்த சமுதாயத்திற்கு கொண்டு செல்லும் கருவியாக அவளைப் பயன்படுத்தினான்.

அப்படி தன்னிலிருந்து அடுத்த சமுதாயத்திற்கு அவனுடைய வெற்றிகளை, பணத்தை, வீரத்தை கொண்டு செல்லும் பொழுது அதில் தவறு(சார்லஸ் அவருடைய இரண்டு பிள்ளைகள் தனக்குப் பிறந்தது தானா என்று வெரிபிகேஷன் செய்தது தான் நினைவில் வருகிறது - உண்மையில்லையா?) நடந்துவிடக்கூடாது என நினைத்ததன் விளைவுதான் பெண்ணடிமை. எப்பொழுது பெண்ணடிமை தோன்றியதோ அப்பொழுதே ஆணாதிக்கமும் தோன்றிவிட்டது.

2. ஆரம்பக்காலத்தில் அவன் தன்னுடைய சகோதரியையும், பெண் பிள்ளைகளையும், மனைவியையும் ஒன்றாக பார்த்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் பிற்காலத்தில் அவன் அந்த வலிமை குறைந்த பெண்ணிடம் இருந்து வெளிப்பட்ட(?) அறிவுசார்ந்த விஷயங்களினால் ஆட்பட்டு வித்தியாசம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் ஒன்று அந்த வித்தியாசம் தெரிந்த பிறகு அவன் தன் மகளையும் தன் மனைவியையும் ஒன்றாகத் தான் பார்த்திருப்பான் என்று என் மனம் சொல்கிறது.சும்மா ஜல்லியடிப்பதற்காக மகளை வேறு ஜன்மமாகவும் மனைவியை வேறு ஜென்மமாகவும் பார்த்தான் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.

வேண்டுமானால் அவனுக்கு இப்படித் தோன்றியிருந்தால் அந்தப் பெண்ணை பெற்றவர்களுக்காக அவள்(மனைவி) இதை(ஏதாவது ஒரு முடிவை எடுக்க) தன்னைச் செய்யச் சொல்கிறாளோ என்ற பயம் கடேசி காலம் வரை வந்திருக்கலாம், ஏனென்றால் தான் பெற்ற பெண் தன்னை அப்படி மோசம் செய்ய மாட்டாள் என்று நினைத்திருக்கலாம்.

//குழந்தை வளர்ப்பு://

1. இதில் ஆணாதிக்கம் கொண்ட பெண்களை திணிப்பது சுத்த ஜல்லி, அப்படி அவன் மீது திணிக்கப்பட்டிருந்தாலும் அது நிச்சயமாக ஒரு பெண்ணால் இருந்திருக்க சாத்தியக்கூறு குறைவுதான். தன் மகன் தன்னிடம் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று நினைக்கும் எந்தப் பெண்ணும் இது போன்ற விஷயங்களைச் சொல்லியிருக்க முடியாது. ஏனென்றால் பெண்டாட்டியை குறைவுள்ளவள் என்று சொல்வது தன்னையே சொல்வது தான் என்பதை அவள் உணர்ந்திருக்க வேண்டும். அவன் வாழ்ந்து வந்த ஒட்டுமொத்த சமூகமும் இதற்கு பொறுப்பு, அவன் கற்ற கல்வி, அவனுடைய அனுபவங்கள் இப்படி நிறைய விஷயங்களால் அவன் அப்படிப்பட்ட ஒரு கருத்திற்கு வந்திருக்கலாம்.

2. எங்கள் வீட்டில் உண்டு, எங்க வீட்டுப் பெண்பிள்ளைகளுக்கு அதிக அதிகாரம் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது ஆண்களைவிட. சும்மா ஜல்லியடிக்கச் சொல்லவில்லை, அக்காவை மாஸ்டர்ஸ் படிக்க வைத்தார்கள் என்னை படிக்கவைக்கவில்லை. இதற்கு நான் பேச்சுலர்ஸில் வாங்கிய மார்க் காரணம் இல்லை. பொருளாதாரம் என்று வருவோமென்றால் அப்பாவிற்கு நிச்சயம் தெரிந்திருக்கும் தன் பெண்ணை படிக்க வைத்தால் என்னை மாஸ்டர்ஸ் படிக்க வைப்பதற்கான வாய்ப்புக்கள் குறையும் என்று. இருந்தாலும் அப்படி நிறைவேற்றப்பட்டது. இது ஒரு சிறு உதாரணம். இது போன்ற ஆயிரம் உதாரணங்களை அடுக்கலாம் நான் வாழ்ந்த பகுதியில் கூட. என்னைப் பொறுத்தவரை அம்மாக்களுக்கு ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளைத்தான் பிடித்திருக்கிறது. தன் ஆண்பிள்ளையிடம் பேசமுடியாத பல விஷயங்களை அவளால் தன் பெண் பிள்ளையிடம் தான் பேச முடிந்திருக்கிறது.

3. சொல்லமுடியாது சரியாய். இது சமூகத்தால் போற்றப்பட்ட ஒன்று, பெண்குழந்தை வளுஇல்லாதது. அதனால் சம்பாதிக்க முடியாது இந்த ஆண்களின் சமுதாயத்தில் பெண்களால் வெளியில் நடமாட முடியாது என்பது கட்டமைக்கப்பட்டது தான்.

ஆனால் வேலை என்ற விஷயம் மாறி வரும் நிலையில். இது நிச்சயமாக மாறிவிட்டது. கத்தியெடுத்து சண்டை போட்டுத்தான் குடும்பத்தைக் காப்பாற்றவேண்டும் என்ற ஒரு நிலை போய்விட்ட நாளைக் கணக்கெடுத்தால் அந்த நாட்களில் இருந்தே இந்த விஷயம் மாறியிருக்க வேண்டும். வேண்டுமானால் பர்சண்டேஜ்கள் குறைவாக இருக்கலாம்.

//சொத்து/ஆதிக்கம்://

இது பெண்களுக்கு மட்டுமே உரியது என்று சொல்ல முடியாது. ஆனால் பர்சண்டேஜ்கள் அவர்களைத்தான் அதிகமாகக் காட்டும். பெண்ணை வாயைப் பொத்தி வீட்டில் வைத்திருக்க ஆண்கள் கண்டுபிடித்த ஒரு ஆயுதம் தான் இந்த விஷயம். வீடுகட்டிக்கொடுத்து, வேண்டுமென்ற நகைகள் செய்துகொடுத்து பட்டுப்புடவை எடுத்துக்கொடுத்து. அவர்களை அப்படிப்பட்ட உயர்ந்த(?) விஷயங்கள் இல்லாமல் வாழும் பெண்ணை பார்க்கவைத்து பயமுறுத்தும் ஒரு விஷயம் தான் இது.

சமுதாயத்தில் தங்கள் பெயர் கெட்டுவிடும் என்று பயந்துதான் பல பெண்கள் தங்கள் கணவனுடன் வாழ்கிறார்கள் என்பது நிச்சயமாக மறுக்கமுடியாத உண்மை. இதுவும் நிச்சயமாக மாறும். ஆனால் கொஞ்சம் டைம் எடுக்கும். அதற்குள் ஒரு உலக்ப்போர் வந்துவிட்டால் ஒன்றும் சொல்லமுடியாது. உலகம் அழிவை நோக்கி நகர்த்தப்படும்.

2. ஒரு ஆளும் கிடையாது. எல்லோருக்கும் இது வேண்டும். அவன் அணிகிற சட்டைத் துணியிலிருந்து வாங்கும் கார் கலர் வரைக்கும். ;)

3. பெண்ணியவாதிகள் இதைத் தான் மறுக்கிறார்கள். நிலைத்து வாழவேண்டும் என்ற ஒரு விஷயம் மனதில் வந்துவிட்டால் நாம் சில விஷயங்களுக்கு ட்பண்ட் ஆகிவிடுகிறோம். அது தேவையில்லை, உனக்கும் எனக்கும் எல்லாம் சரியா ஒத்துவருதா வாழலாம் இல்லையா மூட்டைக்கட்டிவிடலாம் என்ற ஒரு நிலைக்கு வருவது தான் என்னைப் பொறுத்தவரை. குடும்பங்களில் பெண்களுக்கு சம உரிமை வழங்குவது. அதற்கு அந்தப் பெண் ஆண் அவன் குடும்பம் மட்டும் போதாது சமுதாயமும் திருந்த(?) வேண்டும்.

இவைகள் ஏற்கனவே கட்டமைக்கப்பட்டவை. உங்களுடைய கடவுள்களின் பெயர்களால், நீங்கள் படிக்கும் புத்தகங்களில் பெயர்களா, மற்றும் உங்களை எந்தெந்த விதங்களில் எல்லாம் கட்டிப்போட முடியுமோ அந்தந்த விதங்களால். இதில் ஒன்று மாறாமல் இன்னொன்று மாறமுடியாது.

ஆனால் அப்படிப்பட்ட சமுதாயம் அமைக்கப்படும் பொழுது இந்தியா அமேரிக்காவாகத்தான் இருக்கும். இந்த விஷயத்தில்.


----------------------------------

இது நம்ம நண்பர் ஒருத்தர் அடிச்ச ஜல்லிக்கு பதில் சொன்னது.

//நாங்களும் காதல், பரிவு, இரக்கம், நேசம், பாசம் எல்லாம்கொண்ட சகமனுஷிகளே. ஒரு ஆணின் நேசத்தில் பூ விரிவதுமாதிரி இதயம்
மலரவும், அன்னியோன்யமான, ஒருவருக்கொருவர் ஆழமாக நேசிக்கிற, அந்த நேசத்தைக்கொட்டி வாழ்கிற தம்பதிகள் காண்கிறபோது
வெயிலுக்குப் பனி கரைவது மாதிரி மனம் கரையவும் முடிந்தவர்களே நாங்கள். //

ஒவ்வொரு முறையும் நண்பர் இந்தக் கருத்தை வைப்பதை தன் வாடிக்கையாக வைத்துள்ளார். நான் அவருடைய இந்தக் கருத்தைப் பற்றி விவாதிக்க விரும்பவில்லை.

அப்படியில்லாமல் போய்விட்டவர்களை, இவர் பெண்கள் இல்லையென்று கருதுகிறாரா? அதுதான் எனக்குப் புரியவில்லை.

காந்தியின் கடேசிக் காலங்களில் அவருடைய தோள்களைத் தாங்கிப்பிடித்து நடந்துவந்த சகோதரிகளைப் பற்றித் தெரிந்திருக்கும் பலருக்கு. இதனை மட்டுமே காரணமாகக் காட்டி, காந்தியை ஆணியவாதி என்றும் Male Chavanist என்றும் சொன்ன அம்மையார்(பெண்ணியவாதி) ஒருவரை நண்பருக்கு நன்றாகத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

என்னைப் பொறுத்தவரை, அவரும் பெண்தான், பெண்ணியவாதிதான். அவருக்கு காதல், பரிவு, பாசம் இதெல்லாம் கிடையாது என்று சொல்லவில்லை தேவையில்லை என்று நினைக்கிறார். தவறில்லை; நண்பர் சொல்வதை ஒருவகையான சமரசம் என்று தான் நான் எடுத்துக்கொள்வேன். இன்னும் சொல்லப்போனால் தேவையில்லாத சமரசம், நாத்தீகம் எப்படி திராவிடக் கழகங்களில் இருந்து மறைந்து போனது என்ற கேள்விக்கு, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கருத்தைக் தூக்கிப்பிடித்த பொழுதுதான் என்று எங்கேயோ படித்த நிகழ்வு.

நீங்கள்(அவருக்கு கிடையாது) உங்களுக்கு உண்மையாகயிருங்கள் அதுபோதும், மற்றபடிக்கு சொல்றதையெல்லாம் சொல்லிட்டு வார்த்தைக்கு "முறிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்" அப்படியென்றெல்லாம் ஜல்லியடிக்க வேண்டாம். நாங்கள் முறிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்களையும் விரும்பவில்லை, 725 ரெசிப்பிக்களையும் விரும்பவில்லை.

நீங்கள் இப்படி சொல்லிச்சொல்லி தான், வரும் மனைவி முறிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரலாளாக வரவேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்க்கத் தொடங்குகிறார்கள், அப்படியே 725 ரெசிப்பிக்கள் தெரிந்து வைத்திருப்பதையும். ஆரம்பத்திலேயே அதெல்லாம் முடியாது நான் நானாகத்தான் வருவேன், காந்தள் மெல்விரலாளாகல்லாம் வரமுடியாதுன்னு சொல்லீட்டிங்கன்னா, அப்படி மெல்விரலாளாக இருக்கும் பட்சத்திலும் பிரச்சனையில்லை இல்லாதபட்சத்திலும் பிரச்சனையில்லை.

//விமானம் ஓட்டுவதில் ஆண்களை விட பெண்கள் ஒழுங்குதன்மையோடு//

பர்சண்டேஜே உதைக்குமேம்மா, என்ன சொல்றீங்க நீங்க, வாய்க்கு வந்ததையெல்லாம் சொல்லக்கூடாது.


--------------------------------------

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In சினிமா விமர்சனம்

Blood Diamond

ஆங்கிலப் படங்களை பெரும்பாலும் விமர்சனம் தெரிந்துகொண்டு பார்ப்பதில்லை, ஏனென்றால் அது நான் ஏன் ஆங்கிலப் படங்களைப் பார்க்கத் தொடங்கினேனோ அந்த விஷயத்தில் இருந்து என்னை நகர்த்திவிடும். ஆனால் படம் பார்த்தபின் அதைப் பற்றிய விமர்சனங்கள், நல்லது கெட்டதுகள், என்று ஒரு பயங்கரமான தேடுதலே அந்தப்படத்தைப் பற்றி செய்திருப்பேன். இதற்கும் நான் ஆங்கிலப்படங்களை ஏன் பார்க்க ஆரம்பித்தேன் என்பது தான் காரணம். ஏனென்றால் நான் பள்ளிப்பருவம் முழுவதும் தமிழ்மீடியத்தில் படித்தவன், கல்லூரிகளில் ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுதினேன் என்றாலும் பாடம் முழுவதும் ஆங்கிலத்தில் சொல்லப்படாது. அதற்காக For, While Loop எல்லாம் தமிழில் கன்வெர்ட் செய்யப்பட்டு கொலைசெய்யப்படாது என்றாலும் உரையாடல் மொழி தமிழ்தான். இதனால் எனக்கு ஏற்பட்ட டிஸ் அட்வாண்ட்டேஜ்களை போக்கிக்கொள்ளவே ஆரம்பத்தில் ஆங்கிலப்படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். அதனால் கதையைத் தெரிந்துகொண்டு பார்ப்பது என்னுடைய நோக்கத்திற்கு பாதகமாகவேயிருக்கும். ஏன் இப்ப இந்த சுய சொறிதல்-னா நான் ப்ளட் டையமண்ட் பார்க்கப்போவதற்கு முன்பே மதியின் விமர்சனத்தைப் படித்திருந்தேன்.

சரியான ஸ்பாய்லர், அதை அக்காவும் சொல்லியிருந்தனம். இருந்தும்தான் படித்திருந்தேன். ஆனால் அதனால் கூட ஒரு அட்வாண்ட்டேஜ் படத்தின் கதையும் நடக்கப்போகும் சம்பவங்களும் முன்பே தெரிந்தவையாக இருந்ததால் படத்தை இன்னொரு பார்வையில் என்னால் பார்க்கமுடிந்தது.(வேண்டுமானால் பொதுபுத்தியில் இருந்து மாறியது என்று சொல்லிக் கொள்ளலாம் :-)) படத்துடைய trailers பார்த்துட்டு ரிலீஸ் ஆனவுடனேயே பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன் ஆனால் ரிலீஸ் ஆனது ஜனவரி 13. நான் தமிழ்நாட்டில் திருச்சியில் இருந்தேன். Fame Cinemas, PVR Cinemas ல் படம் பார்த்துவிட்டு (ரீலீஸ் ஆகியிருந்தாலும்?) சிப்பியில் பார்க்க மனம் வரவில்லை. அதனால் தான் அடுத்தவாரம் பார்த்தது. ஏற்கனவே இந்தப் படத்தின் டைரக்டருடைய மற்றய படம் The Last Samurai எனக்கு மிகவும் பிடித்தப் படம் அதற்கான விமர்சனமும் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இப்படி நிறைய விஷயங்கள் என்னை இந்தப் படத்தைப் பார்க்க வரும்படி அழைத்தன.

படம் எனக்கென்னவோ ரொம்ப பரீட்ச்சையான ஒரு விஷயத்தைப் பற்றியதாகத் தோன்றியது பின்னர் யோசித்துப்பார்த்ததன் விளைவு, ஏற்கன்வே சிட்னி ஷெல்டனின் "மாஸ்டர் ஆப் த கேம்" படித்திருந்தேன். சொல்லப்போனால் இதே கதைதான். அதனால் உபயோகப்படுத்தப்பட்ட டெர்ம்ஸ், மற்றும் இன்னபிற விஷயங்கள் புரிவதில் கொஞ்சம் சிக்கலில்ல்லை. (அந்தப் புத்தகம் படித்திருந்தால் இந்தப்படத்தை நிச்சயம் பாருங்கள்.

ஒரு ஆக்ஷன் பாக்ட் மூவிக்குள் சமூகத்திற்கான மெஸேஜ் சொல்ல இயக்குநர் முயன்றிருக்கிறார். டைட்டானிக்கில் பார்த்த டி காப்ரியோவா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார் மனிதர். இப்பல்லாம் டி காப்ரியோ சாவறதுதான் டிரண்ட் என்று நினைக்கிறேன். டைட்டானி, த டிபார்ட்டட், இப்ப பிளட் டயமண்ட்.

"நாங்கள் ஒருவருக்கொருவர் செய்து கொண்டதற்கு கடவுள் எங்களை மன்னிப்பாரா என்று வருந்தியிருக்கிறேன். ஆனால் கடவுள் இந்த இடத்தைவிட்டுச் சென்று ரொம்ப நாட்களாகிவிட்டது" என்று ஆஸ்கர் வின்னர் ஜெனிபர் கன்னோலியிடம், வெள்ளை ஆப்பிரிக்காக்காரரான டி காப்ரியோ தங்களையும், கருப்பு ஆப்பிரிக்காரர்களையும் பற்றி புலம்பும் இடத்தில் பிரமாதப்படுத்துகிறார்.

ஒவ்வொரு வாக்கியத்தின் இறுதியிலும், "huh..." போட்டு சௌத் ஆப்பிரிக்கன் ஸ்லாங்கில் பல சமயங்களில் ரொம்பவும் தொடர்ச்சியாகப் பேசும் பொழுது புரியாத நிலையிலும் மனிதர் உழைத்திருப்பது தெரிகிறது.

ஸ்ஸாலமன் வாண்டி-யாக நடித்திருக்கும் Djimon Hounsou யை நீங்கள் கிளாடியேட்டரில் பார்த்திருக்க முடியும். இந்த மனிதரின் நடிப்புப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. வரிசையாக அவார்ட்களை இந்தப் படத்திற்காக பெற்றுவருகிறார். ஆஸ்கர் கிடைக்குமா பிப்ரவரி 23ல் விடைகிடைக்கும். என்னுடைய கருத்தின் படி இவருக்கு Best supporting actor-ம், Babel-ல் நடித்த Rinko Kikuchi க்கு Best supporting actress-ம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

அப்புறம் பத்திரிக்கையாளராக வரும் ஜெனிபர் கன்னோலி. முதலில் தன்னைப் பார்த்து ஜொள்ளுவிட்டு வரும் டி காப்ரியோவிடம் எப்படியாவது விஷயத்தைக் கறந்துவிட முயலும் காட்சிகள் ஆஆவ். இருவரும் பேசிக்கொள்ளும் பத்திரிக்கை தர்மம் பற்றிய காட்சிகளும் அதே வகையறாவைச் சேர்ந்தவை தான்.

எனக்கு டைமண்ட் பற்றி, அதை மக்கள் எடுக்க உபயோகப்படுத்தும் முறைகள் பற்றி, அதன் ரிஷிமூலம் நதிமூலம் ஒன்றும் அறியாமல் பயன்படுத்தும் மக்கள் பற்றி நன்றாகவேத் தெரிந்திருந்தது இந்தப் படம் பார்ப்பதற்கு முன்னர். சில நாவல்களாலும் படித்த சில ஆர்ட்டிக்கிள்களாலும். இந்தப் படம் எடுத்ததன் மூலமாய் நிச்சயமாய் டைரக்டரால் மக்களை Conflict டைமண்ட் வாங்குவதிலிருந்து தடுக்க முடியாவிட்டாலும். Conflict Diamond பற்றித் தெரியாத மக்களிடம் அதைக் கொண்டு சென்ற விதம் பாராட்டுதற்குரியது. ஏதாவது ஒரு தொடக்கம் தான் தேவையாயிருந்திருக்கிறது எனக்கு பெரும்பாலான சமயங்களில்.

அந்தத் தொடக்கம் சுஜாதாவால், மதனால் இருந்தால் கூட எனக்கு பிரச்சனை ஒன்றும் இல்லை, அதேபோன்ற மனநிலை உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல படம். மூன்று மணிநேரங்கள்(அல்லது இரண்டரை மணிநேரங்கள்) போவதே தெரியாமல் பார்க்கலாம், மசாலாக்கள் எல்லாம் தூவித்தான் எட்வெர்ட் ஸ்விக் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.

"ஆப்பிரிக்காவில் பெட்ரோல் கிடைக்காமல் இருக்கும் வரை பிரச்சனையில்லை." என்று ஆப்பிரிக்க வயதானவர் ஸ்ஸாலமனிடம் சொல்லும் பொழுது தியேட்டர் முழுவதும் சிரிப்பு அலை பரவியது. இதுபோல நிறைய விஷயங்கள் ஜெனிபர் கன்னோலிக்கும், லியனார்டோ டி காப்ரியோவிற்கும் இடையில் உண்டு. படத்தில் மெஸேஜ் சொல்வது, அதுவும் ஒன்றிரண்டு பிரேம் அழகாக(கொடூரமாக) எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகளுக்கிடையில் உட்கார்ந்து நல்லது கெட்டது(பகுத்தறிவு?) பற்றி பேசுவது பிடிக்காத ஆட்கள் நிச்சயமாய் தப்பித்துக்கொள்ளலாம்.

மற்றபடிக்கு நிச்சயமாக ஒரு நல்ல படம். பார்க்கலாம்.

PS: அப்புறம் இது போன்ற மெஸேஜ்கள் எல்லாம் உபயோகப்படுமா என்று கேட்பவர்களுக்கு. எங்கள் வீட்டில் பட்டுப்பூச்சியின் உடலில் இருந்து தான் எடுக்கிறார்கள் என்று தெரிந்ததும் பட்டுப்புடவையே கட்டமாட்டேன் என்று ஒற்றைக்காலில் நின்ற பெண்ணியவாதிகள் சிலரை நேரில் பார்த்திருக்கிறேன்.

அதே போல் சத்தியசோதனை படித்துவிட்டு இனிமேல் மாமிசம் சாப்பிட மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த பிடிக்கிற ஆட்கள் இன்னும் எங்கள் வீட்டிலேயே உண்டு. மெஸேஜ்கள் நிச்சயமாக உதவுகின்றன. ஆனால் அப்படி உதவும் பர்ஸண்டேஜ்கள்??????

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In Only ஜல்லிஸ்

ராயர் காப்பி கிளப்

ஆரம்பக்காலத்தில் நான் மரத்தடியில் சேர்ந்த சமயங்களில் இந்த ராயர் காப்பி கிளப் குழுமத்தைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தேன். நல்லவேளை சேராமல் போனேன், இல்லையென்றால் ஓரளவிற்கு நடமாட்டம் இருந்துகொண்டிருந்த மரத்தடி, இன்று நடமாட்டம் இல்லாமல் போனதற்கு நானும் என் கதைகளும் ஒரு காரணம் என்று பாஸ்டன் பாலா ஒருமுறை ஜல்லியடித்ததைப் போல் ராயர் காப்பி கிளப்பிலும் ஏதாவது நடந்திருக்கும். உண்மையில் எனக்கு நான் ஏன் அங்கே உறுப்பினர் ஆகவில்லை என்ற கேள்வி உண்டு. அதற்கு நான் ராயர்களைப் பார்த்து பயந்தது ஒரு காரணமாகயிருக்கலாம். நான் கண்ட இரண்டொரு பெயர்களே கூட பயமுறுத்துவதாகயிருந்தது. உங்களுக்காக ஒன்றிரண்டு எக்ஸாம்புள்கள். பிரகாஷ்ராயன், ஆஸாத்ராயன், மத்தளராயன்.

இதெல்லாம் ஜல்லிக்காக, இரா. முருகன், பா. ராகவன், ஹரியண்ணா சிலசமயங்களில் பெரிய ராயர் சுஜாதா போன்றவர்கள் எல்லாம் அங்கே எழுதவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். உண்மையில், மரத்தடியில் பட்டுக்கொண்ட பிறகு, கொஞ்ச நாளைக்கு வாயையும் மற்றதையும் பொத்திக்கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன். சரி மேட்டருக்கு.

இந்தத் தடவை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகம் ராயர் காப்பி கிளப் By இரா. முருகன். யானை படம் போட்டிருப்பதற்காகயெல்லாம் புத்தகம் வாங்கி ஒன்றிரண்டு வரி விமர்சனம் எழுத நினைத்ததில்லை. ஆனால் “அரசூர் வம்சம்” புத்தகம் கொஞ்சம் படித்ததும், சரி ஆளு என்னவாவது சொல்ல டிரை பண்ணியிருப்பாரு. படித்துப் பார்க்கலாம் என்ற எண்ணத்தில் வாங்கியதுதான் இந்தப் புத்தகம். 65 ரூபாய் விலைக்குத் தேவலைதான் புத்தகம்.

சொல்லப்போனால், கற்றதும் பெற்றதுமின் ஷார்ட் வெர்ஷன் மாதிரி இருந்தது. (அது அப்படியில்லைன்னு யாராவது சொன்னால் இந்த வரியைத் தூக்கிவிடுகிறேன்.) ரொம்ப சுய புகழ்ச்சியில்லாமல், ரொம்ப ஜல்லியும் அடிக்காமல் விஷயத்தை ரொம்ப சுருக்கமாச் சொல்லியிருக்கிறார். சுஜாதா அளவிற்கு பொதுபுத்தி மக்களை கவரணும் என்ற எண்ணம் கிளப்பில் எழுதும் பொழுது இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ராயர்களை திருப்தி பண்ண மட்டும் எழுதப்பட்டதா என்று கண்ணில் விளக்கெண்ணை ஊற்றித் தேடினேன். ஆனால் அப்படிக்கிடையாது என்றுதான் தெரிகிறது.

மாந்திரீக யதாரத்தத்தில் கான்செப்டில் தன்னுடைய போட்டியாளராகக் கருதும் கார்சியா மார்க்வெஸ்ஸின் புகழ்பெற்ற நாவலை தமிழில் நக்கலாக “பெரியாத்தா கருமாதி” என்று சொல்லும் பொழுதாகட்டும். ஒரு ஓவியர் தன்னை வரைந்து தந்து சொத்தையே அபகரித்துவிடுவார் என்று சந்தேகப்படும் பொழுதாகட்டும், இந்துவை சைக்கிள் கேப்பில் நக்கல் விடும் பொழுதாகட்டும், இலக்கியச் சந்தில் சிந்து பாடும் பொழுதாகட்டும் பின்நவீனத்துவத்தின் பிளஷர் ஆப் த டெக்ஸ்ட்(Pleasure of the text) தெரிகிறது எனக்கு. ஆமாவா இல்லையா என்று சாருவிடமோ இல்லை ரமேஷ் பிரேமிடமோ கேட்கலாம்.

செப்டம்பர் பதினொன்று அமேரிக்காவில் அழித்தது உயிர்களையும் உலக வர்த்தக மையக் கட்டடங்களையும் மட்டும் இல்லை. அமேரிக்கர்கள் இதுவரை உயர்த்திப் பிடித்த தனி மனித சுதந்திரத்தையும்தான் என்று தோன்றுகிறது. இந்தப் பேச்சில் சமூகத்தின் மீதான அவருடைய பார்வை தெரிகிறது. இப்படியேத்தான் லெனி ரைபென்ஸ்தாலைப் பற்றிச் சொல்லும் பொழுது கல்யாணச்சாவாக விழுந்திருக்க வேண்டிய ஒன்று ஈசானிய மூலைச்செய்தியாக உதிர்ந்துபோனதை பற்றி எழுதியிருப்பதிலும் அவருடைய அக்கறை தெரிகிறது.

புலம்பெயராத ஈழ எழுத்தாளர், குந்தவை, இம்ப்ரஷனிஸ ஓவியர் எட்வர்ட் மனே, “குழந்தை ஏசுவின் சுன்னத் என்ற மார்க்கக் கல்யாணம்” என்ற புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்த ரெம்ப்ராண்ட் என்று தொட்டுச்செல்லும் விஷயங்கள் அதிகம். பெரிய ராயர் சுஜாதாவைப் போட்டுத்தாக்குவதில் ராயர்களுக்கே உரிய நக்கல், எஸ்ரா ரொம்பச் சீரியஸாக, இதுவரை மூன்று நான்கு நாவல்கள் தான் தமிழில் எழுதப்பட்டிருக்கின்றன என்று சொல்லிக் கொண்டிருக்கும். இவருக்கு ரஜினி சார் ஞாபகம் வருவது, அப்படியே கிருஷ்ணனுடைய “புளிநகக்கொன்றையை” கிழித்துத் தொங்கவிட்டு, ஜெர்மன் ஐயங்காரைப் பற்றி கேள்வி கேட்கப்படும் பொழுதும் தெரிகிறது.

நிறைய விஷயங்களை அவருடைய தெளிந்த நடையில் தந்திருக்கிறார்.

கோயில் மணியின் குரலும் ஒடுங்கிட
வாயில் அழுகை உயர்ந்திடும் சாவில்
அசைவு மறந்த சடலம் சிரிக்க
வசவு மொழியும் கிளி.

இது போல நடைமுறை வெண்பாக்கள் அங்கங்கே சொருகப்பட்டு படிப்பதற்கு நன்றாயத்தான் இருக்கிறது. இந்த இரா. முருகனின் ராயர் காப்பி கிளப்.

PS: அங்கங்கே ஸ்மைலி போட வேண்டும் என்று நினைத்தவாறே தான் எழுதினேன் எழுதிய பிறகு தான் தெரிந்தது. அப்படிப்போட்டால் பதிவில் ஸ்மைலி இல்லாமல் ஸ்மைலியில் பதிவு இட்டதாக ஆகிவிடும் ஆதலாம் ஒன்றைக்கூட போடவில்லை.

நான் போட நினைத்திருப்பேன் என்று நினைக்கும் இடங்களில் நீங்களே போட்டுப் படித்துக்கொள்ளுங்கள்.

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In சினிமா விமர்சனம்

போக்கிரி - பார்க்கலாம் போங்க

போக்கிரி - பார்க்கலாம்

இந்த வாரம் தொடர்ச்சியாக திரை விமரிசனங்கள் தரலாம் என்று உத்தேசம். அதன் தொடர்ச்சியாகத் தான் இந்தப் படத்தின் விமர்சனம். உண்மையில் திருவிளையாடல் ஆரம்பம் படத்தைப் பார்த்துவிட்டும் அதற்கான விமர்சனத்தை எழுதிவிட்ட பிறகும் சரி. நான் ரொம்ப நாட்களுக்கு அதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன். எனக்கு பொதுபுத்தி கிடையாது என்று மெய்ப்பிப்பதற்காக எழுதப்பட்ட விமர்சனம் மட்டும் தானா அது என்று.

ஏனென்றால் அப்படிப்பட்ட விமர்சனங்களை நான் வலையுலகில் பார்த்ததுண்டு. மேலும் நான் அப்படிப்பட்ட ஒருவனாய் மாறி வருகிறோனோ என்ற சந்தேகம் எனக்கு அந்த விமர்சனம் எழுதத் தொடங்குவதற்கு முன்பே வந்தது. ஏனென்றால் இந்த வித்தியாசம் எனக்கு புத்தகம் படிப்பதில் வந்துவிட்டிருந்தது. அல்லது வந்துவிட்டதாக நான் நினைக்கிறேன். அதனாலும் சினிமாவில் எனக்காக ஏற்படாத பொதுபுத்தியிலிருந்து விலகிவிட்டதான ஒரு மனநிலையை நானாக என் மீது திணித்துக் கொள்கிறேனோ என்று என்னை நானே சந்தேகிக்கத் தொடங்கினேன்.

ஆனால் ஒவ்வொரு முறையும் இல்லை நான் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் விமர்சனத்தை அந்த ஒரு காரணத்தை மனதில் கொண்டு எழுதவில்லை என்று நிரூபணமாகிவருகிறது. அதற்கு இன்னுமொறு உதாரணம் இந்தப் போக்கிரி படம்.

படத்தில் வன்முறைக்காட்சிகள் அதிகமாக இருக்கிறது என்ற ஒரு குறையைத் தவிர, ஒரு தமிழ் படத்திற்குத் தேவையான அத்தனை விஷயங்களும் கச்சிதமாக பொறுந்தி இருக்கிறது இந்தப்படம். விமர்சனத்தைப் படித்த பிறகும் அதற்கும் முன்பும் ஒரு மட்டமான விஜய் படத்தைப் பார்க்கப்போகிறேன் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. ஆனால் அப்படியில்லை மூன்று மணிநேரம் உட்கார்ந்து பார்க்கக் கூடிய அளவில் தான் இருக்கிறது இந்தப் படம்.

தேர்ந்த நடிகர்கள், பிரகாஷ்ராஜ், நாசர், நெப்போலியன் மற்றும் கொஞ்சமாக ஜொள்ளுவிட அசினும் இருக்கிறார்கள் படத்தில். வடிவேலுவின் காமேடி சில இடங்களில் அசிங்கமாக இருந்தாலும் மக்கள் வடிவேலு வந்ததுமே சிரிக்கிறார்கள். பாடல்கள் அனைத்துமே கேட்கக்கூடிய அளவில் இருக்கின்றன. இரண்டு பாடல்களின் நடனமும் நன்றாக இருந்தது.

பிரபுதேவா, விஜய் காம்பினேஷன் என்பதால் இன்னமும் எதிர்பார்த்தேன் நடனத்தில். லாஜிக் ஓட்டைகளே இல்லை என்று சொல்ல முடியாவிட்டாலும், பளீரென்று தெரியுமளவிற்கு ஒன்றும் இல்லை. (விஜய் போலீஸ் என்று விமர்சனம் படித்திருந்ததால் ஒருவேளை அந்த லாஜிக் உதைக்கலையோ என்னவோ.) நிறைய விஷயங்கள் யோசித்துச் செய்திருக்கிறார் பிரபுதேவா. தமிழ்ப்படங்களில் நடன இயக்குநராக பணி செய்திருந்து நன்றாக உதவியிருக்கிறது.

ஓவர் சென்டிமெண்ட் பில்டப்புகள் கிடையாது, ஒன்றுக்கும் உதவாத பஞ்ச் டயலாக்குகள் அதிகம் கிடையாது. பதினெட்டு வயதிற்கு மேற்பட்டவரா, ரத்தம் துப்பாக்கி சினிமாவில் எப்படிப் பயன்படுத்தப் படுகிறது என்று தெரிந்தவரா(அதாவது எல்லாம் நடிப்பென்று - அவ்வளவே) அப்படியென்றால் படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

நான் த டிபார்ட்டட் பார்த்ததனால் வந்த பாதிப்பா என்று தெரியாது, காட்சிகளை அந்தப் படங்களுடன் ஒப்பிட்டுக்கொண்டே வந்தேன். விஜய்யின் படங்களில் கில்லிக்கு அடுத்தது இன்னொருமுறை சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்கலாம் என்று உத்தேசித்திருக்கும் படம் போக்கிரி.

விஜய்யின் ரியாக்ஷன்கள் தெரிந்திருந்ததால் அப்படியொன்றும் அவரிடம் இருந்து பெரிதாக எதிர்பார்த்துப் போகவில்லை. விஜய்க்கு பிரமாதமாக வருகிறது என்று சொல்லமுடியாவிட்டாலும் நகைச்சுவை நன்றாக வருகிறது. ஸ்டண்ட் காட்சிகளில் கொஞ்சம் ரிஸ்க் எடுத்து செய்திருக்கிறார்கள். நன்றாக இருக்கிறது. என்ன த டிபார்டட்டில் சைலன்சர் பொறுத்தப் பட்ட துப்பாக்கி விஜய்யிடம் அது இல்லை, அங்கே பல்க் பல்க் என்று சுட்டதும் ஆட்கள் விழுவார்கள் இங்கே டமார் டமார் என சுட ஆட்கள் விழுகிறார்கள். பிரகாஷ்ராஜ் அந்தச் செல்லத்தை கொஞ்சம் விட்டுவிடலாம். மற்றபடிக்கு ஒரு சிறு கேள்வி, விஜய்யும் அசினும் சந்திக்கும் சமயங்களில் எல்லாம் பின்னணியில் ஓடவிடப்படும் அந்த மியூசிக் டிராக் எங்கேயோ ஒரு ஆங்கிலப் படத்தில் முன்பே கேட்டது போன்ற உணர்வு. யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Read More

Share Tweet Pin It +1

12 Comments

In சுய சொறிதல்

பகுத்தறிவு என்றால் என்ன?

பகுத்தறிவு என்றால் என்ன?

நல்ல கேள்வி ;),

//எனக்கு தெரிந்த வரை நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து அதன் படி நடப்பது தானே பகுத்தறிவு.//

இந்த நல்லது எது கெட்டது எது என்று தீர்மானிப்பது எப்படி. உங்களுக்கு நல்லாதாகப் படும் விஷயம் எனக்கு தவறானதாகப் படும் இல்லையா? சதாம் தலையில் தட்டியதை நான் உட்பட பலர் அவரவர்களுக்கு தெரிந்த விஷயங்களைக் கணக்கிட்டு கெட்டது எனத் தீர்மானிக்கிறோம் என்று வையுங்கள். அமேரிக்காவிலோ, இல்லை ஈராக்கிலோ அவரவர்களுக்குத் தெரிந்த விஷயங்களைக் கணக்கிட்டு நல்லது என்று நினைக்கிறார்கள் என்றால் நீங்கள் சொன்ன தத்துவப்படி இருவருமே பகுத்தறிவு வாதிகள் ஆகிறீர்கள் இல்லையா?

அப்ப இந்தப் பிரச்சனையில் யார் உண்மையான பகுத்தறிவுவாதி எனத்தீர்மானிக்க, யாரை அதிகம் பேர் ஆதரிக்கிறார்களோ அது உண்மை என்று வைத்துக்கொள்ளலாமா என்றால் சிறுபான்மை மக்கள் உதைப்பார்கள், தாங்கள் தான் அறிவாளி என்று அதிகம் பேர் நம்புகிறார்கள் என்பதற்காக உண்மையல்லாத ஒன்று உண்மையாகிவிட முடியாது என்பார்கள்.

ஏனென்றால் உண்மை என்பது ஏதாவது ஒன்று தான் இருக்க முடியும் இல்லையா? வேண்டுமானால் ஜான் நேஷின் கேம் தியரிப்படி, ஒரு பிரச்சனைக்கு பல தீர்வுகள் இருக்கமுடியும் என்ற நம்பிக்கைக்கு வருவோமேயானால். ஆத்தீகவாதிகளும் தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொள்ளலாமேத் தவிர, நாத்தீகர்கள், இனிமேல் தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொள்ளக் கூடாது என்றெல்லாம் சொல்ல முடியாதுதானே.

ஏன்னா பகுத்து நீங்க அறிஞ்சி கடவுள் தான் எல்லாத்தையும் படைத்தார், காக்கிறதையும் அழிக்கிறதையும் கூட அவர்தான் செய்கிறார். கூடவே அரிசியையும் படைத்து அதில் பேரையும் எழுதி வைக்கிறார் போன்ற விஷயங்களைச் சொன்னால் கடவுளை நம்பும் மக்களுக்கு அது பகுத்தறிந்த வாதமாக இருக்கும், இருக்கலாம் தவறில்லை.

இந்த பிரபஞ்சமே ஒரு புள்ளியில் இருந்து வெடித்துக் விரிவானது, ஒரு எலாஸ்டிக்கைப் போல, அந்த எலாஸ்டிக் எப்படி விரிவடைந்தோ அப்படி சுருங்கவும் செய்யலாம். அப்படின்னு அறிவியல் சொன்ன கருத்துக்களை மட்டுமே நம்பும் ஆக்கள்(நாத்தீகவாதின்னு சொல்லலை) அது தான் பகுத்தறிந்த வாதமாக இருக்கும் இல்லையா.

அதனால் என்னுடைய ஒரே தீர்வு. இதுதான் ஆன்மீகவாதிகள் தங்களை பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொள்ளலாம் தவறில்லை, (இது கூட்டமாக சிந்திக்கும் மக்களுக்கும் பொருந்தும் தனியாக சிந்திக்கும் மக்களுக்கும் பொருந்தும்.)

கடேசியாக - வெட்டிப்பயலின் பதிவிலேயே பின்னூட்டம் போட்டிருந்தால் 48ல் ஒன்றாக போயிருக்கும், மேலும் வலைபதிவிற்கு ரேட்டிங் தரும் இன்னபிற விஷயங்களில் என்னுடைய பின்னூட்டத்தால்(நான் கிளிக்கியது, நான் கிளிக்கியத்தற்காக, அவர் கிளிக்கியது இப்படி) அவருக்கு நிறைய நன்மை ஏற்படும்.

இதே நாம ஒரு பதிவு போட்டா, நமக்கு கிளிக்கு ஏறின மாதிரியும் இருக்கும். சொல்ல நினைத்த விஷயத்தை சொன்னமாதிரியும் இருக்கும் நான் நினைத்து இப்படிப் பண்ணுவதால் நானும் கூட ஒரு பகுத்தறிவாளனே.

Read More

Share Tweet Pin It +1

15 Comments

In

ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்ஸும் ஜல்லியடித்தலும்

ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் (Artificial Intelligence A.I.)

இது ஒரு கடலைப்போன்ற விஷயம், அள்ள அள்ள குறையாமல் விஷயங்கள் வந்து குவியும். நான் கணிணியியல் படிக்கத்தொடங்கியதும் என்னைக் கவர்ந்த ஒரு மிக அற்புதமான பிரிவு இந்த ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ். இதைப் பற்றியும் கொஞ்சம் ஜல்லியடித்துவிட்டு போகலாமென்றுதான் இந்த கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.

இயந்திரங்களையும் சுயமாக அறிவுப் பூர்வமாக சிந்திக்க வைக்க நடக்கும் ஒரு அறிவியல் சார்ந்த முயற்சியே இந்த ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ். மிக முக்கியமாக கணிணியை அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைக்க முயற்சி என்றே கூறலாம். கணிணி கண்டுபிடித்த தொடக்கத்திலேயே இது சம்மந்தமான ஆராய்சிக்களும் தொடங்கிவிட்டது. மனிதனைப்போலவே, இயந்திரங்களையும் சிந்திக்க வைக்கவே இந்த முயற்சிகள் பெரிதும் செய்யப்பட்டன.

80 களில், இது சம்மந்தமான முயற்சிகளுக்கு அமேரிக்க அரசாங்கம் அதிக அளவில் பொருள் செலவழித்தது. அதைப்போலவே ஜப்பானும் ஐந்தாம் தலைமுறை கணிணி (Fifth Generation Computer) என்ற பெயரில் இது சம்மந்தமான முயற்சிகளை அதிக பொருள்செலவில் ஊக்குவித்தது. ஆனால் இவை அந்த அளவிற்கு வெற்றிகளை குவிக்காததால், இதற்கான ஃபண்ட்ஸ்(Funds) விரைவில் குறைத்துக்கொள்ளப்பட்டது.

கணிணிகள் தற்சமயம் வரை நாம் செய்யச் சொன்னது போலச் செய்யுமே ஒழிய தானாக சிந்திக்கவோ இல்லை முடிவுகளை எடுக்கவோ செய்யாது. வேண்டுமானால் ஒரு பிரச்சனை சார்ந்த விஷயத்திற்கு மனிதனைப்போல சிந்திக்க கணிணிகளை பழக்கப்படுத்த முடியும். இதற்கு தற்சமயத்தில் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் பயன்படும் சில துறைகளையும் அது எவ்வாறு பயன்படுகிறது என்பதைப் பார்த்தால் புரிந்துவிடும்.

தற்பொழுது இருக்கும் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் முறைகளில் கணிணி தானே சிந்தப்பது என்பதற்கு அது பிரச்சனை சார்ந்து, அதிகம் தனக்குத்தானே கணக்கிட்டுக்கொண்டு முடிவு எடுக்கிறது எனக் கூறலாம். உதாரணமாக செஸ் ஆட்டத்தை எடுத்துக்கொள்வோம் இதில் கணிணி எப்படி விளையாடுகிறது, எப்படி கணக்கிடுகிறது என்பதைப் பார்த்தோமானால் கணிணி எப்படி தானாய் சிந்திக்கிறது அல்லது தானாய் எப்படி சிந்திக்க வைத்தார்கள் என்பதை அறியலாம். முதலில் நாம் 8 குயின் பிராப்ளம் (8 queen problem or n queen problem) என்ற ஒரு முறை உண்டு அதைப்பார்ப்போம்.

செஸ் ஆட்டத்தில் இராணியின் நகர்வுதிறன் உங்களுக்கு தெரிந்திருக்கும், தான் இருக்கும் இடத்திலிருந்து நேராகவும் குறுக்காகவும் நகர முடியும் ராணியால். மொத்தம் 64 கட்டங்கள் கொண்ட செஸ் அட்டையில், ஒரு இராணியின் ஆளுமையை(நேராகவோ, குறுக்காகவோ) மற்றொரு ராணி மறிக்காமல் மொத்தம் எட்டு ராணிகளை வைக்க வேண்டும். இன்னும் சுலபமாக சொல்லவேண்டுமானால் ஒரு செஸ் போர்டில் எட்டி ராணிகளை ஒன்றையொன்று வெட்டாமல் வைக்க வேண்டும்.

இப்படி வைப்பதற்கு கணிணி முறையில் ஒரு கொள்கையை பயன்படுத்துகிறார்கள், அது பேக் டிராக்கிங்(Back Tracking), அதாவது முதலில் ஒரு ராணியை போர்டில் வைத்துவிடுகிறோம் பின்னர், அடுத்த ராணியை வைப்பதற்கான முயற்சியில் கணிணியானது முதலில் தான் எங்கே அந்த ராணியை வைக்க முடியும் என சிந்திக்காமல் எங்கெல்லாம் வைக்க முடியாது என சிந்தப்பதை தான் பேக் டிராக்கிங் என அழைக்கிறார்கள். இதன் காரணமாக அடுத்த ராணியை எங்கு வைப்பது என கண்டுபிடிப்பதில் நமக்கு ஆகும் கணக்கிடுதலின் பணி குறையும். (The backtracking method is based on the systematically inquisition of the possible solutions where through the procedure, set of possible solutions are rejected before even examined so their number is getting a lot smaller. )

கீழே உள்ளதும் இது போன்ற ஒன்றுதான் இது தானாகவே ஒன்றிலிருந்து அடுத்தது என எட்டு ராணிகளை வைக்கும் ஒரு ப்ரோக்கிராமே. நெக்ஸ்ட் ஸொல்யூஸனைக்(Next Solution) கிளிக்கும் பொழுது புதிது புதிதாக எத்தனை முறைகளை (எட்டு ராணிகளை வெட்டாமல் வைக்கும் முறை) பாருங்கள். இவை ஒவ்வொன்றும் தனித்தனியாக எழுதப்பட்டது கிடையாது.



இதை ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸின் முதல் படி எனலாம். இப்படி அடுத்த ராணியை வைப்பதற்கு முன் முறைப்படி நிராகரிக்கவும் பின்னர் அடுத்த வைத்தலைப்பற்றிய கணக்கையிடவும் கணிணிக்கு சொல்லிவிட்டால் கணிணியால், ஒன்றன் பின் ஒன்றாக எட்டு ராணிகளை வைக்க முடியும் இதுதான் முதல் பரிமாணம் கணிணியில் செஸ் ஆட்டத்திற்கு.

இதைப்போலவே உண்மையான செஸ் ஆட்டத்திற்கான கணக்கு முறையும் இப்படித்தான் தொடங்கும் முதலில் எங்கெல்லாம் வைக்க முடியாது எனப்பார்ப்பது. பின்னர். ஏற்கனவே தன் நினைவில் இருக்கும் நகர்த்துதளின் படி அடுத்த நகர்ததலை தேர்ந்தெடுப்பது போன்றவைதான் ஒரு தேர்ந்த சதுரங்கக்கணிணியை உருவாக்குகிறது. அதாவது இந்த வகை ஆர்டிபிஷியல் இன்டெலிஜனஸ் கணிணிகள் முன்னால் நடந்ததையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும், அதாவது முன்னர் விளையாடிய ஆட்டத்தின் நகர்தலை.


கீழே உள்ளதும் ஒரு சதுரங்கக் கணிணியே இதில் நீங்கள் முதலில் நகர்த்த வேண்டும் பின்னர் கணிணி எவ்வளவு கணக்கிடுகிறது எனப்பார்க்கலாம். தன்னுடையதையும்(பிராஸஸர்) நம்முடையதையும். அது போடும் பச்சை மற்றும் மஞ்சள் கோடுகள் அது சிந்திக்கும் அடுத்த நகர்த்தல்கள்.இது ஒரு முழுமையான சதுரங்கக்கணிணி கொஞ்சம் சிந்தித்து விளையாடினால் இதை வெல்லலாம். ஆனால் போன பதிவில் சொன்னதைப்போல டீப்புளு போன்ற உலக வல்லுநர்களையே தோற்கடிக்கும் சதுரங்கக்கணிணிகள் புழக்கத்தில் உள்ளன.



கையெழுத்தை உணர்ந்து கொள்வது(handwriting recognition), பேசுவதை உணர்ந்து கொள்வது(speech recognition), முகங்களை உணர்ந்து கொள்வது(speech recognition), இமேஜ் பிராஸஸிங்(Image Processing), பிறகு நம் அனைவருக்கும் தெரிந்த விளையாட்டு சம்மந்தமான ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்(Game AI).

இந்த ஒவ்வொரு துறையுமே ஒவ்வொரு பெரிய கடலைப்போன்ற ஆராய்ச்சிகளை தன்னுள் அடக்கயது. கையெழுத்தை உணர்வது என்று வைத்துக்கொண்டால், நீங்கள் எழுதும் எழுத்தையோ இல்லை வார்த்தையையோ, தன்னிடம் ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் வார்த்தைகளஇடம் ஒப்பிட்டு கண்டறிவது. இதைப் போலவே முகங்களை அறிவதும், பேசுவதை அறிவதும் பாட்டர்ன் ரெககனைசிங்(Pattern Recoginition) சொல்லப்படும் இந்த ஒப்பிடுதல் முறைகளால் நடைபெறுகிறது.

இதைப் போலத்தான் இமேஜ் பிராஸஸிங் அதாவது ஒரு இமேஜை இன்புட்டாக கொண்டு செய்யப்படும் எல்லா வேலைகளுமே இதில் அடங்கும், இமேஜ்கள் சிக்னல்களாகவோ, புகைப்படங்களாகவோ, இல்லை இரண்டு பரிமான திரைப்படங்களாகவோ இருக்கும். அந்த இமேஜ்களை இருப்பதை விட பெரிதாக்குதல், சிறிதாக்குதல், சுழற்றுதல், காணப்படும் வண்ணங்களை மேம்படுத்துதல், ஒப்பிடுதல், ஒலியில் இருக்கும் இரைச்சலை குறைத்தல் போன்றவைகள் தான் முக்கியமானது.

இதனால் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் என்பது சில அல்லது பல அரிய சூத்திரங்களை கணிதமுறைகளை பயன்படுத்தி கணிணியை ஓரளவு சிந்திக்க வைப்பது. ஆனால் மனித அளவுக்கு சிந்திக்க முடியாததற்கு காரணம் இதுவரை ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸில் இருக்கும் முறைகளின் அடிப்படைகளிலேயே பிரச்சனையிருப்பது தான்.

Computability and computational complexity theories are relevant to AI but don't address the fundamental problems of AI. Intelligence is the computational part of the ability to achieve goals in the world. The problem is that we cannot yet characterize in general what kinds of computational procedures we want to call intelligent.

The ultimate effort is to make computer programs that can solve problems and achieve goals in the world as well as humans. However, many people involved in particular research areas are much less ambitious. A few people think that human-level intelligence can be achieved by writing large numbers of programs of the kind people are now writing and assembling vast knowledge bases of facts in the languages now used for expressing knowledge. However, most AI researchers believe that new fundamental ideas are required, and therefore it cannot be predicted when human level intelligence will be achieved.

Read More

Share Tweet Pin It +1

21 Comments

In சுய சொறிதல் பெண்ணியம்

கற்றதனால் ஆய பயனென்ன?

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றான் தொழாஅர் எனின்.

"தன்னை விட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை." வள்ளுவப் பெருந்தகையின் வாக்கிற்கு விக்கி மக்கள் கொடுத்திருக்கும் விளக்கம்.

உண்மையில் கல்வி கற்பது என்பதை நாம் ஒரு விஷயமாக பெரும்பாலான இடத்தில் எடுத்துக்கொள்ளவே முடியாது. அதனால் தான் இன்றுவரை இந்தியாவில் அரசியல்வாதியாவற்கு கல்வி ஒரு கட்டாயமாக்கப்படவில்லை. என்னதான் நீங்கள் ஐஏஎஸ் படித்திருந்தாலும் புத்தக அறிவு என்பது ஒரு மட்டிற்கு மேல் உதவாது. இதை பல சமயங்களில் நான் நேரிடையாகவேப் பார்த்திருக்கிறேன்.

வேண்டுமானால்(அதுவும் கூட சொல்லமுடியாது தான் என்றாலும்) அமேரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் இது உதவலாம். நிச்சயமாக ஆசிய நாடுகளில் இதை நீங்கள் எதிர்பார்க்கமுடியாது. இதனால் தான் நாம் பெரும்பான்மையான சமயங்களில் அமேரிக்க மக்களை மனதில் கொண்டு நாம் சொல்லும் விஷயங்கள் இந்திய மக்களிடம் எடுபடுவதில்லை.

நான் நிச்சயமாக இது சரியா தவறா என்பதைப் பற்றி பேசவில்லை, உண்மையில் அமேரிக்க மக்கள் செய்வது சரியாகவும், இந்தியர்கள் செய்வது தவறாகவும் இருக்கலாம். ஒரு இந்தியப் பிரச்சனையை அமேரிக்கக் கண் கொண்டு பார்ப்பதற்கும், இந்தியக் கண் கொண்டு பார்ப்பதற்கும் வித்தியாசம் உண்டு. இல்லையா? அதுவும் மதம் சார்ந்த பிரச்சனைகள், பெண்ணியம் போன்ற பிரச்சனைகளை அமேரிக்கக் கண் கொண்டு பார்ப்பதில் நிறையப் பிரச்சனை உண்டு.

இதைப் பற்றி யோசிக்கும் பொழுது முன்பொரு காலத்தில் கவனத்தை ஈர்த்த விஷயம் நினைவில் வருகிறது. எந்த ஒரு விஷயத்தையும் செய்வதற்கு மூன்று முறைகள் உண்டென்று அமேர்க்கர்கள் சொல்வார்களாம், சரியான வழி, தவறான வழி, இந்த இரண்டு வழிகள் நமக்கும் தெரிந்திருக்கும் மூன்றாவது வழி அமேரிக்கன் வழி. அதாவது In three ways you can solve a problem, right way, wrong way and the american way.

இது சும்மா(எனக்குத் தெரிந்த மொழியென்றும் வைத்துக்கொள்ளலாம்.)

நீ எம்பிபிஎஸ் படித்திருக்கிறாய் வரதட்சணை வாங்குகிறாயே என்று கேட்பது அமேரிக்கன் கண் கொண்டு பார்க்கும் பொழுது சரியானதாகவே இருக்கலாம். இதனாலெல்லாம் இந்தியக் கண் கொண்டு பார்க்கும் பொழுது எனக்குத் இது தவறாகத் தெரிவதாகவும் நான் பழமைவாதியென்று பைத்தியக் காரனென்றும் சொல்வீர்களானால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

என் பதில் வரதட்சணை வாங்குவது தவறு, அவன் படித்தவனாக இருந்தாலும் படிக்காதவனாக இருந்தாலும், அதைப்போலவே பெண்ணியம் சார்ந்த கருத்துக்களும். என் பெண்ணியக் கருத்துத்கள் என்னுடனேயே இருக்கட்டும். ஆனால் ஒருவர் பெண்ணியக் கருத்துக்களைப் பேசுவதாலேயே அறிவுள்ளவர் என்றும், கற்றதனால் ஆய பயனை அடைந்தவர் என்றும் சொல்ல முடியாதல்லவா.

அதே போல் ஸ்டிரிங் தியரிப்படி, நாம் பார்க்கும் பரிமாணங்களை விடுவும் அதிகப் பரிமாணங்கள் இருக்க வாய்ப்பிருப்பதாக நம்பும் இந்த அறிவியல் காலத்தில் பெண்ணியத்திற்கு மட்டும் இரண்டு பரிமாணங்கள் தான் இருக்க முடியுமா? அதாவது பெண்ணியத்தை ஆதரிப்பவர்கள், பெண்ணியத்தை எதிர்ப்பவர்கள்.

பெண்ணியம் என்றால் என்ன? அது எப்படிப்பட்டது கருப்பா சிவப்பா, நீளமா குட்டையா என்று அறியாத என்னைப் போன்ற மேல்மாடி காலியானவர்களை என்ன செய்வது. நீங்கள் உங்கள் மனதிற்குள் நினைத்துக்கொள்ளும், அல்லது கோர்வையான வார்த்தைகளால் படிமமிட்டு சொல்லும் ஒன்றை விடவும் விலகியதாக ஏன் பெண்ணியம் இருக்கக்கூடாது. அதாவது உங்களுக்கும் பிடிபடாதா ஒரு பரிமாணமாய்.

பெண்ணியம் பற்றி கட்டுரை கட்டுரையாக எழுதுவதாலேயோ, உங்களுக்கு ஒத்துவராத கருத்துக்களைக் கொண்டவர்களை(இந்த விஷயத்தில்) மூடன் என்று சொல்வதாலேயோ மட்டும் ஒருவர் பெண்ணியவாதி ஆகிவிட முடியாது. அதே போல் பெண்ணியம் பற்றி எழுதும் பொழுதெல்லாம் நக்கல் தரும் பதிலை ஒருவர் தருவதனாலேயே ஒருவரை பெண்ணியம் பற்றிய சிந்தனை இல்லாவர் என்றும் சொல்லமுடியாதில்லையா. ரொலான் பார்த் சொல்வதைப் போல Text ஐ ரீடர்லி டெக்ஸ்ட் ரைட்டர்லி டெக்ஸ்ட் என்று இருவகைப் படுத்தலாம் என்றால். சிலருடைய எழுத்துக்கள் sub-text பொருந்திய ரைட்டர்லி டெக்ஸ்ட் ஆகவும், சிலருடையவை மேம்போக்காக எழுதப்படும் ரீடர்லி டெக்ஸ்ட் ஆகவும் ஆகிவிடுவது அவரவர்களுடைய குற்றம் இல்லை தானே.

நாம் அனைவரும் அவரவர்களுக்குப் பொறுந்தும், கண்ணாடியின் முன் நிற்கும் பொழுது அழகாகக் தெரியும் முகமூடியை அணிந்திருக்கிறோம், அப்படி அணிந்திருக்கிறோம் என்ற உணர்வேயில்லாமல். முகமூடி பெரும்பாலும் கழட்டப்படுவதில்லை, ஏனென்றால் உண்மை நிச்சயமாய் தாங்கக்கூடியதாக இருப்பதில்லை பெரும்பான்மையான சமயங்களில். ஏனென்றால் நமக்கு முகமூடியில்லாத உண்மை முகங்களை பிடிப்பதில்லை, பொய் என்று தெரிந்திருந்தும் அப்படியான ஒன்று உண்மையாகவே இருக்க முடியாதென்று தெரிந்திருந்தும் நாம் முகமூடிகளைத் தான் விரும்புகிறோம் இல்லையா.

முகமூடி இல்லாமல் போய்விட்ட சமுதாயம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கும் ஒரு காலத்தில் முகமூடி இல்லாமல் இருப்பது தவறுதான். எப்படி குருடர்களை மட்டும் கொண்ட ஒரு நாட்டில் ஒற்றைக் கண் உடையவன் அரசனாக முடியுமோ அப்படி. கடேசியாகச் சொல்லிக் கொள்வது ஒன்றைத்தான் கல்வியை அடிப்படையாக மட்டும் வைத்து எதையும் மதிப்பிடாதீர்கள். அவ்வளவே.

-----------------

இது எழுதப்பட்டதன் நோக்கம் வெளிப்படையாய், கற்றதனால் ஆய பயனென்ன? என்று நண்பரொருவர் எழுதிய தொடர் கட்டுரைக்கு, எழுதிய பின்னூட்டம் பதிவிடப்படாமல் அதற்கான காரணமும் அவரது மொழியில் அதாவது எனக்கு பி(Spelling mistake இல்லை)ரியாத மொழியில் இருப்பதால். அந்தப் பின்னூட்டத்தை இங்கே வெளியிடும் உத்தேசம் அவ்வளவே. உண்மையானப் பின்னூட்டம் என்னிடம் இல்லாத காரணத்தால், நான் சொல்ல விரும்பிய செய்தி மட்டும் இங்கே.

"உங்கள் கட்டுரையை புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு எனக்கு மேல்மாடி காலியென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்களின் இந்தக் கட்டுரைக்கு கற்றதனால் ஆய பயனென்ன என்று தலைப்பிட்டுருப்பதற்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் உண்டா? சொல்வீர்களானால் புரிந்து கொள்ள முயற்சி செய்வேன் என்பது."

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In Sci-fic சிறுகதை

déjà vu

மோகனுடைய காத்திருப்பு ஒரு முடிவுக்கு வந்திருந்தது. இன்றோடு அவன் காத்திருக்கத் தொடங்கி சரியாய் ஏழாண்டு நிறைவடைகிறது. இன்று அவனுக்கு விடுதலை நாள், தான் செய்த கொலைக்கான தண்டணைக்காலம் இன்றோடு முடிவடைகிறது என்பதற்காக மட்டும் அவன் இந்த நாளுக்காக காத்திருக்கவில்லை. அவன் செய்த கொலையையே இல்லாமல் செய்துவிடும் வல்லமை பெற்ற நாள்தான் என்பதற்காகவும்தான்.

இன்னும் அந்த நாள் பசுமையாக அவன் மனதில் இருக்கிறது. அவனுடைய நண்பனுக்கும் அவனுக்குமிடையில் ஏற்பட்ட தொழில்முறை பிரச்சனைகளின் காரணமாக, ஒரு அசாதாரணமான சூழ்நிலையில் மோகன் அவன் நண்பனை கொன்றுவிட்டான். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ஒரு நிமிட குழப்பத்தில் அவன் அந்தக்கொலையை செய்துவிட்டான். அணுஆயுதப்போரால் உலகமே பேரழிவுக்கு உட்பட்டிருந்த காலமது. உயிரின் மதிப்பு மிக அதிகமாகயிருந்தது. அவனுடைய நண்பன் அவனை ஏமாற்றியிருந்த பொழுதும் அது சரிவர நிரூபிக்கப்பட்ட பொழுதும் அவனுக்கு ஏழாண்டு காலம் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. மனித குலமே அழிவின் பிடியில் இருந்ததால், உலகின் எல்லா நாடுகளிலுமே மரணதண்டனை இல்லாமல் இருந்தது.


முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர் என்று மோகன் படித்திருந்த உலகப்போர்கள் நடந்துமுடிந்த மூன்றாவது நூற்றாண்டில் பூமியை பெரும் ஆபத்திற்குள்ளாக்கிய அணுஆயுதயுத்தம் நடைபெற்றது. ஒரு நூற்றாண்டாகவே எதிர்பார்க்கப்பட்ட யுத்தம் நடந்தது பலருக்கு வியப்பை அளித்திருக்கவில்லை. ஆனால் அதன் பிறகு கணிணித்துறை மிக அபரிமிதமான வளர்ச்சியை அடைந்திருந்தது. ஐன்ஸ்டினின் புவியீர்ப்பு விசையையும், க்வாண்டம் சக்திகளையும் ஒரே சமன்பாட்டில் ஒருமித்து அறியும் ஆசை நிறைவேறியிருந்தது. க்வாண்டம் கம்ப்யூட்டர்கள் செயல்பாட்டிற்கு வந்திருந்தன.


ஸ்டிரிங் தியரி என அறியப்படும் பல பரிமாணக் கொள்கை அதன் எல்லைகளைத் தொட்டிருந்த காரணத்தினால், வார்ம்ஹோல் எனப்படும் மனிதன் கடந்த காலத்தை நோக்கி பயணம் செய்யும் உதவும் இயந்திரங்கள் உருவாக்கபட்டிருந்தன. இதன் காரணமாக ஐன்ஸ்டனின் சில கோட்பாடுகள் தவறானவை என்றும் நிரூபிக்கப்பட்டிருந்தன. அதாவது விண்வெளி வளைந்திருக்கிறது என்று சொன்ன ஐன்ஸ்டின் விண்வெளியை நீட்டவோ மடக்கவோ முடியுமென்றார். ஆனால் விண்வெளியை சிறிய அளவில் வெட்டுவதென்பது முடியாதென்று நம்பியிருந்தார். ஆனால் ஸ்டிரிங் தியரி விண்வெளியை சிறிய அளவில் வெட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை நிரூபித்திருந்தது. நாம் சாதாரணமாய் அறிந்திருந்த முப்பரிமாணங்களை விடவும் அதிகமான பரிமாணங்களாலும் நாம் இதுவரை அறிந்திராத இடங்களாலும் நாம் சூழப்பட்டிருக்கிறோம் என்பதான ஒன்றை ஸ்டிரிங் தியரி விளக்கியது.


கடந்த காலத்தை நோக்கி பயணம் செய்யும் ஊர்திகள் கண்டறியப்பட்டிருந்தாலும், அதன் துணை கொண்டு வரலாற்றை மாற்ற நினைக்கும் முயற்சிகளை அடியோடு நிறுத்திவிடும் எண்ணத்தால் இதன் அத்தனை செயல்பாடுகளும் கணிணிமனிதர்களால் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. அதாவது ஆரம்பக்காலத்தில் நடைபெற்ற பரீட்சிதார்த்த முயற்சிகள் உட்பட்ட, மனிதனால் நடைபெறக்கூடிய சிறு தவறுகளும் நடைபெற்று விடாமல் இருப்பதற்காக கணிணிமனிதர்களால் கட்டுப்படுத்தப்பட்டு, வரலாறு மாற்றப்படுவது முற்றிலுமாக தடுக்கப்பட்டிருந்தது.


ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, சோதனை முயற்சியாக கொலைகள் நடந்து அதற்கான தண்டனையை கொலைசெய்த நபர் அனுபவித்துவிட்ட நிலையில் கடந்த காலத்திற்கு செல்லும் ஊர்திகளைப் பயன்படுத்தி அந்த கொலை நடந்ததற்கு சில விநாடிகளுக்கு முன்னர் சென்று அந்தக் கொலைகளை நிறுத்திவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டுவந்தன. ஆனால் இதிலும் சில விதிமுறைகள் இருந்தது, அதாவது கொலை செய்த மனிதனின் மனதிலிருந்து, அவன் கடந்த காலத்தில் கொலை செய்த அந்த நொடியிலிருந்து சோதனை முயற்சிக்கான காலம் வரையிலான நினைவுகள் அகற்றப்படும். அவன் அந்தக்கொலை செய்த குறிப்பிட்ட நிமிடத்தில் எப்படிப்பட்ட மனநிலையில் இருந்தானோ அதே மாதிரியான ஒருமனநிலையை அவர்கள் உருவாக்குவார்கள்.


வரலாற்றை தாங்களாகவே மாற்றாமல் அந்த மனிதனின் மனம் அந்த குறிப்பிட்ட சூழ்நிலையில் தானாகவே மாறி கொலை செய்வது தடுக்கப்படுகிறதா? இரண்டாவதாக ஒரு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் கொலை செய்யாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் எப்படிப்பட்டவை என்பதற்கான ஆராய்ச்சி நடந்துவந்தது. அப்படி அந்த சூழ்நிலையில் கொலை செய்யாமல் இருந்தால் அவர் அந்த நொடியிலிருந்தே தன்னுடைய வாழ்க்கையை மீண்டும் வாழலாம். அப்படியில்லாமல் மீண்டும் கொன்றுவிட்டால், அவர் தண்டனைக்காலம் முடிந்த நொடியிலிருந்து தன் வாழ்க்கையை தொடரலாம். இதனுடைய ஒரே பயனாக அந்த கொலை செய்த நபரின் சமுதாய மதிப்பு மாற்றப்படும். அதாவது அவர் கொலை செய்யாதவராக சமூகத்தில் மீண்டும் வாழ்வதற்கான ஒரு சூழ்நிலை அமையும்.


ஆனால் இதுவரை ஏறத்தாழ ஆயிரம் மனிதர்களிடம் நடைபெற்ற இந்த சோதனையில் இதுவரை எவருமே மீண்டும் அந்தக்கொலையை செய்யாமல் இல்லை. ஆனாலும் ஒவ்வொரு கொலையாளியும் அந்த முயற்சியை செய்யவே விரும்பினர், மோகனைப்போல.


"நீங்கள் சோதனை முயற்சிக்குத் தயாரா?" கணிணிக்காவலர்கள் கேட்டதும், ஒருவழியாய் மீண்டும் சுயநினைவிற்கு வந்தான் மோகன்.


அவன் தயார் என்று சொல்ல அந்த கணிணிக்காவலர்கள் மோகனை வார்ம்«?£ல் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். மோகன் இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தான். அந்த முயற்சி இதுவரை வெற்றியை சந்தித்திருக்காத நிலையில் கூட அவன் முழுமனதாக தான் அந்த கொலையை மீண்டும் செய்துவிடமாட்டோம் என்று நம்பினான்.


அதற்காக அவன் தீவிரமான மனப்பயிற்சி எடுத்துவந்தான். தன்னுடைய நினைவை அவர்கள் அழித்துவிடுவார்கள் என்பது அவனுக்குத் தெரியும். இருந்தாலும் மனதை ஒருவிதமாகப் பக்குவப்படுத்திவிட்டால் அந்த கொலைசெய்யும் நேரத்தில் மனமானது அன்னிச்சையாக கட்டுப்பட்டுவிடும் என்று நினைத்திருந்தான். இதற்காக அவன் இது போன்ற ஒரு சோதனை முயற்சி செய்கிறார்கள் எனத்தெரிந்த நாளிலிருந்தே பயிற்சியில் ஈடுபட்டு வருகிறான். மோகனை பொறுத்தவரை அவன் கொலை செய்தது சற்றும் எதிர்பாராமல் நடந்த ஒரு தவறு. சூழ்நிலைக்கைதியாக அவன் அன்று கொலை செய்துவிட்டான் ஆனால் இன்னொறு சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த கொலை நிச்சயமாக நடக்காது என்று அவன் மனம் கணக்குப்போட்டது.


மோகன் இவ்வாறு மனதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது சிறை நிர்வாகத்திற்கே தெரிந்திருந்தது. அவர்களுக்கும் ஒருவாறு இந்தமுறை அவன் நிச்சயமாய் சூழ்நிலையை வென்றுவிடுவான் என்றே தோன்றியது. அப்படி அவன் வென்றுவிட்டால் வரலாற்றை மாற்றிய முதல் மனிதன் என்ற பெயர் அவனுக்குக் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக அரசாங்கம், சிறை நிர்வாகம், கடந்த காலத்திற்கு செல்வது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அனைவருமே ஒருவாறு இந்த நாளுக்காக காத்திருந்தனர். அவன் அப்படி சூழ்நிலையை வென்றுவிட்டால் என்ன நடக்கும் என்பதைப்பற்றி கடந்த சில மாதங்களாகவே விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். கேயாஸ் தியரியின் படி ஒரு வண்ணத்துப்பூச்சியின் சிறகடிப்புக்கூட பெரும்மாற்றத்தை உருவாக்கிவிடும் சூழ்நிலையில் அந்த கொலை இல்லாமல் போனால் என்னாகும் என்பதற்கான ஆராய்சிகள் தீவிரமாக நடந்துவந்தது.


அந்த சோதனை முயற்சியின் பொழுது இரண்டு கணிணிமனிதர்கள் அவனுடன் கடந்த காலத்திற்கு வருவார்கள். அவன் அந்த கொலையை மீண்டும் செய்துவிட்டால் மீண்டும் அவனை நிகழ்காலத்திற்கு கொண்டுவரும் பொறுப்பு அவர்களுடையது. இதுவரை நடந்த முயற்சிகள் அனைத்திலும் இது சற்றும் தவறில்லாமல் நடந்துள்ளது. கணிணி மனிதர்கள் மோகனை அழைத்துக்கொண்டு வார்ம்«?£லிற்கு வந்திருந்தார்கள். அந்த வார்ம்«?£லின் ஒரு பகுதியை அதிநுட்பம் வாய்ந்த விண்வெளி ஊர்தியின் மூலமாக ஒளியின் வேகத்திற்கு முடுக்கிவிடப்பட்டு பின்னர் சாதாரணமான நிலைக்கு வரும், இப்பொழுது கிடைக்கும் நேரயிடைவெளியின் பயனாய் மற்றொரு பக்கம் இருக்கும் மோகன் பழங்காலத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.


இவ்வாறாக மோகனும் அந்த இரண்டு கணிணி மனிதர்களும் கடந்த காலத்திற்கு வந்திருந்தனர். மோகனின் நினைவுகள் அந்த நிமிடம் வரை மட்டும் விட்டுவிட்டு மற்றவை முழுமையாக அழிக்கப்பட்டிருந்தது. மோகனைப்பொறுத்த வரை நிகழ்காலத்திற்கு வந்திருந்தான், அவனுக்கு மற்ற சம்பவங்கள் முற்றிலுமாக நினைவில் இல்லை. கோபமாக தன்னை ஏமாற்றிவிட்ட நண்பனை பழிதீர்ப்பதற்காக, அவனுடைய அடுக்கு மாடி குடியிறுப்பை நெருங்கிக் கொண்டிருந்தான். மோகன் நிச்சயமாய் அவனுடைய நண்பன் இப்படிச் செய்வான் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. இதன் காரணமாக ஏற்பட்டிருந்த நஷ்டத்தை அவனால் பலகாலம் கடுமையாக உழைத்தாலும் அடைக்க முடியாதென்பது நன்றாகத் தெரிந்துவிட்டது.


நண்பனுடைய அறைக்குள் நுழைந்தவன் நேராய் அவன் கொண்டு வந்திருந்த ஆதாரங்களைக் காட்டினான்.


"ஏன் என்னை ஏமாத்தின, உன்னை எவ்வளவு நம்பியிருந்தேன் தெரியுமா?" அவன் கேட்க நண்பனால் பதிலெதுவும் சொல்லமுடியவில்லை.


"என்னை மன்னிச்சிறு மோகன், தெரிஞ்சு நான் இதை செய்யலை. நான் போட்டிருந்த கணக்குகள் தப்பாயிடுச்சி. இன்னும் ஒரு வருடம் டைம் கொடு எல்லாவற்றையும் சரிசெய்து தர்றேன்." அவன் சொல்லிக் கொண்டிருக்க மோகனுடைய கோபம் அளவுக்கதிகமாகியது. தன்னை தெரிந்தே ஏமாற்றியது மட்டுமில்லாமல் இவ்வளவு நடந்தபிறகும் தன்னிடம் நடிக்கிறானே என்று நினைத்தவன் தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து கைத்துப்பாக்கியை எடுத்தான்.


"உன்னையெல்லாம் மன்னிக்கவே கூடாது, நீ பண்ணினது நம்பிக்கைத் துரோகம் அதற்கு ஒரே ஒரு தண்டனை தான். அது நீ சாகறது மட்டும்தான்." சொல்லியவன் அவனை நோக்கி துப்பாக்கியில் குறிவைத்தான். அந்த நிமிடம் அவன் மனது இந்த கொலை அவசியமா என் ஒருமுறை யோசித்துப்பார்க்க வைத்தது. ஆனால் அந்த நினைவுகளை ஓரங்கட்டியவனாய் துப்பாக்கியின் குதிரையை அழுத்தினான். மூன்று குண்டுகள் வலது தோல்பட்டையில் ஒன்றும், கன்னத்தில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாய்ப் பாய, அவனுடைய நண்பன் ரத்தச்சேற்றில் அந்த இடத்திலேயே உயிரிழந்தான்.

மீண்டும் ஒருமுறை மனிதனால் வரலாறு மாற்றப்படாமல் நிகழ்காலத்திற்கு மோகனுடன் திரும்பினர் கணிணிமனிதர்கள். மோகன் அவனுடைய தண்டனைக்காலம் முடிவடைந்ததால் விடுவிக்கப்பட்டான். முன்பு மோகனால் அவனுடைய நண்பன் கொல்லப்பட்டதற்கும் தற்சமயம் சோதனை முயற்சியில் கொல்லப்பட்டதற்குமான நிமிடக்கணக்கில் மைக்ரோ செகண்டுகளில் வித்தியாசம் இருந்தது. அதாவது மோகனுடைய பயிற்சியால் முன்பில்லாதது போல் தற்சமயம் ஒரு மைக்ரோ நிமிடம் அவனுடைய மனம் யோசித்தது. ஆனால் அதற்கான பலன் கிடைக்காவிட்டாலும் அந்த ஒரு மைக்ரோ நிமிட வேறுபாட்டை ஆராய்ச்சியாளர்கள் déjà vu குறித்துக்கொண்டனர். பிற்காலத்தில் வேறுவொரு மனிதனால் வரலாறு மாற்றப்படுமா என்ற கேள்வியுடன் அவர்கள் தங்கள் ஆராய்ச்சியை இன்னும் தீவிரமாகத் தொடர்ந்தனர்.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In Only ஜல்லிஸ் கிரிப்டோகிராபி

கிரிப்டோகிராபியும் ஜல்லியடித்தலும் 1

நான் இப்படியே ஜல்லியடித்துவிட்டு போய்விடலாம்னு நினைத்தேன் ஆனால் அது முடியாது போலிருக்கிறது. பரவாயில்லை ரொம்ப விளக்காமாகவும் போகாமல் ரொம்ப மேலோட்டமாகவும் போகாமல் விவரிக்க முயல்கிறேன்.

இரண்டாம் உலகப்போரின் முக்கயத்துவத்தை கருத்தில் கொண்டு, எல்லா முக்கயமான நாடுகளும் தங்கள் தகவல்களை பாதுகாப்பாக பரிமாற, பலமுறைகளில் இந்த கிரப்டோகிராபியை பயன்படுத்தினார்கள். இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியினர், உடைப்பதற்கு மிகவும் கடினமான ஒரு சிப்பரை தாங்கள் வைத்திருக்கும் எனிக்மாவை(Enigma) உருவாக்கி உபயோகித்து வந்திருந்தார்கள்.

இந்த இயந்திரத்தின் பழைய சிப்பர்களை போலந்து நாட்டைச்சேர்ந்த மரியன் ரெஜெவ்ஸ்கி(Marian Rejewski) என்பவர் அவரது குழுக்களை பயன்படுத்தி 1932ல் உடைத்தார். ஆனால் அடுத்தடுத்த மாறுதல்களை செய்துகொண்டே இருந்த ஜெர்மானியர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், தான் வைத்திருந்த அந்த இயந்திரத்தின் சிப்பரை உடைக்கும் சூத்திரத்தை(Algorithm!!!), இங்கிலாந்தினரிடமும், பிரெஞ்சுக்காரர்களிடமும் தந்துவிட்டார். அதாவது போலந்து நாட்டுக்காக வேலைசெய்யாமல் இங்கிலாந்துக்காக வேலை செய்ததாக கூறப்படுகிறது.

இப்படியாக அந்த சூத்திரம்(Algorithm) கைமாறி கைமாறி அமேரிக்காவினரிடம் வந்தடைந்தது. அவர்கள் தான் அப்பொழுது ஜெர்மானியர்கள் பயன்படுத்தி வந்த ஒன்டைம் பேட்(One time pad) எனப்படும், ஒருமுறையை பயன்படுத்தினர், இந்த முறை தியர விதிமுறைகளின் படி உடைக்கவேமுடியாத ஒரு விஷயம். அதாவது உங்கள் உண்மையான தகவல்களுடன், தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சில வார்த்தைகளும் அதே அளவில் கலந்து உருவாக்கப்படும் ஒரு விஷயம். இந்த முறையை அதன் முறைகளின் மூலம் சரியாக உபயோகித்தால் உடைக்கவேமுடியாது.

ஆனால் அமேரிக்கர்கள் இந்த முறையைத்தான் சுமார் 30,000 அல்லது அதற்கு மேற்பட்ட ஆட்களைக்கொண்டு உடைத்தார்கள்.



அமெரிக்கர்கள் Enigma வை உடைக்க பயன்படுத்திய இயந்திரம். SIGABA, 2001 ஆம் ஆண்டு அமெரிக்கர்களால் வெளியிடப்பட்டது.


இதற்கு ஆரம்ப காலத்தில் இருந்து உதவிய போலந்து நாட்டுக்காரர்கள் மற்றும் இங்கிலாந்து, பிரெஞ்ச் ஆகிய நாடுகளஇல் வாழ்ந்த கணிதமேதைகளும் உதவினார்கள். இப்படி உடைக்கப்பட்ட சிப்பர்களை வைத்துத்தான் Battle of Britan, மற்றும் Battle of Atlantica வை நேசப்படைகள் வென்றன.

அப்பொழுது ஜெர்மனியர்களிடம் இருந்த நீர்முழ்கி கப்பல்கள் மிகவும் பிரபலம். எப்பொழுது வருவார்கள், எப்பொழுது தாக்குவார்கள் என்பதே தெரியாது, தாக்குதல் முடிந்துவிடும், துறைமுகம் சின்னாபின்னமாகும். அதுவும் கடல்பலத்தையே பெரிதும் நம்பியிருந்த இங்கிலாந்திற்கு இது மிகவும் கடினமான ஒரு சூழ்நிலை.

ஆரம்பத்தில் போலந்து நாட்டினர் எனிக்மாவை எப்படி உடைப்பது என்று இங்கிலாந்தினரிடம் காண்பித்த பொழுது, இவ்வளவு கடினமானதா என்றும் இதை உடைக்கத்தான் வேண்டுமா என நினைத்ததாகவும் சொல்கிறார்கள். இதுமட்டும் நிகழ்ந்திருக்காவிட்டால் நினைத்துக்கூடபார்க்கமுடியவில்லை. பதுங்குக்குழிக்குள் இரண்டு தரப்பு பதுங்கிய இருந்த காலம் அது, இரண்டு பக்கமுமே போர் நடக்கவில்லை, ஹிட்லர் அணுகுண்டு தயாரிக்கும் அத்துனை வேலைகளையும் முடக்கிவிட்டிருந்தார். அவர்களுடைய மிகப்பிரபலமான வி2 வை இன்னும் அதிக திறனுள்ளதாக்கி, கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளாக தயாரிக்கவும் சொல்லியிருந்தார்.

இரண்டு ஆண்டுகள் இப்படி விட்டிருந்தால், அவர்கள் தயாரித்திருப்பார்கள், உலகம் நினைத்திருக்காத ஒன்று நிகழ்ந்திருக்கும், எப்படியோ அமேரிக்கா அந்தச் சிப்பர்களை உடைத்து அவர்கள் நீர்மூழ்கி கப்பல்களின் வருகையை முன்பே அறிந்து தாக்குதல்களை சமாளித்தது. இதில் இன்னொரு பிரச்சனை அதாவது, இப்படி தாங்கள் எனிக்மாவை உடைத்துவிட்ட விவரமும் தெரியக்கூடாது என்பதுதான் அது. இல்லையென்றால் அந்த சிப்பரை மாற்றி புதிதான ஒன்றை உபயோகிக்கி தொடங்கிவிடுவார்கள்.

நீர்மூழ்கிக் கப்பல்களுடனேயே செல்லும் விமானங்கள், அந்த இலக்கை சென்றடைந்ததும் திட்டம் சரியாக நிறைவேற்றப்பட்டதா, அல்லது தங்கள் தகவல் இடையில் மறிக்கப்பட்டு உடைக்கப்பட்டதா என்று கவனித்துக்கொண்டேயிருந்தார்கள். அவர்களுக்கு அது தெரியாமலும் அதே சமயம் நீர்மூழ்கிக்கப்பல்களை விதிவசத்தாலே முறியடித்ததைப்போல் காட்டினர் நேசப்படையினர்.

இப்படியாக இரண்டாம் உலகப்போரின் முடிவையே மாற்றிய பெருமை அமேரிக்க கோட் பிரேக்கர்ஸ்க்கு உண்டு. இதன் மூலம் சொல்லப்போனால் ஜெர்மானியர்களுடைய அத்துனை விஷயங்களும் நேசப்படைகளுக்கு தெரிந்திருந்தது.

இப்படியே இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு, அமேரிக்காவின் எஸ்ஐஎஸ்(SIS) எனப்படும் இந்த கிரிப்டோகிராபிக்கான பிரிவின் ஊழியர்களின் எண்ணிக்கை குறைத்துக்கொள்ளப்பட்டது, ஆனால் சிப்பர்களை உடைப்பதில் இவர்கள் பின்தங்கிவிடவில்லை, சூழ்நிலையும் இவர்களை விடவில்லை. இந்தச் சமயத்தில் தான் கோல்ட் வார்(Cold War) எனப்படும் குளிர்போர் என்று தமிழாக்கத்தில் நக்கலாக அழைக்கப்படும் ஒரு மறைமுக யுத்தம் அமேரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நடந்து வந்தது. இதன் முக்கிய காரணங்களில் ஒன்று, ஜெர்மனி. அதாவது இரண்டாம் உலகப்போருக்குப்பின்னர், ஜெர்மனி இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பகுதி அமேரிக்க சார்பு நேசப்படைகளிடமும், ஒரு பகுதி இரஷ்யர்களிடமும் இருந்தது.

இதனால் உளவறிய அவர்கள் இரஷ்யர்களின் சிப்பர்களையும் உடைக்கவேண்டிய ஒரு கட்டாய சூழ்நிலை. இதில் ஒரு விஷயத்தை கூறிப்பிடவேண்டும் அது இந்த எஸ்ஐஎஸ் எனப்படும் அமேரிக்க கிரிப்டோபிரிவு அமேரிக்க காங்கிரஸின் இரண்டே பேருக்கு மட்டும் தான் தன் விவரங்களை சொல்லிக்கொண்டு வந்திருந்தது. அதாவது முழு சுதந்திரம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

இது போன்ற இரண்டாம் உலகப்போரைப்பற்றி விவகாரங்கள் எப்படி வெளியே தெரிந்ததென்றால் அமேரிக்கர்கள் இரண்டாம் உலகப்போரைப்பற்றிய சில கோப்புக்களை, வெளியிட்ட காரணத்தால் மட்டும் சாத்தியமானது. அதைப்போல் இரஷ்யர்களின் சிப்பர்களையும் உடைத்த விவரங்கள் இன்னும் ஐம்பது ஆண்டுகள் கழித்து விவரமாகக் கிடைக்கலாம். ஆனால் இரஷ்யர்களின் சிப்பர்களை அமேரிக்கர்கள் உடைத்துவிட்டனர் என்பது உறுதி.

இதை வைத்துத்தான் இரஷ்ய அணுஆயுத ஏவுகணைகளை கியூபாவில் நிறுத்திவைத்த விவகாரத்தை அமேரிக்க அரசாங்கம் சாதுர்யமாக முறியடித்தது. அதுமட்டுமில்லாமல், இரண்டு ஜெர்மனிகளையும் இணைத்தது, பெர்லின் சுவரை உடைத்தது போன்ற இன்னபிற விவகாரங்களிலும் இதன் ஆளுமை பின்னால் இருக்கிறது. இன்னும் சொல்லவேண்டுமானால் இரஷ்யாவின் இரும்புத்திரைக்குள் அமேரிக்காவின் கை மிக நீண்டு இருந்திருக்கிறது.

ஆனால் 1970 களுக்குப்பிறகு, அமேரிக்க அரசு இந்த கிரிப்டோ விவகாரத்தை கொஞ்சம் நெருக்கிப்பிடித்தது, அதாவது அமேரிக்க கிரிப்டோ ஆட்கள் தங்கள் நாட்டினரின் செய்திகளையே உளவரிகிறார்கள் என்பது போன்ற விவரங்கள் வர அவர்களின் சுதந்திரம் குறைக்கப்பட்டது என சொல்லிக்கொள்கிறார்கள். (உண்மையில் சொல்லமுடியாது.) இப்பொழுது பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்ட என்எஸ்ஏ(NSA) என அழைக்கப்பட்டு வரும் அமேரிக்காவின் கிரிப்டோ அலுவலகம் உலகத்தின் மிக உயர்ந்த பாதுகாப்பு வசதிகளை உள்ளடக்கியது.

அதேப்போல் அவர்களது நடவடிக்கைகள் மட்டும் கிடையாது, உள்ளிருக்கும் அமைப்பு பற்றிய எந்த ஒரு புகைப்படமோ இல்லை, அவர்கள் உபயோகிக்கும் இயந்திரங்கள் போன்றவற்றின் விவரங்களோ வெளியிடப்படவில்லை. உலகத்தையே அமேரிக்கா ஒற்றரிந்து வருகிறது என்பதுமட்டும் உண்மை. இடையில் சில சமயங்களில் அமேரிக்காவிற்கும் அடி சறுக்கியிருக்கிறது. அது இந்தியா போக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்போகும் விவரமே தெரியாதது, மற்றும் செப். 11 தாக்குதல் போன்றவை ஆகும்.

செப். 11 தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஒரு அமேரிக்க அதிகாரி கூறுகையில், இந்த வகையான முறைகளால், இப்பொழுது 40 பிட்களுக்கு(40 bits) மேற்பட்ட கிரிப்டோகிராபியின் கீக்கள் இப்பொழுது வெளிநாட்டுக்கு தருவது/செல்வது கிடையாது. இதுபற்றி விவரமாக பிறகு பார்க்கலாம். தற்பொழுது கோல்டு வாரும் முடிந்துவிட்ட நிலையில் அமேரிக்க அரசாங்கம், இன்டர்நெட்டில் நடக்கும் தகவல் பரிமாற்ற பிரச்சனைகளில் முக்கியத்துவம் அளித்துவருகிறது.

ஒன்றுமட்டும் உறுதியாக நம்பப்படுகிறது அது அமேரிக்காவிடம் தான் உலகத்தின் மிக வேகமான கணணியிருக்கிறது என்றும், அவர்கள் நினைத்தால் எல்லா தகவல் பரிமாற்ற விவகாரங்களிலும் தலையிடுவார்கள் என்பதும்தான் அது. இதைப்பற்றி அமேரிக்க மக்களிடம், கிரிப்டோ அதிகாரிகள் சொன்னபொழுது. அமேரிக்காவிற்கு எதிராக நாங்கள் எதுவும் செய்யமாட்டோம் இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று கூறுவதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.

ஒருவழியாக இதன் முக்கியத்துவத்தை விவரித்தாகிவிட்டது, அடுத்து கொஞ்சம் விலாவரியாக, கொஞ்சம் டெக்னிக்கலாக பார்க்கலாம்.


-----------------------------


இன்னும் விவரமாக படிக்க,

எனிக்மாவை(Enigma) உடைத்தமுறை

U போட் களை முறியடித்த விதம்.

முத்துத்துறைமுக தாக்குதலைப் பற்றி

Read More

Share Tweet Pin It +1

5 Comments

Popular Posts