In Only ஜல்லிஸ் கவிதைகள் புகைப்படம்

கிணற்றுத் தவளைகளின் கதறலைப் புறக்கணியுங்கள்

ரம்யமான முன்பனிக்கால மாலைப்பொழுதின்
கலைந்து செல்லும் மேகங்கள்
இழைத்துக் கோர்த்த வண்ணங்களுக்காகவாவது
நீ அன்றைய தினத்தை தேர்ந்தெடுத்திருக்க வேண்டாம்
உன் புறக்கணிப்பை விடவும்
வண்ணக் குழப்பங்களுக்கான என் வருத்தம்
உன் வேதனையை புரியவைக்கிறது

மொஸார்ட் இசைத்துக் களைத்த
பியானோவின் காதலைப் போல்
உனக்கான என் காத்திருத்தல்
புறக்கணித்தல்களுக்கு அப்பாற்பட்டது
உன் கோபம்
கிழித்தெறிந்த கவிதை, நாட்குறிப்புக்களோடு
எனக்கும் சம்மதமே
நாவலொன்றின் குறிப்புக்களோடு
உன் காதல்
சிறுகதைகளை நானும் புறக்கணிக்கின்றேன்

-------------------------------

இருத்தலியத்தின் பெயரைச் சொல்லி அடிக்கும் ஜல்லியாகட்டும், பொழுது போகாமல் எழுதும் சினிமா விமர்சனமாகட்டும் என் பதிவின் தொடர்ச்சி எனக்குப் பிடித்தேயிருக்கிறது. பக்கத்தில் சந்தித்த நண்பரொவர் சொன்ன 'உங்கள் பதிவின் தொடர்ச்சி உங்களை அடுத்த தளத்திற்கு நகர்த்தும்' என்பதில் எனக்கு அத்தனை நம்பிக்கையில்லை. என்னைப் பொறுத்தவரை அடுத்த தளம் என்பது தொடர்ச்சியான ஒன்று, மாற்றம் என்கிற வார்த்தையைப் போல, ஒரே தளத்தில் யாராலும் நிற்க முடியாது. நின்றாலும் கூடவே நிற்பதனாலேயே அது அடுத்த தளமாகிவிடுகிறது. பதிவின் தொடர்ச்சியை அடுத்த தளத்திற்கான முயற்சியாக இல்லாமல் இயல்பாகவே செய்து வர நினைக்கிறேன் அது அடுத்த தளத்திற்கான முயற்சியாகவே இருந்தாலும். விகடன் குமுதம் கல்கி மீதிருந்த காதலைப் போல் காலச்சுவடு மீதும் உயிர்மை மீதும் காதல் இருந்திருக்கிறது இருக்கிறது. அடுத்த தளமாக தேர்ந்தெடுத்த அத்தனையும் ஒரு சமயம் நகர்ந்துவிட/அவிழ்ந்து விட தளத்திற்கான தேடல் மட்டும் இருக்கிறது. என்றாலும் ambition என்கிற வார்த்தை கிளிஷே மட்டுமல்லாமல் ரொம்பவும் பக்வாஸானது என்று மட்டும் இப்போது நினைக்கிறேன்.

-----------------------------------

காவிரிக் கரையிலிருந்து ஸ்ரீரங்கக் கோபுரத்தையும், மலைக்கோட்டையையும் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. சமீபத்தில் திருச்சி சென்றிருந்த பொழுது இதற்காகவே ட்ரைபாட் வேறு எடுத்துக் கொண்டு போயிருந்தேன். KPN Travels காரைக்குடி ஸ்லீப்பர் 4.00 மணிக்கெல்லாம் கெத்தா மத்தியப் பேருந்து நிலையத்தில் நிறுத்தினது, டீ மட்டும் ஒன்றைக் குடித்துவிட்டு மனசு முழுவதும் பறக்க, பஸ்ஸில் காவிரி பாலம் வந்து சேர்ந்தேன். அன்று சமயபுரம் தேர் என்பதால் சாரி சாரியாக மக்கள் பாலத்தைக் கடந்து கொண்டிருந்தார்கள் வெளியூரில் இருந்து வந்த சிலர் பாலத்தில் பாய் விரித்துப் படுத்தும் கொண்டிருந்தார்கள்.

நான் சரி எடுத்து பார்ப்போமே என்று சொல்லிவிட்டு, Avயில் படம் எடுத்தால் ஷேக் ஆகியிருந்தது, தெரிந்தது தானே என்று Tvயில் போட்டு Tripodல் வைத்து படம் எடுத்தால் கைகளில் வைத்து எடுத்ததை விடவும் அதிகம் ஷேக் ஆகியிருந்தது பின்னர் தான் புரிந்தது - பேருந்து ஒன்று கடந்தாலோ இரண்டு ஆட்டோக்கள் அல்லது ஒரு ஆட்டோ நான்கு மனிதர்கள் கடந்தாலோ பாலமே ஆடுவதை. பின்னர் புகைப்படம் எடுக்கும் ஆசையை விட்டுவிட்டு, வீட்டிற்கு வரும் வழியில் ஆட்டோ ஓட்டுநர் பெட்ரோல் நிரப்புவதற்காக வண்டியை நிறுத்திய இடத்தில் இருந்து எடுத்தப் படம் தான் கீழிருக்கும் மலைக்கோட்டை படம்.

Malaikottai

---------------------------------

அய்யனார் திருமணத்திற்காக திருவண்ணாமலை சென்றிருந்தது தான் முதல் முறை திருவண்ணாமலைக்குச் செல்வது. அதற்கு போட்டத் திட்டத்தில் நடந்த ஒரு சின்ன குளறுபடியால், பெரும்புரட்சியாளர்கள் நான்கு பேருடன் தீவிர பின்நவீனத்துவம் பேச/உரையாட/கேட்க முடியாமல் போனது.

திருமணம் நல்லபடியாக நடந்து முடிய கல்யாண சாப்பாடு சாப்பிட்டு விட்டு நான் போட்ட ஐந்து/பத்து நிமிட பிட்டில் பயந்து போய், பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம் சுந்தர், வளர்மதி தெரித்துவிட(சும்மா விளையாட்டுக்கு கண்டுக்காதீங்க...) இந்தப் பிரச்சனையை முன்னமே எப்படியோ உணர்ந்த நந்தா அதற்கு முன்னமே தெரித்துவிட, அவசர பிரச்சனை ஒன்றை சமாளிக்க வேண்டி நானும் உடனே பேருந்து பிடித்தேன் பெங்களுக்கு.

Ayyanar Marriage

வளர்மதி மிகவும் அமைதியாக இருந்தார், ஆச்சர்யமான ஒருவிஷயம் என்று நினைக்கிறேன். நான் நிச்சயமாய் அவரிடம் நிறைய எதிர்பார்த்தேன்.

VaLarmathi

---------------------------------

குமுதம் வலைபதிவர்களைப் பற்றி எழுதியதும், வெ.சா திண்ணையில் புலம்பியதும் புதிய விஷயம் இல்லை, தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வந்த ஒன்றுதான். வலைபதிவுகள் பலருக்கு இனிப்பான விஷயம் கிடையாது, குழுமங்களில் இயங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு அதனுடைய மாடரேஷன் உடன் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு, மாடரேஷன் இல்லாத எந்த விஷயமும் உகந்ததல்ல என்பது பெரிய ஆச்சர்யத்திற்குரிய விஷயம் இல்லை தான். என்னைப் போல் மாடரேஷன் பிடிக்காமலேயே பதிவெழுதத் தொடங்கியவர்களுக்கு பதிவுகள் விரித்துக் கொடுத்த எல்லை விசாலமானது. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல் கத்தும் தவளைகள் கிணற்றுக்குள்ளேயே ராஜாங்கம் நடத்த வேண்டியது தான்.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In புகைப்படம்

கூர்க் புகைப்படங்கள் சில...

Reflection

Bamboo

Bamboo

Golden Temple

Kid

Kaveri

கூர்க் சென்றிந்த பொழுது எடுத்தவற்றில் சில புகைப்படங்கள்.

PS: ஒரு முக்கியமான டெஸ்டிங்கிற்காக இந்தப் பதிவு.

Read More

Share Tweet Pin It +1

5 Comments

In நாட்குறிப்பு

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

புனித வெள்ளியை ஒட்டிக் கிடைத்த மூன்று நாட்கள் விடுமுறைக்கான எந்த விதமான முன்னேற்பாடும் இல்லாமல் தூங்கி வழிந்தது. *The Bucket List, Atonement, வெள்ளித்திரை, Wedding Daze, Goodfellas, Gangs of Newyork, Fargo, இடையில் கலைஞர் தொலைக்காட்சியில் பார்த்த 'சிவி'(சிவபெருமானின் கழுத்தில் இருக்கும் பாம்பின் பெயர் சிவியாம்) பேய்ப்படம் என்று படங்களுடனே சென்றது மூன்று நாட்கள். இந்தவார இறுதியில் ஊர் சுற்றச்செல்லும் திட்டத்தை போனவாரம் என்று நினைத்துக் கொண்டு மூன்று நாட்களை வீணாக்கினேன்.

தமிழ்மணம் சூடான இடுகைகளை நிறுத்தியதில் எனக்கு தனிப்பட்ட முறையில் வருத்தங்கள் உண்டு. பின்னூட்ட போக்கத்த அரசியல் இன்றி, சில நல்ல இடுகைகளுக்கு நல்ல ரசிகர் வரவேற்பை பெற்றுத்தந்த சூடான இடுகைகள் ஆனால் அதன் காரணமாகவே பொறுத்துக் கொள்ளப்பட்டுக் கொண்டிருந்த சூடாக்கப்பட்ட இடுகைகள் அளவு அதிகரித்துப் போனதால் தூக்கியெறியப்பட்டிருக்கிறது. இனி 'தமிழ்மணம் தெரிவுகள்' நிலைக்கு வரும் வரை பின்னூட்ட அரசியல் பெரிய போக்கு காட்டும். நீங்கள் போட்ட பின்னூட்டங்கள் கூட நேரம் காலம் கணக்கிடப்பட்டுத்தான் வெளிவரும்.(ராகு காலம் பார்த்து வெளிவிடுவார்களாயிருக்கும் :) ஆயிரம் பெரியார் ம்ஹூம் தமிழ்நாட்டை ரஜினிகாந்தை** விட்டா திருத்த வேறு ஆளே கிடையாது ;))

My Left Foot என்ற ஐரிஷ் படம் ஒன்று பார்த்தேன், கமலஹாசன் மீது கோபம் வந்தது. ஐரிஷ் நடிகர்கள், ஐரிஷ் இயக்குநர், ஐரிஷ் தயாரிப்பாளர் நல்லதொரு திரைப்படத்தை தந்துள்ளார்கள். கோலிவுட்டின் மசாலாக்கள் அத்தனையையும் தூவித்தான் எடுத்திருக்கிறார்கள் ஒரேயொரு வித்தியாசம் Daniel Day Lewis ம்ஹூம் சொல்றதுக்கு ஒன்னுமேயில்லை, கடைசியில் அவர் கதாப்பாத்திரம் ஸ்பீக்கிங் தெரஃபி முடித்து கொஞ்சம் தெளிவாய் பேசும் பொழுதுதான் அதுவரை அவர் எவ்வளவு சங்கடப்பட்டு பேசியிருக்கிறார் என்று தெரியும். அழகான படம், ஃபேமிலி சென்டிமன்ட்களை எவ்வளவு அழகாய்ச் சொல்ல முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள். கோலிவுட்டாலும் கமலஹாசனாலும் இதைச் செய்ய முடியாது என்று நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன். Day Lewisற்கு சிறந்த நடிகருக்கான அகாதமி விருது பெற்றுத்தந்த படம். நிச்சயம் ஒரு முறை பாருங்கள்.

Mama Roma என்றொரு படம் பார்த்தேன் சிறிது காலம் முன்பு, ஒரு பதிவு எழுதிவிடணும் என்று நினைத்துக் கொண்டேயிருந்து விட்ட படம் இது. Pier Paolo Pasoliniன் படம், முப்பத்தி மூன்று வருடம் அமேரிக்காவில் திரையிடப்படாமல் தடை செய்யப்பட்டிருந்தது. படத்தின் கதை ஒன்றும் அத்தனை மோசமானதில்லை, ஒரு முன்னால் பாலியல் சேவையாளர் பிரிந்து போன தன் மகனிற்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கப் போராடுகிறார். அதைப் பற்றியது தான் கதை. படம் நியோ ரியலிஸ(நிஜத்தில் இருக்கும் வாழும் மக்களைப் பற்றி உண்மையை உண்மையாய்ச் சொல்வது)வகையைச் சார்ந்தது, 1960களின் இத்தாலியைப் பற்றி படம் பேசுகிறது. படம் முழுவதும் பசோலினி விளிம்பு நிலையில் வாழும் மக்களைப் பற்றி பேசியிருப்பார், அவர்களின் அந்த நிலைக்கு காரணம் சமுதாயமே அன்றி வேறொன்றும் இல்லை என்று படம் பிடித்துக் காட்டியிருப்பார். Mama Roma பற்றி சொல்லிவிட்டு Anna Magnani பற்றி சொல்லாவிட்டால் தவறாகிவிடும், படத்தின் ஆரம்பக் காட்சிகள் பார்த்துவிட்டு இது ஏதட்டா 'பெண் சிவாஜி' போலிருக்கிறதே என்று தான் நினைத்தேன். ஆனால் சட்டென்று கதைக்குள் வந்துவிடுகிறார் Mama Romaவாக இயல்பாக நடித்திருக்கிறார், பசோலினி பெரும்பாலும் தொழில்முறை நடிகர்களைப் பயன்படுத்தமாட்டார். அவரும் Mama Roma இருந்திருக்கிறார் படம் முழுவதும்.

இப்படியும் ஒரு தொடர்கதை என்று தொடர்கதை எழுத ஆரம்பித்து 10 கதைகள் முடிந்துவிட்டது. Trilogy மாதிரி இதையும் இத்தோடு முடித்துக் கொண்டு அடுத்த செட் இதே போல் எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். ஆரம்பத்தில் நினைத்தது போலவே எல்லா கதைகளும் தனித்தனியே படித்தாலும் புரிகிற மாதிரியும், அதே சமயம் ஒரே செட் ஆஃப் நபர்கள் வைத்தும் எழுத வேண்டும் என்றும் நினைத்திருந்தேன். ஒரளவு கைவந்தது என்றே நினைக்கிறேன். தனித்தனியாய் ஒரு கதை மரத்தடியிலும், ஒரு கதை திண்ணையிலும் வந்தது. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் இப்படித்தான் இருக்கணும் என்று ஆரம்பத்தில் இருந்தே நினைத்துக் கொண்டு எழுதியது. அடுத்த செட்டை இன்னும் பரீட்சீதார்த்த முறையில் நகர்த்தலாம் என்ற ஐடியா இருக்கிறது, நேரம் கிடைக்கணும்.

பத்து கதைகளும்

கற்புங்கிறது ஒரு கடப்பாறை...
சிம்மேந்திரமத்யமமா? கீரவாணியா?
இந்துயிஸமும் சில சிஐஏ உளவாளிகளும்
பிரிவென்னும் மருந்து
ஆண் என்னும் தலையாட்டிபொம்மைகள்
பெண்ணியமும் சில புடலங்காய்களும்
நீ கட்டும் சேலை மட்டிப்பில நான் கசங்கிப் போனேண்டி
நந்திகேஸ்வரரும் நச்சு ஐடியாவும்
மதுரை ஆட்சியும் சிதம்பர ரகசியமும்
நக்கீரரும் மூன்றாம் க்ளாஸ் வாண்டும் ஃபுல்மீல்ஸ் சாப்பாடும்


பத்து கதைகளின் pdf ஃபைல் இப்படியும் ஒரு தொடர்கதை

*The Bucket List படத்தின் இறுதியில் இடம் பெறும் ஜான் மேயரின் ஒரு பாடல் மனதைக் கவர்ந்தது. கிதாரும் கொஞ்சம் பியானோவும் என்று நினைக்கிறேன். அந்தப் பாடல்,



பாடல் வரிகள்.

Take out of your wasted honor
Every little past frustration
Take all of your so called problems
Better put them in quotations
Say what you need to say

Walkin like a one man army
Fightin with the shadows in your head
Living out the same old moment
Knowing you’d be better off instead
If you could only
Say what you need to say

Have no fear for giving in
Have no fear for giving over
You better know that in the end its better to say too much
Than to never to say what you need to say again

Even if your hands are shaking
And your faith is broken
Even as the eyes are closing
Do it with a heart wide open
Why?
Say what you need to say

** விஜயகாந்த், சரத்குமார் என்று யாரையும் சொல்லலாம்.

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In நாத்தீகம்

பொறுக்கித்தனம்

என் வாழ்க்கையில் பெரும்பான்மையான விஷயங்களை அவைகள் என் நம்பிக்கைகளுக்கு நேர் எதிரானவையாக இருந்தாலும் ஒப்புக்கொள்கிறேனோ இல்லையோ அப்படி ஒன்று மக்களால் நம்பப்படமுடியும் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் மிகச்சில விஷயங்களில் மட்டும் என் எல்லைகளையும் மீறி என்னைச் சில விஷயங்கள் கோபப்படுத்திவிடும் அதில் ஒன்று கடவுள் நம்பிக்கை.

இதில் பொறுக்கித்தனம் என்று சொல்லக்கூடிய ஒன்றை மிகச்சாதுர்யமாக 'என்' கடவுள் நம்பிக்கையுள்ள அத்தனை நண்பர்களும் செய்திருக்கிறார்கள். நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன், இதைத் தெரிந்து கொண்ட அனைவரும் நான் இன்றிருக்கும் நிலைக்கு என் பெற்றோரின் கடவுள் நம்பிக்கை தான் காரணம் என்று சொல்லி வெறுப்பேற்றுவார்கள். சத்தியமாகச் சொல்கிறேன் இது பொறுக்கித் தனம். யாராலும் உங்க அம்மா அப்பா இல்லாட்டி நீ இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என்பதை மறுக்கமுடியாது. ஆனால் இதை அவர்களுடைய கடவுள் நம்பிக்கையோடு ஒப்பிட்டு நம்மைக் கேவலப்படுத்துவார்கள். ஆமாம் இந்த வார்த்தைகளை கேட்கும் ஒவ்வொரு தடவையும் நான் கேவலப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன். ஒவ்வொருதடவையும்.

என் அம்மா அப்பாவை எவ்வளவு மதிக்கிறேனோ அதே அளவு என் கடவுள் நம்பிக்கையின்மையையும் மதிக்கிறேன். இதைப் போல பல முட்டாள்த்தனங்களையும் பொறுக்கித்தனங்களையும் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் நாள் தோறும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். என் தனிப்பட்ட கொள்கையாக கடவுள் நம்பிக்கையின்மையைப் பற்றி யாராவது அவர்களாய்ப் பேசாதவரை பேசாமலிருப்பது என்று வைத்திருக்கிறேன். மிகமுக்கியமாக வாக்குவாதம் செய்யவதில்லை.

இன்னிக்கும் அப்படித்தான் ஒரு பதிவு படித்துவிட்டு வெறுத்துப்போய் வாய்விட்டிருக்கிறேன், இவை சர்வநிச்சயமாய் politically correct statement இல்லைதான். ஆனால் இந்த மூடை இங்கேயே விட்டுவிட்டு விலகுவது தான் நன்மைபயக்கும் என்பதால் இப்படி.




PS: முதல் முறையாய் இந்தப் பதிவை நாத்தீகம் என்று வகைபடுத்துகிறேன்.

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

Juno

எனக்கு எப்பொழுதுமே ஒரு படத்தின் மீதான விருப்பம் எப்படிவருகிறது/வந்தது என்பதை அறிந்துகொள்வதில் அதிக ஆர்வம் உண்டு. அப்படி என்னை இந்தப் படம் பார்ப்பதற்கு பார்க்க வைத்ததற்கான காரணங்களை யோசித்துப் பார்த்த பொழுது, சுஜாதாவுடன் அம்பல அரட்டைகளின் நான் என் சொந்தப் பெயரை உபயோகப்படுத்தியதில்லை என்பதும் எப்பொழுதும்/பெரும்பாலும் Juno என்ற பெயரையே உபயோகித்து வந்ததும் நினைவில் வருகிறது. நான் 'என் இனிய இயந்திரா'விலும் 'மீண்டும் ஜீனோ'விலும் வரும் ஜீனோவை ஜூனோ என்று அர்த்தம் எடுத்துக் கொண்டு juno என்ற பெயரில் அவரிடன் 'சாட்'டி வந்தேன். ஆனால் இடையில் ஒரு பிரச்சனையில் என்னை சொந்தப் பெயரில் அறிமுகப்படுத்திக் கொண்டாலும் juno வாகவே கடைசி வரை தொடர்ந்தேன். எனக்கு ஜீனோ(நாய்) ஆணா பெண்ணா என்ற சந்தேகம் இருந்தது அவரிடம் கேட்ட பொழுது, ஜீனோ என்ற பெயரை அவர் அதே பெயரில் இருக்கும் zeno ஒரு க்ரீக் ஃபிலோசபர் நினைவில் வைத்ததாகச் சொன்னார். அப்படின்னா ஆம்பளை தான் என்ற முடிவிற்கு வந்தோம் அன்று. முதன் முதலில் இந்தப் படம் பற்றிய அறிமுகம் அக்காதமி அவார்ட் நாமினேஷன்களின் பொழுது அடிபட்டது, உடனேயே விக்கிபீடியா மற்றும் நான் சினிமா பற்றி தெரிந்து கொள்ள பார்க்கும் முக்கியமான சில இணையத்தளங்களில் பார்த்து வைத்திருந்தேன். அகாதமியில் Best original screen play விற்காக விருது வழங்கப்பட்டது, Ellen pageற்கு Best actress in leading role விருது கிடைக்கவில்லை.



இந்த முறை சென்னை சென்றிருந்த பொழுது வாங்கிவந்த சிடிக்களில் ஜுனோவும் இருந்தது. ஆனால் மொத்தம் வாங்கிவந்த எல்லாவற்றிலும் இந்தப் படம் மட்டும் மாற்றப்பட்டு இருந்தது அதாவது சிடி அட்டையில் ஜுனோ உள்ளே ஜோதா அக்பர் படம், சரியான காண்டாகியிருந்தேன். இதன் காரணங்களால் இந்தப் படம் வெளியாகப்போகிறது என்று செய்தியைப் பார்த்ததும் டிக்கெட் புக் செய்திருந்தேன்.



அமேரிக்காவில் இருக்கும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஜூனோ என்னும் 16 வயது சிறுமி(?! வேணும்னா டீன் ஏஜ் கேர்ள்) கர்ப்பம் அடைந்துவிடுவதை தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சிகள் தான் ஜூனோ படம். ஆனால் கவிதை மாதிரி எடுத்திருக்கிறார்கள் கதையை, படத்தின் மிகப்பெரிய பலம் இசையும் பாடல்களும், அப்படியே ஹெலன் பேஜும். படம் முழுவதும் அவரைச் சுற்றி நடப்பதாக இருப்பதால் பயங்கர ஹெவி வெய்ட்டான கதாப்பாத்திரம், நன்றாகச் செய்திருக்கிறாள் பெண்.

தான் கர்ப்பமாகயிருப்பது தெரிந்து முதலில் அபார்ஷன் செய்துகொள்ள நினைக்கும் பொழுது அடிக்கும் லூட்டிகள், பின்னர் குழந்தை பெற்று அடாப்ஷன் கொடுக்க தீர்மானிக்கும் பொழுது காட்டும் பெரிய மனுஷித்தனம், அடாப்ஷன் வாங்கப்போகும் தம்பதியினர்(மனைவி மட்டும்?!) முழுமனதுடன் குழந்தைக்காக ஏங்கும் பொழுது அதைப்பார்த்து பூரிப்படையும் காட்சிகள், தன் காதலனை வம்பிழுத்து பின்னர் காதல் கொள்ளும் காட்சிகள் என்று அவள் வயதிற்கு மீறிய முதிர்ச்சி இருக்கிறது.(லின்ட்ஸே லோஹன் மாதிரி இவரும் ஆகிவிடக்கூடாதென்ற ப்ரார்த்தனையும் இருக்கிறது. :()

ஜூனோவின் காதலனாக வரும் ஆளை எங்கிருந்து பிடித்தார்களோ தெரியலை ச்சோ கியூட், சோஃபாவில் உட்கார்ந்து கொண்டு ஜூனோ தான் கர்ப்பமாக இருப்பதாகச் சொல்லும் பொழுதும் சரி, ஜூனோ இடையில் சீண்டும் பொழுதும் சரி, கடைசியில் ஜூனோ காதலிப்பதாகச் சொல்லும் பொழுதும் சரி அந்தக் கேரக்டர் ஆகவே இருக்கிறார். எப்படி மிகச்சரியாய் இப்படி ஒரு சொம்பைப் பிடித்தார்கள் என்று தோன்றுகிறது.

ஜூனோவின் அப்பாவாகவும், சித்தியும்(Step motherஐ இப்படிச் சொல்லக்கூடாதோ?), அடாப்ஷன் வாங்கப்போகும் தம்பதியினர் மற்றும் ஜூனோவின் காதலன் மற்றும் ஜூனோவின் நண்பி என்று குறைந்த கதாப்பாத்திரங்கள் தான் என்றாலும் அவரவர்களுக்குரிய வேலையை மிகச்சரியாக செய்திருக்கிறார்கள். இந்த அளவிற்கு சீரியஸ் மேட்டர் கொண்ட படத்தை இத்தனை காமெடியாக படமாக்க முடியும் என்பது ஆச்சர்யப்பட வைக்கிறது. அமேரிக்காவில் அபார்ஷன் என்பது பெரிய அரசியல் என்று தெரியும் இந்தப் படம் anti abortionக்கு சாதகமாகப் பேசுகிறது.

பின்னணிப்பாடல்கள் ஒவ்வொன்றையும் கேட்ட பொழுது என் கல்லூரிப் பருவத்தில் கிதார் கற்றுக்கொள்கிறேன் பேர்வழி என்று கழுத்தில் கிதார் மாட்டிக் கொண்டு சுற்றிய நினைவுகளை இயல்பாய் கொண்டு வந்தது. வெறும் கிதார் பின்னணியில்(கொஞ்சம் போல் பியானோவோ இல்லை கீபோர்டோ இருக்கலாம்) பாடல்கள் கேட்பதற்கு உருக வைக்கிறது.

க்ளைமாக்ஸ் பாட்டு



ஜூனோவின் அப்பா கடைசியில் ரஜினிகாந்தின் டயலாக் எல்லாம் விடுறாரு, "Look, in my opinion the best thing you can do is find a person who loves you for exactly what you are. Good mood, bad mood, ugly, pretty, handsome, what-have-you. The right person is still going to think the sun shines out of your a**. That's the kind of person that's worth sticking with." கேட்க சந்தோஷமாக இருந்தது. வசனங்கள் எல்லாம் 'சில்'லிங்காக இருக்கிறது, கமலஹாசனின் காமெடிப் படம் பார்க்கப்போன கதைதான். ஆனால் இது போன்ற படங்கள் சிறுவர் சிறுமிகளுக்கு(ரொம்பத்தான்!) தவறான முன்னுதாரணமாக இருந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு தான் கடைசியில் இருந்தது. ஆனால் தவற விடக்கூடாத ஒரு படம் தான் இது.

ஜுனோ படத்தின் ட்ரைலர்



ஜூனோ படத்தை Jason Reitman இயக்க, எழுதியது Diablo Cody இவருக்கு இந்தப் படத்திற்காக அகாதமி விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In நாட்குறிப்பு

பெங்களூரு பெர்னார்டோ பெர்ட்டோலுச்சி அஞ்சாதே ஃபார்வேர்ட் மெயில் எண்கள் BSE NSE சுஜாதா சிறுகதைகள் pdf photos ஜல்லி

பெங்களூரு பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது, வண்ண வண்ணப்பூக்களுடன் வசந்த காலம் என்று நினைக்கிறேன். மஞ்சள், ஊதா, சிகப்பு, வெள்ளை நிறப்பூக்களுடன் தினமும் உணவருந்தச் செல்லும் அல்சூர் ஏரியை ஒட்டிய சாலை மனதை ரம்மியப்படுத்துகிறது. அதைப்போலவே சீதோஷனநிலையும், உடலை வருத்தாத மெல்லிய குளிருடன் பெங்களூரு தன் கோடைக்காலத்திற்காகத் தயாராகிவருகிறது. அல்சூரும் மகாத்மா காந்தி சாலையும் இணையும் இடத்தில் புதிதாய் ஒரு தியேட்டர் வந்திருக்கிறதாம், கடைசி சில மாதங்களாகவே வாரக்கடைசி கொஞ்சம் பிஸியாய் இருந்ததால் இந்த வாரம் சென்றுவரலாம் என்றொரு உத்தேசம் இருக்கிறது.

பெர்னார்டோ பெர்ட்டோலுச்சியின் The Last Emperor படம் ரொம்பக் கால தேடலுக்குப் பிறகு கிடைத்தது, Last Tango In Paris மற்றும் The Dreamers புகழ் பெர்ட்டோலுச்சியின் படமா என்ற ஆச்சர்யத்தைக் கிளப்பினாலும் அருமையான படம் பார்த்த நிறைவைத்தந்த படம். 9 ஆஸ்கர் விருதுகள் பெற்றது, Best Picture, Best Director உள்ளிட்டு. இந்தப்படத்தை அப்படியே தொடர்ந்து கொஞ்சம் தேடிக்கொண்டிருக்க சீனாவைப் பற்றிக் கொஞ்சம் படிக்க முடிந்தது. Last emperorன் கடைநிலை மனிதனாக transformation மிக அற்புதமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைத்தால் இதைப் பற்றியும் கொஞ்சம் எழுத ஆசை.

இதே இயக்குநரின் Stanley Kubrick's The eyes wide shut படமும் எடுத்துவந்தேன் இந்த முறை, ஒரு முறை பெர்ட்டோலுச்சி ஸ்டான்லி க்யூப்ரிக் இந்தப்படத்தை piece of shit என்று சொன்னார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்(அது உண்மை/இல்லை என்று வாதங்கள் உண்டு). ஆனால் டாம் க்ரூயிஸ்/நிக்கோல் கிட்மன் நடித்த இந்தப்படம் சொல்லும் கதை ரொம்பநாளா எனக்குள் ஒரு சிறுகதை/தொடர்கதைக்கான தீமாக இருந்து வந்தது. ரொம்ப காலம் முன்பு டாம் க்ரூயிஸ் 'நடித்த' படத்தில் சேர்க்கலாம் என்று நினைக்கிறேன்; நிக்கோல் கிட்மன் pot அடிச்சிட்டு பேசும் ஒரு இரவுக் காட்சியில் படம் காண்பிக்கிறார். பெர்ட்டோலுச்சியின் Kubrick's டச் மிஸ்ஸிங் என்றாலும் நன்றாகத்தான் இருக்கிறது இந்தப் படம்.

அஞ்சாதே பார்த்தேன்! ஏற்கனவே ஏகப்பட்ட ரிவ்யூக்கள் எழுதி படம் கிழிக்கப்பட்டுவிட்டதால் என்னுடைய 2 cents மட்டும். நிச்சயமாய் பிரசன்னாவைப் பாராட்ட வேண்டும் துணிந்து இப்படிப்பட்ட ஓரு கேரக்டரில் நடித்ததற்கு. குத்துபாட்டு, ட்ரீம் சாங்க், க்ளைமாக்ஸ் ஃபைட் என்று கோலிவுட்டிற்குத் தேவையான அத்தனை மசாலாக்களுடன் தயாரிக்கப்பட்டாலும் கொஞ்சம் இயல்பாய் எடுத்தால் எப்படி படம் வித்தியாசப்படும் என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம். உண்மைத்தமிழனுக்கு No country for old manன் வெற்றிக்கு மிகமுக்கியமான ஒரு காரணம் படத்தின் எந்த நிமிடத்திலும் நிஜத்தில் இதுபோல் நடக்கமுடியாது என்ற எண்ணமே வராமல் கொண்டு செல்வதுதான் என்று சொல்லிக் கொள்கிறேன்.

வெகுசீக்கிரம் நான் பிஸ்ட் ஆஃப் ஆவதில்லை, ஆனால் சில சமயங்களில் ஃபார்வேர்டாக வரும் மெயில்கள் என்னை அந்த நிலைக்கு கொண்டு போய் தள்ளிவிடுவதுண்டு. அப்படி இன்றைக்கு வந்த ஒரு மெயில் ஆனால் அதை வெளியில் விட்டு பிரபலப்படுத்த வேண்டாம் என்ற எச்சரிக்கை உணர்வுடன் தவிர்த்துவிட்டேன். :)

எண்கள் இப்பொழுது பெரிய அளவில் கனவில் வந்து தொந்தரவு செய்கின்றன, பத்தாவது பன்னிரெண்டாவது படித்த பொழுது மாதத்தேர்வு முடிந்ததும் அந்த மாதம் பெற்ற மதிப்பெண்கள் கனவில் வந்து கிலியை ஏற்படுத்தியதுண்டு. கல்லூரியில் கொஞ்ச காலம் வரை பர்சன்டேஜ் என்கிற ஒரு நம்பர் உங்கள் அடையாளமாகவே இருக்கும் எனக்கும் இருந்திருக்கிறது. 60+, 70+ என்று அந்த நம்பரும் வந்து அடிக்கடி பயமுறுத்தும் இப்பொழுதெல்லாம் ட்ரேடிங்க் எண்கள், ரிலையன்ஸ் பெட்ரோலியம் 160 வாங்கினமா 170க்கு விக்கணும் நாளைக்கு 175க்குப் போகுமா தெரியலையே? நம்முடைய பாரதி ஏர்டெல் ஸ்டாக்ஸ் 860களில் இருக்கே இப்போ பொத்துன்னு விழுந்து 800களில் ஊசலாடுதே பேசாம 800க்கு வித்துட்டு நஷ்டத்தை புக் பண்ணிக்கலாமா? ரிலையன்ஸ் நேட்சுரலஸ் 94க்குப் போச்சுதே அப்ப வாங்கியிருக்கலாம் இன்னும் கம்மியாகும் என்று பார்த்திருக்க வேண்டாம் என்று, கனவில் BSE, NSE, Sensex, Nifty எண்கள் வந்து பெரும் கழுத்தறுப்பைச் செய்கிறது. யாரும் ரிச்சர்ய்ட் கி(ய்)ர் நடித்த Bee Season பார்த்திருக்கிறீர்களா, அந்தப்படத்தில் வரும் பெண்ணிற்கு எழுத்துக்கள் தோன்றுவது போல இப்பொழுதெல்லாம் கண்களை மூடினால் எனக்கு எண்கள் தோன்றுகிறது. Bee Season பார்த்துக் கொண்டிருந்த பொழுது எனக்கு Searching for bobby fischer படம் தான் நினைவில் வந்தது. இன்னொரு முறை பார்க்கணும் போல் இருக்கிறது கவிதை மாதிரியான படம் அது.

சுஜாதாவுடைய சிறுகதைகள் தொகுப்பை writersujatha.com வெளிவிட்ட பொழுது வாங்கியிருக்கிறேன். esnipsல் போட்டு வைத்த நினைவு மட்டும் இருந்தது. இன்று எதேட்சையாக தேடிக்கொண்டிருந்த பொழுது கிடைத்தது மொத்தத்தையும் போட்டிருந்தேனா இல்லை கொஞ்சம் மட்டும் போட்டிருந்தேனா நினைவில் இல்லை. இங்கே கிடைக்கும்.

இடையில் ஒரு முறை வேடந்தாங்கல் வந்திருந்த பொழுது எடுத்தப் படம்



காஷ்மீர் பயணத்தின் பொழுது, ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு காரிலோ, பஸ்ஸிலோ வர ரொம்பவும் பயந்து போய் ப்ளைட்டில் வந்தேன் அப்பொழுது ஏர் ஹோஸ்டஸ்களை சரியாக வெறுப்பேற்றி, எடுத்த காஷ்மீர் Lanscape ஒன்று

Kashmiri Mountains

காஷ்மீர் பற்றி எழுத வேண்டியது ஒன்று பாக்கியிருக்கிறது, No country for old man எழுதணும், Hampi போய் வந்து ஏகப்பட்ட படங்கள் இருக்கு அதற்கு ஒரு பதிவு எழுதணும் ம்ஹூம் நேரம் சுத்தமாகயில்லை. ஏகப்பட்ட வேலை. ஒரு வாரத்திற்கு ஒரு பதிவு கூட போடலைன்னு நினைச்சா ரொம்ப சந்தோஷமாயிருக்கு இது என்ன வியாதின்னு தெரியலை!

Read More

Share Tweet Pin It +1

19 Comments

In நாட்குறிப்பு

Go Aussie Go!!!

இப்பொழுது என்ன சொன்னாலும் சப்பைக்கட்டு கட்டுவது போலிருக்கும் என்பதால் ஒரே ஒரு விஷயம் மட்டும் Go Aussie Go!!! ஆனால் ரொம்ப நாள் கழித்து சந்தோஷமாயிருந்த ஒரு நாள் ஆஸ்திரேலிய தோல்வியின் பின்னர் சோகமானது இன்று! கனகாலம் கழித்து அப்படி ஒரு உணர்வு, வெகுநாட்களாய் தேடிக்கொண்டிருக்கும் இந்த உணர்வு. தண்ணியடிப்பவனாய் இருந்திருந்தால் நிச்சயம் அடித்துவிட்டு இருக்கலாம். நான் என்ன செய்வது என்று தெரியலை சோகத்தை அப்படியே எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும் ஆஸ்திரேலியா ஜெயிக்கும் சமயங்களில் வரும் சந்தோஷம் மிதக்க வைப்பதை அனுபவிப்பது போல்.

IE8 - Microsoft recently published a set of Interoperability Principles. Thinking about IE8’s behavior with these principles in mind, interpreting web content in the most standards compliant way possible is a better thing to do.

இப்பொழுதாவது வழிக்கு வந்தார்களே மைக்ரோசாஃப்ட் சந்தோஷம்.

Lufthansaவில் பயணம் செய்ய இருக்கிறீர்களோ ஒரு முறை இந்த வீடியோவை பார்த்துவிடுவது சாலச் சிறந்தது.



எப்படிய்யா உங்களால மட்டும் இப்படியெல்லாம் முடியுது!

image
image
image
image
image
image

நேற்றைய பதிவில் ஸ்பானிஷ் பற்றிச் சொல்லியிருந்ததில் விட்டுப்போன புகழ் கொஞ்சம் இவருக்கும் போய்ச் சேர வேண்டும் உண்மையில் :))).

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In நாட்குறிப்பு

இருத்தலும் அதைப்பற்றிய சில குறிப்புக்களும்

எனக்கு சிறுவயதில் இருந்தே ஜெர்மன் கற்கவேண்டும் என்ற ஆசையிருந்தது, காரணம் தெரியுமென்றாலும் இப்பொழுது வேண்டாம் :). ஆனால் நான் ப்ரெஞ்ச் கற்க நினைத்திருந்தால் புதுதில்லியில் இருந்த ஒரு வருடத்தில் அலையான்ஸ் ப்ரான்ஸிஸ்ஸில் சேர்த்துவிட்டிருக்கக் கூடிய அளவு ஆளுமை நிறைந்தவர்கள் புதுதில்லியில் இருந்தார்கள். நான் பிடிச்ச முயலுக்கு எத்தனை கால் என்று எல்லாருக்கும் தெரியும் என்றே நினைக்கிறேன் இதன் காரணமாக ப்ரெஞ்ச் கற்காதது மட்டுமல்ல ஜெர்மனும் கற்கவில்லை. ஆனால் சமீபகாலங்களாக சில பழக்கவழக்கங்களினால் ஸ்பானிஷ் கற்கவேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகயிருக்கிறது. யாருமில்லாத ரோட்டில் "ஓலா" "ஓலா" என்று சொல்லிக்கொண்டு செல்லத் தொடங்கியிருக்கிறேன், எல்லாப்புகழும் அலெஜான்ட்ரோ கன்ஸாலஸ் இன்னாரிட்டுவிற்கே! ஆனால் இன்னும் கொஞ்சம் செட்டில் ஆனபிறகு நிச்சயமாய் ப்ரெஞ்சோ ஜெர்மனோ கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையிருக்கிறது.

கருடா மாலில் உள்ள Bull & Bush pubல் தண்ணியடிக்கச் செல்வதற்கு சில காரணங்கள் உண்டு, அங்கே DJ உருவாக்கும் இசைச்சூழல் அசாத்தியமானது. நான் மாக்டெய்ல்களுக்கும் பெப்பர் சிக்கன், பிஷ் பிங்கர்களுக்குள்ளும் தலையை நுழைத்துக் கொண்டிருந்த பொழுது திரையில் வந்த பாடல் Ramsteinன் DU HAST எனக்கு சட்டென்று அது Ramstein என்று தெரியாவிட்டாலும் உடன் மது அருந்திக் கொண்டிருந்த நண்பர்கள் கேட்டதற்கு அது ஜெர்மன் என்று மட்டும் சொன்னேன். ஆனால் அந்தச் சமயத்திலேயே நினைவிற்கு வந்தது xXx படத்தில் வரும் ஒரு Ramstein Feuer Frei பாடல். படத்திலும் சரி தனிப்பட்ட முறையிலும் விரும்பிக் கேட்டப் பாடல் ஆனால் சட்டென்று நினைவிற்கு வரவில்லை. இந்த வகை இசையை ரசிக்கத் தொடங்கிய பொழுது எனக்கு அறிமுகமானவர்கள் Ramstein குழுவினர், நிகழ்ச்சியின் பொழுது இவர்கள் பயன்படுத்தும் நெருப்புப் பொறி பறக்கவிடும் நிமிடங்கள் மற்றும் இசை ஒரு உறையச்செய்யும் வலிமை வாய்ந்தவை.

பாரீஸ் ஹில்டன், லின்ட்ஸே லோஹன் பற்றிய செய்திகள் அடிக்கடி இணையத்தில் வந்துகொண்டு தான் இருக்கின்றன. அப்படி அஞ்சலினா ஜூலி அக்கா விட்ட அறிக்கை ஒன்றை படிக்க நேர்ந்தது, தலைப்பு மட்டும் நான் தர்றேன் 'A Reason to Stay in Iraq', யாரோட ஸ்டேன்னு கேட்டா அமேரிக்க படையோடங்கிறத மட்டும் சொல்லிக்கிறேன். இந்தக்கா தான் இப்ப Goodwill Ambassador for the United Nations High Commissioner for Refugees (UNHCR). நான் ஒன்னும் சொல்லலை.

எப்பொழுதும் கெட்டதுகளில் சில நல்லதுகள் என்றோ(இல்லை நல்லதுகளில் சில கெட்டதுகள் என்றோ அப்படியும் இல்லாவிட்டாலும் நல்லதுகளில் சில நல்லதுகள்) சில சிக்கக்கூடும் அப்படித்தான் பதிவுலகில் கிடைத்த ஒரு Key wordஐக் கொண்டு துழாவ கிடைத்தது இந்த விஷயம், 'Elimination of clitoral sexuality is a necessary precondition for the development of femininity.' என்று சொன்னது வேறு யாருமல்ல நம்ம சிக்மண்ட் ப்ராய்ட் தாத்தா தான்(S. Freud stated in one of his books entitled Sexuality and the Psychology of Love.) எனக்குத் தெரிந்து Once upon a time என் அறைத்தோழர், நல்ல நண்பர் ஞானசேகர் தான் அடிக்கடி ப்ராய்ட், ப்ராய்ட் என்று எழுதுவார், அவர் இப்ப எழுதுறதில்லை அவர்கிட்ட கேட்டுப் பார்க்கலாம். ப்ராய்ட் தாத்தா இப்படிச் சொன்னது உண்மைதானா என்று அவர் சொன்னது சரியில்லைன்னு தான் எல்லோருக்கும் தெரியுமே!(சொல்லியிருந்தால்).

பட்ஜெட் பற்றி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் மெயில்கள் வந்தவண்ணம் உள்ளன. இப்பொழுது ஒரு Investor என்ற முறையிலும் பட்ஜெட்டை தீவிரமாகக் கவனித்து வந்தேன். கவனிக்கிறது என்றால் வரும் மெயில்களை எல்லாம் படித்துவிடுவது என்பதைத்தவிர்த்து வேறு பொருள் கொள்ள வேண்டாம், எனக்கு கம்பெனியில் மெயில் அனுப்பிவிட்டு ஃபோன் செய்வார்கள் ஒரு மெயில் அனுப்பியிருக்கேன் படி என்று, அந்த அளவு சோம்பேறி நான். எனவே நானாய் மெயில் படிப்பது என்பது முக்கியத்துவம் பெறுகிறது, வேறு என்ன ஆச்சோ தெரியாது சென்செக்ஸ் விழுந்துவிட்டது; அதுமட்டும் பிரகாசமா தெரியும்.

Net Income Range

Tax Rate

Net Income Range

Tax Rate

Income Upto 1,10,000

NIL

Income Upto 1,50,000

NIL

1,10,001 to 1,50,000

10%

1,50,001 to 3,00,000

10%

1,50,001 to 2,50,000

20%

3,00,001 to 5,00,000

20%

Above 2,50,000

30%

Above 5,00,000

30%

Surcharge for the Taxable income above 10 Lakhs

10%

Surcharge for the Taxable income above 10 Lakhs

10%

Education cess on Income Tax and Surcharge

3%

Education cess on Income Tax and Surcharge

3%































2. No change in the amount of investment under section 80C. Senior Citizen Saving Scheme 2004 and the Post Office Time Deposit Account added to the basket of Savings instruments under Section 80C.

3. Additional deduction of Rs.15,000 allowed under section 80D to an individual paying medical premium for his/her parent or parents

4. Rate of tax on short-term capital gains increased from 10% to 15%

Other important budget highlights helpful for individuals

1. Requirement of PAN extended to all transactions in the financial markets
2. Excise duty reduced on small cars from 16 percent to 12 percent and on hybrid cars from 24 percent to 14 percent
3. Excise duty reduced on two wheelers from 16 percent to 12 percent
4. Excise duty on packaged software increased from 8 percent to 12 percent



இதுதான் முந்திக்கும் இப்பைக்கும் வித்தியாசம் என்று பட்ஜெட் படித்து முடிச்ச அடுத்த நிமிஷம் மெயில் வந்திருந்தது. Tax payersக்கு என்னமோ கிழிக்கப்போகிறார் என்று ரொம்ப நாளாய் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; இவ்வளவு தான் கிழிச்சிருக்கார். எப்பவும் பிப்பிரவரி, மார்ச் மாசம் மட்டும் இந்திய சாலைகள் சரியில்லாமல் இருக்கிற மாதிரியும் அரசாங்கம் ஒழுங்கா வேலை செய்யாதது மாதிரியும் இந்தியாவில் எல்லாரும் என்னை மட்டும் ஏமாத்துற மாதிரியும் ஒரு ப்லீங்க் வரும். இந்த தடவையும் வந்தது. நேற்று ரஃபி பெர்னாட் யாரோ இரண்டு பேரை கூட்டிக்கொண்டு வைத்து பேசிக்கொண்டிருந்தார் பட்ஜெட் பற்றி வயிற்றெரிச்சல் இருந்த வரை பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு என்னால் முடியல சாமி மாற்றிட்டேன். இப்பொழுதெல்லாம் ரஃபியைப் பார்த்தால் பாவமாயிருக்கிறது ஆனால் இது பொதுபுத்தி சார்ந்த ஒரு மனப்பான்மை என்று நினைத்து என்னை நானே தேற்றிக் கொண்டிருக்கிறேன்.

நேற்றைக்கு நம்ம சிம்புவோட அப்பா ஜெயா டிவியில் தலையை சிலிப்பிக் கொண்டிருந்தார், இவர் இப்ப திமுகவில் இருக்காரா இல்லையா? சாரி லதிமுக இப்ப திமுக கூட்டணியில் இருக்கா இல்லையா?

anonymous chat விட்ஜெட் போட்டதில் இருந்தே யாராவது ஒருவர் பிங் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். பெரும்பாலும் எல்லோருக்கும் பதிலளித்துக் கொண்டுதான் இருக்கிறேன். 24 மணிநேரத்தில் தூங்கும் நேரம் போக மீதி நேரம் இணையத்தில் இருப்பேன் என்பதால் என்னைத் தொடர்புகொள்ள நல்ல உத்திதான் இந்த GChat.

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In சுஜாதா நாட்குறிப்பு

தொடர்ச்சியற்ற எண்ணங்கள்

No country for old man படம் பார்த்தேன், சில வரிகள் எழுதணும் என்ற எண்ணம் இருக்கிறது. Best Director, Best Picture, Best Supporting Actor, Best Screenplay என இந்த முறை அகாதமி விருதுகளில் ஒரு கலக்கு கலக்கியது. Bourne Ultimatum படத்திற்கு மூன்று விருதுகள் Sound editing, editing, sound என்ற வகையில். தொகுத்து வழங்கிய Jon Stewart, Once என்ற படத்தில் இடம் பெற்ற பாடலுக்காக best original song வகையில் விருது வாங்கிய பொழுது விருது வழங்கப்பட்ட இருவரில் Glen Hansard மட்டும் பேசிவிட்டு, Markéta Irglová பேச வரும் பொழுது கொடுக்கப்பட்ட நேரம் முடிந்து அவரிடம் இருந்த மைக் அணைக்கப்பட்டு background score தொடங்கியிருந்தது, அவர் சொன்ன thanks you கூட வரவில்லை; இந்தச் சம்பவத்தை மனதில் நிறுத்தி Glen Hansardஐ சட்டென்று arrogant என்று சொல்லி அடுத்த இடைவேளை முடிந்து வந்ததும் Markéta Irglová வை பேச வைத்தார். சரிதான் என்று நினைத்தேன்.

இரண்டு வாரத்திற்கு முன் ஹம்பி சென்று வந்திருந்தேன் இப்பொழுது தான் அந்த ஃபீலிங்க் குறையத் தொடங்குகிறது அத்தனை வெயில். ஹம்பியைப் பற்றி இரண்டே வரிகளில் சொல்லவேண்டுமென்றால், ஹம்பியைச் சுற்றிப் பார்க்க இரண்டு நாட்கள் நிச்சயம் போதாது! புகைப்படம் எடுக்க வாரக்கணக்கில் தேவைப்படுமாயிருக்கும். காஷ்மீர் போல இல்லாமல் ஹம்பிக்கு தனியாச் சென்றது தவறென்று நினைக்கிறேன் பொட்டல் காட்டில் நண்பர்கள் என்று யாரும் இல்லாமல் காமெரா தூக்கிக் கொண்டு அலைந்தது, சாதாரணத்தை விடவும் அதிக அலுப்பைத் தந்தது.

Lion in Hampi

Temple in Hampi

Small temple in hampi

Thungapadra river

Sunset in thungapadra

Nutrition ஒருவரை எங்கள் கம்பெனி அழைத்து வந்து விருப்பப்பட்டவர்கள் சென்று பார்க்கலாம் என்று சொல்லியிருந்தார்கள். ஆரம்பத்தில் இருந்தே அதில் விருப்பம் இல்லாமலே இருந்தேன், காலை உணவு உட்கொள்ளாமல், மத்யானம் கொஞ்சம் போல் எடுத்துக் கொண்டு, ஆறு ஏழு காப்பிகள் குடித்து பின்னர் ஹெவியான டின்னர் சாப்பிடுவது சரியில்லை என்பது தெரியாத ஒன்றில்லை. கட்டுப்பாடே இல்லாமல் சிக்கன் சாப்பிடுவது, உடல் உழைப்பே இல்லாமல் போன இந்தக் காலத்தில் பிரச்சனை என்று தெரிகிறது தான். கிரிக்கெட், வாலிபால், பூப்பந்து என்று ஒன்றும் விளையாடாமல் வெட்டியாய் கழியும் நேரம் நியூட்ரீஷியனை சந்திக்க விடாமல் செய்திருந்தது. ஆனால் ஒளிந்து கொள்வது எதற்கும் நன்மையல்ல என்று முடிவு செய்து சந்தித்திருந்தேன் கடைசியில்.

சுஜாதாவின் மரணம், புதன்கிழமை மதியம் ஹெவியான மதிய உணவிற்குப் பின்னும், கொண்டாட்டதிற்காக பப் சென்றுவிட்டு, தண்ணியடித்திருந்த நண்பர்களின் போதை தெளிவதற்காக Micheal Clayton படம் பார்த்துவிட்டு மனம் முழுவதும் மகிழ்ச்சியில் தத்தளித்துக் கொண்டிருந்த பொழுது அறிந்து கொண்டது. எப்பொழுதும் கூட்டமாகயிருக்கும் ஒரு இடத்தை பெரும்பாலும் விரும்பாமல் தனிமையை விரும்பும் எனக்கும் கூட, ஏகலைவன்களின் சில ஆயிரங்களில் ஒருவன் என்ற சட்டத்திற்குள் அடைத்துக் கொள்வதில் வருத்தம் இருந்ததில்லை. ஆனால் இப்படிச் சொல்ல ஆரம்பித்தால் கைகளில் மட்டுமல்ல கால்களில் கூட விரல்கள் இருக்க முடியாது இப்பொழுது எனக்கு. வருத்தமாகயிருந்தாலும், அவர் உடலளவில் ரொம்பவும் கஷ்டப்பட்டுட்டார் இன்னமும் கஷ்டப்படாமல் போய்ச் சேர்ந்துட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

அய்யனாருடன் தேசிகனின் பதிவில் சுரேஷ் கண்ணன் போட்டிருந்த ஒரு பின்னூட்டம் பற்றி பேசிக்கொண்டிருந்த பொழுது சொன்னதுதான் நினைவில் வருகிறது. "அய்யனார் அவர் இதுக்கு மேல் மாற்றி எழுத மாட்டார், தேவையில்லை, ஆனால் எழுதினால் எல்லோருக்கும் நல்லது" இதுதான் அது. சுஜாதாவிடம் ஆண்டாள் பற்றி இன்னமும் கொஞ்சம் பேசவேண்டும் என்று நினைத்திருந்தேன், "அம்பலம் அரட்டை" மூலமாய் அவரிடம் நான் கேட்க நினைத்த அத்தனையையும் கேட்டிருக்கிறேன். இதன் தொடர்ச்சியில் ஒரு வெறுமை பரவத்தொடங்கியது அது சுஜாதாவின் மரணத்தின் மூலம் முற்றுப் பெற்றது. போய் வாருங்கள் சுஜாதா, அவ்வுலகத்து மக்களுக்கு பிங் பேங் தியரியைச் சொல்லிக் கொடுத்து அவர்கள் அங்கே இல்லை என்று உணர்த்துங்கள்.

Read More

Share Tweet Pin It +1

9 Comments

In ஜாவா

ஜாவா எங்கேயிருந்து தொடங்கலாம்

ஜாவா படிப்பதாய் இருந்தால் எங்கிருந்து படிக்கலாம் அதற்கு எந்தப் புத்தகங்கள் உதவக்கூடும் என்பவை பற்றி முன்பு எழுதுவதாய்ச் சொல்லியிருந்தேன். சில பல தடங்குதல்கள் காரணமாய் எழுத முடியாமல் போயிருந்தது. அதை இப்பொழுது தொடர உத்தேசம், முடிந்த அளவிற்காவது.

கல்லூரிகளில் ஜாவா படித்துவிட்டு வருபவர்கள் எங்கள் காலங்களில் குறைவாகவேயிருந்தார்கள். என் அக்காவிற்கு MCAவில் கடைசி செமஸ்டரில் இருந்தது என்று நினைக்கிறேன், என் அக்கா கொஞ்சம் பழைய செட், என் பிஎஸ்ஸி செட்டில் எல்லாம் ஜாவா பாடப்பகுதியில் இருந்தது. ஆனால் நான் படிக்கும் பொழுது கிளப்பப்பட்ட சில பல புரளிகளில் ஜாவா இறந்து போய்விட்டது என்பது போன்ற காரணங்களாலும் இயல்பாகவே VB.net கொஞ்சம் வசதியானது என்பதாலும் ப்ராஜக்ட் செய்ய நினைத்த இரண்டாம் ஆண்டிலேயே நான் இயல்பாக VB.netற்கு தாவியிருந்தேன். ஆனால் 2000த்தின் தொடக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து ஜாவா மீண்டு வந்தது.(அதைப்பற்றி இன்னொரு நாள் எழுதுகிறேன் - ரெஃபரன்ஸ் பார்க்கவேண்டும் :))

சரி கல்லூரிகளில் ஜாவா படித்துவிட்டு வருபவர்களுக்கும், ஜாவா படிக்காமல் வருபவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது என்றே நான் நினைக்கிறேன். ஆனால் இது கல்லூரிக்கு கல்லூரி மாறுபடலாம், எங்கள் கல்லூரியில் யுனிவர்சிட்டி கொடுத்திருந்த ப்ராக்டிகல் ப்ரொக்கிராம்களை எரர் இல்லாமல் கம்பைல் செய்து ரன் செய்வது என்பதே பெரிய அறிவுஜீவித்தனம். ஆனால் எல்லாக் கல்லூரிகளும் அப்படியிருக்காது. எனவே இதை கம்ப்யூட்டர் சைன்ஸ் மேஜர் படித்தவர்கள், கம்ப்யூட்டர் தவிர்த்த மற்ற சப்ஜெக்ட் மேஜர் படித்தவர்கள் என்று பிரித்துவிடமுடியாது நிச்சயமாய். நான் காலேஜ் முடித்து வரும் பொழுதெல்லாம் க்ளாஸ், மெத்தேட், இன்டர்பேஸ் போன்றவைகள் கண்களுக்கு தட்டுப்படாமல் பூமியில் சுற்றும் விஷயங்களாகவேயிருந்தது. ஒரு க்ளாஸ் டிக்ளேர் செய்து அதில் நாலைந்து மெத்டேட்கள், கூட்ட, கழிக்க, வகுக்க, பெருக்க என்று போடச்சொல்லியிருந்தால் போட்டிருப்பேனா தெரியாது :). கம்பைலர் கையில் கொடுத்தால் எழுதியிருப்பேன் ஆனால் பேப்பரில் பேனாவால் எழுதத் தெரியாது இது இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. ப்ராக்டிக்கலா ரொம்பவும் திறமையாக இல்லாமல் நல்ல மதிப்பெண் வாங்கிவிடமுடியும் கல்லூரிகளில், ஆனால் இன்டர்வியூ என்று வரும் பொழுது ப்ராக்டிகலா எவ்வளவு யோசிக்கிறீங்க என்பது தான் ரொம்பவும் முக்கியமாயிருக்கும்.

சரி நீங்கள் கல்லூரியில் கம்ப்யூட்டர் சைன்ஸ் மேஜர் எடுத்தவரோ இல்லையோ, கணிணி மொழிகள் பற்றிய லேசான அறிமுகம் இருக்குமானால் உங்களால் ஜாவாவில் தாக்குப்பிடிக்க முடியும் தான். ஆனால் சி, சி++ என்று முடித்துவிட்டு ஜாவா வந்தீர்கள் என்றால் இன்னும் வசதி. ஆனால் என்னைக் கேட்டால் இன்றைக்கு சூழ்நிலையில் ஜாவாவில் புதிதாய் வேலை தேடப்போகிறீர்கள் என்றால் சி, சி++ படிக்காதீர்கள் நேரடியாய் தைரியமாய் ஜாவாவில் குதித்து விடுங்கள். கொஞ்ச நாள் மெனக்கெட்டு கம்ப்யூட்டர் எப்படி வேலை செய்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் ஜெனரல் நாலேட்ஜ் அளவில். பின்னர் சின்னச் சின்ன ஜாவா ப்ரொக்கிராம்கள் எழுதிப் பார்க்கத் தொடங்கலாம். Java 2 Complete Reference by Herbert shield நிச்சயமாய் ஜாவாவை மொத்தமாகத் தெரிந்து கொள்ள உதவும். பெரிய அளவில் இறங்காமல் சின்னச் சின்ன ப்ரொக்ராம்கள் போடவும், ஆனால் கான்செப்டை சரியாகக் கற்றுக் கொள்ளவும் முயலலாம். எனக்குத் தெரிந்து ஜாவாவில் எந்த முறையில் முன்னேறுவது எதை  முதலில் படிப்பது எதை பிற்பாடு படிப்பது என்பதில் உங்களுக்கு சந்தேகம் வருமானால் நான் சொல்லும் தீர்வு, Head First Java புத்தகத்தின் வழி நடப்பது இது ஜாவாவின் முதல் சர்டிபிகேஷனான SCJPக்காக எழுதப்பட்டது. இந்த வழியில் நிச்சயம் பயிற்சி செய்யலாம், அவர்கள் சிலபஸைக் கவர் செய்வது போல் ஒரு மிகச்சரியான பேஸை உங்களுக்கு உருவாக்கிவிடுவார்கள்.

static என்றால் என்ன எப்படி உபயோகப்படுத்தப் படுகிறது, க்ளாஸ் லெவலில்(Class Level), மெத்தேட் லெவலில்(Method Level), வேரியபிள் லெவலில்(Variable Level) எப்படி உபயோகப்படுத்தப்படுகிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். இதற்கு கொஞ்சம் PSVM மெத்தேட்கள் எழுதி உங்கள் திறமையை பரிசோதனை செய்து பார்க்கலாம். என் வரையில் ஜாவாவில் இதுதான் ஆரம்பமாகயிருக்க வேண்டும், static ல் இருந்து தொடங்கினால் சரியாகவரும். மூன்று நான்காண்டுகள் வரை எல்லா இன்டர்வியூவிலும் கேட்கப்படும் கேள்வி static பற்றியது, இதில் குழப்பம் இல்லாமல் பதில் சொன்னீர்கள் என்றால் கேள்வி கேட்பவரின் நம்பகத்திற்கு பாத்திரமாவீர்கள்.(இன்டர்வியூவில் இரண்டு விதங்களில் கேள்விகள் தொடங்கும், பெரும்பாலும் இவை கம்பெனிகளைப் பொறுத்து மாறும். ஒன்று ப்ரொஜக்டில் இருந்து தொடங்கி, ஆர்க்கிடெக்சர், Structs, Spring என்று நீண்டு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் JSP, Servlet என்று இறங்கி பின்னர் Core Javaவில் வந்து நிற்கும். மற்றது அப்படியே உல்டா, எங்கள் கம்பெனியில் முதலில் ப்ரொஜக்ட் பின்னர் ஆர்க்கிடெக்சர்(அப்படி எதுவும் ரெஸியூமில் சொல்லியிருந்தால்) பின்னர் Core Javaவிற்கு வந்துவிடுவோம்) இதை ஏன் சொல்கிறேன் என்றால் எந்தக் கம்பெனியிலும் இங்கிருந்து தொடங்கி இங்கே நகரவேண்டும் என்று எந்த கட்டளையும் இன்டர்வியூ எடுப்பவர்களுக்கு இருக்காது(எங்களைப் பொறுத்தவரை மற்றும் நான் இன்டர்வியூ சென்ற வரையில்). ஆனால் பெரும்பாலும் நான் சொன்ன இரண்டு முறைகளில் ஒன்றாகத்தான் இருக்கும்.

நாங்கள் Core Java ஒழுங்கா விடை சொன்னால் போதுமென்றே நினைப்போம், ஆனால் Core Javaவில் ஏகப்பட்ட கேள்விகள் கேட்கப்படும். பெரும்பாலும் Servlet JSP என்று இறங்க மாட்டோம். ஏனென்றால் எங்கள் கம்பெனியில் நேரடியாக Servletடிலோ(எந்தக் கம்பெனியிலும் Servletல் கோட் எழுதக் கொடுக்க மாட்டார்கள்! இப்பொழுதெல்லாம் Front Controller Servlet என்று ஒரே ஒரு Servlet தான் இருக்கும் அதுவும் ஏற்கனவே எழுதப்பட்டதாக இருக்கும் நான் Structsஐ மட்டும் வைத்துச் சொல்லவில்லை, அதை ஒத்தோ இல்லை வேறு ஆர்க்கிடெக்சரிலோ கூட அப்படித்தான் - கொஞ்சம் பழைய முறையில் இன்னமும் Servlet நிறைய எழுதுவார்களாயிருக்கும்) JSPயிலோ கோட் எழுதும் முறை கிடையாது. இது கொஞ்சம் வித்தியாசமான அப்ரோச் அதற்கு கோர் ஜாவா நன்றாய்த் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் தான் அதிகம் இருக்கும். அதனால் அப்படி.

இதனால் static கிற்குப் பிறகு புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், ஓவர் லோடிங்(Over Loading), ஓவர் ரைடிங்க்(Overriding) கான்செப்டுகள். இங்கே static போல் final key wordன் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ளவேண்டியது முக்கியம். நாங்கள் இன்டர்வியூவில் சுற்றுச்சுற்றி க்ளாஸ்களும் மெத்தேட்களும் எழுதி வெறும் static, final key wordகளை மாற்றிப் போட்டு ஏகமாய்க் கேள்விகள் கேட்போம். தடுமாறாமல் இந்தக் கேள்விகளுக்கு பதில் சொன்னாலே நிச்சயம் எடுத்துவிடுவோம். எங்கள் கம்பெனி மட்டுமல்ல பெரும்பாலான கம்பெனிகளில் எடுத்துவிடுவார்கள் என்றாலும் requirementல் இருக்கும் விஷயங்களையும் கருத்தில் கொள்வார்கள். எங்கள் கம்பெனிக்கு Core Java தான் மிக முக்கியம். இங்கிருந்து கிளம்பினால் அடுத்து Exception Handling தான். ஜாவாவின் Exception Handling ஐ சரியாக படம் வரைந்து விளக்கி கேட்கப்படும் சில சில்லியான கேள்விகளுக்கு தடுமாறாமல் பதில் சொன்னால் போதுமானது. ஏனென்றால் Over Loading, Over riding, static, final, sub class, super class, exception handling புரிந்தாலே ஜாவாவில் கோட் எழுதிவிடலாம் என்பதால் இதை மீறி நாங்கள் கேள்வி கேட்கமாட்டோம். கம்பெனியின் requirementம் அப்படி. ஆனால் வந்திருக்கும் candidate திறமையானவராக இருந்தால்(அவர்கிட்ட என்னத்த மாத்தி மாத்தி static, finalஐ போட) இங்கிருந்து வெகு சில கேள்விகளில் நகர்ந்து Servlet, JSPயில் விளையாடத் தொடங்குவோம்.

PS: முடிந்தால் அடுத்த முறை கேட்கும்/கேட்கப்படும் கேள்விகளை ஒரு ப்ரொக்கிராம்களாக எழுதிப்போட முயல்கிறேன்.

PS1: கூகுளின் Guice framework இப்பொழுது ரொம்பவும் பிரபலம், அதை தற்சமயம் உபயோகிக்கிறேன் என்ற முறையில் அது என்ன ஏது என்று எழுத உத்தேசம். அதற்கு கொஞ்சம் Java Generics தெரிந்திருக்கணும் அதையும் அப்படியே கொஞ்சம் போல் பார்க்கலாம்.

PS2: பதிவில் இருக்கும் ஆங்கிலத்திற்கு மாப்பு.

முந்தைய ஜாவா பதிவுகள்

(ஜாவா) ப்ரொக்கிராமிங் ஃபார் டம்மீஸ்
என் ஜாவா அனுபவங்கள்
என் முதல் இன்டர்வியூ அனுபவம்(ங்கள்)
ஜாவா ஃபார் டம்மீஸ் - எந்தவகையில் சிறந்தது ஜாவா

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In நாட்குறிப்பு

மாற்றம் மாறாமை பற்றிய சில குறிப்புகள்


பனிக்காலத்தின் கடைசி இரவுகளை முனிர்காவின் சாலைகள் வேகமாக நகர்த்திக் கொண்டிருந்தன. முனிர்காவின் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டிற்குச் செல்லும் இரண்டு மூன்று கிலோமீட்டர் குறுக்குப்பாதையில் நினைவின் பதிந்திருந்த நினைவுகளை மீளப்பொருத்தி நகர்ந்த பொழுது அவ்வீதிகளில் பெரிய மாற்றமில்லை, ஒன்றிரண்டு இடங்களில் இடித்துவிட்டு புதிதாய் இன்னும் சிக்கலாய் வீடுகள் கட்டிக் கொண்டிருந்ததை தவிர்த்து. நான் லஸ்ஸி வாங்கிக் குடித்த கடையும், சலவைக்கு துணிகள் கொடுத்த இடமும், நபரும், அவரது மனைவியும் குழந்தைகளும்(நான் பார்த்த குழந்தை பெரியவன் ஆகியிருக்கலாம் நான் பார்த்த அதே வயதில் அளவில் இன்னொன்று உருவாக்கப்பட்டிருந்தது) மின்சாரம் இல்லாத அவரது வீடும் பகலிலும் எரியும் சிம்னி விளக்கும் அப்படியே இருந்தன. என்னை விடவும் வெகு சுலபமாய் அவர் நினைவில் நான் மீண்டு வந்திருந்தேன். சிறு உரையாடலுக்குப் பிறகான லஸ்ஸி கடைக்காரரின் சந்திப்பும் அப்படியே! கடை கொஞ்சம் விஸ்தாரமாக்கப்பட்டிருந்தது முன்னைக்கு இப்பொழுது அதிகம் இனிப்பு வகைகள் விற்றுக் கொண்டிருந்தார். முனிர்காவின் வீதியில் ஆம்லெட் போடுபவரும் கூட அப்படியே ஆம்லெட் ஒன்றின் விலை மட்டும் கொஞ்சம் மாறியிருந்தது முன்பு சிங்கிள் ஆம்லெட் ஐந்து ரூபாய் இப்பொழுது ஆறு ரூபாய் டபுள் ஆம்லெட் அப்படியே டபுளாய். நான்கு வருடங்கள் முன்பு உங்களைப் பார்த்திருக்கிறேன் அவரே தான நீங்க என்ற கேள்விக்கு, எட்டு வருஷமா இங்கத்தான் கடை நடத்துகிறேன் என்ற பதில் மட்டுமல்லாமல், இந்த இடத்தை விட்டுக்கூட நான் மாறியதில்லை என்ற பதிலில் அவருக்கு இருந்த பெருமை எனக்கு ஆச்சர்யமளிப்பதாகயிருந்தது.
 
வெகு காலத்திற்கு முன் குமுதம்/ஆனந்த விகடன் தெரியாது படித்தக் கதை ஒன்று நினைவில் வருகிறது. மதுரையில் இரவில் நடக்கும் கதை, இட்லி சுட்டு விற்கும் கிழவியொருத்தியை போலீஸ்காரர் இடத்தைக் காலி செய்து கொண்டு கிளம்பு என்று சொல்லிக் கொண்டிருப்பார், பாட்டி, இல்லை நான் இருப்பேன் என்று நம்பி என்னைத் தேடி இங்கே ஆட்கள் வருவார்கள் அவர்களுக்கு கொடுத்துவிட்டுத்தான் போவேன் என்று சொல்லிக் கொண்டிருப்பார். அப்படிப்பட்டவர் தான் நான் சந்தித்த ஆம்லெட்காரரும், அவரிடம் நான் மாற்றத்தைப் பற்றியும் நீங்கள் எட்டாண்டாக மாறாமல் இருப்பதைப் பற்றியும் எப்படிப் பேசுவது. நமக்கு அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமமகவும் இருக்கும் ஒன்று அவருக்கு பெருமைக்கூரியதாய் இருக்கிறது. தொடர்ச்சியாய் சந்தித்த டெல்லி மொத்தமுமே எனக்கு பெரிய வித்தியாசமாக ஆனதாக எதுவும் புலப்படவேயில்லை. கதிர்வேல் இட்லிகடை, சந்திற்குள் இருக்கும் இண்டர்நெட் கடை, எப்பொழுதும் முடிவெட்டும் சலூன் கடை, மழுக்க மழுக்க ஷேவ் செய்து குங்குமம் வைத்திருக்கும் அதே சிகை திருத்துபவர் முகம் என எல்லாம் அப்படியே. மென்பொருள் பணி என்னிடம் கொண்டு வந்த எந்த மாற்றத்தையும் சமூகத்திற்கு கொண்டு வந்துவிடவில்லை என்றே நினைத்தேன் நான். ஒருவேளை நான் என்னிடம் காணும் மாற்றம் கூட காட்சிப் பிழையாக இருக்குமோ என்று நினைத்தேன். பைக்குள் கனத்த காமெராவும், பர்ஸிற்குள் கனத்த டெபிட்/கிரெடிட் கார்டுகளும், பார்க்கும் எல்லார் மீதான 'நம்மை ஏமாற்றிவிடுவார்களோ' என்ற பயமும் புதுசு. மாற்றம். மென்பொருள்துறை தந்தது.
 
"மாற்றம் என்பது மாறாத் தத்துவம், மாறும் உலகின் மகத்துவம் அறிவேன், கல்லாய் மரமாய் காடுமேடாய் மாறாதிருக்க நான் வனவிலங்கல்லன்" கண்ணதாசனின் வரிகளைச் சொல்லிவிட்டு எனக்கான மாறுதல்களுக்கான வக்காலத்து வாங்கலாம். அதே போல் மிகநிச்சயமாக மாற்றம் என்பது உலக நியதி. ஆனால் உலகம் ஒப்புக்கொள்ளாத நியதி, எல்லோரும் வாக்குவாதத்தின் பொழுது உபயோகிக்கும் நியதி, ஆனால் அதை உபயோகிப்பவர்களே கூட ஒப்புக்கொள்ளாத நியதி. "அமேரிக்கா" சென்று வந்தாலோ, கல்யாணம் செய்து கொண்டு மனைவி வந்தாலோ, புதிதாய் ஒரு ஊரில் மொழி பழக்கவழக்கம் கலாச்சாரம் கற்று வந்தாலோ மாற்றம் என்பது ஒவ்வொருவருக்கும் இயல்பாய் வரக்கூடியது; அது உலக நியதி. ஆனால் அந்த மாற்றம் உலகம் ஒப்புக்கொள்ளாதது அமேரிக்கா போய்விட்டு வந்தும் இவன் மாறவில்லை அப்படியே தான் இருக்கிறான் என்பது தான் பெருமைக்குரிய வாசகமாகயிருக்கிறது அதே போல் தான் மனைவி சொல்பேச்சு கேட்டு ஆடுவதும், மென்டடலிட்டி மாற்றப்படுவதும் இவை உலக நியதிகள் ஆனால் உலகம் ஒப்புக்கொள்ள முடியாத நியதிகள். புத்தகம் படிப்பதால் உனக்கு என்ன ஆகிறது, உலக சினிமா பார்ப்பதில் நீ என்னவாக ஆகிறாய், அதைப்பற்றி நாலுவரி விமர்சனம் எழுதி என்னத்தை கிழித்துவிடுகிறாய் உனக்கு மாசம் பொறந்தால் சம்பளம் கொடுக்கும் முதலாளிக்கு நேர்மையாயிருக்கிறாயா என்ற கேள்விகள் தாண்டியும் மாற்றம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
 
சில விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படுக்கூடிய வலிகள் காரணமாய் மாறிவிடக்கூடாதே என்ற பயத்துடனேயே வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது. நாத்தீகம் போல் கடவுள் மறுப்பு போல் பெண்களின் மீதான சில "குறிப்பிட்ட" எண்ணங்களைப் போல். ஆனால் private, protected, public என்று அக்ஸஸ் மாடிஃபயர் வைத்து இது மாறலாம் இது மாறவே கூடாது, இந்த மாற்றம் என்னிலிருந்து உண்டானால் மாறலாம் என்று வரைமுறைப்படுத்த வாழ்க்கை என்பது ஜாவா ப்ரொக்கிராம் அல்லவே. ஆனால் வாழ்க்கை ஜாவா ப்ரொக்கிராமாக இருந்தால் எவ்வளவு நல்லதாகயிருக்கும், CR(Change Request) நம்பர் போட்டுவிட்டு மாற்றத்தை எழுதிவிட்டு மறந்து போய்விடலாம். மாற்றத்திற்கு முன்பான பின்பான மாற்றங்களைப் பற்றி எல்லா லெவல்களிலும் டெஸ்டிங் செய்து மாற்றம் செய்யத்தக்கதா இல்லையா என்று கண்டுபிடித்து நகர்ந்துகொண்டேயிருக்கலாம். அடுத்த CR ஐ நோக்கி. ம்ஹும் ஆனால் வாழ்க்கை ஜாவா ப்ரொக்கிராம் அல்லவே. எத்தனையோ காரணங்களுக்காக நிராகரித்துவிட்டுச் சென்ற எத்தனையோ வலைப்பதிவுகள் பின்நாட்களின் ஏற்படுத்திய தாக்கம், இதை முன்னாளில் இருந்தே படித்திருக்கலாம் என்ற எண்ணத்தைக் கொண்டு வந்தாலும் நிராகரித்துச் சென்றுவிட்ட பதிவுகளில் இப்படித் திரும்பிப் பார்க்கவைத்த பதிவுகளின் சதவீதம் நிராகரிப்பதையே முன்வைக்கிறது. இப்படி என்னை நிராகரித்துச் சென்றவர்களையும் திரும்பிப் பார்க்கவைக்கும் தாக்கத்துடன் நான் பதிவெழுத வேண்டும் என்பதே என் ஆசையாகயிருக்கிறது.

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In Only ஜல்லிஸ்

பெயரிலிக்குப் போட்டியா?




இது தஞ்சை பெரிய கோவிலை எடுத்தது. கிளிக்கிப் பார்த்தால் பெரிசா தெரியும்.

இங்க கைவைக்காத ஒரிஜினல் ஃபோட்டோ கிடைக்கும்.

பெயரிலி கூட போட்டி போடுற எண்ணம் இல்லாட்டியும் அவர் படங்கள் பார்த்த பின்னாடி தான் கொஞ்சம் கைவைச்சுப் பார்க்கலாமா என்ற எண்ணம் வந்தது.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சிச்சுவேஷன் காமெடி

இன்னுமாடா எங்கள நம்புறீங்க!

Read More

Share Tweet Pin It +1

6 Comments

In கிரிக்கெட்

Gilchrist ஜென்டில்மேன் விளையாட்டில் நிஜ ஜென்டில்மேன்

கில்கிறிஸ்ட் இந்த மாட்ச் உடன் ஒருநாள் போட்டியில் இருந்து விடைபெறுகிறார். ஏற்கனவே இவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக அறிவித்து இருந்தார். ஜென்டில்மேன்களின் ஆட்டம் என்று சொல்லப்பட்டு வந்தாலும் அப்படிப்பட்ட ஒன்றாக இல்லாமல் தான் இருந்தது/இருக்கிறது கிரிக்கெட். அதற்கு யார் யார் காரணம் எந்த அணி ரொம்ப மோசம் என்ற வெட்டி சர்ச்சைகளை விட்டுவிட்டு; அப்படிப்பட்ட நிலையிலும் கில்கிறிஸ்ட் தனக்கே உரிய நேர்மையுடன் நடந்து கொண்டு 'ஜென்டில்மேன்'என்ற இமேஜுடன் வெளியெறுகிறார்.

விக்கெட் கீப்பராக இருப்பவர் மிகச்சிறந்த பாட்ஸ்மேனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லாமல் இருந்த ஒரு சூழ்நிலையில் வந்தவர் கில்கிறிஸ்ட். பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியின் தூண்களில் ஒருவராக கடைசி மூன்று உலகக்கோப்பை ஆட்டங்களில் இருந்திருக்கிறார். மூன்று உலகக்கோப்பை வென்ற மிகச்சில வீரர்களில் கில்கிறிஸ்டும் ஒருவர்.

கில்கிறிஸ்ட் நல்ல தொடக்கம் தந்த, செஞ்சுரி அடித்த எல்லா மாட்சுகளும் ஆஸ்திரேலிய அணி வென்றிருக்கும் என்றே நினைக்கிறேன். நன்றாக நினைவில் இருக்கிறது மார்க் வாஹ் விளையாடிக் கொண்டிருந்த பொழுதுகளில் கில்கிறிஸ்ட் என்ற இவரை அறிமுகப்படுத்தினார்கள். மார்க் வாஹ் அந்தப்பக்கம் க்ளாசிக்கல் ஷாட்ஸ் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது இவர் சூறாவழி போல் பட்டையை கிளப்பினார். முதலில் எனக்குப் பொறாமையாக இருந்தது மார்க் வாஹ் சீக்கிரம் அவுட் ஆகிவிடும் சமயங்களில் கூட கில்லி அடித்து நொறுக்குவது. ஆனால் ஒருநாள் போட்டிகளில் மார்க் வாஹ்விற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் கிடைத்த நல்ல பார்ட்னர் ஓப்பனர்.

இருவரும் இணைந்து விளையாடிய உலகக்கோப்பை போட்டிகளில் நினைவில் வருகின்றன. பைனல்ஸ் என்று நினைக்கிறேன் சோயிப் அக்தர் ஓவரை கிழிகிழியென கிழித்து தோரணம் கட்டினர் இருவரும். கடைசி வரை அவுட் ஆகலை என்று நினைக்கிறேன். நான் சந்தோஷ வெள்ளத்தில் நீச்சலடித்துக் கொண்டிருந்த நாட்கள். அந்த செமி-பைனல்ஸ் யாரால் மறக்க முடியும்.

ம்ம்ம் இன்று கில்லி ஒரு நாள் போட்டியில் இருந்து விடை பெறுகிறார். தனக்கேயுரிய ஸ்டைலில் செஞ்சுரி அடித்த கையோடு சொந்த மண்ணான பெர்த்தில் இருந்து. இனி ஒரு கில்கிறிஸ்ட் கிரிக்கெட்டுக்கு கிடைப்பார்களா தெரியலை. போய்வா கில்கிறிஸ்ட் வெற்றியின் மகனாய்.

கில்கிறிஸ்டின் ரெக்கார்ட்

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In காஷ்மீர் பயணம் பயணம் புகைப்படம்

ஒற்றைக்கை காஷ்மீரியர்கள்

ஜம்மு காஷ்மீர் என்று நமக்கு அறிமுகமான மாநிலத்தை நாம் மூன்று பகுதிகளாகப் பிரித்தால் இந்து பிரதேசமான ஜம்மு, முஸ்லீம் பகுதியான காஷ்மீர் பின்னர் லதாக் பகுதிகளைச் சார்ந்த புத்தப் பிரதேசமாகவும் வரும். இதில் ஜம்மு மற்றும் காஷ்மீர் தவிர்த்து லதாக் பகுதி பெரும்பாலும் போரால் அதிகம் பாதிக்கப்படாத பகுதியே. நாம் பெரும்பாலும் பள்ளிக்கூடங்களில் பார்த்து வரும் இந்திய வரைபடத்தின் தலை பகுதி காண்பிக்கப்படுவதைப் போல் உண்மையில் இந்தியாவின் வரைபடம் இல்லை.



உண்மையில் இத்தனை வெட்டுகளுக்குப் பிறகான இந்திய வரைபடம் என்பது எனக்கு இணைய தளங்கள் அறிமுகமான பின்னர் தான் தெரியவந்ததுதான்.

உண்மையில் ஜம்மு காஷ்மீரின் இன்றைய வெட்டுக்கான காரணம் சில வரிகளில், ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்த பொழுது அவர்கள் ஆட்சி செய்த பகுதிகளை ஒன்றிணைத்து சுதந்திரம் கொடுக்கவில்லை, மாறாக தன்னாட்சி(அல்லது தனியரசு என்று ஆங்கிலேயர்கள் ஆளுமைக்கு உட்பட்டு மன்னர்கள் ஆள்வது) செய்து வந்த பிரதேசங்களுக்கு தனித்தனியாக சுதந்திரம் கொடுத்து அவர்கள் விருப்பப்பட்டால் இந்தியாவுடன் இணைந்து கொள்ளலாம் என்று அதிகாரம் கொடுத்தனர். அதே போல் வடக்கே சுதந்திரத்துடன் சேர்த்து இந்திய பாகிஸ்தான் பிரிவினையும் நிகழ்ந்ததால் ஜம்மு-காஷ்மீர் பகுதியை ஆங்கிலேயர்களின் ஆளுமையின் கீழ் ஆண்டு வந்த மன்னர் ஹரிசிங்கிற்கு சுதந்திரம் கொடுத்து, அவர் பாகிஸ்தானுடனோ இல்லை இந்தியாவுடனோ இணைந்து கொள்ளலாம் என்றும் வேண்டுமென்றால்(in special cases) தனியாகவேயிருக்கலாம் என்றும் அதிகாரம் வழங்கப்பட்டது.(பாண்டிச்சேரியை உதாரணம் சொல்லி போரடிக்கிறது புதுக்கோட்டை மாவட்டம் கூட 3.3.1948ல் தான் இந்தியாவுடன் இணைந்தது.)

காஷ்மீரின் மன்னர் இந்துவாக இருந்தாலும் 77 சதவீத மக்கள் முஸ்லீம்கள் அத்துடன் பாகிஸ்தான் என்று ஏற்கனவே பிரிக்கப்பட்டிருந்த பகுதியுடன் எல்லையை கொண்டிருந்தனர். கிழக்கு பாகிஸ்தான் போலோ இல்லை தற்போதைய ஆந்திர பிரதேசத்தின் ஹைதராபாத் போலோ அல்லாமல். மன்னர் இரண்டு பக்கம் சேராமல் தான் இருந்தார் ஆனால் பாகிஸ்தான் ராணுவம் அக்டோபர் 20, 1947ல் காஷ்மீரை ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கியது. முதலில் மன்னர் தன் படையைக் கொண்டு எதிர்த்துப் போரிட்டாலும் அக்டோபர் 27ல் அப்போதைய இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மௌன்பேட்டனிடம் முறையிட அவர் அதற்கு இந்தியா உதவும் ஆனால் இந்தியாவுடன் காஷ்மீர் சேர்ந்து கொள்ளும் என்ற உடன்படிக்கையின் படி என்றதும் உடன்படிக்கை கையெழுத்தானது. இந்தியப் படை காஷ்மீர் விரைந்து மன்னருக்கு உதவ முன்னேறும் பொழுது அவர்களுக்கு ஒரு கட்டளை இருந்தது அதாவது பாகிஸ்தான் மேலும் முன்னேறாமல் தடுக்கலாமே ஒழிய ஏற்கனவே முன்னேறிய பகுதிகளுக்குள் சென்று சண்டை போடக்கூடாதென்பது தான் அது.(இஸ்ரேல் என்றொரு தேசமே இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக சண்டை போட்டு முன்னேறி அமைக்கப்பட்டது என்பது வரலாறு!) அப்படி இந்திய ராணுவம் வரும் முன் பாகிஸ்தான் ராணுவம் முன்னேறிய பகுதி தான் இந்தியாவின் வரைபடத்தில் மேற்குப் பக்கமாக இருக்கும் வெட்டு.

இது போல் என்றில்லாமல் தொடக்கம் முதலே(19, 20 நூற்றாண்டுகளிலேயே) கிழக்குப் பக்க பிரச்சனை இருந்தது. இந்தியா 1962ல் சீனா இந்தப் பகுதியை இணைத்துப் போட்டிருந்த தரைவழிப்பாதை தெரியவந்ததும் சீனாவுடன் சண்டை போட்டது. 1956 - 57ல் முடிந்திருந்த இந்த தரைவழிப்பாதை சீனாவை இந்தப் பகுதியுடன் இணைத்தது. பின்னர் அக்சாய் சின் என்றழைக்கப்படும் கிழக்குப் பக்க வெட்டு 1962ல் இருந்தே இருக்கிறது.

காஷ்மீர் வரலாறு போதுமென்று நினைக்கிறேன். நான் காஷ்மீர் சென்று சேர்ந்த பொழுது மணி 1.30 AM மைனஸ் 1, 2 ல் இருந்தது பனி. எங்களை அழைத்துச் செல்ல வரவேண்டிய போட் ஹவுஸ் ஓனர் வராததால் நாங்கள் போட் ஹவுஸ் அசோசியேஷன் முன்னால் நின்றுகொண்டிருந்தோம். இடைப்பட்ட பயண நேரத்தில் நாங்கள் இப்படி 950, 1500 கொடுத்து புக் செய்து வந்திருந்ததை அறிந்த 'சாச்சா' நாங்கள் ஏமாந்ததைச் சொன்னார். அதனால் அவர் அங்கே இல்லாத காரணத்தைச் சொல்லி எஸ்கேப் ஆகிவிடலாம் என்று நினைத்தால் அவர் வந்துவிட்டிருந்தார்.(சட்டென்று எங்கேயோ நிற்பதைப் போல் உணர்பவர்கள், பெங்களூர் To டெல்லி, டெல்லி To காஷ்மீர் படிக்கலாம் - விரும்பினால்)

சாச்சா எங்களுக்கு காஷ்மீரை நெருங்கும் வழியில் அறிமுகப்படுத்தி அணிந்து கொண்டிருந்த பிரான்(Phiran) என்ற முழுநீள அங்கி அணிந்தபடி வந்த அந்த நபருக்கு ஒரு கை தான் இருந்தது எனக்கு ஆச்சர்யம் இவருக்கு ஒரு கை இல்லை என்று நினைத்தேன். சாச்சா நான் கையையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவர். காக்டி(Kanhgri)யை அறிமுகப்படுத்தி வைத்தார். அது மூங்கிலால் பின்னப்பட்ட சின்ன கூடை போன்ற ஒன்றில் கரியைக் கொட்டி நெருப்பிட்டு அது கனன்று கொண்டிருக்கிறது எல்லா காஷ்மீரியர்களும்(ஆண் பெண் என்ற வித்தியாசம் இல்லை) ஒரு கையை அந்த பிரானுக்கு உள்விட்டுக் கொண்டு இதைப் பிடித்துக் கொள்கின்றனர். இதனால் அந்தக் கூடையில் இருந்து கிளம்பும் வெப்பமானது அவர்களை வெம்மையாக வைத்திருக்கிறது.

காரைக் கொண்டு போய் நிறுத்திய இடத்தில் இருந்து ஹவுஸ் போட் இருந்த இடம் வரை போக, சிறிய படகு ஒன்றில் எங்களை ஏறச் சொன்னார் வந்தவர். சாச்சா அவர் வரும் முன்னமேயே எங்களுக்கு நிறைய டிரிக்கள் சொல்லிக் கொடுத்திருந்தார். அது என்னவென்றால், நாங்கள் ஹவுஸ்போட் ஜம்முவில் புக் செய்த பொழுது எங்களை வற்புறுத்தி இரண்டு நாள் எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள், அதற்கு நானும் சரி என்னுடன் வந்த தம்பதியினரும் ஒப்புக்கொள்ளாததால். One or Two days என்று எழுதி வாங்கிக் கொண்டனர். சாச்சாவிற்கு இந்த விஷயம் எக்ஸாக்டா தெரியாவிட்டாலும் காலை பிரச்சனை அந்த ஹவுஸ் போட் ஓனர் பிரச்சனை செய்வார் என்று தெரிந்திருக்கிறது அதுமட்டுமல்லாமல் குல்மர்க் கூட்டிச் செல்கிறேன் என்று சொல்லியும் உங்களை ஏமாற்றுவார்களாயிருக்கும். அதற்கெல்லாம் ஒப்புக்கொள்ளாதீர்கள் காலையில் வெளியில் வந்து எனக்கு தொலைபேசுங்கள் நான் உங்களை அழைத்துச் செல்கிறேன் என்றார்.

காஷ்மீரில் ஹவுஸ் போட் உரிமையாளர் எவ்வளவு பழக்கமோ அதே அளவு பழக்கம் தான் சாச்சாவுடனும் இருக்கும் அவர் சொன்னதை எப்படி நம்பலாம் என்று கேட்கலாம். நாங்கள் செய்த ஜம்முவிலிருந்து காஷ்மீர் பயணத்தில் சாச்சாவைப் பற்றி ஓரளவிற்குத் தெரிந்து கொள்ள முடிந்தது. 'அல்லா'விற்கு ரொம்பவும் பயப்படுபவர், ஹஜ் சென்று வந்தவர் என்பதால் தவறு செய்யவே பயப்படுபவர் என்றும் புரிந்தது. ஏனென்றால் சாச்சா எங்கள் பயணத்தில் பேசி வந்தவைகளைக் கோர்த்தால் அவர் நல்லவராகத்தான் இருக்க வேண்டும் என்று படும். பட்டது.

இரவு அந்தப் படகில் பயணம் செய்தது சிலீரென்ற அனுபவம், கை காலெல்லாம் நடுங்கத் தொடங்கிவிட்டது அந்தச் சிறிய படகில் ஏறி பின்னர் இறங்க, அந்தக் குளிரில் தால் ஏரியில் பயணித்ததால் இன்னமும் குளிரைக் கொண்டு வந்தது ஏரி. தெர்மல்களையும், சட்டை, ஸ்வெட்டர், ஜெர்கின்களையும் தாண்டி குளிர் தாங்கமுடியாத அளவிற்கு இருந்தது. கொடுமைக்கு என்று நான் தங்க வேண்டிய அறையில் ஹீட்டரும் கிடையாது ஒழுங்கான கம்பளியும் கிடையாது. காஷ்மீர் பயணம் வெறுத்துப் போகும் படியான குளிர் என்று தான் சொல்வேன், நான் எடுத்துச் சென்றிருந்த கம்பளி அங்கே கொடுத்த கம்பெளி என்று சுற்றிக் கொண்டு படுத்தது தான் தெரியும். காலை "மோகன் பாய்" என்று அந்த தம்பதியில் பெண் அழைக்கும் பொழுது தான் எழுந்தேன்.

அவர் புதுப் பிரச்சனையுடன் இருந்தார் அங்கே போட் ஹவுஸில் ஓனருடன், இரண்டு நாள் தங்கியே ஆகணுமாம். போட் ஹவுஸ் அசோசியேஷன் ஜம்முவில் வாங்கியது அவர்களுக்காம் போட் ஹவுஸின் ஓனருக்காக அங்கேயும் ஒருநாள் தங்கணும் என்று வற்புறுத்திக் கொண்டேயிருந்தார். எங்களுக்கோ பயங்கர கடி, அன்று குல்மர்க் செல்வதாகத் திட்டம், எழுந்ததும் லேட் இவர் வேறு பிரச்சனை செய்தார். நாங்கள் ஒரேயடியாக எங்களை போட் ஹவுஸ் அசோசியேஷன் கொண்டு செல்லுங்கள் அங்க பேசிப்போம் என்று ஒற்றைக் காலில் நிற்க. கடைசியில் அவர் அழைத்துச் சென்றார், ஆனால் போட் ஹவுஸ் அசோசியேஷன் ஆட்கள் நல்ல மாதிரியாக எங்களை நடத்தி உங்களுக்குத் தேவையில்லை என்றால் நீங்கள் இரண்டாம் நாள் தங்கத் தேவையில்லை என்று சொல்லி எங்களை அனுப்பி வைத்துவிட்டார்.

காஷ்மீர் செல்லப்போகும் மக்கள் இந்த ஹவுஸ் போட் மக்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள்.

தம்பதியில் கணவருக்கு சாச்சா நேற்று கழுதையை அடித்துத் தூக்கியதும் ரிப்பேர் ஆன காரை சாச்சா சரி செய்திருப்பாரா என்ற டவுட், மேலும் அவரை அழைக்கணுமா என்றும் சந்தேகம். என்னிடம் கேட்டார் நான் சொன்னேன் சாச்சா பார்க்க நல்லவராய்த் தெரிகிறார் அவரையே அழைப்போம் என்று. போன் செய்ததும் வந்த சாச்சா எங்களை ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். லால் சவுக் என்றழைக்கப்படும் இடத்தில் இருந்த ஹோட்டல், ஹீட்டர் டிவி வசதியுடன் நல்ல தரத்துடனும் 300 ரூபாய்க்கு அறைகள் கிடைத்தது. குளித்துவிட்டு பார்த்தால் மணியாகியிருந்தது குல்மர்க் சென்றாலும் அவதியில் சென்று திரும்பும் படி இருக்குமென்பதால், லோக்கல் ட்ரிப் ஒன்று போய்வரலாம் என்று உத்தேசித்துச் சென்றோம்.

சங்கராச்சார்யா கோவில், ஏகப்பட்ட பார்க்குகள், மசூதி ஒன்று, குருத்துவாரா ஒன்று என நிறைய இடங்களுக்குச் சென்றுவிட்டு ஹோட்டலுக்கு வந்தால் எங்களுக்காக என ஒரு பெரிய குண்டு காத்திருந்தது அது அப்புறம். இப்ப கொஞ்சம் படங்கள்.

Boats at Dal lake during sunset

Going to house boat at midnight

Shikara in Dal lake during sunset

Dal lake during sunset

Lake view from the fort

Lake view from some garden

Dal lake view from fort

Lake view from fort

Dal lake view from fort

Dal lake view from fort

Portrait of both Jaiswals

Portrait of swapnil

Dal lake boat houses view from fort

Empty tree in the fort

Mountain view

Militry persons with a nice smile

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

The scent of green papaya

ஒரு சில படங்கள் நமக்கு அதிர்ச்சி மதிப்பீட்டிற்கு ஆளாக்காமல் கூட நம்மை நெகிழ்த்திவிடும், அப்படிப்பட்ட ஒரு படம் தான் The scent of green papaya. படம் வசனங்களே இல்லாமல் கூட ஒரு கலாச்சாரத்தை பாரம்பரியத்தை வெளிப்படுத்தக் கூடும் என்றும் அதை மிக அழகாக செய்ய முடியும் என்று நிரூபித்திருக்கிறார் படத்தின் இயக்குநர் Tran Anh Hung. அவருடைய முதல் படமான இந்தப் படம் வியட்நாமில் போருக்கு முன்பான காலத்தில் நடைபெறுகிறது.

ஒரு குடும்பத்திற்கு வீட்டு வேலை செய்வதற்காக வரும் முய்(Mui) என்னும் 10 வயது சிறுமியை சுற்றிச் சுழல்கிறது கதை. அவள் வேலை செய்ய வரும் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள், ஏறக்குறைய அவள் வயதில் இறந்து போன அந்த குடும்பத்தில் பெண் குழந்தை ஒன்றின் இறப்பில் இருந்து இன்னமும் மீளாமல் இருக்கிறது குடும்பம். வீட்டில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு வருடங்களுக்கு காணாமல் போகும் கணவன். துணிகள் தைத்து/விற்பனை குடும்பத்தைக் காப்பாற்றும் அம்மா. முய்'க்கு வீட்டு வேலை சொல்லித்தரும் அங்கே வேலை பார்க்கும் வயதான வேலைக்காரி. அப்பா அடிக்கடி ஓடிப்போய்விடுவதால் வருத்தத்தில் இருக்கும் பெரிய பையன், வேலை செய்யும் பெண்ணை வம்பிழுத்துக் கொண்டிருக்கும் சிறிய பையன் என சின்ன குடும்பத்தை நோக்கி சுழலும் கதையில் வியட்நாமின் 1950 களின் வீடுகளைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.




10 வருடங்கள் அவர்கள் வீட்டிற்கு வேலை செய்து தன் இளமையின் எல்லையில் இருக்கும் முய்'யை தன் மகளாகவே நினைக்கும் அந்த வீட்டின் அம்மாவிற்கு அவள் கணவன் படுத்த படுக்கையாகயிருந்து பின்னர் இறந்ததும் வேறு வழியில்லாமல், தன் மகனின் நண்பன் Khuyen வீட்டில் வேலை செய்யப் பணிக்கிறார். இந்த நண்பர் முய் சிறு வயதாயிருக்கும் பொழுதிலிருந்து அந்த வீட்டிற்கு விளையாடுவதற்காகவும்/நண்பனைப் பார்ப்பதற்காகவும் வருபவன் தான். இத்தனை வருடங்களில் அவன் ஒரு மியூஸிசியானாக இருப்பவன் அவனுடைய காதலியாக வியட்நாமின் நாகரீகப் பெண் ஒருத்தி. அவள் அந்தப் புதுவீட்டில் வேலை செய்யும் கொஞ்ச நாட்களிலேயே Khuyen அன்பிற்குப் பாத்திரமாகிறாள். இதன் காரணமாக Khuyenக்கும் அவன் காதலிக்கும் பிரிவு வந்துவிடுகிறது. கடைசியில் Khuyen முய்'க்கு பாடங்கள் சொல்லித் தருவதுடன் படம் முடிவடைகிறது.

அவ்வளவு தான் படம், இந்தப் படம் வித்தியாசமாகவோ இல்லை நம்மீது எதையும் தீவிரமாக திணிக்கும் விதத்திலோ எடுக்கப்படலை. ஆனால் படத்தில் ஒளிப்பதிவு என்பது பிரமிப்பூட்டுகிறது, ஒளியைக் கட்டுப்படுத்தி ஒரு விளையாட்டு விளையாடியிருக்கிறார் இயக்குநர் என்று தான் சொல்லவேண்டும் இதில் ஒளிப்பதிவாளரும் அடக்கம்.

இயக்குநர் வியட்நாமில் பிறந்திருந்தாலும் வளர்ந்து வாழ்ந்ததெல்லாம் ப்ரான்ஸ் என்பதால் அவருக்கு வியட்நாமைப் பற்றிய நினைவு வரும் பொழுதெல்லாம் பப்பாளியில் காய் வாசனையுடனே அவர் தன் தாய்நாட்டை நினைவுக்கு வருவதாகவும் அதனால் தான் அப்படி ஒரு பெயர் வைத்ததாகச் சொல்கிறார். முய்' சிறுவயதில் இருந்து அழகான இளமையான பெண்ணாக மாறும் பருவத்தைப் பற்றிச் சொல்வதால் எப்படி பப்பாளி காயாயிருந்து பழமானதும் நறுமணம் வீசி எல்லோரையும் கவர்ந்திழுக்கிறதோ அப்படியே அவளும் என்றும் வைத்துக் கொள்ளலாம். ஏறக்குறைய அனைத்துக் காட்சிகளுமே இரைச்சலில்லாத, வசனமில்லாத ஒரு அமைப்பில் படமாக்கப்பட்டிருக்கும்.

இந்தப் படம் பார்க்கும் பொழுது கிடைக்கும் அனுபவத்தை எழுத்தில் வரிக்க முடியாது என்று நினைக்கிறேன் அல்லது அந்தத் திறமை இன்னும் கைகூடவில்லை என்று விட்டுவிடலாம். ஆனால் வண்ணங்களை இழைத்து இழைத்து செய்யும் ஓவியம் போல் ஒவ்வொரு ப்ரேமையும் இயக்குநர் செதுக்கியிருக்கிறார் ஆனால் இந்தப் படம் முழுவதும் ப்ரான்ஸில் எடுக்கப்பட்டது. சிறந்த வெளிநாட்டு அகாதமி விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது, கென்னஸில் சிறந்த அறிமுகப் படம் விருதைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In சினிமா சினிமா விமர்சனம்

American Gangster

ஒரு திரைப்படத்தில் ரிட்லி ஸ்காட், ரஸல் க்ரோ, டென்ஸல் வாஷிங்க்டன் இவர்களில் ஒருவர் இருப்பதே என்னைப் பொறுத்தவரை போதுமானது அந்தத் திரைப்படத்தை திரையில் சென்று பார்ப்பதற்கு; இவர்கள் மூவரும் இருக்கும் படத்திற்கு டிக்கெட் விற்பனை தொடங்கிய பொழுதே டிக்கெட் புக் செய்திருந்தேன். டிவிடி ரிலீஸும் பிப்பிரவரி 19 தான் என்பதால் வேறு வாய்ப்பு இல்லை.

ப்ராங்க் லூகாஸ் என்ற அமேரிக்க போதைமருந்து தாதா(ஹெஹெ) பற்றிய படம். உண்மையான கதை என்று படம் சொன்னாலும் படத்தின் 20% தான் உண்மை என்று ப்ராங்க் லூகாஸ்(ஒரிஜினல்) சொல்லியிருப்பதால் படத்தின் ஒரிஜினாலிட்டி பற்றிய கேள்விகள் உண்டு. அதன் காரணமாகவே அகாதமி அவார்ட் நாமினேஷன்களில் பெஸ்ட் ஆக்டர் மற்றும் பெஸ்ட் டைரக்ஷன் கிடைக்கலை என்று சொல்கிறார்கள் - யாமிறியேன் பராபரமே.

எனக்கு ஸ்கிரீன் ப்ரஸன்ஸ்(திரை ஆளுமை :)) பற்றிய பிரஞ்ஞை வந்ததும் டென்ஸல் வாஷிங்டன் படங்கள் எப்பொழுது பார்த்தாலும் அவருடைய ஸ்கிரீன் ப்ரஸன்ஸ் அருமையாக விளங்கும். அப்படி உணரும் இன்னொரு நபர் ஜாக் நிக்கல்ஸன் அப்படி தமிழில் ஒரு கதாப்பாத்திரம் சொல்லணும் என்றால் 'நந்தா'வில் வரும் ராஜ்கிரண் கதாப்பாத்திரத்தைச் சொல்லலாம். ஆனால் அந்த கேரக்டர் அத்தனை விரிவாக இருக்காது. படம் முழுக்க பிரமாண்டமாக நிற்கிறார் டென்ஸல் வாஷிங்டன், ஆனால் இதை விரித்து எழுதும் வார்த்தைகள் வெறும் கிளிஷேவாக இருக்கக்கூடாது என்று நினைக்கிறேன். இரக்கமேயில்லாத போதை பொருள் கடத்துபவராக, தவறு செய்யும் தன்னுடைய தம்பி ஆகட்டும் உறவினர் ஆகட்டும் சகட்டுமேனிக்கு அடித்து நொறுக்குவதுமாய் நமக்கு கொஞ்சம் கொஞ்சமாய் வாஷிங்கடன் மறைந்து ப்ராங்காக மாறுகிறார்.

ரஸல் க்ரோ, ப்ராங்க் லூகஸை பிடிக்கும் காவல் அதிகாரி ரிச்சி ராபர்ட்ஸாக வருகிறார், லஞ்சம் வாங்காத ஆனால் ஒரு உமனைஸர் ரோல், வெளுத்து வாங்குகிறார். மில்லியன் டாலர் பணம் கிடைத்ததும் அதை திரும்பவும் ஒப்படைக்கும் ஒரு கேரக்டர், அதை படத்தில் நகைச்சுவைக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள். கடைசியில் டென்ஸல் வாஷிங்க்டன் 'மில்லியன் டாலரை நீங்க திரும்ப கொடுத்துட்டீங்கன்னு கேள்விப்பட்டேன் உண்மையா?' என்றும் அன்றைக்கு அப்படி செய்துட்டீங்க இன்னிக்கு அப்படி செய்வீங்களா? என்று கேட்பது போல் இருக்கும் காட்சி படம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது 'நச்' என்று வரும்.

இவர்கள் இருவர் தவிர்த்து கொஞ்சம் நல்ல ரோல் என்றால் ப்ராங்கின் அம்மாவிற்குத் தான், இந்தப் படத்தில் நடித்ததற்காக Best supporting actress அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார். டென்ஸல் வாஷிங்க்டன் வீட்டில் சோதனை நடந்து முடிந்ததும் அவருக்கும் அவருடைய தாயாருக்கும் நடக்கும் உரையாடல் பல தமிழ் சினிமாக்களில் நாம் பார்த்திருக்கக்கூடியது என்றாலும், அதில் அவர் அம்மா டென்ஸல் வாஷிங்க்டனை அறையும் ஒரு நிகழ்வு இல்லாமல் தமிழ்ப்படம் முடிந்திருக்காது தான் என்றாலும் அந்தக் காட்சி நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது.

ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் அதைத் தவிர வாழ்க்கையில் நேர்மை என்பதை எதற்கும் உபயோகிக்காத ஒரு பாத்திரமாக ரஸல் க்ரோ நடித்திருக்கிறார். இதைப்பற்றி கோர்ட்டில் அவரது மனைவி சொல்லும் வார்த்தை அருமையாக இருக்கும் 'குற்றவாளிகளைப் போலவும், லஞ்சம் வாங்கும் போலீஸ் காரர்களைப் போலவும் நீங்களும் நரகத்திற்குத்தான் போவீர்கள்' என்று அவரது மனைவி சொல்வார்.

படத்தில் இடம் பெறும் வசனங்கள் சில அருமையாக இருந்தன குறிப்பாக, ப்ராங்க் தன் தம்பியிடம் க்ளப்பில் சொல்லும் வசனம், யார் ரொம்பவும் ஆடம்பரமாக பயமில்லாததைப் போல் இருக்கிறார்களோ அவர் தான் மிகவும் பயமுள்ளவராக்க இருப்பார் என்று. படத்தில் இந்தக் காட்சியை மையப்படுத்தி இன்னும் சில காட்சிகள் வரும், எப்பொழுதும் பெரிய பணக்காரரைப் போல் ஆடையணியாமல் மிகவும் சாதாரணமான ஆடை அணிந்து எல்லாரையும் மிரட்டிக் கொண்டு ரௌடி போல் வாழாமல் சாதாராணனாக இருக்கும் ப்ராங்க் தன் காதலி/மனைவி சொன்னாள் என்று கொஞ்சம் விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து செல்லும் பொழுதுதான் போலீஸின் சந்தேகக் கண்றிற்கு தென்படுவார்.(பொண்டாட்டி சொல்றதையெல்லாம் கேக்கக்கூடாதுங்குறது உள்ளூறை உவமை). அது தெரிந்ததும் மனைவி வாங்கித் தந்த உடையை முதலில் எரிப்பது கவிதை.(ஹிஹி)

காட்சிகள் அருமையாக ஒளிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன, 1970 காலக்கட்டத்தை படம் பார்க்கும் நம் கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள் இயக்குநரும் ஒளிப்பதிவாளரும். வியட்நாமையும் தாய்லாந்தையும் காண்பிக்கும் காட்சிகளில் Landscape காண்பிக்க கிடைத்த குறைந்தபட்ச வாய்ப்பையும் நன்றாக உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். படத்தில் குறிப்பிடத்தக்க அளவு நகைச்சுவை உணர்வு கலக்கப்பட்டிருக்கிறது, மிகவும் அருமையாக. தன்னிடம் இருந்து 98% pure heroin வாங்கி இடைத் தரகர்கள் மூலம் இன்னும் பௌடர் கலக்கி விற்பதை அறிந்த ப்ராங்க் லூகாஸ், அப்படிப்பட்ட ஒருவரிடம் பேசும் காட்சி இதற்கு உதாரணம்.

ரஸல் க்ரோ, டென்ஸல் வாஷிங்க்டனை யாருக்கும் கீழ் வேலை செய்யவில்லை என்றும் தனியாக 'middle man'களை கழட்டி விட்டு சொந்தமாக pure heroin வியட்நாமில் இருந்து கடத்தி வருவதாகச் சொல்ல, இத்தாலிய கனெக்ஷன் இல்லாத ஒரு போதை மருந்து கடத்துபவரை பற்றி கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத பெரிய லெவல் போலீஸ் 'உன் வேலையில் கடைசி இன்சில் நின்று கொண்டு காமெடி செய்யாதே!' என்று சொல்வது நமக்கு காமெடியாக இருந்தாலும் எதார்த்தம். அமேரிக்காவில் இத்தாலிய போதைப் பொருள் ஃபேமிலிக்களின் ஆதிக்கத்தில் இருந்ததை மாற்றி கருப்பின நபரான ப்ராங்க் லூகாஸ் தனி மனிதனாக போதைப் பொருள் சாம்ராஜ்ஜியத்தை வெற்றிகரமாக நடத்தி வந்தது பெரிய அளவில் நம்ப முடியாதது.

Gangster படங்களில் The God Father ஐ நெருங்கும் அளவிற்கு இருக்கிறது என்று சில விமர்சனங்கள் சொல்கின்றன. ம்ஹூம் எனக்குப் படலை. ஒருவேளை மர்லன் ப்ராண்டோவை என்னால் ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லையோ தெரியாது. ஆனால் நிச்சயம் அருமையாக எடுக்கப்பட்ட படம்.

உண்மையான ப்ராங்க் லூகாஸ் கடைசியில் தான் மாட்டிய பிறகு, இந்த போதைப் பொருள் கும்பலின் 100 க்கும் மேற்பட்ட ஆட்களைக் காட்டிக் கொடுத்ததால் 70 வருட சிறை தண்டனை 15 ஆண்டுகளாக ஆக்கப்பட்டு வெளிவந்து இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். வியட்நாமில் அமேரிக்க போர் செய்து வந்த பொழுது, அங்கே இருந்து இறந்த அமேரிக்க போர்வீரர்களைக் கொண்டுவரும் cabin களில் வைத்து போதைப் பொருள் கடத்திக் கொண்டு வந்துள்ளனர்.

ரிச்சி ராபர்ட்ஸ்(ரஸல் க்ரோ கதாப்பாத்திரம்) கடைசியில் ப்ராங்க் லூகாஸின் அடர்னியாக வேலை பார்த்ததாகவும். இன்றுவரை இருவரும் நண்பர்களாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்முறைக் காட்சிகள் என்று பெரிய அளவில் கிடையாது ராம்போ 4 ஐ எல்லாம் இதனுடன் கம்பேர் செய்யவே முடியாது, ஆனால் சில உடலுறவுக் காட்சிகள் உண்டு. படம் இந்தியாவில் அடல்ஸ் ஒன்லி. ஆனால் ஒருமுறை பார்க்கவேண்டிய படம் தான் American Gangster.







































Read More

Share Tweet Pin It +1

10 Comments

Popular Posts