In சுய சொறிதல் சொந்தக் கதை பெங்களூர்

பெங்களூரில் இன்று

சொல்லப்போனால் நேற்று, உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். இங்கே இந்து முஸ்லீம் பிரச்சனை நடந்தது. பெங்களூரின் சிவாஜி நகர் பகுதி முஸ்லீம்கள் அதிகமாக வாழும் பகுதி. அவர்களில் ஒரு பகுதியினர், சதாம் உசேனைத் தூக்கிலிட்டதைக் கண்டித்து ஊர்வலம் சென்றிருக்கிறார்கள். கண்டித்தது இந்திய அரசாங்கத்தைக் கண்டித்தில்லை அமேரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து.

வழியில் ஒரு கோவிலில் பிரச்சனை செய்ததாகக் கேள்வி.

இது நடந்த பிறகு, நேற்று விஷ்வ இந்து பரிஷத்தின் ஒரு மாநாடு எங்கள் வீட்டுப்பக்கத்தில் நடப்பதாகயிருந்தது. அது மட்டும்தான் தெரியும் எனக்கு. நானும் ரொம்ப நல்ல பிள்ளையாய் ஞாயிற்றுக்கிழமை பொட்டி தட்ட கம்பெனிக்கு வந்துவிட, ஏதேதோ பிரச்சனைகளால் நிம்மதியாகப் பொட்டி தட்ட முடியாமல் மனம் அலைபாய வேண்டாம் வீட்டிற்கே சென்றுவிடுவோம் என்று நினைத்து வெளியே வந்த பொழுதுதான் தெரிந்தது. வெளியே பிரச்சனை நடந்து கொண்டிருந்தது.

எங்கள் கம்பெனியிருக்கும் கட்டிடத்தை பாதுகாக்கும் காவலாளிகள், வெளியே பிரச்சனை நடக்கிறது அதனால் உங்களை வெளியே விடமுடியாது என கட்டிடத்திற்குள் சிறை வைக்க, காபி டேவிற்கு நூறு ரூபாய் அழுதது தான் மிச்சம். பின்னர் ஒன்றிரண்டு மணிநேரத்திற்குப் பிறகு பிரச்சனை ஒரளவிற்கு சரியானதுபோல் தெரிந்ததால் வெளியிட வீட்டிற்கு வந்தேன். நேற்று நான் இருக்கு அல்சூர் ஏரியா முழுவதும் கடையடைப்பு நடந்ததுபோல் ஒரு கடையும் ஓப்பனாகயில்லை. பால் வாங்கவே சிரமப்பட்டேன். அப்படியே காப் சிரப்பும்.

காலையில் டீவியில் தான் சொன்னார்கள், சிவாஜிநகரிலும் அதைச் சுற்றியுள்ள் இடங்களிலும் கர்ப்யூ என்று. வேகவேகமாக கம்பெனிக்குப் போன்செய்து வரணூமா என்றால் இன்னும் வீட்டில் தான் இருக்கிறாயா என்று மறுகேள்வி வந்தது. காலையில் இருந்து தலைக்குமேல் choppers பறக்கிறது. பல கம்பெனிகள் லீவுவிட்டதாக அறிகிறேன்.

--------------------------------

கங்குலி அவ்வளவுதான் என்று எழுதிய பதிவர்கள் இப்பொழுது என்ன செய்கிறார்கள் என்று தெரியாது. என்னைப் பொறுத்தவரை இந்திய அணியின் அட்டிட்யூட் மாற மீண்டும் கங்குலியை கேப்டனாக்க வேண்டும்.

அன்று அவ்வளவுதான் கங்குலி காலி, அவுட் ஆப் பார்ம் அப்படி இப்படி என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று மூஞ்சியை எங்கே கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள் தெரியவில்லை.

---------------------------------

புளிநகக் கொன்றை படித்து முடித்துவிட்டேன், இரண்டு நாட்களில் ஆரம்பம் கொடுத்த எதிர்பார்ப்பை நிச்சயமாக அவரால் கடேசிவரை கொண்டு செல்ல முடியவில்லை. இன்னொருநாள் நேரமிருந்தால் என் முதல் புத்தகவிமர்சனமாக புளிநகக் கொன்றை வரலாம்.

இப்பொழுது எடுத்துவைத்திருப்பது, மூன்று விரல் மற்றும் ரமேஷ் பிரேமின் பேச்சும் மறுபேச்சும். பின்நவீனத்துவம் நோக்கிய என் பயணத்தின்(?) ஒரு நல்ல வழிகாட்டியாக இந்த(?) புத்தகம் அமையும் என்று நினைக்கிறேன். மற்றபடிக்கு மூன்று விரல் என்னைப் போன்ற ஒரு கம்ப்யூட்டர் ஆசாமியின் உண்மையை உண்மையாகச் சொல்லுவதால் ஆர்வம் அதிகமில்லையோ என்னவோ இரண்டு பக்கம் தொடர்ச்சியாகப் படிப்பதே கடினமாக இருக்கிறது. ஆனால் அரசூர் வம்சம் இப்படிக் கிடையாது நல்ல ஒரு மாந்திரீக யதார்த்தக் கதை.

-----------------------------------

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In இப்படியும் ஒரு தொடர்கதை தொடர்கதை

ஆண் என்னும் தலையாட்டிபொம்மைகள்

வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் ஆபத்தான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதன் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று ஒருவாறு ஊகிக்க முடிந்தும் அந்தச் செயலை செய்வது எனக்கு ஆச்சர்யத்தை அளிப்பது. அன்றும் அப்படித்தான் நடந்தது. நான் இந்த விஷயத்தை எப்படி அகிலாவிடம் சொல்வது என்று முன்னூறு முறை ஒத்திகை பார்த்து அலுத்துப்போய் சொல்லியேவிட்டேன், அவள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும், என்று நினைத்து.

“அகிலா, உன் தங்கச்சியை நான் பார்க்கணும்னு சொன்னேன்னு சொல்லு. ப்ரீயா இருந்தா மொபைலுக்கு கால் பண்ணச் சொல்லு.”

திருமணமாகி இந்த நான்கு வருடங்களில் பல முறை ஜெயஸ்ரீ எங்கள் வீட்டிலேயே கூட தங்கியிருந்த பொழுதும் பெரும்பாலும் நான் அவளிடம் அதிகம் பேசியதில்லை. எங்களுக்கு திருமணம் நடந்த பொழுது ஜெயஸ்ரீ பதினொன்று படித்துக் கொண்டிருந்ததாய் ஞாபகம். பின்னர் +2 வில் நிறைய மதிப்பெண் எடுத்தும், விரும்பி ஆங்கில இலக்கியம் எடுத்து படித்து முடித்துவிட்டு, ஏதோ ஒரு கல்லூரியில் வேலை பார்த்துவருகிறாள்.

அகிலாவைப் போலில்லாமல் ஜெயா வித்தியாசமானவள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஆங்கில இலக்கியத்தில் இருந்த அதீத ஈடுபாட்டால், கல்லூரியின் ஆங்கில இலக்கியப்பிரிவின் தலைவராக இருந்ததாகவும், கவிதை எழுதுவது மேடையில் பேசுவது இதிலெல்லாம் ஆர்வம் அதிகம் என்றும் அகிலா பெருமையாக சொல்வாள். அகிலாவிற்கு இதெல்லாம் தெரியாது, பாலமுரளி கிருஷ்ணா, பி. சுசீலா இவர்கள் தான், மியூசிக் பற்றி பேசச்சொன்னால் இன்றைக்கு முழுவதும் பேசிக் கொண்டிருப்பாள். அதைப் போலவே பாடவும். ஒன்று பாட்டு கேட்டுக்கொண்டிருப்பாள் அல்லது சன்னமான குரலில் பாடிக்கொண்டிருப்பாள்.

சிலசமயம் நேரடியாய் அவளிடம் கேட்டிருக்கிறேன்,

“உனக்கு நான் சரியில்லையோ, நீ பாடுறது ரொம்ப நல்லாயிருக்கு ஆனால் எனக்கு அவ்வளவுதான் தெரியும் அதைக் கொண்டாட தெரியாது, புரிஞ்சிக்கத் தெரியாது. நம்ம பிரண்ட்ஸ்களோட கெட்டுகெதரில் பாடும் மத்தவங்களை விட உன்னோட வாய்ஸ் அருமையா இருக்கு.

அந்தந்த புருஷன்மார்கள் அவங்களோட பெண்டாட்டி குரல்வளத்தைப் பற்றி பெருமையா பேசுறப்போ எனக்குத் தோணும், நானும் இதையெல்லாம் சொல்லணும்னு, என் பொண்டாட்டி இதைவிடல்லாம் அருமையா பாடுவான்னு. ஆனா இதுவரைக்கும் சொன்னதில்லை. ஏனோ என்னால முடிஞ்சதில்லை, ஆனா ஒன்னு மட்டும் உறுதி அதில் எந்த ஒரு இடத்திலும் ஈகோயில்லை.

என்னைவிட உன் பாடலை நேசிக்கிறவனை நீ கட்டிக்கிட்டிருந்தா இன்னும் நல்லாயிருந்துருப்பியோன்னு பலதடவை நான் நினைக்கிறதுண்டு தெரியுமா?” என்று, பளிச்சென்று பதில் சொல்வாள்,

“என்ன ஐயா வேற பொண்ணை பார்த்து வைச்சிட்டீங்க போலிருக்கு, என்னை கலட்டிவிடுறதா உத்தேசமா? அதுக்குத்தான் இப்படி ஒரு பில்டப் எல்லாம் கொடுக்குறீங்கன்னு நினைக்கிறேன்.”

ஆரம்பத்தில் எனக்கு அவள் என்னை எத்துனை தூரம் நுணுக்கமாய் கவனிக்கிறாள் என்று தெரிந்திருக்கவில்லை, நான் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் அவள் முணுமுணுக்கும் பாடல்கள் எத்தனை நேர கவனிப்பில் வந்தது எனத்தெரியாது, கோபமாயிருக்கும் பொழுது, சந்தோஷமாய் இருக்கும் பொழுது முணுமுணுப்பவற்றில் கூட அவள் யோசித்து செய்வது. அவள் சினிமாப் பாடல்களை பாடுவாள் என்றால் அது எனக்காக மட்டும்தான் இருக்கும். சில அமைதியான நேரங்களில் நான் இதை உணர்ந்திருக்கிறேன். எனக்கு எந்தெந்த பாடல்கள் பிடிக்கும் என்று தெரிந்து வைத்திருந்து நேரத்திற்கேற்ப அது போன்ற பாடல்களை அவள் பாடுவது எனக்கு சிறிதுகாலமாக தெரிந்துதான் இருக்கிறது.

அவளைப் போலவே அழகான ஒரு பையன், அவனை என் வயதான அம்மா கவனித்துக் கொள்ள இருவரும் வேலைபார்க்க கைநிறைய சம்பளத்துடன் அற்புதமான குடும்பம். ஏற்கனவே எங்க அப்பா சேர்த்து வைத்தது எல்லாம் இருந்ததால் மொத்தமாய் வாழ்க்கை நல்லபடியாக ஓடிக்கொண்டிருந்தது, ஒருநாள் அத்தையிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததிலிருந்துதான் இந்தப் புதுப் பிரச்சனை.

“மாப்ளே கொஞ்சம் வீட்டுக்கு வர்றீங்களா உங்கக்கிட்ட கொஞ்சம் தனியாப் பேசணும்...” கொஞ்சம் இடைவெளிவிட்டவர் “அகிலாவிற்கு தெரியவேணாம்.” என்று சொன்னதும் முதலில் முடியாதென்று சொல்லிவிட நினைத்தவன் பிறகு என்ன பிரச்சனையோ ஏதோ என்று நினைத்தவனாய், அன்று மாலை பூ பழம் எல்லாம் வாங்கிக்கொண்டு சென்றிருந்தேன்.

அந்த வீட்டிற்கு முதல் முறையாய் அகிலா உடன் இல்லாமல் செல்கிறேன், முதல் முறை பெண் பார்க்க சென்றிருந்த பொழுதும் அவள் உடன் வரவில்லையென்றாலும் அவள் அங்கேதான் இருந்தாள். வீட்டிற்குள் செல்ல கால்வராமல் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த ஜெயஸ்ரீ,

“வாங்க அத்திம்பேர்.” என்று கூப்பிட்டுவிட்டு, கையில் இருந்த பையை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றாள், நான் எப்பொழுதையும் போல் போய் ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டேன். எனக்கு நன்றாகத் தெரியும் ஜெயா என்னை வம்பிழுப்பதற்காகவே அத்திம்பேர் என்று கூப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தாள் என்று. ஆனால் அகிலாவை நான் வற்புறுத்தவில்லை பாவா என்று என்னை கூப்பிடுமாறு, ஒருவேளை அம்மா செய்தார்களா எனக்குத் தெரியாது. பெரும்பாலும் தனியே இருக்கும் பொழுது பெயர் சொல்லித்தான் கூப்பிடுவாள், அம்மாவோ இல்லை மற்ற சொந்தக்காரர்களோ இருக்கும் பொழுது மட்டும் பாவா என்று கூப்பிடுவாள்.

ஒருசமயம் அகிலாவும் ஜெயாவும் இதைப்பற்றி சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். எனக்கும் விஷயம் காதில் விழுந்தாலும் எப்பொழுதுதையும் போல் இதையும் கண்டுகொள்ளவில்லை, ஆனால் அகிலாவாக வந்து, “அவ சின்ன பொண்ணு விளையாட்டுக்காக எதையாவது சொல்லுவா நீங்க கோச்சுக்கக்கூடாது.” என்று சொல்ல நான், “அவளுக்கு அப்படி கூப்பிடுவதுதான் பிடிச்சிருக்குன்னா அப்படியே கூப்பிடச்சொல்லு.” நானும் சொல்லிவிட்டிருந்தேன்.

இங்கேயும் வீட்டிற்குள் ஏதோ சண்டை நடந்து கொண்டிருந்தது, எனக்கு என்னவென்று தெரியாது. சிறிது நேரத்தில் கையில் காபித்தம்ளருடன் வந்த அத்தை, என்னிடம் கொடுத்துவிட்டு ஒன்றும் பேசாமல் நின்று கொண்டிருக்க, நானும் எப்படி ஆரம்பிப்பது என்று முழித்துக் கொண்டிருந்தேன். நான் காபி குடித்து முடிக்கப்போகும் சமயத்தில் வெளியில் வந்த ஜெயா,

“அத்திம்பேர், உக்காந்திருங்கோ, நான் இப்ப வந்திர்றேன்.” சொல்லிவிட்டு வெளியில் போக, அவள் முகத்தில் எதற்கென்றே தெரியாமல் அப்படியொரு சிரிப்பு. நான் இதைக் கண்டு கொள்ளாமல் விட,

“மாப்ள, விளையாட்டுப் பொண்ணு நீங்க தப்பா நினைக்கக்கூடாது.” என்று அத்தை ஆரம்பிக்க. நான்,

“அத்தை நீங்க ஏதோ முக்கியமா பேசணும்னு சொல்லி வரச்சொன்னீங்க.” நான் நேராய் விஷயத்திற்கு வர, சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் இருந்தவர்கள்,

“மாப்ள, உங்களுக்குத் தெரியாதது ஒன்னுமில்லை, ஜெயாவுக்கு வயசாகிக்கிட்டே போகுது. இப்ப வரன் தேட ஆரம்பிச்சாத்தான் இன்னும் ஒன்னோ இரண்டு வருஷத்திலே அமையும். அதுமட்டுமில்லாம, அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற அளவுக்கு வசதி என்கிட்ட கிடையாதுன்னு உங்களுக்கு நல்லாத் தெரியும்...” அவர் இழுத்துக் கொண்டிருக்கா, இடையில் புகுந்த நான்,

“அத்தே இதில் யோசிக்கிறதுக்கு என்னயிருக்குன்னு தெரியலை, நீங்க பையனை பார்த்து முடிவு பண்ணுங்க, கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நாம பண்ணிடலாம். கல்யாண செலவை நான் பாத்துக்குறேன். இதைக் கேட்குறதுக்குத்தானா என்னை வரச்சொன்னீங்க?” கொஞ்சம் கோபமாய்க் கேட்க,

“மாப்ள கோவிச்சுக்கக்கூடாது, ஏற்கனவே அகிலா சம்பாதிக்கிறது எல்லாத்தையும் இங்க வீட்டுக்கு கொடுக்குறா. ஜெயாவோட சம்பளம் அவள் பஸ் செலவுக்கே போதறதில்லை. இந்நேரத்தில் நான் அவளோட கல்யாண செலவையும் உங்கத் தலையில் கட்டுறேன்னு நினைத்தால் கஷ்டமா இருக்கு. அதுவும் இல்லாம சம்மந்தி வேற என்ன நினைப்பாங்கன்னு தெரியலை? அகிலாவேக் கூட இதுக்கு ஒப்புத்துக்குவாளான்னு தெரியலை. அதனாலத்தான் அவக்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னேன். இந்த வீடு என்பேர்ல தான் இருக்கு. இதை யார்கிட்டயாவது வித்துட்டு ஜெயாவை கட்டிக்கொடுத்துடலாம்னு நினைக்கிறேன்.

இதை அகிலாகிட்டையோ இல்லை ஜெயாகிட்டையோ சொல்றதை விட உங்கக்கிட்டத்தான் சொல்றதுதான் உத்தமம், அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டதிலேர்ந்து இந்த வீட்டை நீங்கத்தான் கவனிச்சிக்கிறீங்க, அதுமட்டுமில்லாம நான் யார்கிட்டையாவது விக்கிறேன்னு, என்னை ஏமாத்திருவாங்களோன்னு பயமாயிருக்கு...”

“அத்தை நீங்க பையனை மட்டும் பாருங்க, வீட்டை விக்கிறது அதை விக்கிறது இதையெல்லாம் யோசிக்காதீங்க.” முகத்தில் கொஞ்சம் கோபத்தைக் காட்ட, சிறிது நேரம் எதையும் பேசாமல் இருந்தவர்.

“சரி மாப்ள, அப்படியே ஆகட்டும், உங்களுக்கேத் தெரியும் நம்ம வீட்டில் ஜாதியெல்லாம் பாக்கிறதில்லைன்னு, உங்கப் பக்கத்திலேயும் ஜெயாவுக்கு வரன் இருந்தா பாருங்களேன். நல்ல பையனா இருக்கணும் அதுதான் முக்கியம். உங்களுக்குத் தெரிஞ்ச நல்ல பசங்க யாராவது இருந்தாலும் சொல்லுங்க. உங்க மொதப் பொண்ணா நினைச்சு கட்டி வைச்சிருங்கோ. ஒரு விஷயம் அகிலாவுக்கு இந்த விஷயம் தெரியவேணாம் நானே சொல்லிக்கிறேன். உங்க மூலமா அவளுக்கு தெரியவேணாம்.”

பின்னர் கொஞ்சம் வீட்டு சங்கதிகள் பேசிவிட்டு நான் திரும்ப வீட்டிற்கு வந்ததில் இருந்து தலை மீது ஏதோ ஒரு பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டதாகப் பட்டது. இதைப் போன்ற ஒரு உணர்வு முதன்முதலில் அகிலாவை திருமணம் செய்வதற்கு முந்தைய நாள் வந்தது நினைவில் இருக்கிறது. உடலும் உயிருமாய் ஒருத்தியை முழுவதும் என் பொறுப்பில் விடப்போகிறார்கள் என்ற பொழுது வந்த அந்த உணர்ச்சி பின்னர் ஒரு முழு ப்ரோஜக்ட்டிற்கும் என்னைப் பொறுப்பாய்ப் போட்டு, கீழே வேலை செய்ய ஐம்பது பேர் கொடுத்தபொழுதும் வந்தது. ஆனால் வேலை சம்மந்தப்பட்ட விஷயம் கொஞ்சம் கொஞ்சம் என் திறமையைப் பார்த்து என்னால் முடியும் என்று நினைத்து வந்தது.

ஆனால் இந்த விஷயம் அப்படிக்கிடையாது. வாழ்க்கையில் என்னுடைய நடத்தை ஏற்படுத்திய நல்ல எண்ணத்தால் ஏற்பட்டது. அதுவும் மகளுக்கே தெரியாமல் என்னிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்ததன் வித்தியாசம் புரிந்துதான் இருந்தது. பத்து லட்சம் ரூபாய் கல்யாணத்திற்கு வேண்டும் என்று கேட்டிருந்தால் லோன் போட்டு எடுத்து தருவதற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் என்னை வித்தியாசமான மனிதனாக மாற்றத்தொடங்கியது. இன்று வரைக்குமே, என் அம்மாவிற்கு நான் சிறுவன் தான். சில பல சமயங்களில் அகிலாவும் இப்படியே என்னை நடத்துவதுண்டு. நல்லவிதமாக நடக்கவேண்டுமே என்ற பயம் அப்பொழுதே தொடங்கியது. பெண்கள் சம்மந்தப்பட்ட எல்லாப்பொறுப்புகளுமே இப்படித்தான்.

இதுவரை எந்த ஒரு விஷயத்தையுமே அகிலாவிடம் இருந்து மறைத்தவன் இல்லையாததால் அது மட்டும் தான் உறுத்தியது. ஆனால் எல்லாம் நன்மைக்கே என நினைத்தவனாய் இதைப் பற்றி கொஞ்சம் தீவிரமாய் யோசித்த எனக்கு ஒரு விஷயம் உதித்தது. அதனால் வந்த முடிவுதான் ஜெயாவை நேரில் சந்தித்து இதைப்பற்றி கேட்பது என்று. ஆனால் அவளாய் வந்து பேசியதை விடுத்து நானாய் அவளிடம் இதுவரை பேசியதில்லையாகையால் அகிலாவிடம் சொல்லி ஜெயாவை தொலைபேச சொல்லியிருந்தேன்.

நான் நினைத்தது போலவே விஷயம் திசை திரும்பாமல் நேர்வழியில் சென்றிருந்தது, அன்று நான் அவளை, அலுவலக வாசலில் இறக்கிவிடும் பொழுது,

“மோகன், ஜெயாக்கிட்ட சொல்லியிருக்கேன். இன்னிக்கு கால் பண்ணினாலும் பண்ணுவா.” சொல்லிவிட்டு இறங்கிச் சென்றாள். சொன்னது போலவே ஒரு மணிபோல் ஜெயா தொலைபேசியில் கூப்பிட்டாள்.

“அத்திம்பேர் நான் ஜெயா.” முன்பாவது அவள் சொல்லும் பொழுது ஒரு சிறு உணர்வு இருக்கும் அவள் நக்கலடிக்கிறாள் என்று அது இன்று சுத்தமாய் இல்லாமல் இருந்தது.

“ஜெயா நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.” நான் சொல்ல மறுமுனையில் சிறிது மௌனம் பின்னர்.

“காலேஜக்கு பக்கத்தில் ஒரு காபிஷாப் இருக்கு, ஆனா அந்த இடம் சரிவராது, நாம பக்கத்தில் இருக்கிற விநாயகர் கோயிலில் பேசலாம். சாயந்திரம் ஐந்து மணிக்கு நான் வர்றேன்.”

நான் கொஞ்சம் முன்னதாய்ப் போயிருந்தேன், சரியாக ஐந்து மணிக்கு வந்தாள், கல்லலூரியிலிருந்து நேராய் வருகிறாள் என்று பார்த்தாளே தெரிந்தது, அகிலா அவளைப் பற்றி சொல்லியிருக்கிறாள், ஜெயா அதிகம் அலங்காரம் செய்து கொள்ளமாட்டாள் நன்றாகத் தெரிந்தது. வந்தவள் நேராய்,

“ஒரு ஐந்து நிமிஷம் இருங்கோ பிரகாரத்தை சுத்திட்டு வந்திர்றேன்.” சொல்லிவிட்டு சென்றவள் சரியாய் ஐந்து நிமிடத்தில் திரும்பவும் வந்தாள்.

“இப்ப சொல்லுங்கோ அத்திம்பேர் என்ன விஷயம்?”

“ஜெயா வேற ஒன்னும் இல்லை, உங்கல்யாண விஷயமா கொஞ்சம் பேசணும்.”

“என்ன அத்திம்பேர் எப்ப கம்ப்யுட்டர் வேலையை விட்டுட்டு இந்த வேலையை தொடங்கினீங்க?” அவள் கேட்டு நான் பதில் எதுவும் சொல்லாததலால்,

“சரி சொல்லுங்க என் கல்யாண விஷயமா என்ன பேசணும்.”

“அத்தை என்கிட்ட உனக்கு வரன் பார்க்கச் சொல்லி சொல்லியிருந்தாங்க, அதான் உன் விருப்பம் என்னான்னு கேக்கலாம்னு...’

“என் விருப்பம்னா?” எதிர்க் கேள்வி கேட்டவளை ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்துவிட்டு,

“உன் விருப்பம்னா? நீ யாரையாவது காதலிக்கிறியா? இல்லை உனக்கு இந்த மாதிரி மாப்பிள்ளைதான் வேணும்னு யோசிச்சு வைச்சிருக்கிறியா? இங்கிலீஷ் லிட்டரேச்சர் தெரிஞ்சிருக்கணும், இல்லை உங்க சைடில் இருக்கணும் இப்படி...”

நான் கேட்கவந்ததை உணர்ந்திருக்க வேண்டும், கொஞ்சம் நேரம் எதையும் பேசாமல் அமைதியாக இருந்தவள்.

“எனக்கு ரொம்ப பசிக்குது, மத்யானமும் சாப்பிடலை. பக்கத்தில இருக்கிற ஹோட்டல் எங்கையாவது போகலாமா?”

என்ன சொல்ல, சிறிது நேரத்தில் அருகில் இருந்த வசந்த பவனுக்கு வந்திருந்தோம், எனக்கு ஒரு காப்பியும் அவளுக்கு சோலா பூரியும் சொல்லிவிட்டபின்,

“ஜெயா நான் கேட்ட கேள்விக்கு நீ பதிலே சொல்லலை?”

“இந்த விஷயம் அக்காவுக்கு தெரியுமா?”

அவள் நான் கேட்டதற்கு பதில் மட்டும் சொல்லாமல் வேறு வேறு கேள்விகளைக் கேட்டுக்கொண்டேயிருந்தாள்.

“தெரியாது, அத்தை சொல்ல வேண்டாம்னு சொன்னாங்க.” நான் சொன்னதும் நிமிரந்து பார்த்தவள், சிறிது நேரத்தில் மீண்டும் சாப்பிடத் தொடங்கினாள்.

“இங்கப் பாருங்க அத்திம்பேர், அத்தே சொன்னாங்க அவங்க சொன்னாங்கன்னு பொண்டாட்டிக்கிட்ட சொல்லாம இருக்காதீங்க, உங்க விருப்பத்துக்கு பையனைப் பாருங்க பிடிக்குதா இல்லையாங்கிறது அடுத்த விஷயம். முதலில் அக்காக்கிட்ட சொல்லிடுங்க. அப்புறம் ஒரு விஷயம், ஜாதியோ இல்லை மதமோக் கூட பிரச்சனை கிடையாது, நல்லவரா இருக்கணும் அதுதான் முக்கியம். நாளைக்கு பிரச்சனைன்னா மூட்டை முடிச்செல்லாம் தூக்கிக்கிட்டு வந்து உங்க வீட்டில் தான் உக்காந்திருவேன் ஜாக்கிரதை.

அப்புறம் காதலிச்சேனான்னு தானே கேட்டீங்க, நீங்க முதலில் இந்த விஷயத்தை அகிலாக்கிட்ட சொல்லுங்க பின்னாடி நான் என்னோட கச்சேரியை வைச்சிக்கிறேன். ஏங்க வீட்டில் இருந்தது மறந்துட்டது போல...” சொல்லிவிட்டுச் சிரித்தவள் “அப்படி ஒருத்தனையும் நான் பார்க்கலை, உங்களுக்கு ஒரு தம்பி இருந்தா கல்யாணம் செய்திருக்கலாம். நீங்க ஒத்தப்புள்ளையா போய்ட்டீங்க. அதனால அம்மா மட்டும் கிடையாது நானும் எனக்கு மாப்பிள்ளை பார்க்கும் உரிமையை முழுமனசா தர்றேன். நல்லப் பையனா பாருங்க.”

வீட்டிற்கு வந்ததும் முதல் வேளையாய் இந்த விஷயத்தை அகிலாவிடம் போட்டு உடைத்தேன். கோபம் வந்தவளாய் தொலைபேசி அத்தையை திட்டினாள். நான் இல்லாம என் புருஷனை எப்படி நீ இதுபோல் வேலையெல்லாம் செய்யச் சொல்லலாம், என்னைத்தான் ஏமாத்தி ஒன்னுமே செய்யாம இவர் தலையில் கட்டீட்டிங்க இப்ப ஜெயாவையும் அப்படியே கட்டி வைக்க பார்க்கிறீங்க போலிருக்கே. அப்படி இப்படியென்று பெரும் சண்டைக்கு பிறகு ஒருவழியாய் சமாதானம் ஆனவள் பின்னர் என்னைப் பிடித்துக்கொண்டாள். அவங்களுக்குத்தான் அறிவில்லைன்னா உங்களுக்குமா, அகிலாக்கிட்ட ஒருவார்த்தை சொல்லீற்றேன்னாவது சொல்லணுமா இல்லையா. நாளைக்கு என்னைப்பத்தி என்ன நினைப்பாங்க.

இதையெல்லாம் சொல்றதுக்கு உங்களுக்கு ஜெயா தேவைப்பட்டிருக்கு, இல்லைன்னா இப்பக்கூட சொல்லியிருக்க மாட்டீங்க அப்படித்தானே. ஆயிரந்தான் அவங்க உங்களுக்கு அத்தை, ஜெயா உங்களுக்கு மச்சினின்னாலும் அவங்கெல்லாம் எனக்குப்பிறகுதானே. அது எப்படி எனக்குத் தெரியாமல் இந்த விஷயத்தில் நீங்கள் செயல்படலாம்.

எனக்காத்தெரியாது அம்மா தன்னோட சாமர்த்தியத்தை காட்டுறாங்க, என்னைப்பத்தி நல்லாத் தெரியும் அவங்களுக்கு உங்களைப்பத்தியும் அதான் இப்படி ஒரு தந்திரம். பொறுப்பை ஒப்படைத்தால் ஒழுங்கா அழகா முடிச்சிக் கொடுத்துறுவீங்கன்னு நல்லாத் தெரியும் அதனாலத்தான் இப்படி செய்கிறார்கள். இவங்களோட சாமர்த்தியத்தை வேற விஷயத்தில் எல்லாம் காண்பிக்காம இதில காண்பிக்கிறது எனக்கென்னவோ சரியாப்படலை. நீங்க என்னான்னா அவங்க சொன்னதுக்கெல்லாம் தலையாட்டிட்டு வந்திருக்கிறீங்க."

இப்படியெல்லாம் பொரிந்து தள்ளியவள் தான், நான் காட்டிய நான்கைந்து மாப்பிள்ளைகளைப் பத்தி நல்லா விசாரித்து அதில் ஒருவனை ஜெயாவிற்கு மணம் செய்து வைத்தாள். அக்கா தங்கையில்லாமல் ஒற்றையாக பிறந்ததாலும் என்னுடைய திருமணத்தை ஒத்தை ஆளாக நின்று என் தந்தையே நின்று முடித்துவிட்டதாலும், ஒட்டுமொத்தமாக ஒரு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டிய பொறுப்பு வந்ததால் தடுமாறிப் போயிருந்த எனக்கு கடைசியில் திருமணத்திற்கு முன்னர், காலில் விழுந்து என்றைக்கிருந்தாலும் நான் தான் இந்த வீட்டின் முதல் பெண் என்று கண்ணீர் மல்கிய விழிகளுடன் ஜெயா சொன்ன வார்த்தை நான் அவள் திருமணத்தை நடத்த பட்ட அத்தனை கஷ்டத்தையும் போக்கியது.

எல்லாம் முடிந்து ஜெயாவை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்ட இரவு அகிலா வந்து,

“என்னங்க என்னங்க இந்த வருஷம் லீவுக்கு மணாலிக்கு போவோங்க...” அவள் சொல்லவருவதன் அர்த்தம் என்னதான் மாங்காவாய் இருந்தாலும் எனக்கு புரிந்தது.

“அப்ப நம்ம பவானிக்கு ஒரு தம்பி பொறக்கபோகுதுன்னு சொல்லு.” நான் ஆரம்பிக்க, அவள் “இல்லைங்க எனக்கு பெண் குழந்தைதான் வேணும். அவளுக்கும் நம்ம ஜெயாவிற்கு செய்தது போல் பிரமாதமாக கல்யாணம் செய்யணும்.”

ஆகா இன்னும் ஒரு முறையா என்று மனதுக்குள் நினைக்க, பொறுப்பு இன்னும் கூடியதாய் ஒரு உணர்வு திருமணம் முடிந்த ஆறு ஆண்டுகளில் ஒரு இருபத்தியொரு வயது குழந்தைக்கு தகப்பனாகிவிட்டாகியது. அடுத்து ஒரு குட்டிக்குழந்தைக்கு தகப்பனா? மீண்டும் ஒரு பெரும் சுமையை என் தோளில் தூக்கிவைக்க அவள் நினைப்பது தெரிந்தாலும் அந்த சுகமான சுமையை பொறுப்பாக சுமக்க முடிவுவெடுத்திருந்தேன். தஞ்சாவூர் பொம்மையொன்று வீட்டில் இல்லாத குறையை நான் என் தலையை ஆட்டி நிவர்த்தி செய்தேன்.

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In கவிதைகள் சுய சொறிதல் வைரமுத்து

கம்பனுக்கு ஒரு கேள்வி

டிசேவின் பதிவில் இருந்து ஆரம்பமானது தான் இந்தத் தேடல். முன்பு ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்னர் எழுதிய வரிகளை இன் டர்நெட்டில் தேடப்போக ஆச்சர்யமாக இருந்தது நான் வழமையாக எழுதிய பல போரம்களை காணவேயில்லை. இருந்த போரங்களும் முழுமையாக மாற்றப்பட்டு ஆச்சர்யமாகயிருந்தது.

நான் அந்தப் பின்னூட்டத்தில் சொன்னது போல் இந்தக் கவிதையை, வைரமுத்துவின் கவிதைத்தொகுப்பு புத்தகம் வாங்கிய மறுநாள் மனனம் செய்தது. இன்னமும் நினைவில் உள்ளது சில மாற்றப்பட்ட வரிகளுடன். (என்னை நேரில் பார்க்கும் வாய்ப்புள்ள பதிவர்கள் வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள். மூடிருந்தால் சொல்கிறேன் அன்று.)

மற்றபடிக்கு இன்றைக்கு கடேசி பதிவு இதுதான் என்று வாக்களிக்கிறேன். இதுவரை ஒருவழியாக நாளொன்றைக்கு ஒரு பதிவு போடாவிட்டாலும் கொஞ்சம் மீள்பதிவு கொஞ்சம் சுயபதிவு என்று ப்ளாக் உலகத்தில் மீண்டும் எழுதத்தொடங்கியிருக்கிறேன். பார்க்கலாம் எவ்வளவு நாட்கள் நீடிக்கிறது என்று. இனி கவிதை.

ராப்பகலாய் பாட்டெழுதி
ராசகவி ஆனவனே
தமிழென்னும் கடலுக்குள்
தரைவரைக்கும் போனவனே

சூத்திரம்போல பாட்டெழுதும்
சுகக்கவியே நான் உனக்கு
மனுஷப்பூ மாலையிட்டா
மரியாதை ஆகாது

இந்திர லோகத்து
இளசுளை தேவரெல்லாம்
மோகக் கிறுக்கெடுத்து
முந்நூறு முத்தமிட
முத்தமிடுங் கூத்துகளை
மூத்தநிலா பார்த்துவிட

இட்ட முத்தத்து
எச்சில் கரையழிக்க
வட்டில் அமுதெடுத்து
வாய்கழுவ வாய்கழுவ

வாய்கழுவும் அமுதமெல்லாம்
வாய்கால் வழியோடி
கற்பக மரங்களுக்கு
கால்கழுவக் கால் கழுவ

கால்கழுவும் சுகவெறியில்
கற்பக மரமபூக்க
அந்த பூவையெல்லாம்
அரும்போடு கிள்ளிவந்து
வானவில்லில் நார்கிழித்து
வகையாக மாலைகட்டி
சொல்லரசே நான் உனக்குச்
சூட்டிவிட வேணுமல்லோ

நான் உனக்கு
மனுஷப்பூ மாலையிட்டா
மரியாதை ஆகாது

சொல்லுக்குள் வாக்கியத்தை
சுருக்கிவச்ச கவிப்புலவா

உன்னை இதுவரைக்கும்
ஒருகேள்வி கேட்கலையா

தினம்வடிச்ச கண்ணீரால்
தீவுக்குள் கடல்வளர்த்து

அசோகவனத்திருந்து சீதை
அழுதாளே அவளை நீ
கண்ணால் பார்க்கலையே
கவிமட்டும் சொன்னாயே
அம்பிகா பதியிழந்து
அமரா வதியுனது
காதுக்குள் அழுதாளே

ஊமை வெயிலுக்கே
உருகிவிட்ட வெண்ணெய் நீ
அக்கினி மழையிலே
அடடாவோ உருகலையே

கடவுள் காதலைநீ
கதைகதையாய் பாடினையே
மனுஷக் காதலைநீ
மரியாதை செய்யலையே

இந்தக்கேள்வியை, ஓ
எங்குபோய் நான்கேட்க
பாடிவச்ச கவிஇல்லே
படிச்சவுக சொல்லுங்க.

- எழுதினது வைரமுத்து, வைரமுத்து இன்னுமொறு முறை வைரமுத்து.(வேணும்னா இப்படியும் எழுதினது நானில்லை...)

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In சுய சொறிதல் சுஜாதா

பெயரில் என்ன இருக்குதுங்க சுஜாதா படங்காட்டல்

எப்பவுமே விகடன்.காம் ஓப்பன் பண்ணினா கற்றதும் பெற்றதும் முதலில் படிக்கிறது வழக்கம். இன்னைக்கு சுஜாதா சொல்லியிருந்த ஒரு விஷயம் சிறிது உறுத்தியது.

ராமானுஜன் என்றால், ராமனின் உடன்பிறப்பு. எனக்குப் பிடித்த பெயர்களில் அது ஒன்று. நான் மிகவும் வியப்பது மூன்று ராமானுஜர்களை! 11-ம் நூற்றாண்டில் வாழ்ந்த, விசிஷ்டாத் வைதக் கருத்துக்களை நிறுவி, ஸ்ரீபாஷ் யம் தந்த ராமானுஜர் அதில் முதல்வர். கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜன் இரண்டாமவர். கவிஞரும், தேர்ந்த மொழிபெயர்ப்பாளருமான ஏ.கே. ராமானுஜன் மூன்றாமவர்....

சொல்லிவிட்டு அவரவர்களைப்பற்றி இரண்டிரண்டு வரிகள் சொன்னவர் கடேசியில் சொன்ன, "ராமானுஜன் என்ற பெயரில் ஏதோ இருக்கிறது!" சொன்னது தான் பெருங்கொடுமை. எனக்குக் கூடத்தான் ராமானுஜன் என்ற பெயரில் கணக்கில் முட்டை மார்க் வாங்கிய சிலரைத் தெரியும். அப்பக்கூட சொல்லுவீங்களோ ராமானுஜன் பெயரில் சில விஷயம் இருக்குன்னு.

என்னவோப் போங்க நல்லாயிருந்தா சரிதான்.

இது பெயரில் என்ன இருக்குதுங்க சுஜாதா, அடுத்தது படங்காட்டல்

ஒரே ரப்சர் பண்ணி இந்த வருட புத்தகக் கண்காட்சிக்கு சென்று கிளப்பிக்கொண்டுவந்த புத்தகங்கள் ஒரு புகைப்படம்.( நன்றி இளவஞ்சி, டிசே - கான்செப்டிற்கு)



அடுத்து வருவது எங்கள் கம்பெனியின் வெளிப்புற அழகு இரவு வேளையில்.


Read More

Share Tweet Pin It +1

7 Comments

In கவிதைகள் வைரமுத்து

நான் காதலுக்காக வழக்காடுகின்றேன்

வானவில்லை
நீங்கள்
தண்ணீர்த் தூறலில்
தரிசித்திருப்பீர்கள்

நீங்கள்
கலையாத வானவில்லை
கண்டதுண்டா?

கண்ணீர்த் தூறலில்
முளைப்பதால் தானோ
அது கலையாமல் இருக்கிறது

அது தான்
காதல்

காதல்
மனிதனைத் தேவனாக்கும்
இரண்டாம் பரிணாமம் இது

இந்த
காதல் மேகம் தான்
மனமென்னும் எரிமலையில்
மழைசிந்தி, மழைசிந்தி
அதில்
உல்லாச வனங்களை
உற்பத்தி செய்யும்

இதய ரோஜாச் செடியில்
இந்த
ஒற்றைப்பூப் பூத்துவிட்டால்
அத்துனை முட்களும்
உதிர்ந்து போகின்றன

வாலிபம் ஏந்திப்பார்க்கும்?
திருவோடும் இதுதான்

வாலிபம் சூடிப்பார்க்கும்
கீரிடமும் இதுதான்

முதலில் சப்தங்களுக்கே அர்த்தம்
சரியாய் விளங்கவில்லை

இப்போதோ
மௌனத்திற்கும் கூட
உரையெழுத முடிகிறது

காதல்
காதுகுடைந்து போட்ட
கோழி இறகுங்கூட
மயிலிறகுக்கான
மரியாதைக்குரியது
காதல் கடிதங்கள்
பருவம் எழுதும் பரீட்சைகளில்
எழுத்துப்பிழைகள் மன்னிக்கப்படுவது
இந்தப் பரீட்சையில்தான்

அக இலக்கணம்
அதைக்
காதல் வழுவமைதி என்று
கணக்கில் வைத்துக் கொள்கிறது.

காதல் கடிதங்களுக்கு
அஞ்சல் நிலையங்கள்
இடும் முத்திரை
இரண்டாம் முத்திரைதான்
அதற்கு முன்பே
உதடுகள் இடும்
முத்த முத்திரைதானே முதல் முத்திரை?

இலக்கிய வாசல்களில்
கனவுகளாலும்
கண்ணீராலும் இடப்படும்
காதல் கோலம்

சமூக வாசல்களவீல்
எச்சிலால் அல்லாவா
அர்ச்சிக்கப்படுகிறது.

அமராவதிகளும்
அனார்கலிகளும்
லைலாக்களும்
தேவதாஸ்களும்

காதல் பிச்சை
கேட்டுக்கேட்டு

மரணத்தின் பாத்திரத்தில்
பிச்சையாய் விழுந்தார்கள்

அனார்கலியின் ஞாபகம்
ஆறுமா
சலீமின்
ராஜ மாடங்களில்
கூடுகட்ட வேண்டிய குயிலுக்கு
கல்லறைக் கூடல்லவா
கட்டிக் கொடுத்தார்கள்.

தேவதாஸ் என்னானான்
காதல் நினைவுகளைக்
கழுவ
தண்ணீரில் மிதந்து தண்ணீரில் மிதந்து
சாவுத் தீவில்
கரை ஒதுங்கினான்

அவராவதி என்னும்
ராஜகவிதை
ஓர் ஏழைப்புலவனின்
மனப்பாடத்திற்கு ஏன்
மறுக்கப்பட்டது

நிஜத்தில்
எழுதுகோலுக்கும்
செங்கோலுக்கும்
வரலாற்றில் நிகழ்ந்த
வர்க்கப் போட்டியிது

இதுவரை
எழுத்தாணிகளும்
பேனாக்களும்
காதலின் கண்ணீணீரத்
தொட்டு எழுதத் தோன்றினவன்றி
துடைக்கும் விரலாய் நீளவில்லையே

விதியாம்
விதியை எழுதும் பேனாவில்
ஆயிரங் காதலரின்
ரத்தந்தான் மையாகுமென்றால்

அந்தப் போனாவை
ஒரு
குஷ்டரோகியிடம் கொடுத்துவிடுங்கள்

சமூகம்
தனது
பரிசோதனக் குழாயில்
இறந்தகாலத்தின் கண்ணீரை
எடுத்துக் கொண்டு
நிகழ்காலக் கண்ணீரை ஏன்
நிராகரிக்கிறது?

போதும்
காதலின்
சௌகர்ய உலாவுக்கு
நாம்
இன்னொரு வீதிசெய்வோம்

அது
கண்ணீர்ச்சேறு படாத
காதல் வீதி

அந்த வீதி
அமையும் வரைக்கும்
காதலுக்கு
இரங்கற்பா எழுதுவோரே
உங்கள் பேனாவைப்
பால்கணக்கு எழதமட்டுமே
பயன் படுத்துங்கள்

நான் இண்டெர்நெட் உலகத்தில் காலடி எடுத்துவைத்து தமிழில் எழுத ஆரம்பித்ததும் தொடங்கியது. இந்த தமிழில் டைப் அடிக்கும் பழக்கம் வேகமாக வருவதற்காக, அப்பொழுதெல்லாம் எதையாவது டைப் அடித்துப்பார்க்கும் பழக்கம் உண்டு. அப்படியே நான் பங்கேற்ற சில Forumகளில் போடுவதுண்டு.

அப்படி பலகாலங்களுக்கு முன்னர் நான் டைப்பி போட்ட வைரமுத்துவின் இந்தக் காதல் கவிதை இப்ப சும்மா பொழுது போகணும்கிறதுக்காக.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In உண்மைக்கதை மாதிரி சிறுகதை

அம்மாவின் பிறந்தநாள்

அம்மாவின் பிறந்தநாள்

ஆயிரந்தான் கவிசொன்னேன்
அழகழகாய் பொய் சொன்னேன்
பெத்தவளே ஒம் பெருமை
ஒத்தவரி சொல்லலையே!

எழுதவோ படிக்கவோ
ஏலாத தாயப்பத்தி
எழுதி என்ன லாபமின்னு
எழுதாமப் போனேனே!

எங்கேயோ, எப்படியோ, யாரா சொல்லக் கேள்விப்பட்ட இந்தவரிகளால் மூச்சடைத்துப் போய்
உட்கார்ந்திருந்தேன். திரும்பவும் வேதாளம் முருங்கை மரம் ஏறியிருந்தது. மனதிற்கு தெரிந்துதான் இருந்தது, இன்றைக்கு வேலை கோவிந்தாவென்று. பக்கத்து கியூபிற்கு வந்து உட்கார்ந்த அந்த காஷ்மீரத்து பெண் என் முகத்தை பார்த்ததுமே புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஒன்றுமே பேசாமலிருந்தாள், முன்பு சிலசமயம் பேசி வதைப்பட்ட காரணமாகயிருக்கலாம். நான் வேலைசெய்யாமல் உட்கார்ந்திருப்பதைப் பார்த்த மேலாளர்,

"என்ன இந்தவாரமும் சனிக்கிழமையா?"

கேட்டுவிட்டு போய்விட்டார், அவருக்கு அதற்குமேல் கேட்க உரிமையளிக்கவில்லை, நான் வேலைசெய்யும் பன்னாட்டு கம்பெனி. ஏதோ ஞாபகமாய் இணைய அஞ்சல் பெட்டியை திறக்க,

தம்பி ஜூலை 22, அம்மாவுக்கு பிறந்தநாள், மறக்காமல் வாழ்த்து சொல்லவும்.

அன்புடன்
அக்கா

இந்த மின்னஞ்சலை படித்ததும் எனக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை, இருபத்திரண்டு ஆண்டுகள் ஆகிறது, என் குடிகார தகப்பனிடம் வாழ்க்கைப்பட்டும், தன்னை பற்றிய நினைவில்லாமல், எங்களை வளர்த்த அம்மாவிற்கு நான் இதுவரை பிறந்தநாள் வாழ்த்து சொல்லியதில்லை.

நான் நினைத்துப்பார்க்கிறேன், இதற்கு முழுக்காரணமும் நான்தானாவென்று. நிச்சயமாக சொல்லிவிடமுடியாது. எங்கள் வழக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதென்பது இல்லாதவொன்று. அடுத்தநாள் வாழ்க்கையையே யோசிக்கமுடியாத எங்களுக்கு பிறந்தநாள்களை பற்றிய நினைவு மிக அரிது. சிரிப்பாகத்தான் இருக்கிறது, என் தாயின் பிறந்ததினமே எனக்கு பதினாறு பதினேழு வயது வந்தபின்தான் தெரிந்தது என நினைக்கும் போது.

அம்மாகூட சொல்லியிருக்கலாம் இன்று என் பிறந்தநாள், நாளை என் பிறந்தநாள் என்று, ஆனால் சொல்லவில்லை இன்றுவரை. முடிந்த அடுத்தநாளோ இல்லை, அதற்கு அடுத்த நாட்களோ தெரியவந்திருக்கிறது. போட்டோஜெனிக் மெம்மரி இல்லாத காரணத்தாலோ என்னவோ நான் மறந்துவிட்டிருக்கிறேன் அடுத்த வருடமும்.

சிறுவயதில் கேட்கத்தெரிந்திருக்கவில்லை, ஏன் நேற்றே சொல்லவில்லையென்று, வயது வந்தபின்தன்னால் தெரியவந்தது, தெரியவந்ததற்கும் ஒரு பெரிய காரணம் இருந்தது.

அம்மாவை போலவே எங்களுக்கு தெரிந்த இன்னொருவர் வீட்டிலும் இதே போல் கணவனால் பிரச்சனை. கொஞ்சம் பிரச்சனை விவகாரமாக ஆகவிட்ட சூழ்நிலையில், அவருடைய பிள்ளைகள் அப்பாவிற்கு சாதகமாக பேசிவிட பயந்துபோன அம்மா, நாங்களும் அம்மாவிற்கு நடக்கும் கஷ்டங்களும், வேதனைகளும் தெரியாமல் அப்பாவிற்கு சாதகமாக பேசிவிடுவோமோ என நினைத்து, வயது வந்த பின் மிகவும் சாதுர்யமாக, சொற்களின் பின்னல்களால் சொல்லியிருக்கிறாள்.

அம்மாவின் பிறந்தநாட்களைப் போலவே எங்கள் வீட்டு தீபாவளியிலும் ஒரு சோகம் இருக்கும். கஷ்டம் பல இருந்தாலும் மனதிற்கு மகிழ்ச்சி தருவது தீபாவளி. அதுவும் எங்கள் வீட்டில் நாங்கள் கொண்டாடும் ஒரு பண்டிகை. புத்தாடை முதல்நாள் வாங்கி வந்தபோதும், 100 ரூபாய்களுக்கு மேல் பட்டாசே வாங்கியராத போதும். நானும் அக்காவும்(?) சந்தோஷமாகத்தான் இருந்திருக்கிறோம்.

அம்மா சுடும் முருக்கைப்போலவும் அதிரசத்தைப்போலவும், ரவாலாடைப்போலவும் நான் இதுவரை சாப்பிட்டதேயில்லை, இந்த விஷயத்தில் வேண்டுமானால் என்னை பாரதியுடன் ஒப்பிட்டுக்கொள்ளலாம்(?). `உண்மை வெறும் புகழ்ச்சியல்ல'. ஆனாலும் அம்மா சந்தோஷமாக இருந்ததில்லை. அன்றைக்கு காலையில் இருந்தே ஏதோ அணுகுண்டு வெடிக்கப்போவதற்கான அறிகுறிபோல் வீடு அமைதியாக இருக்கும். அம்மா மதியம்போல் நோன்பு எடுக்கபோகவேண்டுமென்று சொன்னவுடன் வெடிக்கும். இத்தனைக்கும் அப்பா கடவுள்மேல் நம்பிக்கை அதிகம் கொண்டவர்.

இதற்கான காரணமும் பிற்பாடு சொல்லப்பட்டிருக்கிறது. நான் எப்பொழுதும் திருவள்ளுவரை
கொண்டாடுபவன். வார்த்தைகளையோ, சொற்றொடர்களையோ ஆராய்ந்து பார்க்கும் ஆர்வம் அதிகமிருந்திருக்கிறது. ஆனால் அம்மா அந்த காரணத்தை ஒரு நாள் சொன்னதும் வருந்தியிருக்கிறேன், இனிமேல் ஆராயக்கூடாதென. அந்தச் சொற்றொடர். `தேவிடியாள் தெவசம் கொண்டினது போல்.'

அம்மா சின்னவயதில் சொல்லநினைத்திருந்தால் இதற்கான அர்த்தத்தையும் கூடவே சொல்லவேண்டியிருக்க வேண்டியிருக்கும். எனக்கென்னவோ தவிர்த்தது நல்லதாகப்பட்டது. நானும் அந்த சொற்றொடரின் விளக்கத்தை அளிக்க முன்வரவில்லை, புரிந்திருக்கும், கேஸ் இல்லாமல் மண் அடுப்பில், விரகுகளை வைத்து அம்மா அவ்வளவு கஷ்டப்பட்டு, சுவையாக எல்லாம் செய்து முடிக்க. அம்மாவின் வேதனை புரியாத மூடனில்லை நான்.

அப்பாவும் அம்மாவும் அவர்களுடைய பிராவிடண்ட் பண்ட்களையெல்லாம் எடுத்து எங்களைப் படிக்கவைக்ககேட்டிருக்கிறார்கள். 'சார் நீங்க சொத்தே சேர்த்து வைக்காமல் இப்படி செலவளஇக்கிறீர்களே'யென்று, அதற்கு அப்பா சொன்னதாக அம்மா எங்களிடம் சொல்லிய, `எங்கள் புள்ளைங்கள் தான் எங்கள் சொத்தென்பது' இன்று உண்மையாகி இருக்கிறது.

ஜூலை 22, போன் செய்தேன்,

"ம்ம்ம், நான்தான்."

"இரு, அம்மாகிட்ட கொடுக்கிறேன்."

"ம்ம்ம், சொல்லும்மா. என்ன விஷயம்."

"இல்லை சும்மாத்தான், உனக்கு இன்னிக்கு பிறந்தநாள்தானே? Happy Birthday."

என்னால் இந்தப் பக்கத்திலிருந்தே அம்மாவின் முகத்தில் இருக்கும் ஆச்சர்யத்தை புரிந்து கொள்ளமுடிந்தது.

Read More

Share Tweet Pin It +1

7 Comments

In சினிமா விமர்சனம்

Babel, நான் மற்றும் பின்நவீனத்துவம்

நான் பார்த்த முதல் பின்நவீனத்துவப் படம்.

உண்மையில் திருவிளையாடல் படம் பார்த்துவிட்டு வெறுத்துப் போய்தான் இருந்தேன். என் நினைவில் இருப்பது வரை நான் தமிழ்ப்பட விமர்சனம் என்று இறங்கியதில்லை, நிச்சயமாக அதை திருவிளையாடலில் இருந்து தொடங்க விரும்பவேயில்லை தான். ஆனால் அந்தப் படம் என்னை எழுத வைத்தது. என்னுடைய எட்டு நாள் விடுமுறையை பாதிக்கும் அளவிற்கு அந்தப்படம் என்னுள் விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது உண்மை. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பதைப் போல் நான் ஒரு நல்ல படத்தைப் பார்த்துத் தான் நான் திருவிளையாடல் படத்தைப் பார்த்து என் மனதிற்கு செய்த பாவத்தைக் கழுவ முடியும் என்று நினைத்தேன்.

அப்படி ஒரு படமாய் அமைந்தது தான் பாபெல்(Babel), நியூஇயர் தொடக்கமாய். சரியாய்ச் சொல்லவேண்டுமானால். முப்பத்தொன்றாம் நாள் 10 மணிக்குத் தொடங்கிய இரண்டரை மணிநேர படம். நான் இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக எடுத்துக் கொள்கிறேன், கலைப்படங்களைப் பற்றிய என்னுடைய அபிப்பிராயத்தைப் மாற்றிக்கொள்ள. அப்படி ஒன்றும் தீர்மானித்துச் செல்லவில்லை, நிச்சயமாய் திருவிளையாடல் அளவிற்கு மோசமாய் இருக்காது என்ற நம்பிக்கை மட்டும்தான் இருந்தது.(திருவிளையாடல் படத்துடன் இந்தப் படத்தை ஒப்பிட நேர்ந்ததற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்.) பிராட் பிட்(Brad Pitt) படத்திற்குச் செல்வதற்கு ஒரு காரணம் என்ற உண்மையை ஒப்புக்கொள்வதுடன், அந்த உண்மை எனக்களித்த நன்மையை நினைத்துப் பார்க்கிறேன்.

என்னுடைய ஆரம்பக்கால விமர்சனங்களில் இருந்தே படத்தின் கதையை சொல்வதில்லை என்ற முடிவில் பிடிவாதமாக இன்றுவரை இருந்து வருகிறேன். ஆனால் இந்தப் படத்திற்கான விமர்சனமாக இல்லாமல் இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த அம்சங்களை பேச நினைக்கும் பொழுது அந்த என் உறுதி பின்வாங்கிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க நினைக்கிறேன். படத்தின் கதையை சுஜாதா சொல்வது போல் சொல்ல வேண்டுமென்றால் ஒரு பஸ் டிக்கெட் பின்னால் எழுதிவிட முடியும்தான். ஆனால் அந்தக் கதையை டைரக்டர் எடுத்தவிதமும். அவர் முயற்சி செய்திருக்கும் விஷயங்களும் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தையளிக்கின்றன. ஒருவேளை என்னுடைய முதல் தரமான ஆங்கிலப்படம் என்பது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

மொராக்கோவின் ஒரு குக்கிராமத்தில் ஆடுமேய்க்கும் சிறுவனுக்கு, அவனுடைய ஆடுகளை நரிகள் கொன்றுவிடாமல் காப்பதற்காக வழங்கப்படும் துப்பாக்கியை அவன் உபயோகப்படுத்த கற்றுக்கொள்ளும் நேரத்தில் எந்த வித நோக்கமும் இல்லாமல், மொராக்கோவை சுற்றிப் பார்க்க வரும் அமேரிக்க தம்பதியில் ஒருவரை சுட்டுவிட நடக்கும் விஷயங்களே இந்தப் படம். எந்தவிதமான நோக்கமும் இல்லாமல் நடைபெறும் ஒரு செயலால் ஏற்படும் தொடர் நிகழ்வுகளால் கட்டப்பட்டது இந்தப் படம். உண்மையில் பாபெல் என்பதற்கான நேரடிப் பொருளும் கூட இதுவேதான். பட்டர்பிளை எபெக்ட் என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். அப்படியும் கூட சொல்லலாம்.

நான்கு தனித்தனிக் கதைகளாக, நான்கு வெவ்வேறு இடங்களில் அந்தந்த இடத்தின் மொழி, பண்பாடு, கலாச்சாரம், சூழ்நிலையில் கதை சொல்லப்படுகிறது. நான்கு தனித்தனிக் கதைகளுக்குமிடையே ஒரு தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புதான் கதையின் முக்கிய ஒருவரி விஷயமாக நான் மேலே சொன்ன அந்த துப்பாக்கிச் சுடும் நிகழ்வு. ஜெனநாதன்(இயற்கையின் டைரக்டர்) சொன்னது போல் கோலிவுட்டில், சினிமா எடுப்பது என்பது ஒரு வீட்டைச் சுற்றி, ஒரு கல்லூரியைச் சுற்றி ஒட்டுமொத்தமாக ஒரு கட்டடத்தைச் சுற்றியே கதைகள் பெரும்பாலும் தற்சமயம் உருவாக்கப்படுகின்றன.

தான் இயற்கை பட முதல்காட்சியை விளக்கும் பொழுதே இது நமக்கு சரிவராதுன்னு சொல்லிவிட்டு நகர்ந்த தயாரிப்பாளர்கள் தான் அதிகம் என்று சொல்கிறார் அவர். இந்தப் படத்தில் ஒரு கட்டடிடத்திற்குள் நடக்கும் காட்சிகள் மிகக்குறைவு அப்படிப்பட்ட காட்சிகளில் கூட என்னவோ ஒரு பெரிய விஷயத்தைக் காண்பிப்பதான ஒரு உணர்வுதான் உண்டாகிறது.

இந்தப் படத்தின் கதையைச் சொல்வதால் தவறொன்றும் நிகழ்ந்துவிடாது என்றே முழுமனதாக நம்புகிறேன். ஏனென்றால் இந்தப் படத்தைப் பார்க்க விரும்புபவர்கள் இந்தக் கதையை டைரக்டர் எப்படி எடுத்திருக்கிறார் என்பதைக் கவனிக்கவே நேரம் சரியாய் இருக்கும். அதனால் கொஞ்சமாக கதை.

அதாவது பிராட்பிட்டும், அவரது மனைவியும் தங்களின் அவர்களுக்குப் பிறந்த மகன் இறந்துவிட, அதற்குக் காரணம் என்று இருவரும் மற்றவரை மாற்றிச் சொல்லும் நிலையில். தங்கள் திருமணம் இதனாலெல்லாம் முறிந்துவிடக்கூடாதென்பதற்காக, மொராக்கோவிற்கு சுற்றுலாவிற்கு வருகிறார்கள். அவர்களுடைய மற்ற இரண்டு பிள்ளைகளையும் எமிலியா என்ற தங்கள் வீட்டு வேலைக்கார பெண்ணிடம் விட்டுவிட்டுச் செல்கிறார்கள். இந்தப் பெண் மெக்ஸிகோ நாட்டைச் சேர்ந்தவள்.

இதே நேரத்தில் தான், மொரோக்கோவில் தன்னுடைய ஆடுகளைக் காப்பாற்றுவதற்காக அப்துல்லா(மொரோக்கோ வாசி) ஒரு துப்பாக்கியை வாங்கி, அதை பயன்படுத்துவற்காக தன்னுடைய பையன்கள் இருவரிடமும் கொடுத்துவிட்டுச் செல்கிறார்(பயிற்சி எடுப்பதற்காக). அவர்கள் தான் அஹமது மற்றும் யூசுப். படத்தில் அண்ணன் அஹமதுவை விட யூசுப் எல்லா விஷயங்களிலும் திறமையானவனாக இருக்கிறான்(;)). அதைப்போலவே துப்பாக்கிச் சுடுவதிலும். துப்பாக்கியை விற்றவர் துப்பாக்கி மூன்று கிலோமீட்டர் தூரம் சுடக்கூடியது என்ற சொன்னதை பரிசோதிக்கும் விதமாக அண்ணன் தம்பி போட்டி போட்டுக்கொண்டு சுடப்போக, (அதாவது அவர்கள் வைத்த குறி மலையின் கீழ் பயணம் செய்து வரும் ஒரு பஸ் - கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் இருக்கலாம்) அது அந்தப் பஸ்ஸில் பயணம் செய்யும் பிராட்பிட்டின் மனைவியைத் தாக்குகிறது.

உண்மைக்கதை(சினிமாவில் காட்டப்பட்ட வரிசை கிடையாது.) இங்கிருந்து நான்கு பாதைகளில் பயணம் ஆகிறது. ஒன்று பிராட்பிட் மற்றும் அவருடைய மனைவி இருவரைப்பற்றியது. இரண்டாவது சுட்டுவிட்ட அப்துல்லா குடும்பத்தைப் பற்றியது, மூன்றாவது பிராட்பிட்டின் குழந்தைகளைப் பாதுகாக்கும் எமிலியாவினுடையது. நான்காவது மொரோக்கோ அரசு துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியைப்பற்றி விசாரிக்கும் பொழுது, மொரோக்கோவாசிக்கு துப்பாக்கியை விற்றதாக அறிமுகம் ஆகும் முன்னால் ஜப்பானிய வேட்டைக்காரர் மற்றும் அவருடைய செவிட்டு ஊமையான மகளைப்பற்றியது. இப்படியாக முதல் இரண்டு பாதைகளும் மொரோக்கோவின் இண்டு இடுக்குகளைக் காண்பிப்பது போல, மூன்றாவது பாகமும் நான்காவது பாகமும், முறையே மெக்ஸிகோ மற்றும் ஜப்பானைக் காட்டுகிறது.

ஒவ்வொரு இடத்திலும் மொழிப்பிரச்சனை, அமேரிக்காவிலிருந்து வந்த பிராட்பிட் மற்றும் அவரது மனைவி ஏனைய அமேரிக்கர்களுக்கு பெர்பெர் என்ற மொரோக்கோ மொழி தெரியாது. அமேரிக்காவிலிருந்து, மெக்ஸிகோவிற்கு வேறு வழியில்லாமல், எமிலியின் மகனது திருமணத்தைப் பார்க்கவரும் பிராட்பிட் குழந்தைகளுக்கு ஸ்பானிஷ் தெரியாது. அதே போல் தன் அத்தையை திரும்பவும் மெக்ஸிகோவிலிருந்து அமேரிக்கா கொண்டுவந்து விடும் கேய்ல் கார்சியா பெர்னலுக்கு ஆங்கிலம் அவ்வளவாக பேசவராது. எல்லாவற்றிற்கும் சிகரம் போல் அந்த ஜப்பானியப் பெண்ணிற்கு பேசவேவராது அதைப் போலவே கேட்கவும்.

இதை மொழிப்பிரச்சனை என்று சொல்ல முடியாது. தகவல் பரிமாற்றப் பிரச்சனை. நாமெல்லாம் உலகம் ஒரு குடைக்குள் வந்துவிட்டதாகச் சொன்னாலும் நம்மிடையே இருக்கும் தகவல் பரிமாற்றப்பிரச்சனையை இயக்குநர் அழகாக வெளிப்படுத்துகிறார்.

ஒவ்வொரு தனிப்பட்ட பாகத்தையும் இயக்குநர் படமாக்கியுள்ள விதம் பாராட்டிற்குரியது, ஒரே தியேட்டரில் ஒரே திரைப்படத்தில் நான் வெவ்வேறான கிளைமேட்களில் நடக்கும் அந்த நிகழ்வுகளைப் போலவே நாமும் அலைக்கழிக்கப் படுகிறோம், மொரோக்கோவின் அகன்ற வெப்பமான மலைகளுடன் சேர்ந்த பாலைவனமாகட்டும், கலர்புல்லான ஜப்பானாகட்டும், பிரச்சனை பூமியாய் இருக்கின்ற மெக்ஸிகோ ஆகட்டும் அந்த இடத்திற்கு நாமே செல்வதைப் போன்ற ஒரு பிரமிப்பு.

தேர்ந்த நடிகர்கள், தன் பெண்டாட்டியின் மீது குண்டு பட்டுவிட வேதனையால் துடிக்கும் பொழுதும் சரி, உயிர் பயத்தால் மற்ற அமேரிக்கர்கள் உடனே பஸ்ஸை எடுக்க வேண்டும் என்கிற பொழுது தன் கையாலாகாத்தனத்தை காட்டும் பொழுதும் சரி பிராட்பிட் பிராகசிக்கிறார். அதே போல் அந்த ஜப்பானியப் பெண், விரகதாபத்தில் துடிக்கும் போதாகட்டும். தன் தாயாரைப்போல் தன்னை கவனித்துக் கொள்வதில்லை என்று அப்பாவிடம் கோபப்படுப் பொழுதும் சரி படம் காண்பிக்கிறார். கேய்ல் கார்சியா பெர்னலுக்கு சின்ன வேடம் தான் என்றாலும் அந்த வேடத்தில் வெளுத்துக் கட்டுகிறார், அதே போல் வேலைக்காரியாக நடித்த எமிலியாவும் சரி, தன் பிள்ளைக்களைப் போலவே வளர்த்த பிராட்பிட்டின் பிள்ளைகள் மரணத்தருவாயில் நிற்பதை அமேரிக்கப் போலீஸ்காரர்களிடம் விளக்கப்படாதபாடுபட்டு கண்ணீர் வடிக்கும் பொழுதும் மின்னுகிறார்.

ஒவ்வொரு பேக்ரவுண்டிற்கும் ஏற்றது போல் இசை, மொரோக்கோவில் பெரும்பாலும் ஒற்றை வயலினின் பின்னணியிசையுடன் நிற்கும் பொழுதும் சரி, ஜப்பானில் இரவுநேரப் பார்டிக்கொண்டாட்டத்தில் அலறும் பொழுதும் சரி தனியே ரசிக்க முடிகிறது. அப்படியே கேமிராவும்.

இந்தப் படத்தை நான் ஒரு கதைபோல ஆரம்பம் கடைசி என்று பகுதிபிரித்துத் தந்திருப்பதைப் போல நேரே பார்க்கும் பொழுதிருக்காது, உபபாண்டவத்தையோ, இல்லை ஸீரோ டிகிரியையோ படமாகப் பார்ப்பதைப் போல் தான் இருக்கும். (உபபாண்டவம் ஸிக்ஸாக்காக அடிக்கடி மாறும் காட்சிக் கதையமைப்பிற்கென்றால், ஸீரோ டிகிரி; ஜப்பான் மற்றும் மொரோக்கோவில் நடைபெறும் நிகழ்வுகளுக்காக)

இந்தப் படத்தின் டைரக்டருக்கு பெஸ்ட் டைரக்டர் அவார்ட் கென்னாஸ் பிலிம் பெஸ்டிவலில் கிடைத்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் 2007லிற்கான அதிகபட்ச கோல்டன் குளொப் அவார்டுக்காக பரிந்துரைசெய்யப்பட்டுள்ளது.

முறையே Best Picture - Drama, Best Director (Alejandro González Iñárritu), Best Supporting Actor (Brad Pitt), Best Supporting Actress (Adriana Barraza), Best Supporting Actress (Rinko Kikuchi), Best Screenplay (Guillermo Arriaga), and Best Score (Gustavo Santaolalla).

கடைசியாக ஒரு வார்னிங், பின்நவீனத்துவ நாவல்களை ஒரு முறையாவது தொட்டுப்பார்த்திருக்கிறீர்களா, எடுத்துக்காட்டாக ரமேஷ்பிரேமின் சொல் என்றொரு சொல் இல்லை, ஜே ஜே சில குறிப்புகள் – சுந்தர ராமசுவாமி, அட்லீஸ்ட் எஸ் ராமகிருஷ்ணனின் உபபாண்டவம் (புரிஞ்சிருச்சான்னு நான் கேட்கலை – பாத்து ஒன்றிரண்டு பக்கங்களாவது படிச்சிருக்கீங்களா?) அப்படின்னா மட்டும் போங்க இந்தப் படத்திற்கு, இன்னொரு முக்கியமான விஷயம் நீங்கள் கோணல் பக்கங்கள்(சாரு நிவேதிதாவினுடையது) இல்லை அதைப் போன்றதோ(உடலுறைவையோ இல்லை அதைப்பற்றிய விஷயங்களையோ நேரடியாக எழுதப்பட்டவை) படித்திருக்கிறீர்களா என்றால் இந்தப் படத்திற்குப் போகலாம். இல்லை என்றால் திருவிளையாடல் ஆரம்பம் படம் தமிழ்நாடு மட்டுமல்லாது தமிழ் பேசும் நல்லுலகம் அனைத்திலும் சக்கைப் போடு போடுவதாக அறிகிறேன். அதற்குப் போய்வாருங்கள்.

Directed by Alejandro González Iñárritu; written (in English, Spanish, Japanese, Berber, Arabic and sign language, with English subtitles) by Guillermo Arriaga, based on an idea by Mr. González Iñárritu and Mr. Arriaga;

Cast - Brad Pitt, Cate Blanchett, Gael García Bernal, Koji Yakusho, Adriana Barraza, Rinko Kikuchi, Said Tarchani, Boubker Ait El Caid, Mustapha Rachidi, Elle Fanning, Nathan Gamble and Mohamed Akhzam.

Read More

Share Tweet Pin It +1

11 Comments

In சிறுகதை

சுஜாதாவை கடத்தப்போறேன்

பெர்லின் - ஜெர்மனி

"சுஜாதாவை கடத்தப்போறோம்**."

மோகன் சொன்னதும் வந்தியின் முகத்தில் வலது புருவம் உயர்ந்ததை தவிர வேறு எந்த உணர்ச்சி மாற்றமும் நிகழவில்லை.

"என்ன பிளான்? "

"அதே பழைய பிளான்தான்."

"ம்ம்ம்... சொல்லு."

"வழக்கம் போல நம்ம வேலையெல்லாம் முடிஞ்ச கடைசிநாள், கிளம்பறதுக்கு இரண்டு மணிநேரம் முன்னாடி, கடத்தப்போற இடம் கடற்கரை, அரைமணிநேர வேலை, வேலை முடிஞ்சதும் மூணு மணி நேரத்துக்கு ஸ்லீப்பிங் டோஸ் கொடுத்துட்டு கிளம்புறோம். அதுவும் தேவைப்பட்டாத்தான்."

"வெப்பன்ஸ்?"

"ஒரு பிஸ்டல், இம்போர்ட்டட் மாஸ்க், ஒரு கார்."

"மற்றபடி..."

"இந்த முறை ரொம்ப தூரம் போகமுடியாது, எந்த இடமும் வேண்டாம், அதனால நோ புக்கிங், எல்லாமே காருக்குள்ள தான்."

"காருக்குள்ளயா?"

"ஆமாம் காருக்குள்ளத்தான். ஓகே டன். இப்ப உன்நேரம். நெகட்டிவ் கொஸ்ஸின்ஸ். "

"முதல் கேள்வி எழுத்தாளர் சுஜாதாவைக் கடத்தி என்ன செய்யப்போற. பணம்ங்ற பேச்சுக்கே இடம் கிடையாது. நம்மக்கிட்ட இல்லாத பணமா. வேற என்னதான் ரீஸன். "

"கொஞ்சம் கேள்வி கேட்கணும்."

"எதைப்பத்தி?"

"கடவுளைப்பத்தி."

"இதை கடத்திட்டு வந்துதான் கேட்கணுமா? நேரிலே போய்க்கேட்டா ஆகாதா. அவரும் நம்ம
ஆளுதானடா. "

"என்ன ஐயங்கார்னு சொல்றியா."

"அதில்லைடா, அன்னிக்கு படிக்கலை 'யாருப்பா அது மைக்ரோசாப்ட் நாங்கல்லாம் லினக்ஸ்'னு ஒரு ஆனந்தவிகடன்ல. நாமளும் லினக்ஸ்னு சொல்லுவோம். நம்ம பேக்ரவுண்டையும் சொல்லுவோம். நிச்சயமா பேசுவாருடா. அப்ப கேளு உன் கேள்வியெல்லாம். "

"அப்பிடிப்போனா ஒருவேளை அவங்க சொந்தக்காரங்க இருக்கலாம். இல்ல உதவியாளர்ன்ற பேர்ல ஒருத்தராவது இருக்கலாம், அவங்களுக்காக அவர் தன்னோட நிலையை மாத்திச் சொல்லலாம் இல்லியா. அதுனால நம்ம இடத்துல தனியா வைச்சிக்கேட்டா சொல்லுவார்ல. நாமயென்ன மிரட்டப்போறமா இல்ல வேற எதாவது பண்ணப்போறமா. அழகா உட்காரவைச்சி கேட்கப்போறோம். "

"அந்தக் கேள்விக்கு பதில் சொல்லமாட்டேன்னுட்டார்னா?"

"அவர்க்கிட்ட கேட்க கேள்விக்கா பஞ்சம். லினக்ஸப்பத்தி, ழ இயக்கத்தைப்பத்தி,
மைக்ரோசாப்ட், பில்கேட்ஸ், கமல், சங்கர், மணிரத்னம், அவரோட பேரன், இன்கம்டாக்ஸ், மேஜை நாற்காலிகள், க்வாண்டம், ரிலேட்டிவிட்டி, ஐன்ஸ்டீன், வெண்பா, கட்டறை கலித்துரை, ராமானுஜர், அர்த்த சாஸ்திரம், சாண்டில்யன், நாலாயிர திவ்ய பிரபந்தம், கொஞ்சம் டயாபடீஸ், நிறைய பைபாஸ் சர்ஜரி இப்பிடி எவ்வளவோயிருக்கு முக்கியமா அந்த ஒரு எழவும் தெரியாத ஓட்டிங் மிஷினைப்பத்தி. ஆனா ரொம்ப முக்கியம் கடவுள் பத்தியது தான்."

"கடவுளைப்பத்தியென்ன கேட்கணும்."

"எல்லா விஷயத்திலும் முடிவா ஒரு கருத்தை சொல்பவர் கடவுள் விஷயத்தில் மட்டும் ஒரு முடிவுக்கே வரமாட்டேங்குறார். அவர மாதிரி ஜினியஸ்ஸெல்லாம் கடவுள் இல்லைன்னு ஒத்துக்கிட்டா. சொல்லி வாதாடுறதுக்கு ஒரு ஆள் கிடைப்பாருல்ல. தனக்கு புரிந்த, தெரிந்துகொண்ட விஷயத்தை சுஜாதா எல்லார்க்கும் சொல்வார்னு நான் உறுதியாக நம்புறேன். அதனால தான் கேட்கிறேன். எவ்ளோபேர் கேட்டிருக்காங்க தெரியுமா. எங்ககிட்ட உன் நாத்திகத்தையெல்லாம் பேசாதே. சுஜாதா, சுஜாதான்னு சொல்றியே அவரே கடவுளை நம்புறார் தெரியுமான்னு. "

"இங்க பாரு தாஸ், அவரால சில விஷயங்களைத்தான் சொல்ல முடியும். முதல்ல மக்களுக்கு புரியுமான்னு பார்க்கணும். பத்திரிக்கைல ஒத்துக்குவாங்களான்னு வேற யோசிக்கணும். விகடன்லயே சில விஷயங்களை ஒத்துக்கலைன்னு அன்னிக்கு ஆதங்கமா இளமை விகடன்ல எழுதல. அதுமாதிரிதான் இதுவும். அதுவும் இது கடவுள் பத்தியது. ஒரு ஒரு தனிமனிதனுக்கும் இதைப்பத்தி கருத்து வேறயாயிருக்கும். அதான் அப்ப அப்ப சூசகமா எதாவது எழுதவார்."

"என்ன எழுதுறார்?"

"காஸ்மாலஜியைப்பத்தி சொல்லும் போது அதன்மூலமாத்தான் பிரபஞ்சத்தின் ஆரம்ப கணங்களைப் பற்றிச் சிந்திக்க முடிந்தது. அது வரை சென்று கடவுள் எங்கேயாவது ஒளஇந்திருக்கிறாரானு தேட முடிந்ததுனு சொல்லிட்டு இன்றுவரை அகப்படவில்லை சொல்லியிருக்காருல்ல, அப்பிடின்னா என்ன அர்த்தம். இல்லைன்னுதானே சொல்லவர்றார்."

"அட நீ வேற ஒரு தடவை இப்பிடித்தான். அரியென்று சொல்வார்... அல்லாவென்று
சொல்வார்... அப்பிடின்னு ஆரம்பிக்கும் ஒரு கவிதை, முடிவுல கடவுள் என்று யாரோ ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் தான் வாழ்கிறேன்னு சொல்லி முடிப்பார் கவிஞர். இந்த கவிதையை குறிப்பிட்டுட்டு கீழே இவர் எழுதுறார் இதே நம்பிக்கையில் தான் நானும் வாழ்கிறேன்னு. இதுக்கு என்ன சொல்ற. அதனால நாம இரண்டுபேரும் பேசிக்கிறதால இதுக்கு தீர்வு கிடைக்கும்னு தோணலை. அது போகட்டும், போன தடவையைப்பத்தி என்ன விவரம் கிடைத்தது."

"இல்ல அந்த நடிகை நடந்ததைப்பத்தி யாருக்கிட்டையும் சொல்லவேயில்லை, சொல்லப்போனா நம்ம இரண்டு பேரையும் ரொம்ப பிடிச்சுபோயிருக்கும்னு நினைக்கிறேன் அதனாலதான் அன்னிக்கு கேட்ட எல்லா கேள்விக்கும் பட்டு பட்டுன்னு பதில் சொல்லிச்சு. நாம மறுபடியும் நேர்ல போய்ப்பார்த்தா, நல்லாவே பேசும்னு நினைக்கிறேன்" சொல்லிவிட்டு வந்தியத்தேவன் சிரித்தான்.

"நாமன்னு ஏண்டா என்னையும் சேத்துக்குற, நீ போய்ப் பார்த்தான்னு சொல்லு, நம்ம அப்பா எப்பிடித்தான் உனக்கு இப்பிடி சரியான பேர் வைத்தாரோ வந்தியத்தேவன்னு சரியான வழிசல்டா நீ. புடிச்சபாரு ஒருத்தியை கடத்துறதுக்கு அதுக்கு நான் எவ்வளவோ தேவலை. "

"சரி சரி, ஆளு ரொம்ப வயசானவரு, ஏதோ இளமையா எழுதுரதால தப்பா நினைச்சுராத. அவரோட பாதுகாப்புக்கு..."

"எல்லாம யோசிச்சாச்சு, அதனாலத்தான் வெளியெடத்துக்கு போகாம காருக்குள்ளயேன்னு சொன்னேன். காரும் ஏதாவது பெரிய ஆஸ்பிடலுக்கு 100 மீட்டருக்குள்ளயே சுத்துறமாதிரி பார்த்துக்கோ."

சென்னை - இந்தியா

"டேய் நல்லா பாத்தியா அதே இடம்தானே." மோகன் கேட்க.

வந்தி சொன்னான் "அதே பெஞ்சும் தான், பேசாம பெஞ்சோட தூக்கிட்டு போய்டுவோமா."

"நக்கலெல்லாம் போதும், நாளைக்கு கடத்தணும் ஞாபகம் இருக்கில்ல. சரி என்ன பண்ணப்போறோம் சொல்லு?"

"நான் கார்ல இருப்பேன், அவர் தனியா இருக்கிற எதாவது ஒரு சமயம், நீ பக்கத்தில போய்.
உன்கிட்ட இருக்கிற பிஸ்டலை எடுத்துக்காட்டி, இந்த மாதிரி உங்களை கடத்தப்போறோம்னு
சொல்லு. அப்புறம் காரைக்காட்டி அந்த வண்டியில இருக்கிற ஒரு நபர்கிட்ட லாங் ரேஞ்ச் ரைபிள் இருக்கு. சுத்தம் போடாம வந்திட்டீங்கன்னா. அரை மணிநேரத்தில விட்டிருவோம். இல்லைன்னா நடக்கிற எதுக்கும் நாங்க பொறுப்பு இல்லைன்னு சொல்லு. வந்துட்டார்னா நீ சொன்ன மாதிரி அரைமணிநேரம் அப்புறம் நேரா ஜெர்மனி. சுத்தம் போட்டுட்டார்னா ரெண்டு வழி. ஒன்னு ரெண்டு பேரும் தப்பிக்கணும். இல்லைன்னா ஒரு ஆள் தப்பிச்சு இன்னொரு ஆளை கேஸ்லேர்ந்து காப்பாத்தணும். சரியா?"

"சரிதான், சத்தம் போட்டுட்டார்னா நான் ஒரு கன் ஷாட் பண்ணுரேன். நீ வந்திடு. ஜன
நடமாட்டம் அதிகமா இருக்கிற இடத்தில என்னை இறக்கி விட்டுட்டு. நீ இன்னொரு இடத்துல இறங்கிட்டு வேஷத்தயெல்லாம் களைச்சிட்டு ஸே·ப்க்கு போய் உன்னுடயதெல்லாம் எடுத்துக்கிட்டு நேரா ஏர்போர்ட் வந்திரு. ஓகே வா?."

ஆறு மணி - சென்னை கடற்கரை

எல்லாம் சரியாக நடந்து கொண்டிருந்தது. சுஜாதா வந்து அந்த பெஞ்ச்சில் உட்கார்ந்து சிறிது
நேரம் ஆகிவிட்டது. அந்த இடத்தை நோக்கி மோகன் போய்க் கொண்டிருக்க, சிறிது நேரத்தி
ல் அந்த இடத்தில் கொஞ்சம் பரபரப்பு மோகன் இரண்டு கைகளையும் வானத்தை நோக்கி தூக்கி காட்டுகிறான். இது பிளான் கேன்சல் ஆகிவிட்டதிற்கான சிக்னல். இதையெல்லாம் சிறிது தூரத்தில் காரிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த வந்தியத்தேவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனாலும் காரை அந்த இடத்திற்கு அருகில் கொண்டு சென்றான்.

எட்டு மணி - ஜெர்மன் விமானம்

என்ன வேண்டுமெனக் கேட்டக் கொண்டிருந்த ஜெர்மானிய பணிப்பெண்ணிடம் வழிந்துவிட்டு,

"என்னதாண்டா ஆச்சு?" என்று கேட்டான் வந்தியத்தேவன்.

"யாரோ அவரோட செல்போனை சுட்டுட்டாங்க, அந்த இடம் கொஞ்சம் பரபரப்பாகிவி
ட்டது. அதனால இப்ப கடத்தவேணாம்னுதான் கேன்ஸல் பண்ணிட்டேன். எங்க போய்வி
டப்போறார். அடுத்த முறை அந்த பெஞ்சோட தூக்கிருவோம்." சொல்லிவிட்டு சிரித்தான் மோகன்தாஸ்.

"சரி நாம கடத்தி, நீ அந்த கேள்வியை கேட்டிருந்தா அவர் என்ன பதில் சொல்லியிருப்பாருன்னு நினைக்கிற?".

"ரிட்டையர் ஆகி, உனக்கும் பைபாஸ் ஆபரேஷன் பண்ணினா தெரியும்னு சொல்லியிருப்பாருன்னு நினைக்கிறேன்." சொல்லிவிட்டு கீழே தெரியும் கடலைப்பார்த்து மீண்டும் சிரித்தான் மோகன்தாஸ்.

வந்தியத்தேவன் ஜெர்மானிய விமானப்பணிப்பெண்ணிடம் வழிந்து கொண்டிருந்தான்.

** திரு ரங்கராஜன் அவர்கள் ஆனந்தவிகடனில் அவருடைய செல்போன் தொலைந்ததைப் பற்றி சொல்ல, மனதில் தோன்றிய ஒரு சிறு புனைவு. இது ஒரு மீள்பதிவு. ஒவ்வொரு முறை இந்தக் கதையைப் பார்க்கும் பொழுதும், இந்தக் கதைக்கு மரத்தடியில் பெற்ற விமர்சனங்கள் இன்னும் பசுமையாக நினைவில் உள்ளது. இந்தச் சமயத்தில் இப்படி ஒரு மீள்பதிவு தேவையா என்று நினைத்தவாறே தான் பதிவிடுகிறேன்.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In Only ஜல்லிஸ் சொந்தக் கதை சொர்க்கவாசல்

பெத்தபெருமாள் == பணம்(photos updated)

எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ச்சியாக பலமுறை, பல வருடங்களுக்கு செய்யும் பொழுது ஒவ்வொரு முறையும் அந்த நிகழ்வு வித்தியாசமாய்ப்படுகிறது. வித்தியாசமாய்ப்படுவதற்கு பல காரணங்கள், பொருளாதாரம், பகுத்தறிவு, ஆட்சிமாற்றங்கள், காலங்களுக்கு இடையில் நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள். இப்படி பல காரணங்கள்.

இவை அனைத்தும் எனக்கும் வைகுண்ட ஏகாதெசிக்கும் இடையில் வந்தது தான் இந்தப் பதிவை நீங்கள் படிப்பதற்கான காரணங்கள். அதுவும் என் வரையில் நிறைய மாற்றங்கள், முதன் முறை நான் வைகுண்ட ஏகாதெசிக்குச் சென்றிருந்த பொழுது நான் பள்ளiயில் படித்துக் கொண்டிருந்தேன். பத்து ரூபாய் கிடையாது பையில், பெருமாள் மீதான பாசமும் இப்படிப்பட்ட ஒரு நிகழ்விற்கு செல்லும் பொழுது இயற்கையிலேயே உண்டாகும் ஒருவித உற்சாகமும் தான் முக்கியக்காரணம்.







அந்த உற்சாகம் இரண்டாவது கோபுரத்தைத் தாண்டியும் சுத்தமாக வாடிப்போனது தான் உண்மை. ஒரு பக்கம் சந்தன மண்டபம், மற்றும் கிளi மண்டபம் சொல்வதற்கான வழியென எழுதப்பட்டு காலியாகக் கிடந்த ஒரு கியூ இன்னொரு பக்கம் பெரிரிரிரிரிரிரிரிரிரிரிரிய கியூ. காலியாகக் கிடந்த கியூவிற்கும், மற்றப்பக்க கியூவிற்குமான வித்தியாசம் இதற்குள் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆறு ஏழு வருடத்திற்கு முன்னர் அந்த மண்டபங்களுக்கு செல்வதற்கான பணம் எவ்வளவு என்று சரியாக நினைவில் இல்லாவிட்டாலும், என்பையில் காசில்லாதது மட்டும் நன்றாக நினைவில் உள்ளது.

பக்திங்கிறது கோயிலுக்குப் போய் நிரூபிக்கும் விஷயமாய் என் குடும்பத்திற்கு இன்றுவரை இருந்ததில்லை, நல்ல நாள் பெரிய நாள்களுக்கு மட்டும் தான் இன்று வரை கோவில்களுக்குச் சென்று வருகிறோம், அதுவும் வருடத்திற்கு இரண்டு மூன்று முறைகள் மட்டுமே. அதனால் நான் ஏகாதெசிக்குச் செல்வதற்கு பர்மிஷன் கிடைப்பதே பெரிய விஷயம். காசு கேட்டால் அவ்வளவுதான். ஆப்வியஸ்லி நான் அந்த கும்பல் நிறைந்த கியூவைத்தான் தேர்ந்தெடுத்தேன். ஒருமுறை அந்தக் கும்பலில் கடந்துப் போய் சொர்க்கவாசலுக்குச் சென்று திரும்பியிருந்தால் உங்களுக்கும் தெரிந்திருக்கும் ஒரு பள்ளிக்கூட மாணவனுக்கு இருக்கக்கூடிய கொஞ்ச நஞ்ச உற்சாகத்தையும் தொலைக்கும் வலிமையுள்ளது அந்தக் கியூ என்ற உண்மை தெரிந்திருக்கலாம். உற்சாகம் அனைத்தையும் தொலைத்துவிட்டு, திரும்ப வீட்டிற்கும் போகும் வழியில்லாமல், வேதனையே என்று கியூவில் நின்றேன்.

கிட்டத்தட்ட ஆறு மணிநேரம், தூங்காமல், உட்காரக் கிடைக்கும் சிறிது ஆப்பர்டியூனிட்டியை உபயோகப்படுத்திக் கொண்டு ஒருவழியாக மார்கழி மாதக்குளிரிலும், சட்டையெல்லாம் நனைந்து உள்நுழைந்து மிதித்த சொர்க்கவாசல் நன்றாக நினைவில் இருக்கிறது. ஆனால் இப்பொழுதைப் போலில்லாமல் பெண் உடலின் மீதான காதல் அதிகமாக இருந்த நாட்கள் அவை. நான் பல பிரச்சனைகளுக்கு நடுவில் சொர்க்கவாசலுக்குப் போயிருந்ததற்கு அதுவும் ஒரு காரணம் என்று இப்பொழுது நினைக்கிறேன். அந்த விஷயத்தில் நான் நிச்சயமாய் ஏமாந்து போகவில்லை தான்.

அத்தனையிலும், நான் அன்று சொர்க்கவாசலை மிதித்து விட்டு, உற்சவமூர்த்தியை மட்டும் தான் பார்த்தேன், மூலவரைக் கிடையாது. ஆனால் சாதாரண நாட்களில் பார்த்திருக்கிறேன் என்றாலும் அன்று முத்தங்கி சேவை. ஆனால் அவர்கள் பொது சேவைக்காக திறந்துவிடும் வழி மூலவரை நோக்கிப் போகாது. சொர்க்கவாசலைக் கடந்து கிழக்கு வாசலுக்கு பக்கத்தில் இருக்கும் மணல்வெளிக்கு வந்தால், ரத்தினங்கி அணிந்து சிங்க முக நடனம் ஆடிக்கொண்டிருக்கும் உற்சவமூர்த்தியை பார்த்துவிட்டு வெளியே வந்துப்பார்த்தால் மீண்டும் நீங்கள் ஒரு பெரிய கியூ நிற்கும். சின்ன வயதுதானே எனக்கும் பொறுமையில்லாமல், வீட்டை நோக்கி நடையைக் கட்டியிருக்கிறேன்.

அடுத்த இரண்டு முறையும் நண்பர்களுடன் சென்றிருந்தேன். அதில் ஒரு முறை நல்லா ப்ளான் பண்ணுறேன் பேர்வழியென்று ஒன்பது மணிக்கு முன்பே சென்று உள்சுற்றில் உட்கார்ந்திருந்தோம். ஆனாலும் நாங்கள் எதிர்பார்த்திருந்ததைப் போல் இல்லாமல் ஒரு பெரிய கியூவை மட்டும் தான் தாண்டியிருந்தோம், இரண்டு மணிக்கு மேல் உட்கார்ந்திருந்து பின்னர் கிளi மண்டபத்திற்குள் அனுமதித்தார்கள். அந்த இரண்டு முறையும் நாங்கள் ஒரு பெரிய கியூவில் நிற்கவில்லை, அது மட்டுமில்லாமல், நண்பர்களுடன் சென்றிருந்ததால் அந்த இரண்டு முறையும் குதூகலமாயிருந்தது.இந்தப் பதிவை எழுவதற்கான சப்-டைட்டிலாக போட்ட பெத்தபெருமாள் == பணம். கம்ப்யூட்டர் வழக்கப்படி, வலதுபக்கத்திலிருந்து தொடங்குகிறேன்.

பணம், என் வாழ்க்கையின் இதுவரையிலான காலக்கட்டத்தில் பெரும்பாலான சமயத்தில் என்னிடம் இல்லாமல் இருந்த ஒன்று. பெரும்பாலான சமயம் என்பது இருபது வருடங்களுக்கு மேற்ப்பட்ட காலங்கள். அதனாலேயோ என்னவோ என் இந்த இருபத்தி மூன்று வருட வாழ்க்கையில் நிறைய விஷயங்களை அனுபவித்துவிட்டதைப் போன்ற ஒரு உணர்வு அடிக்கடி வருவதுண்டு. (அது அப்படியில்லை என்பது உள்மனதிற்கு தெரியும் பொழுதும் சப்கான்ஷியஸில் அப்படி ஒரு பீலிங்.)

பணத்தைப் பற்றி எனக்கு பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உண்டு. ஒவ்வொரு வருடமும், வைகுண்ட ஏகாதெசிக்கு செல்லும் பொழுதும். சந்தன மண்டபத்திற்கும் கிளி மண்டபத்திற்கும் செல்வதற்கு காசு கொடுக்க வேண்டும் என்று தெரிந்தாலும், கைவசம் காசில்லை என்ற உணர்ந்தாலும், ஒரு கில்டி பீலிங் இருக்கும் வாழ்க்கையில் எதையோ இழப்பதைப் போல். அந்த இடத்திலேயே ஒரு மணிநேரத்திற்கு மேல் நின்று இன்னொரு கியூவில் உள்ளே செல்பவர்களையே பார்த்துக்கொண்டிருப்பேன். எப்படியும் எனக்குத் தெரியும் அந்த வழி வழியாக உள்ளே போக முடியாதென்பது. இருந்தாலும் போலீஸ்காரர்களின் திட்டுக்களையும் கேட்டுக்கொண்டு அங்கேயே நின்றிருப்பேன். அந்த வருடத்திற்கு தேவையான கோபம் அனைத்தையும் சேர்த்துக்கொள்வதைப்போல.

இந்த தடவைக்கு வருகிறேன், சொல்லப்போனால் கிளி மண்டபத்திற்குச் செல்ல ஆகும் இருநூறு ரூபாயும் ஆகட்டும், சந்தன மண்டபத்திற்கு ஆகும் ஆயிரம் ரூபாயும் பாக்கெட்டில் ஹாட் கேஷாக இருந்தது. ஆனால் டிக்கெட், ம்ஹும் என்னிடம் கிடையாது, நான் ஏகாதெசிக்காக ஸ்ரீரங்கத்திற்கு வந்ததே வெள்ளிக்கிழமை மத்தியானம் தான். பிறகெங்கே வாங்குவது டிக்கெட், ஸ்ரீரங்கத்திற்குள் நுழையும் பொழுது ராத்திரி பதினொன்று. பணமிருந்தும் டிக்கெட் வாங்க முடியாத என் நிலை இப்பொழுது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

இங்கே தான் நான் வியக்கும் சில விஷயங்கள் நடந்தது, நான் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவேயில்லை, இந்தப் பக்கம் ஏற்கனவே டிக்கெட் வாங்கியிருந்த நபர்கள் உள்ளே சென்று கொண்டிருந்தார்கள், இன்னொரு பக்கம் பெருங்கூட்டமாய் மக்கள் கியூ வரிசையில் சேர்ந்து கொண்டேயிருந்தார்கள். அதே பழைய நாட்கள் மீண்டும் நினைவில் வந்தது. ஆனால் ஒரேயொரு வேறுபாடு, ஒன்றே ஒன்று, என்னிடம் பணம் இருந்தது. அந்த ஒரேயொரு விஷயம் எனக்கு நான் எழுதமுடியாத அளவிற்கு நம்பிக்கையைத் தந்தது. அந்த நம்பிக்கையை இந்திய தேசத்தின் மீதான என் நம்பிக்கை என்று சொல்லலாம், ஆனால் சரியா என்று தெரியாது.

அந்தச் சமயத்தில் இரண்டு விஷயங்கள் தான் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ஒன்று போலீஸ்காரர்களுக்கு லஞ்சம் கொடுத்து எப்படியாவது ஒரு டிக்கெட் பெறுவது மற்றது அதே போல் ஐயர்களைக் குறிவைப்பது. பத்து நிமிடத்தில் நம்பிக்கை வந்தவனாய் போலீஸ்காரர்கள் பக்கத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த கேட்கீப்பரை அணுகி விஷயத்தைச் சொன்னேன். மேலும் கீழும் பார்த்தவர், இன்னும் நேரம் இருப்பதாகவும் சற்று காத்திருக்கவும் சொல்ல அங்கேயே நின்று கொண்டிருந்தவனை நோக்கி அடுத்த பத்து நிமிடத்தில் ஒரு நபர் வந்து டிக்கெட் இருப்பதாகவும் வேண்டுமென்றால் நூறு ரூபாய் கூடக்கொடுத்து வாங்கிக்கொள்ளச் சொன்னார். ஆயிரம் ரூபாய் செலவழித்துக்கூட உள்ளே செல்ல ஆவலாய் இருந்த எனக்கு நூறு ரூபாய் எம்மாத்திரம்.

அடுத்த நொடி டிக்கெட் என்கையில், சுத்தமாய் இருந்த முதல் கியூவைத்தாண்டி உள்ளே நுaழந்து அடுத்த அடுக்கிற்குள் நுழைந்தேன், இங்கே தான் இராமாநுஜர் சமாதி இருக்கும். அங்கேயும் ஒரு பெரிய கியூ இருக்கும் எனக்கும் நன்றாகவேத் தெரியும் ஏனென்றால் முன்பு நண்பர்களுடன் சென்ற பொழுது ஸ்கிப் பண்ணியது முதல் கியூவைத்தான், இரண்டாம் கியூதான் நான் மேற்சொன்னது. நான்கு முறை முன்பின்னாக சினிமா டிக்கெட் கியூபோல் சுமார் 60 மீட்டர் தூரமுள்ளது இந்த வரிசை. நான் சரியான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன் மொத்தமாக இந்தக் கியூவை ஸ்கிப் செய்ய அதாவது தாவிக்குதித்த முன்னேற.

என் நேரம், நான் கியூவில் இணைந்ததும் வந்து நிறைய டிக்கெட் இல்லாத மக்கள் அந்தக் கியூவில் இருப்பதால் டிக்கெட் இருப்பவர்கள் நேராய் உள்ளே போகலாம் என்று சொல்ல, அப்பொழுது உள்ளே செல்ல திறந்துவிடப்பட்டுக் கொண்டிருந்த 200 ரூபாய் டிக்கெட் வரிசை மொத்தத்தையும் ஸ்கிப் பண்ணிக் கொண்டு போக எனக்கு வாய்ப்பு. அப்படி கியூவிலிருந்து வெளiயில் குதிக்கும் பொழுது தெரியாமல்(உண்மையிலேதாங்க) ஒரு அம்மா மீது ஒரு விரல் பட்டிருக்கும் அதுவம் ஷாயித் புடவையின் மீது. அந்தம்மா தமிழ் கிடையாது, தெலுங்கு. ஸ்டுபிட் என்று திட்ட வந்த கோபத்தில் நடந்த விஷயத்தைச் சொன்னேன் அவர்களிடம் இந்தியில்(எனக்கு தெலுங்கு தெரியாது. ஆங்கிலம் பேசுவதை பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன்.) அந்தம்மாவுடன் வந்திருந்த இன்னும் மூன்று தெலுங்கு பெண்களும் சேர்ந்து கொண்டு நீ மட்டும் கியூவை தாண்டலாமா யோக்கியமா என்று கேட்க நான் சொன்னேன் போலீஸ்காரர்தான் சொல்கிறார் என்று. பின்னர் தான் தெரிந்தது அந்த அம்மாக்களும் 200 டிக்கெட் வைத்திருந்தவர்கள். என்னைப்போல் எகிறிக் குதிக்க முடியாததுதான் கோபத்திற்கு காரணம் என்று.

பின்னர் அடுத்தக் கியூ, இது ஜஸ்ட் மூலஸ்தானத்திற்கு முன் உள்ளது. இங்கே மொத்த கும்பலே கம்மிதான். அதிலும் விஐபி டிக்கெட், 200 ரூபாய் டிக்கெட், அப்புறம் டிக்கெட் இல்லாத நம்ம மக்கள் என்ற மூன்று வகையான மக்களும் நின்றார்கள். டிக்கெட் இல்லாத மக்கள் உள்ளே போகமுடியாது, விஐபி டிக்கெட்டும், 200ரூபாய் டிக்கெட்டும் உள்ளே போக முடியும். அந்த இடத்தைக் கடந்து உள்ளே நுழையும் பொழுது சரியாக மணி பன்னிரெண்டு பதினைந்து. அங்கே வரை கியூவே இல்லாமல் உள்ளே வந்த ஆயிரம் ரூபாய் டிக்கெட் சந்தன மண்டபம் என்று அழைக்கப்படும் மூலஸ்தானத்திற்கு எதிரில் அனுப்பப்பட, அதாவது மூலவர் இருக்கும் இடத்திற்கு சற்று வெளiயில்.
அந்த மண்டபத்தை அடுத்து வருவதுதான் கிளி மண்டபம், இந்த மண்டபத்தில் உட்கார்பவர்களால், மூலஸ்தானத்திலிருந்து சொர்க்கவாசல் திறக்கச் செல்லும் உற்சவரையே கூடப் பார்க்க முடியும். சரியாகச் சொல்ல வேண்டுமானால் சந்தன மண்டபத்தையும் அதனுடன் ஒட்டியவாறு இருக்கும் மூலஸ்தானத்தையும் ஒரு சுற்று சுற்றிவிட்டுதான் உற்சவர் சொர்க்கவாசலுக்குச் செல்வார். இந்த மண்டபத்தில் இதற்கு முன்பே இருந்திருக்கிறேன் எப்படி என்றால் முன்னர் ஒருமுறை தில்லுமுல்லு செய்வதற்காக கிழக்கு வாசலில் நின்ற சமயம், இராமகோபாலன் வர அவருடன் சேர்ந்து அவர் குரூப்பாக உள்ளே சென்றிருக்கிறேன். அவர் சந்தன மண்டபத்திற்குச் செல்ல நான், வேண்டுமென்றே கிளி மண்டபத்தில் உட்கார்ந்தேன். ஆனால் இந்த முறை நான் உட்கார்ந்த சுற்று கிடையாது அதற்கும் வெளியில்.

இந்த முறை கிளிமண்டபத்திற்குள் நுழைந்த நபர்களiல் இருபதாவது ஆளாய் இருப்பேன் என்று நினைக்கிறேன். முதல் முறையாக முத்தங்கி சேவையைப் பார்த்தது இந்த முறைதான். அதே போல் ஆராம்ஸேயாய் சொர்க்கவாசல் சென்றதும் இந்த முறைதான். என்னவோ இந்த முறை வெளியில் வரும் பொழுது பெத்த பெருமாளையே விலை கொடுத்து வாங்கிவிட்டதாக ஒரு உணர்வு எழுந்ததை தவிர்க்க முடியவில்லை. உள்ளே வந்ததற்கும், எந்தக் கியூவிலும் நில்லாமல் சென்றதற்கும், வசதியாய் பார்த்ததற்கும் பணம் தான் காரணம் என்ற எண்ணம் மனசை விட்டு அகலவேயில்லை(பக்தி தான் இல்லையே என்னிடம்).

சின்னப்புள்ளத்தனமாயில்லை, ஆனால் சில விஷயங்கள் உண்மையிலேயே உறுத்துகின்றன. இந்த முறை எல்லா முறையையும் போலில்லாமல், பொது சேவை ஆறுமணிக்கு மட்டும்தான் விட்டார்கள் என்று நினைக்கிறேன். நான் முந்தைய நாள் இரவு டிக்கெட்டிற்காக காத்திருந்த சமயத்தில் போலீஸ்காரர்களிடம் சோஷலிசம்(கடவுள் எல்லோருக்கும் பொதுவானவர் - அவர்களிடம் பணம் இருக்கிறது கொடுத்து போகிறார்கள், எங்களிடம் இல்லை என்ன செய்ய) பேசிக்கொண்டிருந்த ஒரு குரூப் நான் ஒட்டுமொத்த தரிசனமும் விட்டு வெளியில் வந்த பொழுது வெளி கேட்டிலேயே தான் நின்று கொண்டிருந்தார்கள். நிச்சயமாய் அவர்களுக்கு இன்னும் ஐந்து மணிநேரம் எடுக்கும் முத்தங்கி சேவையையோ இல்லை சொர்க்கவாசலுக்கோ செல்ல.

அதே போல் மூன்றரை மணிக்கு மூலஸ்தானத்தை விட்டு வெளியில் வரும் உற்சவர் உடன் செல்லும் அத்தனை மனிதர்களும் அங்கே பணம் கொடுத்து வந்தவர்கள் தான். விஐபி பாஸ் மக்களைக்கூட எங்களுக்குப் பின்தான் விட்டார்கள். மக்கள் பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது இந்த முறை பணம் தான் ஏகாதெசியை தீர்மானித்தது என்று. எனவரையில் 100% சரியான வாதம் தான் அது.

அந்த மக்களுக்கு தெய்வபக்தி இருந்திருக்கும், எல்லாம் அவன் செயல் என்று அந்த மக்கள் நினைத்திருக்கலாம், கலிகாலம் முத்திருச்சுன்னு சொன்ன பாட்டியைப் போல(கிளிமண்டபத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர் – பிஎஸ்ஸி படித்து முடித்து வேலையில்லாமல் தவிக்கும் பையனைப்பற்றிச் சொன்னதும், மெயில் ஐடி கொடுத்துவிட்டு வந்தேன்.

Read More

Share Tweet Pin It +1

2 Comments

In Only ஜல்லிஸ் சொந்தக் கதை

புத்தாண்டும் சில முன்முடிவுகளும்

புத்தாண்டு அன்று ஒரு பதிவு போட்டால் நல்லது என நினைப்பதால் ஒரு பதிவு.

வலைபதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்தப் பதிவை நான் வரும் ஒரு வாரத்திற்குள் எழுத விரும்பும் சில தலைப்புகள் பற்றிய ஒரு அறிமுகப் பதிவாக போட விரும்புகிறேன்.

வைகுண்ட ஏகாதெசி - பெத்தபெருமாள் = = பணம் (= = வை இஸீக்கோல்ட்டு இஸிக்கோல்ட்டு என்று படித்தால் சாலச்சிறந்தது)
நான் பார்த்த முதல் பின்நவீனத்துவப் படம் பாபெல்(Babel)
காகிதமலர்கள், என் பெயர் ராமசேஷன் - எனக்குப் பட்டவை
சிறுகதை எழுதுவது எப்படி - எனக்குப் பட்டவை
அப்புறம் கைவசம் உள்ள சில புத்தகங்களின் விமர்சனங்கள்.

Read More

Share Tweet Pin It +1

1 Comments

In Only ஜல்லிஸ் சொந்தக் கதை சொர்க்கவாசல்

பெங்களூர் to ஸ்ரீரங்கம்

பெங்களூர் டு ஸ்ரீரங்கம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் வடமாநிலங்களiல் வேலை செய்து வந்ததால் செய்ய முடியாத ஒரு காரியத்தை இந்த வருடம் பெங்களூரில் இருப்பதால் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அது வைகுண்ட ஏகாதெசி அன்று சொர்க்கவாசல் மிதிப்பது. முடிஞ்சிருச்சான்னு கேட்டா இல்லை இன்னைக்கு நைட்டு தான்.

ஆனால் வழக்கம் போல் சில கேள்விகள் எல்லோர் மனதிலும். கடவுள் நம்பிக்கையில்லை என்று சொல்லிக்கொள்ளும் நான், கொஞ்சம் கஷ்டப்பட்டு இந்த சொர்க்கவாசலுக்கு வரும் காரணம் என்ன என்பது அது. அவரவர்கள் அவரவர்களுக்கு பிடித்த முகமுடியுடன் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டார்கள் என்றே சொல்லுவேன்.

அம்மாவிற்கு இன்னும் தன் பையன் முழுசா கெட்டுப்போய்விடவில்லை, இன்னும் தன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறான் அதனால் எப்படியாவது சொர்க்கவாசல் மிதிக்க வருகின்றான் என்பதில் ஒரு திருப்தி.

அப்பாவிற்கு, நான் பத்திரமாக வந்து எல்லாம் முடிந்து எந்தவித பிரச்சனையும் இல்லாமல் திரும்பப்போய்விடவேண்டும். இதற்கு நான் வராமலேயிருக்கலாம் என்ற எண்ணம்.

அக்காவிற்கு, நான் கதையெழுதுவதற்கான ஒரு தீம் இந்த கூட்டத்தில் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் தான் நான் இந்த முறை வந்திருக்கிறேன் என்ற நினைப்பு.

நம்ம ஜிகிடி தோஸ்துக்கு, ஸ்ரீரங்கத்துச் சின்ன மாமிகளை பை போடுவதற்காகத்தான் நான் போவதாகவும்.

நம்ம மனசாட்சி(கலைஞருக்கு முரசொலி மாறன் மாதிரியெல்லாம் கற்பனை செய்துக்காதீங்க, உண்மையை மறைக்கத் தெரியாத என் பாகம்னு வேண்ணா வைச்சிக்கோங்க) சொன்னது தான் கொஞ்சம் பக்கத்தில் வருவது மாதிரி இருந்தது. மாமு உனக்கு அந்தச் சம்பவத்துக்குப் பிராமணாஸ் கண்டா ஆகாது, முதலிலே பார்த்த உடனே நம்புறது கிடையாது. ஆனால் இப்ப ப்ளாக் உலகத்திற்கு வந்த பிறகு அது கொஞ்ச கொஞ்சமா குறையிற மாதிரி ஒரு பீலிங்.

இப்ப ஏகாதெசிக்கு ஸ்ரீரங்கத்துப் போனா அங்க நடக்கிற விஷயங்களைப் பார்த்து ஆட்டோமேட்டிக்கா திரும்பவும் மனசில ஊடு கட்ட ஆரம்பிச்சிருவ. அதாவது தூங்கிற சிங்கத்த எழுப்பிடாம அதே சமயத்தில ஒரேயடியா தூங்கிடா பார்த்துக்கிற நீ இல்லையா?

எனக்கென்னமோ இந்த விஷயம் கொஞ்சம் சரி மாதிரி தெரிஞ்சாலும், எனக்கு சாதாரணமாவே கூட்டத்தைக் கண்டால் ரொம்பப் பிடிக்கும். ஆனா அந்தக் கூட்டத்தோட பழகிறதுக்குக் கிடையாது, வேடிக்கைப் பார்க்க. எப்படி கிருஸ்துமஸ் இரவுகளில் சர்சிற்கு செல்கிறேனோ அப்படி. (செக்யூலரிஸ்டு முகமூடி வெளியில் வந்திடுச்சு.)

திரும்பவும் அந்த மனசாட்சி மேட்டருக்கு, எனக்கு கொஞ்ச காலத்துக்கு முந்தியெல்லாம் பாலகுமாரனை ரொம்பப் பிடிக்கும்(இப்ப பிடிக்குமா பிடிக்காதாங்கிறது வேற விஷயம்) அதுக்கெல்லாம் முக்கிய காரணம் எங்க மாமா, அவன் தான் பல நாவல்களைக் கொடுத்து படிக்கச் சொல்லியிருந்தான். வாங்கியும் கொடுப்பான். ஆனால் நன்றாக நினைவில் இருக்கிறது ஒரு ஏகாதெசி முடிந்த அடுத்த நாள் பாலகுமாரன் நல்லவர் இல்லைன்னு ஒரே ஆர்க்யூமெண்ட், ஏன்னு கேட்டா பாலகுமாரன் எப்பப்பார்த்தாலும், கடவுளை பார்ப்பதற்கு காசுகொடுத்தோ இல்லை இன்னபிற விஷயங்களை உபயோகித்தோ ஸ்கிப் பண்ணி போகக்கூடாதுன்னு எழுதியிருப்பாரு.

அந்த ஏகாதெசியில, மேல் சட்டைப்போடாமல்(;))வரிசையை ஸ்கிப் பண்ணி, சாமிப்பக்கத்தில் போய்ட்டார். அதை மாமன் பார்த்துட்டான் அதான் இந்த வெறுப்பு. ஏனென்றால் சாருநிவேதிதா போலில்லாமல், அவருடைய வாழ்க்கையையும் எழுத்தையும் ஒன்றாய்ப் பார்க்கும் நிறைய பேரில் மாமனும் ஒருத்தன். பாவம் மாமாவிற்கு ப்ராக்டிகாலிட்டி ரொம்பச் சுட்டிருக்கணும் அன்னிக்கி. அதே விஷயம் மறுபடியும் மறுபடியும் என்னை சுடணும் அப்படிங்கிறதுக்காகத்தான் நான் ஏகாதெசிக்கு வர்றேன்னு மனசாட்சியே சொன்னாலும்.

இரண்டு கைகளையும் எக்ஸர்சைஸ் செய்வதைப்போல் முன்னால் நீட்டி அந்த கேப்பில் தான் பெற்ற பெண்ணை(ஐயர் பொண்ணுன்னு வைச்சுக்கோங்களேன் – திராவிடப் பிகரை சைட் அடிச்சேன்னா முத்து உதைப்பார், இதே பிராமணப் பொண்ணை சைட் அடிச்சேன்னு தெரிஞ்சா, பிகேஎஸ் இரண்டு வரிக்கதை எழுதுவார். இருந்தாலும் ஒரு உதாரணத்திற்கு)யாரும் கிள்ளிவிடாமல்(புரியும்னு நினைக்கிறேன்) காப்பாற்றி சொர்க்வாசலை கடக்கவைத்து இதற்கிடையே அந்த பல்லியையும் இன்னொரு ஐட்டத்தையும் வேறு காண்பித்து. அப்பப்பா. இதைப் போன்ற விஷயங்கள், பிறகு ஆந்திராவிலிருந்து கோவிந்தனையே மனதில் நினைத்தபடி வரும் தெலுங்கர்கள், சபரிமலைக்கு போகும் அவசரத்தில் கோவிலுக்குள் ஓடிக்கொண்டேயிருக்கும் சாமிகள். பிகர்களை, மாமிகளை இடிப்பதற்கென்றே வரும் கும்பல் என ஒவ்வொரு தடவையும் எனக்கு வித்தியாசமான பிக்சர் கிடைத்து வருகிறது. ஆனால் ஊஞ்சலாடும் உற்சவர் ஒருவர்தான்(இதைச் சொல்லி தேசிகனின் பதிவில் போன வருடம் வாங்கிக் கட்டிக் கொண்டேன்.)

எனக்கு இப்படின்னா நிறையப்பேருக்கு வேறமாதிரியெல்லாம், சீவலி(?) பிடிக்கிறவா, பல்லக்கு தூக்கறவா இப்படி அவரவர்களுக்கு வித்தியாசமாய் ஆனால் நல்ல பொழுது போக்காய்.(எங்க அப்பாவுக்கு தெரிஞ்சது எனக்குன்னு தனியா ஒரு கேபிஎன் புக் பண்ணி பெங்களூர் பார்சல் பண்ணிடுவார். ஏதோ புள்ளை சாமியெல்லாம் கும்பிடுதுன்னு தான் இப்ப வர்றதுக்கு அப்ரூவல் கிடைத்தது. பொழுதுபோக்குன்னு சொன்னேன்னா அவ்வளவுதான்.)

சரிசரி ஏற்கனவே லேட் ஆகிக்கிட்டிருக்கு, நான் கிளம்புறேன். போய் மூலவருக்கு முத்தங்கிசேவையில் ஒரு ஹாய் சொல்லிவிட்டு. பின்னூட்டம் போடுறவர்கள் கேட்டுக்கொண்டால் அவர்கள் சார்பாகவும் ஒரு ஹாய் சொல்வதாக உத்தேசம். வருகிறேன். நாளை இந்த வருட ஏகாதெசி அனுவங்களுடன்.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In கவிதைகள்

நகுலன்

நான் நகுலன் பற்றி எழுதிய(காப்பியடித்த) ஒரு விஷயம் ப்ளாக்கர் பிரச்சனையால் வரவில்லை. அதை மீட்க ஒரு நடவடிக்கை.
அந்த பதிவு.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In கவிதைகள்

நகுலன்

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நகுலன் பற்றி சாருநிவேதிதா எழுதி சாருவினுடைய வெப்சைட்டில் பார்த்த நியாபகம் தான் முதலில் வந்தது ஆனந்தவிகடனுடைய நகுலன் கவிதைகளைப் படித்தபொழுது...


நகுலன்



‘‘நான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த வேண்டாம். ஏனென்றால், என்னால் வர முடியாது!’’

தன்னைப் பார்க்க வரும் இலக்கிய நண்பர்கள் விடைபெறும் போது, அவர்களிடம் நகுலன் கடைசியாக வைக்கும் வேண்டு கோள் இதுதான். தமிழ் இலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான இவர் தற்போது திருவனந்தபுரத்தில், தனிமையில் வசிக்கிறார்.

தமிழில் யாரையும் பின்பற்றிப் போகாத, தனிப்பட்ட ஆளுமையும் மௌனத்தில் எரியும் மகத்தான மொழியும் நகுலனுடையவை. பனிக்குடம் உடைபடுவதைப் போல, உயிர் விடைபெறு வதைப் போல இயல்பும் புதிருமாக எழுகிற எழுத்து இவரது தனிப்பாணி. தற்போது எழுதுவதை முற்றிலும் நிறுத்திவிட்டார். நினைவின் நிழல் படியும் அந்தியின் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிரித்துக்கொண்டு இருக்கும் நகுலனுக்கு இப்போது வயது 87.

நகுலனின் நிரம்பிய முதுமையை, குழந்தையைப் போல் இருக்கும் உடல்வாகை புகைப்படக் கலைஞர் ஆர்.ஆர்.சீனிவாசன் எடுத்த படங்களுடன், நகுலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது காவ்யா பதிப்பகம்.

எந்தப் புத்தகத்தைப்
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன்றுமில்லை!


இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்.
இல்லாமல்
போகிறோம்!



என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!



மிகவும் நாணயமான மனிதர்
நாணயம் என்றால் அவருக்கு உயிர்!



வேளைக்குத் தகுந்த
வேஷம்
ஆளுக்கேற்ற
அபிநயம்
இதுதான்
வாழ்வென்றால்
சாவதே சாலச் சிறப்பு!
எனக்கு
யாருமில்லை
நான்
கூட!





யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம்!



நீயிருக்க
நானிருக்க
நேற்று
இன்று
நாளை
என்ற நிலை
ஒன்றும் இல்லை
ஒன்றுமே இல்லை!



உன்னையன்றி
உனக்கு வேறு யாருண்டு?





ஆர்ப்பரிக்கும் கடல்
அதன் அடித்தளம்
மௌனம்; மகா மௌனம்!



முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை ஞானம்!



வந்தவன் கேட்டான்
‘‘என்னைத் தெரியுமா?’’
‘‘தெரியவில்லையே’’
என்றேன்.
‘‘உன்னைத் தெரியுமா?’’
என்று கேட்டான்.
‘‘தெரியவில்லையே’’
என்றேன்.
‘‘பின் என்னதான் தெரியும்’’
என்றான்.
‘‘உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்’’
என்றேன்!
எழுத்தாளனுக்கும்
வாசகனுக்கும்
நடுவில்
வார்த்தைகள்
நி
ற்
கி
ன்

ன!

credits vikatan.com, charu nivedita.

Read More

Share Tweet Pin It +1

0 Comments

In சினிமா விமர்சனம்

திருவிளையாடல் ஆரம்பம் - ரொம்ப முக்கியம்

வாழ்க்கையில் ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டதாக வருந்துகிறேன்.

ஒழுங்கு மரியாதையா இந்தி, இங்கிலீஸ் படங்களை மட்டும் தியேட்டர்களில் பார்த்துக்கொண்டிருந்த நான் திருவிளையாடல் ஆரம்பம் என்ற தனுஷின் படத்திற்கு சென்றதைத்தான் சொல்கிறேன்.

ஒவ்வொரு முறையும் இந்த தனுஷ் படங்களால் நான் மிகவும் வெறுப்படைகிறேன். இதுக்கு முன்னாடி இப்படித்தான் ஒரு படம் பேரு நினைவில் இல்லை(அவங்க அப்பா இயக்கியிருந்தாரு - துள்ளுவதோ இளமையில்லை). சரியான கடி. அதுக்கு கொஞ்சமும் குறைந்ததில்லை இந்தப் படம். ஏண்டா படத்திற்கு போனோம் என்று ஆகிவிட்டது.

இந்த புண்பட்ட மனதை இன்னும் சில இந்தி ஆங்கில படம் பார்த்துத்தான் ஆற்ற வேண்டுமென்று நினைக்கிறேன். இதன் காரணமாக சில படங்களின் விமர்சனங்களை எதிர்பார்க்கலாம். இந்தப்படத்தை தியேட்டரில் சென்று பார்க்கவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்.

Read More

Share Tweet Pin It +1

9 Comments

In சொந்தக் கதை

அயர்லாந்து ஒரு அறிமுகம்

என்னடா இவன் இந்தியாவிலிருந்து அயர்லாந்துக்கு எதுவும் போய்ட்டானா என்று அவசரப்படுபவர்களுக்காக ஒரு சின்ன ப்ளாஷ்பேக். நான் கேன்பேவிலிருந்து மாறி பெங்களூருக்கு வந்தது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். நான் இங்கே வந்து சேர்ந்திருக்கும் ஒரு கம்பெனி ஒரு அயர்லாந்து பேஸ்டு கம்பெனி. இதனாலெல்லாம் நான் அயர்லாந்து ஒரு அறிமுகம் போடவேண்டுமானால். முதலில் அமேரிக்கா ஒரு அறிமுகம் தான் போடவேண்டும்.

சரி விஷயத்திற்கு வரலாம்னா ஒரு கன்டின்யுட்டி வேணும்ல அதனால இன்னும் கொஞ்சம் சுயசொறிதல். அதாவது நான் சேர்ந்திருப்பது ஒரு சிறிய கம்பெனியாக இருந்தாலும்(கேன்பேவுடன் ஒப்பிடும் பொழுது) ப்ரொடக்ட் பேஸ்டு கம்பெனி. இதனால் என்ன பிரச்சனை என்றால் இவர்கள் இன்டஸ்டிரியில் உபயோகப்படுத்தும் ஆர்க்கிடெக்சர்களை உபயோகப்படுத்தாமல்(சரியாகச் சொல்லவேண்டுமானால் - நேரடியாக உபயோகப்படுத்தாமல்) சொந்தமாக ஆர்கிடெக்சர் வைத்திருக்கிறார்கள். (டெக்னிக்கலாக இன்னுமொறு பதிவு போட விரும்புவதால் இப்போதைக்கு சுறுக்கமாக.)

இந்த மாதிரி வைத்திருப்பதால் வரும் கஷ்டம் என்ன என்றால் கூகுளாண்டவர் கோட் எழுத உதவமாட்டார். காப்பி பேஸ்ட் எல்லாம் ஒரளவிற்கு மேல் உதவாது. அதன் காரணமாக எங்களுக்கு அந்த ஆர்கிடெக்சரை சொல்லித்தருவதற்காக அந்த ஆர்கிடெக்சரை டிசைன் செய்த மக்களை - இல்லை நன்றாக அந்த ஆர்கிடெக்சர் அறிந்தவரை - இல்லையென்றால் என்னைப்போல பெரிய கம்பெனியில் இருந்து வந்த மக்களை கொஞ்சமாவது சமாதானப்படுத்துவதற்கு - அயர்லாந்து மக்கள் வந்திருந்தார்கள். அப்பாடா ஒருவழியா கதைக்கு வந்துட்டேன்.

ஒரு நாள் என்ன ஆச்சுன்னா, அன்றைக்கான வகுப்புகள் இல்லாததால் வழக்கம் போல் தமிழ்மணத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு மெயில் உடனடியாக நாம் எல்லோரும் சந்திக்கிறோம் என்று. (நாம் என்பது அந்த அயர்லாந்துக்காரர் மற்றும் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் நாங்கள்). நான் என்ன நடந்தது என ஒன்றும் புரியாமல் ஆகா நாம எக்ஸர்சைஸ் ஒழுங்கா செய்யாம டிமிக்கி கொடுக்கிறது தான் தெரிஞ்சு கூப்பிடுறான் போலிருக்குன்னு நினைச்சுக்கிட்டு. இருந்தாலும் வடிவேலு மாதிரி இருக்கிற மீசை விறைப்பா வைச்சிக்கிட்டு உள்ள போனேன் அந்த கான்பிரன்ஸ் அறைக்கு.

அந்த மனிதர் அயர்லாந்தைப் பற்றி பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டார். ஒரு வழியாக நிம்மதிப் பெருமூச்சு விட்டவாறு கொஞ்சம் போல் நிமிர்ந்து உட்கார்ந்தேன். விஷயம் என்னான்னா - பயிற்சி எடுத்துகொண்டிருந்த ஒரு அதிகப்பிரசங்கி, அந்த நபரிடம்(பேரு டோனின்னு வைச்சுக்கோங்களேன்.) அயர்லாந்து ஒரு நாடில்லை போலிருக்கே, அது இங்கிலாந்தோட ஒரு மாநிலமாமுல்ல - என்பதாகவோ இல்லை அதற்கு ஈடான ஒன்றையோ கேட்டுத் தொலைக்க எனக்கு இந்தப் பாடம். பெரும்பாலும் இது போல் பயற்சியளிக்க வருபவர்கள் கொஞ்சம் நெருக்கமாக பழகமாட்டார்கள். முக்கியமாக தற்பெருமை பேசமாட்டார்கள் அதனால் தான் டோனி முதலில் இதைப்பற்றி ஆரம்பித்ததும் நான் மலைத்தது - இதற்கெல்லாம் காரணம் நாட்டுப்பற்று என்பது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது.

இனிமேல் கொஞ்சம் போல் அயர்லாந்து ஒரு அறிமுகம்.

எனக்கு அயர்லாந்து இங்கிலாந்தின் ஒரு மாநிலம் கிடையாது அது ஒரு தனிப்பட்ட நாடென்று தெரியும். அதேபோல நார்தர்ன் அயர்லாந்து பிரச்சனையும் கொஞ்சம் தெரியும். எப்படின்னா ஒரு சமயம் எந்த தேசத்தின் தேசியப்பாடல் சிறந்தது என்பதாகவோ இல்லை அதற்கு ஈடானதோ ஒரு போட்டியை பிபிசி(?) அறிவித்திருந்தது. அந்த முடிவுகளில் நார்தர்ன் அயர்லாந்தின் தேசியப்பாடல் முதல் இடம் பெற்றதாக ஞாபகம். விடுதலைப்புலிகளினுடையது இரண்டாவது வந்ததென்று நினைக்கிறேன். (நான் நிச்சயமாக போட்டோஜெனிக் மெம்மரி உடையவனெப்பது எனக்கு தெரியும் ஆனால் வரவர சாதாரண விஷயங்களை கூட நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை.)

என்ன பிரச்சனை என்றால், இந்தியாவைப் போல் அயர்லாந்தும் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் தான் முழுமையாக இருந்தது. பின்னர் 1949ல் இரண்டாம் உலகப்போரின் பின் சுதந்திரம் அடைந்து ரிப்பப்ளிக் ஆப் அயர்லாந்து என்ற பெயரில் தனிநாடனது. அங்கே தான் ஒரு சின்ன பிரச்சனை. நம்முடைய காஷ்மீரைப்போல(இது ஒரு சாதாரணமான கம்பேரிஸன் - மக்களுக்கு பிரச்சனை புரியவேண்டுமென்பதற்காக மட்டுமே.)

பிரச்சனை என்னவென்றால் அயர்லாந்தின் ஒட்டுமொத்த பகுதிகளும் கிறிஸ்துவத்துன் ஒரு பிரிவான கேத்தலிக் மக்களைக்கொண்டது. ஆனால் நார்தன் அயர்லாந்து பெரும்பான்மையாக ப்ரோட்டஸ்டண்ட் பிரிவினரைக்கொண்டது. இதனால் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிந்த பொழுது இந்த வட அயர்லாந்து மக்கள் மட்டும் தாங்கள் இங்கிலாந்துடன்(இங்கிலாந்து ஒரு ப்ரோட்டஸ்டண்ட் நாடு) இருந்துவிடுவதாக சொல்லிவிட. இன்று வரை வட அயர்லாந்து இங்கிலாந்தின் ஒரு பகுதி. அந்த அதிகப்பிரசங்கியும் இந்த வட அயர்லாந்தை மட்டும் எடுத்துக்கொண்டு இங்கிலாந்தின் ஒரு பகுதி தான் ஒட்டு மொத்த அயர்லாந்து என்று சொல்லிவிட நான் இங்கே உங்களுக்கு இதையெல்லாம் விளக்குகிறேன்.

இன்னமும் வட அயர்லாந்தில் இருக்கும் கேத்தலிக் மக்கள்(சொல்லலாமா?) வட அயர்லாந்து அயர்லாந்துடன் இணைந்துவிட வேண்டும் என்று போராடி வருகிறார்கள். இது தான் சுருக்கமான இல்லை மிகச்சுருக்கமான அயர்லாந்தின் வரலாறு.

கேலிக் புட்பால்னு ஒரு அய்ட்டம். அப்புறம் ஒரு வகையான ஐரிஷ் டான்ஸ்.

இந்த கேலிக் புட்பால் என்கிற அய்ட்டம் கொஞ்சம் போல் புட்பால், கிரிக்கெட், ஹாக்கி எல்லாம் கலந்த ஒரு கலவை. உண்மை என்ன என்பது தெரியாது ஆனால் டோனி இந்த ஆட்டத்திலிருந்து தான் கிரிக்கெட் கொண்டுவந்தார்கள் என்பதைப் போன்ற ஒன்றை சொன்னார். ஆனால் நான் கூகுளை நாடவில்லை இதைக் கண்டுபிடிக்க.

மற்றது ஐரிஷ் டிரடிஷினல் மியூசிக் வகையில் வரும் ஒரு வகை டான்ஸ். நான் ரொம்ப நாளாக இந்த வகை டான் ஸ்பானிஷ் வகையறா என்று தான் நினைத்து வந்தேன். இந்த டான்ஸில் ஒரு விஷயம் அவர்கள் இந்த ஷூக்களை ஒரு சின்க்கில் ஆடும் பொழுது ஒரு பிரபலமானவர் ஒரு செகண்டில் அந்த ஷூவை 100க்கு பக்கத்தில் தட்டுவார் எனவும் டோனி சொன்னார். ரியலி அம்மேசிங். உங்களுக்காக ஒரு கேலிக் புட்பால் வீடியோவும், இந்த டான்ஸ் வகையறாவும் யூடுயூபில் கொடுக்கிறேன். பார்த்து மகிழுங்கள்.



இரண்டு நிமிஷங்களுக்கு பிறகு வரும் அந்த டான்ஸைப் பார்க்கத் தவறாதீர்கள்




கடேசியில் ஒரு விஷயம் மற்றும் சில டீட்டெய்ல்ஸ்.

விஷயம் என்னன்னா டோனி இந்தக் கதையெல்லாம் சொல்லி இனிமேல் நீங்களெல்லாம் யாரவது ஒரு நபரிடமாவது அயர்லாந்து தனிநாடு. இங்கிலாந்தின் மாநிலம் என்பதை விளக்கவேண்டும் என கொஞ்சம் விளையாட்டாகச் சொன்னார். நான் அதைச் செய்து விட்டேன். இன்மேல் உங்களிடம் யாராவது மேற்சொன்ன விஷயத்தைச் சொன்னால் ப்ளீஸ் விளக்கவும்.

அப்புறம் அந்த டீட்டெய்ல்ஸ், டோனி அயர்லாந்தில் பிறந்தவர்களைப்(சில சமயம் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக அயர்லாந்து தொடர்பு உள்ளவர்களைப்) பற்றிச் சொல்லும் பெரும்பாலானோர் வியந்துதான் போனோம் நீங்களும் அந்தப் பட்டியலை ஒரு முறைப் பாருங்கள்.

Irish People

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In கிரிக்கெட்

போய் வா வார்னே! தலைமகனாய்...

வார்னே இந்த ஆஷஸ் சீரிஸ் முடிந்ததும் ரிட்டயர்ட் ஆகப்போவதாக ஒரு செய்தியை நான் சமீபத்தில் படிக்க நேர்ந்தது.

700 விக்கெட்டுக்களுக்கு ஒன்று குறைவாய் உள்ளது. கவாஸ்கரைப் போல, தற்போதைய டெண்டுல்கரைப் போலில்லாமல் தான் தன் திறமையின் உச்சக்கட்டத்தில் இருக்கும் பொழுதே வெளியேறும் மனது யாருக்கு வரும்.

நிறைய எழுதவேண்டும் போல் இருந்தாலும் நேரம் இல்லாத காரணத்தால் இவ்வளவே.

"... He passed Dennis Lillee's Australian record of 355 in New Zealand in 2000 and took the world mark four years later in India. His best figures of 8 for 71 came against England at the Gabba in 1994-95 and he holds an unwanted record of having the most runs (3043) without scoring a century. He said the biggest lows of his career were the 1996 World Cup loss and the one-run defeat against West Indies in 1992-93 while the Adelaide victory earlier this month was the greatest match he played in.

After 143 Tests he is one away from taking his 700th victim at the MCG from Boxing Day. He wants to be remembered as "an entertainer, who enjoyed himself along the way". "I sit here today with every single trophy in the Cricket Australia cabinet," he said. "I retire a very happy man..."

http://content-aus.cricinfo.com/australia/content/story/273509.html

Read More

Share Tweet Pin It +1

3 Comments

In Only ஜல்லிஸ் சொந்தக் கதை

ஒரு அறிவிப்பு

இந்த நேரத்தில் இப்படி ஒரு அறிவிப்பு நிச்சயம் செய்யணுமா என்று தான் நான் முதலில் நினைத்தேன். ஆனால் என்னை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகத்தான் இந்த அறிவிப்பு.

தமிழ்மணமும் அதன் வாசகர்களும் ஒரு திணிப்பை அளித்திருப்பதாகவே பல சமயம் நினைத்திருக்கிறேன். எப்படி என்றால் உண்மையான வலைப்பதிவென்பது நாள்தவறாது எழுதப்படும் டைரி போல் இல்லாமல், சுவாரசியமாகவும் நிறைய பேர் படிப்பதற்காகவும் எழுதப்படும் ஒரு கையெழுத்துப் பத்திரிக்கைப் போல் மாற்றப்பட்டுவிட்டதாகவேப் படுகிறது எனக்கு.

இதில் நிறைய அட்வான்டேஜ்கள் இருந்தாலும் பல டிஸ் அட்வான்டேஜ்களும் இருப்பதாகப் படுகிறது. என்னைப்போன்ற ஒரு நாளைக்கு பதினெட்டு மணிநேரமும் கணிணியையே பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பத்து வரி அன்றைய நாளைப்பற்றி எழுதுவது என்பது கொஞ்சம் கஷ்டமான வேலை கிடையாது தான்.

ஆனால் தினம் தினம் புதிதாகவும், வித்தியாசமாகவும், அனைவரையும் கவரும் விதத்திலும் பதிவிடுவதென்பது முற்றிலும் இயலாத ஒன்றாகிவிட்டது. எதுக்கு இந்த பில்டப் என்றால். இன்னும் சிறிது நாட்களில்(இரண்டு நாட்களில்) எனக்கு கொஞ்சம் வேலைப்பளூ குறையும் வாய்ப்பு இருப்பதால், 2005ன் ஆரம்பத்தில் இருந்த உத்வேகத்துடன் பதிவெழுதும் வேகத்தை அதிகரிக்கலாம் என்று நினைக்கிறேன்.

குறைந்த பட்சம் நாளைக்கு ஒரு பதிவாவது(!), எல்லோரும் அவரவர்களுடைய வாழ்க்கையை இனிதாக்கிக்கொள்ள பதிவெழுதுவதையே விட்டு வெளியே போகும் பொழுது நான் அதிகப்பதிவெழுதப்போகிறேன் என்று ஒரு அறிவிப்பை விடுப்பதற்கு மேற்சொன்ன காரணம் மட்டும் தான் உண்டு. அதனால் மக்களே கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும் என்பதை சொல்லிக் கொள்ளவே இந்தப் பதிவு.

நான் சிறுகதைகள் எழுதுவதை அடியோடு சிறிது காலத்திற்கு நிறுத்தி வைத்திருப்பதால் தைரியமாக இருக்கலாம் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.

Read More

Share Tweet Pin It +1

12 Comments

In Only ஜல்லிஸ் கிரிக்கெட் சொந்தக் கதை

கோ ஆஸி கோ

ஆஸ்திரேலியா டீம் மீண்டும் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது. நான் இன்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.





நட்சத்திரம் - சினிமா, கிரிக்கெட் மற்றும் புத்தகங்கள்

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சொந்தக் கதை புத்தகங்கள்

பெங்களூர் புத்தகக்கண்காட்சி

பெங்களூர் புத்தகக்கண்காட்சி

பெங்களூருக்கு வந்து சேர்ந்ததும் வரும் முதல் வாய்ப்பு என்பதால் விட மனசில்லாமல், சென்றிருந்தேன். மனதிலே சில புத்தகக் கணக்குகளுடன்.

பன்சங்கரியில் இருந்து பேலஸ் கார்டனுக்கே முதலில் ஆட்டோவே கிடைக்காமல் அரைமணிநேரத்திற்கு பிறகு கிடைத்தது.

வந்து சேர்ந்ததும் மூன்று கடைகளைத் தேடினேன். முதலாவது காலச்சுவடு, இரண்டாவது உயிர்மை, மூன்றாவது பத்ரியின் கிழக்கு.

முதலாவதும் மூன்றாவதும் வந்திருந்தன.

காலச்சுவடு கடைக்குள் நுழைந்ததுமே, தெரிந்துவிட்டது, தமிழ்க்கடைகளில் காற்றடிக்கும் நிலை, நன்றாக நினைவில் இருக்கிறது. டெல்லியில் நானிருந்த பொழுது நடந்த புத்தகக்கண்காட்சி.

அப்பொழுதெல்லாம் இலக்கியம் என்றால் எனக்கு சுஜாதாவும் பொன்னியின் செல்வனும் தான். அதனால் வந்திருந்த காலச்சுவடு கடைக்குள் நுழைந்து சுஜாதாவின் புத்தகங்களைக் கேட்க அவர்கள் என்னை புழுவைப்போல பார்த்தது அப்பொழுது புரியவில்லை.

ரொம்ப சண்டை போட்டேன் அன்று, சுஜாதா பாலகுமாரன் புக்கெல்லாம் எடுக்காமல் ஏன் வருகிறீர்கள் என்று.

அந்த நினைவுகள் பசுமையாக ஓட, காலச்சுவடு கடைக்குள் நுழைந்து நான் சில புத்தகங்களைக் கேட்டதும். அந்தப் புத்தகக் கடைக்காரரின் முகம் பிரகாசமானதை உணரமுடிந்தது. ரொம்ப நாளா தேடிக்கொண்டிருந்த ஜேபி சாணக்கியாவின், என் வீட்டின் வரைபடம் மற்றும் கனவுப் புத்தகம் சிறுகதைத் தொகுப்பை வாங்கினேன். அப்புறம் ஒரு படுபாவி வீட்டில் இருந்து ஏற்கனவே இருந்த ஜேஜே, வை சுட்டுக்கொண்டு போய்விட்டதால் அதையும் ஒருமுறை வாங்கினேன்.(இன்னொருமுறை).

என்னவோ இந்தப் புத்தகங்கள் எல்லாம் வாங்கியதாலோ என்னவோ, கொஞ்ச நேரம் அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சில புத்தகங்களை வெறும் பத்து எண்ணிக்கை போடுவது பற்றி வருத்தப்பட்டார்.

அடுத்து நுழைந்தது, கிழக்கு. ஒரு ஓரமாய் திங்க்பேடும் கையுமாக பத்ரி உட்கார்ந்திருந்தார். அன்றைக்கு ஒரு மனநிலைக்கு தயார் செய்து போகாததால் நான் அறிமுகம் செய்து கொள்ளவில்லை.

ஆதவனின் சிறுகதைகள் இவர்கள் கொண்டுவந்த ஞாபகம் இருந்தது. அதனால் நுழைந்ததுமே அந்தப் புத்தகத்தைக் கேட்டேன் ஆனால் வந்ததோ வேறொரு புத்தகம். ஆத்தர் நேமும் ஆதவன் இல்லை புத்தகத்தின் பெயரும் ஆதவன் இல்லை. ஆனால் இந்தப் புத்தகமும் நல்லப் புத்தகம் என்ற விளக்கம் வேறு கிடைத்தது.

சரி போனால் போகிறதென்று வேறு ஒருவர் எங்கேயோ போய் எடுத்துக்கொண்டு வந்தார்(ஷாயித் நிவேதா - இந்த விஷயத்துக்கு பிறகு வருகிறேன்). அந்தப் புத்தகம் கிடைத்தது. அப்புறம் நம்ம ஊர்க் கதையான அரசூர் வம்சம் வாங்கினே. முன்பே கொஞ்சம் நிறைய படித்திருக்கிறேன் திண்ணையில்.

ஆனால் புத்தகமாக இருப்பதில் கிடைக்கும் சுகத்தால் அதையும் வாங்கினேன்.

அந்தச் சமயத்தில் தான் இராகவன்(அவருதான்னு நினைக்கிறேன்!) அந்தப் பக்கம் வந்தார். கையில் ஹெல்மெட் பின்னால் பேக் என்று. ஆனால் நிச்சயமாகத் தெரியாததாலும் என்னுடைய அன்றைய மனநிலை காரணமாகவும் அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை.

இடையில் தான் நினைவில் வந்தது, ஆதவனின் இன்னொரு நாவல். ஆனால் பெயர் நினைவில் வரவில்லை. கிழக்கின் மத்த நபர்களைக் கேட்பதைவிட பத்ரியையே கேட்டுவிடலாம் என்று கேட்டேன். என் பெயர் ராமசேஷன் இல்லாமல் மற்ற நாவல் என்று. என் மனதில் கண்ணீர்ப் பூக்கள் என்ற பெயரே ஒட்டிக்கொண்டு உண்மையான பெயர் வரவேயில்லை. ஆனால் பத்ரி சரியாகச் சொன்னார்.

பின்னர் ராம்கியின் முகவையும், ரஜினி பற்றிய புத்தகதையும் எடுத்துக்கொண்டு முன்னுரையைப் படிக்கத்தொடங்கியிருப்பேன். சார் இந்த கிமு கிபி புத்தகத்தை எடுத்துக்கோங்க என்று பிஸினஸ் ஸ்டிரேடஜி மூஞ்சில் வீசப்பட்டது. பின்னர் இன்னும் இரண்டு மதனின் புத்தகங்களும் அதே கொள்கையுடன் முகத்தில் வீசப்பட, ஹெல்மட் இல்லாமல் ஆம்ப்ரோஸின் பந்தை விளையாடச் சென்ற ஒரு உணர்வு தான். ஆனால் கொஞ்ச நேரத்தில் பொறுக்கமுடியாமல் "மதன் புக் படிக்கிற அளவுக்கு இப்போ மூடில்லை" என்று பின்நவீனத்துவ மூஞ்சியை திருப்பிக் காட்டினேன். பின்னர் ஆரம்பித்தது இட்லிப் பிரச்சனை.

ஜினடின் ஜிடேனை "மொட்டை" என்று சொல்லியதால் தான், அவர் மற்ற அணிவீரரை முட்டித்தள்ளினார் என்ற செய்தி புதிகாகக் கிடைத்தது "இட்லி..." பற்றிய புத்தகத்தின் கேன்வாஸாக. அறிமுகமே சரியில்லாததால்( ;-)).

வாங்கின இரண்டு புத்தகங்களுக்கு பில் போடுங்க என்று கிரெடிட் கார்டைக் கொடுத்தால் அங்கேயும் பிரச்சனை. ரொம்ப வேகமாக கார்ட் நம்பரை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். நான் சட்டப்படி அது குற்றம் என்று இந்தியில்(!) ஆர்க்யூ பண்ண(அந்த பையன் கன்னடிக்கா - இது சிக்கன் டிக்கா இல்லை) ஒன்றும் பேசமுடியாமல் ஹாட்கேஷ் இல்லாத பர்ஸும் வாங்கிய புத்தகத்தை திரும்பக் கொடுக்க மனம் வராமலும் நானும் எழுதிவைத்து வந்தேன்.

திரும்ப வரும்பொழுது ராகவனும் பத்ரியும் வெளியில் பேசிக்கொண்டிருந்தார்கள், ஒருவாரு அவர்தான் என்று உறுதியாகத் தெரிந்தாலும் இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று விகடனுக்குள் நுழைந்தேன்.

அங்கே சின்ன பையனுங்களெல்லாம் காசுக்கொடுத்து தங்கள் விளம்பரங்களை வருபவர்களுக்கு கொடுக்கச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். சமூக உணர்வு பெருக்கெடுத்து குழந்தைத் தொழிலாளர் வைச்சுக்கக்கூடாது தெரியுமில்லை. என்று தெரியாதவருக்கு சொல்வதாகச் சொன்னேன். அதைக் கண்டுகொண்டதாகவேத் தெரியவில்லை. நான் இதை எழுதி அனுப்புவேன்னு சொன்னதற்கு செய்யுங்களேன் என்று சொன்னதும் வாயையும் மற்றதையும் பொத்திக்கொண்டு வெளியேறினேன்.

கிழக்கிற்கும் உயிர்மைக்கும் என்ன காண்டு என்று தெரியாது. சாதாரணமாகத்தான் கிழக்கில் உயிர்மை வரலையே யாரவது அவங்க புத்தகம் எடுத்துக்கிட்டு வந்திருக்காங்களான்னு கேட்டேன். தெரியாதுன்னு சொல்லிட்டாங்க சரி நானும் அப்படித்தான்னு போய்ட்டேன். திரும்ப மிளகாய் பஜ்ஜி வாங்க வெளிய வரும் பொழுது காலச்சுவட்டைக் கடந்தேன்.

மனுஷ்யபுத்திரனுக்கும், காலச்சுவடிற்கும் பிரச்சனை இருப்பதாக நான் நினைத்து இவரிடம் எப்படிக் கேட்கலாம் என நினைத்து பிறகு, சில இலக்கிய புக் வாங்கிய நல் மதிப்புடன் கேட்டேன், முழு விளக்கங்களுடன் சொல்லிவிட்டு நிவேதாவில் கிடைக்கும் போய்ப்பாருங்க என்று சொன்னார்.

அங்கே வந்து நண்பர் ஒருவர் ஏற்கனவே எடுத்துக்கொண்டு போன ஜீரோ டிகிரியையும். வாங்கிவிட்டுப் பார்த்தால் முகவும், ரஜினியும் கிழக்கு அட்டைகளுடன் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

PS: எழுதியதற்கு அப்பால் தான் பார்த்தேன், கிரெடிட் கார்ட் பற்றி எழுதியிருந்தது கொஞ்சம் போல கிழக்கு நேரடியாக கிரெடிட் கார்ட் எண்ணை வாங்கி எழுதியது போன்ற பிம்பம் என்னால் உருவாக்கப்பட்டிருந்ததை. ஆனால் உண்மையில் கார்ட் டிரான்ஸாக்ஷன்ஸ் செய்தது புத்தகக்கண்காட்சி நடத்தியவர்கள் தான். இது வேண்டுமென்று நடந்த தவறு அன்று. எழுதும் பொழுது சொற்கள் தவறிவிழுந்து வரிகள் வேறு அர்த்ததத்தை உண்டுபண்ணியிருக்கலாம்.

தனிப்பட்ட விளக்கங்களுக்கு நன்றி பத்ரி.

Read More

Share Tweet Pin It +1

4 Comments

In சினிமா விமர்சனம் சொந்தக் கதை

The Departed

அவன் கண்விடல், கதைக்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக வலைபதிவிற்காக எதையும் எழுதவில்லை, இடையில் முன்பொருமுறை வந்த விஷயத்தை மீள்பதிவு செய்ததை தவிர. அது செய்துமே ஒரு மாதம் ஆகிறது. இது கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் சில பல நாட்கள் தமிழ்மணம் பக்கம் கூட வராமல் இருந்திருக்கிறேன். தீபாவளிக்காக திருச்சி சென்று வந்தேன். மதுரை பதிவர் சந்திப்பிற்கு வருவதாக சந்திப்பின் முந்தைய நாள் தொலைபேசிய தருமியிடம் வாக்களித்தும் வரமுடியாமல் சேய்த இடியாப்பச் சிக்கல்கள்.

வாழ்க்கை ஓடிக்கொண்டேதான் இருக்கிறது, நிற்காமல். அதே போல் மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. கண்ணதாசனின், "மாற்றம் என்பது மானிடத் தத்துவம் மாறும் உலகின் மகத்துவம் அறிவேன். கல்லாய் மரமாய் காடுமேடாய் மாறாதிருக்க நான் வனவிலங்கல்லன்" என்ற வரிகள் தான் நினைவிற்கு வருகின்றன.

பில்டப் போதும் என்று நினைக்கிறேன், அம்மாவிடம் நான் "கேன்பே" வை விட்டு வேறு கம்பெனியில் சேரும் எண்ணத்தில் இருக்கிறேன் என்று சொன்னபொழுது அம்மா என்னிடம் கேட்டதுதான் நினைவில் வருகிறது. "எப்பிடிடா இவ்ளோ பிடிச்ச கம்பெனியை விட்டு போக மனசுவருது. கஷ்டமாயிருக்காதா?" என்று, அம்மா ஆசிரியை, பெரும்பாலும் ஆசிரியர்கள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒரு பள்ளியில் இருந்து முடித்து விடுவார்கள். (அம்மா கொஞ்சம் வித்தியாசம் இரண்டு பள்ளிகள், அது கொஞ்சம் உள்ளூர் பாலிடிக்ஸ்.)

நான் சொன்னேன், "அந்தக் காதல் இல்லாமல் எந்தக் கம்பெனி சேர்ந்தாலும் வேலை செய்ய முடியாது என்னால்" என்று. என்னை நன்கறிந்த நண்பர்கள் பலரும் இதே கேள்வியைத்தான் கேட்டார்கள் நான் வேலை மாறி பெங்களூர் செல்கிறேன் என்று சொன்னதும். எக்ஸிட் கிளியரிங்கில் கேட்கப்பட்ட, திரும்பவும் கேன்பே வரவிரும்புவீர்களா, போகும் கம்பெனியில் நண்பர்களுடன் கேன்பே அனுபவங்களை பகிர்ந்து கொள்வீர்களா போன்ற கேள்விகளுக்கு முழுமனதுடனேயே ஆமாம் என்று எழுதினேன்.

பேப்பர் போட்டாச்சுன்னாலே அடுத்த விஷயம் பார்ட்டி தானே, அதுவும் தொடங்கியது. புனேவில் புகழ்பெற்ற ஐநாக்ஸ் தியேட்டர் காம்ப்ளக்ஸில் படம் பார்க்கவும் அப்படியே சிட்டியில் டின்னர் சாப்பிடவும் திட்டமிட்டோம். நல்ல நேரம் "த டிபார்டட்" படத்திற்கான டிக்கெட் நாங்கள் நினைத்த நேரத்திற்கே கிடைத்தது. அப்படியே பக்கத்தில் இருந்த "ஃப்லேக்"(Flag) ரெஸ்டாரென்டில் தண்ணி பார்ட்டி, சென்றிருந்தவர்களில் நான் மட்டும் தான் கெட்டபையன் அதாவது தண்ணி அடிக்காத பார்ட்டி. சிக்கன் கபாப்களும், தம்ஸ் அப், மேங்கோ ஜஸ் என்று அவர்களுக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்தேன். அந்தப் பக்கம் பூரா ஷிவாஸ் ரீகல், வழிந்தோடியது. ஷார்ட் ஸ்கர்ட் போட்ட அமேரிக்க பிகர்களை நோட்டம் விட்டபடி ஒரு வழியாக பில் செட்டில் செய்து தியேட்டரில் உட்கார்ந்தோம்.

கேங்ஸ் ஆப் நியூயார்க், தி ஏவியேட்டர் போன்ற படங்களின் இயக்குநர் என்பதாலும், ஜாக் நிக்கல்ஸன், லியனார்டோ டிகாப்ரியோ, மாட் டேமன், மார்க் வால்பர்க், போன்ற தகுதியான நடிகர்களாலும் நல்ல எதிர்பார்ப்புடன் போய் உட்கார்ந்தோம். படம் பூராவும் அமேரிக்கன் எஃப் வேர்ட் தான் ஆக்கிரமித்திருந்தது. எப்படி சென்னை ரவுடிகளைப்பற்றிய படம் எடுக்கும் பொழுதும் "கோத்தா"க்களும் "தே" வேர்டும் நெஸஸரியோ அப்படி. (ரவுடி என்ன ரவுடி "தே" வேர்ட் தவிர்த்த அனைத்து கெட்ட வார்த்தைகளும் அனாயாசமாய் கல்லு\ரிக் காலங்களில் நானே பேசியிருக்கிறேன். ஒரு சென்ட்டென்ஸ் முடியும் பொழுது ஒரு கெட்டவார்த்தை இருப்பதென்பது அப்பொழுதெல்லாம் வழக்கம். ஒரு முறை சென்னையில் தங்கியிருந்த பொழுது சிஃபியில் ப்ரௌசிங் செய்ய போயிருந்தேன். "எஃப்" வேர்ட் ரொம்ப சகஜமாக சர்வசாதாரணமாக சென்டரெங்கும் நிரம்பிவழிந்தது. அது விளையாடும் இடம் என்று நினைவு.)






"அ ப்யூ குட் மேன்" படத்தில் பார்த்த ஜாக் நிக்கல்ஸனா அது. கொஞ்சம் தளர்ந்தது போல் இருக்கிறார். ஆனால் நடிப்பில் இன்னும் அடிச்சி ஆடுறார். மார்க் வால்பெர்க், ஆரம்பத்தில் புதிதாக ஸ்டேட் போலீஸில் சேரும், மாட் டேமனையும், டிகாப்ரியோவையும் இன்டர்வியூ செய்யும் பொழுது அவர் அசால்டாக படம் காண்பிக்கிறார். அவருடைய எக்ஸ்பீரியன்ஸ் தெரிகிறது. "த பிக் ஹிட்" படம் பார்த்துதான் நினைவில் வருகிறது. அவரா இவர் என்று யோசிக்க வைக்கிறது. குண்டா, Eஹுர்ஸ்டைல் மாற்றி, "த பிரெசிலியன் ஜாப்" இரண்டாம் பாகம் 2008ல் வரத் தயாராகிவருகிறது. பார்க்கலாம் அப்பொழுது எப்படி இருக்கிறார் என்று.

ஜாக் நிக்கல்ஸன் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை, மாட் டேமென், டிகாப்ரியோ நடிப்பில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. குறிப்பாக தன்னுடைய சக அதிகாரியை போட்டுத்தள்ளும் இடத்திலும், தொடர்ச்சியான மனவழுத்தத்தில் தடுமாறும் பொழுதும் நல்ல நடிப்பு வெளிப்படுகிறது. மாட் டேமென் இயல்பாய் செய்திருக்கிறார். பார்ன் ஐடென்டிடி, பார்ன் சுப்ரிமஸிக்குப் பிறகு நான் விரும்பித் தேர்ந்தெடுக்கும் நடிகர்களில் ஒருவர்.

ஒரே ரத்தம், துப்பாக்கிச்சூடு, கெட்டவார்த்தைகள் தான் இந்தப் படம். கிளைமாக்ஸ் ஒரிஜினல் வாழ்க்கையை காண்பித்தாலும், தியேட்டரை விட்டு வெளிவரும் பொழுது ஒத்துக்கொள்ள முடியவில்லைதான். ஒரு முறை பார்க்கக்கூடிய படம்தான். நடிகர்களின் பிரமாதமான நடிப்பிற்கும், இயக்குநரின் திறமைக்கும், வேகமாக கொண்டு செல்லும் எடிட்டிங்கிற்காகவும் நிச்சயாமய் ஒரு முறை பார்க்கலாம்.

ராத்திரி படம் பார்த்துவிட்டு இரண்டு மணிக்கு மேல், புனேவில் (கொஞ்சமாக இருக்கும்)அற்புதமான ரோட்டில், தடையில்லாமல் 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்தது இன்னும் கொஞ்சம் நாட்களுக்கு நினைவில் இருக்கும் நிச்சயமாய்.


Directed by Martin Scorsese; written by William Monahan, based on the screenplay for the film "Infernal Affairs"; director of photography, Michael Ballhaus; edited by Thelma Schoonmaker; music by Howard Shore; production designer, Kristi Zea; produced by Brad Pitt, Brad Grey and Graham King; released by Warner Brothers Pictures. Running time: 150 minutes.

WITH: Leonardo DiCaprio (Billy Costigan), Matt Damon (Colin Sullivan), Jack Nicholson (Frank Costello), Mark Wahlberg (Dignam), Martin Sheen (Queenan), Ray Winstone (Mr. French), Vera Farmiga (Madolyn), Alec Baldwin (Ellerby) and Anthony Anderson (Brown).

Read More

Share Tweet Pin It +1

13 Comments

Popular Posts